BT Songs 326 to 330

BT Song 326 உம் சித்தம் போல் ஆகட்டும்

ஏங்கியே தவிக்குது

ஏழை என் உள்ளமே

ஏளனம் செய்வதேன்

நீயுமே இன்னுமே?

நானென்ன செய்யணும்

இருந்து இன்னுமே

நானுமே தவிக்கிறேன்

உன்னிடம் வரவுமே

புவி வாழ்வு பாரமாச்சே

பொழுதெல்லாம் வீணுமாச்சே

ஏதோ தினம் வாழலாச்சே

என்னுளம் தவிக்கலாச்சே

கையும் காலும் இருக்கும்போதே

கடைத்தேற்றக் கூடாதோ

கட்டிலிலே வீழும் முன்னே

அழைக்க நீயும் கூடாதோ?

என்னைக் கேட்டா நீ படைத்தாய்

எனைக் கேட்டா நீ எடுப்பாய்

ஏதோ சொல்லி புலம்ப மட்டும்

வார்த்தை மட்டும் நீ கொடுத்தாய்

ஏதோ போச்சு இந்த நாளும்

அது போல் போகும் அடுத்த நாளும்

எப்படியோ நாளும் ஓடட்டும்

உன்சித்தம் போல ஆகட்டும்

28-8-15, இரவு, 8.50

BT Song 326 Let your will be accomplished

This poor heart is

Longing

And why do you

Continue to mock me?

What I need to achieve

By living further?

Every day I am longing

To come to you.

The life on earth become a burden

Time is merely going in waste

Somehow I live each day

And my heart is longing (to come)

When I have enough health

Won’t you take me to the further shore?

Before I fall on a bed

Won’t you call me back?

Did you create me by asking my permission?

Will you consult me before taking me?

You gave me a few words.

Only to lament

Somehow this day is gone

In the same way another day will go

Somehow let the days go

And let your will be accomplished.

28-8-15, 8.50 pm. Mathigiri.

One constant longing for everyone is that without falling on bed with much sickness, we should depart from this earth. At least this is part of the Indian worldview.  Often my mother will say, ‘like your father, I too should go’, which means she should die without lying down on bed with sickness.  I am no exception to this crowd and I express this longing to the Lord, though I resign that also to his will.

BT Song 327 இதுவே தருணம்

இதுவே தருணமையா–ஐயா

இதுவே தருணமையா

உடனென்னை அழைத்துச் செல்ல

உன்னுடன் எடுத்துக் கொள்ள–இதுவே…

உள்மன ஏக்கத்தையே உரைத்திட வார்த்தை இல்லை

உன்னையன்றி புரிந்து கொள்ள உலகில் யாருமில்லை

என்ன சொல்லிப் புரியவைக்க என்னிடம் மொழியும் இல்லை

எவர்க்கு நான் புரியவைக்க உறவென்று யாருமில்லை

உறவு என்று சொல்லிக்கொள்ள உலகில் மாந்தருண்டு

ஆயினும் அவருள்ளே உன்னைப்போல் எவருண்டு

என்னைப் போல அவருமே பலவிதத்தில் ஏக்கங்கொண்டு

இருக்கும் போது அவரிடத்தில் சொல்லி என்ன பயனும் உண்டு?

விரக்தியின் எல்லைக்கு  சென்று இதைச் சொல்லவில்லை

வேறு எந்த வழியுமின்றி நான் இதை உரைக்க வில்லை

போதுமென்ற மனதுடனே உன்னிலே இருக்கும் போது

பேச்சிழந்து புலம்பு முன்னே (உன்னுடன்) போவதே நல்லது

என்னவோ எனக்குத் தெரிந்ததை நானுமே சொல்லி வைத்தேன்

எப்படியோ உன்னிடமே வருவேன் என்று அறிந்து கொண்டேன்

அது இப்போதே இருக்குமானால் நல்லதென்று கூறிவைத்தேன்

இதற்கு மேலே சொல்லி என்ன நீ உணர்ந்து கொண்டால் போதுமென்றேன்

Mathigiri, 28-8-15, இரவு, 9.15

BT Song 327 This is the right time

This is the right time—oh my Lord

This is the right time!

To take me along with you

And to call me to go with you.

There are no words to express the longing of my inner being

There is none on this earth who will understand this other than you

I don’t have words to communicate this (longing)

To whom shall I tell as I don’t have anyone to call as my relative!

There are human beings on this world to call as my relatives

Yet who is there among them like you?

Like me they too long in several ways

What is the use of telling this to them?

I don’t say this out of frustration

I don’t tell this as I don’t have any other means

When I live on this earth with true contentment

It is better for me to go with you before I begin to babble losing my words.

Anyhow I just uttered something what I know

Somehow I know that I will come unto you

If that will be now it is better for me

What is the need to tell more, if you understand this that is enough for me?

Mathirigiri, 28-8-15, 9.15 pm.

As I miss my walking a lot here at Mathigiri, I bought one equipment to do some exercise. My neighbour joked to me this morning that ‘so you too want to build your body with a six pack and live long’.  In response I said that, ‘now itself I am ready to go and eagerly waiting for a call from God.  I have neither any work nor any purpose to live anymore. My only concern is about Patti (my mother) and I would like to live to take care of her till she passes away and then I am ready to go’. For this he said, ‘then don’t eat for three days and see what happens?’  With a laugh I said, ‘mortification of the body is against human value and as long as we live, we need to take care of it also’.

And tonight, as I don’t have much work on my Computer which broke, I was reading a book. Suddenly I said to the Lord in Tamil, ‘how I long to go but why you are mocking at me’.  (see the first four lines in Tamil in song 326). Then stop reading the book I wrote the first song 326.  After completing the song within five minutes, I continued my reading, but again as the same thought prevailed then I said to the Lord, ‘this is the right time for you to take me with you’.  Then I wrote the next song. 327

As I said in song 327 (stanza three) this longing is not because of frustration or depression but with real contentment and with an eagerness to go away when I am relatively enjoying a healthy life.  As every person desires, I too die without giving trouble to others.

One thing that I learned about life because of my bhakti in the Lord is that there is no need for pessimism, though often frustration will come (mostly because of our temperament).  So this longing to go away from this world is a positive hope of our mukti more than any frustration in life on this earth.

At the same time we should not form any theology or even ideology based upon any poem.  They are more emotional outlets and in a sense ecstatic than even philosophical.  When some words come as inspiration, I will write them and if inspiration continues then I will write them as poems.  When I begin I don’t know how the next stanza will come and how it will end.  Few times I have to reflect on my thoughts before I complete the poems.  In a few, I have to change a few words not extremely contradicting the Muktivedic principle, though not get complete endorsement.

For example see below the way I changed the tone of the song completely only changing very few words.  Now this points more about my longing to walk everyday with Him. I only changed one word in the Saranam and the last line in stanza three. 

I like the comments by Gutting as he said: …Poetry, at its most profound, need not observe consistency— Howard Wettstein, a professor of philosophy at the University of California, Riverside, and the author of “The Significance of Religious Experience.”—in interview conducted by Gary Gutting for The Stone, p. 13

27-9-15,

 327a இதுவே தருணம்

இதுவே தருணமையா–ஐயா

இதுவே தருணமையா

உடனென்னை அழைத்துச் செல்ல

உன்னுடன் இணைந்திருக்க –இதுவே…

உள்மன ஏகத்தையே உரைத்திட வார்த்தை இல்லை

உன்னையன்றி புரிந்து கொள்ள உலகில் யாருமில்லை

என்ன சொல்லி புரியவைக்க என்னிடம் மொழியும் இல்லை

எவர்க்கு நான் புரியவைக்க உறவென்று யாருமில்லை

உறவு என்று சொல்லிக் கொள்ள உலகில் மாந்தருண்டு

ஆயினும் அவருள்ளே உன்னைப்போல் எவருண்டு

என்னைப் போல அவருமே பலவிதத்தில் ஏக்கங்கொண்டு

இருக்கும் போது அவரிடத்தில் சொல்லி என்ன பயனும் உண்டு?

விரக்தியின் எல்லைக்கு  சென்று இதை சொல்ல வில்லை

வேறு எந்த வழியுமின்றி நான் இதை உரைக்க வில்லை

போதுமென்ற மனதுடனே உன்னிலே இருக்கும் போது

பொழுதெல்லாம் உன்னடி நானுமே நினைக்கும்போது–இதுவே

என்னவோ எனக்கு தெரிந்ததை நானுமே சொல்லி வைத்தேன்

எப்படியோ உன்னுடனே நடப்பேன் என்று அறிந்து கொண்டேன்

அது இப்போதே இருக்குமானால் நல்லதென்று கூறிவைத்தேன்

இதற்கு மேலே சொல்லி என்ன நீ உணர்ந்து கொண்டால் போதுமென்றேன்

327a This is the right time

This is the right time—Oh my Lord

This is the right time!

To take me along with you

And to abide in you.

There are no words to express the longing of my inner being

There is none on this earth who will understand this other than you

I don’t have words to communicate this (longing)

To whom shall I tell as I don’t have anyone to call as my relative!

There are human beings on this world to call as my relatives

Yet who is there among them like you?

Like me they too long in several ways

What is the use of telling this to them?

I don’t say this out of frustration

I don’t tell this as I don’t have any other means

When I live on this earth with true contentment

As I meditate your Holy feet the whole day

Anyhow I just uttered something what I know

Somehow I know that I will come unto you

If that will be now it is better for me

What is the need to tell more, if you understand this that is enough for me?

BT Song 328 சிலநாள் வாழ்வு

சிலநாள் வாழ்வும்

சீக்கிரம் முடியும்

சித்தத்தில் கொள்வாய்

நீயென் மனமே!

சிந்தையை அடக்கி

சீர்படுத் தாமல்

சீர்கெட்டு நீயும்

சீரழி யாதே

வருகிறேன் என்றவன்

வந்திடு வானே

வரும்நேரம் தன்னைச்

சொல்லிடு வானோ?

அரை நீ கட்டி

ஆயத்த மாகி

அவனுக்குப் பணிசெய்ய

முயல்வாய் தினமே

தேகத்தின் தேவைக்குச்

தேடி அலைகிறாய்

மனதின் நிறைவுக்கு

செயல் பல செய்கிறாய்

ஆன்மாவை மட்டுமோ

அலட்சியம் செய்கிறாய்

அது உன்னிடம்

முறையிடாது என்பதால்

ஆயினும் அதனை

படைத்த வனுக்கு

நீ உன் கணக்கை

நிச்சயம் சொல்லணும்

செயல்களையும்

சற்றே நிறுத்தி

சிந்தை தன்னையும்

உன்வயப் படுத்தி

ஆன்மா தன்னை

அவனில் நிறுத்தி

அனுதினம் நீயே!

தியானமும் செய்வாயே

29-8-15,மத்திகிரி, காலை, 6.10

BT Song 328 Few days’ life

The few days’ life

Too will soon come to an end

You remember this

Oh my heart!

Not disciplining the mind

By taming it

Don’t be spoiled

By wavering.

The one who said that He will come

Will come soon

But will He tell

The time of His arrival?

Tying the towel

Around your waist

You be prepared

To serve Him.

You long for the

Needs of the body

And to satisfy the heart

You do many things

But you ignore

The atman

As it won’t

Complaint to you!

But you should

Give account

To the one

Who created it?

Stopping karmas

For some time

And keeping the mind

Under your control

Abiding the atman

In Him

You meditate

Every day in Him.

29-8-15, 6.10 am. Mathigiri

As my computer broke I don’t have much work in it. This helped me to relax myself. Some urgent work that demanded the need of the computer to send some text for printing etc. forced me to think how to arrange for another one.  So even in their broken state the gadgets can control us. This brought a smile when I was enjoying my morning quiet time with a cup of tea.  Then I said to myself in Tamil, ‘the fleeting life of a few days will soon come to an end.  But instead of thinking about it, how I am worried about the work that both my body and mind demand.’ Then I wrote this song.

BT Song 329 என்ன குணமிது?

கொஞ்சம் இரங்கு

குமுறலைக் கேட்டிடு

கெஞ்சியே வருவோர்க்கு

கஞ்சமின்றி நீ கொடு

சில துளி கொடுத்தாலே

சோர்ந்த பயிரெல்லாம்

உயிர்பெற்று உவப்புடன்

உன்னைத் துதித்திடும்

கருகியே காய்ந்தாலோ

கலங்கிடும் மனது

கடைக்கண் பார்த்து

அருளைத் தாராயோ

உழுதவன் கலங்குறான்

உலகோர் திகைக்கிறார்

படைத்த நீ மட்டும்

பொறுப்பின்றி இருக்கிறாய்

என்ன குணமிது

எங்கிருந்து வந்தது

இதுவரை உன்னிடம்

என்றும் இல்லாதது

அறம் பாடினால்தான்

உனக்கு புரியுமா

அந்த எல்லைக்கு

போகத்தான் முடியுமோ?

என்னவோ செய்திடு

யாரென்ன செய்வது

முறையிட மட்டுமே

முடிந்திடும் எமக்கு

1-9-15, மத்திகிரி, மதியம் 2.45

 BT Spong 329 What kind of nature is this?

Show some mercy

And listen to our mourning

Bestow abundantly

Who come to begs to you

If you give bit rain

The dying crops

Will praise you

By getting life again

But if they dried up

Our hearts will be troubled

Won’t you show your mercy?

By seeing through the corner of your eyes

The farmers are troubled

And the people on this earth are bewildered

But you remain indifferent

Though you are the creator

What kind of nature is this?

From where it came

Which never was with you?

Before ever?

Will you understand?

Only if I sing a song of ‘aram’

Can I go?

To that extreme?

Do whatever you want

What can we do?

We only know

To come and complain to you

Mathigiri, 1-9-15, 2.45 p.m.

This morning my neighbour came and with much sorrow said, ‘please pray for rain. The crops are drying.  We spent a lot of money to sow’.  I understood his frustration, as again a dry spell is drying the crops.   There is a Tamil proverb which says that only if the farmers kept their hand in mud, we can put our hand in the plate (உழவன் சேத்துல கைவச்சாதான் நாம சோத்துல கைவைக்க முடியும்).  So, this afternoon when I was praying, I said the first line in Tamil as it is and then I wrote this song. As I really became upset with God, I even went to the extent of warning Him that ‘do I need to write a song of aram’.  I don’t know if there is any equivalent to this tradition in any other culture in the world.

Poverty is born with the poets. So, they always depended upon the patterns, particularly the kings for their survival. However, when they saw that the king was violating dharma, they never hesitated to warn him. The kings also had a subtle fear that if a poet wrote a song of ‘aram’ against him that it would destroy his kingdom. So more than his powerful enemies a king always had an inner fear towards the poets who lived an upright life.  That is why I said in the last but one stanza that I need to sing a song of ‘aram’ against God (though I never lived an upright life).  Of course, I know that His righteousness (dharma) never changes.  But both my bhakti and poem give this kind of freedom of expression to plead to God.

Here I give one such song written by Kamban when the Chola king asked him to leave his kingdom, in which Kamban says, ‘are you the king and your kingdom is the only rich land? Do I write in Tamil only depending upon you? Is there no other king who won’t receive me eagerly? Is there any tree which won’t receive monkeys?

In the next song Kamban also glorifies the farmers praising their hand as: the one which upholds the furrow; which is looked upon by the kings, which bestows mercy to the people (by producing food), which removes poverty, the one which sustains life for a long time.  Valluvar even went to the extent of saying that, ‘Though laborious, farming is the best; All trades in the world rely on it.—Kural 1031. See few more Kural glorifying farmers. @

மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ

உன்னையறிந்தோ தமிழை யோதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.- தனிப்பாடல் திரட்டு,உரை கா. சுப்பிரமணிய பிள்ளை, சென்னை, நல்லறப் பதிப்பகம், 2007, முதல் தொகுதி, ப. 103, song 39

மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை

ஆழி தரித்தே யருளுங்கை-சூழ்வினையை

நீக்குங்கை யென்று நிலைக்குங்கை நீடூழி

காக்குங்கை காராளர் கை.-ப. 106, song 45

உரை: காராளர் கை-மேகத்தை யாளுகின்ற உழவர்கள் கையானது, மேழி  பிடிக்குங்கை–கலப்பையைத் தாங்கும் கையாகும், வேலாயுதத்தை உடைய மன்னர்கள் விரும்பிப் பார்க்கும் கையாகும், ஆழி தரித்தே அருளுங்கை-மோதிரமணிந்து உதவி செய்யும் கையாகும், நம்மைச் சூழ்ந்த தீவினையால் வரும் தரித்திர துன்பத்தை யொழிக்கும் கையாகும், எப்போதும் அழியாதிருக்கும் கையாகும், நெடுங்காலம் உயிர்களைக் காப்பாற்றும் கையாகும்.-ப. 106

@ Farmers are the linchpin of the whole world

As they feed even those not in the ffield.—1032

Who live by ploughing and eating alone live?

The rest bow and follow others to live.—1033

 but to askers give.  Who raise with their own hands the food on which they live. [Tose whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.]—1035

For those who have left what all men love no place if found.  When they with folded hands remain who till the ground. [If the farmer’s hands are slackened, even the ascetic state will fail.]–1036

Bening farmers of bounteous crops bring

All states under their king.—1034

Tillers who work with their hands

Beg not but give the seekers.—1035

If tillers plough not and slacker their hands

There’s no life even for the ascetic ones.–1036

—Translated by M. Rajaram, New Delhi, Rupa & Co.  2009,

BT Song 330 செவி சாய்ப்பான்

கடவுளும் எப்படிக் கண்மூடி இருப்பான்-நம்

கஷ்டத்தைப் பார்த்தும் பொறுப்பின்றி இருப்பான்

தாயடித்தாலும் சேயெங்கு போகும்-தன்

தாயின் மடியில் வீழ்ந் தழுகாமல்

இரக்கத்தை மட்டுமே குணமாக கொண்டவன்-நம்

எல்லா தவறையும் பொருத்தருள் கின்றவன்

பாரா முகமாய் இருந்திடு வானோ?

பாவிகள் நாமென்று வெறுத்திருப்பானோ?

அப்படி இருந்திட அவனென்ன மனிதனா

ஆத்திரம் கொண்டிட அவனென்ன மூர்க்கனா

கருணையின் வடிவம் கடவுள் என்றானபின்

கதறிடும் நமக்குத் தன்செவி அடைப்பானோ?

நம் நிலைதனை அவன் அறிந்தே இருக்கிறான்

நாம் வேண்ட அவனும் காத்திருக் கிறான்

வேண்டும் முன்னே தர அவனும் இருக்க-நம்

வேண்டுதல் கேட்க செவி சாய்த்தே இருக்கிறான்.

ஏற்ற சமயத்தில் எல்லாம் தருவான்-நாம்

ஏங்கியே தவிக்காமல் மழை (அருள்) தந்திடுவான்

மரத்தை வைத்தவனும் மறந்திடு வானோ

மன்னுயிர் தவிக்கப் பார்த்திருப் பானோ?

3-9-2015 மத்திகிரி, மாலை, 3.55

 BT Song 330 He will listen

How could God remain blind not seeing our need
and remain indifferent after knowing our suffering?
Where else the baby will go when the mother spanks
Other than falling back on the lap of her mother to cry?

Compassion alone as His nature
He bears much with all our mistakes
Will he remain indifferent?
And reject us as sinners?

Is He a human being to remain like this?
Is He a fool to get irritated?
Once Compassion becomes the nature of God
Will He close his ear for our wailing?

He knows our (present) condition
He only waits for us to ask
Once He is ready to give even before we ask
His ears always remain opened to listen to our prayers.

In His own time He will give everything
He will give rain (grace) not allowing us to long for it
Will the One who planted the tree forgot about it?
Will He remain a witness for the pang (suffering) of His own creation?

3-9-2015 Mathigiri, 3.55 pm.

As the standing crops are almost dying, with much frustration I wrote the previous song (329).  Then yesterday a little bit of rain came. But it
was not enough.  However it helped the crops to survive a bit. Then I wrote this song that how God could remain indifferent after seeing the
need of the people.  Even if the mother gives a spank to the baby it will go back to her again and again as it does know any other
security.  Similarly however God allows trials and suffering a true bhakta will seek the lap of God to fall back and cry.  I like this illustration of the baby falling back to the lap of its mother, though she gives spanks when the child does some mischief, as it does not know any other protection other than the mother.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *