BT Songs 221 to 225

BT Song 221. 221. எவையென்று நான் சொல்ல

நன்றி மட்டுமின்றி

நான் சொல்ல வேறுண்டோ

நாளும் எனக்கு நீ செய்யும்

நன்மையை எண்ணினால்

வாழ வாழ்வு தந்தாய்

வாழ ஓர் இடம் தந்தாய்

தேகத்தின் தேவையைத்

தேடியே நீ தந்தாய்

மனதை நீ தந்தாய்

அதனுள் குடி கொண்டாய்

மன்னவா உனைப்போற்ற

மகிழ்வுடன் மொழி தந்தாய்

எண்ணம் நீ வைத்தாய்

என்னுள் உன்னை வைத்தாய்

என்றும் உன் பின் வர

இதயமும் நீ தந்தாய்

அறிவு நீ தந்தாய்

அதையும்  ஆட்கொண்டாய்

அகமதை அழித்தே

அஞ்ஞானம் நீக்கினாய்

உறவு பல தந்தாய்

உறவாட நீ வந்தாய்

பக்தி நெறி தந்தாய்

பக்தர் குழாம் தந்தாய்

முக்தியும் நீ தந்தாய்

முழுமை நீ தந்தாய்

முதலும் முடிவுமாகி

என்னையும் ஆட்கொண்டாய்

எத்தனை நான் எண்ண

எவையென்று நான் சொல்ல

என் வாழ்வில் நீ செய்த

நன்மையை எண்ணியே

5-1-2014 காலை 10.30, குருகுலம்

BT Song 221. Which one to tell

Is there any thing

Other than telling ‘thank you’

When I count all the blessings

What do you give each day?

Seeking after me!

You gave life to live

You gave a place to live

You provided the needs of this body

You gave the heart

You dwell in it

O King to praise you

You gave words with joy!

You gave thought

You dwell you within me

You also gave me a heart!

To always follow you

You gave intellect

You also over lord it

By removing the ego

You removed the ignorance!

You gave several relatives

You came to have relationship

You gave the path of bhakti

You gave the bhakta mandali

You gave Mukti

You gave fullness

By becoming first and last

You over lord me

How much more could I count

Which one could I tell?

By thinking all the blessings

That you gave in my life.

5-01-2014 10.30 is. Gurukulam.

Another song praising and thanking God for all the blessings that I received.

BT Song  222.  உனக்கது முடியாது

ஆதாரம் என்றும்  நீதான் ஐயா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

பாதார விந்தம் கதியென வந்தேன்

பக்தருக்கு புகலிடம் நீதானே என்றேன்

வேறாரு அறிவார் என் நிலை தன்னை

விடுவோனே பார், இனி நான் உன்னை–ஆதாரம்…

அடியாரைக் காக்க அவதாரம் செய்தாய்

அன்பரைப் புரக்க உன்னை நீ தந்தாய்

வேறாரும் உன்போல் செய்ததும் இல்லை

எனவே உன்னை நான், விடுவதாய் இல்லை–ஆதாரம்…

உலகில் போராட்டம் ஓயாது என்றும்

இதில், உதவிட நீயன்றி யாரையும் காணோம்

அவரவர் பாரம் பெரிதான பின்பு

என் பாரம் சுமப்பது நீயன்றி யாரு?–ஆதாரம்…

உனக்கு மறைவாக ஒளிவிடம் கிடையாது

உண்மை இதுபோல் வேறொன்றும் கிடையாது

எனக்கும் மறைவாக நீ போக இயலாது

என்னுள் வந்த பின் உனக்கது முடியாது–ஆதாரம்..

6-1-2014, காலை, 10.30, குருகுலம்

BT Song 222. It is not possible for you

You are the foundation for me

For the one who struggles every day in life

I came to you as the only refuge

I said that you alone is the refuge for the bhakta

Who else will understand my situation?

Can I allow you to go?—… You are the

You took avatara to save the bhaktas

To protect the bhaktas you gave yourself

None has done like as you have done

Therefore there is no intention on my part to let you go—… You are the

The struggle will never come to an end in this world

No one is there other than you to help in this

As each one’s burden become heavy for them

Who else is there to carry my burden? —… You are the

There is no place to hide from you

There is no other truth than this

You too cannot go and hide from me

Once you come to me; that is impossible for you—… You are the

6-1-2014, 10.30 am. Gurukulam.

When I thought about the limitation of others then I thought that the Lord cannot give any excuse or hide from me.  However we carry one another’s burden, yet we are limited as we need to carry our own burden.  Thankfully we have the Lord who never has such limitations.  Once he comes and becomes part of our life there is no chance for him to go and hide from us.  Bhakti alone can claim such an intimate relationship with the Lord.

20-8-14. Gurukulam.

BT Song 223 223 போதும்

இந்த உறவு என்றும் வேண்டும்

இந்த அமைதி எனக்கும் வேண்டும்

உந்தன் கருணை அதற்கும் வேண்டும்

உன்னடி மட்டும் பணிய வேண்டும்

உலகில் பலரும் இதனை அறியார்

உந்தன் கிருபை அறிய மறுத்தார்

ஏனோ என் மீது இரக்கம் கொண்டு

உன்னை அளித்தாய் உறவை அறிய

ஏதோ என்னுள் மாற்றம் தந்தாய்

ஏனோ என்னை மீட்டுக் கொண்டாய்

காரணம் இதுவரை நானும் அறியேன்

கருணை மட்டும் அதிகம் உணர்ந்தேன்

பாவிக்கு உன்னை அளித்தாய்

பாவத்திற்காக பலியுமானாய்

ஆயினும் அதற்கு மேலே சென்று

ஆட்கொள்ள என்ன கண்டாய்

காரணம் பல கூற முடியும்

கருத்துகள் ஆயிரம் காணமுடியும்

என் வரை அவற்றுக்கு அவசியம் இல்லை

எல்லாம் அறிந்திட தேவையும் இல்லை

ஆதியில் நாம் கொண்ட உறவுதானே

ஆதி அந்தம் இல்லா நிலையும் தானே

இடையில் சற்று இழந்திருந்தேன்

உன்னால் இங்கு மீண்டும் பெற்றேன்

எனவே இந்த உறவு போதும்

என்னுள் தந்த அமைதி போதும்

உந்தன் கருணை நிலைத்து நிற்கும்

உன்னடி என்னுள் பதிந்திருக்கும்.

24-02-14, குருகுலம், காலை. 9.00

BT Song 223.  Enough

I need this relationship always

This peace I need

Your compassion is needed for that

I should bow only at your feet

Many in this world don’t know about this

They refuse to understand your grace

Somehow taking pity on me

You gave yourself for me to know this relationship

Some kind of change you gave in me

For some reason you redeemed me

I don’t know the reason for this so far

But I experienced your compassion more

You gave yourself for the sinner

You become the sacrifice for the sin

But going beyond this

What you saw in me to make me your own?

I can give several reasons

I can find thousands of opinions/views

But they are not important for me

I need not know all about them

This is the relationship that we had from the beginning

It is a status not knowing beginning or end

In the middle I have lost it a bit

Again I received it because of you

Therefore this relationship is enough for me

The peace that you gave in me is enough

Your compassion will remain permanently

Your feet will be established within me.

24-02-2014, 9.00 am. Gurukulam.

Though sin separated us from God yet it cannot permanently sever our relationship with Him.  We already belong to Him, which we lost in the middle and regained again because of the Lord.  The change that He gave in me is something which cannot be explained by various views or opinions (doctrines).  Once I regained my lost relationship with God, all these views/opinions are not important for me.  I need not know all about them.  No relationship can be defined in human terms.  I often ask the question: which one is important, ‘friendship or friend’?  Because without a friend friendship will remain only a theory; a concept.  A person who does not have a true friend can never understand the personal experience of friendship.  Once she has a close friend she does not need to know all the theories about friendship (and no need to celebrate with a special ‘friendship day’).  All the hair splitting explanations about ‘fall, atonement, redemption’ will disappear once we regain our relationship with God.  And bhakti celebrates it and not explains it.

20-8-2014. Gurukulam.

BT Son 224. பாரமாய் ஆனதே

உறவுகள் வரும் போகும் ஆயிரம் உலகிலே

உள்ளமும் தடுமாறும் நிலையில்லா வாழ்விலே

உணர்வுகள் அலைமோதும் அடங்கா மனதிலே

உள்ளான அமைதி கிடைப்பது எதிலே?

ஒரு நாள் கழிவதும் யுகமாய் ஆகுதே

உலக வாழ்க்கையும் பாரமாய் ஆனதே

சுமக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல்

ஏதோ போகுது நாளுமே வாழ்விலே

கூடவே பிறந்தோரும் காணாமல் போனார்

உடல் தந்த பெற்றோரும் மறைந்து போனார்

நட்பாக இணை வந்தோர் மறந்தும் போனார்

நான் மட்டும் தனியாக ஏனோ வாழ்கிறேன்

துணை என்ற ஒன்றைத் தேடவும் இல்லை

துணையாக எவரும் உடன் வரவில்லை

அதனால் எதையும் நான் இழக்கவும் இல்லை

ஆயினும் வாழ்க்கையைத் துறக்கவும் இல்லை

எதுவரை போகுமோ அதுவரை போகட்டும்

என்னதான் நடக்குமோ அதுவும் நடக்கட்டும்

ஆட்டுவித்தால் ஆடாதார் எவரும் உண்டோ

அவனின்றி நான் செய்ய ஏதுமே உண்டோ?

27-02-2014. குருகுலம், காலை 9.00

224.  Became a burden

Thousands of relationships will come and go in this world

The heart also will stumble in this unstable life

Feelings will waver in the uncontrollable heart

From whom to receive the inner peace?

Spending one day looks like one Yuga (vast period)

The life on this world also became a burden

Unable to bear and unable to unload

Somehow the days are passing in life

Those who born with me disappeared

The parents who gave birth to this body also passed away

The friends who came in the middle also forgot me

Somehow I live all alone

I never sought any companion for me

None came as the companion with me

Therefore I never missed anything/anyone

But I didn’t renounce this life too?

How long will it let it go?

Whatever will happen let it happen?

Who won’t dance if someone makes us dance?

Without Him is there anything for me to do?

27-02-2014. Gurukulam. 9.00 am.

This morning somehow my thoughts went back thinking about my childhood, school days, college days, all the people who came and gone in my life. Then some kind of melancholic mood occupied my mind.  In fact when I thought about them all, tears came down. Then I wrote this song to console myself.

BT Song 225 225 ஆட்கொண்டான்

அமைதியும் ஆறுதலும் அளித்திடும் திருவடி

அலைபாயும் மனதுமே நிலைநிற்கும் தேரடி

எளிதாக எனை வெல்ல எனக்குள்ள ஒரே வழி

என் ஈசன் எனக்களித்த இணையில்லாத் திருவடி

ஒவ்வொரு நாளுமே மாபெரும் போராட்டம்

உலகின் வழ்வுமோ அனைவருக்கும் திண்டாட்டம்

அதனிடை நான் வாழ வேண்டும் ஒரு மாற்றம்

அதனை நான் பெற்றுக் கொண்டேன் பெரும் நாட்டம்

அதனைத் தரவேண்டி அவனிக்கும் அவன் வந்தான்

அண்டினோர்க்கெல்லாம் அவனருள் தந்தான்

இனி இல்லை வீண் கவலை எனக்கில்லை இனி தொல்லை

என்னைக் காப்பது அவனுக்கு முதல் வேலை

இதனினும் இன்பம் எங்கே நான் காண்பேன்

இறைவனே யன்றிக் காப்பவன் எவனென்பேன்

உறவு அவன் கொண்டான் உரிமை மிகத்தந்தான்

என் சொந்தமாகி என்னை ஆட்கொண்டான்

4-3-14. காலை. 8.45, குருகுலம்

 225 over lorded me

The divine feet which give peace and comfort?

It is the resting place where the wavering heart could stand

It is the only easy way to win over myself

The unparalleled feet which God gave for me?

Each day is a great struggle

The life on this earth is a struggle for everyone

To live amidst in this I need a change

I longed to receive it

To give that to me He came to this world

He gave grace who took refuge at Him

No more worry for me; no more trouble for me

To save me is His first priority/karma

Where else can if found a greater bliss

Who is there to protect other than God?

He alone established the relationship and gave much right

By becoming my own He lover lorded me.

4-3-14. 8.45 am. Gurukulam.

A thing becomes our property when we earn that by our efforts. But the strange thing in our relationship with the Lord is that He gave Himself for us, but He became my own.  Technically redemption is paying back my debt and releasing me from my bondage. Then actually I should become His property.  But He gave the freedom to even choose and decide about it.  When I surrender myself through my bhakti, though I belong to Him, He becomes my own—still giving the freedom for me to throw Him away from life again.  Nothing can separate me from the Love of God and no one can snatch me from His hand.  In fact I belong to Him, but He became my own because of my bhakti.  How does bhakti even change the equation?

20-8-2014. Gurukulam.###

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *