BT Songs 206 to 210

BT Song 206. யாராலும் ஆகாது

என்னைச் சரி செய்ய என்ன செய்வேன்

என்னை நான் வெல்ல ஏது செய்வேன்

புறம்பே போராட்டம் ஆயிரமாயினும்

என்னுள் அமைதி எப்படிக் காண்பேன்

என்னை எதிர்ப்போர் வெளியில் இல்லை

என்னை ஆள்பவர் மனிதரும் இல்லை

என்னை நானே எதிர்த்தேன் நாளும்

என்னுடன் போராடி ஓய்ந்தேன் நானும்

கவலை இல்லா மனிதர் இல்லை

கலக்கம் காணா வாழ்க்கை இல்லை

ஆயினும் உலகில் வாழ்ந்தாக வேண்டும்

அதனுடன் போராடி வெல்ல வேண்டும்

அதற்கு உதவ பலரும் உள்ளார்

அவரால் இயன்ற உதவி செய்வார்

ஆயினும் தோல்வி நானே அடைந்தால்

அதற்கு எவரும் காரணம் ஆகார்

இந்த போராட்டம் என்றும் ஓயாது

என்னை மேற்கொள்ள என்னால் ஆகாது

அதற்கு உதவ நீ தயங்கக் கூடாது

அதனை ஏற்க என்னால் ஆகாது

’வருந்தி பாரம் சுமப்போரே வாரும்

வந்து என்னிடம் ஆறுதல் காணும்’

என்று உரைத்தவன் நீயும் தானே

அதனால் வந்தேன் உன்னிடம் நானே

ஆயினும் நான் செய்ய ஒன்றை மறந்தேன்

பாரம் சுமந்து உன்னிடம் வந்தும்

இறக்கி வைக்க நானே விரும்பாமல்

உன்னைக் குறை கூறி அதையும் சுமந்தேன்

என்பாரம் இறக்கவும் என்னாலே ஆகாது

என்னுள்ளே பெலனும் அதற்கும் கிடையாது

வலிய நீவந்து இறக்கி வைக்காமல்

இதற்கு ஒரு முடிவு என்றும் வாராது

உலகோர் பாரம் சுமக்க வந்தாயே

வலியச் சுமந்து மரத்தில் மாண்டாயே

அனைவரின் பாரம் சுமந்த உனக்கு

அடிமையின் பாரம் மட்டும் அதிகமோ

கேள்விக்கு விடையும் நானும் அறிவேன்

கேள்வி கேட்க மட்டுமே விழைந்தேன்

சுமக்க இறக்க சுதந்திரம் அளித்தாய்

தீர்மானம் செய்யும் உரிமையும் தந்தாய்

ஆனாலும் உனக்கு நானொன்று சொல்வேன்

அறியாதோன் போல் நடித்தால் என்ன செய்வேன்

உரிமை தந்த உனக்கு இன்னும் என்

குழப்பம் மட்டும் ஏன் விளங்கவில்லை

போதும் போதும் உன் விளையாட்டு

போக்கிடம் எனக்கு வேறிங்கு யாரு

என்னையும் மீறி நீ இறக்கி வைப்பாய்

இல்லையேல் என்னையும் சேர்த்தே சுமப்பாய்

அதுவும் உனக்கு எளிது என்று அறிவேன்

அதைத்தான் இதுவரை செய்வதை அறிவேன்

உன் தோளின் மீது இருப்பதை உணராது

என் சுமை மட்டுமே எண்ணி புலம்புறேன்

இதற்கு மேலும் நீ என்ன செய்வாய்

ஏந்திச் சுமந்து தாங்கியே வந்தாய்

உன்னதமான என் நிலையை உணராது

என்னைச் சரிசெய்ய யாராலும் ஆகாது.

13-11-2013. காலை. 8.30, குருகுலம்

BT Song 206. Nobody can help

Though there are thousands struggles outside

What shall I do to correct myself?

What will I do to overcome this?

How I will find peace within me

Those who oppose me are not outside

It is not human who is ruling me

I opposed myself each day

I become tired of fighting with myself.

No one is there without worries

There is no life without trouble

Anyhow we have to live in this world

Need to overcome it by fighting

There are many to support us

They will do their best by helping us

But even after that if I am defeated

No one is responsible for that

This struggle will never come to an end

I cannot overcome me

You should not hesitate to help me

That one thing is not acceptable to me

‘All who suffer by carrying the burden?

Come and seek comfort from me’

You are the one who said it

Therefore I came to you

But I forgot to do one thing

Even though I came to you carrying my burden

Hesitating to unload it

I continue to carry it by blaming you

But I cannot unload my burden

I don’t have strength within me for that                      

Unless you come and unload it by force

There won’t be an end to this

You came to carry the burden of the world

Died on the tree by voluntarily carrying it

For the one who carried everybody’s burden

Is it too much to carry the burden of this slave alone?

I know the answer to this question

Still I liked to ask you

You gave me the freedom to unload the burden

Gave me the right to take that decision

But what else I can say to you

If you pretend as if you don’t know, what can I say?

Why can’t you understand my dilemma?

Though you alone gave this right to decide

Enough is enough of your play (lila)

Who else is there for me to take refuge?

You unload my burden ignoring me

Otherwise you carry my burden along with me

I know that that too is easy for you

I realized that this is what you were doing all these days

Forgetting the fact that I am sitting on your shoulder

Still I lament only thinking about my own burden

What else can you do other than this?

You lifted, carried and supported me

But not understanding my elevated/higher status

None can correct me

13-11-2013. 8.30 a.m. Gurukulam.

Lost battle

Though the final war is won, there will always be lost battles in life.  And most of us have lost several battles in life—and live with the hope of winning the final War along with the Lord.  Whether others have lost battles or not, I am the one who has many lost battles in my life.  So when I manage some big challenges easily, small things often irritate me and I lose my battle that time.  Then when I analyzed the defeat, I realized that others are not the reason for that but I am responsible for that lost battle.   So this morning when I was going to the dhyana mandapam for my prayer and meditation while climbing the steps thinking on this subject then one word came to my mind was ‘என்னை சரிசெய்ய என்ன செய்வேன்—what shall I do to correct me.  And after I went to dhyana mandapam, I continued to meditate about it and as the inspiration came, I wrote this song as my prayer. 

My translation of the song may not communicate my thoughts and I know many don’t even read the translation but only the short comments.  I complain to the Lord as He is able to carry the burden of the whole world, why He hesitates to carry my burden.  And though I went to unload my burden, I don’t have the strength (or desire) to unload it.  So either He has to unload by force or has to carry the load along with me.  But He is already doing that and not knowing that I am sitting on His shoulder with my burden I am lamenting as if I am still carrying my burden.  This being the scenario, nobody can help me.

BT Song 207

207. தேடாமல் இருப்பேனோ

திருவடி தேடாமல் இருப்பேனோ-உன்

சன்னிதி வாராமல் இருப்பேனோ                                                                                      

குறைகளைச் சொல்லாமல் இருப்பேனோ-நீ

கேட்க மறுத்தால் நான் உனை விடுவேனோ

கேட்டால் தருவேன் என்றவன் நீதானே

’தேடினால் கிடைக்கும்’ சொன்னவன் நீதானே

தட்டினால் திறப்பேன் என்றதினாலே

விட்டு வைப்பேனோ உன்னை இனிமேலே

என்னால் முயன்றதை செய்து பார்த்தேன்

இயன்றவரை பிறரிடம் கேட்டுப் பார்த்தேன்

ஆயினும் காரியம் கை மீறியதால்

உன்னிடம் வராமல் எங்கு செல்வேன்

காரியம் தொடங்குமுன் உன்னிடம் வந்தேனே

’கைக்கொடுப்பாய்’ என்று வேண்டி நின்றேனே

ஆயினும் ஏனோ நீ தாமதித்தாய்

அதற்குக் காரணம் கூறவும் மறுத்தாய்

இவ்விதம் நீ செய்தால் நான் என்ன செய்வேன்

வேறெங்கு சென்று முறையீடு செய்வேன்

உன் சித்தம் அறியக் காத்திருப்பேன் நாளும்

இதுவன்றி வேறென்ன செய்வது நானும்

17-11-2013. காலை, 9.30, குருகுலம்

207. Will I remain not seeking?

Shall I remain not seeking your divine feet?

Shall I remain not coming to your presence?

Shall I not remain not sharing my complaints?

Can I let you go if you don’t listen to me?

You are the one who said ‘ask I will give’

You are the one who said ‘if you search you will find’!

As you said ‘I will open if you knock’

Can I let you go hereafter (if you don’t do these things)?

I have done at my best

I asked others as much as possible

Yet when the work went beyond my hand

Where else can I go without coming unto you?

Before beginning the work, I came to you

I requested you to help me

But for some reason you delayed

You refused to give the reason for that

If you do like this, what can I do?

To whom shall I go and share my complaints?

I will wait to know your will

Other than this, what can I do?

17-11-2013. 9.30. am. Gurukulam.

As there are no unanswered prayers, waiting upon the Lord for His time and means is the only option left with us, when things don’t move as we expected through our prayers.

14-8-14

BT Song 208

BT Song 208. கலக்கத்தை உதறிடு

உன் வழி என் வழியோ

உன் நினைவு என் நினைவோ

உன் செயல் என் செயலோ

இதை நீ அறியாயோ

நீயல்ல நான் தானே

உன் வாழ்வில் நிலையாக

வாழ்கிறேன் என்றாயே

அதை நீ மறந்தாயே

என் சித்தம் உன்னிலே

நிறைவேறும் வரையிலே

என் எண்ணம் போலவே

சோதிப்பேன் அறிவாயே

ஆயினும் தனியாக

உன்னை நான் விடமாட்டேன்

அனுதினம் உன் கூட

நானும் உடன் வருவேன்

உன்னைச் சரிசெய்ய

ஒரு சில சோதனை

நானும் அனுமதித்தேன்

இதை நீ உணர்வாயே

தண்டிக்காப் பிள்ளையும்

தறுதலை ஆகிவிடும்

சோதனை இல்லாமல்

பக்தியும் பதராகும்

உன் துன்பம் என் இன்பமோ

உன் வீழ்ச்சி எனக்குயர்வோ

உன் வேதனை என் மகிழ்வோ

இதனை நீ அறியாயோ

ஏதும் பிரிக்காது

உன்னையும் என்னையும்

எது உனை வெல்லும்

நான் உடன் வரும்போது

என் கண் பாவை நீ

என் கையின் செல்வம் நீ

என் தனி பக்தன் நீ

என்சொந்தம் ஆனாய் நீ

அதனால் கலங்காதே

வீணில் புலம்பாதே

இறுதிவரை நான்

இருப்பேன் திகையாதே

உறுதியாய் எழுந்திரு

கலக்கத்தை உதறிடு

முன்போல என்னுடன்

முனைப்பாக நடந்திடு.

20-11-2013. காலை 9.00, குருகுலம்

208 Forsake confusion

Is your way my way?

Is your thought my thought?

Is your deed my deed?

Don’t you know this?

You said that

‘not you but I live

In you permanently’

But now you forgot it?

Until my will

Accomplished in your life

I will test you

As I have decided

Yet I won’t

Abandon you to be alone

I will come with you

Every day

Let you realize this, that

In order to correct you

I allowed some trials

In your life

Undisciplined son

Will become a rowdy

Without trial

Bhakti also will become husk

Is your sorrow my pleasure?

If you fall, my glory?

Is your pain my joy?

Don’t you know this?

Nothing will separate

You and me

Which will overcome you?

When I come with you?

You are the apple of my eye

You are the property in my hand

You are my only bhakta

You become my own

Therefore don’t be disturbed

Don’t lament unnecessarily

I will be with you till the end

Don’t be bewildered

Rise up with determination

Forsake the confusion

Walk with enthusiasm

As usual with me

20-11-2013 9.00 a.m. Gurukulam.

Kunti says to Krishna that it is good that she suffered as it helped her to come close to Him.  Psalmist says that it is good that he suffered as it helped him to learn the dharma of God. (Ps. 119:71).  Meerabai sang, ‘Rana (king) sent the poison, but Meera drank it with a smile’. (Vishakka pyaala Rana beja; Meera pibatu haansi re).  Though God disciplines us, yet He never allows that to become mere legalism in his mind but like a loving parent he does it.

14-8-14

BT Song 209

209. கடன் பட்டேன்

இரக்கம் ஒன்றே உனது குணமே

கருணை ஒன்றே உனது வடிவே

தாழ்மை ஒன்றே உனது செயலே

பொறுமை ஒன்றே உனது இயல்பே

அன்பு மட்டும் உனது வழியே

அருள மட்டும் அறிந்தாய் நீயே

உருக்கம் மட்டும் கொண்டாய் நீயே

உன்னை அளித்தாய் எனக்காய் நீயே

கனிவு கொண்டு காத்து வந்தாய்

காதல் கொண்டு சேர வந்தாய்

கண்ணின் இமைபோல் காத்து வந்தாய்

கைவிடாது என்னை ஆதரித்தாய்

என்ன கடனும் நீ பட்டாயோ

என்னை படைத்து அதை பெற்றாயோ

உன் கடன் தீர்க்க உயிரைத் தந்து

என்னை மீட்க உனையளித்தாயே

இந்த உண்மை அறிந்தேன் நானும்

உந்தன் கருணை அடைந்தேன் நானும்

என்கடன் மட்டும் இன்னும் இருக்க

எவ்விதம் அதனைத் தீர்ப்பேன் நானும்

தீர்க்க முடியாக் கடன் பட்டேனே

திரும்பத் தரவும் உடன் பட்டேனே

கடனைத் தந்தால் உறவு முடியும்

என்று எண்ணித் தயங்கி நேனே

தீர்க்க முடியுமா உனது கடனும்

தந்தால் முடியுமா அந்தக் கணக்கும்

எதனைத் தந்து அதனை அடைப்பேன்

எல்லாம் உனதாய் ஆனபின்னே

இறுதி வரையில் தீர்க்க மாட்டேன்

எதையும் தந்து முடிக்க மாட்டேன்

கடனைத் தீர்க்க விருப்பமில்லாமல்

அடிமையாக உனக்காய் வாழ்வேன்.

21-11-2013, காலை. 8.45, குருகுலம்

BT Song 209. I am in debt

Mercy only is your nature

Compassion alone is your form

Humility is your action

Patient is your character

Love alone your path

You know only to bestow grace

You have only a kind heart

You gave yourself to me

With kindness you protected me

With love you came to unite with me

You protected me as the apple of your eye

You supported not giving up me

What kind of debt you owe me

By creating me did you incurred it

In order to pay back your debt

you gave your life to redeem me

This truth I understood

I also received your grace

Yet my debt still remains

How I am going to pay it back?

I received a debt which cannot be paid back

I agreed to pay it back

But I hesitate to return it by thinking that

if I pay it back your debt, our relationship will be terminated

Could your debt be cleared (by me?)

Will that account come to an end if I pay back?

Once everything belongs to you

By giving which I will pay it back

Till the end I won’t pay it back

I will never close it by giving anything

Unwilling to return your debt

I will live as your slave forever

21-11-2013 8.45. a.m. Gurukulam.

A famous Tamil verb is, ‘loan will spoil the love’.  But we incur debt to many which cannot be paid back by any of our act.   Though I say that the Lord died because of His debt of creating me, yet I cannot pay back my debt to Him and I am unwilling to pay it back as I want to remain His permanent slave.  According to Hindu worldview everyone born with a debt to his ancestors, family, god, and society.  By following his dharma he can pay it back.  But there are some debts which cannot be paid back through any means—like that we owe to our parents, particularly to our mothers.  The same is the case with a bhakta.   I like the concept found in the Purva Veda that a slave unwilling to go back can remain a permanent slave to a household.  A bhakta does the same to the Lord.

17-8-14. Gurukulam.

BT Song 210. எத்தனை முறை மறந்தேன்

நீயே எனக்காதாரம்-இதை

எத்தனை முறை மறந்தேனே

நீயே என் தாபரம் இதை

பலமுறை எண்ண மறந்தேனே

என் எண்ணம் என்விருப்பம்

என இனி வாழ்வதில்லை

என்றுனக்கு நான்தந்த

வாக்கையும் மறந்தேனே

வந்திடுவேன் உந்தன்னடி

வேண்டுவேன் உன் எண்ணப்படி

ஆயினும் என் காரியத்தில்

அத்தனையும் மறந்தேனே

’உன்சித்தம் நிறைவேற்று

உன்னிஷ்டம் அதைநடத்து’

என்று நான் சொன்னாலும்

ஏனோநான் மறந்தேனே

பேருக்கு உன்பக்தனாகப்

போட்டேனே வேடம்பல

நாடகம் முடிந்தபின்னே

அறிந்தேனே உண்மைநிலை

ஆயினும் எங்கு செல்வேன்

ஆதரவு எங்கு காண்பேன்

நீயன்றிக் கதியறியேன்

நானதை நன்கறிந்தேன்

நானுனக்குச் சொல்லவேண்டாம்

நன்கு நீயும் அறிந்ததினால்

ஆதலால் என்றும்போல

ஆதாரம் ஆகிடுவாயே

22-11-13

210. How many times I forgot

You are my support

How many times I forgot this

You are my refuge

I forget to think about this

I forgot the promise

Which I gave to you that

I won’t live anymore

Both in my thought and desire

I used to come to your feet

I will pray as per your will

But in all my deeds

I completely forgot you.

‘You fulfill your will

You accomplish your desire’

Though I said like this

Somehow, I forgot it

Just for the name sake

I played several roles

Once the drama ended

I realized my true nature

Yet where can I go

Where I will find support

Without you I don’t have any refuge

That I know very well

I don’t need to tell it to you

As I know well about that

Therefore as usual

Become my support

22-10-2013, 8.15 am. In this poem I expressed my desire to do as per the will of God but doing things as per my wish.  We often say that ‘we kneel down to know the will of God and we rise up to do it’.  But in my life, several times I have done the opposite and try to justify it.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *