Secular Songs 176 to 180

Song 176

176 துறந்தவர் இல்லை

துறந்தவர் என்று எவரையும் காணும்

துறப்பதற் கென்று சில-பல வேண்டும்

தனதென ஒன்றும் இல்லாத போது

துறப்பதற் கென்று எவைகளை விடுவது

ஆடை இன்றி பிறந்தோம் உலகில்

அதுகூட மறைந்து போகும் முடிவில்

இடையில் சேர்த்து துய்த்தவை எல்லாம்

எவரோ நமக்கு சேர்த்தவை யன்றோ

தேகம் கூட நமதாய் இல்லை

மேவும் சுகங்கள் நிலையாய் இல்லை

தனித்தே சுகத்தை துய்ப்பது கூட

தரணியில் எவர்க்கும் எளிதாய் இல்லை

இறுதியில் இவைகளை துறக்கின்ற போதும்

இரகசியமாக செய்வதும் இல்லை

எவைகளை துறந்தோம் என்பதைச் சொல்லி

துறப்பதால் எவ்விதப் பயனும் இல்லை

துறவையே துறக்கத் துணிந்தவர் மட்டும்

துறவின் உண்மையை புரிந்தவ ராவார்

துறவின் உண்மையை புரிந்த பின்னாலே

துறந்தவர் இல்லை என்பதை அறிவார்

குருகுலம், 5-6-16, மதியம் 2.50

176 None has renounced

There is none who has (really) renounced

As we need something to renounce

Once nothing belongs to us

Which one to give up to become a renouncer?

We born without cloth on earth

At the end (after our burial) that too will disappear

In the meantime, what all we enjoy are

Collected and provided to us by others

The body is also not ours

And the pleasures which we enjoy are not permanent

And it is impossible to enjoy any pleasure

Independently on this earth^

(^so that we need the consent of others even to give up pleasure)

Finally, when we renounce all these things

We never do it secretly

There is no point of renouncing

After declaring what all the things that we have renounced

Those who have courage even to renounce renunciation

Alone know the truth about renunciation

Once they understand this truth

Will realize that actually there is none who has renounced (anything)

Gurukulam, 5-6-16, 2.50 pm.

See the article ‘Sulabha and Janaka: Sulabha and Janaka: who actually is the true renouncer?

Song 177

177 பாடம் கத்துக்கணும்

இதுவும் கூட வேடிக்கைதான்

என்று முள்ள வாடிக்கைதான்

எண்ணியெண்ணி பார்க்கையிலே

எங்குமுள்ள வழக்கம்தான்

குற்றம் குறைகளை கணக்கிட்டு

கூடவே அத்துடன் சேர்த்துக்கொண்டு

ஆராய்ந்து ஆராய்ந்து தேடிப்பார்த்து

அந்தோ என்னென்ன சொல்லுகிறார்

கைபட்டால் கால்பட்டால் குத்தமாச்சு

குரலை உயர்த்தினால் தப்பும்மாச்சு

வேண்டாம் இனி என விட்டால்

அதுவும் கூட வம்புமாச்சு

எத்தனை செய்தாலும் போதவில்லை

இன்னும் உழைத்தாலும் தீரவில்லை

கொட்ட கொட்ட குனிந்தாலும்

கொஞ்சமும் கோபமே மாறவில்லை

ஆயினும் இது கூட வழக்கமாச்சு

அதனாலே மனதுமே மரத்துப்போச்சு

பாவம் அவர் கூட என்ன செய்வார்

பழக்கமே அவருக்கு வழக்கமாச்சு

இதிலே நாம் பாடம் கத்துக்கணும்

அதுபோல செய்யாமல் பாத்துக்கணும்

ஆனால் அந்நிலையில் அகப்பட்டால்

அவர் போல் ஆகாமல் காத்துக்கணும்

மத்திகரி, மதியம், 2.50, 15-6-16

177 We should learn the lesson

This too is a funny thing

And a routine one

If we thinking about it

It is nothing but habitual one

By counting all the shortcomings

And adding further to them

By searching diligently

How many complaints they make

Even small issues become major one

If we raise our voice that too become an offence

If we try to avoid them

That also becomes another point of contention

How much we do, it is not enough for them

However, we toil they are not satisfied

However, we bow as they continue to hit on the head

Their anger never subsides

But this becomes a habitual one for them

Therefore, our heart too is become immune to it

What else they too can do

Their habit itself became a routine

We should also learn a lesson from this

We should never do like this (in future)

Even we get trapped in similar situation

We should be careful enough not to imitate them.

Mathigiri, 2.50 pm. 15-6-16

Those who are not satisfied with our seva will always find fault even on small matters which are not at all important. By mistake we could make such small mistakes as we too are human beings. Instead of counting the major things that we do, they will magnify only those secondary issues.  I am also not exempted from this.  By sharing even this thought and song, I do the same—only highlighting others’ secondary mistakes forgetting their best co-operation on core issues.

Song 178

178 சிக்கல்

போகப் போக புரிந்துவிடும்

புவியின் வாழ்வு விளங்கிவிடும்

புரியப் புரிய உனக்குள்ளே

புதிரின் முடிச்சு அவிழ்ந்து விடும்

ஒவ்வொரு இழையாய் நூலெடுத்து

ஒன்றாய் அவற்றை நீ சேர்த்து

உருட்டி ஒன்றாய் சேர்ந்த பின்னே

மீண்டும் இழையைப் பிரிக்காதே

எத்தனை கவனமாய் இருந்தாலும்

எவ்விதம் நீயும் முயன்றாலும்

முப்புரி நூலை பிரித்தெடுத்தால்

முடிச்சுகள் பலவும் விழுந்துவிடும்

முடிச்சை எடுக்க முயலும்போது

நூலே முடிவில் அறுந்துவிடும்

சிக்கலை நீக்க முனையும்போது

புதுப்புது முடிச்சு மீண்டும் விழும்

இந்த உண்மை புரிந்து கொண்டால்

இயல்பாய் வாழ்வு அமைந்துவிடும்

முடிச்சை அவிழ்க்க முனைந்து நின்றால்

முற்றிலும் சேதம் ஆகிவிடும்

உறவும் கூட இது போலே

ஒன்றில் ஒன்றாய் கலந்திருக்கும்

இதை உணராது நீ பிரிக்க

இறுதியில் இழப்பு உனதாகும்

இந்த உண்மை புரிந்து கொண்டு

இருப்பவருடன் சேர்ந்து கொண்டு

உருப்படியாக வாழ்ந்துவிட்டால்

வாழ்வின் உண்மை விளங்கிவிடும்

16-6-16, மத்திகிரி, மதியம், 1.15

178 Twist/knots

The meaning of the life

Will become clear as the days go

Once it become clear

The riddle about life will also be solved

Taking each strand separately

Joining them together

Once you formed a thread

Don’t try to unwind the thread

However, you remain careful

However, you try

When you try to unwind the thread of three strands

More knots will be formed

When you try to carefully remove the knots

New knots will be formed

Once you try to remove the knots

Finally, the thread itself get damaged

If this truth become clear

Life will take its natural course

If you try to remove the knots

The damage will be total

Relationship too like this

As it is entwisted with each other

Not realizing this if you try to unwind it

Finally, the loss will be yours

Understanding this truth

Mingling with others

Once we live meaningfully

The Truth about life will become clear.

16-6-16, Mathigiri, 1.15 pm.

Relationships are very complicated one.  When the threads get twisted (சிக்கல், முடிச்சு), several times when we try to remove the twist, the entire thread gets damaged. As I do the cross stitch, I have faced this problem several times.  The best option is to accept a little damage and cut where it is twisted and use the rest of the thread.  The same is the case with relationships.  In the name of correcting the wronged person, if we begin to explain too much, it gets more complicated. The better option is to cut the damage part alone and continue to live with this reality in life.

This reminds me of a joke, though women will excuse me as in the original it was only about women, particularly about one’s wife:  If your wife says “CORRECT ME IF I AM WRONG” smile and agree.  Never try to do that.  That is a trap.

Song 179

179 செருப்பும்-உறவும்

புதுசெருப்பு

கடிக்கும்

புது உறவு

இனிக்ககும்

போகப் போக

பழகிவிடும்

அப்புறமா

புரிந்துவிடும்

கடிக்கும்போது

வலிக்குதுன்னு

தூக்கி எறிய

முடியவில்லை

பழகும்போது

இனிக்குதுன்னு

அதிகம் பழக

முடியவில்லை

நடக்க நடக்க

புதுசெருப்பு

தன் போல

சரியாகிவிடும்

பழகப்பழக

உறவு கூட

என்னவென்று

புரிந்துவிடும்

புதுசெருப்பு

சீக்கிரமே

பழசாகிப்

போய்விடும்

உறவு கூட

அதுபோல

தேஞ்சு கூடப்

போயிடும்

பழைய செருப்பை

தூக்கிப்போட்டு

புதுசா நாமும்

வாங்கிடலாம்

உறவு மட்டும்

அதுபோல

மாத்த முடியாது

புரிஞ்சுக்கலாம்

செருப்பின்றி

நடக்கக்கூட

நம்மாலே

முடிஞ்சிடும்

உறவு மட்டும்

இல்லாமல்

வாழ முடியாது

புரிந்துவிடும்

17-6-16, இரவு, 11.10

179 cheppel  and relationship

New cheppel

Bites

New relationship

Is very sweet

Once used with it

It becomes old one

Then we will

Understand

When it bites

We cannot throw it

Though it is precious/costly

We cannot keep

Relationship is

Also, like this

As we walk

More and more

The cheppel

Will get adjusted

As we continue

Our relationship

We will

Understand about it

New chapel will

Soon become old one

Relationship also

Like that

When worn out

We can buy

A new cheppel

By throwing one

But we cannot

Throw the

Relationship like that

We should understand this

We can even walk

Without cheppel

But we cannot

Live without relationship

This we will

Realize soon

Mathigiri, 17-6-16, 11.10 p.m.

As my old sandal wore-out I began to use my new one. But it began to bite. I found it difficult to use. At the same time unable to walk without sandals, I adjusted my leg to get used to the biting.  As my mother saw that I was limping while walking with the new sandal, she said ‘new sandals always bites’.  Then using the same proverb, I wrote this song.  There is no other reason for this. 

It is difficult to translate such prose types of poems in English. The summary of this song is this:

New sandals sometimes bite and once we use them, then we can walk.  But we cannot throw it outright as it bites.  On the other hand, new relationships always look very sweet.  Once we come close, then familiarity breeds contempt. However, unlike a sandal which won’t be useful for us,  we cannot throw away our relationship with others that much easily.  Because we can manage to walk even without sandals, but we can never live without a relationship.

Song 180

180 யார் மீதோ கோபம்

யார் மீதோ கோபம் எனக்கு

அதை எப்படி சொல்ல உனக்கு

யார் அந்த நபரென்று தேடிப் பார்க்கையில்

நான்தானேஅது என்ன சொல்ல உனக்கு

என்னை நானே ஏற்காத போது

எரிச்சலும் வந்திடும் மற்றவர் மீது

இந்த உண்மை நன்கு புரிந்தாலும்

ஏற்கத்தான் முடியலை நான்னென்ன செய்யட்டும்

காரணம் பலவற்றைத் தேடியே பார்க்கிறேன்

கடந்தவை எல்லாம் எண்ணியே பார்க்கிறேன்

ஆயினும் காரணம் யாரெனத் தெரிந்தும்

ஏற்கத்தான் முடியல வேறென்ன சொல்லட்டும்

இதற்கு விடையும் எவரிடம் உள்ளது

என்று தேடியே சென்றுமே பார்க்கிறேன்

இறுதியாக என்னிடம் இருந்ததை

ஏனோ நானுமே காணவே மறுக்கிறேன்

தெரிந்த விடையை தெரியாது போல

நானுமே மறுத்து நடித்துப் பார்க்கிறேன்

என்னதான் நடித்தாலும் வேடமே கலைந்தபின்

என்நாடகம் முடிந்ததை நானுமே பார்க்கிறேன்

அப்போது கோபம் என் மீது திரும்ப

ஆர அமர்ந்து காரணம் தேடுறேன்

முன்பே தெரிந்ததை ஏற்கவும் மறுத்து

மீண்டும் பாயுறேன் எவர் மீதாவது

18-6-16, மத்திகிரி, காலை, 6.30

180 Someone else

I become upset with someone else

But how to tell it to you

When I searched who is that person

Finally, it is I, what to say further to you?

When I refuse to accept myself

I get irritated with others

Though I understand this truth

I find it difficult to accept it, what can I do?

I search for various reasons (to blame others)

And reflect all that went in the past (to accuse them)

Yet knowing who is reasonable for that

I find it difficult to accept, what else can I say?

Who has the answer for this?

I searched in many places

Finally, when I found it that it is within me

I refuse to accept that answer

I pretend that I don’t know the answer

Though I already knew it

However, I pretend, once my character is revealed

I see that my drama came to an end

That time as my anger turned towards me

Then soberly I began to search for the reason

Unable to accept the answer which is already I knew

Again, I began to attack someone else

18-6-16, Mathigiri, 6.30 am.

One main issue in interpersonal relationship is that when we fail to accept as we are, then not understanding it, we become upset with others.  Others are not responsible for most of the problems and strains in our relationship with them. When we sit and soberly think about it, though we realize, unable to digest, again we blame someone else for our failures. This is my experience.

The following advice by Bapuji (Mahatma Gandhiji) is relevant for me in this context:

191. LETTER TO ESTHER FAERING

LAHORE,

January 24, 1920

MY DEAR CHILD,

… Only remember one thing, never allow your spirit of sacrifice to go to the length of making you sour and disgusted with yourself or your surroundings. This is one of the sorest temptations to which workers are exposed. They go on sacrificing themselves till they become disgusted with everything and everybody for want of response. We sacrifice truly only when we expect no response. It is well worth knowing the root meaning of the word. It means, as you might know, ‘to make sacred’. We make neither ourselves nor others sacred when we are irritated or angry. There is often more sacrifice sacred making in a divine smile than in so-called substantial sacrifice. The instances of Mary and Magdalene1 occur to me as I write these lines. Both were good but the one who simply waited upon her Lord without making any fuss was probably more self-sacrificing than the other. And so may it be with you. Do not overtax your spirit in trying to win over Mrs. Gandhi or anybody else. Immediately you find that you cannot get on with her, you must have a separate kitchen for yourself. You could still serve her but not be so intimate with her. Nothing that you do there should tire out either your spirit or your body.

1 This appears to be a slip for “Martha”.

(p. 341)

BAPU From a photostat of the handwritten original in N.A.I.; also, My Dear Child, pp. 47-9—Complete works of Mahatma Gandhi, Vol. 19, pp. 341-42

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *