Bhakti theology 701 to 750
701 I cannot tolerate
Don’t pretend that you are upset with me
I came seeking refuge unto you
What can I say; is there anything new to say
Is it a riddle, what else can I do?
I have the right to come
Once I come, what right do you have to deny me?
I need not stand with any hesitation
I never had any hesitation with you
Each day I will come and sit at your holy feet
I will meditate upon the divine grace
I will ask the boons as my heart desires
I will accept wholeheartedly whichever you give
Whatever might be my heart’s burden?
I will silently unload upon you
Keeping other things away
I will become like a child which crawls on the chest
Keeping me on your shoulder as you pamper me
Forgetting all the troubles I will close my eyes
As your comfort encourages my heart
Silently I will sleep
This right is given by you
You have compassion upon me
But where comes this much anger
I know that this is your drama
Don’t act with me
I can never tolerate that
Even if you falsely get upset with me
My heart won’t tolerate it, know that first
Mathigiri, 9-8-2017, 10.30 pm.
Sometimes imagining that God is not listening to me and become upset and I in turn rebuking Him for such attitude I write song like this. There is no particular reason for writing such songs. But I find some kind of closeness when I imagine that God is upset with me and in turn I too become upset with him and began to rebuke him. In bhakti these kinds of moods are quite common, though there is no reason for that. Bhakti enjoys the personal time with the Lord expressing any kind of imaginary mood to celebrate that relationship.
701 என்மனம் பொறுக்காது
பொய்யான கோபம் கொள்ளாதே வீணே
புகலிடம் தேடி வந்தேனே நானே
புதிதான ஒன்றா நான்எதைச் சொல்ல
புரியாத ஒன்றா இனியென்ன செய்ய
வருகின்ற உரிமை எனக்குமே இருக்கு
வந்தபின் மறுக்க உனக்கென்ன இருக்கு
தயங்கி நின்றிடத் தேவையே இல்லை
தயக்கமோ எனக்கு உன்னிடம் இல்லை
தினம்தோறும் வந்து திருவடி அமர்வேன்
தெய்வீக அருளை மனதார நினைப்பேன்
விரும்பிய வரங்களை நானுமே கேட்பேன்
விரும்பிநீ தருவதை பணிவுடன் ஏற்பேன்
மனதின் பாரம் எதுவாக இருந்தாலும்
மவுனமாய் உன்னிடம் இறக்கியே வைப்பேன்
மற்றதை யெல்லாம் சற்றே ஒதுக்கி
மார்பினில் தவழும் குழவியாய் ஆவேன்
தோள்மீது போட்டு நீயென்னை சீராட்ட
தொல்லைகள் மறந்து கண்களை மூடுவேன்
நீதரும் ஆறுதல் மனதையும் தேற்ற
நிம்மதியாய் நான் கண்மூடி வளர்வேன்
என்னிந்த உரிமை நீதந்த ஒன்று
என்மீது உனக்கு பரிவுமே உண்டு
ஆயினும் கோபம் ஏனிங்கு வருது
அதுஉன் நாடகம் எனக்குமே புரியுது
நடிக்காதே வீணாய் என்னிடம் நீயே
ஒருபோதும் அதனைத் தாங்கேனே நானே
பொய்யாகவேனும் கோபம் கொண்டாலும்
பொறுக்காது என்மனம் அறிவாயே நீயே
மத்திகிரி, 9-8-2017, இரவு 10.30
702 I will sing your glory
I worship you with songs
I bow at your feet
Composing new songs
I sing your glory
I live on this earth
Only to glorify you
I do bhakti
To proclaim your greatness
I do seva
Only to show God
I worship at your feet
So that I can get more grace
Washing your feet
With tears
Folding both my hands
By worshiping you
Glorifying your fame
By heart and words
I bowed at your feet
Thinking about that grace
Each day I need
This grace
And for that
I need your grace
I should receive it
Only through my bhakti
And living as your bhakta
I should attain mukti
Mathigiri, 10-8-2017, 11.10 pm.
As I was in a worshiping mood not thinking any other think or doing any other serious reflection I began to worship the Lord. That time as the inspiration came I wrote this song and then sung it as my worship towards Him.
702 உன்புகழ் பாடுவேன்
பாடியே தொழுகிறேன்
பாதமே பணிகிறேன்
பண்ணமைத்து நான்
உன்புகழ் பாடுறேன்
பாரினில் வாழ்வது
பதமலர் போற்றவே
பக்தியும் செய்வது
உன்புகழ் ஏத்தவே
சேவைகள் செய்வது
தெய்வத்தைக் காட்டவே
சேவடி பணிவது
உன்னருள் கூட்டவே
இருவிழி நீரால்
திருவடி நனைத்து
இருக்காராம் கொண்டு
உன்னையும் தொழுது
மனம் மொழியாலே
உன்னையே புகழ்ந்து
மலரடி பணிந்தேன்
பேரருள் நினைந்து
அனுதினம் இந்த
கிருபை வேண்டும்
அதற்குமே உனது
அருளும் வேண்டும்
பக்தியின் மூலம்
அதைப்பெற வேண்டும்
பக்தனாய் வாழ்ந்து
பதம்பெற வேண்டும்
மத்திகிரி, 10-8-2017, இரவு 11.10
703 She rejoiced
She rejoices
And dance with much joy
Proclaiming the good news
About the coming of the Lord
She feels happy
By singing song
She is doing bhakti
By praising God
Overcome by joy
Rejoicing within
She tells to the word
The way she is elevated
She bows before God
Proclaiming to everyone
About the grace she received
As God showed mercy to her
He showed mercy to the poor
Uplifted the simple one
Countless blessings
He gave to everyone
He removed the pride
Of the arrogant
Within few seconds
He thrashed them on the floor
Uplifting our heads
In each generation
He made each generation of us
As his own
Mathigiri, 15-8-2017, 2.15 pm.
After reading the commentary (Tom Wright, Luke for Everyone, ISPCK, Delhi, 2015, pp. 12-16) for song of Mary in Luke (1.39-56) I wrote this song, reflecting her joyful mood which to my surprise she got in spite of the news that she received that as a virgin she will give birth to a baby. Though this is a personal bad news for her, yet as she somehow understood its implication, she could celebrate it by singing that song than sit and weep over her destiny.
703 ஆனந்தம் கொண்டாள்
ஆடியே மகிழ்கிறாள்
ஆனந்தம் கொள்கிறாள்
அவனிக்கு ஐயன்வரும்
சேதியைச் சொல்லகிறாள்
பாடியே மகிழ்கிறாள்
பக்தியும் செய்கிறாள்
பரமனைப் போற்றியே
பதமே பணிகிறாள்
உள்ளமும் துள்ளிட
உவகையும் பெருகிட
தன்னிலை உயர்ந்ததை
தரணிக்குச் சொல்கிறாள்
இறைவனும் இரங்கியே
இரக்கமும் செய்ததை
எல்லோர்க்கும் சொல்லியே
எந்தலைப் பணிகிறாள்
ஏழைக்கு இரங்கினான்
எளியோரை உயர்த்தினான்
எண்ணில்லா நன்மைகள்
எல்லோர்க்கும் செய்தான்
ஆணவம் கொண்டோரின்
அகந்தையை நீக்கினான்
அவர்களின் உயர்வை
நொடியிலே தாழ்த்தினான்
தலைமுறை தோறும்
நம்தலைகளை உயர்த்தி
சந்ததியை தன்
சொந்தமாய் காக்கிறான்
மத்திகிரி, 15-8-2017, மதியம் 2.15
704 No more hurdles
I don’t have time to come
Even if I come I have nothing to say
But you have no restriction to give
I have no hesitation to accept it
I become tired by fighting with world
I become depressed both in body and mind
But I never forget to see your grace
Which goes through amidst this?
Thinking you few seconds about your feet
Always thinking about you in my mind
How much hurdles might come in between
I think about you within me
How much works I have done each day
How much I do seva to others
I never lost the bliss of talking with you
Who dwells within me?
You gave this birth only for this
You redeemed me only for you
You came with a relationship which others cannot understand
You too rejoice by interacting with me
I don’t have separate time for this
I cannot share all about me to you
As you give there is no hesitation for me to receive
There is no hurdle in our relationship
Mathigiri, 15-8-2017, 10.30 pm.
Since last few days I was busy with too much work because of too many guests coming to visit us. I was busy in preparing special sweets and other things and arranging so many things. I was not able even to spend proper time with the Lord in the night as I become very tired. So this night after all those busyness are gone, I thought how much I missed my personal time with the Lord, particularly before going to bed. Though I become very tired today also, yet as I sat quietly and began to reflect about it I wrote this song as the inspiration came and worshiped him.
704 தடைகள் இருக்காது
வருவதற்கு எனக்கு நேரமே இல்லை
வந்தாலும் சொல்ல ஏதுமே இல்லை
தருவதற்கு எந்தத் தடைகளும் இல்லை
தருவதை ஏற்றிடத் தயக்கமும் இல்லை
உலகோடு போராடி ஓய்ந்துதான் போனேன்
உடலோடு மனதாலும் தளர்ந்துதான் போனேன்
ஆயினும் இவற்றிடை இழையோடும் உனது
அருளினைக் காண மறக்காமல் இருக்கேன்
சிலநொடி உனது திருவடி நினைந்து
சிந்தையில் எப்போதும் உன்னையே வைத்து
இடையிடை எத்தனை இடையூறு வந்தாலும்
என்னுள்ளே உன்னையே எண்ணியே இருந்தேன்
எத்தனையோ பணிகள் நித்தமும் செய்தாலும்
எத்தனை சேவைகள் பிறர்க்குமே செய்தாலும்
என்னுள்ளே வாழும் உன்னோடு பேசும்
இன்பதை நானும் இழக்காமல் இருக்கேன்
இதற்கெனப் பிறவி எனக்குநீ தந்தாய்
என்னையும் மீட்டு உனக்கென வைத்தாய்
எவர்க்குமே புரியாத உறவாகி வந்தாய்
அனுதினம் உறவாடி என்னுடன் மகிழ்ந்தாய்
இதற்கெனத் தனியாக நேரமும் கிடையாது
எனைப்பற்றி உன்னிடம் சொல்லவும் இயலாது
நீதர நான்பெற்றத் தயக்கமும் வராது
நாமுமே உறவாடத் தடைகளும் கிடையாது
மத்திகிரி, 15-8-2017, இரவு 10.30
705 You know
I think about
So many of your deeds
I weigh them
To know their strength
I compile them
To know their nature
I search the truth
Among them
There could be
Many reason not to accept them
Not thinking properly
My mind may reject them
By asking
‘Are they all required’?
I might remain
Very much confused (because of this)
But not rejecting
This confusion
O my Lord
I can come and share this with you
Knowing my condition
Knowing my need
You might give me an answer
Very silently
Then the experience
Which I received
There is no means
For me share to others
The answer which you give
Deep in my heart
I don’t have words
To communicate it
As usual
I might give
The same kind of response
To others regularly
And those
Who read this could have compassion on me
Thinking that
‘He is a mad person’.
But the way
I am bewildered within me
Others need not
Understand.
But unlike them
Oh my Lord
You can give me
The peace which the world won’t understand
Mathigiri, 16-8-2017, 10.30 pm.
Again some conflict in my mind as I am reading the commentary in Luke. The claim of Jwishness of the Lord often remains a challenge. Whenever I read that they were special people or chosen people my rationality refused to accept it easily. At the same time I cannot undo with the historic reality that Muktinath was a Jew. So as I was reflecting about it after reading the commentary related with His Jewishness nature and mission, I wrote this song. This evening also when I went for my walk I was seriously thinking about it and I tried to reason it out at my best. But I failed miserably and I become more confused. But I have one advantage—I can share all these without any hesitation in my personal time with the Lord. Then the way He came to meet my personal need much gives the inner peace which overrides all kinds of theological and historical issues related with the Lord.
705 நீ அறிவாய்
நினைத்துதான் பார்க்கிறேன்
நீசெய்த செயல்களை
நிறுத்திதான் பார்க்கிறேன்
அவைகளின் வலிமையை
தொகுத்துதான் பார்க்கிறேன்
அவைகளின் தன்மையை
தேடித்தான் பார்க்கிறேன்
அவைகளின் உண்மையை
ஏற்கமாமல் மறுத்திட
காரணம் இருக்கலாம்
எண்ணியே பாராமல்
என்மனம் மறுக்கலாம்
தேவையா அவையென
என்புத்தி கேட்கலாம்
தெளிவற்று குழம்பியே
நானுமே இருக்கலாம்
ஆயினும் இதனையும்
நானுமே மறுக்காமல்
ஐயன்னே உன்னிடம்
வந்துமே கூறலாம்
எந்நிலை அறிந்தநீ
எந்தேவை உணர்ந்தபின்
எனக்கொரு பதிலைநீ
அமைதியாய்க் கொடுக்கலாம்
அதன்பின்னே நான்பெறும்
அனுபவ நிலைமையை
அடுத்தவர் அறிந்திட
கூறிட வழியில்லை
ஆழமாய் என்னுள்ளே
அவந்தந்த பதிலையும்
எடுத்துமே கூறிட
என்னிடம் மொழியில்லை
இதுவரை பலமுறை
இதுபோன்ற பதிலையே
வழக்கமாய் நானுமே
உலக்கு அளிக்கலாம்
படிக்கின்ற பிறருமே
பயித்தியம் இவனென
என்மீது சற்றுதான்
இரக்கமும் கொள்ளலாம்
ஆயினும் நான்படும்
தவிப்பையும் அறிந்திட
பிறருக்கு தேவையும்
இல்லாமல் இருக்கலாம்
அவர்போல இல்லாமல்
ஐயனே நீமட்டும்
அவனியும் அறியாத
அமைதியைக் கொடுக்கல்லாம்
மத்திகிரி, 16-8-2017, இரவு 10.30
706 Acceptable to me
I come unto you becoming poor one
Take care of me once again by upholding in your hands
Every day I come as a coward
You give me courage in my heart again
Wealth, materials and properties along with enjoyment
How much they might be in this life
Always dwelling only in them
Finally I saw only poverty in them and nothing else
On the one side there is the need of this body
On the other side the need of the heart is pressing
While the need of the atman makes me to hate the world
I become dejected as my heart becomes tired
Even after knowing what is my need
I don’t see any longing in it
Once after knowing this, you too remain quiet
There should be some reason for that
Whatever might be your will?
I need the answer only for this
What you are going to gain
By delaying further to give the answer
You come to live in my situation
Then you will understand it
After that, taking pity on this slave
Whatever might you do is acceptable for me
Mathigiri, 18-8-2017 6.00 am.
As usual I was tossing on my bed from the very early morning. But I was not in a mood to come out from the bed. Finally accepting my defeat I got up and after doing regular works, had my cup of tea and came to sit to drink it silently. That time I said to myself I always come before the Lord not only as a poor person but even as a coward as I cannot even overcome the compulsions of both my body and mind (which never allow me to have proper rest when I want it). Then as the inspiration flow, quickly finished the tea and wrote this song within five minutes.
706 எனக்குச் சம்மதம்
ஏழையாய் ஆகி வந்தேனே நானும்
ஏந்தியே காப்பாய் கைகளில் மீண்டும்
கோழையாய் வாழ்கிறேன் மனதிலே நாளும்
துணிவுமே தருவாய் மனதிலே மீண்டும்
பொன் பொருள் உடமைகள் போகங்கள்
புவியின் வாழ்வில் எத்தனை இருந்தும்
பொழுதும் அவற்றுள் உழன்று மனதில்
ஏழ்மையே அன்றி வேறேதும் காணோம்
உடலின் தேவைகள் ஒருபுறம் இருக்க
மனதின் தேவையும் மறுபுறம் நெருக்க
உயிரின் தேவையோ உலகையே வெறுக்க
ஓய்ந்துதான் போனேன் மனதுமே வெறுக்க
எனது தேவை எதுவெனத் தெரிந்தும்
ஏனோ அதன்மீது நாட்டமும் காணோம்
அதனை நீயும் அறிந்த பின்னும்
அமைதி கொள்ளக் காரணம் வேணும்
உனது சித்தம் ஏதான போதும்
இதற்கு மட்டும் பதிலும் வேணும்
இன்னும் தாமதம் செய்வதினாலே
என்ன இலாபம் பெறுவாய் நீயும்
ஆயினும் எனது நிலைமையில் நீயும்
இருந்து பாரு பிறகு புரியும்
அதன்பின் இரங்கி எது செய்தாலும்
அதிலே அடிமைக்கு உண்டு சம்மதம்
மத்திகிரி, 18-8-2017 காலை 6.00
707 When I will get
When I will get
Opportunity like this?
When you will have
Mercy upon me
Oh my Guru
When I will get
The blessedness of
Coming to worship your feet
Along with grace
Bliss will be there
Your loving hand
Will be upon me
Your mercy will also
Flow like a fountain
Upon this one
Who worships your feet
Serving at your feet
Is the need of my mind?
Having your vision
Is needed for bhakti
For that I need
Your love
That alone I seek
Have mercy upon me
Each day I should
Celebrate you
Overcome by joy
I should sing
Opportunity like this
I need every day
And my tongue should
Sing your praises
Mathigiri, 21-08-2017, 6.00 am.
As I got up early in the morning, after preparing my tea and not opening my computer I sat silently to enjoy the early morning hours (of course with lots of disturbance of vehicles etc.). Then I said to the Lord ‘when I will again get such beautiful time with him’. As inspiration came I wrote this song to worship him.
707 எப்போது வாய்க்கும்
இதுபோன்ற தருணம்
எப்போது வாய்க்கும்
என்மீது இரக்கம்
எப்போது பிறக்கும்
குருவே உந்தன்
திருவடி வந்து
கும்பிட்டு உய்யும்
புண்ணியம் கிடைக்கும்
அருளோடு ஆனந்தம்
அங்கேயே பிறக்கும்
அன்போடு உன்கரம்
என்மீது இருக்கும்
இருதாளும் பணியும்
என்மீது உனக்கும்
இரக்கமும் ஊற்றாகிப்
பாய்ந்து பெருகும்
திருவடி சேவை
சிந்தைக்குத் தேவை
தெய்வத்தின் தரிசனம்
பக்திக்குத் தேவை
அதற்கு எனக்குன்
அன்புமே தேவை
அதையே நாடுறேன்
இரக்கம் நீவை
அன்றாடம் உன்னைக்
கொண்டாட வேண்டும்
ஆனந்தம் மேலிட
பண்பாட வேண்டும்
இதுபோன்ற தருணம்
தினம்தினம் வேண்டும்
என்நாவு உன்புகழ்
பாடவும் வேண்டும்
மத்திகிரி, 21-08-2017, காலை 6.00
708 No hurdles
When you come and fill my thought
Where is the opportunity for me to forget you?
Once you come and dwell in my heart
Without you where is a life for me to live
This slave lives each moment thinking you
There is pride in sing about you with meaning
Indeed it is rare to live with you with proper sense
I live on this earth only for you and that is the truth
When unnecessary thoughts come
There is one means to remove them quickly
When I keep my thought on you
Where is the place for any vain thought?
There is struggle both with body and mind
There are many unnecessary worries in my heart
But overcoming them victoriously
I live each day seeing your grace
When I receive such blessedness
Where is the thought to seek other things?
When you bestow it with my content
Where are any hurdles to celebrate it?
