146. நல்ல வழி
பக்தி ஒன்றே முக்திக் குகந்தது
பாரில் நம் சக்திக் குகந்தது
காடு சென்று கடும் தவம் செய்ய வேண்டாம்
நாடு திரிந்து புண்ணியம் தேட வேண்டாம்
ஞானம் வேண்டி மறைகள் கற்க வேண்டாம்
நாதன் மலரடியை நாடினால் போதும்
பக்தனாய் வாழ்வதில் எத்தனை பாக்கியம்
பாதம் பணிவதே நாம் செய்யும் பெரும்தவம்
மனதாரத் துதிப்பதே நாம் பெறும் புண்ணியம்
பரமனின் அடியன்றி உண்டோ ஓர் புகலிடம்
தாயாகி, தந்தையாகி நம்மையும் காப்பான்
தனயனாய், தோழனாய் கூடவே இருப்பான்
காதல் கொண்டுமே கரம் பற்றிக் காப்பான்
கடைசி மட்டும் துணையாக இருப்பான்
சரணடைந்தோர் அறிவார் இதனை
சரணாகதி அன்றி வழி இங்கு இல்லை
அறிந்தவர் கூறினோம் உணர்ந்தே இதனை
ஐயனே காட்டுவான் பக்தியின் எல்லை
வாருங்கள் துதிப்போம் வள்ளலை வாழ்த்துவோம்
வையகம் தனிலே உய்யும் வகை அறிவோம்
நம்மைத் தேடி வந்தவன் புறப்பதும் இல்லை
தெரிந்தே கூறினோம் இந்த உண்மை.
குருகுலம், 27-09-2012. காலை 9.05
146. Good Marga
Bhakti alone compatible for Mukti
And it is within our strength to practice.
We need not go to the forest to do tapas (austerity)
We need not wander the land (pilgrimage) to earn merit
We need not learn scriptures seeking wisdom
It is enough for us to approach the feet of the Lord
What a blessed thing is to live as a bhakta
Bowing at His feet is the greatest tapas for us
Worshipping Him wholeheartedly is the only great merit for us
Is there any other refuge other than the feet of the Lord?
He will safeguard us by becoming mother and father
He will be with us by becoming (elder) brother and friend
He will uphold our hand with real love
He will give His company till the end
Only those who surrendered alone know this
There is no other way except saranagati (taking refuge at His feet)
We who experienced proclaim this with clear understanding
Lord Himself will show the end of the bhakti
Come let us hail Him and bless the charitable One
Let us know the path of Mukti in this world
He who sought us will never reject us
We tell this as we know this truth.
Gurukulam, 27-09-2012. 9.05 am.
This song in a gist declares my bhakti theology. When I was deeply meditating on all the beautiful aspects of bhakti this morning, I wrote this song.
147. அருளே ஆனந்தமே
அருளே ஆனந்தமே
அருட்பெரும் ஜோதியே
மருளே நீக்கிடும்
மாபெரும் கிருபையே
இருளே சூழ்ந்திடும்
இவ்வுலக வாழ்வில்
சுடராய் வழிகாட்டும்
தூய மெய் ஒளியே
கலங்கிடும் மனதாலே
குழம்பிடும் நிலையிலே
தெளிந்த நிலை காட்டும்
தெய்வீக ஞானமே
விடைகாணா கேள்வியாய்
வாழ்ந்திடும் போதிலே
பதிலாக நீ வந்து
பாரிக்கும் தெய்வமே
ஆனந்தம் அமைதி
அருளோடு மெய்வழி
நிலையான முக்தி
நீ தந்த வெகுமதி
போற்றி துதிப்பேன்
புகழ்ந்து பாடுவேன்
ஐயனை நிதம் நாடி
அன்புடன் பணிவேன்
என்னோடு இருப்பான்
என்னுடன் நடப்பான்
இறுதிவரை காத்துத்
தன்னுடன் இணைப்பான்.
குருகுலம், 09-10-2012. காலை, 9.10
147. Oh grace which is the bliss
Grace which is the bliss
The divine’s greatest Light
The one which removes delusion
This is the greatness of grace
In this life
Surrounded by darkness
Showing the path
The pure Light
The divine wisdom
Which gives a clear stand?
In the confused condition
Due to a disturbed heart
The God who takes care
By becoming the answer
When unanswerable questions
Come while we live
Anand, peace
True way with grace
Eternal Mukti
Are the gifts bestowed by you?
I will praise you
I will uplift your fame
I will bow with love
Seeking the feet of the Lord every day.
He will be with me
He will walk with me
Saving me till the end
He will merge me with Him.
Gurukulam 09-10-2012.
For me Muktinath came as the answer and not with an answer. Of course, my question was, ‘why I cannot live a perfect life even for a single day’. And though I got the answer from Romans 7:15ff, yet for all the questions in life finally I saw that our Lord is the answer, though it is expressed through His Mahavakyas, teachings or through His disciples and other bhaktas. Of course, all the answers were not explicit or expressed in text, but whichever form it came, finally the Lord became the embodiment of that answer to me.
19-8-2014
148. அடைக்கலம் ஆனேன்
சரண் அன்றி வேறொரு கதி அறியேனே
சன்மார்க்க நெறியும் கற்றறியேனே
குறையின்றி வாழ்வில் நிறையறியேனே
குற்றங்கள் கோடியே கணக்கறியேனே
கலக்கங்கள் அன்றி ஒரு களிப்பறியேனே
கவலைகள் அன்றி நான் மகிழ்வறியேனே
குழப்பங்கள் அன்றி ஒரு தெளிவறியேனே
குணக்கேடு அன்றி நற்குணமறியேனே
சுயநலமின்றி ஒரு செயலறியேனே
சுகமன்றி வேறு ஓர் நிலைமறுத்தேனே
இன்னும் எத்தனை சொல்லிடுவேனே
என்னை அறிந்த உன்னிடம் தானே
தள்ளினால் எங்கு நான் சென்றிடுவேனே
தயை காட்டு என்று கூறிடுவேனே
அடித்தாலும் அணைத்தாலும் உன்னடிதானே
ஒருக்காலும் விலகேன் சொல்லிவிட்டேனே
பாவியைக் காக்க வந்தவன் தானே
பலியாகி என்னை மீட்டவன் தானே
அதனால் நானும் மீண்டும் வந்தேனே
அடைக்கலம் ஆனேன் உன்னிடம் நானே
குருகுலம், 19-10-2012, காலை 9.00
148. I took refuge unto you
I don’t find any other refuge other than your feet
I never learnt the code of true marga (path)
I never had fullness in life without shortcomings
The mistakes that I do are countless
I never had joy without trouble
I never had happiness without worries
I never had any clear thinking without confusion
I never have good gunas without blemish
I never do anything without having selfish motive
I never accepted any condition other than pleasure
How much more should I tell
Who knows me well?
If you reject me, where else can I go?
‘Show mercy’ all that I can cry
I will never leave your feet
Either you beat me or hug me I made it clear to you
You came to save the sinner
You redeemed me by sacrificing yourself
Therefore, I come unto you again
I become a refuge unto you.
Gurukulam 19-10-2012,
Bhakti knows nothing other than the Lord Himself. Though sometimes I had the sense of rejection by Him, yet the assurance that He cannot reject what belongs to Him is the encouragement that I have in my bhakti.
149. பாத தரிசனம்
தந்தருள்வாய் தரிசனமே
தமியனிடம் வந்தருள்வாய் தினமே
பாதார விந்தத்தைக் காண விழைகிறேன்
பக்தர் குழாமுடன் கூட விழைகிறேன்
பாடிக் களிப்புடன் ஆட விழைகிறேன்
பரனே உன்னடி நாட விழைகிறேன்–தந்தருள்வாய்…
தன்னிகரில்லாத தெய்வீக பாதம்
தயவுடன் எமைக் காத்த தூய பாதம்
தரணியை மீட்க ஆணி துளைத்த பாதம்
தருவினில் தொங்கிய உனது பாதம்–தந்தருள்வாய்…
திருவடிக் கிணையிங்கு வேறேதும் இல்லை
தெய்வமே உன்னடி மீட்பின் எல்லை
அறிந்தே வந்தேன் அவ்வடி தன்னை
அளிப்பாய் புகலிடம் அதனடி தன்னில்–தந்தருள்வாய்…
18-11-2012. குருகுலம். காலை 9.10
149. The Darshan of the feet
Give me the darshan
And you come to this lonely one everyday
I want to have the darshan of your feet
I want to mingle with the bhaktas
I want to dance joyful singing
Oh Lord I want to approach your feet
The divine feet without any comparison
The pure feet which saved us?
To save the world it got pierced by nails
The feet which hanged on the tree
There is nothing equal to your feet
Oh God your feet are the final resort for redemption
Knowing this I come unto your feet
Give me protection under its feet
18-11-2012. Gurukulam
This song is reminiscent of the famous song ‘Padam ondre vendum’ in Tamil by Sastriyar (I think). As we have the feet of the Lord as the emblem in the dhyana mandapam windows, as I saw it, I remembered that song by Sastriyar and wrote this song.
Having the feet as the refuge and having it on one’s head portrays the dasa bhava (salve attitude) in bhakti tradition (known as ‘thiruvadi deekshai’). When Bharata received the ‘paduka’ of Rama he carried them on his head back to Ajodhya to rule the Kingdom. In several ashrams the ‘padukas’ which the departed Swamiji used are kept in the ‘brindavan’ (the graveyard) to represent his presence to which all the pujas are performed. Though Mukti Veda never glorifies any particular part of the Lord as divine one more than others, yet our bhakti tradition helps us to express our bhakti by depicting the feet of the Lord as the ‘earthly’ abode for a bhakta. I never hesitate to use this symbolism in celebrating my bhakti in the Lord.
150. கிருபை போதுமே
உன் கிருபை ஒன்றே போதும்
உலகில் உய்ய வேறென்ன வேண்டும்
தகுதியற்றோர் மீது நீ கொண்ட அன்பு
தாழ்ந்தோரிடம் காட்டும் உன்னத பண்பு
தாழ்மை கொண்டோரிடம் நீ காட்டும் பரிவு
கிருபை என்பதே உலகோரின் தீர்வு
தேடி வந்ததால் நாங்களும் அறிந்தோம்
தொடர்ந்து தந்ததால் அதையும் உணர்ந்தோம்
மாறிடா இந்த உன்னத மாண்பு
கிருபை என்ற உனது பண்பு
அன்பிற்கு நீயும் இலக்கணம் வகுத்தாய்
அதற்கு உன்னையே எல்லையாய் வைத்தாய்
தருவினில் தொங்கியே செயலில் வடித்தாய்
கிருபைக்கே ஒரு மேன்மை அளித்தாய்
21-11-2012, குருகுலம், 9.05 காலை
150. Grace is enough
Your grace is enough for me
To emancipate what else I require in this world?
The love which you have for the undeserving
The nobleness which you show to the mean one
The concern that you show to the humble ones
It is called as Grace as per the verdict of the world
We learnt it as came seeking after us
We realized as it was given to us continuously
This unchanging your nobleness
Is grace which is your nature?
You defined what love is
You put yourself as its end (limit)
You demonstrated it by hanging on the cross
By this you even dignified Grace.
21-11-2012, Gurukulam
When I wrote this song and completed the last stanza I couldn’t even proceed further. I stopped stunned by realizing how our Lord even gave dignity, nobleness, glory even to the grace itself.
Though comparing the Incarnation of the Lord with the Avatara of Vishnu is not correct one, yet in general the reason behind all the Avatars of Vishnu is to save the Devas from the Rakshasas as documented by Pazha Karuppaiya in his Tamil book: Yellaihal neetha Rama kadai [Rama’s story which crossed all (human) boundaries]. There he says that unless Kalki avatara takes places which promised to save the people, it will become a mistake and humans as a category to be saved by avatara will be left out. (p. 206). @ Of course, staunch Vaishnavites won’t agree with Karuppaiya. But what he says has a point to ponder.
But Mukti Veda clearly depicts that the Incarnation is to redeem the entire creation through the redemption of human beings first. And in it, grace stands as the climax. Of course, Vaishnavite bhakti tradition clearly sings the glory of grace; the forgiveness of sin by Rama and redemption of people through him. But the core concept of avatara is not primarily to save the people but only gods (devas).
Notes.
@Rama took avatara to save the devas from the Rakshasas. Now this avatara (Kalki) must take place to save people. Now those who are going to be saved are not devas but people (in Kalki avatara).
Vishnu took avatar to save devas, Veda and yajnas. But he never took avatara to save simple people. Therefore, if his Kalki avatara does not take place, the purpose of the avatar will be lost. The human as a category to be saved will be left out from the purpose of avatara. — Yellaihal neetha Rama kadai (Rama story which crossed all the boundaries), Coimbatore, Vijaya Press, 2008, p. 206 [my translation]
எளிவந்த திருமால்!
…அரக்கர்களிடமிருந்து தேவர்களைக் காக்க இராமனாய் அவதரித்தார். இப்போதும் அரக்கர்களிடமிருந்து காக்கத்தான் இந்த {கல்கி} அவதாரமும் நிகழ்ந்தாக வேண்டும். ஆனால் இப்போது காக்கப்படப் போகிறவர்கள் தேவர்களில்லை; அதுவும் மக்கள்தான்! திருமால் தேவர்களைக் காக்க அவதரித்திருக்கிறார். வேதத்தைக்காக்க அவதரித்திருக்கிறார். வேள்விகளைக் காக்க அவதரித்திருக்கிறார். எளிய மக்களைக் காக்க அவதரித்ததில்லை. ஆகவே அவருடைய கடைசிக் கல்கி அவதாரம் இப்போது நிகழாமல் போனால் அவதார நோக்கம் காலப்பிழைக்கு ஆட்படும்; மக்கள் என்னும் வகைப்பாடு அவதாரக் காப்பில் விடுபட்டுப் போகும்!-பழ. கருப்பையா,எல்லைகள் நீத்த இராம காதை, கோயமுத்தூர், விஜயா பதிப்பகம், 2008, p. 206
Leave a Reply