156 ஒரு ஓட்டம்
தேடித்தான் பார்க்கிறார் தெரிந்ததை சொல்கிறார்
தேடியது கிடைக்காமல் தெரிந்ததும் புரியாமல்
தொடர்ந்து இன்னும் தொய்வின்றி தொடர்கிறார்
தோல்வியை ஏற்காது தொடர்ந்தே ஓடுறார்
நாடியே ஓடுறார் நாளெல்லாம் தேடுறார்
நாலு பேர் சொல்லும் நல்லதை கேட்கிறார்
நல்லதைக் கேட்கினும் நன்மையை காண்கிலார்
நாலுபேர் சொல்லிட மீண்டும் கேட்கிறார்
வாடி தான் போகிறார் வாட்டம் கொள்கிறார்
வாழ்க்கையை அனுதினம் வாழ்ந்தே பார்க்கிறார்
வாழ்ந்தே பார்க்கினும் வாழ்வின் நோக்கமும்
புரியாது திகைக்கிறார் வாழமுடியாது தவிக்கிறார்
புலம்பியே தவிக்கிறார் பொறுமியே மாய்கிறார்
போனதை எண்ணி பேதைமை கொள்கிறார்
பலவற்றை எண்ணியே பதட்டம் கொள்கிறார்
பட்டதை எண்ணி நொந்து மாய்கிறார்
என்னதான் செய்யினும் ஏதுமே உதவாது
எங்குதான் தேடினும் பதிலும் கிடைக்காது
கிடைக்காத பதிலுக்கு இல்லாத கேள்வியை
எண்ணியே இன்னும் மீண்டும் ஓடுறார்
6-4-16/7-4-16, இரவு, 12.30, மத்திகிரி
156 A Race
They continue to seek and tell what they know
But unable to get what they seek and not understanding what they know
Run the race not giving up
And not accepting the defeat, they continue to run
They search the whole day and run seeking after it
And listen to the good counsel of others
Though they listen to that good counsel they didn’t see the good they seek
And again listen what others say
They become tired and become sad
And try to live the life each day
Though they live, unable to know the aim of life
They are confused and frustrated.
They lament and boil inside
And become mad thinking what is gone
And become anxious thinking many things
And become very sad of that experience
Nothing will help whatever they do
Wherever they search they won’t get the answer
(because) as they again run seeking
The answer which they won’t get for the question which does not even exist
6-4-16/7-4-16, 12.30 am, Mathigiri
Back in 1992 I wrote a song in Tamil in which I said that the mystery of life is that we ask several questions in life where the question itself becomes the answer. And in other times, however we try, we cannot find the answer that we want to know. But sometimes the paradox is that we try to seek to get the answer which is not existing or not knowing what the very question itself is the answer. This poem may look philosophical to some and make no sense to others. But this is the paradox of (my) mind as I several times sit and think about the paradox of life, which I am unable to communicate, as I myself was not clear what I think or understood. But I have to live this kind of mind and some of you have to read it. And blessed is the one who never read such poems or ignore it—as they have either the answer or know the question. Though I tried my best, trying after several drafts of translation, finally I gave up as I find it difficult to convey what I have written in Tamil in English.
Song 157
157 சுமை
ஏனோ இந்த பிறவி எடுத்தோம்
எத்தனை துன்பம் இதனுள் துய்த்தோம்
நாமே கேட்டு வந்திட வில்லை
நாம் சொல்லும்போது எடுப்பதுமில்லை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
நன்மைகள் கண்டு வளர்ந்த போதும்
இடையிடை தோன்றும் இன்னல்கள் வந்து
எண்ணிலாத் துன்பம் தந்து வருத்தும்
காலத்தின் கோலத்தை என்னென்று சொல்ல
கண் கண்ட காட்சிகள் எதைச் சொல்ல
ஒவ்வொரு பருவம் போனது ஒரு விதம்
முதுமை மட்டும் ஆனது பாரம்
எத்தனையோ பேர் நம்மைச் சுமந்தார்
ஏற்ற காலத்தில் எல்லாம் செய்தார்
முடிவுக்கு வந்த முதுமையில் மட்டும்
சுமப்பதெற் கென்று எவரையும் காணும்
பிள்ளை பருவத்தில் பெற்றோர் சுமந்தார்
வாலிப நாட்களிலே தன்னை தானே சுமந்தார்
முதுமைக்கு முன் கூடியே சுமந்தார்
முதுமையில் மட்டும் பாரமே ஆனார்
பூமிக்கு பாரமாய் பொழுதெல்லாம் வீணுமாய்
தனிமையில் இருந்து புலம்பித் தவித்து
எல்லாம் இழந்து ஏக்கமும் கொண்டு
எமனை நோக்கி காத்து கிடப்பார்
மத்திகிரி, 10-4-16, இரவு, 11.45
157 Burden
Why we took this (human) birth
Why we go through several sufferings in it
We never came desiring it
And we will not be taken when we asked for
Though we grew up
Seeing good each day and time
Many troubles coming in amidst them
Give pain along with much suffering
What to say about the nature of Time
What to tell about the many changes that we have seen
Each age went in its own way
But old age alone become a burden
So many people carried us throughout life
And done many things for us in proper time
But when the old age has come
There is none to carry our burden
In childhood parents carried us
In youth one carried himself
Before old age each one carried the other
But in old age alone we become burden
Becoming a burden to the earth and wasting the time
And lamenting by staying alone
Losing everything and longing alone
We will wait for the arrival of Yama
Mathigiri, 10-4-16, 11.45 pm.
Another song lamenting about loneliness in old age. Sorry for the melancholic note again, but this is part of life.
Song 158
158 எங்கு ஓட
விட்டுவிட்டு எங்கு ஓட
எந்த வேதனை சொல்லி புலம்ப
நட்ட நடுவில் தனித்து இருக்க
நாலு புறமும் அவலம் நெருக்க
யார் கூறி என்ன ஆவது
இதில் எவர் சொல்வதை ஏற்பது
பொதுநலம் என்று சொல்லினும்
சுயநலம் அதில் இருந்திடும்
போராடி தோற்றவர் ஆயிரம்
புரியாமல் தவிப்பவர் கோடியே
அவர்களில் நானும் ஒருவனே
தப்பிக்கும் வழியை காணேனே
பின்னுக்குப் போனால் உதைக்கும்
முன்னாலே வந்தாலே கடிக்கும்
ஆயினும் சுமையை ஏற்ற ணும்
எப்படியோ கொண்டு சேர்க்கணும்
தனித்து இழுக்க முடியாமல்
பிறரை அழைக்க இயலாமல்
நட்ட நடுவில் நின்ற தேர் போல
பாதியில் காரியம் நின்றிடும்
இந்நிலையில் என்ன செய்வது
ஏதோ வாழ்க்கையும் ஓடுது
முடிஞ்ச வரைக்கும் தள்ளணும்
மிஞ்சி போனால் ஒதுங்கணும்
27-4-16, மத்திகிரி, மாலை, 5.45
158 Where to escape
Where to escape leaving everything
And how to lament thinking about all the strife
Standing alone at the centre
Crushed by all side by many turmoil
What is the point of ‘who said what?’
And which one’s statement we should accept
Though we talk about ‘public interest’
There will be selfishness in that too
Many thousands get defeated after struggling a lot
And millions are there who do not understand this
I am one among them
And I cannot find the way to escape
If we go at the back it will kick us
And if we come to the front it will bite us@
Somehow, we need to load the burden
And by some means need to take the luggage to the destiny
Unable to drag alone
And unable to call others to help
Like a cart which get stranded on the way
Works will remain incomplete
What to do in this situation
somehow the life is going on
We should push as much as possible
And when it goes beyond us, we should keep away from it.
@–this is a proverb about donkeys. When trying to load it will try to avoid it by kicking and biting.
27-4-16, Mathigiri, 5.45 pm.
As I am reading the Complete Work of Gahdhiji (vol. 16), the following words which he addressed to the Ashram Inmates (at Sabarmati) reflected such feelings many of us often experience. But the immediate words that came to my mind were ‘Where else to run leaving everything? Then stopping reading, I wrote this song based on my reflection and also having similar experience:
231. ADDRESS TO ASHRAM INMATES 2
March 18, 1918
Every day I discover so much hypocrisy in the world that many times I feel I just cannot go on being here. At Phoenix, I often told you that, if one day you did not find me in your midst, you should not be surprised. If this feeling comes over me, I will go where you will never be able to seek me out. In that hour, do not feel bewildered, but go on with the tasks on hand as if I were with you all the time. [From Gujarati] Mahadevbhaini Diary, Vol. IV, –CWG, vol. 16, p. 346
Song 159
159 காத்துக் கிடக்கிறோம்
சூழ்நிலைக் கைதியாய் ஆகியே போனோம்
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பற்றுப் போனோம்
எத்தனை எம்மிடம் இருந்தும் என்ன
எதிலும் நிறைவில்லை என்பதே உண்மை
இல்லாதவனுக்கு இல்லாத கவலை
இருப்பவனுக்கோ எல்லாம் கவலை
ஆயினும் போராட்டம் இருவருக்கும் ஒன்று
ஐயகோ இதற்கு மாற்றென்ன உண்டு
விட்டு ஓடிட மனதும் இல்லை
விரும்பி ஓடிட தெம்பும் இல்லை
தூரத்துப் பச்சை குளிர்ச்சியாய் இருக்குது
கிட்டே போனால் நெருப்பாய் தகிக்குது
அடுத்தவன் தோட்டமே அழகாய் இருக்கு
அதிலே நுழந்தால் ஆபத்தும் இருக்கு
கையில் இருப்பதில் நிறைவே இல்லை
பறப்பதோ கையில் கிடைப்பதே இல்லை
“சீச்சி அந்த பழமோ புளிக்கும்”
ஏக்கத்தால் ஏமாந்து சொல்லியும் பார்த்தோம்
ஆயினும் அதைவிட மனதும் இல்லை
அதை விட்டுப் போக வழியுமே இல்லை
சுற்றிச் சுற்றி நாளும் வருகிறோம்
ஏக்கம் கொண்டு ஏறிட்டுப் பார்க்கிறோம்
பழுத்ததைப் பறவை கொத்திப் போகுது
வெம்பி விழுவதோ கசப்பாய் இருக்கு
என்றோ ஒன்று கிடைக்கும் என்று
ஏங்கிக் கிடக்கிறோம் மோகம் கொண்டு
அறுவடை காலமும் முடிஞ்சு போயினும்
அடுத்தது வருமென காத்துக் கிடக்கிறோம்
5-5-16, பெங்களுரு, இரவு, 10.30
159 We are waiting
We become prisoner to the circumstance
And lost the communication between the words and deeds
What is the point of having all that we need?
But the TRUTH is that there is no satisfaction in anything
Those who don’t have worry about what is missing
And everything become a worry for those who have everything
But the struggle is the same for both
What is the alternative to this?
We don’t have the heart to run away giving up everything
And we don’t have strength to run after things longing for them
The green in the distance look very cool
But when we go near it burns like fire
The neighbour’s garden always looks very beautiful
But if we enter into it there is some snare
We don’t have satisfaction with what we have on hand
And we never get what we are longing for
We repeatedly get cheated by saying with longing
“That grape is very savour”
Yet we don’t want to leave it and go
And there is no means even to go away from it.
We go round and round (under the creeper)
And look unto it with longing
The birds come and pick up the fruits
And those un-ripened ones which fall is savour and bitter
Thinking that somehow we might get one
We wait with great desire for it
Though the fruit season is gone
We wait for the next season to come
5-5-16, Bangaluru, 10.30 pm.
As I came to stay with one family, (on May 5th 2016) to have quiet time, after he and his son retired to bed, I silently sat by the bay window looking out at the sky. I sat there for some time. Though I have a better place than this at the ashram, as I want to avoid responsibility for at least for a few days, I came here to spend a week. But merely changing the place or situation is not going to guarantee what we are looking for. Wherever we go our shadow will follow us. Above all, the neighbour’s garden always looks beautiful and green. But we are like the fox which jumped several times to get the fruit and finally gave it up by despising it that it will be very savory. But our condition is worse than that. Unable to get the fruit at the same time and not wanting to leave the tree we continue to sit under it thinking that one day we will get at least one fruit which will fall on our hand after ripping naturally.
Song 160
160 நிற்காத ஓட்டம்
நாளும் சுகத்தை நாடியே தேடுறோம்
நாடி அதற்காய் நாங்களும் ஓடுறோம்
சுகம் எதுவெனச் சரியாகப் புரியலை
சிந்தைக்கும் அதுகூட சற்றும் விளங்கலை
உடலின் தேவையை ஒவ்வொன்றாய் எண்ணி
ஓயாமல் அதற்காக யோசனைப் பண்ணி
தெளிவாக யோசித்து திட்டமும் போட்டு
செய்கிறோம் செயல்கள் பிறரையும் கேட்டு
அடையும் வரைக்கும் தேடுதல் ஓயாது
அடைந்த பின்னுமோ நிம்மதி கிடையாது
இடையூராக எவரேனும் வந்தால்
வந்திடும் கோபத்தை தாங்கிட முடியாது
மோகத்தைத் தடுக்க ஆத்திரம் பிறக்கும்
ஆத்திரம் வந்திட புத்தியும் மயங்கும்
புத்தியும் மயங்கிட கலகமும் பிறக்கும்
கலகம் பிறந்திட காரியம் கெடும்
எது எப்படி ஆயினும் என்ன
எத்தனை இடையூறு வந்தாலும் என்ன
நினைத்தது கையில் கிடைத்திடும் வரையில்
எதனைக் கூறினும் ஏறுமா என்ன
வட்டமே போட்டு ஓடுகிறோமோ
வகை தெரியாமல் தேடுகிறோமோ
இலக்கு எதுவெனத் தெரியவும் இல்லை
எங்கே தொடங்கினோம் புரியவும் இல்லை
ஆயினும் ஓட்டாத்தை நிறுத்தவும் இல்லை
அடையும் இலக்கு கண்ணில் படலை
பிறரைப் போல நானும் ஓட
சுற்றி வருவது நிற்கவும் இல்லை
6-5-16, பெங்களூரு, காலை, 5.30
160 unceasing race
We seek comforts each day
For that we too run pillar to post
But what is ‘comfort’ is not very clear
And mind too cannot comprehend it neatly.
Thinking the physical needs one by one
And constantly thinking each one that we need
Then we make decision clearly and plan accordingly
And accomplish our acts by consulting others
The race won’t end until we get it
But we won’t get peace of mind once we received it
If someone comes as stumbling blog
None can bear our wrath
Irritation comes when desire is curtailed
Once get irritated buddhi become confused
Once buddhi get confused conflict will arise
Once conflict arise the work get spoiled
Whatever might be the end what does it matter?
How much hurled comes what that matter
Until we get what we desired
Will we accept others advice?
Are we running within a circle?
Do we seek without having any discerning spirit?
The goal is not visible (as we go round and round)
Where we began that too is not clear (as we run within the circle)
Yet we do not stop running the race
The goal is not visible too
As I too run like others
My run within the circle never comes to an end.
6-5-16, Bangalore, 5.30 am.
I never like to go for shopping. Because if I go for shopping finally, I will end up buying so many things which are not necessary for me buy thinking that it will be useful for them. As I saw the milk cooker at my hosts’ house, I want to buy one for the ashram, as boiling more than 5 litters of milk requesting someone to keep an eye on it was a constant problem. I thought these kinds of milk-cooker which we once used are not available now. But when I saw in his kitchen, I enquired about it and he said it is available even now and he ordered big one (five litters) for the ashram and small one (2 litters) for my personal use. But after this I began to think the way I get trapped in such material needs from which I cannot escape and wrote this song reflecting my own situation. When I wrote this song, what Gita says about this came to my mind:
dhyaayato visayaan pumsah sangas tesuupajaayate|
sangaat samjaayate kaamah kaamaat krodho’bhijaayate}||
krodhaad bhavati sammohah sammohaat smrtivibhramah|
smrti bbramsaad buddhinaaso buddhinaasaat pranasyati||—2:62-63
Brooding on the objects of senses, a man develops attachment for them; from attachment springs up desire; from desire (unfulfilled) ensues anger. From anger arises delusion, from delusion; confusion of memory; from confusion of memory, loss of reason; and from loss of reason (discrimination), he goes to complete ruin.—Swami Ramsukhdas, Sadhaka Sanjivani, Srimadbhagavadgita, Gorakhpur, Gita Press, first ed. Year not mentioned, vol. 1, p. 140-41
Leave a Reply