Mathigiri, 21-08-2017, 6, 15 pm.
When I went for my evening walk, I was thinking about the plan for my mother to go to Kumbakonam to stay few months with my brother. As I began to plan and imagine how I should spend that time, then some fear and several ‘what if’ questions began to occupy my mind. Because of the health of my mother and her lack of interest to go away from Mathigiri (and to go away from me also) often forced me to change the plan. For example, our original plan was to go to Chennai on September 2nd and then to Kumbakonam on 10. But since yesterday again she got severe pain in her hip and leg and she said that considering her age and health she cannot travel that much within a week. So I cancelled our Chennai visit and planed to go directly to Kumbakonam. Though my mother feel relief and bit peaceful as one trip is cancelled, yet I know that she wish and continue to pray that her Kumbakonam trip also should be cancelled. So when all such unexpected sudden developments come, which I cannot predict (as they are legitimate considering her age), I began to think so many negative things and afraid that my plan to go back to Gurukulam to spend few weeks there might get disturbed. As too much negative thoughts came, to overcome them I began to concentrate on the Lord and began to talk to Him—not sharing my anxieties but just to have fellowship with him, then I saw that when I began to occupy my mind with many good thoughts about the Lord, the negative thoughts and so many anxieties began to disappear one by one. Of course this does not mean that they will be gone forever. At least I can spend the next one hour enjoying my evening walk with the Lord. As inspiration continued I recorded this song in my mobile and completed writing the song while walking.
708 தடையேது
நினைவெல்லாம் நீவந்து நிறைந்திடும் போது
நானுனை மறந்திட வாய்ப்புமே ஏது
நெஞ்சிலே நீவந்து குடிகொள்ளும் போது
நீயன்றி நான்வாழும் வாழ்க்கையும் ஏது
கணம்தோறும் உனையெண்ணி வாழ்ந்திடும் அடிமை
கருத்தோடு உனைப்பாடி துதிப்பதில் பெருமை
உணர்வோடும் உன்னோடு வாழ்வதே அருமை
உனக்காக உலகிலே வாழ்கிறேன் உண்மை
வீணான எண்ணங்கள் சிந்தையில் வரும்போது
விரைந்துமே போக்கிட வழிஒன்று உள்ளது
உன்மீது எண்ணத்தை வைத்திடும் போது
வீணான சிந்திக்கும் இடமுமே ஏது
உடலோடும் மனதோடும் போராட்டம் உண்டு
உள்ளத்தில் வீணான கவலைகள் உண்டு
ஆயினும் அவைமீது வெற்றியும் கொண்டு
அனுதினம் வாழ்கிறேன் உன்னருள் கண்டு
இதுபோன்ற பேரருள் நான்பெறும் போது
வேறொன்றைத் தேடிடும் எண்ணமும் ஏது
நீயதை நிறைவாகத் தருகின்ற போது
நானதைக் கொண்டாட தடைகளும் ஏது
மத்திகிரி, 21-08-2017, மாலை, 6,15
709 Received this blessedness
I should come seeking you
I should receive blessings
Each day you should give me grace
For me to praise you
As an unending relationship
With fullness of my heart
I should have only a heart
To sing your glory
I am for you
You are for me
Where is any hurdle
Between us
I have an
Inner longing for you
Keeping the desire
To see you
With unceasing longing
When I suffer
You also come
Seeking after me
I know you
Who knows my condition?
I will receive you
By giving me to you
I have love for you
Not forgetting even for a moment
I received this blessedness
Because of you
Mathigiri, 21-08-2017, 10.30 pm.
The one to one relationship between a bhakta and bhagavan is beautiful one. Though we need to grow together in the Lord in our bhakti, when it comes to enjoy the intimacy in bhakti each bhakta should have that personal private time with the Lord enjoying and celebrating that one to one relationship. Though I cannot brag that I alone have it, yet I feel privileged to have that personal one to one relationship which I often enjoy with the Lord.
709 பேறு அடைந்தேன்
நான்தேடி வரவேண்டும்
நன்மைகள் பெறவேண்டும்
நாள்தோறும் உனைப்போற்றும்
அருள்ஒன்றே தரவேண்டும்
முடியாத உறவாக
மனமெல்லாம் நிறைவாக
மகிழ்வோடு உனைப்போற்றும்
மனமொன்றைப் பெறவேண்டும்
உனக்கென நானுண்டு
எனக்கென நீயுண்டு
இருவருக் கிடையிலே
தடைகளும் ஏதுண்டு
உள்ளான ஏக்கம்
உன்மீது எனக்குண்டு
உனைக்காணும் வேட்கை
மனதிலே நான்கொண்டு
தீராத ஆர்வத்தால்
தவித்திடும் போது
தேடியே வருகிறாய்
இரக்கமும் கொண்டு
என்னிலை அறிந்த
உன்னைநான் அறிவேன்
என்னையே தந்து
உன்னையும் பெறுவேன்
கணநேரம் மறவாத
காதலும் கொண்டேன்
காலமெலாம் உன்னால்
இப்பேறுமே அடைத்தேன்
மத்திகிரி, 21-08-2017, இரவு 10.30
710 Should learn the lesson
When with much pride one becomes very arrogant
God knows the way to thrash him
When the thought of ‘I’ comes
He will provide the opportunity to fall
Finding fault in others and talking behind their back
Through the oratory skill highlighting about oneself
Giving advice even when it was not sought
They will ask so many questions like a missile attack
Showing the authority which they do not have
Establishing themselves as the leader for many
Without anyone to follow to them
They will try to rule the earth without qualifying for that
Not realizing their mistake and not humbling themselves
They know only to argue
They will never listen to others advice
Becoming a fool they will be very lonely
Those who come like this won’t withstand for a moment
Those who listen to their words will immediately fall
Annihilating oneself and destroying others
Because of the pride they will disappear
Others to learn the lesson through them
God allowed them to remain amidst us
Sacrificing them He redeemed us
So that we too won’t become like them.
Mathigiri, 21-08-2017, 11.30 pm
When we keep idealism in life and when they began to materialized gradually, then we become very arrogant and began to compare us with others who failed in their life—that too is our own imagination that that they have failed. But in time God in order to humble us completely devastated so many of our plans which we thought helping us to realize our idealism. In time God shattered all such arrogant attitude and in fact continue to use others whom we thought have failed. But we should never give up and we should be happy that God taught this good lesson to us and kept us as an example for others to learn through our mistakes. Mere elitism, intellectualism and assuming undeserving leadership will be used by God to teach good lesson in our life.
710 பாடம் கற்கவேண்டும்
ஆணவம் தலைக்கேறி ஆடிடும் போது
அடக்கும் வழியை இறைவனும் அறிவான்
“தான்” என்ற எண்ணம் வந்திடும் போது
வீழ்ந்திடும் தருணம் அவனுமே தருவான்
பிறர்மீது குறைசொல்லி பின்பாகப்பேசி
பேச்சின் திறமையால் தன்னையே உயர்த்தி
கேட்காத போதும் அறிவுரைக் கூறி
கேள்விகள் தொடுப்பார் கணைகளாய் மாற்றி
இல்லாத அதிகாரம் பிறர்மீது காட்டி
எல்லோர்க்கும் தலைவனாய்த் தன்னையும் நாட்டி
பின்பற்றி வந்திட எவருமே இன்றி
புவியாள நினைப்பார் தகுதியும் அன்றி
தவறையும் உணராமல் தன்னையும் தாழ்த்தாமல்
தர்க்கங்கள் செய்வது மட்டுமே அறிவார்
பிறர்கூறும் அறிவுரை ஒருபோதும் கேளார்
பேதையாய் இருந்து தனிமையாய் ஆவார்
இதுபோன்று வருவோர் கணநேரம் நிலையார்
இவர்பேச்சைக் கேட்போர் சடுதியில் விழுவார்
தானும் அழிந்து பிறரையும் அழித்து
தான்கொண்ட பெருமையால் இறுதியில் மறைவார்
இவர்மூலம் பாடம் பிறர்கற்க வேண்டி
இறைவனும் இவரை நம்மிடை வைத்தான்
இவர்போல நாமும் மாறாது இருக்க
இவரை பலியாக்கி நாமுய்யச் செய்தான்
மத்திகிரி, 21-08-2017, இரவு 11.30
711 You need patience
Don’t you know?
About my nature
Why are you torturing
Don’t have mercy upon me
As I am bowing continuously
Don’t hit again and again
As I won’t become angry
Don’t continue to spank
If repeatedly beaten
I will become numb
Then reforming will
Become difficult for you
Are you a human being?
For me to explain elaborately
Are you a fool like me?
For me to give advice
But you say that if you tell with much patience
I don’t realize
And you say that
I don’t have brain to understand
Only knowing this nature alone
You received me
Promising that you will handle me gently
You called me for you
However much you pound
As I tolerate
Don’t cross your limitation
I warn you
Before I cry
You should come
Even if you punish
You should comfort me
You should try to communicate
With proper words and means
You should have
More patience than before.
Mathigiri, 22-8-2017, 9.30
Too much of negative thoughts about life, unnecessary thoughts about various things in life, anxiety, vagueness in life etc. etc. often beat me thoroughly. Then I become very upset with God and wanted to challenge him that this is too much. Even if this is my nature, then he called me only with it and should know how to handle me gently and not beat me like this irrationally. As I become upset again with God, I pour down my heart through this song.
711 உனக்குப் பொறுமை வேண்டும்
உனக்குமே புரியாதா
என்குணம் தெரியாதா
ஏன்னினும் வதைக்கிறாய்
இரக்கமே கிடையாதா
குனிகிறேன் என்பதால்
குட்டிக்கொண் டிருக்காதே
கோபமே வாராது
என்பதால் அடிக்காதே
அடிபட அடிபட
மரத்துமே போகும்
அதன்பின் திருத்திட
இயலாமல் போகும்
நீயென்ன மனிதனா
விளக்கமாய்ச் சொல்ல
என்போல்மூடனா
எடுத்துமே சொல்ல
பொறுமையாய் சொன்னால்
புரியாது என்கிறாய்
புரிந்திட புத்தியும்
எனக்கில்லை என்கிறாய்
இதுவுமே தெரிந்துதான்
ஏற்றுக் கொண்டாய்
இதமாக நடத்துவேன்
என்றென்னை அழைத்தாய்
எத்தனை அடித்தாலும்
தாங்குறேன் என்பதால்
எல்லையும் மீறாதே
சொல்லியும் வைக்கிறேன்
அழுதிடும் முன்னே
வந்திட வேண்டும்
அடித்தாலும் அணைத்து
தேற்றிட வேண்டும்
இதமாக பதமாக
சொல்லிட வேண்டும்
இன்னும் உனக்கும்
பொறுமையும் வேண்டும்
மத்திகிரி, 22-8-2017, காலை. 9.30
712 Give me answer
Where shall I go?
To whom shall I ask?
I can come only to you
Who knows my condition?
When my condition
Is not clear to me
Who can give?
The answer which I seek?
Something is
Disturbing my heart
But I don’t know
What it is
There is no chance
For others to understand it
I don’t know
Whether it is my own confusion
Is it coming?
Only to me
To whom shall I ask?
I don’t know
I cannot say that
It is some kind of sorrow (or depression)
Or I can say that
It is nothing but tiredness
Some kind of
Empties is within me
I am not interested
In anything
But one truth is
Very clear to me
That I am
Living unnecessarily
But what can
I do for this
The answer is
Clearly with you
Though I
Ask about it
Till I didn’t receive it
And what is the reason for this delay
Anyhow I am
Recording only this
Whenever possible
Give me the answer
Mathigiri, 22-08-2017, 11.10 pm.
Relatively it was a good day for me. I was happy about President Trumps warning to Pakistan and the Supreme Court verdict on Three talak, doing justice to the affected Muslim woman (by the way I agree with Raj Deep Desai, to my surprise he too began to accept about to have a common Civil law transcending religious affiliation to all the Indians). Now I am happy Trump won the election and I am happier that Hillary never becomes the President who always plays politics with our strained relationship with Pakistan.
But when I sat for my quiet time in the night some kind of vague feeling occupied my mind. Then I recalled the words of my mother which she uttered to herself (she often speaks to herself as there is none to sit and talk with her. Loneliness is a curse in old age) in the evening when she was doing her cross stitch work (still engaged but not satisfied with it) that “what kind of life is this”? The same kind of vagueness often occupies my mind too. As our life here goes in a routine without any change often we get tired of it. But there is no option left with us.
Then unable to think further I sat silently. Then I began to talk to the Lord by raising the first line of the song as my question. Then as usual as inspiration came, took the note wrote this song and read it as my prayer.
712 பதில் தா
எங்குநான் செல்வேன்
எவரிடம் கேட்பேன்
என்நிலை அறிந்த
உன்னிடம் அன்றி
என்நிலை எனக்கே
புரியாது இருக்க
எவர்தருவார் எனக்கு
நான்தேடும் பதிலை
ஏதோ ஒன்று
நெருடுது மனதை
என்ன அதுவென
எனக்கும் புரியலை
மற்றவர் புரிய
சற்றும் வழியில்லை
மனதின் மயக்கமா
அதுவும் தெரியலை
எனக்கு மட்டுமே
இதுவும் தோணுதா
எவரிடம் கேட்க
சரியாத் தெரியலை
சோகம் என்று
சொல்லிட முடியாது
சோர்வு என்றுமே
எண்ணிட இயலாது
ஒருவித வெறுமை
உள்ளத்தில் இருக்கு
ஒன்றிலும் நாட்டம்
இல்லை எனக்கு
தேவை இல்லாமல்
வாழ்கிறேன் என்ற
உண்மை மட்டும்
விளங்குது எனக்கு
ஆயினும் இதற்கு
நானென்ன செய்ய
அதற்கு விடைமட்டும்
உன்னிடம் இருக்கு
அதையும் அனுதினம்
பலமுறை கேட்டும்
இன்னும் பதில்லை
தாமதம் எதற்கு
ஏதோ இதைமட்டும்
எழுதியும் வைக்கிறேன்
எப்போ முடியுமோ
பதில்தா எனக்கு
மத்திகிரி, 22-08-2017, இரவு 11.10
713 Should continue
Not thinking anything
Not doing any reflection
I should come and
Sit at your feet
I should worship you
Only for your sake
I should rejoice
Having fellowship with you
Not asking
Something
I should come
Seeking only you
Not requiring
Anything further
I should come to you
Needing only you
Talking with you
In silence
I should drown
In that silence
When the
Thought of wring comes
I should write it
In a langue without having any words
Having this kind of right with you
To have fellowship with you
I should come to you
Without having any kind of relationship
Whether day or night
Whichever might be the time?
I should mingle with you
Transcending time
This experience
Not ending here
It should continue
Without having any end
மத்திகிரி, 22-08-2017, இரவு 11.30
After writing the previous song (712) and reading it as my prayer, again I sat for few minutes silently. Then I said to the Lord that I should come to Him just for his sake and not raising questions, demanding answers, praying for various needs. Then as inspiration continued I wrote this song and went to bed—of course with the same vagueness. Why this? God alone knows and he alone can resolve it.
713 தொடர வேண்டும்
ஒன்றுமே நினைக்காது
ஒன்றுமே எண்ணாது
உன்னடி வந்துநான்
அமர்ந்திட வேண்டும்
உன்னை உனக்காக
நான்தொழ வேண்டும்
உன்னோடு உறவாடி
மகிழ்ந்திட வேண்டும்
வேண்டுதல் எதுவும்
செய்யாது உன்னை
வேண்டியே வேண்டி
நான்வர வேண்டும்
தேவை எதுவும்
தேவை இல்லாமல்
தேவை நீயெனத்
தேடிட வேண்டும்
மொழியற்ற மொழியாலே
மவுனமாய்ப் பேசி
மவுனத்தில் ஆழ்ந்து
மூழ்கிட வேண்டும்
எழுதிடும் எண்ணம்
எனக்குள் வரும்போது
இல்லாத எழுத்தாலே
எழுதிட வேண்டும்
இதுபோல உறவாடும்
உரிமையில் உன்னோடு
உறவற்ற உறவாகி
உறவாட வேண்டும்
இரவோ பகலோ
எந்நேரம் ஆனாலும்
காலம் கடந்து
கலந்திட வேண்டும்
இந்த அனுபவம்
இத்தோடு முடியாது
முடிவற்ற தொடராக
தொடரவும் வேண்டும்
மத்திகிரி, 22-08-2017, இரவு 11.30
714 What is this litigation?
What is this litigation every day?
Why you forgot what you have promised
I told you with much patience
Then I shouted with much anger
Like blowing the horn to a deaf person
My voice also went in vain
Though I repeatedly told
My words never went to your ears
Why stage this drama
Unnecessarily every day
I know that you cannot pretend (to act)
You cannot change your nature
Once you promised you don’t have the habit
Of changing it
Once you promised that you will give
It is not in your nature to deny it
It is impossible for you to change
Your character ever
As I know your nature I told this
I came to plead my case before you
What you are going to gain in this
Why become so selfish unnecessarily
As you redeemed me keeping only my interest
Where will find a separate (selfish) need in this?
Therefore listen again as before
Try to understand my need
And give inner peace
According to that need
8-8-15, Mathigiri, 11.30 pm.
when I lack inner peace due to any reason, the only means I know is to go and fight with the Lord and even blaming Him as the reason for that. I know that he is not the reason for that and most of the time i lose my inner peace because of my fault and temparament. But as this is also part of my nature to blame someone else or my right to go and fight with the Lord, I often chose the later one and express it through songs like this.
714 இது என்ன வழக்கு
நித்தமும் இதுஎன்ன வழக்காச்சு
சொன்னதை நீயேன் மறந்தாச்சு
அமைதியாய்ச் சொல்லிப் பார்த்துவிட்டேன்
ஆத்திரம் கொண்டும் கத்திவிட்டேன்
செவிடன் காதில் ஊதியசங்காய்
என்சத்தமும் வீணாய்ப் போனதுவே
சொல்லிச் சொல்லிப் பார்த்தாலும்
உன்காதில் ஏறாமல் போனதுவே
எதற்காய் இந்த நாடகமும், நீ
தினமும் வீணாய்ப் போடுகிறாய்
நடிக்கவோ உனக்கும் தெரியாது
உன்குணத்தை மாத்திக்க முடியாது
வாக்குக் கொடுத்தபின் மாறுகின்ற
வழக்கமோ உனக்குக் கிடையாது
கொடுப்பேன் என்று சொன்னபின்னே
மறுக்கிற குணமும் தெரியாது
உனது இயல்பை மாற்றிக்கொள்ள
ஒருபோதும் உன்னால் முடியாது
உன்குணம் அறிந்ததால் சொல்லிவிட்டேன்
உன்னிடம் வழக்காட வந்துவிட்டேன்
இதிலென்ன லாபம் நீகாண்பாய்
வீணாய் சுயநலம் ஏன்கொண்டாய்
என்நலம் கருதி மீட்டபின்னே
உனக்கெனத் தனிநலம் எதில்காண்பாய்
எனவே முன்போல் கேட்டுக் கொள்ளு
என் தேவை தன்னைப் புரிந்து கொள்ளு
அதற்கு ஏற்ப அனுதினமும்
அமைதியை மட்டும் தந்துவிடு
8-8-15, மத்திகிரி, இரவு 11.30
715 I realized your mercy
Knowing me well I realized your mercy
I opened my heart as I experienced you
I gave up confusion as I received your compassion
I saw God as I bow at your feet
I know that this is very difficult one
I don’t have mercy within me
Though I received mercy from you many times
I don’t have that and don’t know the reason for that
Is it because I receive it free of cost
Or as you bestow it to me knowing me very well
Or as I refuse to born again
Or even after you forgave as I forgot that forgiveness?
I received mercy easily because of you
Still I forgot to live accordingly
Even after you paid a cost for that
I easily forgot its greatness
This is my condition till this day
However I try, there is no change in it
Once you realized this
I have an answer for this
Just one time refuse to show mercy to me
Allow me to experience that pain one time
As you refuse to do that
Oh my Lord, I still not repented, just listen to this
Mathigiri, 24-8-2017, 2.30 pm.
After reading the following lines in the commentary on Luke by Tom Wright, I cannot further proceed as I often experience that mercy of God in every walk of my life. So closing the book I sit for moment thinking about the way God’s astonishing mercy often forgives me and helps me to experience his grace and love. Then I took the note and wrote this song within five minutes as the words flowed without any stop:
..He is astonishingly merciful (anyone who knows their own heart truly, and still goes on experiencing God’s grace and love, will agree with this); how can we, his forgiven children, be any less?….— Tom Wright, Luke for Everyone, London, SPCK (2004), Indian Edition, Delhi, ISPCK, 2015, p. 73
715 இரக்கத்தை உணர்ந்தேன்
இரக்கத்தை உணர்ந்தேன் என்னை அறிந்ததால்
இதயத்தைத் திறந்தேன் உன்னை உணர்ந்ததால்
கலக்ததைத் துறந்தேன் கருணை அடைந்ததால்
கடவுளைக் கண்டேன் உன்னைப் பணிந்ததால்
இதுமிகக் கடினம் என்பதை அறிவேன்
இரக்கம் என்னிடம் இல்லைநான் அறிவேன்
இரக்கத்தை உன்னிடம் பலமுறை பெறும்
இரக்கம் வரவில்லை ஏனென அறியேன்
இலவசமாக நானதைப் பெருவதினாலா
என்னை அறிந்தும் நீ கொடுப்பதினாலா
மறுபடிப் பிறக்க நான் மறுப்பதினாலா—நீ
மன்னித்தும் மன்னிப்பை மறந்ததினாலா
இரக்கத்தை உன்னால் எளிதாய் அடைந்தேன்
இருந்தும் அதன்படி வாழ்ந்திட மறந்தேன்
அதற்கொரு விலையை நீ தந்தபின்னும்
அதனின் உயர்வை எளிதாய் மறந்தேன்
இதுதான் என்னிலை இன்று வரையில்
எத்தனை முயன்றும் மாற்றம் இலையதில்
இதையும் நீயும் அறிந்த பின்னால்
இதற்கு என்னிடம் உள்ளது ஒருபதில்
ஒருமுறை இறங்கிட மறுத்துதான் பாரு
அதன்வலி உணர அனுமதி நீகொடு
அதைமட்டும் செய்யநீ மறுப்பதினாலே
ஐயனே நானின்னும் திருந்தலைக் கேளு
மத்திகிரி, 24-8-2017, மதியம் 2.30
716 How to share
It is a kind of experience
How to share about it?
By using which illustration
Explain it elaborately?
From somewhere
By somehow it will come
It will stand beyond
Words and thoughts
Even if sought
It won’t come that time
Even if we refuse it
It won’t let us go freely
A kind of bliss
Will overcome the heart
Both emotion and sensation
Will stand still
How long it will remain
No one knows
Why it is coming
None can understand
Once it came if we began to analyze it
We won’t get any explanation
Once it is gone, even if we long
It won’t come automatically
We should not
Try to communicate it to others
Even if we try
It is impossible through words
Even if others try
They cannot understand it
Even if they understood it
When they search for it, it won’t be available
Is it hunger?
To remain same for all
Is it thirst?
To remain common to all?
More than this
I cannot explain
There fore
Please forgive me
Mathigiri, 24-8-2017, 2.50 pm.
After reading the following points I closed my eyes and began to reflect my own personal experience ‘of the sacred’ and wrote this song. When Saradha was correcting the Bhakti songs, she asked some questions about the strange kind of experience which I shared through my poems and she said that she never underwent similar experience. In response to her I said that it is not necessary for all to have same kind of experience. Above all what I try to communicate through words is completely different and limited by the limitation of my mind and the language. Of course we need to verbalize our experience. But it cannot communicate the original nature of that experience, particularly when we try to communicate it through poems, which put so many restrictions on us. And each language has its own limitation in it. For example in Tamil the beginning and end of the words in each line almost will match with the other words in a stanza what we call ‘yeduhai’ and ‘monai’. Sometimes it will naturally come and other times we need to work it out a bit out of using our personal skills. There we will use some words which won’t neatly fit, but there is no other option but to use it. Similarly in order to fill the gap some extra words will be used. Above all translating from one language to another is a Himalayan task. In fact no translation can communicate the real meaning and spirit of the poem and I am well aware when I try to give my own poor English translation.
If I have to write a rationalistic view about some of the inner experience that I have with sacred it will end up with many pages. Still I cannot communicate properly. I cannot call it a mystic experience, as I still do not comprehend mysticism in its totality. It comes definitely because my bhakti. This I know for sure. I try to communicate that experience in its various shades through my poems, particularly as I celebrate it within me in my fellowship with the Lord and also in celebrating with others. Yes writing poems and try to translate in English (poor me) and writing comments is the only part which I definitely not enjoying. But in order to celebrate my bhakti with other bhaktas I do it. So not only the Tamil words, but even the translations with comments are in one way part of that celebration. But once I translate and write my comments, I feel that I failed in my communication. But that is what I can do at my best. So this song too expresses that limitation and also celebrates that experience with others.
…In his famous work, The Idea of the Holy, Rudolph Otto analyses the modalities of religious experience rather than the ideas of God and religion. He does not touch on the question of myth and mythical thought but concentrates on the non-rational side or religion. For Otto the sacred is the feeling of terror, the numinous, and the awe-inspiring.
“The feeling of I”, he writes, “may at times comes sweeping like a gentle tide, pervading the mind with a tranquil mod of deepest worship. It may pass over into a more set and lasting attitude of the soul, continuing, as it were, thrillingly vibrant and resonant, until at last it dies away and the soul resumes its “profane”, non-religious mood of everyday experience. It may burst in sudden eruption up from depths of the soul with spasms and convulsions, or lead to the strangest excitements, to intoxicated frenzy, to transport, and to ecstasy. It has its wild and demonic forms and can sink in an almost grisly horror and shuddering. It has its crude, barbaric antecedents, and early manifestations, and again it may be developed into something beautiful and pure and glorious. It may become the hushed, trembling, and speechless humility of the creature in the presence of – whom or what? In the presence of that which is a Mystery inexpressible and above all creatures.” {Rudolf Otto, Das Heilige, Breslau, 1917, English translation John W. Harvey, The Idea of the Holy, Penguin Books, London, 1959, pp. 12-13}
If religion refers to the experience of the sacred it follows that it is related to the experience of a revelation which need not necessarily fall within the binding framework of dogma and organized religion. The experience of the sacred is one of its own kind. It is lost when identified with this or that conceptualized deity. No one can be taught it nor can it be explained to anyone who has not known it. That what it reveals for the person struck by it, is the only valid revelation of reality. The experience of the sacred is related to the ideas of being, meaning truth. Its experience unfolds a dimension not apprehended by theoretical reflection alone. Its content is too (p.35) tender and fragile to be left at the mercy of circumscriptive conversation or parlour-speech….—Frans Baartmans, Apah, The Sacred Waters: An Analysis of a Primordial Symbol in Hindu Myths, Delhi, B. R. Publishing Corporation [Division of D.K. Publishers Distributors (P) Ltd.], 1990, pp. 35-36
716 எப்படிச் சொல்ல
அதுஒரு அனுபவம்
அதை எப்படிச்சொல்ல
எததைக்கொண்டு அதனை
விவரித்துச் சொல்ல
எங்கிருந்தோ அது
எப்படியோ வரும்
எண்ணம் வார்த்தைக்கு
புறம்பாக நிற்கும்
நாமாகத் தேடினும்
தானே வராது
நாமதை மறுத்தும்
நம்மை விடாது
ஒருவிதப் பரவசம்
உள்ளத்தை ஆளும்
உணர்வுடன் உணர்ச்சியும்
மரத்துமே போகும்
எதுவரை இருக்கும்
எவர்க்கும் தெரியாது
எதனால் வருகுது
எவர்க்கும் புரியாது
வந்தபின் ஆராய்ந்தால்
விளக்கம் கிடைக்காது
சென்றபின் விரும்பினும்
தன்போல் வராது
பிறருக்குச் சொல்லிட
முயற்சிக்கக் கூடாது
முயன்றாலும் வார்த்தையால்
விளக்கிட முடியாது
முயன்றாலும் பிரறதை
புரிந்திட இயலாது
புரிந்தாலும் அவர்தேட
அதுபோல் கிடைக்காது
அதுஎன்ன பசியா
ஒருபோல் இருக்க
அதுஎன்ன தாகமா
பொதுவாய் இருக்க
இதற்கும் மேலும்
விளக்கம் கொடுக்க
எனக்கும் முடியலை
அதனால் மன்னிக்க
மத்திகிரி, 24-8-2017, மதியம் 2.50
717 Become very light
I try to share without sharing it
But I try to share it with you
I come to your feet
With much tiredness
Calling me near to you
Comfort me
Hugging me with love
Remove my tiredness
Unable to cry
I cry within
Not understanding it
I get frustrated
Though I have
Many reasons to share
I lament within me
As I am unable to communicate it
There are many
Troubles come in this world
But sharing it
The burden alone increases further
There is no point
In sharing with others
At the same time
I cannot carry it on my own
Just for the pleasure
Of few seconds
How much trouble
They get
Just you see
They way we suffer
Like a monkey
Which puts it hand inside a coconut?
Even though we received
But unable to enjoy
Not knowing
The reason for that
We become upset
With so many
And become
Very angry with much hate
When I see this
Some kind of
Sorrow
Overcomes me
I came to
Share only this with you
But without words
I am troubled
Now the burden
Of my heart has gone
Once I shared with you and cried
My heart become very light
Mathigiri, 25-8-2017 11.10 pm.
When I heard about another sad story about a broken marriage in one of my school time friend’s family, again my heart is broken. In modern time there are so many broken marriages and the one who suffers is the woman at the most—though in few cases men are genuinely affected. Several marriages never last even for few years and the major reason is small disputes or ego clashes. Sometimes due to unfaithfulness cause the reason for the broken marriage and just for the pleasure which lasts for few minutes one of the life partners brings permanent damage. As I was thinking about the girl who is now affected because of her husband’s unfaithfulness in marriage, I become very sad. Some kind of sorrow overwhelmed me. I don’t know with whom I can share. At the same time by sharing such issues I cannot resolve the crises. So I took this matter with the Lord and poured my heart to him and prayed for that girl and her daughter who is worst affected in this. After the prayer I felt some kind of release in my spirit and then wrote this song.
717 இலேசாக ஆச்சு
சொல்லாமல் சொல்கிறேன்
சொல்லிடத் துடிக்கிறேன்
சோர்வுற்று உந்தன்
திருவடி பணிகிறேன்
அருகினில் அழைத்து
ஆறுதல் படுத்து
அன்புடன் சேர்த்து
சோர்வினை அகற்று
அழத்தெரியாமல் நான்
அழுகிறேன் உள்ளே
அதுபுரியாமல் நான்
தவிக்கிறேன் வெளியே
சொல்லிட ஆயிரம்
காரணம் இருந்தும்
சொல்லவும் தெரியாது
மனதிலே புலம்புறேன்
உலகில் ஆயிரம்
அவலங்கள் தோன்றுது
உரைப்பதால் பாரம்
அதிகமாய்ப் போகுது
பிறரிடம் சொல்லிப்
பயனில்லை அறிந்தேன்
தனித்தே சுமக்க
இயலாது உணர்ந்தேன்
சிலத்துளி மகிழ்வுக்கு
எத்தனைப் பாடு
நிலையில்லா சுகத்தால்
எத்தனைக் கேடு
தெங்கில் கைவிட்ட
குரங்காய் மாறி
நாங்கள் படுகிற
அவலத்தைப் பாரு
கைக்கு எட்டியும்
வாய்க்கு எட்டாமல்
அதற்கான காரணம்
சரியாகத் தெரியாமல்
எவர்எவர் மீதோ
கோபமும் கொண்டு
ஆத்திரப் படுகிறோம்
வெறுப்புமே கொண்டு
இவற்றை எல்லாம்
பார்க்கும் போது
ஒருவித சோகம்
மனத்தைக் கவ்வுது
அதையே உன்னிடம்
சொல்லிட வந்தேன்
ஆயினும் மொழியின்றி
கலங்கியே நின்றேன்
இப்போ என்மனப்
பாரமும் போச்சு
உன்னிடம் அழுதபின்
இலேசாக ஆச்சு
மத்திகிரி 25-8-2017 இரவு 11.10
718 The cat which burnt its tongue
Is it an argument?
To cheat myself
Or is it the lesson
Which you want to teach me?
(Due to guilt) on one side
The burden becomes heavy
On the other side
The mind says that it is correct
Mean time
My spirit comes to you
Seeking an answer
From you
Whatever might be?
My side argument
Your verdict should be
Very clear
Now allowing my spirit caught in a
Tug up war
I should know your will
Very clearly
Though I cannot understand
This your play
There should be some
Good reason for that
Though I might not
Like it now
There is no point in opposing it
That I know well
These kinds of your plays
Are not new to me
I never won even one time
By resisting them
As the past experience
Remains fresh in my mind
There is no need
To learn it one more time
Like the cat
Which burnt its tongue?
It is better for me
Keep quiet now
Till you serve the milk
By cooling it
It is better not to
Argue with you
Mathigiri, 30-8-2017, 10.30 p.m.
When some events brings new turning in my life, particularly where God’s invisible hands guide in new direction then not sure whether it is my own reason which tries to justify it or clear direction by God, I am more confused. On the one side the commitments that I made brings some kind of guilty conscience within me. On the other side God works in such a way that He tries to convince me and also tries to point out that even such guilty conscience is a kind of excuse on my part to obey Him. Then based on my past experience, now I never resist or try to fight back with the Lord, because at the end He alone is going to win. Better resign to the will of God and his guidance than sitting and feel remorse based on some feelings and emotions which create guilty conscience.
718 சுடுபட்ட பூனை
என்னையே ஏமாற்ற
நான்செய்யும் வாதமா
இல்லைநீ சொல்லித்
தருகின்ற பாடமா
ஒருபக்கம் பாரம்
மனதையே அழுத்துது
மறுபுறம் சிந்தை
சரியென ஏற்குது
இடையில் என்னாவி
உன்னிடம் வருகுது
இதற்குகொரு பதிலையே
உன்னிடம் கேட்குது
என்பக்க நியாயம்
எதுவாக இருந்தாலும்
உன்பக்கத் தீரிப்பு
தெளிவாக இருக்கணும்
இழுபறியாய் இங்கு
என்னாவி துடிக்காமல்
உன்சித்தம் தெளிவாக
எனக்குமே புரியணும்
உன்னிந்த விளையாட்டு
புரியாத போதும்
நீகொண்ட காரணம்
சரியாக இருக்கணும்
ஆயினும் இப்போது
பிடிக்காத போதும்
எதிர்த்தாலும் நடக்காது
எனக்கது தெரியும்
இதுபோன்ற விளையாட்டு
புதிதான தில்லையே
எதிர்த்துநான் போராடி
வென்றதும் இல்லையே
முன்கண்ட அனுபவம்
பசுமையாய் இருக்கையில்
மீண்டும் ஒருமுறை
தேவையும் இல்லையே
சுடுபட்ட பூனைபோல்
சும்மாக இருப்பது
ஒன்றே எனக்கு
மிகமிக நல்லது
சூடாற்றி நீயாக
தருகின்ற வரையில்
வாதம் செய்யாமல்
இருப்தே சிறந்தது
மத்திகிரி, 30-8-2017, இரவு 10.30
719 Beyond senses
All the emotions that come in our body
Will soon disappear after remaining for short time
Similarly the sensation that comes in our heart
Will go away as soon as it appeared
But the experience that we gain through them
How far true, how do we know?
But the bliss that you give through them
How can I measure it?
Tears might come automatically
The hands might fold as usual
The mouth opening itself, O charitable one
Can sing your praises
But how can I say, O my Lord
That this a kind of experience
How is it possible for me to utter
That noble blissful state
One should go beyond the senses
Along with buddhi mind also should remain calm
Though I do not have any experience
My spirit could realize it
There is no means to share
To express that condition
There is no need
For others to understand it
I will say that this is not the failure of language
Also not a defeat of the heart
When I seek you with some need
Knowing my need you will come and give
Mathigiri, 30-8-2017, 11.10 pm.
As I began to read a book on Theologies of Emotions (Michelle Voss Roberts, Tastes of the Divine: Hindu and Christian Theologies of Emotion, New York, Fordham University Press, 2014] I began to think about my own experience with emotions and theology. I know for sure that it is not sensation or mere emotion with some physical responses like tears coming, hair standing for few seconds. But I cannot set aside them as mere physical response; however weak and temporary they might be. Though we all need to return back to our profanity after some sacred and awe inspiring moments in life, what the atman realizes and the inner being tries to expresses it is beyond human understanding and communication.
Though I already quoted in the song 716, it is worth to read it again here:
If religion refers to the experience of the sacred it follows that it is related to the experience of a revelation which need not necessarily fall within the binding framework of dogma and organized religion. The experience of the sacred is one of its own kinds. It is lost when identified with this or that conceptualized deity. No one can be taught it nor can it be explained to anyone who has not known it. That what it reveals for the person struck by it, is the only valid revelation of reality. The experience of the sacred is related to the ideas of being, meaning truth. Its experience unfolds a dimension not apprehended by theoretical reflection alone. Its content is too (p.35) tender and fragile to be left at the mercy of circumscriptive conversation or parlour-speech….— Frans Baartmans, Apah, The Sacred Waters: An Analysis of a Primordial Symbol in Hindu Myths, Delhi, B. R. Publishing Corporation [Division of D.K. Publishers Distributors (P) Ltd.], 1990, pp. 35-36
719 புலன்களுக்கு அப்பால்
உடலில் தோன்றும் உணர்வுகள் எல்லாம்
ஒருசில நொடிகள் இருந்தபின் மறையும்
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியும் கூட
அதுபோல் தோன்றி தன்போல் மறையும்
இவற்றின் மூலம் தோன்றும் அனுபவம்
எதுவரை உண்மை எப்படித் தெரியும்
இவற்றைக் கொண்டு நீதரும் பரவசம்
எப்படி என்னால் அளக்க முடியும்
கண்ணீர் தன்போல் வந்திடக் கூடும்
கரங்களும் தமபோல் குவிந்திடக் கூடும்
வாயும் மனதும் வாழ்த்தியே பாடி
வள்ளலே உன்னைப் போற்றவும் கூடும்
ஆயினும் இவையே அனுபவ நிலையென
ஐயனே எப்படி நான்சொல்லக் கூடும்
அந்த உன்னத பரவச நிலையை
எடுத்துச் சொல்ல எப்படிக் கூடும்
புலன்களைக் கடந்து போக வேண்டும்
புத்தியும் மனதும் ஓய்ந்திட வேண்டும்
எவ்வித உணர்வும் அற்ற போதும்
என்னுயிர் மட்டும் புரிந்திடக் கூடும்
புரிந்த அந்த நிலையைக் கூற
புவியில் எந்த வழியும் இல்லை
பிறரும் அதனைப் புரிந்து கொள்ளத்
தேவை இங்கு ஏதும் இல்லை
மொழியின் தோல்வி இல்லை என்பேன்
மனதின் தோல்வி இல்லை சொன்னேன்
தேவை கொண்டு தேடும் போது
தேடி வந்து தருவாய் என்பேன்
மத்திகிரி, 30-8-2017, இரவு 11.10
720 What is Santa (peace)?
When I sat silently to know
What actually peace is
Negative thoughts come and say
That there is no real peace which exists
When things go as I like
Still the peace which I long is not yet gained
Anxiety about what will happen next
Is not allowing me to get that peace
Though the senses enjoy the pleasure which they longed
Still they cannot enjoy it completely
Some kind of longing never allows
To enjoy that pleasure completely
Thinking that if I achieve some kind of balance
In my mind (sithaprajnatha) then peace will prevail
Thinking like this when I sought that balance
Chanchal (frustration) will come along with it
Renouncing all these when I
Clinked the state of desirelessness
Even renunciation itself becoming a desire
Will never allow me to give up even that
Finally when I cannot understand that
What is the real peace?
I understood the truth that
Till the end peace is not here
In a fluctuating mind which changes in every second
There is no permanent peace
Once I realized this
Then the peace which I sought will automatically come
Mathigiri, 1-9-2017, 2.20 pm.
As I was reading about Santa Rasa (about peace) in Michelle Voss Roberts, Tastes of the Divine, Fordham University Press, New York, 2014,as I cannot accept or understand many argument put forth by the author after quoting Abhivanagupta on Santa rasa, I stopped reading and began to think what actually peace is. Then I wrote this song expressing my view.
Roberts:
…As Abhinavagupta combines these two senses of the term,
[t]he peaceful rasa may be characterized as the full development into aesthetic enjoyment of certain type of happiness (sukha) occurring as a (p.21) basic emotional state. This happiness consists in the dying off, that is, the complete cessation, of desires, that is, yearnings for objects of sense, and may be called an indifference to worldly things (nirveda).6
Santa, then, evokes the peaceful repose of the self in brahman, which grants the momentary cessation of conscious thought and the transcendence of subject-object duality. For Abhinavagupta, the spectator’s absorption in the drama is akin to the deepest contemplation. … proponents of devotional religion (bhakti) further expand this contemplative calm to include a kind of mute awe in the presence of a deity.— Michelle Voss Roberts, Tastes of the Divine, New York, Fordham University Press, 2014, pp. 21-22
6. Loc 3.26a, translated by Ingalls, Daniel H. H., Jeffrey Moussaieff Masson, and M. V. Patwardhan: The Dhvanyaloka of Anandavardhana with the Locana of Abhinavagupta, Cambridge, Mass.: Harvard University Press, 1990, 521
Critics also raise questions about the existence of santa rasa because it is essentially a negative state: the absence of desire. This negation of mental activity cannot be regarded as an emotion, which is by definition a positive mental state. Abhinavagupta deftly makes a technical distinction to counter this objection: there are two types of nonexistence, that of something that has never come into being and that of something which once existed but has been destroyed. The negative mental state of santa is the latter. All persons come into the world with desire, but when desire ceases, the mind returns to peaceful equanimity. Santa is a state of mind that is not particularized by any of the other moods, a mode of awareness from which those other moods have melted away.
….Abhinavagupta grants that santa rasa cannot be represented in its culminating state, but this is true of other rasas such as love and its culmination in sexual ecstasy as well….—p. 26
720 எது அமைதி
அமைதி எதுவென அறிந்திட நானும்
அமைதியாக அமர்ந்திட்ட போது
எதிர்மறையான எண்ணங்கள் வந்து
ஏதுவுமே அமைதி இல்லை என்குது
விரும்பியபடியே காரியம் வாய்த்தும்
விரும்பிய அமைதியோ கிடைக்கவும் இல்லை
அடுத்து என்ன நடக்கும் என்ற
கலக்கமும் அமைதியைத் தருவதே இல்லை
புலன்கள் விரும்பிய சுகங்கள் கிடைத்தும்
கிடைத்த இன்னபமும் முழுமையாய் இல்லை
ஒருவித ஏக்கம் அதையும் கூட
முழுமையாய்த் துய்க்க விடுவதே இல்லை
மனதில் ஒருவித சமநிலை வந்தால்
அமைதி அதனிடை நிச்சயம் நிலைக்கும்
என்று எண்ணி சமநிலை நாட
சஞ்சலம் வந்து கூடவே நிற்கும்
இவைகள் அனைத்தையும் முழுமையாய்த் துறந்து
பற்றற்ற பற்றை பற்றிய போதும்
துறவும் ஒருவித பற்றாக மாற
துறவைத் துறக்க இயலாமல் போகும்
இறுதியில் அமைதி இதுதான் என்று
உறுதியாய் நானும் அறியாத போது
இறுதி வரையில் அமைதி என்பது
இங்கில்லை என்ற உண்மை புரியும்
நொடிகள் தோறும் மாறிடும் மனதில்
அமைதி என்பது நிரந்தரம் இல்லை
அதையே நானும் உணர்ந்த பின்னே
தேடிய அமைதி தன்போல் வந்திடும்
மத்திகிரி, 1-9-2017, மதியம் 2.20
721 Cannot renounce
Though I try to run away from the life by renouncing it
Thinking that life is nothing but Maya
As Maya too coming along with me
Finally the very Maya itself becomes a kind of life
In order to reach that final stage (of renunciation)
By giving up material needs and controlling the senses
Yet I need to sought the help of
The very sense and material things to attain that
As long as the body and mind is there
It is not possible to renounce much
Proclaiming ‘Maya. Maya’
We need not to cheat ourselves
In the life which we ought to live each second
The need of the body is not Maya
Even if we try to reject it by saying it as a Maya
The mind is not ready to accept it
On the one side hunger and thirst is there
On the other side many needs of the mind is there
Add to them the need of this world
Also come to attack me directly
Which one should I say as Maya?
As long as all the needs are there
Once I realized the force of need
There is no chance to renounce
Mathigiri, 1-9-2017, 10.30 pm.
On the point of giving up the earthly needs and mundane concerns to attain Santa rasa (As I was reading about Santa Rasa (about peace, see the previous song 721) in Michelle Voss Roberts, Tastes of the Divine, Fordham University Press, New York, 2014,) I thought that even this longing to have such kind of peace (santa or tranquility) is a kind of Maya as material needs is a reality on this earthly life. As I was reflecting about it I wrote this song.
721 துறக்க முடியாது
மாயையே வாழ்வு என்றுமே எண்ணி
வாழ்க்கையைத் துறந்து ஓடிய போதும்
கூடவே மாயையும் ஓடியே வந்திட
மாயையே ஒருவித வாழ்வாகிப் போகும்
பொருளைத் துறந்து புலன்களை வென்று
இறுதியில் அடையும் நிலையம் கூட
புரிந்திட நானும் முயன்றிடும் போது
பொருளைப் புலனை நாட வேண்டும்
உடலும் மனமும் இருக்கின்ற வரையில்
எதையும்துறக்க முடிவதே இல்லை
மாயை மாயை என்றுமே கூறி
நம்மையே ஏய்த்திடத் தேவையும் இல்லை
ஒவ்வொரு நொடியும் வாழ்கின்ற வாழ்வில்
உடலின் தேவையில் மாயையே இல்லை
மாயை என்று மறுத்திட முனைந்தும்
மனது அதனை ஏற்பதே இல்லை
பசியும் தாகமும் ஒருபுறம் இருக்க
மனதின் தேவைகள் பலபுறம் நெருக்க
உலகின் தேவையும் நேரடியாக
உடலோடு மனதையும் அடித்து நொறுக்க
எதனை மாயை என்றுமே சொல்ல
எல்லாத் தேவையும் இருந்திடும் போது
தேவையின் வலிமையை உணர்ந்த பின்னே
துறக்க இங்கு வாய்ப்புமே ஏது
மத்திகிரி, 1-9-2017, இரவு 10.30
| 722 What else can I say? Whatever you want to communicate I cannot understand Unless you come and explain My mind won’t comprehend it I try my best To understand it But till you reveal I cannot understand it I understood the Reason for creating me You forgave my sin That I realized You called me for you I came accordingly But what happed further That I cannot comprehend I know for sure that There is no use in questioning you Even if I ask questions There is no answer, I understood it Not showing the goal clearly You ask me to run But so far I cannot understand The reason for that! While running You will change the track If I become tired while running You will give rest If I stand with much hesitation You will encourage me (to run) If I refuse to oblige You will remove me But your plan will Never go Accordingly there will be No change in your will If give my consent and come You will take me with you If I refuse to obey Then you will say, ‘as you wish’. So there is nothing For me to say further Whatever I say You are not going to listen Ok it is your game What can I do? Once I become your slave What else can I say? Mathigiri, 1-9-2017, 11.10 pm. I feel that sometimes God not disclosing all about our future asks us to run, not even clearly showing what the goal is. Of course the Lord is the final goal, but in this life on earth and in our seva to the Lord, there should be some goal and clarity about future so that we can run with much confidence. But sometimes God not only changes our track but even asks to run not disclosing the goal and even without clarity. But trusting him is the only option left with us, provided if we want to continue to run. 722 வேறென்ன சொல்ல என்னநீ சொன்னாலும் என்னுளம் புரியாது வந்துநீ சொல்லாமல் உன்னுளம் விளங்காது முயற்சியும் செய்கிறேன் முடிந்த வரையில் ஆயினும் புரியாது நீசொல்லும் வரையில் படைத்ததின் நோக்கத்தை புரிந்துமே கொண்டேன் பாவத்தை மன்னித்தாய் அறிந்துமே கொண்டேன் உனக்கென அழைத்தாய் வந்துமே நின்றேன் அதன்பின் நடப்பதை மட்டுமே அறியேன் கேள்விகள் கேட்பதில் பயனில்லை அறிவேன் கேட்டாலும் பதிலில்லை தெளிவாக அறிந்தேன் இலக்கையும் காட்டாமல் ஓடவும் சொல்லகிறாய் இதைமட்டும் ஏனென்று இதுவரைப் புரியேன் ஓடிடும் போதே பாதையை மாற்றுவாய் இடையில் ஓய்ந்தால் ஓய்வுமே தருவாய் தயங்கியே நின்றால் தட்டியும் கொடுப்பாய் முடியாது என்றால் என்னையே நீக்குவாய் உன்நோக்கம் மட்டும் ஒருநாளும் நீங்காது அதுபோல் உன்சித்தம் எந்நாளும் மாறாது உடன்பட்டு நான்வர உடன்சேர்த்துக் கொள்வாய் உடன்பட மறுக்க “உன்பாடு” என்பாய் இனிநான் சொல்ல ஏதுமே இல்லை என்ன சொன்னாலும் நீகேட்ப தில்லை இனி உன்பாடு நானென்ன செய்ய அடிமை ஆனபின் வேறென்ன சொல்ல மத்திகிரி, 1-9-2017, , இரவு 11.10 Song 723 Human birth is worth Whenever I think about your mercy It really surprises me very much Whenever I think about all your blessings My heart sings your praise with much thanks Though I am repeating the same many times Though you are doing the same many times The compassion that you have on me Remains true beyond my imagination You had grace which can’t be understood You stunned us unable to understand it You gave me a heart to think about it you help me to worship you by new songs each day This becomes your natural nature this becomes your everyday duty But for me, who is get tossed everyday it Remains fresh new in each moment of life You can’t understand however I share What can I say further, that’s your higher status Though you came as a human-God You never had our human mind You can understand this only if you too were redeemed as a sinner like us Only if you could carry so many burdens that we carry Though you carried our sin Poor one, how can you ever understand this? One way this birth as human is good indeed It gave us an opportunity to enjoy your grace You bestowed only that grace to me Wow, wow what can I say to praise you Karunai Anandar Ashram, Thiruppunthuruthi, 7.9.2017, 7.00 pm Last night due mosquitoes literarily I couldn’t sleep whole night and spent the time sitting in the chair when I stayed with my mother in her room at Kumbakonam in the old age home where my brother lives with his wife in another room. So after arriving Dr. Ramaswsy’s Karunai Anandar Ashram at Thiruppunthuruthi, In the afternoon, I had a good sleep. This Ashram is next to the river Kudamuruti, which is now dry. But there are plenty of coconut trees and peacocks. So when I went for my evening walk surrounded by nature, I was overwhelmed by the extra grace which God always showing in my life. Then as I began to thank God for that, these lines came in my mind. At the same time, as per my habit, as I wanted to tease the Lord, when was about to complete the poem I deliberately add last but one stanza which helped me to thank God even the birth as human. 723மனித்தப் பிறவியும் வேண்டுவதே, என்மீது நீகொண்ட இரக்கத்தை நினைக்க எனக்கது மிகமிக வியப்பாக இருக்குது எனக்குமே நீசெய்யும் நன்மையை நினைக்க என்னுள்ளம் நன்றியால் உன்னையே துதிக்குது பலமுறை இதையே நான்சொன்ன போதும் பலமுறை அதையேநீ செய்கின்ற போதும் கணம்தோறும் என்மீது நீகொண்ட இரக்கம் கற்பனை மீறிய உண்மையாய் இருக்கும் விளங்கிட முடியாத பேரருள் கொண்டாய் விளக்கிட இயலாது திகைத்திடச் செய்தாய் நானதை நினைக்க மனதையும் தந்தாய் நாள்தோறும் பாடிப் பணிந்திடச் செய்தாய் உனக்கிது இயல்பான குணமாக இருக்குது உனக்கிது அனுதினப் பணியாக இருக்குது ஆயினும் அலசடிப் படுகின்ற எனக்கு கணந்தோறும் இதுமட்டும் புதிதாய் இருக்கு நானிதைச் சொன்னாலும் உனக்கிதுப் புரியாது நானென்ன செய்யட்டும் உனக்குள்ள உயர்விது மனித-தெய்வமாய் நீவந்த போதும் மனிதனின் மனநிலை கிடையாது உனக்கு பாவியாய் இருந்து மீண்டால்தான் புரியும் பலவித பாரங்கள் சுமந்தால்தான் தெரியும் பாவ பாரம் சுமந்திட்ட போதும் பாவம் உனக்கிது எப்படி புரியும் ஒருவிதம் மனிதப் பிறவியும் நல்லது உன்னருள் துய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது அதையே எனக்கும் நீயும் தந்தது அடடா என்ன சொல்லித் துதிப்பது திருப்பூந்துருத்தி, கருணையானந்தர் ஆஸ்ரமம், ,7-9-2017, மாலை 7.00 |
724. I celebrate my ego
In order to celebrate my ego
and only to celebrate it
I do many things
in life
I will think
only about my need
by saying so many things
will try to get it
I will put
Different masks for this
and I will do play many roles
to win other’s sympathy
Once I achieved
my goal
congratulating me
I will rejoice
I will also
give thanks to you
thinking that
you are doing this considering my needs
After that
Oh my lord
you will
reveal the truth
But not
accepting that
I will give
many explanations
Like the Pharisees
having many arguments
knowing, still unknowing
I will even teach you
Like the scribes
who teaches the Law
I will give many
Un-required explanations
Finally knowing
my condition
you will take the whip
and show it to me
As I know its pain
before you whip me once
I will rush and
Catch your feet
After that
smiling gently
you will expose
my selfishness
But what to say further
forgetting it
within few seconds
I will do as before
This is an
Unending serial
which will never come to an end
unless you take pity on me
Therefore
not blaming me unnecessarily
you take the final decision
Very quickly
Thiruppunthurithi, 8-9.2017, 3.00 am. Luke, 11.42 to 54
Unable to sleep much, as the peacocks in the ashram began to make big noise (which is terrible to listen, particularly in a silent night), I got up at 2.00 am. Unable to sleep further, (as they continue to make the noise till the morning with regular gap) I began to read the commentary on Like by Tom Wright. When I read the commentary for Luke. 11.42 to 54, closing the book I began to mediate on it. Then reflecting my life, as the inspiration came I wrote this song. But at the end, as usual throwing the ball in his court I urged the Lord to take quick step to resolve this crises in my life (which is to call me back at the earliest, so that he can be spared from such songs further,).
724. சுயத்தைக்கொண்டாட
சுயத்தை கொண்டாடி
சுயத்தையே கொண்டாட
சொல்கிறேன் செய்கிறேன்
சிலபல செயல்கள்
என்தேவை என்னவோ
அதைமட்டும் எண்ணுவேன்
எதையேனும் சொல்லி
அதைப்பெற முயல்வேன்
இதற்காக வேடம்
பலவுமே போடுவேன்
என்மீது இரங்கிட
நாடகம் ஆடுவேன்
இவையெல்லாம் செய்து
என்தேவை அடைந்தபின்
என்னையே மெச்சி
எனக்குள்ளே மகிழ்வேன்
என்தேவை அறிந்துநீ
எனக்கிதைச் செய்கிறாய்
என்றுமே எண்ணிநான்
நன்றியும் கூறுவேன்
அதன்பின் மெதுவாக
ஐயனே நீயுமே
உண்மை எதுவென
உரித்துமே காட்டுவாய்
ஆயினும் அதையுமே
ஏற்காத நானுமே
ஆயிரம் விளக்கம்
அதற்கும் தருவேன்
பரிசேயர் போலவே
பலவிதம் வாதிட்டு
புரிந்தும் புரியாமல்
போதிப்பேன் உனக்கே
வேதத்தைப் போதிக்கும்
வேதபாரகர் போல
வேண்டாத விளக்கங்கள்
ஆயிரம் காட்டுவேன்
இறுதியில் என்நிலை
அறிந்து நீயுமே
சாட்டையை எடுத்துமே
சுழற்றியே காட்டுவாய்
அதன்வலி அறிந்ததால்
ஒருஅடி கொடுக்கும்முன்
விரைந்து நானுமே
திருவடிப் பற்றுவேன்
அதன்பின் நீயுமே
மெதுவாக சிரித்துமே
எனது சுயமதை
உரித்துமே காட்டுவாய்
ஆயினும் என்சொல
அடுத்த நொடியிலே
அதையும் மறந்துநான்
வழக்கம்போல் செய்வேன்
இதுஒரு தொடர்கதை
என்றுமே முடியாது
என்மீது இரங்கியே
நீயுமே முடிக்காமல்
ஆகவே என்மீது
வீண்பழி போடாது
முடிவை சீக்கிரம்
எழுதிடு நீயுமே
திருப்பூந்துருத்தி, 8-9-2017,காலை 3.00, லூக்கா 11.42-54
725 Rest I will tell
Whatever we might say
Your heart won’t be harsh
Without giving blessings
It won’t rest
Because it becomes
Natural for you
Giving something
Becomes your habit
Won’t the mother know?
Even before the baby make some sound
Won’t she hug it and
Feed her milk
Knowing the hint
Father will provide
Fulfilling the needs of his child
He will rejoice in it
For what reason
Relatives and friends are there
When need comes
Only to help
The one who
Gave these tendencies to us
Doing more than that
Is your habit
As I know this
I tell this Oh my Lord
In everyday life
I receive your blessings
But still there is
One shortcoming in this
That is what I am
Going to tell
Before I tell
It is better for you understand
Once I shared
You cannot deny it
I have the
Answer for this also
But I will share it
Once you gave your response to me
Thirupponthuruthi, 8-9-2017, காலை, 7.30
As I got up very early in the morning unable to sleep, after doing my reading etc., went for a long walk in the morning enjoying the nature and my time with the Lord. As I was often thinking the so many blessings that he gives in spite of my short comings, I said to him you can never be harsh on me. Then as the inspiration came I began to write this song in my mind and after I came to the room I wrote this song. But as I was in a teasing mood of the Lord, the last three stanzas I deliberately wrote to him that unless he understand and tell what is that short coming that he has, I am not going to share my answer to him. Then I laughed to the content of my heart. I like that very much to be free with the Lord.
725 மீதியைச் சொல்வேன்
என்னதான் சொன்னாலும்
உன்மனம் கேட்காது
நன்மைகள் செய்யாமல்
அதுவுமே ஓயாது
ஏனென்றால் அதுஉனக்கு
இயலபாகிப் போச்சு
எதையேனும் தருவது
வழக்கமும் ஆச்சு
மழலை சிணுங்கும்முன்
தாய் அறிவாளே
மார்பினில் அணைத்துப்
பால் தருவாளே
குறிப்பை அறிந்துமே
தந்தையும் தருவான்
குழந்தையின் தேவையை
நிறைவாக்கி மகிழ்வான்
உற்றமும் சுற்றமும்
இருப்பது எதற்கு
தேவைப் படுகையில்
உதவிட அதற்கு
இந்த குணத்தை
தந்த உனக்கு
அதனினும் அதிகம்
செய்வது வழக்கம்
அறிந்ததால் சொன்னேன்
ஐயனே நானும்
அனுதின வாழ்வில்
பெறுகிறேன் நானும்
ஆயினும் இதிலும்
குறைஒன்று உள்ளது
அதைத்தான் சொல்ல
வருகிறேன் இப்போது
சொல்லும்முன் புரிந்து
கொள்வது நல்லது
சொன்னபின் மறுக்க
ஆகாது உனக்கு
இதற்கு பதிலும்
உன்னிடம் உள்ளது
அதைநீ சொன்னபின்
சொல்லுவேன் மீதியை
திருப்பூந்துருத்தி, 8-9-2017, காலை, 7.30
Posted up to this
726 Not two
I come and talk with you
From within my heart
Not knowing about
The struggle in the world
Sitting
Leisurely
Not doing
Anything
I cheat me
Thinking that
I am searching you
Within me
Though I
Close my eyes
Thousands of visions
Will come within
My heart
After running behind them
Will return back
With emptiness
Seeing you
Within me
Is not sitting
Just closing my eyes
Doing the
Outside works which you give
Properly is
The best way (for that)
Keeping faith
In you is not
Seeing you
Within me
Once seen you
Within me
It is only in the
Changed outward vision
Not dividing
Inner and outer
I should live in both
Within you
I should demonstrate
Outwardly also
About the inner vision
Which I saw within
Thirupponthuruthi, 12 30, pm. 8-9-207
After reading this comment by Sahi I closed my reading and sat to contemplate about it. Then I wrote my reflections through this song.
“…Faith is not just something inward looking, it is new way of looking at the external world….”(Jyoti Sahi, Stepping Stones: Reflections on the Theology on lindian Christian Culture. Bangalore, Asian Trading Corporation, 1986, quoted in, Michelle Voss Roberts, Tastes of the Divine: Hindu and Christian Theologies of Emotion, Fordham University Press, New York, 2014, p.43
726 இரண்டில்லை
உள்ளாக உன்னிடம்
வந்துநான் பேசுறேன்
உலகின் போராட்டம்
எதுவெனப் புரியாமல்
ஓய்வாக நானும்
அமர்ந்து கொண்டு
ஒருவிதச் செயலும்
செய்யாமல் இருந்து
எனக்குள்ளே உன்னைத்
தேடுறேன் என்று
என்னையே ஏய்த்துக்
கொள்கிறேன் நன்று
வெறுமனே கண்களை
மூடிக் கொண்டாலும்
உள்ளே ஆயிரம்
காட்சிகள் தோன்ற
அவைகளின் பின்னே
ஓடிய மனதும்
இறுதியில் வெறுமையாய்
உலகிற்குத் திரும்பும்
உள்ளாக உன்னை
காண்பது என்பது
கண்களை மூடி
அமர்வது அன்று
புறம்பாக நீதரும்
பணிகளை நானும்
சிறப்பாகச் செய்வது
ஒன்றுதான் நன்று
உன்மீது நம்பிக்கை
வைப்பது என்பது
உள்ளாக உன்னை
காண்பதில் இல்லை
உள்ளாக உன்னை
கண்ட பின்னாலே
வெளியான பார்வையின்
மாற்றத்தில் உள்ளது
உள்ளென வெளியென
இரண்டாகப் பிரிக்காமல்
இரண்டிலும் ஒன்றாக
உன்னிலே வாழணும்
உள்ளாக உன்காட்ச்சி
கண்டதை நானும்
வெளியான செயலில்
காட்டிட வேண்டும்
திருப்பூந்துருத்தி, மதியம் 12 30, 8-9-207
727 Who is there?
Who is there?
To give peace
To fill my mind
And to overlord me
Who else is there to the baby?
Other than the mother
To take care of it
Even if the world rejects it
Seeking some thing
The mind is wandering
Who else is there?
To bestow that to me
When along with mind
Body also become tired
Who is there?
To redeem them both
What is good for me?
I don’t know about it
When my heart is
Longing so many things
Who else is there?
To tell me clearly that
This is the peace
Which I am seeking
Whether I understand or not
Something within me
Attacking my heart
Defeating me
Unless I overcoming it
To understand you
There won’t be any end
To such lamentations
But this is
Impossible for me
Where else is the means
As I do not understand clearly
Unless you come
Seeking me to give it
There is no chance
For me to get,
The one which I never attained
In spite of repeated attempts
The one thing which I cannot understand
Even after reading many things
But I know for sure one thing
With clear understanding that
The means by which
I can surely receive it
Lifting up both my hands
I took refuge unto you
I gave me
For you to overlord me
Whether you accept or reject
I am ready for that
What else is there for me to say further?
Once I gave me you completely
Thirupponthuruthi, 8-9-2017, 4.30 pm.
Too much reading on various subjects that too by various authors having various views and convictions coming from various background often not only confuses me but challenges a lot about my bhakti in the Lord. Though overwhelmed by their presentation and the way they try convince me, yet something within me refuse to agree with them. I cannot refute them through my rationalistic arguments by giving my own facts or through my comments and interpretation. My limitation in understanding and expression won’t do full justice to it. When I disagree with the view of the author, immediately my mind will present alternative views based on my conviction and understanding. But when I try to communicate it through proper words, then I fail. Then I give up. Those times the only way to overcome such confusion is to surrender to the Lord accepting my limitations and also that of others.
727 யாருண்டு
நீயன்றி யாருண்டு
நிம்மதி அருள
நினைவெல்லாம் நிறைந்தது
நீயென்னை ஆள
தாயன்றி யாருண்டு
சேயினைக் காக்க
தரணியே மறுத்தாலும்
அணைத்துமே புரக்க
எதையோ தேடி
அலைகின்ற மனது
எவ்விதம் பெறும்
நீயன்றி அருள
உடலோடு உயிரும்
சோர்கின்ற போது
நீயன்றி யாருண்டு
மீட்பை அருள
எனக்கெது நன்மை
எனத் தெரியாது
இதயமும் பலவற்றை
நாடிடும் போது
இதுதான் நான்தேடும்
நிம்மதி என்று
அருளிட உனையன்றி
யாரிங்கு உண்டு
உணர்ந்தாலும் மறுத்தாலும்
புரியாத ஒன்று
உள்ளத்தைத் தாக்கி
அழிக்குது நன்று
அதைவென்று நானுன்னை
அறிகின்ற வரையில்
இதுபோன்ற புலம்பலுல்
ஓய்ந்து விடாது
ஆயினும் எனக்கிது
இயலாத ஒன்று
அறியாத எனக்கு
வழியெங்கு உண்டு
நீயாக எனைத்தேடி
வருவது அன்றி
நானாக அடைய
வழி கிடையாது
பலமுறை முயன்றும்
அடையாத ஒன்றை
பலவற்றை படித்தும்
புரியாத ஒன்றை
இனிபெற எனக்கு
வழியென்ன உண்டு
இதைமட்டும் கூற
அறிந்து உண்டு
இருகரம் உயர்த்தி
சரணடைந்தேனே
நீயாள என்னைத்
தந்து விட்டேனே
ஏற்றாலும் மறுத்தாலும்
சம்மதிப் பேனே
இனிசொல்ல என்ன
எனைத்தந்த பின்னே
திருப்பூந்துருத்தி, 8-9-2017, மாலை 4.30
728 Your relationship
Like this I come
And have fellowship with you.
I folding both my hands
As I worship you.
Joining me you too
Celebrate it with much joy.
Is it not the real bliss?
How can I say about it?
I don’t have age to bless you
Therefore I praise bowing before you.
I don’t find words to praise you
Therefore I rejoice in my heart.
I find it difficult
Even to communicate this.
Yet I rejoice in you
By singing your praises.
Though I have written
So many poems like this,
Even though I share my feelings
Through words,
It flows like honey
In my ears,
My mind too joining it
Praises you.
I am living
Only seeking this each day.
I search time
To sing your praises.
Whenever I get it
I come to your feet.
I am longing within me
To have fellowship with you.
So far you never
Disappointed me.
When I come seeking you
You never denied it.
As you are there to give yourself
For me,
I never find bliss
More than this.
Becoming meaning for fellowship
You come and live with me.
You tell about the greatness
Of this relationship.
You give dignity to fellowship
Through you.
Becoming the goal of it
At the end you receive me for you.
Once I received
A fellowship like this,
I won’t seek other things
Believe me.
The noble love
Which I received through you,
Gives me the immense strength
To sing your praise.
Thirupponthuruthi, 8-9-2017, 6.30 pm.
As I went for my evening walk, I was in a different world and mood and the peacocks walking here and there. The nature around me without anyone to disturb me helped me to immerse in my fellowship and communion with the Lord. As I continue to contemplate and rejoice in that fellowship, after I returned back to my room recalling that experience I wrote this song celebrating the relationship and fellowship with the Lord. He gives meaning to it, he rejoices in it, he gives dignity to you, he becomes the goal for that fellowship and finally he will receive us to have eternal fellowship.
728 உன் உறவு
இதுபோல உன்னுடன்
நான்வந்து உறவாட
இருகரம் கூப்பி
உனைத்தொ ழுதேத்த
என்னுடன் நீசேர்ந்து
மகிழ்ந்து கொண்டாட
இதுவன்றோ பேரின்பம்
எவ்விதம் அதைக்கூற
வாழ்த்திட வயதில்லை
வணங்கியே துதிக்கிறேன்
போற்றிட மொழியில்லை
மனதிலே மகிழ்கிறேன்
நானிதைக் கூறிட
வழியின்றி தவிக்கின்றேன்
ஆயினும் துதிப்பாடி
உன்னுள்ளே வாழ்கின்றேன்
இதுபோன்ற பாமாலை
பலமுறை புனைந்தாலும்
இதயத்தின் உணர்வையே
மொழிகொண்டு சொன்னாலும்
திகட்டாத தேனாக
செவியினில் பாயுது
சிந்தையும் உடன்சேர்ந்து
நிறைந்துமே வாழ்த்துது
இதையே அனுதினம்
எதிர்பார்த்து வாழ்கின்றேன்
உன்புகழ் பாடிட
நேரமும் தேடுறேன்
எப்போது கிடைத்தாலும்
உடனோடி வருகின்றேன்
உன்னோடு உறவாட
ஏங்கியே தவிக்கின்றேன்
இதுவரை ஏமாற்றம்
நீதந்த தில்லையே
உனைத்தேடி வரும்போது
மறுப்பதும் இல்லையே
எனக்கென உனைத்தர
நீயுமே இருக்கையில்
இதைவிடப் பேரின்பம்
நான்கண்ட தில்லையே
உறவுக்குப் பொருளாகி
உடன்வந்து வாழ்கிறாய்
உறவின் பெருமையை
எடுத்துச் சொல்கிறாய்
உறவுக்கு மேன்மையை
உன்மூலம் தருகிறாய்
உறவுக்கு முடிவாகி
உன்னோடு சேர்க்கிறாய்
இதுபோன்ற உறவை
நான்பெற்ற பின்பு
இதையன்றி வேறொன்றைத்
தேடேனே நம்பு
உன்னாலே நாற்பெற்ற
உன்னத அன்பு
அருளுது உனைப்பாட
அளவற்ற தெம்பு
திருப்பூந்துருத்தி, 8-9-2017, மாலை 6.30
729. Each one’s boundary
Which one is
Equal to love?
What can be replaced?
For grace?
When one lives
Without ethics
He can never understand
Both love and grace.
Unless noble thoughts
Over lord us
Nobleness will
Never come in heart.
When one thinks
Without a clear mind
Noble thoughts
Won’t come automatically.
Those who
Cannot recognize other’s need
Wont’ understand
Both ethics and nobleness.
Those who live
Sacrificing others interest
For selfish needs
Never will understand them.
In this world
It is not possible
For everyone
To live for others.
But not realizing
Others pain
Will never be considered
As human life.
Those who cannot
Realize this
Will have only an
Adamant nature.
Once they not
Have a soft heart
And compassion
What can we do about it?
But we cannot
Close our eyes
After seeing
The suffering of others.
But after knowing
Each one’s limitation
We cannot interfere
In their life also.
‘Let it happen
What ought to happen’.
Saying like this
We cannot escape (from our responsibility).
At the same time
Breaching the boundary
To go and help others
Won’t be proper for us.
What is the answer?
For this now?
Is not clear
To me now.
Thinking that
Proper time will come
Doing my part
Alone is the best option now.
Thirupponthuruthi, 8-9-2017, 10.30 pm.
Blessed is the one who knows his limitation is a noble thought. But when we are caught between our limitation and others suffering, where to interfere and where to keep away becomes an ethical question for me. But unable to do much waiting upon proper time to interfere is the best option left before me. As I thought about, I wrote this song. At the same time, many live not recognizing others need and suffering because of their adamant nature. There is no point in confronting them, as they never realize the greatness of both love and grace particularly that I received from the Lord. This is not comparing one’s nature with another, but a common human problem which we often confront in life.
729. அவரவர் எல்லை
அன்புக்கு ஈடாக
எதைத்தான் சொல்வது
அருளுக்கு மாறாக
எதைநாம் பெறுவது
பண்பற்று உலகில்
வாழ்ந்திடும் போது
அன்பையும் அருளையும்
புரிந்திட முடியாது
உயர்வான எண்ணங்கள்
உருவாகி ஆளாமல்
உள்ளத்தில் உயர்வு
ஒருநாளும் வாராது
எண்ணத்தில் தெளிவு
இல்லாமல் சிந்திக்க
உயர்வான எண்ணங்கள்
தன்போல வாராது
அன்போடு அருளையும்
பண்பாடு உயர்வையும்
பிறர்தேவை புரியாதோர்
ஒருநாளும் அறியாரே
தன்தேவைக்காக
பிறர்வாழ்வை பலியாக்கி
வாழ்வோர் என்றும்
இவையெல்லாம் புரியாரே
தனக்காக வாழாமல்
பிறர்க்காக வாழ்வது
தரணியில் எல்லோர்க்கும்
இயலாத ஒன்று
ஆயினும் அதற்காக
பிறர்துன்பம் அறியாமல்
வாழ்ந்திடும் வாழ்க்கை
மனிதமும் ஆகாது
தன்போல புரியோர்க்கு
எத்தனை சொன்னாலும்
பிடிவாத குணமன்றி
வேறொன்றும் இருக்காது
இளகாத இதயமும்
உருகாத உள்ளமும்
இல்லாது போனபின்
நாமென்ன செய்வது
இவராலே பிறர்படும்
இன்னல்கள் நாம்கண்டும்
கண்மூடி இருந்திட
சிலருக்கு இயலாது
ஆயினும் அவரவர்
எல்லையை அறிந்தபின்
வீணாக பிறர்வாழ்வில்
தலையிட இயலாது
நடப்பது நடக்கட்டும்
நாமென்ன செய்ய
என்றுமே கூறி
தப்பிக்க இயலாது
ஆயினும் எல்லை
மீறியே சென்று
தலையிட்டுக் கொள்வது
சரியாக இருக்காது
என்னதான் இதற்கு
விடைஇங்கு இருக்கு
என்பதும் எனக்கு
தெரியலை இப்போது
ஏற்ற காலம்
வருமென்று இருந்து
நம்பங்கை செய்வது
ஒன்றுதான் நல்லது
திருப்பூந்துருத்தி, 8-9-2017, இரவ, 10.30
This is the response to the song 729
730 Means to escape
The answer for this question
Is with you
Till then
I need patience
Each day
Making it as a prayer
Oh my Lord
I should pray to you
In order to correct me
You allowed this
You gave me an opportunity
To know you further
Yet having frustration
In my heart
I am often
Questioning you
It is a known answer
But what can I do?
There is no clarity in mind
Whom shall I blame?
If one is available
I blame him!
And by that I search a means
To escape (from my responsibility)
But you never become
Tired of this
Even if I come often
You never refused me
Even if I blame you
You never deny that
And never forget
To help me
It is better for you
To be my God
It is your responsibility
To save a bhakta like this
As you gave me redemption
You get in this trap
Now you are in trouble
As you don’t have means to escape
One time you were tortured
But that is not enough
You redeemed a wretched sinner like me
That is your mistake
Once you have done this mistake
Now you cannot escape
Therefore without failing
Give me the answer
Otherwise you will be
In hot soup.
(Because) you will be forced
To listen songs like this each day!
But if you give
A simple answer
Oh my Lord
There is a way for you to escape!
9-9-2017, Thirupponthuruthi, 10.30 am.
When I went for my morning walk, I recalled the song which I wrote yesterday envying about the conflict between (my) limitation and responsibility, then I began to pray about it. But once I returned back to my room, after morning breakfast, when I took my book to read, I said to the Lord, again recalling song 729, ‘you have the answer to this problem and better you give it me quickly. Otherwise I will continue to pester you, even write a song to irritate you.’ Then I continued my reading, but as the inspiration came, I quickly wrote this song with a smile and said to the Lord, ‘see, as you didn’t give the answer, now you are forced to listen to one more a song to irritate you’.
இதற்கான பதில் இது
730 தப்பிக்கும் வழி
இதற்கான விடையுமோ
இருக்கு உன்னிடம்
அதுவரை நானும்
பொறுமை காக்கணும்
அனுதினம் இதையே
ஜெபமாக மாற்றி
ஐயனே உன்னிடம்
சொல்லிட வேண்டும்
என்னையே திருத்த
இதை அனுமதித்தாய்
உன்னையே புரிந்திட
வாய்ப்புமே கொடுத்தாய்
ஆயினும் மனதில்
சஞ்சலம் கொண்டுமே
அடிக்கடி கேள்வி
உன்னையும் கேட்கிறேன்
தெரிந்த விடைதான்
நானென்ன செய்ய
தெளிவில்லை மனதில்
குறையாரை சொல்ல
எவரேனும் அகப்பட்டால்
வீணபழி போடுறேன்
அதைசொல்லித் தப்பிக்க
நான்வழி தேடுறேன்
ஆயினும் நீமட்டும்
அலுக்கவே இல்லை
அடிக்கடி வந்தாலும்
தடுக்கவும் இல்லை
உன்மீதும் குறைகூற
மறுப்பதும் இல்லை
உதவி செய்யவும்
மறப்பதும் இல்லை
எனக்குநீ தெய்வமாய்
இருப்பதும் நல்லது
என்போன்ற பக்தனை
காப்பதுன் பொறுப்பது
மீட்பையும் தந்ததால்
மாட்டியே கொண்டாய்
மீளவும் இயலாது
நீ தவிக்கின்றாய்
ஒருமுறை வதைப்பட்டால்
அதுமட்டும் போதாது
என்போன்ற நீசனை
மீட்டாய் உன்தப்பிது
தப்பை செய்தபின்
தப்பிக்க முடியாது
தப்பாது இப்போது
பதிலையும் தந்திடு
இல்லாது போனால்
உன்பாடு திண்டாட்டம்
இதுபோல பலபாட்டு
தினம்கேட்க வேண்டும்
அதைவிட கேள்விக்கு
எளிதாக விடைதந்தால
ஐயனே தப்பிக்க
வழிஉண்டு உனக்கும்
9-9-2017′ திருப்பூந்துருத்தி, காலை 10.30
731 You are everything
Whether give spanks or hug, it is the same hands
Whether you give or refuse it is the same grace
Whether I win or lose the result is the same
Whether I reach or fail it is the same abode
Whether I praise or blame, you won’t change
Whether I glorify or deny, you won’t refuse
Whether I remember or forgot, you won’t forgot me
Whether I listen or not, you will never fail
Whether I understood or confused, you are my God
Whether I receive or reject, you are my redeemer
Whether I come or go away, you are the one who to protects me
Whether I obey or rebel, you alone will overlord me
Once I understood all these, there is no other refuge for me
If you deny it, there is no means for me to be redeemed
I don’t hesitate to proclaim this
Because of that I will never feel lowered
Once I received redemption because of you
My tongue which won’t sing your praises is a mere waste
Once I live each day with you
I won’t seek any other bliss other than this
Thirupponthuruthi, 10-9-2017, 7.00 pm
During my evening walk I said to the Lord whether you give spanks or hug the same are the hands. Then I continue to talk with the Lord the way He remains everything for me in my life. As the inspiration flowed, I wrote this song in my mind and after returning back to the room, I wrote this song worshiping him.
731 நீதான் எல்லாம்
அடித்தாலும் அணைத்தாலும் கரம் ஒன்றுதான்
அளித்தாலும் மறுத்தாலும் அருள் ஒன்றுதான்
வென்றாலும் தோற்றாலும் கதி ஒன்றுதான்
சேர்த்தாலும் தடுத்தாலும் பதம் ஒன்றுதான்
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நீ மாறாயே
போற்றினும் மறுக்கினும் நீ மறுக்காயே
நினைந்தாலும் மறந்தாலும் நீ மறக்காயே
கேட்டாலும் விட்டாலும் நீ மீறாயே
புரிந்தாலும் குழம்பினும் நீ தெய்வம்தான்
ஏற்றாலும் மறுத்தாலும் நீ மீட்பன்தான்
வந்தாலும் விலகினும் நீ காப்போன்தான்
பணிந்தாலும் முரண்டாலும் நீ ஆள்வோன்தான்
இவற்றை அறிந்தபின் கதி வேறில்லை
இவற்றை மறுத்தாலோ மீட்பே இல்லை
இதைச் சொல்ல எனக்குத் தயக்கம் இல்லை
இதனாலே எனக்குத் தாழ்ச்சி இல்லை
உன்னாலே மீட்பை அடைந்த பின்னே
உனைப் போற்றி பாடாத நாவும் வீணே
உன்னோடு அனுதினம் வாழ்ந்த பின்னே
இதனினும் பேறின்பம் நான் தேடேனே
திருப்பூந்துருத்தி, 10-9-2017, மாலை, 7.00
732 Hold your hands before God
All you bhaktas come
Sing praising the Lord
Praise him each day so that we can say
It is good, good indeed to praise him
We spent our life in eating and sleeping
We have searched a lot for the need of the body.
Forgetting the need of the heart
We live vainly on this earth
However much we receive
It is not enough.
Though the body becomes weak
Yet the desire of the heart never goes.
Seeking constantly the need, the body also becomes tired
All that we have accumulated also gone
Yet the longing has never gone
Therefore there never comes an end to the search
If we live like this here till the end
Once we have completed our life here,
What is the means for the next life?
Think about this also?
When there is life still in this body
When the longing has come in the heart
Keep the mind in the Lord
Before the life come to an end
Today He gave time for that
He gave one more opportunity to me
Before the time will be gone from our hand
Beg him holding your hands before him
Thirupponthuruthi. 11-9-2017, 5.00
As I got up very early in the morning I sat for meditation and prayer. Then thought about the way everyday life goes for me as if programmed to cater to the need of my body and mind (reading etc.). I give very less time to the Lord to have fellowship with him. But these kinds of opportunity are given by god because of his mercy on me, to have fellowship with him when I got up early and cannot do any reading and writing. Though often I suffer and struggle due to lack of proper sleep, yet they also provide an opportunity to have fellowship with the Lord.
732 கையேந்துங்கள்
தொண்டரே எல்லோரும் வாருங்கள்
துதித்து ஐயனைப் பாடுங்கள்
நன்று நன்று என்று சொல்லும்படி
நாள்தோறும் அவனைப் போற்றுங்கள்
உண்டு உறங்கியே வாழ்ந்துவிட்டோம்
உடலின் தேவைக்குத் தேடிவிட்டோம்
மனதின் தேவையை மறந்துவிட்டு
மணணுலகில் வீணாய் வாழ்ந்திருக்கோம்
எத்தனைப் பெற்றாலும் போதவில்லை
ஏக்கமோ முற்றாகப் போகவில்லை
தேகமே தேய்ந்துதான் ஓய்ந்தாலும்
மனதின் ஆசைகள் மறையவில்லை
தேடித்தேடி தேகமும் ஓய்ந்தது
சேர்த்தவை எல்லாம் ஓடியும்போனது
ஆயினும் நாட்டமோ போகவில்லை
ஆகையால் தேடலும் முடியவில்லை
இறுதி வரையில் இப்படியே
இங்குமே வாழ்ந்து முடித்தபின்னே
மறுமைக்கு வழி என்னஉண்டு
மனதில் இதையும் எண்ணிடுவீர்
உடலில் உயிரும் உள்ளபோதே
உள்ளத்தில் ஆர்வமும் வந்தபோதே
சித்தத்தை அத்தன்பால் வைத்துவிடு
சீக்கிரம் வாழ்வும் முடியும்முன்னே
இன்றைக்கு அதற்கும் நேரம்தந்தான்
இன்னுமே ஒரு வாய்ப்பும்தந்தான்
காலமும் கைவிட்டுப் போகும்முன்னே
கையேந்தி அவனை வேண்டிடுவீர்
திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 5.00
733 I don’t have patience
Is it a mistake on my part not questioning you?
Is it a mistake on my part to accept whatever you might do with me?
Is it a mistake on my part to annihilate my ego?
Oh my Lord, is it a mistake as I obeyed you?
I know why I ask these questions to you.
I know all the blessings that you have given to me.
Still knowing the frustration of my heart
What is the reason for your silence?
Mind is fluctuating in each second
Runs in all directions without remain focused
I failed to keep focused (on you)
That is why I asked all these questions to you
The heart never remains firm even in one thing
It has no commitment even in one thing
Though you gave some responsibilities
I don’t have patience to do them
There came some kind of laziness in my mind
Body along with mind became tired because of it
Many times I tried to revive them (but I failed)
As I become upset with you, now I am asking you
It is not possible for me anymore
This is the reality today
It is good for me to share this with you
I don’t have patience any more.
Thirupponthuruthi, 11-9-2017, 11.30
Suddenly I became very lazy and I don’t want even get up from my bed. I tried to read but as I cannot concentrate I gave up. Then for a change went for a walk, but as I don’t like it, returned back to the room. Then to kill the time I began to do the cross stitch, but soon threw it away and sat silently. My mind began to run in every direction and I don’t know what to do? Then as I became very upset I began to fight with the Lord on various issues. After that fight I calmed down and then I wrote this song.
733 பொறுமை இல்லை
ஏனென்று கேளாமல் இருப்பதென் தவறா
எதைநீ செய்தாலும் பொறுப்பதென் தவறா
நானென்ற எண்ணத்தை அழித்தது தவறா
நாதனே நானுனைப் பணிந்தது தவறா
ஏனிதைக் கேட்கிறேன் என்பது தெரியும்
எனக்குநீ செய்த நன்மைகள் தெரியும்
ஆயினும் என்மன சஞ்சலம் அறிந்தும்
அமைதிநீ கொள்ள என்ன காரணம்
நொடிகள் தோறும் மாறுது மனது
நிலையற்று தன்போல் பலதிசை ஓடுது
ஒருமுகப் படுத்த முயன்றுமே தோற்றேன்
அதனால் இத்தனை கேள்விகள் கேட்டேன்
ஒன்றிலும் மனது உறுதியாய் இல்லை
ஒன்றிலும் பற்று அதற்குமே இல்லை
பொறுப்பென சிலவற்றை தந்த போதும்
அவற்றை செய்ய பொறுமையும் காணோம்
ஒருவித சோம்பல் வந்தது மனதில்
உடலொடு உயிரும் சோர்ந்தது அதனுள்
உயிர்ப்பிக்க பலமுறை முயன்றுமே பார்த்தேன்
உன்மீதும் கோபம் கொண்டதால் கேட்டேன்
எனக்கினி இயலாது என்பதே உண்மை
இதுதான் இன்றைக்கு எனது நிலமை
உனக்கிதை சொல்வது எனக்குமே நன்மை
இதற்குமேல் சொல்ல எனக்கில்லை பொறுமை
திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 11.30
734 Some kind of fear
However I
Pretend outwardly
There is a fear
Within me
What will?
Be the future
About this
I have many questions
I am not
Attached with anything
I don’t have the courage
To depend upon anyone
No place is
Giving me peace
Even I don’t have
Faith in me
Some how
The time is going on its own
Overcoming me
It runs its own course
I don’t have the
Strength to stop it
Even if try to do that
It won’t stop, this is the truth
There is no option but
To go along with time
There is no
Alternative to this
I know
Very well that
Why I am
Sharing this with you
Where is the
Time and patience
For others to understand this
Other than you?
I came unto you
Only to share this
I requested you
To listen this prayer
This opportunity
Is also given by you
That alone is
Good for me (now)
Thirupponthuruthi, 11-9-2027, 12.50 pm.
Another song about my anxiety based on unnecessary imagination about my future. When I look back, all that I worried (relatively) never happened. All that I desired also not accomplished. But the way God took charge of my life is beyond my comprehension. Others can say that this is what Time does. But for me this is what God has done and still doing and will do in future. At the same time my fickle and unstable mind as usual worries too much about so many things. Well, as before after sitting and worrying for some time I will say to the Lord that all that I worried so far are my prayers. And I feel comfort in it, even converting my anxieties also a kind of prayers.
734 ஒருவித பயம்
வெளியாக எத்தனை
வேடமே போட்டாலும்
உள்ளாக ஒருவித
பயமொன்று இருக்குது@
எப்படி அமையும்
எதிர்காலம் என்று
எனக்குள் ஆயிரம்
கேள்விகள் தோன்றுது
எதன்மீதும் பற்று
எனக்குமே இல்லை
எவரையும் சார
என்மனம் துணியலை
எந்த இடமும்
நிம்மதி தரவில்லை
என்மீதே எனக்கு
நம்பிக்கை வரவில்லை
ஏதோ போகுது
காலம் தன்போல
என்னையும் மீறி
ஓடுது தன்போல
இழுத்து நிறுத்த
எனக்கில்லை வலிமை
இழுத்தாலும் நிற்காது
இதுதான் உண்மை
காலத்தின் போக்கில்
போவதைத் தவிர
மாற்றொன்று எனக்கு
வேறொன்றும் இல்லை
இதையெல்லாம் உனக்கு
சொல்வது எதற்கு
என்பது மட்டும்
புரியுது எனக்கு
உன்னைத் தவிர
புரிந்திட பிறரக்கு
நேரமும் பொறுமையும்
எங்கே இருக்கு
இதைத்தான் உன்னிடம்
சொல்லிட வந்தேன்
இந்த வேண்டுதல்
கேட்டிடு என்றேன்
இதுவும் கூட
நீதந்த ஒன்று
அதுதான் எனக்கு
மிகவும் நன்று
திருப்பூந்துருத்தி,11-9-2027, காலை, 12.50
735 You alone tell
Doing small good things in life
Singing you each day
Spending the days in a good manner
Oh my Lord I should reach the Further shore
This life is given by you
This body also given by you
Understanding this clearly
Each day I should live accordingly
I should not live anymore
By blaming everyone
finding fault in everything
Proclaiming my own righteousness
I should only think this alone first that,
You gave the tongue only to tell good things
You gave mind only to think good things
You gave this body only do some good things.
Again I should not do the mistakes
which I have done so far.
But I get defeated by saying like this many times,
Therefore again I should not be defeated.
For that I need your protection.
You should often remember this.
But forgetting to do that,
You should not blame this slave.
Just I told you that
I won’t blame others anymore.
But forgetting that Oh my Lord
I blamed you again.
What shall I do please kindly you tell that
How to repent, just show me the way
It is not enough to write such a poem (of penitence)
Therefore you tell the rest.
Thirupponthuruthi, 12-9-2017, 7.45 am.
Fault finding is my nature, not only in others and in me but also in God. Though many times I resolved not to do it again, I failed miserably. As I began to blame god for so many wrongs in my life, stopping it, I wrote this song with a spirit of penitence.
735 நீயே சொல்
நன்மைகள் சின்னதாய் செய்துகொண்டு
நாள்தோறும் உன்னையும் பாடிக்கொண்டு
நல்லவிதமாக நாட்களைக் கழித்து
நாதனே உன்னிடம் வந்துமே சேரணும்
நீதந்ததிந்த வாழ்கையும் தான்
நீயே தந்ததிந்த தேகமும் தான்
அதையும் நன்கு புரிந்துகொண்டு
அதன்படி அனுதினம் வாழவேண்டும்
எல்லோர் மீதும் குத்தம் சொல்லி
எல்லாவற்றிலும் குற்றம் கண்டு
என்நீதி தன்னையே பறை சாற்றி
இனிமேலும் வாழாமல் இருக்கவேண்டும்
நல்லதை சொல்லத்தான் நாவும் தந்தாய்
நல்லதை எண்ணிட சிந்தை தந்தாய்
முடிந்ததை செய்யத்தான் மேனிதந்தாய்
முதலில் இதைத்தான் எண்ண வேண்டும்
இதுவரை செய்த தப்பினையே
இனிமேலும் செய்யாமல் இருக்கவேண்டும்
இப்படிச் சொல்லியே தோற்றது பலமுறை
இனிமேலும் தோற்காமல் இருக்கவேண்டும்
அதற்கு உன்காவல் தேவை இன்னும்
அடிக்கடி நீயதை நினைக்க வேண்டும்
அதையுமே நீசெய்ய மறந்துவிட்டு
அடியேனைக் குறைசொல்லா திருக்கவேண்டும்
இப்போதான் உனக்கு நானும் சொன்னேன்
இனிமேலும் குறைசொல்ல மாட்டேனென்று
ஆயினும் அதையும் மறந்துவிட்டு
ஐயனே உன்மீதே கூறிவிட்டேன்
என்னநான் செய்வது நீயே சொல்லு
எப்படித் திருந்த, வழியும் சொல்லு
பாட்டிலே எழுதிக் காட்டிவிட்டால்
போதாது மீதியை நீயே சொல்லு
திருப்பூந்துருத்தி, 12-9-2017, காலை,7.45
Posted up to this
736 No chance
Poor god
What else he can do?
How he can
Make us to understand than this?
When we try to find
Other’s fault
He will show our faults
How many faults
We find (in others)
How many explanations
We give to them
When one of our
Mistakes is pointed out
How we try to
Justify it!
Others need not
Tell about it.
We don’t need
Others’ explanation.
When our own heart
Accuses us
There is no hope
To stop it
This is
What has put in us?
Unable to escape
He established it within us
As our own shadow
Follows us
He put our own conscience
As our judge.
Yet
Despising it
We will try to
Control it
However we try
As we cannot overcome it
Finally we will
Blame god for that
Poor one
Listening us patiently
He will try to
Help us to understand
Then he will
Leave us to decide
And will ask us
To live accordingly
For him there is
No alternative to this.
There is no means
To correct us
Once he gave
The verdict in our hand
There is no chance
For us to escape!
Thirupponthuruthi, 12-9-2017, 6.30 pm.
In my evening as I began to reflect the song which I wrote in the morning about my fault finding nature, then I marveled the way god kept our own conscience as our judge, not allowing escaping from it. After returning from my walk I wrote this song as my prayer to thank God for this.
736 வாய்ப்பே இல்லை
இறைவனும் பாவம்
இனியென்ன செய்வான்
இதைவிட நமக்கு
புரிய வைப்பான்
பிறர்குறை நாம்காண
முயன்றிடும் போது
நம்குறை நமக்கு
காட்டியே கொடுப்பான்
எத்தனை எத்தனை
குறைகள் காண்கிறோம்
எத்தனை விளக்கங்கள்
அவற்றுக்கும் தருகிறோம்
நம்குறை ஒன்றை
காட்டிடும் போது
என்னமாய் அதனை
நியாயப் படுத்தறோம்
பிறர்வந்து சொல்லிடத்
தேவையே இல்லை
பிறர்தரும் விளக்கங்கள்
தேவையும் இல்லை
தன்நெஞ்சே தன்னைச்
சுட்டிடும் போது
தடுத்திட நமக்கு
வாய்ப்புமே இல்லை
இதைத்தான் இறைவன்
நமக்கென வைத்தான்
தப்பிக்க இயலாது
நமக்குள்ளே தைத்தான்
தன்நிழல் தன்னுடன்
வந்திடும் வண்ணம்
நம்நெஞ்சை நமக்கே
நீதியாய் வைத்தான்
ஆயினும் அதையும்
அலட்சியம் செய்து
அதைக்கூட அடக்கி
வைத்திட முயல்வோம்
எத்தனை முயன்றும்
வென்றிட இயலாது
இறுதியில் இறைவனை
திட்டியும் தீர்ப்போம்
பாவம் அவனும்
பொறுமையாய்க் கேட்டு
பிறகு நாமும்
புரிந்திட வைப்பான்
அதன்பின் முடிவை
நம்மிடம் விடுவான்
அதன்படி நம்மை
வாழ்ந்திடச் சொல்வான்
இதைவிட அவனுக்கு
வழியேதும் இல்லை
நம்மைத் திருத்த
மார்க்கமும் இல்லை
தீர்ப்பை நம்கையில்
தந்த பின்பு
தப்பிக்க நமக்கு
வாய்ப்புமே இல்லை
திருப்பூந்துருத்தி, 12-9-2017, மாலை, 6.30
737 A Joy
Tuning the harp of silence
Composing with meditation
Adding rhythm by worship
I will dance with joy
Keeping my mind only in you
Adding music and beats to it
Choreographing with proper steps
I will dance with much joy
As per the raga (tune) the thala (rhythm) will come
As per the rhythm the dance will be there
According to the dance song will come
As I sing songs, bhakti will come
When I worship you with bhakti
The experience of mukti will automatically come
Once I received mukti through bhakti
Only joy will abide within me
Only for this I live on this earth
Only to worship your feet I live as your bhakta
I do bhakti only to attain mukti
Attaining mukti is only to receive your grace
Each day this becomes my experience
It becomes your responsibility to give (this) grace
Receiving it becomes my (birth) right
Singing about it become my habit
Thirupponthuruthi. 13-9-2017, 4.00 am.
As I got up very early in the morning I sat for my meditation try to remain as much silent as possible. As usual the peacocks screeched, but this time it was not disturbing me as I tuned my heart and mind to be one with the nature. Then the spirit of joy came and I wrote this song to celebrate that joyful event.
737 ஒரு ஆனந்தம்
மவுனம் என்ற யாழினை மீட்டி
மோனம் என்ற இராகத்தைக் கூட்டி
தாழ்ந்து பணிந்து தாளத்தைப் போட்டு
ஆனந்த நடனம் ஆடுவேன் நானும்
சிந்தை முழுதும் உன்னிலே வைத்தது
ஸ்ருதிகள் ஐதிகள் அத்துடன் சேர்த்து
அடவு அசைவு அழகாய் அமைத்து
ஆனந்தத் தாண்டவம் ஆடுவேன் நானும்
இராகத்திற் கேற்ப்ப தாளமும் பிறக்கும்
தாளத்திற் கேற்ப்ப ஆடலும் இருக்கும்
ஆடலுக் கேற்ற பாடலும் பிறக்கும்
பாடலும் பாட பக்தியும் சிறக்கும்
பக்தியால் உன்னைப் பணிகின்ற போது
முக்தியின் அனுபவம் தன்போல் கிடைக்கும்
பக்தியால் முக்தி கிடைத்த பின்னே
பரவசம் ஒன்றே என்னுளே நிலைக்கும்
பாரினில் வாழ்வது இதனைப் பெறவே
பக்தனாய் வாழ்வது பாதமே தொழவே
பக்தியும் செய்வது முக்தியைப் பெறவே
முக்தியும் அடைவது பேரருள் பெறவே
அனுதினம் இதுஎன் அனுபவமாச்சு
அதனை அருள்வதுன் கடமையு மாச்சு
அதனைப் பெறுவதென் உரிமையுமாச்சு
அதையும் பாடுதல்என் வழக்கமே ஆச்சு
திருப்பூந்துருத்தி, 13-9-2017, காலை, 4.00
738 Need no research
Until you come and give deliverance
There is no hope for me to get it
I voluntarily get trapped in it
But you should not further delay
Though I walked in the path which you showed
How many hurdles came in it?
Why they came by whom they came
I don’t know for sure
Though I overcame them with your help
Many are still following
Added to them many are standing before me
How to go ahead overcoming them?
There is no chance to take rest and I am always busy
Struggle becomes the life
When an end will come to this
That is my question now
I cannot understand—what kind of life is this
My mind becomes tired and suffers each day
Did you create me only for this?
Not knowing this my heart is troubled
Let the life go as it likes
But I only need a means to escape
You can give answer to the questions later
Now let us see what is that means to escape
There is no time to talk philosophy
I don’t have energy to argue with you
Even I don’t have any desire to
Write this as a poem by wasting the time
When I stand on the fire
No need for unnecessary research
If you give a way to escape that is enough now
Later let us do the research for all of them.
Thirupponthuruthi, 13-9-2017, 5.10 pm.
I am not happy the way my mother feels not comfortable at the old age home. But I am not in a position to help her as my brother too wants to serve her. This created some concern and I was bit disturbed. I am ready to walk in the path that Lord has shown but so many hurdles that come often challenge me to press forward. There is no use in sitting and analyzing those hurdles but need to find a means to overcome. Then as I become upset, again with the Lord I wrote this song seeking his help.
738 ஆராய்ச்சி வேண்டாம்
நீயாக வந்து மீட்பைத் தரும்வரை
நானாக மீண்டிட நம்பிக்கை கிடையாது
தானாக வந்துதான் மாட்டிக் கொண்டேன்
ஆனாலும் தாமதம் நீசெய்யக் கூடாது
நீசொன்ன பாதையில் நான்போன போதும்
இடையினில் எத்தனை இடையூறு வந்தன
எதனாலே வந்தது எவறாலே வந்தது
என்பதெல்லாம் எனக்கு நிச்சயம் தெரியாது
உன்துண கொண்டு அவைத்தாண்டி வந்தாலும்
பின்னாக பலவும் தொடர்ந்தே வருகுது
அத்துடன் எதிரே ஆயிரம் நிற்குது
அவற்றைத் தாண்டி எவ்விதம் செல்வது
ஒருநேரம் ஓயவில்லை ஓய்வுக்கு வழியில்லை
போராட்டம் ஆகிப் போனதே வாழ்க்கை
இதற்கொரு முடிவு வருவது எப்போது
என்பதே எனக்குள்ள கேள்வியும் இப்போது
இதுஎன்ன வாழ்க்கை எனப்புரியாது
அனுதினம் சோர்ந்து தவிக்குது மனது
இதற்காகத்தானா நீயெமைப் படைத்தாய்
எனத் தெரியாமல் கலங்குது மனது
என்னவோ போகட்டும் என்னவோ ஆகட்டும்
இப்போ தப்பிக்க வழிமட்டும் தேவை
கேள்விக்கு பதிலெல்லாம் பிறகு தரலாம்
ஆகிற வழியை இப்போது பார்க்கலாம்
தத்துவம் பேச நேரம் கிடையாது
தர்க்கங்கள் செய்ய தெம்பும் கிடையாது
பிழப்பத்துப் போயி இதையெல்லாம் பாட்டாக
எழுதிட எனக்கு விருப்பமும் கிடையாது
நெருப்பிலே நின்று தவித்திடும் போது
வீணான ஆராய்ச்சி வேண்டாம் இப்போது
தப்பிக்க வழியொன்று தந்தால் அதுபோதும்
பிறகு செய்யலாம் மேற்கொண்டு ஆராய்ச்சி
திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 5.10
739 So many worries
I have
Thousands of worries
But how can I say
What is what to you?
Since I born
It is about my body
When grew
It was about my mind
When I lived with others
It was about relationship
When I lived
I become a worry to others
More than that
I am worried about me
Along with I
When I think about
Your concern for me
I am more
Worried
About you
How I am
Going to
Convey it
As a poem is the present worry
Then how
Others are
Going to
Understand in the next worry
Thirupponthhuruthi, 13-9-2017, 7.00 pm.
This poem I wrote to tease me as I often worry so many things which are not even there. Then I said to the Lord, ‘don’t worry about me, I cannot say all of them to you’. Then to tease me I wrote this song.
739 ஒரே கவலைமயம்
ஆயிரம் கவலைகள்
இருக்குது எனக்கு
எவைஎவை அவையென
சொல்லிட உனக்கு
பிறந்து முதலே
உடலொடு கவலை
வளர்ந்த பின்னாலே
மனதிலே கவலை
வளரும் போது
உறவுக்குக் கவலை
வாழும் போது
பிறருக்குக் கவலை
இத்துடன் எனக்கு
என்னுடன் கவலை
அத்துடன் என்மீது
நீகொண்ட பரிவை
எண்ணிட எனக்கு
உன்மீதும் கவலை
அதையெண்ணி உனக்கு
என்மீது கவலை
இதையெல்லாம் எப்படி
எழுத்தாக மாற்றி
பாட்டாக மாற்ற
என்கின்ற கவலை
அப்புறம் அதையும்
மற்றவர் எப்படி
புரிந்தது கொள்வார்
என்கின்ற கவலை
திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 7.00
740 Inner peace
Without having
Inner peace
Is there any use
In the peace which is around us?
Without have
Clarity in mind
Is there any use
Seeking God
When so many pressures
Are pressing us
Is there any way to escape?
Only through our mind
When confusion
Comes along with trouble
Is there any liberation
Only in worrying about it
When there is one
To give answer
Will it available
By searching everywhere
Not receiving it
By approaching him
Is there any use
Lamenting alone
If we refuse to receive
When he gives
Can we receive it?
By blaming him
Realizing this
Seeking his holy feet
Through his grace
We should be delivered
Thirupponthuruthi, 14-9-2017, காலை, 10.30
Sharing our burdens with others and seeking some kind of counsel or answer is the best way to understand our problem and situation. But at the end unless we seek it through prayer from God, all other means won’t give the inner peace which we seek when so many pressure press us all around. As I experience it this morning I wrote this song about it.
740 உள்ளான அமைதி
உள்ளான அமைதி
உள்ளத்தில் இல்லாமல்
புறம்பான அமைதியால்
பயனேதும் உண்டோ
தெளிவான சிந்தை
இல்லாத போது
தெயவத்தை நாடி
பயனுமே உண்டோ
பலவித நெருக்கடி
பலவிதம் நெருக்கையில்
புத்தியால் மட்டுமே
மீட்புமே உண்டோ
கலக்கமும் குழப்பமும்
கலந்து வருகையில்
கவலைப் படுவதால்
விடுதலை உண்டோ
விடைதர ஒருவன்
இருப்பதை மறந்து
வேறெங்கோ அலைவதால்
கிடைப்பதும் உண்டோ
அவனிடம் வந்து
அதை அடையாமல்
தனித்துப் புலம்பினால்
பயனுமே உண்டோ
அவன் தரும்போது
ஏற்கவும் மறுத்து
குறைகூறி நின்றால்
பெறுவதும் உண்டோ
இதனை உணர்ந்து
திருவடி அடைந்து
பேரருள் கிடைத்து
உய்ந்திட வேண்டும்
திருப்பூந்துருத்தி, 14-9-2017, காலை, 10.30
741 One Yuga is not enough
To think about your grace
One Yuga is not enough
To think about your love
My heart is not enough
To think about your nature
My mind is not enough
To do your seva
One life is not enough
You gave some limitation to us
Knowing us well
And made us to
Complete our life within it
you gave
Your grace
To be redeemed
Within this limitation
But how many
Lives we are living in it
we try to play
Many roles in it
time is
Not enough even for this
we complain
About it
Even to run
This short race
How many preparations
We make
Even before
Completing it
Forgetting the goal
We become tired
Even in this short span
If we have so much trouble
What will be our condition?
If you extend it?
Therefore having
Compassion on us
You gave
This limitation to us
Oh my Lord
Only through it
To receive your grace
You showed the way
Those who
Understood that
Will be redeemed
Rest will lament
Remembering that
Coming often
Thinking your grace
bowing at your feet
To live this life
In you
Give more of your grace
For me to be saved
Thirupponthuruthis. 14-9-2017, 6.50 pm
One young man who is in the ashram came to talk with me. He faces so many problems in his life—broken marriage, no proper job, responsibility towards parents etc. etc. But I pointed out his lack of understanding that already almost half of his life is gone and now it is too late for him to sit and regret about so many thing that went I the past. Lack of vision and goal and try to play so many roles in a short drama without knowing our character are some of the reasons for this problem. At the end I said to him, that fortunately god set some limitation for our life on this earth. What would be our condition if were to live more than one hundred years. After he left as I recalled my talk with him, I wrote this song.
741 யுகம் போதாது
உன்னருள் நினைக்க
யுகமொன்று போதாது
உன்னன்பை நினைக்க
என்மனம் போதாது
உன்தன்மை எண்ண
என்சிந்தை போதாது
உன்சேவை செய்ய
வாழ்வொன்று போதாது
எமக்கு எல்லையை
அறிந்துதான் தந்தாய்
அதற்குள் வாழ்ந்து
முடித்திட வைத்தாய்
இதற்கு உள்ளாக
உன்னருள் எண்ணி
உய்யும் வழியை
எமக்குமே அளித்தாய்
அதற்குள் எத்தனை
வாழ்க்கை வாழ்கிறோம்
ஆயிரம் ஆயிரம்
வேடங்கள் போடுறோம்
இதற்கே நேரம்
போதலை என்று
இறுதியில் குறைகள்
பலவும் சொல்கிறோம்
இந்த சிறிய
ஒட்டத்தை ஓட
என்னென்ன எத்னம்
நாங்களும் செய்கிறோம்
அதனை ஓடி
முடிக்கும் முன்னே
நோக்கத்தை மறந்து
வாடியே நிற்கிறோம்
இதற்கே இத்தனை
பாடுகள் என்றால்
எம்எல்லை விரிந்தால்
இனிஎன்ன ஆகும்
அதனால் எம்மேல்
இறங்கி நீயும்
குறுகிய எல்லையை
கருணையாத் தந்தாய்
அதன் உள்ளாக
உன்னருள் அடைய
ஐயனே இறங்கி
வழியினை வகுத்தாய்
அதை அறிந்தோர்கள்
உய்ந்து மீள்வார்
அறியாத பேர்கள்
புலம்பியே மாள்வார்
அதனை அறிந்து
அடிக்கடி வந்து
உன்னருள் நினைத்து
உன்னடி பணிந்து
தந்த வாழ்வை
உன்னுள் வாழ்ந்து
தமியனும் உய்ய
பேரருள் புரிவாய்
திருப்பூந்துருத்தி, 14-9-2017, மாலை, 6.50
742 What do you know?
I cannot struggle
Anymore with you
I don’t have
Strength for that.
If you pretend, after understanding
As if you didn’t understand
It is impossible for me
To make you to understand.
Am I the one available?
For you to play
Whatever you like
Is the correct one?
Should I not
Question you about this
Can you deny my
Right with you?
Somehow I came
And lived so far
What is the use for you anymore?
To remain here further?
If I pray,
‘It is enough
Please call me back soon’
You should not deny it
You sent me to this world
Without being asked
when I request to take back
You refuse to listen?
What is this?
One-sided right
why should you be?
A God for this?
I can hear clearly
What you say that,
‘You should not
Have this much irritation’.
Just watching this thamasha
Becomes your habit
What else can I do?
You tell it to me
I know only
To get irritated
How do you know?
About my side right
Do whatever you want
why should you even ask me anymore?
Really it is very difficult
To be a God (to me).
Mathigiri, 18.9.2017, 3.00 pm.
Since last three days I was on my bed with severe loose motion which I got in my journey on 16th night and with much fever and stomach problem I was down. Slowly I was recovering. As I cannot do anything, the only thing that I can do is to fight with God on so many issues also worshiping and praising. But when I reflected the way I pester God, I understood that it is very difficult to be a God than a human being. After writing this poem at the end I added that stanza to empathize with God.
742 உனக்கென்னத் தெரியும்
உன்னோட போராட
எனக்குமே முடியாது
இதற்கினி என்னிடம்
தெம்புமே கிடையாது
புரிந்தாலும் புரியாது
போலவே நடித்தால்
புரியவைக்க இனி
எனக்கிங்கு ஆகாது
உனக்கு விளையாட
நான்தான் கிடைத்தேனா
உனக்கெது விருப்பமோ
அதுதான் நியாயமா
இந்தக் கேள்வியை
கேட்கவும் கூடாதா
எனக்குள்ள உரிமையை
மறுக்கநீ முடியுமா
ஏதோ வந்தாச்சு
இதுவரை இருந்தாச்சு
இனியும் இருப்பதால்
உனக்கென்ன பயனாச்சு
போதும் வேண்டாம்
சீக்கிரம் எடுத்திடு
என்று வேண்டினால்
மறுக்கக் கூடாது
கேட்காமல் உலகுக்கு
நீயே அனுப்பினாய்
கேட்டாலும் எடுக்க
ஏன்நீ மறுக்கிறாய்
இதுஎன்ன ஒருபக்க
உரிமையும் ஆனது
இதற்கு நீயென்ன
இறைவனாய் இருப்பது
இத்தனை எரிச்சல்
எனக்குமே ஆகாது
எனநீ சொல்வது
தெளிவாகக் கேட்குது
வேடிக்கை பார்ப்பதே
வாடிக்கை ஆனபின்
வேறென்ன செய்ய
நீவழி சொல்லு
எரிச்சல் படத்தான்
எனக்குமே தெரியும்
என்பக்க நியாயம்
உனக்கென்னப் புரியும்
என்னவோ நீசெய்
என்னையேன் கேட்கணும்
இறைவனாய் இருப்பதும்
ஒருவிதம் கடினம்.
மத்திகிரி, 18.9.2017, மதியம் 3.00
743 I understood
You are leading me
I follow you with folded hands
Oh my Guruji
I can do nothing but this
You never counted my shortcomings
you never find any fault with me
I don’t have any talents
But when you called, I came after you
O my Father, you know
What happened after that?
You have done so much
there is no answer from me for that
Of course I turned back
And stood with much confusion
Like a mad person
I often scolded you
But you listened to all of them
And remained very patient
Till I am settle down with some peace
You gave only comfort
Even after you have done
So much to me
How can I say about my hesitation?
As I don’t have words for that
It is enough you go away
just leave me alone
There is no use of any negotiation
Enough is enough, please leave me alone
But refusing to leave me alone
Even I forsake your hands, holding them again
Once I come to you
You refuse to abandon me.
‘Once you become my property
You don’t have any right of your own’.
Saying this
Again you are upholding and leading me
Therefore I follow you
I understood my call
Though often I become tired
I accepted your call.
Mathigiri, 19-9-2017, 5.30 pm.
After few days gap I went for my evening walk for a short time, as I didn’t recovered completely. Then some kind of tiredness came both in my body and mind and I began to fight with the Lord. I said to him, ‘enough is enough. Leave me alone. Go away from me. I cannot follow you any more’. After saying this, I continue my walking. Then I began to cry and with much sob I said, ‘Ok, my Guruji, I know only to follow as you are there to lead me’. Then I began to meditate the way God leads me in spite of my shortcomings and the way He called not counting my mistakes or considering lack of any talents. As I began to reflect one by one, I began to record them as a poem.
743 அறிந்து கொண்டேன்
கொண்டுமுன் செல்கிறாய்
கும்பிட்டுபின் வருகிறேன்
குருவே இதுவன்றி
செய்திட ஏதுமில்லை
குறைகளை எண்ணவில்லை
குற்றம்நீ காணவில்லை
கூறும்படி ஒன்றுமில்லை
கூப்பிட்டதும் ஓடிவந்தேன்
அதன்பின் நடந்ததெல்லாம்
அத்தனே நீயறிவாய்
எத்தனை செய்துமென்ன
என்னிடத்தில் பதிலுமில்லை
பின்னிட்டுப் பார்த்ததுண்டு
பேதலித்து நின்றதுண்டு
பித்தன்போல் உன்னைஏசி
நித்தம்நித்தம் வைததுண்டு
அத்தனையும் கேட்டுக்கொணடாய்
அமைதியாய் பொறுத்துக்கொண்டாய்
அமைதல் அடையும்மட்டும்
ஆறுதல் தந்துநின்றாய்
இத்தனை செயுதபின்னும்
எனக்குள்ள தயக்கமதை
எப்படிச் சொல்லிடுவேன்
என்னிடத்தில் வார்த்தையில்லை
போதுமினி சென்றுவிடு
பேதைஎன்னை விட்டுவிட்டு
பேசியே பயனுமில்லை
போதுமினி ஆளைவிடு
தனியே விடமறுத்து
தட்டினாலும் கைபிடித்து
உன்னிடத்தில் வந்தபின்னே
ஒருபோதும் விடமறுத்தாய்
உன்சொந்தம் ஆனபின்னே
என்னுரிமை ஏதுமில்லை
என்றுமே எடுத்துச்சொல்லி
தாங்கியே பிடித்துச்சென்றாய்
ஆதலால் பின்தொடர்ந்தேன்
அழைப்பை அறிந்துகொண்டேன்
அடிக்கடி சோர்ந்த போதும்
அழைப்பையும் ஏற்றுக்கொண்டேன்
மத்திகிரி, 19-9-2017, மாலை 5.30
744 This is my nature
I don’t have compassion
neither have I know modesty
I don’t know
To say few sweet words
I will argue
For everything
And won’t listen
To others
I don’t know humility
I don’t have character
I don’t know how to love
And show affection
Having much
Pride within me
I will try to win
Through arguments
Like this
To share all about my nature
Even numbers
Are not enough
Because of your mercy
Taking pity on me
Knowing all these
You redeemed me
Only thinking that
This your slave
Worships your feet
By praising wholeheartedly
Mathigiri, 20-9-2017, 5.30
Another song reflecting my true nature and the way god taking pity on me because of his mercy as he redeemed me. This I wrote when I went for my evening walk and meditating upon God’s mercy and my wretched condition.
744 இதுஎன் குணம்
இரக்கத்தை அறியேன்
இங்கிதம் அறியேன்
இன்சொல் ஒன்று
பேசிட அறியேன்
எதற் கெடுத்தாலும்
வாதம் செய்வேன்
எடுத்துச் சொன்னாலும்
கேட்க மறுப்பேன்
பணிவு அறியேன்
பண்பும் அறியேன்
பாசம் நேசம்
கொண்டிட அறியேன்
தானென்னும் எண்ணம்
தலைக்கு ஏற
தர்க்கங்கள் செய்து
வெல்ல முயல்வேன்
இதுபோல் எனது
குணத்தைச் சொல்ல
எண்களும் போதாது
எண்ணியே காட்ட
ஆனாலும் என்மீது
நீகொண்ட பரிவால்
அனைத்தும் அறிந்தும்
ஆட்கொண்டு உய்த்தாய்
அதைமட்டும் நாள்தோறும்
அடிமை எண்ணி
உளமாற உனைப்போற்றி
உன்னடிப் பணிகிறேன்
மத்திகிரி, 20-9-2017, மாலை, 5.30
745 Your duty
Even if I didn’t call you,
You should come and ask about me
you should inquire about my health
And talk about it with me
Other than this, what works do you have?
What kind of worries you have like me
Once you created and sent to this world
Taking care of your bhakta is your prime duty
As I am living with so many pressures
I don’t have time to think about you
Even if I come by sparing some time
I am not in a position to sit and talk with you
As I become tired by struggling with the body on one side
as I have to struggle with the world on the other side
In between as I depressed by struggling with my mind
How can I call you by remembering you often?
On the one side there are a lot of cries within me
On the other side there are so many attacks from the outside
As I have to struggle with all of them
I don’t find time to call upon you
After knowing all these
You alone should come seeking after me
Understanding my present condition properly
You should sit and talk with me
Mathigiri, 20-9-2017, 11.10 pm.
Though I am slowly recovering, yet as usual I am very busy with so many works. So I don’t find enough time to sit and talk with the Lord. As I have planned to go to the ashram, I was thinking and planning about it arranging things need to take there etc. etc. So after a long day when I sat for my quiet time, I directly told the Lord that he alone should understand my condition properly and come to interact with me than waiting for me to come to him.
745 உனக்குள்ள கடமை
கூப்பிட்டா போதும் வந்திட வேண்டும்
கூப்பிட்டு என்னைக் கேட்டிட வேண்டும்
எப்படி இருக்கிறாய் என்றுமே கேட்டு
என்னை அழைத்துநீ பேசிட வேண்டும்
இதைவிட உனக்கு வேறென்ன வேலை
என்போல் உனக்கு ஏதுண்டு கவலை
படைத்து உலகில் வைத்த பின்னே
பக்தனைப் புரப்பதே தலையாய வேலை
நெருக்கடி ஆயிரம் கொண்டுமே வாழ்வதால்
நினைத்திட எனக்கு நேரமே இல்லை
நேரமும் ஒதுக்கி உன்னிடம் வந்தும்
நின்று பேசிடும் நிலையிலே இல்லை
உடலோடு போராடி ஒருப்பக்கம் சோர
உலகோடு போராடி மறுப்பக்கம் சாய
இடையில் மனதோடு போராடி வீழ
எங்கிருந்து உன்னை நினைந்து கூப்பிட?
ஒருபக்கம் எனக்குள்ளே ஆயிரம் ஓலம்
மறுபக்கம் பலவித வெளியான தாக்கம்
இவற்றிடை போராடி எத்தனை முயன்றும்
உன்னைக் கூப்பிட நேரமே காணோம்
இதையெல்லாம்நீ அறிந்த பின்னே
நீதானே எனைத்தேடி வரவேண்டும்
இருக்கின்ற நிலையை சரியாக அறிந்து
என்னோடு அமர்ந்து நீபேச வேண்டும்
மத்திகிரி, 20-9-2017, இரவு, 11.10
Posted up to this
@@@
746 Why I worship you?
Whether they do not know you
Or worship you after knowing
All the lives (on the earth)
Belong to you
Once I don’t know you
Then I knew
Therefore Oh my Lord
I am worshiping you each day
You gave the mind to know you
You also gave that boon (to know you)
Therefore I worship you
With clear understanding
You are very near
To those who want to know
When they call
You are come running hearing their voice
You keep much patience
With those who wander
Without any desire to know you
Or without any ability to know you
You give more grace
Than others to those
Who are unable to live?
Even after knowing you.
But you rejoice
By giving yourself to me
To this fool
Who never knew you even after knowing you?
I know you, but I don’t know you
But I won’t be troubled because of that
Because you redeemed this slave
That alone I know well
That is enough for me.
Why I know you?
Only to bow at your feet
Each day.
Gurukulam, 25-9-2017 5.15 am.
After some gap again I began to enjoy my recluse life in the ashram. Due to heavy rain I got up very early and sat for my meditation and prayer. One constant thought that came in me was who created whom? Did God actually created humans and also the entire creation? Or it was human who created a God to understand the world within him and outside? Well this is not a new question and it is the origin of philosophy. So I need not give my answer to it. But reflecting what I already wrote: Why only Muktinath, after recalling it I said that it is enough for me that I know Him and Known by Him. Then as the inspiration came I wrote this song as my prayer.
746 பணிவது எதற்கு
அறியாமல் இருந்தாலும்
அறிந்துனைத் தொழுதாலும்
அனைத்து உயிர்களும்
உனக்கே சொந்தம்
அறியாமல் இருந்தேன்
அறிந்துமே கொண்டேன்
அதனால் ஐயனே
அனுதினம் தொழுகிறேன்
அறியமனம் தந்தாய்
அறிந்திடும்வரம் தந்தாய்
அதனால் உன்னைப்
புரிந்துமே பணிகிறேன்
அறிய விழைவோருக்கு
அருகினில் இருக்கிறாய்
அழைத்தால் குரல்கேட்டு
ஓடியே வருகிறாய்
அறிய மனமின்றி
அறிந்திடும் திறனின்றி
அலைந்திடும் மனிதரை
பொறுத்துமே அருள்கின்றாய்
அறிந்தாலும் அதன்படி
வாழ இயலோர்க்கு*
(*இயலாதவர்களுக்கு)
அதனினும் அதிகம்
அருளை அளிக்கின்றாய்
அறிந்தும் அறியாத
அறிவிலி எனக்கோ
உன்னையே தந்து
ஐயனே மகிழ்கின்றாய்
அறிவேன் அறியேன்
அதற்காகக் கலங்கேன்
அடிமையை மீட்டாய்
அதைமட்டும் அறிந்தேன்
அதுபோதும் எனக்கு
அறிந்ததும் எதற்கு
அனுதினம் உன்னடி
பணிவது அதற்கு
குருகுலம், 25-9-2017 காலை 5.15
747 Therefore I sing
When I sing, there is bliss
Therefore I will definitely sing
You redeemed me by giving your abode
That alone is a wonderful thing
Once I sing more and more
My bhakti also increases
Once the bhakti increases
New songs also come
You become the object of my song
You gave the boon to sing about you
When I worship you with songs
You also come with much joy
The beauty of bhakti is
In making garlands
Of new songs
Sing to glorify you.
Though we worship you
With so many other things
Will they be?
Equal to one song?
Though many gather together
And praise you with many words
Without worship you with songs
Can our bhakti be complete?
Though many commentaries
Were written to explain about bhakti
Will the simplicity in a song
Would be there in them?
With the language of songs
With the company of bhakti
With the mandali of bhaktas
We have your grace to sing about you
Gurukulam, 25-9-2017, 6.00 am.
After writing the previous song (746) and singing it as my prayer, I again sat to enjoy the calmness around me. Though my mind got inspiration again and again with an urge to write more poems, I resisted as I want to enjoy the calmness around me. But as usual as I failed, I said to me, ‘writing poem is also a kind of meditation. Then why you resist it and enjoy that inner communication with the Lord by sharing your thoughts through words’. So I wrote this song expressing that thought. In our Indian tradition, not only bhakti but even philosophies and other forms of knowledge survived because they were written in poetic form. For me many hundred pages of written words won’t be equal to one song with few stanzas.
747 அதனால் பாடுவேன்
பாடினால் பரவசம்
பாடுவேன் அவசியம்
பதம்தந்து மீட்டாய்
அதுவன்றோ அதிசயம்
பாடப் பாட
பக்தியும் பெருகுது
பக்தியும் பெருகிட
பாடலும் வருகுது
பாடலின் பொருளானாய்
பாடவரம் தந்தாய்
பாடியே தொழும்போது
மகிழ்ந்துமே வருகின்றாய்
பாட்டென்னும் பாமாலை
பலவிதம் புனைந்துனை
பாடியே பரவுதல்
பக்திக்கு அழகன்றோ
பலவிதப் பொருள்கொண்டு
பலவிதம் தொழுதாலும்
பாடல் ஒன்றுக்கு
அவையும் இணையாமோ
பலர்கூடி வேண்டினும்
பலசொல்லிப் போற்றினும்
பாடியே துதிக்காமல்
பக்திக்கு நிறைவுண்டோ
பக்தியை விளக்கிட
உரைபல சமைத்தாலும்
பாடலின் எளிமை
அவற்றுக்கும் வருமோ
பாட்டென்னும் மொழியோடு
பக்தியின் துணையோடு
பக்தரின் சபையோடு
பாடஉன் அருளுண்டு
குருகுலம், 25-9-2017, காலை. 6.00
748 This is the Time
This is the time seeking the Holy feet
A time seeking your face Oh my Lord
There is no time for any other thing
No time to think about others things.
Sitting silently at your feet
Thinking only about your grace in me
Rejoicing only our relationship
A Time to talk with you.
The mind which refuse to be tamed
Will become calm when I seek your feet
Heart which often gets frustrated
Will remain quiet when I sit at your feet
Seeking these kinds of opportunities often
My heart will long for your holy feet
Realizing it when you to come to me
My heart will rejoice sing songs
You gave this life only for this
You gave this joy only for me
Therefore I feel uplifted in you
After this slave will never face any defeat
Singing and glorifying you
O my God singing your praises
I came to your presence seeking your feet
And took refuge at your grace
Gurukulam, 26-9-2017, 10.30
After settling down in the ashram, today I came to the dhyanamandapa. When I sit in the swing in the Library facing the banyan tree with green scenery before me, without anyone around me or with me, my spirit get lifted with the atmosphere. Then I entered a kind of trance rejoicing in such a time where my whole being mingles with him. After enjoying that moment for several minutes, I wrote this song to worship Him.
748 இதுவே நேரம்
திருவடி தேடி வருகின்ற நேரம்
திருமுகம் பார்த்து கிடக்கின்ற நேரம்
வேறே எதற்கும் வேலையே இல்லை
மற்றதை சிந்திக்க மனதுமே இல்லை
அமைதியாக நான் உன்னடி அமர்ந்து
அருளை மட்டும் மனதிலே நினைந்து
உறவை மட்டும் எண்ணி மகிழ்ந்து
உன்னுடன் பேசி இருந்திடும் நேரம்
அடங்க மறுக்கும் சிந்தையும் கூட
அமைதல் அடையும் உன்னடி நாட
சஞ்சலம் கொண்ட நெஞ்சமும் கூட
சற்றே அடங்கும் உன்னடி அமர
இதுபோன்ற தருணம் அடிக்கடி நாடி
என்மனம் ஏங்கும் திருவடி தேடி
அதனை அறிந்து நீவரும் போது
மனம் ஆனந்தம் கொள்ளும் பாடல்பாடி
இதற்கெனத் தந்தாய் இந்த வாழ்வு
எனக்கெனத் தந்தாய் இந்த மகிழ்வு
அதனால் அடைந்தேன் உன்னில் உயர்வு
அறியேன் அடிமை இனி ஒருத்தாழ்வு
துதிகள் பாடி போற்றிக் கொண்டாடி
தெய்வமே உன்னை வாழ்த்தியே பாடி
சன்னதி வந்தேன் உன்னடி தேடி
சரணம் அடைந்தேன் உன்னருள் நாடி
குருகுலம், 26-9-2017, காலை, 10.30
749 Taking revenge
There is no need for God
To take revenge on us
He never created us
For that.
When our own sin
Is chasing us
There is no need for one
To take revenge on us
Are we not responsible?
For our own mistakes?
Though we understand this
Yet we are not ready to accept it.
We have thousands of
Contradiction among us
Then why should we
Blame God for that?
Surely there is
Punishment for the mistakes
But the question is:
Who is the one who will give it?
Arriving a verdict
For that by our own methods
When we try
To execute it
Silently our own
Conscience will talk to us
It will even ask,
‘Who gave this right to you’?
It will give the stone
On our hand by saying,
‘Let him he, who
Never done any crime throw it first’
As our conscience pricks
The stone
Losing its grip from our hand
Falls on the toe and hurt it.
Once we took
Revenge on us
Then the question that will come is,
‘Who shall be blamed for this’.
Gurukulam, 26-9-2017, 11.10 am.
As I read the famous story of the Lord not punishing the woman caught in adultery, I meditated about it. In the original story every one after dropping the stone goes away. But in my reflection, I realized that as our conscience pricks the stone will fall automatically from our hand as it will lose its grip on the stone. Then it will fall only on our toe and hurt it. By this once we give the punishment for our sin, there is no chance to blame anyone for this punishment’. As I reflected about it, I wrote this song. The general Indian worldview about punishment for sin is: we are not punished for our sin, but by our sin.
749 பழிவாங்குதல்
பழிவாங்கத் தேவை
கடவுளுக் கில்லை
பழிவாங்க அவனும்
படைக்கவும் இல்லை
நம்பாவம் நம்மைத்
தொடர்ந்து பிடிக்கையில்
பழிவாங்க ஒருவன்
தேவையே இல்லை
நாம்செய்யும் தவறுக்கு
நாமன்றோ காரணம்
நமக்கது புரிந்தாலும்
ஏற்கத்தான் காணோம்
நமக்குள்ளே நாம்கொண்ட
பேதங்கள் ஆயிரம்
அதற்காக அவன்மீது
ஏன்குறை சொல்லணும்
தவறுக்குத் தண்டனை
நிச்சயம் உண்டு
யாராதைத் தருவது
எனும்கேள்வி கொண்டு
அதற்கானத் தீர்ப்பையும்
தாங்களே கண்டு
அதனை நிறைவேற்ற
முனைந்திடும் போது
மவுனமாய் மனசாட்சி
நம்மிடம் பேசும்
எவர்தந்த உரிமை
என்றுமே கேட்கும்
குற்றம் அற்றவன்
எரியட்டும் கல்லை
என்றுமே கல்லையும்
நம்மிடம் கொடுக்கும்
கொடுத்த கல்லுமோ
கைதளர வீழ்ந்தது
நம்காலை முதலிலே
பதமுமே பார்த்தது
நாமே நம்மை
பழிவாங்கிக் கொண்டபின்
எவரை குறைசொல்ல
எனும்கேவி எழுந்தது
குருகுலம், 26-9-2017, காலை. 11.10
750 The call which you gave
You gave a call for me
For that you gave some talents
Not living accordingly
I get frustrated in so many things.
You called me to run the race
Keeping the goal before me
But leaving the tract
I am troubled by thinking so many other things.
Not going in the right or left
Keep running the tract which you set for me
You asked me to run the race with much patience
To receive that crown.
But I have lost the goal long before
And ran to the right and left many times
In between stopped running many times
Now I complete lost that tract.
Now there is no strength to run any more
And the goal is also not visible clearly
I don’t know what I should do further
There is no means other than you.
So, often remind my goal
If I go away, then threaten me
Still if I go astray then punish me
Somehow you help me to reach the goal.
Gurukulam, 26-9-2017, 9.30
To be honest I don’t know what is that goal that God has set for me? All these years I am running not even knowing what the goal is and where is it? But I know one thing for sure. He called me to live as His bhakta on this very earth enjoying my mukti through my bhakti. As I already attained this goal, now I don’t know what is the goal for me to run for and what is the crown that I should receive. So whenever I think of running the race to reach the goal, then I am confused and even get frustrated as I get deviated even in this goal to live as a bhakta of the Lord in this very life. When I meditated about it, I wrote this song.
750 நீதந்த அழைப்பு
எனக்கொருஅழைப்பை நீகொடுத்தாய்
அதற்கென வரங்கள் சிலஅளித்தாய்
அதன்படி அனுதிம் வாழாமல்
அலசடிப் படுகிறேன் பலவற்றில்
இலக்கை என்றும் முன்வைத்து
நானும் ஓட நீயழைத்தாய்
ஆயினும் அடிக்கடி அதைவிடுத்து
அவதிப் படுகிறேன் பலநினைந்து
வலமும் இடமும்விலகாமல்
வகுத்துத் தந்த பாதையிலே
பொறுமையாய் ஓடி முடிசூட
போகும்படிதான் நீ சொன்னாய்
இலக்கை என்றோ துறந்துவிட்டேன்
இடமும் வலமும் ஓடிவிட்டேன்
இடையே பலமுறை நின்றுவிட்டேன்
இப்போ பாதையை மறந்துவிட்டேன்
இனிமேல் ஓடத் தெம்பில்லை
இலக்கும் சரியாய்த் தெரியவில்லை
இனிஎன்ன செய்ய புரியவில்லை
உன்னை விட்டால் கதியில்லை
அழைப்பை அடிக்கடி நிவுறுத்து
அதைவிட்டு விலகினால் பயமுறுத்து
அப்பவும் மீறினால் துன்புறுத்து
எப்படி யேனும் கரையேத்து
குருகுலம், 26-9-2017, இரவு 9.30
Leave a Reply