Secular Song 356 சுகமான சோகம்
நாம் படும் வேதனை
பிறருக்குத் தெரியாது
நாமதைச் சொன்னாலும்
அவருக்கு புரியாது
எவர் மீதும் குறை சொல்லி
பயனேதும் கிடையாது
எல்லோருக்கும் பொதுவான
விதியாகிப் போனதிது
உடலாலும் மனதாலும்
பலர் படும் வேதனை
உணர்த்திட வழியின்றி
கடத்துறார் வாழ்வினை
பிறர் வந்து உதவிகள்
செய்தாலும் கூட
முற்றாக நீங்காமல்
இருப்பதே வேதனை
சோகம் ஒரு விதம்
வாழ்விலே நிரந்தரம்
சோகத்தை சுகமாக
மாற்றிட முயலணும்
சோகத்தை சுகமாக
மாற்றிய பின்னே
சோகமே சுகமாகி
மாறியும் போகும்
சோகத்தில் கூட
சுகமொன்று இருக்கு
அதனைச் சொல்லிட
வார்த்தைகள் எதற்கு
அந்த சுகத்தை
மனதார சுவைக்க
அதன்பின் மறையும்
சோகமும் விலக
மத்திகிரி, 17-8-2017 இரவு 10.30
Secular Song 356 A pleasant pain
Others cannot understand
Our pain
Even if try to share
They cannot understand it
There is no point of
Blaming anyone for this
This become a
Common nature for all
Many suffer
Through body and mind
And they spend their time
Unable to communicate
Even if others come
And try to help
Their pain never goes permanently
And this is a painful truth
Somehow sorrow
Is it part of life?
And we should try
To convert this sorrow as a pleasure
Once we converted
The pain as a pleasant one
Then the pain itself
Will become a pleasure
There is a joy
Even in pain
And what is the
Need to share it
Once we learnt to
Enjoy that pain
Then that pain too
Will disappear in one way
Mathigiri, 17-8-2017 10.30 pm.
I am not sure whether this song is kind of sadistic in nature. But several times I found that when I began to enjoy the small troubles and difficulties that I face in my life, instead of it becoming a burden I managed to handle it easily. Already in the past I also shared how several times I began to enjoy the pain in my body not allowing it to bother me. When I reflect about it I can trace back that I had that tendency even from my boyhood. When I am compelled to do more work or face difficult tasks, instead of murmuring or running away from the responsibility, accepting that challenge I do it enjoying it. So far me there is a kind of joy or pleasure even in all kinds of suffering and only we need to know this secret to handle it a bit easily.
Secular Song 357 மல்லு கட்டாதே
ஒட்டாத உறவோடு
கட்டாதே மல்லு
ஒட்டவே மறுத்தால்
மறுத்து நீ தள்ளு
கிட்ட உள்ளவரை
வெட்டி விடாதே
சேர மறுப்போரை
துரத்திச் செல்லாதே
உள்ளாக ஆர்வம்
இல்லாது போனால்
உறவும் நிலைக்காது
அறிந்திடு முன்னால்
இருபுறம் தேவையும்
இல்லாது போனால்
பயனும் இருக்காது
ஒருபுறம் முயன்றால்
உறவின் உயர்வை
உணராத போது
சொன்னாலும் அவருக்கு
மண்டையில் ஏறாது
நாமாக தேடி
போகின்ற போது
நாம் கொண்ட அன்பு
இருக்காது அவருக்கு
வரும்போது வரவேற்று
அன்பு காட்டு
வந்தபின் முரண்டால்
பொறுமையைக் காட்டு
இருக்கின்ற வரையில்
உறவைக் கொண்டாடு
இதை ஏற்க மறுத்தால்
பிறகு நீ திண்டாடு
மத்திகிரி, 19-08-2017, இரவு 10.30
Secular Song 357 Don’t confront
Don’t confront
Unnecessarily
And if they refuse to come close
You too reject them
Don’t severe your relationship
With those who are close to you
And if they don’t want to come close
Don’t run afar them
Unless one has
True desire
Relationship cannot be sustained
Realize this first
Unless both sides
Recognize the need (for each other)
Onside effort
Won’t be useful
When they cannot
Understand the greatness of relationship
How much we teach
It won’t go in their head
When we go seeking
Voluntarily after them
They won’t have the
Same kind of love that we have
So when they come
Welcome and show love
And after coming if they began to confront
Then be patient
When you are alive
Celebrate relationship
If you refuse to accept this
Then you face your own funeral
Mathigiri, 19-08-2017, 10.30 pm.
Though we can never choose our relatives, yet unless, like friendship, it is properly nurtured, the cordial relationship among the relatives cannot be sustained. Of course, we can never break our relationship with them forever, though both sides might keep away from each other. But making always one sided efforts to maintain that relationship will not only make us feel tired but it might even irritate others, as they are not interested in it. As I was reflecting on this topic, I wrote this song.
Secular Song 358 தேவையற்ற கேள்விகள்
கேள்வியும் பதிலும்
தேவையே இல்லை
கேள்விகள் கேட்பதால்
பயனேதும் இல்லை
அறிந்த விடையை
மீண்டும் அறியவே
கேள்வியாய் மாற்றி
கேட்பதே வழக்கம்
புதிய பதிலேதும்
புவியில் உண்டோ
புரியாது நடித்தால்
பதிலேதும் உண்டோ
ஆயினும் கேள்விகள்
குறையவும் இல்லை
விடையும் அவைக்கு
கிடைக்கவும் இல்லை
இல்லாத விடைகள்
கிடைக்காத வரையில்
கேள்விகள் கேட்பது
நிற்பதும் இல்லை
மத்திகிரி, 23-08-2017, 5.50 am.
Secular Song 358 Unnecessary questions
There is no need for
Questions and answers
There is no use
In asking questions
In order to know
What already we knew
We convert it
And ask again as a question
Is there any new answer
On this earth
And if one pretends as if not knowing it
Is there any answer for him?
Yet the questions are
Not minimised
And answers are
Not received
As long as the
Non existing answers are received
Asking questions
Will never stop
Mathigiri, 23-08-2017, 5.50 am.
This is nothing but rhetoric by me. I often write songs like this. This is my favorite topic, Question and Answer, and never become tired of approaching it again and again with the same thought with new words.
359 பழகிடும் துயரம்
எப்படி சுமப்பார்
இத்தனை பாரம்
எதுவரை சுமப்பார்
மனதுமே ஓயும்
அடுக்கடுக்காக
சோதனை வந்தால்
சுமப்பது என்பது
எவருக்கும் கடினம்
பட்ட காலிலே
படுமென்ற பழமொழி
பலரது வாழ்வில்
உண்மையாய்ப் போகும்
பலமுனைத் துயரம்
தாக்கி அடிக்க
அவர்படும் துன்பம்
மிகமிகக் கடினம்
ஆறுதல் கூற
வார்த்தையும் இல்லை
அவற்றாலே எவ்விதப்
பயனுமே இல்லை
துயரம் ஒருவிதம்
பழகிய பின்பு
ஆறுதல் தேறுதல்
அவசியம் இல்லை
எப்படியோ அவர்
மீண்டு எழுவார்
இதயத்தைக் கல்லாக்கி
வாழ்ந்து முடிப்பார்
துயரமே வாழ்வெனப்
பழகிய பின்பு
துயரம் பற்றிய
எண்ணம் மறப்பார்
மத்திகிரி, 25-8-2017, இரவு 10.30
Secular 359Suffering will become habitual
How they can
Carry this much burden
How long they can carry
And the heart too will become tired
If the trials come
One after the other
It is very difficult
To face them
Those who were hit
Will be hit repeatedly
This proverb comes true
In many people’s life
As the suffering
Attacking them from several ends
It is too much for them
To carry that pain
There are no words
To give comforts to them
And there is no use
Even by them
Once the suffering
Becomes habitual
There is no need
Even for any comfort
Somehow they
Will get revived
And hardening the heart
Somehow they will live
Once suffering becomes
Part of life
They will even forget
Any thought about suffering
Mathigiri, 25-8-2017, 10.30 pm.
When I heard about the sad news in one of my school days’ friend’s family, I felt very sorry for him. Apart from so many health issues in his life, one by one new kinds of troubles are coming in his family. Sometimes in life the troubles come not alone and those who already become burdened with many when faces new one feels numbed and become used with these kinds of trouble. As I was thinking about this I wrote this song. There is an old Tamil song which depicts this kind of life where trials never come alone:
When the cow was about to give birth then rain came. That time the wall in the house fell down and the domestic helper become sick. The labor working the field just died, then when one runs taking the seeds before the land become dry after rain on the way those who gave loan cornered him demanding it back; that time another person brought the news of the death of a close relative and the same time another unavoidable guest came to visit, that time snake bites another person in the house, the tax collectors came seeking the pending tax that time the guru came seeking honorarium from him. –Ramachandra Kavirayar, song 17, in K. Subramaniyappillai, Tanippadal ed. Chennai, Nallarappadippaganm, vol. 2, p. 472.
ஆவீன மழைபொழிய வில்லம் வீழ
அகத்தடியாள் மெய்ந்நோவ வடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவ னெதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே.- இராமச்சந்திர கவிராயர், song 17, in தனிப்பாடல் திரட்டு,உரை கா. சுப்பிரமணிய பிள்ளை, சென்னை, நல்லறப் பதிப்பகம், 2007, vol. 2. ப. 472
உரை: பசுவானது கன்றுக் குட்டியைப் பெறவும் (அதற்குப் பக்குவம் பார்க்கப் போகும் சமய்த்தில்) மழை பெய்யவும், (அதே சமயத்தில்) வீட்டுச்சுவர் வீழ்ந்து விடவும், வீட்டிலுள்ள ஏவலாள் வேலை செய்ய முடியாமல் நோயுறவும், நிலத்தில் வேலை செய்யும் அடிமையாளன் இறந்து போகவும், நிலத்திலுள்ள மழையீரம் காய்ந்து போய் விடுகிறதென்று தெரிந்து அதற்கு முன்னே நெல்வித்தை யெடுத்துக் கொண்டு விரைந்து செல்லவும், (இவவாறு செல்லும் போது) பாதையிலே நான் கடன் கொடுக்க வேண்டியவர்கள் தடுத்துக் கொடுவென்று கேட்கவும், இழவு செய்தி கொண்டு ஒருவன் எதிரே ஓடி வரவும், கழிக்க முடியாத விருந்தினர் வரவும், அதே நேரத்தில் வீட்டிலுள்ள ஒருவரைப் பாம்பு கடித்து விடவும், அரசன் நிலவரி கேட்கவும், ஆசாரியர் காணிக்கை கேட்டு வந்தார்.-ப. 472-73
Secular Song 360 உணர்ச்சி
உணர்ச்சி ததும்பும் வேளையிலே
உளறுதல் எவர்க்கும் இயற்கைதான்
உணர்ச்சியும் அடங்கிய பின்னாலே
ஒழுங்காய் சிந்திப்பான் மனிதன்தான்
உணர்ச்சி இன்றி வாழவில்லை
உணர்ச்சி மட்டுமே வாழ்வும் இல்லை
ஆத்திரம் அவசரம் எனும்போது
உணர்ச்சியால் மட்டும் பயனில்லை
உணவில் இருக்கிற உப்பாக
உணர்ச்சியும் வாழ்வில் இருந்திடணும்
உப்பே உணவாய் மாறிடாது
உப்பற்ற உணவும் பயன்படாது
அன்பு பாசம் நேசமுடன்
ஆத்திரம் சோகம் எரிச்காலுமே
மாறி மாறி வருவதுமே
மனித வாழ்வில் இயற்கைதான்
உணர்வற்ற சவமாய் வாழுவது
உலகில் மனிதர்க்கு இயலாது
உணர்ச்சியும் எல்லை மீறும்போது
சவமாய் உடலும் மாறிடுது
உணர்ச்சியின் வலிமையை புரிஞ்சிக்கணும்
அதனின் தேவையை தெரிஞ்சிக்கணும்
வலிமைக்கும் தேவைக்கும் இடையினிலே
சமநிலை காணப் பழகிக்கணும்
மத்திகிரி, 26-8-2017 இரவு 10.45
Secular Song 360 Emotions
When overcome by emotion
Babbling is natural for everyone
Once the emotion has gone
Men will think properly
There is no life without emotion
At the same time emotion alone is not life
When emergency comes
There is no use acting only based on emotion
Emotion should be in life
Like the salt in the food
Salt itself will never become food
Without salt food will never become food
Along with love, affection and desire
Anger, irritation and sorrow
Will come in their turn
And this is part of human life
It is impossible for human to live
Like a dead person on this earth
But when emotion goes beyond its limit
The body might even become a corps
We should understand the strength of emotion
And should realize its need (in life)
Between the need and (its) strength
We should try to keep the balance
Mathigiri, 26-8-201710.45 pm
I am very emotional and I know its strength and weakness. But I feel sorry who try to suppress their emotion and similarly I feel regret when one’s emotion goes beyond control. Some think that merely shouting and reacting alone is emotion. But even those who keep quiet and not reacting or responding also express their emotion by suppressing it. They have the advantage to project themselves as a person having much patience. Whereas those who react and shout may earn the bad name as short tempered person. However those who suppress might face greater danger when it comes to personal health whereas those who react quickly will suffer in straining their relationship with others. But keeping a balance is art in life—in every area.
Leave a Reply