Secular Song 321 முடிந்தது கனவு
கற்பனை உலகில் வாழ்ந்திந்திருந்தேன்
கனவுகள் பலவும் கண்டிருந்தேன்
சொப்பனம் கண்டு விழித்தவன் போல்
கண்டதை யெல்லாம் மறந்துவிட்டேன்
மனக் கோட்டைகள் பல கட்டி
மாயை கொண்டு விரிவாக்கி
இச்சையை அதற்கு காவல்வைத்து
இன்னமும் சேர்க்க ஆவல் கொண்டேன்
எட்டாக் கனி என தெரிந்திருந்தும்
ஏனோ அதன் மேல் ஆசை வைத்தேன்
எத்தனை முயன்றும் கிட்டவில்லை
ஆயினும் ஆசையோ விடவில்லை
தேவை இல்லா ஒன்றுக்காய்
தேடி அலைந்தேன் நாள் கணக்காய்
இறுதியில் கையில் கிடைத்தபோது
ஏனோ இழந்தேன் ஒரு நொடியில்
உள்ளதை ஏனோ ஏற்றுக்கொள்ள
ஒருபோதும் மனம் முன்வரலை
உதவா தென்று தெரிந்திருந்தும்
கனவை நானும் விடவில்லை
இதற்கும் விடிவு எங்கிருக்கு
எனபதும் எனக்குத் தெரியவில்லை
தூக்கத்தை விட்டு எழும்போது, வீண்
கனவுக்கு அங்கே இடமில்லை
விழிக்கும் நேரம் வந்தாச்சு
ஏங்கிய விடிவும் கிடைச்சாச்சு
தேடிய உண்மை விளங்கிடுச்சி
இப்போ கனவும் முடிஞ்சு போச்சு
மத்திகிரி, 18-6-2017, இரவு 11.00
Secular Song 321 Dream came to an end
I was living in my world of dreams
I had so many visions about life
But like the one who saw dreams
I forgot all that I saw in my dreams
Constructing so many castle in mind
Expanding it with maya
Keeping desire as the guard for it
I longed to accumulate more and more
Even knowing that it is beyond my reach
Still, I longed for them
However I tried, I cannot get them
But the desire has not gone
I wandered aimlessly
For unnecessary things
When finally I got it on my hand
Somehow I lost it within few seconds
But my mind is not ready
To accept this reality
Knowing well that the dreams won’t be useful
Still I didn’t stop seeing dreams
Where is the release for this
I don’t know that for sure
But once I wake up from my sleep
There is no place for dreams
Now the time has come to wake up
I found the release for which I was longing
Now I understood the truth clearly
And the dream has come to an end
Mathirigi, 18-6-2017,11.00 p.m.
I often live in my own imaginary (foolish) world. In the past and also in the present I imagine so many things about my life. But nothing materializes as I imagined. It is like seeing a dream which even I cannot remember after I get up. Though I know that I can never live in my own imaginary world, yet I cannot give it up imagining it. Maybe the hope in life is sustained because of these dreams.
Secular Song 322 நன்றி இல்லாதவன்
நன்றி கெட்ட மனிதருக்கு
நாமென்ன சொல்ல இனியிருக்கு
தனது தேவையை யோசிப்பார்
தனக்கென அவரும் வாழ்ந்திருப்பார்
எத்தனை நமைகள் பெற்றாலும்
ஏனோ அனைத்தையும் மறந்திருப்பார்
தாம் செய்த சிறிய உதவிகளை
தம்பட்டம் அடித்துக் கூறிடுவார்
நன்றி என்ற சொல்லுக்கு
நாளும் அவர் தரும் விளக்கங்கள்
எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வரும்
இன்னும் அவர்மேல் பரிவு வரும்
(எரிச்சல் அவர்மேல் இன்னும் வரும்)
நானும் அவரில் ஒருவன்தான்
நன்றியை மறந்த சிறுவன்தான்
எத்தனை நன்மைகள் பெற்றபோதும்
ஏனோ அனைத்தையும் மறந்துவிட்டேன்
சுயநலம் தன்னை மனதில் வைத்து
செய்வேன் சிறு சிறு உதவிகளை
பிறகு பெரிதாய் எதிர்ப்பார்ப்பேன்
பெற்றபின் உடனே மறந்திடுவேன்
என் மனம் இடித்துக் கூறினாலும்
அதற்கொரு பதிலும் வைத்திருப்பேன்
பிறர் முன் நன்றாய் நடித்துவிட்டு
பேச்சால் அவரை வென்றிடுவேன்
சுயபரிசோதனை இது இல்லை
சொல்லவும் தயக்கம் எனக்கில்லை
என்போல் பலர் இங்கிருக்க
எனக்கும் வெட்கம் வரவில்லை
மத்திகிரி, 19-6-2017, மாலை 6.30
Secular Song 322 Remains thankless
What is there for us to say?
To those who remain thankless
They will only think about their own need
And always live only for it
How much help they might have received
Somehow they will forget all of them
But they will blow horn and proclaim
About the small help that they have done
When we listen to the
Definition that they give to the word ‘gratitude’
We will have more pity on them
(We will become more upset with them)
And we will laugh at them
I too one among them
I am the meanest one who remain thankless
How much help that I received from others
Somehow I forgot all of them
Keeping my own interest
I will do small favours to others
Then I will expect bigger things from them
And once I received them, I will forget
Even when my mind rebukes me
I will have an answer for that too
Acting before others very tactfully
I will overcome them with my oratory
This is not introspection
And I have no hesitation to share this
When so many people live like me
I never feel ashamed about it
Mathigiri, 19-6-2017, 6.30 pm.
Gratitude is one of the best and highest human virtues. As Valluvar says* there is no chance for redemption or new life for the one who never showed gratitude in his life. But often I justify it by consoling myself that I am not the only person with such an attitude.
*எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு—குறள் 110
–Who every good have killed, may yet destruction flee. Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free’—Kural 110
Explanation: He who has killed every virtue may yet escape, there is no escape for him who has killed a benefit.
Secular Song 323 என்போக்கில் விடணும்
நானொரு பைத்தியம்
எனக்கில்லை வைத்தியம்
என்னவோ உளறுறேன்
இது என் வழக்கம்
யோசிச்சு யோசிச்சு
தேஞ்சுமே போச்சு
இருக்கிற மூளையும்
மழுங்கியே போச்சு
இதற்கொரு வைத்தியம்
தேடி அலைந்தேன்
எங்கு கிடைக்குமென
ஏங்கித் திரிந்தேன்
பார்த்த வைத்தியர்
எவரும் சரியில்லை
பாதிபேர் பைத்தியம்
பாவம் அவர் நிலை
சித்தம் சரியாய்
இருந்தவர் கூட
மிச்சத்தை இழந்தார்
வைத்தியம் பார்த்து
என்னால் எவருக்கும்
தீங்கு நேராது
காப்பதற் குள்ளது
வழியும் ஒன்று
ஏதோ உளறட்டும்
என்று இறங்கி
என் போக்கில் விடுவது
ஒன்றே நன்று
மத்திகிரி, 20-6-2017, மாலை 6.15
Secular Song 323 Leave me alone
I am a mad person
There is no treatment for me
I babble something
This become my habit
By thinking again and again
The brain is diminished
What is left?
Also become useless
I searched everywhere
A treatment for this
And I longed
To know where I could get one
All the doctors whom I consulted
Are not good
Half of them
Are already mad persons
And those
Who had a sober mind?
Become mad
After treating me
Therefore
There is a way
Not get hurt
By me
‘Let him babble’
By saying this
Leaving me alone
Is the best option
Mathigiri, 20-6-2017, 6.15 pm.
As I went for my evening walk. Again I was thinking about the way I write my poems and also my comments to them. Several times I found my poems are irrelevant and mere verbal expressions of emotion have any substance in them. At the same time I am happy that I never write to harm anyone and others have the option to ignore them. So the best approach is to better ignore me by allowing me to babble something than taking my writings or poems seriously.
Secular Song 324 மாறும் மனசு
மாறி மாறி தாவி விடும்
மனசும் பலவழி அலைந்திடும்
ஒன்றை நினைக்கும் போதினிலே
மற்றொரு நினைப்பு வந்துவிடும்
நிலையில்லாத மனதின் கூட
நீயும் வாழ பழகிக்கணும்
அதற்கு மாற்றமும் வேறில்லை
அதனை வெல்லவும் வழியில்லை
புத்தியை இதற்கு பயன்படுத்தி
புதிய வழியை யோசித்தாலும்
புத்தியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு
புதிதாய் ஆட்டம் பல போடும்
ஆன்மாவின் உதவியை நீ நாட
அதுவும் ஓடும் வெகுதூரம்
விட்டால் போதும் எனக்கூறி
எட்டா தூரம் சென்று விடும்
இறுதியில் இறைவனை நாடினாலோ
எங்கோ அவனும் மறைந்திருப்பான்
இருக்கும் இடத்தைக் காட்டாமல்
இது உன்பாடுஎன சொல்லிடுவான்
இதுதான் இன்றைக்கு உன் நிலைமை
இதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை
இதற்கு மேலே யோசிக்க
இனிமேல் உனக்கு வழியில்லை
மத்திகிரி, 21-6-2017, மாலை, 6.30
Secular Song 324 Unstable mind
Mind will limp often
It will wander in many ways
When you think one thing
Another will follow it
You need to train yourself
To live with this unstable mind
There is no alternative to it
There is no means to overcome it
Even if you use your buddhi
And think new means (to control it)
Taking the buddhi to its side
It will give more trouble to you
Even if you sought the help of your soul
That too will run far away
It will be gone to a far off place
Saying, ‘leave me alone’
Finally if you sought God’s help
He too will remain hidden somewhere
Not showing where he is, he will tell
‘That is your funeral’.
This is the reality today
There is no wrong in accepting this
There is no more means
For you to think alternative ways.
Mathigiri, 21-6-2017, 6.30 pm.
I often noted that my mind never remains stable even on one thought for a few seconds. Sometimes while I was thinking on one subject another will prop up behind. Sometimes I have experienced thinking about two or three subjects simultaneously. Though I attempted various means to discipline and control, I failed in all of them. As I was reflecting on this, I wrote this song and recorded it on my mobile.
Secular Song 325 நேரம் பாழாச்சு
வீணாக நேரத்தை கழிக்காதே
வேண்டாத கவிதையும் எழுதாதே
எனக்காக எழுதறேன் எனச்சொல்லி
எவரையும் பைத்தியம் ஆக்காதே
மூளய கசக்கிப் பிழிஞ்சுக்கிற
முட்டாள் தனமா யோசிக்கிற
எதுகை மோனைய இணைத்து வைக்க
என்னவோ வார்த்தைய சேர்த்துக்கிற
தனிப்பிறவி என எண்ணிக்கிட்டு
தகுதிக்கு மிஞ்சி நினச்சிக்கிட்டு
சரித்திரம் படைக்க நினைக்காதே
சக்திக்கு மிஞ்சி செய்யாதே
நேரத்தைப் போக்க வழியில்லையா
நல்லதா யோசிக்க தெரியலையா
பிறரை பார்த்து புரிஞ்சுக்கணும்
புத்தியா பிழைக்கத் தெரிஞ்சுக்கணும்
இதுவரை எழுதிய கவி மூலம்
என்ன பயனை நீ கண்டாய்
பலமணி நேரம் பாழாச்சு
பக்கங்கள் எத்தனை வீணாச்சு
இதையும் எதற்கு எழுதராய் நீ
எத்தனை சொல்லியும் திருந்தலைநீ
என்னவோ செய்துகொள் உன்பாடு
இப்போதைக்கு என்னை விடு
மத்திகிரி, 23-6-2017,, இரவு 10.30
Secular Song 325Time get wasted
Don’t waste your time
Don’t write unnecessary poems
Saying that your are writing for your need
Don’t make others a mad person
You are straining your buddhi
And think foolishly
Just to join the first and last words
You merely add mere words
Thinking that you are a special person
And estimating more than what you are
Don’t try to create history
And don’t go beyond your limit
Don’t you know how to spend time?
Cannot you think properly
You should learn by observing others
And know how to live wisely
What you have achieved so far
By all the poems that you have written
Much precious time alone get wasted
And many pages also get spoiled
Now why even you are writing this too
You never repent how much advice I give
Do whatever you want that is your problem
Now leave me alone and let me go
Mathigiri, 23-6-2017,10.30
After doing my regular reading, I saw that still there was 20 minutes left to go and prepare Tiffin for my mother. Then I opened my computer to type some notes from the book. That time I said to myself ‘don’t waste any time’. Then as the first word began to inspire I wrote it down, but not paying much attention I continued to type my notes. In the night when I recalled that line again, to tease me for writing poems I wrote this song rebuking me.###
Leave a Reply