196 ஒரு ஏக்கம்
என்னுள்ளே உள்ளது ஒரு ஏக்கம்
அதை எப்படி சொல்ல உனக்கு
ஒன்றும் எண்ணாது ஒரு நாள் போனால்
அதுவே போதும் எனக்கு
எண்ணம் ஒன்று இல்லாதிருந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்
எந்த நேரமும் தொல்லை தரும் அதற்கு
இல்லையே கொஞ்சமும் இரக்கம்
இரவும் பகலும் எப்போது அதற்கு
இல்லையே கொஞ்சமும் உறக்கம்
தூங்கும்போதுகூட கனவில் வந்து
தொல்லைகள் எத்தனை கொடுக்கும்
எதை நொந்து கொள்வது என்று
எனக்கும் கொஞ்சமும் புரியலை
சிந்தையோ-மனதோ எதனைக்கூற
வழியும் இதற்கு இல்லை
எத்தனையோ வழி சொல்லி வைத்தார்
அவை ஏதும் எனக்கு உதவலை
என் வழியில் நானும் முயன்று பார்த்தேன்
அதனால் கூட பயன் இல்லை
என்னை ஆளும் எண்ணத்திலிருந்து
எனக்கும் வேண்டும் விடுதலை
அது கிடைக்கும் வரை தப்பித்துப் போக
வழியும் எனக்கு இல்லை
மத்திகிரி, 4-7-16, இரவு, 11.10
196 A longing
I have a longing within me
How to talk about it to you
If a day can go without thinking
That is more than enough for me
How it will be nice
If I don’t have a mind (to think)
It does not have mercy
As it continuously gives trouble
It never sleeps
Day and night
Even come and gives trouble in dream
While I am sleeping
I don’t know
Whom I shall blame
Is it ‘buddhi’ or ‘mind?’
There is no way to avoid it.
Many suggestions are given
But nothing is useful to me
Even I tried in my own way
There is no use in it too
I need deliverance from the thought
Which always lord overs me
There is no hope for me to escape
Till I get freedom from it
Mathigiri, 4-7-16, 11.10 pm.
This is my constant longing. I have to live at least a few minutes without having some kind of thought. I don’t know about others’ experiences, but I struggle a lot with my thought life. Even in dreams it chases me. In my dream I have argued, debated, talked, and even written poems. How nice it would be if I could spend a day without having any thought.
Song 197
197 பயம்
ஒருவித பயம் உள்ளே இருக்கு, அதை
உரைக்கத்தானே வெட்கமாய் இருக்கு
வீம்புக்காக நான் எத்தனை நடிச்சும்
உள்ளே கலக்கம் ஒன்றும் இருக்கு
எதற்காக இந்தப் பயம் எனக்குள்ளே
என்பதும் எனக்கு சரியாகத் தெரியல
யாரைப் பற்றி என்ன பயம்
அதுவும் எனக்கு என்னவோ புரியல
ஆனால் அடிக்கடி பயம் வந்து
அடி வயிற்றில் புளியைக் கரைக்குது
எதற்கு வருது என்று தெரியாது
ஏனோ உள்ளமும் இங்கே நடுங்குது
என்ன வென்று புரியாததாலே
யாரிடமும் சொல்ல என்னால முடியல
எப்போது வருமென தெரியாததாலே
தப்பிக்கும் வழியும் எனக்கு தெரியல
எனக்கு மட்டும் வருதா என்று
எனக்கு நிச்சயம் சரியாகத் தெரியல
எப்படி அதைக் கேட்பது என்று
இன்று வரை எனக்கும் விளங்கல
நிச்சயம் இதற்கு முடிவு கட்டணும்
என்பது மட்டும் புரியுது-அது
எப்படி என்று இன்னமும் தெரியாமலே
என்னமோ மனசு என்னுள்ளே கலங்குது
சொன்னால்தானே உதவ முடியும்
மத்தவங்க யாரும் எனக்கு இதில்
சொல்வதற்கே பயமா இருந்தா
இதற்கு முடிவு என்றும் இல்லை
மத்திகிரி, 5-7-16, இரவு, 11.50
197 Fear
I have some kind of fear within me
But I feel shy to share it
However, I pretend with courage
Still, I am troubled within me
I don’t know the reason
For this fear within me
I am afraid of whom
I even don’t know about it also clearly
But often I feel the fear within me
I also realize within my stomach about it
I don’t know why this fear also comes
I tremble within me about it
I can share it with others
Only if I know about it clearly
As I don’t know when it will come
I cannot find any means to escape from it
I don’t know for sure
Whether I alone have this experience
I don’t know how to ask
About it to others (about their fear)
Surely, I should bring an end to it
I understand this very clearly
But how to do is not clear
Therefore, my heart is very much troubled
Others can help me
Only if I could share it with others
But if I am afraid even to share with others
There will be no end to this
Mathigiri, 5-7-16, 11.50 pm.
Though this is a common experience in my life, sometimes a strange kind of fear comes within me. But I am not sure what that fear is? Though it is always related to the future, as we all have fear about the future and not about the past, I am not sure what that feature is? Is it related to my life on earth, or my life in the Further Shore? I don’t know. As I am unable to articulate it clearly, nobody can help me in this and I have to live with it till the end of my life.
Song 198
198 நம் குணம் புரியும்
குறை சொல்லிப் பயன் என்ன
உலகினில் எவரும்
குணம் காணப் பழகாது
இருக்கின்ற வரைக்கும்
சரி-தவறென
தீர்ப்பது யாரு
தான் சொல்ல வருவது
சரி எனும் போது
அடுத்தவர் சொல்வதை
கேட்பதும் இல்லை
அவர் கூறும் பதிலை
ஏற்ப்பதும் இல்லை
தான் சொல்ல வருவதை
புரிவதும் இல்லை
தன் பக்க குறைகளை
ஏற்ப்பதும் இல்லை
இறுதியில் இழப்பது
எவரென்று தெரியாமல்
இருவரும் வாதிட்டால்
பயனேதும் இல்லை
குறை கூறு வோரை
திருத்தவும் முடியாது
ஒரே நாளில் அவரை
மாற்றவும் முடியாது
புரிந்தவர் சற்று
பொறுமை காத்து
புரிந்து கொள்ளணும்
அவரின் குணத்தை
தம் செயல் மூலம்
அவருக்கு குணர்த்தி
திருத்த முயலணும்
நல்லதைப் புகுத்தி
முடிந்த வரையில்
முயன்று பார்க்கணும்
முடியாது போனால்
முயற்சியைத் தொடரணும்
பிறரை திருத்த
எத்தனம் செய்தால்
நம் குணம் புரியும்
மெல்ல நமக்கு
12-7-16 (13-7-16), மத்திகிரி, இரவு 2.30
198 We will understand our nature
What is the use of?
Becoming fault finders
As long as
We don’t know their good nature
Once we decided
That what we say is right
Then who will decide
Who is right or not?
We never listen
To others
We never
Accept their answers (response)
We never understand
What we try to say
And never accept
Our side mistakes
There is no point
Of both arguing
Not knowing till the end, that
Who is going to incur the loss?
We cannot correct
The fault finders
We cannot
Change them overnight
Those who understand (them)
Needs to keep patience
And try to understand
Their (fault finding) nature
And through
Our own acts
We should try to correct them
By doing good things
We should try
Our best
When we fail
We need to continue our efforts
Once we try
To correct others
We will slowly
Understand our own nature
12-7-16 (13-7-16), Mathigiri, 2.30 am.
Of course, I do the same thing I think that others are doing. Sometimes in the name of writing poems, I often expose my own nature rather than pointing out others’ mistakes. After writing this poem I feel that this poem too is another way of ‘fault finding’. So, when I think or accuse others as faultfinders, finally I feel exposed myself through my own words.
Song 199
199 வெறியாட்டம்
வெறி பிடிச்சிருக்கு மனிதனுக்கு இங்கு
ஒருவரை ஒருவர் விழுங்குறார் அங்கு
எதன் பெயரால் இந்தத் தீவிரவாதம்
எவர்க்கும் புரியாத அசுரரின் குணம்
எந்த மதமும் இதனை ஏற்குமா
இறைவன் பெயரால் செய்யவும் கூடுமோ
மனித மனம் கூட இதனை ஏற்குமா
மாக்களும் கூட இப்படிச் செய்யுமோ
வேடிக்கை பார்க்க வந்தோரை அழித்தான்
விவரம் அறியாத குழந்தையை மிதித்தான்
அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தான்
அசுர குணத்தின் எல்லைக்குச் சென்றான்
எதுவரை இந்த விபரீதம் தொடரும்
ஏனிந்த கோரத் தாண்டவம் ஆடணும்
இதனை எதிர்க்கும் வீரமும் இல்லையோ
இவரை அழிக்கும் வல்லமை இல்லையோ
இறந்தோர் கஞ்சலி செலுத்தி ஓய்வார்
வீரமாய் சூளுரை பலவும் கூறுவார்
வழக்கம் போல வாழ்வை ஓட்டுவார்
மீண்டும் நடக்க வருத்தமே காட்டுவார்
வெற்றுப் பேச்சுக்கு முடிவு காணணும்
வெறிகொண்ட அசுரர்க்கு முடிவு கட்டணும்
உலக நாடுகள் ஒருமித்து எண்ணணும்
ஒன்றாய் கூடியே வெற்றியை நாட்டணும்
ஆயிரம் பேதம் நம்மிடை இருக்கலாம்
ஆயினும் இதனை எப்படி ஏற்கலாம்
உணர்ச்சி அற்று வாழ்வதைக் காட்டிலும்
உயிரை தந்தேனும் உலகைக் காக்கணும்
15-7-16, மதியம் 1.15
199 Fanaticism
Men become made in deed
They swallow each other
In what name this kind of terrorism
A demon’s spirit which nobody can understand
Will any religion accept this?
Can one do it in the name of god?
Can any human heart accept it?
Can the animal even do like this
He killed those who came to watch
He threshed innocent children
He drank the life of innocent people
He went to the extreme of demon’s nature
How long this kind of extreme will go
Why one should do this kind of violent act
Is there no courage to oppose it?
Is there no power to annihilate them?
They will return back to normalcy after paying homage to the dead
They will take so many vows with a spirit of vengeance
But they will spend the life as usual
If it again happened then they will express their regret
We should put a stop to these vain talks
We should find an end to these demons
All the countries in the world should think unanimously
We should be victorious by joining together
There might be thousands of differences among us
But how can we accept this
Instead of living without sense
We should save the world even by giving our lives
15-7-16, 1.15 p.m.
Another terrorist act in which several innocent people, particularly children, are killed in France. I was very disturbed and to vent out my anger I wrote this song.
Song 200
200 அவரே பாரம்
முன்னே ஒரு முடிவுக்கு வந்த பின்
முயன்று பார்ப்பதில் பயனேதும் இல்லை
முனைந்து எப்படி கூறியே பார்க்கினும்
முரண்டு பிடிப்பவர் எண்ணமோ மாறலை
கூறுவதை முழுதாகக் கேட்கவும் மாட்டார்
கேட்டாலும் சரியாக யோசிக்க மாட்டார்
என்னதான் சொன்னாலும் ஏற்கவும் மாட்டார்
எதெற்கெடுத்தாலும் எரிச்சலும் கொள்வார்
எப்படியோ போகட்டும் என்று விட்டால்
எப்போதும் வம்புக்கு வந்து நிற்பார்
இனியென்ன செய்வது என யோசிக்கும் முன்னமே
இன்னொரு வழக்கை கொண்டு வருவார்
திருத்தவும் இயலாது தப்பிக்க முடியாது
தேள் கடி பட்ட திருடன் போல் ஆனோம்
ஏற்கவும் முடியாது எதிர்க்கவும் இயலாது
ஏதேனும் சொல்லி தப்பிக்க பார்ப்போம்
ஆகையால் நம் நிலை நிச்சயம் பரிதாபம்
ஆனால் அவர் நிலை அதைவிட மோசம்
தப்பிக்க வழி நமக்கு ஏதேனும் கிடைக்கும்
திருந்தாத அவருக்கு அவராவார் பாரம்.
மத்திகிரி, 15-7-16, இரவு, 10.30
200 They become their own burden
There is no point of trying again
Once one came to a preconceived conclusion
Those who remain adamant
Won’t change their view, however we try to communicate
They won’t completely listen to what others say
Even if they listen, they won’t think properly
They won’t accept whatever we say
They will get irritated on everything
Even if let them go as per their wish
They will come back with new issues
Before we could think to face about it
They will bring another contention
Neither we can correct them nor can we change them
We become like thief who was struck by the scorpion
Unable to accept them at the same time unable to oppose them
We will try to escape saying something else
Therefore, our condition become very pitiable one
But their condition become worse than ours
We will find some means to escape from them
But as they refuse to repent, they will become their own burden
Mathigiri, 15-7-16, 10.30 pm.
Those who have preconceived notion become their own burden. Others who try to help them often feel helpless as they are not ready to listen to other’s view. Sometime we may have some means to escape, but those who live with preconceived notions will become their own burden which they have to carry till the end.
Leave a Reply