Song 121
Mutual need to survive in life often forces us to adjust with people with whom we cannot cope for long time. Though we know the solution, still we cannot implement because of need and expectation in life.
121 தேவையும்எதிர்ப்பார்ப்பும்
பிறரிடம்குற்றமில்லை
பிறரிடம்குறையில்லை
என்குற்றம்பிறர்மீது
ஏற்றிநானும்பார்க்கும்வரை
தேவையற்றஎதிர்பார்ப்பு
தெளிவற்றமுணுமுணுப்பு
நியாயமற்றகோரிக்கைகள்
நிறைவேறாஆசைகள்
இதுபோலஇன்னும்பல
இயலாதகட்டளைகள்
கொண்டுமேபிறர்மீது
கோலோச்சஎண்ணும்போது
பிறர்தான்என்செய்வார்
என்பிழைகண்டுமருள்கின்றார்
மனதிற்குள்வெறுக்கின்றார்
மெளனமாய்வியக்கின்றார்
ஆயினும்பொறுக்கின்றார்
அவர்தேவைநிறைவேற
முடிந்ததைச்செய்கின்றார்
என்தேவைநிறைவேற்ற
இந்தப்போராட்டம்
என்றுமேமுடியாது
தேவையும்எதிர்ப்பார்ப்பும்
தொடர்ந்தேவருவதனால்
மாறவேண்டியது
யாரென்றுதெரிந்தாலும்
மாற்றமுடியாமல்
ஓட்டுகின்றோம்காலத்தையே
மத்திகிரி, 23-04-2015, 11.45,இரவு, .
121 Need and expectation
Nothing wrong with others
There is no mistake in them
As long as I
Superimpose my shortcomings on them
Unnecessary expectations
Murmuring without understanding
Unjustifiable demands
Illegitimate desires
Like this keeping
So many other commands
When I try to
Lord over others
What others can do?
They bewildered seeing my mistake
They resent in their heart
And wonder remaining silent
Still they put up with me
In order to fulfil their need
And they do their best
To meet my needs
This struggle will
Never come to an end
As long as need and expectation
Are always in life
Who should be changed?
We all know well, still
Unable to change
We somehow manage life
Mathigiri, 23-04-2015, 11.45 p.m.
Song 122
After doing my regular reading of day, I thought how I am going to escape from this as I am often tossed by the views of others and my reflections view about it. Several times I long to give up reading completely. But as I am reading books from my boyhood, I am not sure I can escape from this till the end of my life? I read not merely to gather information. I often reflect on the subject. This compels me to record my views. At the same time I cannot agree either with other’s view completely nor reject my reflections. Till the end I have to live with this kind of situation in my life as I cannot give up reading completely.
122 தப்பிக்கஇயலாது
பல நூலகள் படித்துப் பயனேது கண்டேன்
பலவற்றை சிந்தித்து முடிவேது கண்டேன்
சிலவற்றை எழுதி சீர்தூக்கிப் பார்த்தேன்
செயலாற்ற ஒன்றுமே உதவாது கண்டேன்
பலநூறு நூல்களை படித்துமே முடித்தேன்
அவைகூறும் முறையிலும் சிந்தித்தும் பார்த்தேன்
அவரவர் கருத்தை ’தன்’ வழியில்கூற
எவர்கருத்தும் ’எனக்கு’ உதவாது உணர்ந்தேன்
’என்’ கருத்து என ஒன்று தனியாக இல்லை
பிறர்கருத்தை முழுமையாய் ஏற்கவும் இல்லை
எல்லோர் கருத்தையும் ஆராய்ந்து பார்த்து
எது ’உண்மை’ என இன்னமும் தேடுறேன்
’இல்லாத’ என்கருத்தை ஏற்கவும் இயலாது
பிறர்கருத்தை முழுமையாய்த் தள்ளவும் முடியாது
இடையில் தடுமாறி அலைமோது கின்றேன்
எப்படியோ கரைசேர வழி தேடுகின்றேன்
கரைசேர்ந்தாலும் பயனேதும் உண்டோ
மீண்டும் அலைமோதி உள்ளிழுக்கும் போது
புவியில் உள்ளவரை படிப்பதும் ஓயாது
புரட்டிடும் அலையின்று தப்பிக்க இயலாது
24-04-2015, மதியம், 2.50
122 I cannot escape
What is the use of reading many books?
What kind of conclusion can I arrive after thinking many things?
I analyzed few things by writing them
But I realized that nothing will help me to act
I read hundreds of books
I reflected about the subject in them
As each one share her thought in her own ways
None of them will come to help me
I don’t have any of my own personal opinion
I cannot accept others’ view completely
Still I search which one is true
By analyzing the opinion of everyone
Not accepting my opinion which is not there
I cannot reject other’s views completely
I am tossed in between
Somehow I try to get away from these two positions
Even if I escape is there any use in it?
When the wave again draws me back in it
Till I live on this earth I cannot stop reading
I cannot escape the waves which toss me often
Mathigiri, 24-04-2015, 2.50 p.m.
Song 123
As I became an old man who went through various phases of life, I can say with much confidence that among all the stages of life, old age alone is the sweetest one. Though there are several challenges related to physical limitations, we still compare the life of others who live a life with many activities rushing and pushing, we can sit back and relax watching all their activities with a smile. At least I am enjoying my old age. So for me old age is the golden period in life. Just relax and enjoy it.
123 இனியமுதுமை
முதுமையும் இனிமையே
முடங்கியே போனாலும்
மூலையில் கிடந்தாலும்
முதுமையும் இனிமையே
பரபரப்பாய் எழுந்திருந்து
படபடப்பாய் செயல்புரிந்து
அவசரமாய் ஓடியாடி
அன்றாடம் ஓட வேண்டாம்
பொறுமையாய் எழுந்திருந்து
ஓய்வாக அமர்ந்திருந்து
கொஞ்சமாக செயல்புரிந்து
நிறைவாக வாழ்ந்திடலாம்
காசுசேர்க்க வேலைசெய்து
கஷ்டநஷ்ட கணக்கும் பார்த்து
கொஞ்சநஞ்சம் செலவழித்து
கோபதாபம் கொள்ள வேண்டாம்
கிடைத்தபோது மகிழ்வு கொண்டு
கிடைக்காவிட்டால் பொறுமை கொண்டு
வருவதை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கையை ஓட்டிடலாம்
ஆரவாரம் நாம் செய்தாலும்
அதிகம் அலட்டிக் கொண்டாலும்
ஏக்கம் கொண்டு தவித்தாலும்
தாங்குவோர் எவரும் இல்லை
இந்த உண்மை புரிந்து கொண்டு
நடப்பதை அறிந்து கொண்டு
எதிர்பார்த்து இனி ஏமாந்து
வீணாகப்புலம்ப வேண்டாம்
இதைநன்கு உணர்ந்து கொண்டு
இதனையும் நாம் ஏற்று கொண்டு
முணுமுணுக்காது வாழ்ந்தாலே
முதுமையாகும் இனிமைதானே
குருகுலம், 2-6-15, காலை6.15
123 Sweet old age
Old age is sweet indeed
Though we are crippled
And confined in a corner
Old age is sweet indeed
We need not to get up in hurry
And need not work with much haste
We need not run pillar to post
In everyday life
Getting up leisurely
Sitting and relaxing
Doing minimum work
We can live with satisfaction
We need not become upset
To Work hard to earn
Calculating gain and losses
Spending with much thrift
Rejoicing when we get
Having patience when we don’t get
Accepting whatever comes
We can spend our life
Whatever uproar we make
However we create big scenes
Though we long much
There is none to uphold us
Understanding this truth
Realizing what is happening (around us)
We need not lament
When we are deprived [our rights]
Understanding this well
Accepting this whole heartedly
If we live not murmuring
Old age is indeed sweet
Gurukulam, 2-6-15, 6.15 a.m.
Song 123
In the past the poets used to sing praising their patrons to get financial support. But in this song I wrote this song appreciating the seva done by one of my shishyas and his family for the mandali and Gurukulam. His dedication and commitment to our ideology impressed me. His entire family, including his parents stood with him in his new understanding and worshiping the Lord going away from his family tradition. As we arranged a party for the family in the ashram, this morning I wrote this song appreciating their seva for us. This is not to glorify any individual or a family but to show how very few people coming from different backgrounds understood our need and aspiration and completely changed themselves to serve us according to our need. So he merely represents several such individuals who empathize with our ideology. And I dedicate this song to all these bhaktas of the Lord.
I removed the personal names of him and his family members and used the meaning of their name by replacing their names.
123 தர்மம்சேவைபக்தி
தர்மம் சேவை பக்தியுடனே
தன்னையே தந்திடும் தாழ்மையுடனே
அறத்தைக் கைக் கொண்டு அடியனாய் வாழ்ந்து
பக்தியில் உயர்ந்து வாழ்க பல்லாண்டு
இதுவரை இணைந்து சேவை செய்தாய்
எத்தனையோ தொண்டு எமக்கும் செய்தாய்
எங்குசென்றாலும் இதுபோல் வாழ்ந்து
பக்தியில் ஓங்குக இறைவனில் ஆழ்ந்து
குடும்பமாய் இணைந்து குருகுலம் வந்து
குறைநிறை அறிந்து சேவை செய்தாய்
நிறைந்த மனதுடன் நீங்களும் வாழ்ந்து
எங்கு சென்றாலும் இனிதாய் வாழ்க
சரளமான துணையை அடைந்தாய்
சக்கரவர்த்தியாய் அன்புடன் ஆண்டாய்
வெற்றி அமைதியை மகள்களைக்கொண்டாய்
ஆனந்தத் துணையையாய் மகன் களைக் கண்டாய்
பல்கிப் பெருகி பல குடும்பம் ஆகி
மக்களின் மக்களை மகிழ்வுடன் கண்டு
முக்தியில் நிலைத்து பக்தியில் திளைத்து
முக்தேசனுடன் முழுமையாய் வாழ்க.
16-6-15, குருகுலம், அதிகாலை, 4.00
123 Dharma, Seva and bhakti
Along with dharma, seva and bhakti
With a humility of self giving
Upholding dharma and living as a servant
Growing in bhakti live many more years
You have done seva joining so far with us
You have done many services for us
Wherever you go, living like this
Grow in bhakti by immersing in the Lord
Coming to Gurukulam as a family
Knowing all the needs; you have done seva
Wherever you go, live with satisfaction
And have a sweet and wonderful life
You got a wonderful wife with simplicity
You ruled our hearts with love as Chakravarthy
You got victory and peace as your daughters
You also saw joyful companions as your sons
Increasing many fold and seeing many more families (of your children)
Seeing your grandchildren and great grandchildren
Established in mukit and rejoicing in bhakti
Live with Muktesan a full life
16-6-15, Gurukulam, 4.00 p.m.
Song 124
As usual I find it difficult to translate this song in English. It is about the way inspiration induces the mind to soar high with many imaginations to write poems where the words and theme will come automatically.
124 கவிதைமலரும்
எண்ணங்கள் தோன்ற
எழுத்தும் தோன்றும்
எழுத்துத் தோன்ற
இதயம் மலரும்
இதயம் மலர
காட்சிகள் விரியும்
காட்சிகள் விரிய
கற்பனை தொடரும்
கருத்தும் அப்போது
தானேவரும்
வார்த்தைகள் கூட
வரிசையில் வந்திடும்
எழுதத் தொடங்கினால்
சிந்தையைத் தூண்டும்
தூண்டிய சிந்தையும்
சீர்த்தூக்கிப் பார்க்கும்
கனவு என்ற
தேரில் ஏறி
கற்பனை என்ற
குதிரைகள் பூட்டி
சிந்தையும் என்னும்
சாட்டையை சுழற்ற
சுழன்றே ஓடும்
மனதும் கவியில்.
25-6-15, மத்திகிரி, 2.50மதியம்
124 Poem balsams
As thoughts come
Words will appear
As words appear
Heart will expand
As heart expands
Many visions will come
As many visions come
Many types of scenery will come (in mind)
As sceneries come
Imagination will continue
Then a theme will
Come automatically
Then words will come
And stand in line
As we began to write
It will inspire the mind
The inspired mind will
See things properly
Then boarding on
The chariot of dream
Joining the horse
Of imaginations
As we drive them
With the whip of mind
The heart will
Run in the path of poem
25-6-15, Mathigiri, 2.50p.m.
There are very few contemporary Indian leaders who earned the respect of all the Indians in their public life. And Baba Kalam remained one such outstanding personality. It is a blessed opportunity for me that I lived when he lived and witnessed his life. He is a versatile person. Apart from being a leading scientist and honoured the post of President of India, he wrote several books, and wrote poems. He liked Carnatic music very much and can also play veena. Rarely can we find a person who has all different kinds of talents. When we heard about his sudden demise till doing his favourable service of teaching, the whole India was in shock. As I could not sleep for a long time as I was thinking about him I wrote this song as a tribute for him.
After Mahatma Gandhiji, the one INDIAN I respect is Baba Kalam. Though others address him as Dr. Kalam, I prefer to call him Baba Kalam. He deserves to be addressed this way as he epitomized his own jnana and karma in his bhakti to the nation with a spirit of a sannyasi. Thankfully, he never remained a politician, but handled politicians very tactically —particularly in the episode of Sonia’s attempt to become the PM.
Dr. Pranap Roy (of NDTV) was interviewing Baba Kalam once while he was addressing the students at Rashtrabati Bhavan. He asked him, “Should the President be a politician or a non-politician?” Baba Kalam wisely answered, “This is a political question.”
Wherever his mortal body will be put to rest, the Presidency of Indian will always be divided as before Baba Kalam and after Baba Kalam. To honor his contribution to the nation, I wish that his statue should be put in front of the Rashtrabati Bhavan, as it will dignify that building permanently.
He lived a noble life and ended with a noble death — that too while doing his dharma of INSPIRING THE YOUTHS.
Db
28-7-15, Mathigiri 8.30 pm.
125கலங்கரைவிளக்கு
கனவுகான கற்றுத் தந்தாய்
கருத்தாய் அதற்காக வாழச் சொன்னாய்
“அக்கினி1 சிறகடித்து” பறக்கச் சொன்னாய்
அடுத்தவர்க் கென்று வாழச் சொன்னாய்
கடலோரம் முத்தாக கரை ஒதுங்கி2
காலெமெனும் பள்ளியிலே மெருகாகி
ஏவுகனை ஏறி விண்ணில் பாய்ந்து3
ஏற்றமிக புகழினையே நாட்டி வைத்தாய்
வல்லரசு நாடாக நாம் வர வேண்டி
வலிமையுள்ள ஆயுதத்தை4 ஆக்கித் தந்தாய்
சொந்த பெலன் கொண்டு நாம் முன்னேற
சொல்லரிய திட்டங்கள் வகுத்துத் தந்தாய்5
எதிர்கால இந்தியா ஏற்றம்பெற
எத்தனையோ கனவுகள் காணவைத்தாய்
எவ்வளவோ மேன்மைகள் கண்ட நீயோ
என்றுமே எளிமையாய் வாழ்ந்து நின்றாய்
எதிர்காலம் இளைஞர் கையில் என்ற
எண்ணத்தை அவர்களுக்கு ஊட்டிவிட்டாய்
ஏறு நடை போட்டு அவர்கள் முன்னேற
ஏற்றமிகு உரைகள் பல நீ ஆற்றி வைத்தாய்
காலமெனும் ஓட்டத்தில் உன் உடல் போனாலும்
“கலாம்” என்ற கலங்கரை விளக்காக நின்று
காலம் பல கடந்து ஒளி காட்டி
கோலோச்சுவாய் முடிசூடா மன்னனாக
28-7-15, மத்திகிரி, இரவு 3.30
1அவர் எழுதிய புத்தகம்
2அவர் கடலோர இராமேஸ்வரத்தில் பிறந்தார்
3முதல் ஏவுகணை திட்டத்தை வடிவமைத்தவர்
4அணுசக்தியை ஏற்படுத்தித் தந்தவர்
5தற்கால விண்வெளிக் கூடங்கள் ஏவ உதவும் கிரோஜனிக் இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தவர். அணுகுண்டு சோதனைக்குப் பின் அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் பல தடைகளை ஏற்படுத்தியும், உள்ளாட்டிலேயே விண்கல ஏவுதற்கான இயந்திரங்களை உருவாக்கி அதில் வெற்றிபெர முன்னோடியாக இருந்தவர்
125 Light House (A tribute to Kalam Baba)
You taught to have a vision/dream
And toil for it with full dedication
You ask us to soar with “Wings of Fire”1
And advised us to live for others
You are like a pearl which is thrown (by wave) on the seashore2
And cultured (to shine) in the school of life
And you soared to the sky in the Rocket3
You established a noble glory.
In order to become a Super Power
You created a powerful weapon4
To make progress with our own strength
You gave so many super plans for the country.5
To attain glory in future for India
You make us to see many dreams
Though you attained so many glories
Yet you lived a simple life.
You taught the youth
That the Future is in their hands
And to make progress with dignity
You gave so many lectures to them.
Though your mortal body might be gone in the flood of time
Remaining as the Light House known as ‘Kalam’
By showing light by transcending so many generation
You will rule ever as an uncrowned King of us.
1. The book which he wrote
2. He born in Rameshwaram
3. He created the first Sat light launching plan
4. He created Atomic power
5. After the Pokaran atomic explosion, though sanction was imposed on India by America and other countries, to overcome all such impediments, he planned for the development of a cryogenic motor to launch several sat lights and we succeeded in it.
Leave a Reply