Secular Song 111 to 120

Song 111

Remaining silent is my best desire. That is why when I live alone, I prefer to live without anyone around me.  I enjoy the silence around me. But to attain real peace and inner silence I have to go a long way. But the best starting point is to begin with silence.  When I get any opportunity to remain alone, then I will keep all kinds of external activities and will sit silently not doing anything.  That is a wonderful time and a different kind of bliss.

111. நல்ல துணை

மெளனம் போல் நல்ல துணையும் உண்டோ

நாளுமே நம்முடன் போராடும் மனதிற்கு

மெளனம் போல் நல்ல மருந்தும் உண்டோ

கலங்கிடும் மனமே நன்கு தெளிவதற்கு

எத்தனை ஓசை எத்தனை இரைச்சல்

ஓயாத பேச்சுடன் என்னென்ன கூச்சல்

சற்றேனும் மெளனித்து தனித்திருக்க முடியாமல்

நம்மைச் சுற்றிலும் ஓயாத இரைச்சல்

அனைத்திலும் போராடி அமைதி இழந்த பின்

தன் நிலை அறிய தனிமையை நாடி

ஆன்மாவில் அமைதியை ஆழ்ந்தே தேடினால்

அங்கேயும் இரைச்சல் ஐயோ என் சொல்ல

அமைதி என்பது மௌனத்தில் இல்லை

ஆனால் அதுபோல் தொடக்கம் வேறில்லை

செல்ல வேண்டிய தூரம் அதில்அதிகம்

ஆனால் மொளனம் அன்றி இல்லை வேறு தொடக்கம்

புறம்பான ஓசையை சற்றேனும் விலக்கி

போராடும் மனதையும் சற்று ஒடுக்கி

தனித்திருந்து மௌனத்தின் துணை கொண்டு

தொடங்கினால் சேரலாம் அதன் எல்லைகண்டு

30-07-2013, மதியம்2.15, குருகுலம்.

111.  Good company

Is there any good companion like that of silence?

For the struggling mind

Is there any good medicine like that of silence?

For the confused mind to get clarity

How many noises and how many roars

How many shouts with lots of talk without any break

Unable to remain silent for sometime

There is lots of commotion around us

After defeated in everything

Seeking to remain alone in order to know the true nature

When I seek the silence deep within my atman

What to say there too lots of noise

Peace is not in mere silence

But there is no other place to start with

The distance to go in it is very long

But there is no other place but to start with silence

Keeping away all the external noises away

Controlling the struggling mind a bit

Remaining alone with the company of silence

If we start then we can reach its end

 30-07-2013, 2.15, p.m. Gurukulam.

Song 112

Taking our generosity for granted,  when the helpers fail to work and begin to cheat and talk behind us, then we should become strict. Then alone they will mend and do their work relatively well.

112.  பழகப்பழக

பழப் பழகப் பாலும் புளிக்கும்

பதறிய காரியம் சிதறும்

பழகினால் சொந்தமும் புளிக்கும்

இரங்கினால் அதிகம் ஏமாற்றும்

எதிர்த்தால் பணிந்து நடக்கும்

இதுவே மனித உறவாகும்

இதனிடையே வாழ்வு நெருக்கமாகும்

கிட்டினால் எட்டியே சென்றிடுவார்

எட்டினால் கிட்டியே வந்திடுவார்

கிட்டினால் நெருப்பு சுட்டுவிடும்

எட்டினால் குளிரோ அதிகமாகும்

இடைப்பட்ட ஓர்நிலை நாமறிந்து

அதன்படி நடக்க அறிய வேண்டும்

Gurukulam, 19-11-2013, 8.30

112. Familiarity breeds contempt

Familiarity breeds contempt

Any haste will spoil the work

When move close, friction comes

If mercy exceeds, then it will cheat

When we rebuke then it will obey

This is human relationship

Living such life is difficult

When we move close they will go away

When we keep a distance

They will try to come close to use

If we move close fire will burn

If we move away cold will increase

Knowing a middle ground

We should know to behave

Gurukulam, 19-11-2013, 8.30

Song 113

We often hear others saying that if they manage to overcome the present struggle then they can relax.  But there is no guarantee for that.  Success might bring more challenges and we have to struggle on several fronts to retain it.  As this is life, we have no other option but to face it with much courage.

113. போராட்டம் ஓயாது

ஒன்று போனால் மற்றொன்று வரும்

உலகில் போராட்டம் என்றும் தொடரும்

ஒரு அலை போனால் மறு அலைவரும்

அதுபோல் வாழ்வில் கவலைகள் தொடரும்

இதை வென்றால் எல்லாம் சரியாகும்

என்பது மட்டும் நிச்சயம் அல்ல

வென்று காரியம் தன்னுடன் கொண்டு வரும்

அதனிலும் மேலாக போராட்டம் ஒன்றை

இறுதி வரையில் இக்கதை தொடரும்

நம் மூச்சு நின்றாலும் அதன் பின்னும் தொடரும்

போராடப் பிறந்ததே மனிதனின் நிலை

அதை மேற்கொண்டவர் எவரும் இல்லை

இதனிடையே வாழ்வின் அர்த்தம் அறிந்து

அதைப் பிறருடன் நன்கு பகிர்ந்து

இணைந்து அவருடன் சேர்ந்துமே வாழ்ந்து

எதிர்கொள்ள வேண்டும் போராட்டத் துணிந்து.

Gurukulam, 23-11-2013, காலை, 6.30

113. No end

The struggle on this earth will continue

If one ends, another will come

As one wave follows the other

Worries will also come one after another

There is no guarantee that

This one will be final after managing one trouble

As the success will bring along with it

A more severe trouble than the one before

Till the end this story will continue

Even after we pass away it will continue

Man has born only to struggle

There is none who has overcome it

Knowing the meaning of life amidst this

Sharing it with others

Living joining with them

We should face the struggles with much courage.

Gurukulam, 23-11-2013, 6.30 am.

Poem 114

The problem with some single people is that they cannot easily adjust with others, once they are used to that kind of life.  Of course there are always exceptions to this general rule. When that single person becomes a recluse like me, then his struggle becomes more complicated as he likes to remain aloof and at the same time cannot avoid others, if he has to survive on this earth.  But the answer is with him and not with others.  Though many have written about ‘Singlehood’, like marriage, it remains a mystery and will remain a mystery for everyone, even to the Single.

114சுமையானாய்

நீயே உனக்கு சுமையானாய்

நாளும் உனக்கே பளுவானாய்

தோள் கொடுக்க பிறர் வந்தும்

நீயே சுமந்து இளைத்து விட்டாய்

உன்னைத் தாண்டி உலகிருக்க

அதனுடன் இணைந்து நீ இருக்க

உன்னுள் உன்னை பூட்டி வைத்து

ஏனோ புலம்புறாய் வீணாக

உதவ பிறரும் வரவில்லையோ

உரிமையுடன் உடன் வரவில்லையோ

ஆயினும் அவரைப் புறக்கணித்து

அமைதி இழந்தவன் நீதானே

இதற்கும் மேலே என்ன செய்வார்

எதுவரை உன்னுடன் போராடுவார்

உறவைச் சொல்லி வரும் போது

உதறினால் யார்தான் உதவிடுவார்

இகேள்வியும் இங்கு வீண்தானே

கேள்விக்கும் பதிலும் நீதானே

பேதையே இதனைப் புரிந்திடுவாய்

பிறருடன் இணைந்து வாழ்ந்திடுவாய்.

Gurukulam, 25-11-2013, காலை. 9.00

114Become a burden

You became your own burden

Each day the burden has increased

Though others were carrying you,

To support you; still you become tired

There is a world beyond you

You remain connected with it

But locking within yourself

You are lamenting unnecessarily

Did others not come to help you?

Did they not come with a right?

But ignoring them

You alone lost your peace

What others can do more than this

How long they will struggle with you

When they came to celebrate the relationship

If you forsake them who can help you

This question is unnecessary here

You are the answer to that question

Oh fool you better understand this

Try to live joining others.

Gurukulam, 25-11-2013, 9.00 a.m.

Poem 115

When I watched my mother laying down on her cot due to old age, I called back her busy life in which she actively lived and served us all.  As I compared that life and reflected the present reality, I wrote this song as her mind voice.  As usual the translation fails to communicate the original spirit in Tamil. 

115. எல்லாமாச்சு

கொடிகட்டி ஆண்டாச்சு

கோட்டகட்டி பாத்தாச்சு

குவலயமே வியக்கும் படி

கோடிகோடி சேத்தாச்சு

உப்பரிகையில் ஏறி நின்னு

ஊருபாக்க வாழ்ந்தாச்சு

ஊரு உலகம் வியக்கும்படி

உறவோடு மகிழ்ந்தாச்சு

ஒவ்வொண்ணா எண்ணி எண்ணி

ஊரவளச்சுப் போட்டாச்சு

மிச்சம் மீதி ஏதும் இருந்தா

அதையும் கூட வாங்கியாச்சு

மாடுமனை பார்த்தாச்சு

மக்கள் பேரன் எடுத்தாச்சு

சொந்தம், நண்பர் பார்த்தாச்சு

சொகுசாக வாழ்ந்தாச்சு

எதிரிகூடப் பணியும்படி

ஏற்றம் கொண்டு ஆண்டாச்சு

ஏழை எளிய மக்களுக்கு

இயன்ற உதவி செஞ்சாச்சு

முதுமை இன்று வந்தாச்சு

முடங்கிப் பாயில் படுத்தாச்சு

மூச்சு மட்டும் ஏறி இறங்க

மூலையிலே கிடந்தாச்சு

என்ன சுத்தி எதன பேர்

பணிஞ்சு சேவ செஞ்சாச்சு

பாயில் முடங்கிப் படுத்த பின்னே

பறந்து எங்கோ போயாச்சு

யாரைச் சொல்லி குத்தமில்ல

இது உலக வழக்கமாச்சு

ஏதோ கஞ்சி ஊத்தராங்க

இப்ப இது போதுமாச்சு

நடுவன் வந்து அழைக்கும் வரை

நாளை எண்ணிக் கழிக்கிறேன்

இதுக்கு மேல சொல்லி என்ன?

இத்தோட கதமுடிக்கிறேன்.

Gurukulam, 1-4-2014, 6.30 am.

115. Accomplished everything

I constructed the fort

And ruled like a Queen

I accumulated millions

For the world to wonder

I lived a life in a palace

For others to watch

I enjoyed life with relatives

For others to envy

Selecting one by one

I almost bought the entire village

If there was left anything

That too is purchased

I have seen cattle and big house

I got children and grandchildren

I had many relatives and friends

And I lived a luxurious life

I Lorded over others

Even enemy has to bow before me

I helped the poor and needy

As much as possible

Now old age has come

Become crippled and lay on a mat

I find it difficult

Even to properly to breath

So many people were there

Surrounding me to serve (before)

But now as I lay down on a mat

All of them flee away

There is no point of blaming anyone

As this become the habit of this world

Somehow, they give some food for me

And that is enough now

I merely count the days

For the Yama to come and call me

What is the use of sharing more?

Therefore, I stop here

Gurukulam, 1-4-2014,6.30, a.m.

Secular songs 116 to 120

Song 116

Old age not only brings limitations in our life but also brings limitations in our relationship with others.  We cannot do more than what we can do.  No idealism works, but realism alone will work.

116. இதுதான் உண்மை

தெம்பில்லை உடலில்

துணிவில்லை மனதில்

துணிந்து போராட

துணை இல்லை வாழ்வில்

தனித்தா வந்தோம்

சேர்ந்தாபோ வோம்

அலையில் துரும்பாய்

இடையில் வாழ்ந்தோம்

காலம் இணைக்க

கொள்கை பிரிக்க

சிலமுறை சேர்ந்து

பலமுறை பிரிந்தோம்

வருவோர் வரட்டும்

போவோர் போகட்டும்

நம்மால் முடிந்ததை

செய்து பார்ப்போம்

வந்தால்உறவு

சென்றால்பிரிவு

இதுதான் உண்மை

வாழ்வில் இங்கு

வந்தால் மறுக்காதே

சென்றால் தடுக்காதே

வீழ்ந்திட மட்டும்

வேடிக்கை பார்க்காதே

முடிந்தால் உதவு

இல்லையேல் ஒதுங்கு

எல்லோரும் வாழ

மனதார வாழ்த்து

இதுதான் முடியும்

இந்த நிலையில்

வேறென்ன செய்ய

முதுமை வாழ்வில்.

30-07-2014, மத்திகிரி, காலை, 5.30

116. This is the reality

No more strength in the body

No more courage in the heart

There is no company

To struggle in life with courage

Did we come alone?

Are we going to remain together forever?

We lived in between

Like a dust on the wave

Time has united

Ideology has separated

Make us to join sometimes

And get separated several times

Whoever comes let them come?

Whoever goes let them go?

Let us do

What is possible for us?

Coming together is relationship

Going  away is separation

This is reality

In life

Don’t refuse to receive when others come

Don’t stop when they want to leave

But don’t merely watch

When others fall

If possible, help

Otherwise keep the distance

Bless from your heart

For everyone to live

This is possible

Now in life

What can one do?

In this old age?

Mathigiri, 30-07-2014, 5.30

Song 117

No man is an island.  We need each other not only to live but even to survive on this earth. But while helping each other, we should know our limitations. Otherwise our intention to help others will become a burden to us and a problem to others.  Don’t promise more than what you can do in a given situation.  That will help others to work out the solution while facing the problem. If we promise in excess and are unable to do so, then their plight will become more critical.

117. மருவாத (மரியாதை) போகுது

நெனப்புதான் பொழப்ப கெடுக்குது

நேரம் தான் ஆட்டிப் படைக்குது

தேவைப்பட்டா தேடி வருகுது

இல்லாட்டி ஒதுங்கி போகுது

யாருக்கும் உள்ளகுணமிது

அதை அறிஞ்சாலே நமக்கு நல்லது

நாம கூட அப்படித்தாங்க

இத நல்லாத்தான் புரிஞ்சிக் கிட்டேங்க

முடிஞ்சாக்க உதவி செஞ்சிடு

இல்லாட்டி ஒதுங்கிப் போயிடு

வாக்கு கொடுத்து மாறி புட்டாலே

அந்த வலிதான் தாங்கமாட்டாது

தேடிப்போய் உதவி செய்வது

ரொம்ப ரொம்ப நமக்கு நல்லது

ஆனா தேவஇல்லாம மூக்கநுழப்பது

தொந்தரவா ஆகிப் போகுது

உன்னால என்ன முடியுமோ

அதுக்கு மட்டும் வாக்கு நீ கொடு

சும்மா அலட்டிக்க வேஆர்ப்பரிச்சாலே

அது அசிங்கமா (ஆபத்தா) மாறிப் போகுது

இந்த உண்மை புரிஞ்சுக்கிட்டா லே

ஊரோடு ஒத்துப் போகலாம்

வீண் பேச்சு கொடுத்து மாட்டிக் கிட்டாலே

மருவாத (மரியாதை) கெட்டுப் போகலாம்

11-08-2014. மத்திகிரி, காலை6.00

117.  We lose credibility

Only our thought spoils us

And the time makes us to dance

When others are in need they come to us

And when they don’t need, they keep away

All have this nature

If we understand this it is good for us

We too are like that

I clearly understood it

If possible help others

If not, better keep away

If you promise and refuse to help

Then the pain is unbearable one (for others)

If we voluntarily help others by seeking them

That is very good for us

But if we unnecessarily pock our nose

It becomes a problem for all

Give promise

Which is possible for you?

But in order brag, if you promise too much

Then it becomes a problem

If we realize this truth

We can go along with others

If we get trapped by giving unnecessary promises

Then we will lose our credibility

11-08-2014. Mathigiri, 6.00 a.m.

Song 118

As I was thinking about the routine life which goes as if programmed I thought that there is no point of thinking too much about it. Live life as it comes or live one day at a time.

118. இலாப-நட்டக் கணக்கு

என்னவோ போகுது ஒவ்வொரு நாளும்

இதில் நான் சொல்ல ஒன்னும் காணும்

உலகம்போகுதுதன்வழிதானும்

இதில் என்வழி மட்டும் எப்படி மாறும்

காலை, மாலை, இரவு எல்லாம்

கணக்கிட்டுப்போகுது வழக்கம்போல

கனவில் கண்ட காட்சிகள் போல

கடந்து போகுது என் வாழ்வும் கூட

ஆடாது அசையாது நின்று பார்த்தேன்

ஆரவாரம் செய்து ஓடியும் பார்த்தேன்

இடையே சற்று எண்ணியும் பார்த்தேன்

ஏதும் புரியாது திகைத்து மே நின்றேன்

புரிந்தால் மட்டும் என்ன பயனுண்டு?

புரியாது போனால் இழப்பு ஏதுண்டு

லாப-நஷ்ட கணக்கு பார்த்தால்

நடக்கப்போவது ஒன்றுமே இல்லை

17-11-14. இரவு, 11.45, மத்திகிரி

118. A balance sheet

Somehow each day is going on its own

There is nothing for me to say in this

The world is going on its own

Then where could I find a different life?

Morning, evening and night goes

As if calculated

My life is also fleeing

Like a dream in this cycle

I stand still not moving anywhere

I run making some uproar

In between I stopped to think

I am bewildered unable to understand anything

What is the use even if I understood?

What is the loss if I am not going to understand?

If I draw a balance sheet of loss and gain

I didn’t achieve anything so far

17-11-14. 11.45 p.m. Mathigiri,

Song 119

The struggle in human life most of the time is related to our relationship with others.  Neither we can forsake it nor can we handle it.  But without relationships there is no human life. So any struggle related to relationships will continue even after our death.

119 உறவு மறைவதில்லை

உடலை எடுத்து உணர்வு அடைந்து

உலகில் என்றும் போராட வந்தோம்

எண்ணம் வந்து எழுத்தை அறிந்து

எழுதிப் பார்த்து ஏங்கி நின்றேன்

சிந்தை அறிந்து சிந்திக்க முயன்று

சித்தம் மயங்கி கலங்கி நின்றோம்

உறவைப் பெற்று உரிமையும் கிடைத்து

உரிமைக்காக வாதிடு கின்றோம்

தனித்து வாழ்ந்து தவிப்பதாலே

துணைக்கு ஏங்கித் தேடி அடைந்தோம்

அடைந்த துணையும் அதிகம் உரச

பிரிந்து செல்ல மீண்டும் விழைந்தோம்

துறக்க இயலாமல் ஏற்கவும் இயலாமல்

தொடர்ந்து வாழ்வில் போராடுகின்றோம்

இறுதிவரை இதற்கு ஒரு முடிவு இல்லை

இறந்த பின்னும் உறவு தொடர்வதால்

உடல் மறைந்தாலும் உணர்வழிந்தாலும்

உறவு என்றும் மறைவது இல்லை

மறையா உறவு மனிதவாழ்வில்

தொடர்வதால் போராட்டம் ஓய்வதில்லை.

12-04-15, & 15-4-15, மதியம்2.45, 11.30

119  Relationship never disappear

We came to struggle in this world

As we have a body

We invented writing as we wanted to

Remember all our thoughts

As we began to think because of our mind

We become more bewildered

As we received so many relationships in life

We began to argue for our rights

As we struggled by living alone

We received a companion longing for that

As familiarity breeds contempt

We try to keep away from such relationship

Unable to give up; unable to accept

We continue to run in this life

But we never found any respite in this

As relationship continues even after death

Though the body perishes and senses disappear

Relationship never disappears

As this relationship always continues

Our struggles never come to an end

Mathigiri, 12-04-15, & 15-4-15, 2.45, 11.30

Song 120

From the beginning I never wrote for others to read.  In fact for so many years I never shared my poems (even my secular songs) with anyone.  Similarly I wrote so many of my thoughts to give expression to my inner thinking and meditation. Naturally others cannot understand it.  All that I write is only to meet my needs and not for others.  I am my audience.

120. கிறுக்கி வைத்தேன்

கருத்தும் உண்டு கற்பனை உண்டு

அவற்றை சொல்ல சொற்களும் உண்டு

மனது உண்டு மதியும் உண்டு

அவற்றை எழுத எழுத்து உண்டு

எழுதிப் பார்த்தேன் எண்ணங்களையே

ஏட்டில் வடித்தேன் சிந்தை தனையே

கூறி வைத்தேன் கொள்கை தன்னை

குறித்து வைத்தேன் கருத்துக்களையே

படித்துப் பார்க்க எவரும் இல்லை

புரட்டிப் பார்த்த நபரும் இல்லை

“சொல்வ தொன்றும் புரியவில்லை

சொற்களிலும் தெளிவும் இல்லை”

என்று கூறி புறக்கணித்தார்

ஏளனமாய் நகைத்துச் சென்றார்

பிறர் படிக்க எழுதவில்லை

புகழுக்காக ஏங்கவில்லை

என் மனதின் இறுக்கத்தையே

ஏட்டில் எழுதி பார்க்க வேண்டி

எழுத்துக்களை வார்த்தையாக்கி

கிறுக்கி வைத்தேன் கவிதை என்று

19-04-2015, இரவு, 11.00, Mathigiri

120. Scribbled

As long as we have a heart and mind

We think and imagine

Then we try to express it using words

And record them in our writings

I wrote my thought in words

I recorded my meditation

I proclaimed my ideology

And I began to record them in writings

There is no one to read

There is no one to turn those pages

‘Nobody can understand you

There is no clarity in your words’

By saying this they ignored me

And they laughed at me and walked away

But I never write for others to read

I never long for fame

In order to release

The pressure within me

By joining letters as words

I scribble something in the name of poem

19-04-2015, 11.00 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *