BT Songs 446 to 450

BT Song 446

After completing my reading, as I sat for my prayer/quiet time, I thought that as I achieved the purpose of this life: Knowing Him and Known by Him, I said that there is no more expectation further in my life. So it is the correct time to go.  Of course God might have His purpose or will for my life, but I thought, ‘so what’.  This is the right time to go and I prayed to God to take me.  Then I wrote this poem as my prayer.

BT Song 446 விடைபெற வேண்டும்

விடைபெறும் நேரம் சீக்கிரம் வரவேண்டும்

வேண்டாத வேதனை முடிவுக்கு வரவேண்டும்

எவ்வித எதிர்பார்ப்பும் இனியில்லை என்னில்

உன் சன்னிதிக்கு நான் வருகிற வரையில்

பிறந்த பயனை பெற்ற பின்னாலே

புவியின் வாழ்விலே அர்த்தம் காணேனே

புவியின் வாழ்வோடு அழிந்து போகாமல்

பெற்ற புது வாழ்வில் புகுந்து மகிழ்வேனே

பொறுப்பெனத் தந்ததைச் செய்து முடித்தேனே

போராட்டம் ஓய்ந்ததால் இளைப்பாற நினைத்தேனே

இலக்கை நோக்கித் தொடங்கிய ஓட்டமும்

எளிதாய் முடித்துப் பரிசைப் பெறுவேனே

பின்னான பாரமெல்லாம் தன்னாலே போச்சு

பின்பாக வந்ததெல்லாம் மறைந்து போச்சு

உன்னையே முன்நிறுத்தி ஓடியே முடித்தபின்னே

உனையின்றி மற்றவையும் மறந்து போச்சு

என்னிந்த வேட்கை நீயறிந்த பின்னாலே

வீணாகத் தாமதம் செய்வது எதனாலே

என் சித்தம் எதுவானால் அதைப்பற்றி என்ன

என் கேள்வி அதற்கு பதில் மட்டும் என்ன

இன்னும் இருந்துதான் எதைச் செய்ய வேண்டும்

என்ன உன் சித்தம் அதைக் கூற வேண்டும்

இதுவரை உன் சித்தம் மீறி அறியேனே

எதுவரை வைத்தாலும் அதையே செய்வேனே

மத்திகிரி, 15-6-16, இரவு 11.45

BT Song 446 Time to say ‘Good-bye’

Time to say ‘good-bye’ should come quickly

And should come an end to this unnecessary pain

I don’t have any more expectation from you

Until I come unto your presence

Once I received the fruit of this birth

I find no meaning for this life on earth

Not get perished along (or with) this world

I will rejoice in the New Life that I received

I have done (at my best) what you gave as responsibility

As the struggles came to an end, I wanted take rest

And completing the race which I began unto the goal

I will get that reward completing it easily

All the unnecessary burden have gone automatically

And those things came behind me also disappeared

Once I completed the race keeping you in front of me

All other things disappeared, other than you

Once you know this longing of mine

What is the reason for delaying further?

Whatever might be your will?

What is your response (to my question), tell that now

What I am going to do living further

What is your will tell me that to me now

Till now I never went against your will

Anyhow as long as you want keep, I will do the same again

Mathigiri, 15-6-16, 11.45 pm.

BT Song 447

This morning as I was listening to some devotional song in T.V. one line in a song very much impressed me. Then in my mind I wrote this song and in the afternoon after completing my reading, recalled that line and wrote this song

BT Song 447 பக்தியில் பேரின்பம்

ஐயனே உன்னடி அனுதினம் பணிந்தேன்

அருளை நாடி உன்னடி வந்தேன்

கருணையுடன் என்னைப் பார்த்தருள்வாயே

கண்மணி  போல் என்னைக் காத்தருள்வாயே

ஒவ்வொரு நாளும் உடன் வைத்துப் பார்ப்பாய்

உன்னுடன் இணைத்து அருள் கொண்டு காப்பாய்

என்னிந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும்

எதுவும் நம்மை பிரிக்காது காப்பாய்

நேரமும் நாட்களும் தன்போக்கில் போகுது

நித்தமும் என் வாழ்வு அவற்றுடன் நகருது

ஆயினும் ஒன்று மாறாமல் இருக்குது

அது உன் அன்பின் காவலாய் இருக்குது

ஆயுளுக்கு ஏற்பப் பருவமும் மாறுது

அதற்கேற்ப உடல்கூட வாடித்தான் போகுது

மனம் கூடப் பல வித மாற்றமும் காணுது

மாறாத உன்னன்பில் நாட்டமும் கொள்ளுது

மாறாத நியதியாய் மாற்றத்தை வைத்தாய்

மண்ணுலக வாழ்விற்கு எல்லையும் வைத்தாய்

ஓட்டத்தை முடித்து உன்னுடன் சேர்த்தபின்

மாற்றமே காணாத முக்தியை அளிப்பாய்

அந்தப் பேரின்பம் அடைகின்ற வரைக்கும்

அதன் சிறுபங்கை காண்பி நீ எனக்கும்

பக்தியால் பரவசம் கொண்டு துதிக்க

முக்தியின் பேரின்பம் காண்பித்தாய் எனக்கும்

மத்திகிரி, 16-6-16, மதியம், 3.00

BT Song 447 Bliss in bhakti

Oh my Lord I bowed each day at your feet

And seeking your grace I come unto you

Kindly look unto me with compassion

And protect me as the apple of eyes

Each day keeping me along with you

And joining me with you protect me by your grace

How much this life of mine might be

Protect me nothing separating me from you

Time and days are going in their own way

And my life too is moving along with them

But one thing remains unchanging

And this is your loving protection

The stage of life changes according to the age

Accordingly, the body is also become weak

And mind is also get changed in several ways

And long for your unchanging love

You kept change as an unchanging order

And you put a limitation to this earthly life

Once I reach You completing my race

You will bestow the unchanging mukti

Till I attain that joyful bliss

You show a small part of it here itself

And as I praise your glory through my bhakti

You already showed the glimpse of that mukti to me

Mathigiri, 16-6-16, 3.00 pm.

BT Song 448

Each day in the night after my T.V. news I used to walk for 10 or fifteen minutes in the hall.  That time I used to reflect on all that I have done that day and assess my life accordingly.  This night, as I was walking, I felt that there is no reason for me to live any more as I don’t find any purpose in this life.  This mood came not out of frustration but with sober thinking and reflecting the purpose of my life. Then immediately stopping my walking I wrote this poem.

BT Song 448 இருந்து என்ன செய்ய

இருந்து நானும் என்ன செய்ய

இதற்கு மேலும் என்ன சொல்ல

வருந்தி வருந்தி வேண்டினாலும்

என் மனசும் உனக்கு புரியல

ஏன் இந்த நாடகம் வீணிலே

என்னதான் சொல்வது தெரியல

வம்பு கட்டி இன்னும் வைத்தால்

வாதிட எனக்குத் தெம்பில்ல

இருந்து என்னத்தச் சாதிக்கணும்

இன்னும் என்னத்த பார்க்கணும்

உன் மீட்பின் வேலை முடிந்தபின்

வீணில் எதற்கு இருக்கணும்

நானா பாரம் சுமக்குறேன்

நல்லது கெட்டது செய்யுறேன்

ஏதோ நேரத்தைப் போக்குறேன்

மண்ணுக்கு பாரமாய் வாழறேன்

நான் போனால் எல்லாம் போயிடுமா

நான் இதை உனக்குச் சொல்லணுமா

கூடவே வந்திட யாருமில்லை

கூப்பிட்டாலும் வர துணிவில்லை

தெரிந்தபின் இன்னும் தாமதமேன்

தெம்புள்ள போதே வந்துடறேன்

தெரிஞ்ச வரைக்கும் சொல்லிப்புட்டேன்

இனிஉன்பாடு அதையும் சொல்லிவிட்டேன்

18-6-16, மத்திகிரி, இரவு, 11.10

BT Song 448 What is there for me to do further?

What is there for me to do further?

and what is there to say more than this?

Even if I continue to plead you

You cannot understand my heart

Why this unnecessary drama

I don’t know what to say further

If you want to keep me unnecessarily

I don’t have any more energy to argue with you

What is there for me to achieve by living

What is there for me to see further

Once your work of redemption is completed

Why should I live unnecessarily?

Am I the one who is carrying the entire burden?

And am I the one who is doing any good or bad

Somehow, I kill merely my time

And living as a burden to this earth

Will everything disappear once I have gone?

And do I need to tell this to you

There is none to accompany with me (in my death)

And none has even the courage to come with me even if I ask them

Why do you delay further after knowing this?

Let me come when I have some (physical) strength

I told as much as I know

Rest is your burden, and that too I make clear to you

18-6-16, Mathirigi, 11.10 pm.

BT Song 449

As I was reflecting on the song which I wrote last night, I said to myself this morning, ‘God does not create us as He created the rest of the creation.  We are the one who can worship Him amidst all kinds of struggles in life.  Rest of nature and creation cannot do contradicting things at the same time, as the animal world lives by instinct and nature survives as per the law of creation.  We are the one who can reflect the reality of life and at the same time think about God in a holistic way.  Then I wrote this song.

NB

In the Delhi RF meeting LTJ said that while God created rest of the things He used only ‘matter’ but for the first time He mingled ‘Matter’ and ‘Spirit’ while creating humans.

7-11-16

BT Song 449  புலம்பதே

வாழ்வோ நிலையில்லை

வருந்திப் பயனில்லை

இருக்கின்ற வரையில்

இறைவனைத் துதிசெய்

நல்லதை எண்ணிக்கொண்டு

நன்மைகள் செய்து கொண்டு

நாதனின் பாதம் கண்டு

நாளுமே பணிந்திடுவாய்

வீணாகப் படைக்கவில்லை

வெறுமையாய் அனுப்பவில்லை

வேண்டாத எண்ணம் விட்டு

வேண்டியே நாடிடுவாய்

உலகைப் படைத்தது போல்

உன்னை படைக்கவில்லை

உணர்ந்து நீயும் நாளும்

ஊனுருக தொழுதிடுவாய்

உனக்கொரு சித்தம் வைத்தான்

உனக்கதை சொல்லி வைத்தான்

ஓயாமல் புலம்பாமல்

உளமாற பாடிடுவாய்

எல்லாமே நன்று என

இறைவனே சொன்ன பின்னே

ஏனிந்த முரண்பாடு

எண்ணியே வாழ்த்திடுவாய்

நிலையில்லா வாழ்வினின்று

நிலையான முக்திதந்தான்

முழுமையாய் உணர்ந்து கொண்டு

முக்தேசனைப் போற்றிடுவாய்

19-6-16, Mathigiri, 6.20 am.

BT Song 449  Don’t lament

Life is not permanent

There is no point in lamenting about it

As long as you live

Continue to Praise God

Thinking only good things

And doing only good things

And having the darshan of the feet of the Lord

You worship Him each day

He never created us unnecessarily

And never sent us with an empty hand

Therefore, giving up unnecessary thoughts

You approach Him with prayers

You were not created

As He created the world

Realizing this

Each day worship Him with a melted heart

He has a plan for you

And He also shared that with you

Therefore, not lamenting without ceasing

Sing Him with whole heart

‘I am the beginning and end’

Once the Lord said this

Why this much confusion in you

Realizing this continue to live (meaningfully)

He gave a permanent Mukti

From this non-permanent life

Realizing this completely

You praise Bhagavan Muktinath

19-6-16, Mathigiri, 6.20 am.

Whenever I read a book, if I cannot agree with the author, I will begin to argue with her in my mind. Sometimes I will record it and other times try to ignore it. But this is not limited only to my reading.  And as I was reading a book and began to argue with that author on that particular subject, I realized that I am wasting my time unnecessarily on this subject as neither the author is there to listen to me nor I am going to write to about it to her. Then I thought how nice would it be if God never gave us a language to communicate and we too invented scripts to write them down?  According to my understanding God gave a language to punish us for the way we transgressed His command and we invented a script to add more problems to ourselves which divided people more than to help keep us united. 

BT Song 450 நாமே காரணம்

எதற்காகப் படைத்தான் மொழியென்ற ஒன்றை

ஏனோ தந்தான் அத்துடன் மனதை

இரண்டும் நமக்கு இல்லாதிருந்தால்

எத்தனை நன்மைகள் உண்டாயிருக்கும்

சொல்லவும் கேட்கவும் தேவையிராது

சிந்திக்கக் கூட வேண்டி இராது

எழுத்துக் கூட தோன்றி இராது

இத்தனை பேதங்கள் வந்திருக்காது

நல்லது கெட்டது என்னவென்று

நமக்கும் கூட புரிந்திருக்காது

அத்துடன் இத்தனை வாதங்கள் தோன்றி

இப்படி நம்மை பிரித்திருக்காது

நாமும் கூட நிம்மதி கொண்டு

நாளும் போதும் வாழ்ந்து கொண்டிருப்போம்

படைப்பின் பிற உயிர்கள் போல

பறந்து-திரிந்து மகிழ்ந்திருப்போம்

எத்தனை எளிமை கொண்டுமே இருக்கும்

அத்தகைய நிலை புவியின் மீது

அதைக் கற்பனை கூடச் செய்யவேண்டிய

தேவையும் கூட வந்திருக்காது

பசித்தவன் முன்பு புசித்ததை எண்ணி

ஏக்கம் கொண்டது போல ஆனோம்

இனிமேல் புலம்பி என்ன ஆவது

இதற்கும் நாமே காரணம் ஆனோம்

மத்திகிரி, 20-6-16, மதியம், 2.30

BT Song 450 We alone are the cause

Why He created the language

And gave a mind along with it

If both were not there

How much we would be benefited

Neither would come any need to listen and share

And no need to think also

And scripts too would have never been invented

And these kinds of different opinions wouldn’t have come

Neither would we have realized

About good and bad

And along with them, raising so many arguments

Wouldn’t have divided us this much

We too would have lived

Happily each day

Like other creatures in creation

We too would have lived joyfully

How simple would be such situation

On this earth

And there wouldn’t even come

A need to imagine about it too

Our condition also become like that hungry person

Who was dreaming about the feast which he had before

What is the use of lamenting hereafter?

We alone become cause for this too

Mathigiri, 20-6-16, 2.30 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *