Secular Song 296 இடம் பார்த்து அறுக்கணும்
நாளுமே ஓடுது நாமுமே ஓடுறோம்
நல்லது கெட்டது நாளுமே பார்க்கிறோம்
ஏதேதோ கேள்விகள் நம்மையே கேட்கிறோம்
ஏதேனும் விடை தந்து நம்மையே ஏய்க்கிறோம்
புரியாமல் வாழ்வதே ஒருவிதம் நல்லது
புரிந்தாலே எல்லாமே சிக்கலாய் போகுது
சிக்கலைத் தீர்த்திட எத்தனம் செய்தாலோ
மொத்தமாய் எல்லாமே வீணாகிப் போகுது
எவ்விதம் வாழ்வுமே சீராகச் சென்றாலும்
இடையிடை சிறு சிக்கல்கள் தான் போல வந்திடும்
சிக்கலைப் பெரிதாக்கி மொத்தமும் இழக்காமல்
சிறுசிறு சிக்கலை ஏற்கத்தான் வேண்டும்
சிக்கலை நீக்க எத்தனம் செய்தாலோ
சிறு சிறு முடிசுகள் அதிகம் வந்திடும்
முடிச்சினை நீக்க முயற்சியும் செய்தாலோ
மொத்தமாய் நூலே இறுதியில் அறுந்திடும்
முடிச்சு சிறிதாக இருக்கும் போதிலே
சரியான இடம் பார்த்து நூலை அறுக்கணும்
சிறிது இழந்தாலும் முழுதும் இழக்காமல்
புத்தியாய் காரியம் செய்துமே பழகணும்
12-4-17, இரவு11.30 மத்திகிரி
Secular Song 296 Cut in the right place
Days are running and we too move along with it
And we witness many good and bad (in life)
We ask so many questions to ourselves
And we cheat ourselves by giving so many answers
It is better to live the life without understanding (it)
Once we understood everything become complicated
When we try to undo the knots
Finally, the entire thing get twisted
However, life goes smoothly
Automatically so many small knots will come
Not losing everything by making the knots more twisted
We need to accept small small knots
If we try to undo the small knots
Small small knots more will come
And when we try to remove (one) knot
Finally the entire thread gets cut in to small pieces
When the knot is very small
We should cut the thread in proper place
Even though we will lose a small part
Not losing the entire thread we should learn to manage (life)
12-4-17,Mathigiri, 11.30 pm.
Another song reflecting various complications in life particularly when we rub shoulders with others. Better incur small damages than spoiling the entire life for everyone. But how and when to do that is the art of living. As I do cross stitch work, I have faced so many such situations. In order to save the thread when I try to remove the small knot, I end up not only losing the thread but even the fabric also gets damaged. So, several times, not minding the loss of short threads without mercy I will find a proper place to cut it to save both the fabric and rest of the thread.
Secular Song 297 கசக்கவில்லை
இதுவும் நல்ல வாழ்க்கைதான்
இதனில் கண்டேன் முழுமைதான்
இதனை நானும் ஏற்கத்தான்
இல்லை என்னில் தயக்கம்தான்
ஏதோ நேரம் போகிறது
எப்படியோ நாள் கழிகிறது
இதனை நானும் அறிந்த பின்னே
என்னுள் அமைதி பிறக்கிறது
நம்மைக் கேட்டு சூரியனும்
நாளும் காலையில் உதிப்பதில்லை
காலம் நேரம் எல்லாம்
நம்மைக் கேட்டு நகர்வதில்லை
கூட வாழும் மனிதருடன்
கூடிக் கூடிக் வாழ்ந்தாலும்
போகும்போது நம்முடனே
புறப்பட்டு நிச்சயம் வருவதில்லை
கோடிக் கணக்கில் பிறக்கின்றார்
கோடிக் கணக்கில் மறைகின்றார்
காலம் என்னும் ஓட்டத்திலே
காணாமல் தான் போகின்றார்
நான் மட்டும் விதிவிலக்காய்
நிச்சயம் தனித்து இருப்பதில்லை
இந்த உண்மை அறிந்த பின்னே
இந்த வாழ்க்கை கசக்கவில்லை
12-4-17, மத்திகிரி, இரவு11.45
Secular Song 297 Not at all bitter
This indeed is a good life
I found fulfilment in it
There is no hesitation (on my part)
To accept it as it is
Somehow time is going
Along with the days are moving
Once I realized this
Peace comes within me
The sun is not rising
Only after asking us in the morning
Time and days are not moving
After consulting us
Those who live with us
Though live with us giving company
When will depart (after death)
Definitely won’t come with us
Millions are born and
Millions are dying
In the race of time
They all get disappeared
I won’t be here
As an exception among them
Once I understood this truth
This life is not at all bitter
12-4-17,Mathigiri, 11.45 pm.
Another reflection about the reality of a routine life. Not only time but each day is moving as if it is pre-programmed and I am not even getting consulted in any of these things. Though I have my own personal freedom to choose how I am going to spend my time, yet Time as an entity never waits and I am happy about it. Particularly when I become sick and I haveo control even over my time, I am happy that I am no more an exception among the millions. Such thoughts instead of making me feel depressed helps me to rejoice as several times many things are not under my control.
Secular Song 298 மீண்டும் பேசுறேன்
பேசாது பேசுறேன்
பேசினால் உளறுறேன்
பேச்சினால் பயனில்லை
என்பதை உணருறேன்
ஆயினும் பேசிதான்
அகப்பட்டுக் கொள்கிறேன்
அப்புறம் தர்க்கம்தான்
ஆயிரம் செய்கிறேன்
அதுகூட பயனின்றி
இறுதியில் போனபின்
மீண்டும் வாய்மூடி
மொளனம் காக்கிறேன்
ஆயினும் உள்ளத்தில்
அசைபோடும் எண்ணத்தில்
என்னவோ பேசி தான்
ஏய்கிறேன் என்னைநான்
இறுதியில் பேச்சினால்
பயனில்லை என்றாலும்
மனிதனாய்ப் பிறந்ததால்
மீண்டுமே பேசுறேன்
12-4-17, (13-4-17) மத்திகிரி, இரவு,12.15
Secular Song 298 Again talking
I speak by remaining silent
But when I speak, I babble
Then I realize that
There is no use in too much talk
Yet by talking (much)
I am get trapped
Then I began to argue
In thousands of way (to justify my talk)
When finally
That too becomes mere waste
Finally, I keep silent
By shutting my mouth
Yet in my heart
Constantly thinking many things
Continuously talking
I cheat myself (as if I remain silent)
Finally, though
There is no use in talking (much)
As I born as a human being
Again, I began to talk.
12-4-17, (13-4-17) Mathigiri, 12.15am
Though I prefer a life of recluse and not to talk much, yet I am very talkative. Several times I feel that I am talking too much without any use. Though I try to limit my talk, yet all my writings, including all my poems are one way another form of talking. Even when I keep quiet and not talk, yet in my mind I talk too much. Though I become tired of it and try to avoid it, yet I constantly fail in it. This song is another such vain talk about rebuking me for talking too much.
Secular Song 299 எழுதிப் பயனில்லை
எண்ணங்கள் ஆயிரம் வந்தாலும்
எழுதிட ஏனோ மனமில்லை
ஏனென்று எனக்கும் தெரியவில்லை
எப்படிச் சொல்வேன் புரியவில்லை
தேகம் ஒருபுறம் கலைப்புற்றது
தெம்பும் அத்துடன் குறைகிறது
சிந்திக்க மூளையும் மறுக்கிறது
இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது
ஏதோ தவறி பெற்றுவிட்டார்
எப்படியோ என்னை வளர்த்து விட்டார்
பிறகு போராட அனுப்பி வைத்தார்
புலம்பும்படி என்னை செய்துவிட்டார்
பிறரைக் குறை சொல்லிப் பயனில்லை
இதில் பெற்றவர்-உற்றவர் தவறில்லை
மற்றவர் எவரும் பொறுப்பில்லை
மனதிற்கும் இதிலே பங்கில்லை
பிறரைப் போல வாழாமல்
புதுமை செய்யும் எண்ணம் கொண்டு
தனித்தே என்வழி பயணித்தேன்
தொடர்பும் எவருடன் இல்லாமல்
எடுத்துப் பலரும் சொல்லிப்பார்த்தார்
எனக்கும் புரியா மொழியினிலே
எவ்வளவோ நானும் முயன்றாலும்
இதுவரை எனக்கும் புரியவில்லை
இறுதியில் உண்மை உணர்ந்தபோது
என்பின் எவரையும் காணவில்லை
எனவே எழுதிப் பயனில்லை
என்பதால் நானும் எழுதவில்லை
மத்திகிரி, இரவு, 11.05, 20-4-17
Secular Song 299 There is no use in writing
Though many thoughts are coming
I don’t have any desire to write them
I don’t know the reason for this
I don’t know how to communicate
I become tired in my body
My strength is also getting diminished
My brain (mind) refused to think
What else is there to share?
By mistake my parents begot me
Somehow, they brought me up
Then sent me (to the world) to struggle
And they left me to lament
There is no point in blaming others
There is no mistake on the part of parents or relatives
Others are not responsible for this
And my heart also has no share in it
Unwilling to live like others
In order to do something new
I walked alone in my way
Without having any communication with others
Many try to counsel me
In a language which I couldn’t understand
Though I too tried in many ways
Till I cannot understand them
Finally, when I realized the truth
I couldn’t find anyone with me
Therefore, there is no point of further sharing
And that is why I am not writing (anymore)
Mathigiri, 11.05, pm. 20-4-17
These days I have become very lazy. I don’t want to blame my ill health or my recently concluded 8 weeks (long?!) North trip. Because amidst my ailment with back pain and cough and cold, on 12th I manage to write more than 3 songs in a single day. So when one person asked whether I am still writing poems as he and his wife always like to read my poems, I began to think about it. Though inspirations came several times, due to laziness I deliberately ignored writing down a poem. I prefer to lay down even when I’m unable to sleep. In the past when I cannot sleep, after tossing on my bed, I will get up and do something—reading or writing. If nothing works, at least I used to do my cross stitch work. But now I prefer to lay down, unable to do anything due to sheer laziness. So, tonight when I was lying down unable to read or write, then I began to think various thoughts. Though inspiration compelled me to write, I resisted. But I said to myself, ‘ok. Let me write at least one more poem’. And I got up and wrote this song.
But I warn that this won’t be the last poem and more might come.
Secular Song 300 உறவின்றி வழியில்லை
என்னவோ என்னையும்
நினைக்கிறார் சிலபேர்
ஏனோ அக்கறை
கொள்கிறார் என்மேல்
என்நலம் கேட்டு
எழுதறார் சில வார்த்தை
என்னுடன் பேசி
கேட்கிறார் நலத்தை
மனித உறவில்
மட்டுமே இந்த
மேன்மை தன்னை
உணர முடியும்
மனிதராய் வாழ்கிறோம்
என்பதைக் காட்ட
மற்றவர் பற்றி
கேட்பதால் முடியும்
எவரும் எனக்கு
தேவையே இல்லை
என்று இதுவரை
வாழ்ந்தவர் இல்ல
உரசலால் சற்று
விரிசல் வந்தாலும்
உறவின்றி வாழ்ந்திட
மாற்றமும் இல்லை
மத்திகிரி,21-4-17, இரவு11.05
Secular Song 300 There is no other alternative
Somehow even someone is
Remember me?
They have concern
For me
They write to ask
Few words about my health
And they call me
To enquire about my health
Only in human
Relationship
We can experience
This nobleness
In order to show
That we are still human beings
Is possible by
Only asking about others
There is none
Who has lived?
By saying that
I don’t need others
Even if some crack comes
Because of friction
There is no other means to live
Expect through relationship
Mathigiri, 21-4-17,11.05 pm.
As I became very sick, I often received several whatsapp messages with much concern about my health. Even some people take time to call and enquire about my health. Overwhelmed by their love and concern I wrote this song celebrating human relationship—which is so beautiful in this life as humans. No doubt that we are social animals.
Leave a Reply