Secular Songs 316 to 320

Secular Song 316 புத்தி வரல

பட்டும் படாமலும் இருந்துவிடு

பார்த்தாலும் கண்களை மூடிவிடு

சொன்னாலும் காதிலே வாங்கிக்காதே

வீணாக வம்பிலே மாட்டிக்காதே

ஊருக்கு உபதேசம் செய்ய எண்ணி

வீணாக வார்த்தையைக் கொட்டிடாதே

சொல்லிடும் எல்லாமே கேட்டிடுவார்

சொன்னதில் குற்றமும் கண்டிடுவார்

ஆலோசனை கேட்க வந்தவரே

அறிவுரை உனக்கும் சொல்லிடுவார்

“தேவையா இதுவுமே” என்று எண்ணி

பின்னாலே வீணாகப் புலம்பிடுவாய்

வாயை மூடி நீயும் இருந்துவிட்டு

வம்புக்கு போகாமல் காத்துவிடு

பட்டதால் நானிதைச் சொல்லுகிறேன்

பரிதாபம் உன் மீது கொண்டுதானே

ஆயினும் இதை கூட உனக்கு சொல்லி

அறியாமல் தவறு நான் செய்துவிட்டேன்

பட்டாலும் புத்தியோ வரவுமில்லை

இந்தப் பாட்டுக்கு மட்டும் குறைச்சலில்லை

5-6-2017, பெங்களுரு, மாலை, 6.00

Secular Song 316 Not yet learnt

Remain bit indifferent

And even if you see, try to close your eyes

Even if others tell, don’t listen

And don’t get trapped unnecessarily

Don’t pour down unnecessary words

In the name of advising others

They will listen to what all you say

But find fault in it at the end

Those who sought your counsel

Will began to give advice to you

Later you will lament thinking that

‘Is it necessary for me?’

Remain quiet keeping your mouth shut

And don’t go for unnecessary contentions

As I am experienced, I am telling this to you

Having concern for you

But even after learning, by giving this advice

I have done the same mistake again

I have never learnt even after learning several times

But there is no lack for songs like this.

5-6-2017, Bengaluru, 6.00 pm.

Don’t give advice unless it is sought. But better don’t even give advice even if it is sought.  The best way to escape for a wise person is to live like water on the lotus leaves.  He knows that no one is going to adhere to his advice.  On the other hand, sometimes not only others will find fault in it, but begin to give advice to him. Anyhow at the end I thought that by writing this poem I also made the same mistake which I recommend others not to do. 

Secular Song 317 பிரித்தாளும் கொள்கை

கொள்கை கொள்கை எனக் கூறிக்கொண்டு

கூட்டத்தை அதற்கும் சேர்த்துக் கொண்டு

தான்கொண்ட கொள்கையை பற்றிக்கொண்டு

தர்க்கங்கள் செய்கிறார் வெறியும் கொண்டு

கொள்கையில் உள்ள குறைகளையே

கூறிட மற்றவர் முயலும் போது

வீணாக அவர் மீது கோபம் கொண்டு

வேண்டாத வம்புக்கும் போகின்றார்

கேள்விகள் கேட்பதில் தப்பும் என்ன

கேட்பதில் நியாயங்கள் உள்ள போது

பதில் கூற சரியாக தெரியாவிட்டால்

வாய்மூடி மௌனமாய் இருந்திடணும்

பணிவாக அவரிடம் கேட்க வேண்டும்

பாதத்தில் அமர்ந்துமே கற்ற வேண்டும்

பணிவுடன் அதனையும் ஏற்ற வேண்டும்

பண்பையும் அங்கேதான் காட்ட வேண்டும்

கொள்கைக்காக இங்கு மாந்தர் இல்லை

கும்பலைக் கூட்டியே பயனுமில்லை

கொள்கையைச் சொல்லிக் கூறு போட்டு

வாழ்வதில் எவ்வித இல்லாபம் இல்லை

ஆபத்து அவசரம் வரும் போது

அவர் கொண்ட கொள்கையும் என்னவாகும்

கூறுபோட்டு நாம் ஒதுக்கினோரை

கூப்பிடும் நேரம் வரக்கூடும்

இணைந்து வாழ்வதில் இலாபம் உண்டு

இணைந்தால்தான் மனிதர்க்குப் பயனும்முண்டு

தேவையற்ற வீண் கொள்கைக்காக

பிரித்தாலே வீணாகும் வாழ்க்கை இங்கு

பெங்களுரு, 6-6-2017, மாலை 6.30

Secular Song 317 Divide and rule

Proclaiming one’s own ideology loudly

And gathering crowd around it

Clinging to that ideology

They argue with fanaticism

When others try to point out

The shortcomings in that ideology

Becoming upset with them with madness

They confront them with much anger

What is wrong in questioning?

When there is reasonable space for it

If they don’t know how to respond

They should keep their mouth shut

They (the fanatic) should ask them with much humility

Should learn by sitting at their feet

And should accept their views humbly

There alone they should demonstrate their character

People are not here for any ideology

And there is no use in gathering crowd

There is no profit in living

By dividing people in the name of ideology

When any emergency comes

What will happen to their ideology?

There might come a time to call upon the same people

Whom we rejected by dividing them in the name of ideology

There is goodness only living together

Only by living together, human can find usefulness in their life

The life will get spoiled

If we divide people in the name of ideology

Bengaluru, 6-6-2017, 6.30 pm.

On one side the religious fundamentalists raise several issues based on food, faith, ritual etc. On the other hand the so called liberals pose counter arguments just for the sake of opposing them.  Both sides have valid points. But in the name of ideology, when they divide people, nobody is going to be benefited.  When others ask genuine questions, instead of listening and trying to give reasonable answers, if they begin to attack each other, then all kinds of modesty is gone in the wind.  Those who uphold and promote any ideology should never use any kind of violence and need humility to learn from the opposite camp. The same is applied to the so called liberals, who in another way remain fanatic in their so called liberalism.

Secular Song 318 மனசுக்குள்ளே வச்சுக்க

மனசுக்குள்ளே சிலத நீ வச்சுக்கணும்

மௌனமா அதை நீ பேசிக்கணும்

ஊரறிய சொல்வதால் பயனில்லை

உளறிட்டு மாத்திக்க வழியில்லை

நொடிக்கு நொடி மாறிமாறி இருந்து கிட்டு

நினச்சு நினச்சு மாத்தி மாத்தி பேசிக்கிட்டு

மனசு போன படியெல்லாம் போயிகிட்டு

வாழ்றது உனக்கும் கூட வழக்கமாச்சு

சொந்தமா யோசிச்சு பார்க்கமாட்டே

பிறர் சொலவத நீயும் ஏற்கமாட்டே

தீர்மானம் செய்தாலும் நிலைக்கமாட்டே

திட்டமாக ஒரு வழியில் போகமாட்டே

எப்படியோ காலத்த ஒட்டிப்பிட்டே

என்னவோ நீ தப்பிச்சு வந்துபிட்டே

மீதியுள்ள காலத்தையும் ஓட்டிடவே

நிச்சயமா மனச கொஞ்சம் மாத்திக்கவே

உடம்பு கூட இதுவரைக்கும் ஒத்துப் போச்சு

அதனாலே உன் விருப்பம் போல ஆடியாச்சு

இதுக்கு மேல உடம்பு கூட ஏத்துக்காது

மாத்தி மாத்தி பேச இடம் இனி கிடையாது

அதனாலே ஒரு தீர்மானம் செய்துவிட்டு

அதையும் கூட மனசுக்குள்ள வைத்துக்கிட்டு

முடிந்த வரைக்கும் அதன்படியே வாழ்பாரு

முடியாட்ட மத்தவங்க பேச்சைக் கேளு

10-6-17, மத்திகிரி, இரவு 11.00

Secular Song 318 Keep it within you

You need to keep certain things within you

and you should analyse it silently within you

there is no point in proclaiming it to the whole world

Once you have babbled, then there is no means to change it.

It becomes your habit and live

by changing minute by minute

and changing your views often

and living as you like.

You won’t think independently

and won’t accept others advice also

you won’t withstand in your own decision

and won’t go in one path with determination

Somehow you manage to spend your time(life) so far

and manage to escape and come so far

to spend rest of your life

try to change your mind a bit (to remain firm)

Somehow your body so far cooperated with you

Therefore you had your own way (of life)

No more your body will accept your dictates

there is no place to change your strategy often

Therefore making a firm decision

and keeping it within you

try to live accordingly as much as possible

if not possible then listen to others advice

10-6-17, Mathigiri, 11.00 pm.

As social beings we need to share our thoughts and burdens with others. Otherwise there is no point in living as a human being. At the same time there is no point in sharing everything with others.  There are several thoughts, ideas, principles, decisions that we make need not be shared with all. Particularly when we make some drastic decisions in our relationship with others, it is better to keep within us and implement it gradually, than proclaiming it and then failing.

Secular Song 319 உறவின் மேன்மை

இது ஒன்றும் புதிதல்ல

இயற்கைக்குப் புறம்பல்ல

இத்தனைக் காலமும்

செய்ததைத் தானே

இன்றைக்கும் செய்கின்றன

விலங்கினம் நாளும்

கூடுகட்டி முட்டையிட்டு

குஞ்சுகளைக் காத்தாலும்

இறகு முளைத்த பின்னே

கூட்டை கலைத்து விடும்

குஞ்சுகளைப் பறக்கவிட்டு

குருவியும் பறந்துவிடும்

குட்டிப் போட்டு பால் கொடுத்து

கூடவைத்து வளர்த்தாலும்

பால் நின்று போன பின்னே

குட்டிகளை துரத்தி விடும்

புதிதாய்க் குட்டி போட

துணையைத் தேடும் நாயும்

இயற்கையின் இந்த

நியதிக்குப் புறம்பாக

இருப்பது மானிட

இனம் ஒன்று மட்டும்

இதற்கென்ன காரணம்

அறியனும் நாமும்

வாழையடி வாழையாக

சந்ததி வளர்ந்திடும்

குலை தள்ளும் முன்னாக

அடிமரம் பிறந்திடும்

தாய் மரம் கூடவே

தங்கியே வளர்ந்திடும்

குலை போட்ட பின்னாலே

மரம் பட்டுப் போனாலும்

அடி மரம் காயாமல்

கன்றாக பிறந்திடும்

தனினம் அழியாமல்

தொடர்ந்து காத்திடும்

விலங்கு போல் இல்லாமல்

மனிதனின் உயர்வு

உறவால் விளங்கும்

இது மாபெரும் உண்மை

இதுவே மனிதவாழ்வின்

உன்னத மேன்மை

மத்திகிரி, 11-6-17, இரவு 11.00௦௦

Secular Song 319 Nobleness of relationship

This is not new

And not against the nature

What they have done

All these days

The animals are doing

Even now

Though making a nest

And protect the chicks

Once they grow

The birds will leave the nest

Making the chicks to fly

They too will fly away

Though giving birth

And feed the puppies

keeping with them

Once the milk is stopped

Dogs will chase the puppies

And will seek new companion

To beget new ones

Only the humans

Are against

To this rule

Of the nature

And we should know

The reason for it

Like the banana plantain

The generation will grow

Before it gives the fruit

New baby trees will come

And the mother tree will

Take care of them

After giving the fruit

Though the main tree is goneSe

Not withering away completely

It will born again as the baby tree

And it will protect its generation

Not becoming extinct

Unlike the animals

The nobleness of

Human relationship

Will be understood

Only through relationship

This is the greatness of

Human life

Mathigiri, 11-6-17, 11.00 pm.

Taking responsibility is a remarkable identity and human value.  Of course animals too take responsibility for a limited period to bring up their babies.  But we humans alone carry that responsibility generation after generation.  As I was thinking about it, I wrote this song. 

Secular Song 320 கேட்பதை விட்டேன்

என்னையே சில கேள்வி

நானுமே கேட்கிறேன்

அவற்றுக்கு விடை கூட

என்னுள்ளே தேடுறேன்

பதிலாக நானும்

எதைச்சொன்ன போதும்

என் மனம் மட்டும்

ஏற்கலைப் பார்க்கிறேன்

“புதிராக இங்கு

ஏதுமே இல்லை

புரியாமல் ஒன்றும்

வாழ்க்கையில் இல்லை

இருந்தாலும் எதற்காக

கேள்வியும் கேட்கிறாய்”

என்றுமே என் மனம்

எதிர் கேள்வி கேட்குது

“வேண்டாத கற்பனை

பலவுமே செய்கிறாய்

வீணான வாதங்கள்

எத்தனைப் புரிகிறாய்

எதை எண்ணி வீணாகக்

கலக்கமும் கொள்கிறாய்

எவர்மீதோ வீணாக

சந்தேகப் படுகிறாய்

எதிர்மறை எண்ணங்கள்

எப்போதும் உனையாள

எதிர்பார்ப்பு ஆயிரம்

வீணாக நீ கொள்ள

எத்தனை செய்தாலும்

குற்றங்கள் அதில் கண்டு

கோபமும் வீணிலே

சட்டெனக் கொள்கிறாய்”

என்றுமே என் மனம்

எடுத்து உரைத்த பின்

ஏதுமே பேசாமல்

மௌனத்தில் ஆழ்ந்தேன்

கேள்வியும் பதிலும்

எனக்குள்ளே இருப்பதால்

கேள்விகள் கேட்பதை

தற்போது நான் விட்டேன்

மத்திகிரி, 18-6-2017 மாலை, 5.15

Secular Song 320 Stopped asking

I ask several questions

To myself

And searched answers for them

Within me

Whatever answer

I give to them

My heart is not accepting it

I know this also

Then my heart

Questions me in turn like this:

“Nothing remains

As a riddle here.

There is nothing

Which is not clear in life?

Why then even

Asking questions?

You imagine so many

Unnecessary things (about life)

And how many unnecessary

Arguments you are doing

Why get troubled

Thinking all of them

And you doubt

About someone else

As negative thoughts

Over ruling you

And having many

Expectations unnecessarily,

How much others do to you

Always finding fault

You become upset

Very quickly”.

As my heart

Made it clear to me

I become silent

Without having further words

As both the questions and

Answers are within me

I gave up even

Asking further questions

Mathigiri, 18-6-20175.15 pm.       

As I went for my regular evening walking, as per my habit I was thinking so many things that are related to my life. Then I realized that most of the time our thoughts are centered around our own personal issues, then with others (interpersonal relationship), some time we think about some other incidents that happen in our area or country (or world) and finally some thoughts about God and spirituality.  But in all these areas I often ask so many questions for which, most of the time I alone have answer or I alone become the answer. Several times my questions are often come based on my own imagination than actual facts. So when I was thinking about this I wrote this song and recorded in my mobile.  Though I said that I stopped asking further question, it is related only to this song but it is not possible for me considering my nature.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *