Secular Songs 231 to236

Song 231 எல்லாம் நன்மைக்கே

இது ஒரு நல்ல ஓய்வுதான்

எனக்கும் கூடத் தேவைதான்

எதற்கெடுத்தாலும் ஓடிகொண்டு

எதையாவது செய்துகொண்டு

இருக்கும் எனக்கிது தேவைதான்

இதுவும் கூட நன்மைக்குத்தான்

பரபரப்பாக இயங்கிக் கொண்டு

பதைபதைப்பாக வாழ்ந்து கொண்டு

நேரத்தை கணக்கிட்டு செலவழித்து

குறுக்கீடு வந்தால் கோபம்கொண்டு

வாழ்ந்திடும் வாழ்க்கை இடையினிலே

இந்த மாறுதல் தேவைதான்

எதையும் படிக்கத் தேவையில்லை

ஏதும் செய்ய முடியவில்லை

பார்க்க கேட்க ஒன்றும்மில்லை

பகலோ இரவோ பேதமில்லை

வாயை மூடி இருந்திடலாம்

வழக்கத்தை மீறித் தூங்கிடலாம்

துன்பத்தில் இன்பம் இதுதானோ

துயரத்தில் நன்மையும் என்பதுவோ

கூட இருப்பவர் குணமறிய

கிடைத்த நல்ல சந்தர்ப்பமோ

எதுவானாலும் ஏற்றுக் கொண்டேன்

இதிலும் நன்மையைப் பார்த்துகொண்டேன்

மத்திகிரி 5-9-16, மதியம் 2.30

Song 231All are for good

This too is a good rest

And I deserve it

I need it because, as I am

Unnecessarily running too much

Doing something always

This too came only for my good

Become a busybody often

Doing many things with too much frustration

Spending time calculating too much

If someone interfere becoming upset with them

As I live my life likes this

This change is also a need

I need not read anything

I need not listen to much (music)

I have nothing to watch (in TV)

Whether it is day or night that makes no difference

I can keep quiet

I can sleep too much than what normally I do

Is it called joy amidst suffering?

Is it called profit among the loss?

Is it the time to understand?

The character/natures of those who live with us

But I accepted it whichever might it be

And learn to see only benefit in it.

Mathigiri, 5-9-16, 2.30 pm

Since September 2nd night I am down with severe cold, running nose and head ache. Most of the time I was on bed and I couldn’t do any work. With much pain and strain I cooked food for me and my mother.  As I was reflecting on this, I said that this kind of sickness is also good as it trains me to cope with the reality of life as it helps me to understand about others and everybody’s limitation.  But still I cannot overcome one thing—try to write even this experience as a poem.  If I get deliverance from that too, then that alone will be a real holiday for me.

Song 232 கல்லுக்குள் ஈரம்

இரக்கம் உள்ளுக்குள் இருக்கும்

அதை உணரபுதியும் மறுக்கும்

கல்லுக்குள் ஈரம் இருக்கும்

அது கசிய காலம்பிறக்கும்

சூழலில் சிக்கிக் கொண்டபின்னே

சுயபுத்தியும் போயிடும் முன்னே

சொல்புத்திக்கூட சற்றும் ஏறாது

இதை உணர்ந்துகொள்வார் பின்னே

ஆதங்கப்பட்டுப் பயன் இல்லை

ஆத்திரப் பட்டால் லாபமுமில்லை

விட்டுக் கொடுத்து ஒதுங்கிடணும்

தேவைப்பட்டால் தாங்கிப் பிடிக்கணும்

காலம் கனியும் போது

காயும் கனியும் ஆகும்

முன்னே பறித்து வைத்தால்

வெம்பி போகும் வீணில்

பொறுமை ஒன்றே வெல்லும்

இதுபுரிய பொறுமை வேண்டும்

இரக்கம் கூட சேர

வெற்றி உறுதி ஆகும்

மத்திகிரி, 6-9-16, மதியம் 2.00

Song 232 Moisture within the stone

There will be mercy within the heart

By our mind won’t recognize it

There is moisture inside the stone

It will take time to sweep out

Once caught up in circumstance

Even personal mind will disappear

They won’t accept others advice also

But they will realize it latter

There is no point of taking pity on them

There is no profit even getting angry with them

We should stand by giving some space for them

And when they need, we should step in to support them

When the time comes

The raw fruit will so become fruit

But if we plug it before time

It will get rotten

Patience alone will win

But we need to have patience to understand this

Once compassion joins with it

One day we will get success

Mathigiri, 6-9-16, 2.00 pm.

Due to circumstance some people harden their heart and severe the relationship.  Later when they realize their mistake, several times the ‘ego’ on both sides will put hurdle to mend the relationship. But some unexpected incident will jolt one person to reach out the other. And the other too, if matured, keeping the ego away will respond cordially. Then the old relationship will come back to normalcy—of course with a caution, both learning that they should not cross their lakshman reka.  In this the offended party needs much patience and to understand this also they need patience.

Song 233 வேண்டாம் வன்மம்

என்னவோ வன்மங்கள்

மனதினில் வளர்த்தார்

ஏதேதோ சொல்லி

பகையையே வளர்த்தார்

மூண்ட கோபத்தால்

உறவையும் அழித்தார்

முடிவினில் இழப்பையும்

அவருமே பார்த்தார்

பிறக்கையில் மனதினுள்

வன்மமும் இல்லை

வளரும் போதும்

தானாய் வரவில்லை

எவரோ விதைத்து

நீரும் ஊற்ற

உரமே போட்டு

நாமுமே வளர்த்தோம்

ஆழமாய் வேரும்

அதுவும் கொள்ள

அதனை அழிக்க

வழியின்றி தவித்தோம்

இறுதியில் அதற்கே

இரையாய் மாறி

பிறருடன் தன்னையும்

சேர்த்தே அழித்தோம்

வேண்டா வன்மத்தை

வீணாக ஊன்றாதீர்

பழிவாங்கும் நோக்கில்

உரமிட்டு வளர்க்காதீர்

முளையிலே கிள்ளி

முற்றாக எறிவீர்

மீண்டும் விதைக்காது

மனதையும் காப்பீர்

மத்திகிரி, 12-9-16, காலை 9.30

Song 233Not keep the spirit of revenge

Some kind of revenge

They breed in their heart

Adding more by words

They increase the enmity

Out of anger

They destroy the relationship

Finally they faced

The real loss in life

In birth

We don’t have the spirit of revenge

When we grew

It never came automatically

Someone sowed

Others water it

We add manure to it

To grow it carefully

As it takes

Deep roots

We are troubled

As we don’t have means to destroy it

And finally

Becoming a prey to it

We get perished

Along with others

Don’t sow the

Un-needed revenge

Don’t add manure

To take revenge

Try to uproot it

In the beginning

Guard yourself

Not sowing it again

Mathigiri, 12-9-16,9.30 am.

This is also about the same woman who wants to rake revenge on her daughter as she married against her will.  As this issue again and again disturb so many people in their entire family, when I thought about it, I wrote this song.

Song 234 புரியவேண்டும்

ஒவ்வொருவரு வாழ்வில்

ஒருவித சோகம்

மற்றவர் புரிய

முடியா வருத்தம்

இதயத்தின் பாரத்தை

இறக்கவும் முடியாமல்

எப்போதும் அதை

சுமக்கவும் இயலாமல்

தவித்திடும் தவிப்பை

தாங்கவும் முடியாது

இறக்கி வைத்திடும்

வழியும் கிடைக்காது

புழுங்கித் தவித்து

புலம்பியே வாழ்ந்து

பட்டிடும் வேதனை

என்ன சொல்ல

நம்மிடம் வந்து

கூறிடும் போது

நாமும் ஏற்ற

ஆறுதல் சொல்லி

சற்றேனும் அவர்

நிம்மதி காண

சொல்ல வேண்டும்

ஆறுதல் வார்த்தை

அவரது நிலையில்

நம்மை வைத்து

அதனை அறிய

முடியா போதும்

நமது சோகம்

தனையே நினைத்து

அவரது மனதை

புரிந்திட வேண்டும்

மத்திகிரி, 13-9-16, இரவு 11.20

Song 234 We should understand

Each life has

Its own sorrows

The pain which

Others cannot understand

Unable to unload

The burden of the heart

At the same time

Unable to carry it always

Unable to bear

The inner tension

Unable to get

Means to unload it

Get stress inside

And lamenting

What can we say?

About their suffering

When they

Share it with us

We too should

Comfort them

And try to help

For them to

Get some kind of peace

By saying few soothing words

Even though

We cannot step in their shoe

To experience

Their pain

Thinking about

Our own pains

We should try

To understand them

Mathigiri, 13-9-16, 11.20 pm.

One person whom I know for many years called and poured down his heart this evening.  His own father shattered his married life by sleeping with his wife.  This completely shattered his entire family. He lost his wife within a week after his marriage as his father lured her by promising giving the share in the property in her name.  His one week family life, disappeared like a dream. His mother got divorce from his husband as she was beaten and threw away from the home by his father as she confronted him. His wife was taken compulsorily by her brothers and won a court case and got her share in the property.  They arranged her marriage with another person.  Now this man lives with his mother searching meaning and purpose for his life. 

As I was thinking about him, I realized that however we try to step in their shoe to understand their struggle, it is beyond our comprehension about the sorrow and pain they underwent.  The only way that we can comfort them is to understand their pain through our own painful experience in life and share some comfortable words to them.

Song 235 குழந்தை மனம்

குழந்தைப் போல

குணமது இருந்தால்

குழப்பம் என்பது

மனதில் வராது

குற்றம் காணும்

மனமும் இருந்தால்

குழந்தையின் குணமும்

கொஞ்சமும் வராது

வெகுளியாய் வாழும்

மனமும் போதும்

குழந்தையின் குணமது

தன்போல் வந்திடும்

ஆயினும் அறிவு

வளர வளர

குழந்தையாய் இருப்பது

ஆபத்தில் முடியும்

அறிவு வளர்ந்தபின்

மீண்டும் குழந்தைபோல்

மாறுவ தென்பது

முடியாத போதும்

குழந்தையைப் போல

மனநிலை இருந்தால்

கொஞ்ச மேனும்

அமைதி கிடைக்கும்

மத்திகிரி, 15-9-16, இரவு 11.200

Song 235 Child like

If we become

Child like

Confusion won’t

Come in our mind

Fault finding

Become our nature

We can never become

Child like

If we live like

An innocent person

Then nature of the child

Will come automatically

At the same time

As we grow in knowledge

If we continue to remain as a child

It will also become a problem

As we advance

In our knowledge

Returning back like a child

Though not possible

If we have a heart

Like that of a child

Then we will have

Some kind of peace within us

Mathigiri, 15-9-16, 11.20

I always envy children, particularly babies.  How nice it would be to have a life like that.  Long before back in 1974 I wrote a song asking God to give me back my childhood (see secular song 1). Though they don’t realize it, children, particularly the babies are the one who really enjoy the life and not grownups.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *