Secular Songs 106 to 110

Song 106

When I went to Andaman as I was returning back to Port Blair from Mayabandhar, on the way I saw the naked Jaravas who have now begun to contact us by the effort of some people.  When I was returning back to Chennai on the ship as I was thinking about it, I wrote this song.  The only good thing that we can do is to leave them alone to live as they are with nature. In the name of civilizing them we will make their life worse.  Though I wrote this song a few years before, as I was recalling my Andaman visit, I wrote this song again from my memory again now.

அந்தமானுக்கு சென்றிருந்த போது, மாயாபந்தரிலிருந்து, கதம்தலா வழியாக போர்ட் பிளேயருக்கு வந்திருந்தபோது நிர்வாணமாக வாழும் ஜாரவா இன மக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை நாகரீக மக்களாக்குகிறோம் என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சரியல்ல என்பது என் கருத்து. அதைக்குறித்து சென்னைக்கு மீண்டும் கப்பலில் திரும்பி கொண்டிருந்த போது எழுதிய பாடல்:

106.        மெய்ஞானிகள்

“நிர்வாணம்” (முக்தி) அவருக்கு புதிதல்ல

நிர்வாணமாய் அவர் வாழ்வதினால்

“மெய்ஞானம்” அவருக்கு புதிரல்ல

“அஞ்ஞானம்” என்னவென்று அறியாததால்

வானமே கூரையாக ஆன பின்னே

வாழ்வதற்குஅவர்க்குவீடெதற்க்கு

காற்றே ஆடையாய் ஆன பின்னே

மாற்றுடை தேடும் மனம் எதற்கு

இயற்கையோடு இணைந்து வாழும்

“ஜாரவா” என்னும் மெய்ஞானிகள்

ஐயகோ ஆவார்கள் “அஞ்ஞானிகள்”

நம்முடன் தொடர்பு கொள்ளும்போது!

“நாகரிகம் தருகிறோம்” என்ற பெயரில்

நாம் செய்வது வீண் அஞ்ஞானமே

நம்மிடை வாழ அவர் வந்துவிட்டால்

நலன் ஏதும் பெறார் இது திண்ணமே!

இயற்கையோடு வாழ அவரை விடுங்கள்

இதுவே அவருக்கு செய்யும் நன்மையாகும்

அவர் கேட்கவில்லை நம் வாழ்வை

ஆகவே செய்யாதீர் இவ்வ நியாயம்

106.        True Jnanis

‘Nakedness’ (Nirvana) is not new to them

As they are living ‘nakedly’!

‘Enlightenment’ (Jnana) is not a riddle for them

As they never knew what ignorance (avidya) is

Once the sky itself becomes the roof

Where is the need for a separate house to live (for them)?

Once the air itself becomes their dress

Why are they going to seek another dress to change?

Jeravas the true’ Jannis’ who live

Mingling with nature

Will become ‘ignorant’

Once they began to contact with us

In the name of civilizing them

What we are doing is nothing but ignorance on our part

In no way they will be benefitted

Becoming part of our [mad] civilization

Leave them to live along with the nature

This is the only service that we can do to them

They never demanded our kind of life

Therefore, don’t do this injustice (to them).###

Open document settingsOpen publish panel

  • Post

Song 107

Though I am not against divorce in extreme situations, still I am not in favour of it. 

Once made a commitment to live together in marriage the couple should do everything to fulfil that commitment.  Most of our elders and ancestors never knew this concept of ‘divorce’. But in the name of modern life the way divorce happens now in India is alarming which shakes the social fabric of our society.  At the same time compared to other countries divorce is very less and many couples, though find it difficult to live together for the sake of children and society continue to live together.  And some people even criticise this kind of culture and worldview, that too comparing it with the west where they can divorce keeping in mind their own personal need and comfort.  See Gravitas Plus: India has the lowest divorce rate in the world.  https://youtu.be /2SDQp85Vn1E.  Well as a single man I have no right to tell what the married couple should do but however it works well and very easily in the West, it won’t be the same in India—at least at present.  In the future this might change.

107   .     எது புதுமை

சில கணம் சேர்ந்து

சில கணம் பிரிந்து

மறுமணம் புரிந்து

மறுபடி பிரிந்து

வாழ்வதென்பது

வழக்கம் ஆனது

“புதுமை” கூறும்

சிலரது வாழ்வு

வாழ்வின் அர்த்தம்

அறியாவரையில்

வாழ்வின் நெறிகள்

புரியாவரையில்

எடுத்தேன் கவிழ்த்தேன்

என்பது போன்று

வாழ்வதல்ல

“புதுமை” என்பது!

 வாழ்ந்து முடித்த

முன்னோர் வழியில்

வள்ளுவன் காட்டிய

வாழ்க்கை நெறியில்

பெற்றோர் வாழ்ந்த

புரிதலின் நிலையில்

தொடர்ந்து செல்வதும்

“புதுமை” ஆகும்!

25-09-2011. குருகுலம்.

107   .  What is modernity?

Remaining together for sometime

And get separated for some time

Marrying again

Get separated again

Becomes a habit

For some people

In the name of

Modernity

As long as

The meaning of the life is not known

The rules of life are

Not clear

Living like this

With the principle of

Coming and going

Is not modernity

In the path of

Those who lived before us

In the guidance of the

Principles given by Valluvar

With the understanding

As our parents lived

Living together continuously

Is also ‘modernity’.

25-09-2011. Gurukulam

Song 108

The famous slogan in Tamilnadu by the politicians here is that only North makes progress whereas South gets diminished. As Sri Anna Hazzare was fasting in the North opposing corruption and in Tamilnadu another famous politician indulge in corruption, I wrote this song.

108.       இரு முதியவர்

வடக்கில் ஓர்முதியவர்

விரதமிருந்தார்

ஊழலை எண்ணி வருந்தி

தெற்கில் ஓர் முதியவர்

உள்ளே குமுறுரார்

ஊழலைசெய்தே விரும்பி

“வடக்கு வாழ்கிறது

தெற்கு தேய்கிறது”

என்று இதைத்தான்

அன்றே சொன்னாரோ?

29-08-2011.

108.    Two elders

 One old man in north

Keeps fasting

Thinking about the corruption

In the South another old man

Boiling within

Doing corruption deliberately

This is what they say that

‘North is progressing

And Sought is diminishing’?

29-08-2011.

Song 109

When I read some modern Tamil poems known as ‘vasana kavidai’ {Sonata? In English), in which a long sentence will be cut in small form and arranged in a few lines as a poem.  As I read one such poem, I wrote this.  The so-called compromise between the two is the essence of life as each should listen to the other.

 பலபுதுக்கவிதைகள்நீண்டவார்த்தைகளைமடித்துப்போட்டுஅர்த்தமில்லாமல்இருக்கின்றது. அப்படி ஒரு கவிதையை, ஒரு மிகப் பெரும் சினிமாப் பாடலாசிரியர் எழுதிய புதுக்க விதையை ஒரு புத்தகத்தில் படித்தஉடன், அதுபோன்று ஒன்றை உடன் நான் எழுதினேன்

 109.  சமரசம்

 நீ சொல்வதை

நான் கேட்க வேண்டும்

நான் சொல்வதை

நீ கேட்க வேண்டும்

இது நம்மிடை ஏற்படும்

சமரசம் அல்ல

வாழ்வின் உண்மை

சாராம்சம்

2011

109.  Compromise

I should listen

What you say

You should listen

What I say

This is not a

Compromise between us

But this is the

Essence of life

Secular song 110

No rest or relaxation till the end of the life as long as I live with an unstable mind. The only way to overcome it is to live again, not accepting the defeat from it.

110வாழ்ந்துகாட்டு

வாழ்ந்து காட்டு

நிலையில்லா மனதுடனே

நித்தமும் போராடி

தத்தளிக்கும் வாழ்வில்

தடுமாறி கரை ஏறி

சற்றேதான் மூச்செடுத்து

தப்பிக்கும் போதினிலே

சஞ்சலம் மீண்டும் வந்து

சறுக்குதே மனதை ஏனோ

என்னதான் செய்வேனோ

ஏன் இந்த போராட்டம்

ஏதுதான் வழி இங்கு

என்றுதான் விடை காண்பேன்

போராட்டம் ஓய்வதில்லை

போராடிப் பயனும் இல்லை

புலம்பாமல் மனதினிலே

புறப்பட்டேன் வாழ்ந்து காட்ட.

23-07-2013காலை. 8.30

110Prove by living

Struggling everyday

With this unstable mind

When I reach the shore

In this unstable life

 Though I managed to Relax

And try to escape from the mind

Again the mind stumbles

Because of frustration.

What I am going to do

Why this constant struggle (with mind)

What is the means to overcome it?

When I am going to find the answer for this

Struggles will never come to an end

And there is no use in merely struggling

Therefore not lamenting unnecessarily

I get up again to prove by living

23-07-2013,  8.30 a.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *