Secular Song 281 to 285

Secular Song 281 புலி வாலை பிடித்தேன்

நெருக்கங்கள் அன்றி உறவுகள் இல்லை

நெருடல்கள் அன்றி வாழ்க்கையும் இல்லை

உரசல்கள் அன்றி உடன் வாழ்வதில்லை

விரிசல்கள் அன்றி உலகவாழ்வில்லை

விட்டுக் கொடுத்து போய்விடு என்றார்

வீணான வாதத்தை நிறுத்திடு என்றார்

தன் வரை எல்லாம் சரியெனச் சொல்லும்

தர்க்கங்கள் அனைத்தும் வீணெனச் சொன்னார்

இவற்றை நானும் ஏற்றுக் கொண்டேன்

இனி வேண்டாம் என ஒதுங்கியே நின்றேன்

ஆயினும் அதனால் நெருடலும் குறையலை

நெரிசல், உரசல், விரிசல்கள் முடியலை

புலியின் வாலை பிடித்தவன் கதை போல்

போனது இங்கு வாழ்வும் எனது

வாலை விட்டால் புலியோ கடிக்கும்

தொடர்ந்து பிடித்தால் கையும் வலிக்கும்

புலியும் நானும் ஓயும் வரையில்

சுற்றிச் சுற்றி வருவது அன்றி

இருவருக்கும் இதில் விடுதலை இல்லை

இதற்குமேல் சொல்லிப் பயனுமே இல்லை

மத்திகிரி, 13-1-2017, இரவு 11.30

Secular Song 281 I held tiger’s tail

There is no relationship without constraints

There is no life without frictions

We cannot live together without some tension

There is no life on earth without some kind of separation (crack)

 “Give it up and adjust”, many advised me

“Stop unnecessary arguments” they said

They also said that “my way is Highway

Is always dangerous”.

Finally, I accepted them all

And standby by giving up

Yet the frictions never came to an end

And friction, tensions and separation never stopped

Now my life becomes like that person

Who caught the tiger’s tail (to escape?)

If he gives it up, then the tiger will attack

And if he continues to hold it, then he will be strained

Until both the tiger and I become tired

There is no solution to this but to go round and round

There is no deliverance for both of us in this game

And there is no use further to share about it.

Mathigiri, 13-1-2017, 11.30 pm.

Another reflection about the friction in Interpersonal relationships.  Though I accept all the complications about human relationships, sometimes, no solution works out as I imagine. Then the best solution is to allow time to deal with it and settle down certain issues on its own.  As we often hear about the famous statements by politicians in India: Let the law take its natural course, several times, time takes its own natural course and settles down certain issues.  Certain problems in life are like catching the tiger’s tail.  Neither can we hold it for a long time nor can we give it up.  And the best solution is whoever becomes tired first will allow the other to win the game.  If the person who holds the tail becomes tired and gives it up the tiger gets its meal.  If the tiger becomes tired and faints then that person might have another lease of life. 

Secular Song 282 கூட்டுப் புழு

பரந்து விரிந்த உலகத்திலே

பலரும் வாழும் பூமியிலே

தேவைகள் நிறைந்த மாந்தருக்கு

சேவைகள் செய்ய வாய்ப்பிருக்கு

கோடு, வட்டம் போட்டுக்கொண்டு

குறுகிய எல்லையில் நின்று கொண்டு

தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டு

வாழ்வதில் ஆபத்து நிறையவுண்டு

உள்ளதை பகிர்ந்து வாழ்வதில்தான்

உண்மையான நிறைவிருக்கு

ஊருக்கு நல்லது செய்வதில்தான்

உனது வாழ்வுக்கு பொருளிருக்கு

இதை உணராமல் நாமில்லை

இந்த உண்மையும் புதிதில்லை

ஆயினும் அதனையும் செயல்படுத்த

ஆர்வம் மட்டும் நமக்கில்லை

போட்ட வட்டத்தை பெரிதாக்கி

பிறருக்கும் அதனுள் இடமளித்து

எல்லையை சற்று விரிவாக்க

இதனை மீண்டும் புரிந்திடலாம்

கூட்டுப் புழுவும் ஒரு நாளில்

கூட்டை பிளந்து வந்தால்தான்

புதிய வாழ்வை மீண்டும் பெறும்

பல்கிப் பெருகி வாழ்ந்துவிடும்

மத்திகிரி 14-1-17, காலை 6.45

Secular Song 282 Cocoon worm

In this broad and wide world

Where so many kinds of people are living

We  have many opportunities to serve

Among the people who have plenty of needs

If we draw a circle and lines

And stand within a narrow space

Always think only about ourselves

There is danger in such life

Real contentment is in such a life

Where we share what we have.

There is meaning for your life

Only when you do good to others

We never live not understanding this

And this truth is not even new

Yet to implement that

We never have enthusiasm much

Stretching the circle a bit

And giving space for others also in it

If we expand our boundaries

We can understand this again

The worm in the cocoon

Only by breaking it and come out of it

Will get a new lease of life

And live multiplying itself.

Mathigiri, 14-1-17, 6.45 am.

When our principle or material things become an end in themselves by creating a barrier for others to use or participate, we automatically create ‘the other’ and tell them that we have no time for them.  Those who remain within a close circle serving among themselves again and again, soon will face lots of problems as their own closeness will create internal tension and division.  To define and understand our principle we need some Fundamental principle.  But we should be flexible and show charity in all other areas.  In the name of defending our Fundamentals, if we refuse to be flexible in the peripheral, then naturally we will draw a circle around us and close the door for others, missing every opportunity to show and experience charity in life.

Secular Song  283 வாயை மூடணும்

வாதமும் வேண்டாம்

விவாதமும் வேண்டாம்

வாய் மூடி வாழ்வதே

மாபெரும் ஞானம்

கொள்கைகள் வேண்டாம்

குழப்பங்கள் வேண்டாம்

கொஞ்சத்தில் உண்மையாய்

வாழ்ந்தாலே போதும்

ஊருக்கும் உலகுக்கும்

சொல்லிட வேண்டாம்

உள்ளத்தில் உண்மையை

உணர்ந்தாலே போதும்

ஆயினும் சுயநலம்

மட்டுமே வேண்டாம்

அடுத்தவர் நலத்தையும்

எண்ணினால் போதும்

இதற்கு நாமொன்று

செய்திட வேண்டும்

பிறர் நலம் பற்றி

சிந்திக்கும் முன்னே

சுயநலம் தன்னையே

நீக்கிட வேண்டும்

சிந்தை தன்னிலே

தெளிவுமே வேண்டும்

தெளிவுடன் இருந்தால்

வாதமும் போகும்

சுயநலம் மறைய

விவாதமும் நீங்கும்

மத்திகிரி, 18-1-17, மதியம் 1.50

Secular Song 283 Keep my mouth shut

No need for argument

And no need for counter argument

Shutting the mouth

Is the wise thing

No need for principles

No need for confusion

It is enough to remain

Faithful in small things

No need to

proclaim to the world

it is enough if we

realize the truth within us

Yet no need

to be selfish

if we think other’s

welfare also (along with ours)

For this

We need to do one thing

Before we think

About other’s welfare

We should remove

Our own selfishness

And we should have

Clarity in our mind

If we have clarity

Arguments will disappear

Once selfishness is gone

Counter argument too will be gone.

Mathigiri, 18-1-17, 1.50 pm.

Debate and discussions are inevitable where ideas are discussed.  But when clarity of thought and deep conviction prevail, we can avoid unnecessary arguments and counter arguments, as they never are going to help us to reach a meaningful conclusion.  I have seen several times in my life that when healthy debate and discussion happen there is a place for dialogue but when they lead to unnecessary argument and counter argument, we will grind the same dough again and again without an end.  So, most of the time I would like to avoid arguments though I am happy to engage in healthy dialogue based on debate and discussion where reason will finally prevail.

Secular Song 284 தலைப்பில்லா கதை

எழுதாத கதையாக

என் வாழ்வும் இருக்க

இதற்கென்ன தலைப்பொன்று

நானிங்கு கொடுக்க

புரியாத பாடலாய்

நானுமே இருக்க

இதற்கென்ன இசையொன்று

நானுமே அமைக்க

தெளிவில்லா மொழியாக

என் பேச்சும் இருக்க

இதற்கென்ன உரை ஒன்று

நானிங்கு வடிக்க

வழியில்லா பாதையில்

நானிங்கு நடக்க

இறுதியில் பயணத்தை

எவ்விதம் முடிக்க

இதுபோன்ற கேள்விகள்

பலவிங்கு இருக்க

இல்லாத பதிலுக்கு

நானெங்கு போக

இறுதியில் இப்பாட்டை

எவ்விதம் முடிக்க

என்பது தெரியாமல்

எழுத்துக்கள் தவிக்க

நான் மட்டும் என்னுள்ளே

மெளனமாய் நகைத்து

நாளும் வாழுறேன்

வாழ்க்கையை ரசித்து

மத்திகிரி, 19-1-17., இரவு 11.35

Secular Song 284 Untitled story

As my life remains

An unwritten story

What kind of title

Can I give it to you?

As I remain

Meaningless poem

How can I compose?

Music to it!

As my speech

Remains unclear

How can I write?

Any commentary to it!

When I walk

Where there is no path

How is it possible

For me to complete my journey!

As there are

Similar questions here

Where can I go for the answer?

Which is not even there?

Finally, when the

Words are confused

Not knowing

How to complete this poem

I alone live

Savouring everyday life

Silently laughing

Within me

Mathigiri, 19-1-17. 11.35 p.m.

As I went for my night walk, the first line automatically came to mind.  I tried to ignore even that inspiration. But as further words began to flow in my mind, I wrote this song within 3 minutes. But as I wanted to end this song with some humour, I reflected on how to complete it with such spirit. And when the thoughts came again, I wrote the final stanza and began to laugh within me for a long time and retired to bed by 12.30 with a smile still on my lips.

Secular Song 285  குறையுள்ள குறை

குறைகள் ஆயிரம் கூறுவார் உண்டு

குற்றமே அற்றவர் என எண்ணிக்கொண்டு

நன்மையை ஒன்றிலும் காணவே தெரியாது

தேடித் திரிகிறார் தீமைக்கு என்று

முள்ளின் நடுவில்தான் பூவையும் வைத்தான்

கல்லின் இடையில்தான் நீரையும் தந்தான்

மூடர் என்று நாம் கூறுவோர் வார்த்தையில்

முத்தான தத்துவம் பலவும் அளித்தான்

எளியவர் என்று எள்ளியே எவரையும்

ஏளனம் நாமும் செய்திட வேண்டாம்

உயர்ந்தோர் என்பவர் வியந்திடும் வண்ணம்

எளியவர் அவரினும் மேன்மைய் இருப்பார்

பிறரிடம் உள்ள நிறைவைக் காண

குறையே காணும் குணமும் போகணும்

நன்மையை மட்டுமே காண தொடங்க

அக்குறை நம்மில் தானே விலகும்

குறைகள் என்று ஏதுமே இல்லாமல்

குவலயத்தில் வாழ்ந்தவர் எவருமே இல்லை

குறைகளை குறையாய்  குறைகூற முயன்றால்

நிறை உள்ளவரென்று ஒருவரும் இல்லை

மத்திகிரி, 20-1-17, மதியம், 2.10

Secular Song 285 A shortcoming with short coming

Thousands of faults one would find

thinking that they are without fault

unable to see good in anything

they search only bad things just for evil sake

God kept flower only amidst thorn

He kept water inside the rock

In those whom we consider as fools

He kept so many beautiful thoughts like pearls

we should not mock anyone

thinking that they are ignorant

but they will be nobler than

those whom we consider as great

In order to see the good in others

the nature of fault finding should go

once we began to see only good in them

this fault finding nature will go away from us

There is none on this earth

who lived without any shortcomings

once we began to see all the defects as fault

then there is none as a perfect being

Mathigiri, 20-1-17, 2.10 pm.

The only way to get rid of fault finding nature with us is to see good in others.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *