Secular Songs 401 to 405

Secular Song 401

Sometimes I become upset on small issues for which others are not responsible.  Not knowing the reason, why it comes, I will turn it against others.  Then I will imagine so many reasons against them which will make no sense even to me.  Though initially they face my wrath, as they manage to escape (hurt or unhurt), then the anger will turn against me and beat me thoroughly.  Then like a beaten snake I will remain silent keeping the anger within me. 

Secular Sog 401 அடிபட்ட பாம்பு

ஏனோ ஒருவிதக் கோபம்

அடிக்கடி எனக்குள் வருது

எதற்கு வருது என புரியாமல்

மனது மிகவும் குழம்புது

எதன்மீது இந்தக் கோபம்

என ஆராய்ந்து பார்த்தால்

என்மீதே என இறுதியில்

மிகத் தெளிவாகப் புரியுது

ஆனால் அதன் ஆரம்பம்

அடுத்தவர் மீதே தொடங்கும்

அதற்கெனப் பல காரணம்

அடுக்கடுக்காய் மனம் தொடுக்கும்

தேவை இல்லாத எண்ணங்கள்

அடுத்து தொடர்ந்து வந்திடும்

கற்பனை பலவும் செய்து கொண்டு

காற்றினில் ஏறி பறக்கும்

அதைப் புரியா அடுத்தவரும்

இடையில் வந்து மாட்டிக்கொள்ள

என் மனம் ஆடும் பேயாட்டம்

அவர் நிலையாகும் திண்டாட்டம்

எப்படியோ அவர் தப்பிக்க

எவ்வித வழியும் இல்லாமல்

இறுதியில் கோபம் திரும்பிவிடும்

என்னை புரட்டி அடி போடும்

இருவிழிகளும் பிதுங்கி நிற்க

ஏதும் செய்ய இயலாமல்

பட்ட அடி வலி தாங்காமல்

செத்த பாம்பாய் அடங்கிடுவேன்

மத்திகிரி, 12-1-2018, இரவு 10.10

Secular Song 401beaten snake

I often get

Some kind of anger within me

As my mind is much confused

As I don’t know why it is coming

When I analyzed

On whom I got anger

Finally, it is only on me

Now it is very clear to me.

But it will begin

Only with others

For that, my mind will

Give so many reasons.

Then unnecessary thoughts

Will come following it

Imagining so many things (against them)

It will fly high in the sky

Not realizing this when

Others come before me

My heart will become devilish

And their condition will become poor one

Somehow, they managed to escape

As there is no alternative

The anger will turn back against me

And will beat me thoroughly.

Unable to do anything

Thoroughly beaten by it

I will keep quite like a beaten snake

Unable to bear the pain.

Mathigiri, 12-1-2018, 10.10 pm.

Secular Song 402

I don’t know whether it is my temperament or longing or mere imagination.  I am a chattering box, though I long to have a life of recluse.  Of course, I don’t go much outside and never interact with many people, but as I read and think a lot, I constantly feel that I engage with many people.  And when I sit quietly before retiring to bed, the few seconds that I try to spend to remain calm gives some kind of immense bliss and I always want to have this kind of life where I can go back into my own world and live there silently. As I enjoyed these blissful moments for a few seconds, I wrote this song expressing that longing.

Secular Song 402 தனிமையைத் தேடி        

ஒருவித அமைதி

உள்ளம் தேடுது

ஒதுங்கி வாழ்ந்திட

மனமே தூண்டுது

இடையிலே வந்து

இடையிலே போகும்

பிறரோடு போராட

மனதுமே தயங்குது

பிறரோடு பிறந்தும்

பலரோடு வாழ்ந்தும்

ஒருவிதத் தனிமை

அனைவருக்கும் உண்டு

எவரெதை நாடுவார்

என்பதில் இருந்து

அவரவர் தேவை

தெளிவாகத் தோன்றும்

கூட்டத்தின் மத்தியில்

கூடியே நின்றால்

நாட்டமெல்லாம் மனதில்

தனிமையை நோக்கும்

ஏற்ற நேரம்

வருகின்றபோது

ஓட்டமாய் ஓடி

ஒதுங்கி கொள்ளும்

பேச்சைக் குறைத்து

புலம்பலை தவிர்த்து

ஆழ்ந்த மனதினுள்

அமைதியைத் தேடும்

எப்போது எவ்விதம்

அது கிடைத்தாலும்

அதனுள்ளே மூழ்கி

ஆனந்தம் கொள்ளும்

மத்திகிரி, 14-1-18, இரவு 11.10

Secular Song 402 Longing for solitude   

My heart is longing for

Some kind of calmness

And the mind also

Urges me to live a life of recluse

And the heart hesitates

To struggle with others

Who comes in between?

And leaves in the middle

Though we born with others

And live with others

Some kind of loneliness is

Common for all

Who is longing

For which

Clearly will show

Each person’s need

When stand amidst

In a crowd

The heart will always

Long to be alone

When the right

Opportunity comes

 It will run and

Keep away from others.

Reducing the talking

And stopping lamenting

It will seek deep within

That peace

When it is available

In whichever form

It will drown in it

And rejoice

Mathigiri, 14-1-18, 11.10 pm.

Secular Song 403

The best time for me in a day is a few minutes (sometimes only a few seconds) that I try to remain quiet either contemplating something or reflecting on the activities of the day or even try to calm my mind, not allowing myself to think anything (but that itself becomes another activity).  Of course as long as we remain conscious it is impossible for us to remain inactive.@ But the inner calmness which the Siddha tradition calls as ‘Sombar’ (idleness, which is a wrong translation of this Tamil word in that context).  But once we try to create a world within us where we try to remain calm, then that few seconds is a joyful experience from which we don’t want to come out or don’t allow others to enter.  To understand this, I often point out the few seconds or minutes one loves to lie down after waking up after a good sleep.  More than a good rest, the few seconds of that laziness and longing to remain on the bed to relax is the best luxury for many.  And naturally one gets irritated if she has to get up from the bed or disturbed by others.

@       It has been rightly observed by Stuart Hampshire that action is attributable to a human being only as long as and throughout the period that he is conscious.  It is a necessary truth—and one of the most important truisms about human beings—that if a man has been fully conscious for some time, there must be some verbs of action that truthfully summarise what he has been doing during that time. The verbs of action may represent him as doing something desultory, purposeless and inactive. The mode of performance may vary through many degrees: but if conscious, then necessarily performing, and if unconscious, necessarily not performing, in the sense that no action is attributable to an unconscious man as its agent….A more decisive difference between consciousness and unconsciousness lies between the necessity of intended action in the one case and of a mere natural movement without intention in the other.{Stuart Hampshire, Thought and Action, London, Chatto and Windus, 1959, pp. 93-94}—quoted by S. Paul Kashap, in ‘REFLECTIONS ON THE CONCEPT OF ACTION IN THE GITA’, in Bimal Krishna Matilal, ed, Moral Dilemmas in the Mahabharata, Indian Institute of Advanced Study Rashtrapati Niwas, Shimla, in association with Motilal Banarsidass Publishers, Delhi, (1989) 2nd Reprint, 2014,  Pp. 116-128, p. 125.  In fact the entire chapter by Kashap is worth reading to understand this point relating to Gita about Action. 

Secular Song 403 என் உலகம்

எனக்கொரு உலகம்

எனக்குள்ளே படைத்தேன்

என்னோடு அதனுள்

தனித்தே இருந்தேன்

ஆதியில் வாழ்ந்த

மனிதனைப் போல

அதனுள் தனித்து

அமைதியாய் இருந்தேன்

சிந்தைக்கு அங்கே

வேலையே இல்லை

சிந்திக்கத் தேவை

ஏதுமே இல்லை

சிந்திக்கத் தேவை

வந்தும் கூட

சிந்திக்க மனதுக்கு

விருப்பமே இல்லை

சும்மா இருக்கும்

சுகத்தை அடைந்தேன்

சுற்றி உள்ள

சூழ்நிலை மறந்தேன்

மற்றவர் வந்து

எட்டியே பார்க்க

சட்டென எனக்குள்

நானே மறைந்தேன்

சொன்னால் அந்த

சுகம் புரியாது

பிறர்அதை நமக்குத்

தர இயலாது

நாமே அதனை

விரும்பியே படைக்க

தடுக்க எவருக்கும்

திறன் கிடையாது

ஒருமுறை அந்த

உலகைப் படைத்தால்

வெளியே வர

மனமிருக்காது

ஒருமுறை நீயும்

முயன்று பாரு

பின்னால் அதுபற்றி

பிறருக்குக் கூறு

மத்திகிரி, 15-1-18, இரவு 11.10

Secular Song 403 My World

I created my own world

Within me

And I lived in it

All alone

Like the first man

Who lived alone?

I too remained in it

Peacefully

There is need

For us to think there

And no opportunity

Comes to think there

Even when

Opportunity came to think

The heart never

Desires to think

I enjoyed the joy

Of remaining calm

And I forgot

My own surrounding

When others

Came to see

I hide suddenly

Within me

You won’t understand

That joy

And others cannot

Give it to us

Once we have

Decided to create it

None has the

Capacity to stop it.

Once that

World is created

The heart will

Never desire to come out from it

You too

Try to create that world

Then you proclaim

About it to others

Mathigiri, 15-1-18, 11.10 pm.

Secular Song 404

Again, my favourite topic is carrying the burden and not running away from our responsibilities.  Based on my life’s experience, I realized that till the end of life we cannot run away both from responsibility and burden.  But if we do it with clear understanding and accepting it, then the burden won’t become hard to carry.  On the other hand, if we carry it with a grudging spirit the burden will increase.  Anyhow there are some unnecessary responsibilities which are imposed on us, which we have accepted in a particular context. But when the time goes and other responsibilities become a priority, then those unnecessary responsibilities really become a burden.  Then we have to act wisely giving priority considering our present context in life (age, health etc.)  Anyhow as I want to end this serious topic with a light note, I added the last two stanzas as joke—to carry this responsibility with a light spirit

Secular Song 404 என் பாரம்

எதுதான் பாரமாய்

உலகினில் இல்லை

எவர்தான் தொல்லை

தருவது இல்லை

நாமே நமக்கு

பாரமாய் இல்லையா

நமக்கு நாமே

தொல்லையாய் இல்லையா

பிறந்தது முதலே

பூமிக்குப் பாரம்

வளரும் போதும்

சோத்துக்கு பாரம்

வாழும் போதும்

உலகிற்குப் பாரம்

போன பின்னாலும்

பிறருக்கு பாரம்

இதற்கு இடையில்

வாழும் போது

பலவித சுமைகள்

தன்போல் வருது

விரும்பியே சுமக்கினும்

வெறுத்தே மறுக்கினும்

தப்பிக்கும் வழிதான்

இங்கே காணோம்

அலுப்புடன் சுமந்தால்

அதிகமாய்ப் போகும்

அமைதியாய்ச் சுமந்தால்

இலகுவாய் மாறும்

எப்படி சுமப்பது

என்பதுன் பொறுப்பு

எனமட்டும் சொல்வது

எனக்குள்ள பாரம்

எப்படியோ இந்த

பாரத்தை இறக்கி

எளிதாய்த் தூக்கிப்

பிறர்மேல் வைத்தேன்

அடுத்தவர் படித்தால்

அவருக்குப் போகும்

அதுவரை என்மேல்

தொடர்ந்தே இருக்கும்

ஒருமுறை படித்து

உதவியும் செய்தால்

இனியொரு பாடல்

இதுபோல் எழுதி

வீணாய் உமது

கோபத்தை கிளறேன்

மறுத்தால் மீண்டும்

இதுபோல் எழுதுவேன்

மத்திகிரி, 17-1-18, மதியம் 2.20

Secular Song 404 My burden

Which one is

Not remain a burden (to us)

Who is not there?

Not troubling us?

Are we not

Become a burden unto us

Are we not giving?

Trouble to us

Since we born

Become a burden to the earth

When we grow up

Become a burden to food

When we live

Become a burden to the world

Once we have gone

Become a burden to others

Meanwhile

When we live

So many burdens are

Coming on their own

Whether we carry them

Voluntarily or with much hate

There is no means

To escape from them

If we carry it with much hesitation

Only the burden gets increased

And if we carry it calmly

The burden comes light

To tell how you are going to carry it

Is my responsibility

How you are going to carry

Is your responsibility

Somehow, I

Managed to unload

This burden

Upon others easily

If others read this

The burden will go them

Till that time

It will be on me alone

If you read it once

And help me

Then I won’t write

Another song like this

If you refuse (to read)

To provoke

Your anger

I will write one like this again.

Mathigiri,17-1-18, 2.20 pm.

Secular Song 505

As a sannyasi I want to hide from the world.  But my mind and heart are the culprits which disclose to others. As long as we have a mind and heart it is impossible to hide from anyone—even from ourselves.

Secular Song 405 வாய்ப்பே இல்லை

ஓடி ஒளிய விரும்பியே போதும்

உலகம் நம்மை விடுவதாய் இல்லை

தேடித் துருவிக் கண்டுபிடித்து

தொல்லை தராமல் இருப்பதும் இல்லை

ஒளியைக் காரணம் ஆயிரம் இருக்கும்

உணர பிறருக்கு ஏது நேரம்

அவரது தேவை பலவிதம் நெருக்க

நம்மைத் தேடி வந்திடக் கூடும்

உடலால் ஒளிய இடம் கிடைத்தாலும்

உள்ளமோ நம்மை காட்டியே கொடுக்கும்

அதனின் தேவைகள் ஆயிரம் இருக்க

உடலால் ஒளிந்து இனியென்ன இலாபம்

மனமொன்ற ஒன்று இருக்கும் வரையில்

உடலால் ஒளிந்து பயனே இல்லை

மனதுக்கும் ஒளிய மனமிருந்தாலும்

மறைய அதற்கு இடமே இல்லை

பிறர்வந்து நம்மைத் தேடும் முன்னே

மனமும் அவரை முந்திக் கொள்ளும்

தானே அசைந்து காட்டிக் கொடுத்து

பிறருடன் சேர்ந்து எள்ளி நகைக்கும்

ஒருமுறை உலகில் வந்த பின்னே

ஒளிந்திட எங்கும் இடமே இல்லை

மனமொன்று நாமிடம் இருக்கும் வரையில்

அதற்கு என்றும் வாய்ப்பே இல்லை

மத்திகிரி, 17-1-18, இரவு 11.50

Secular Song 405 No chance

Though we try to escape to hide

The world is not ready to allow us to do so

It won’t let us live in peace till

It search to find us to give trouble

We may have thousands of reasons to hide

But where is the time for others to understand it

As their own needs press them

They might come searching after us

 Even if we manage to find a place to hide

Our own mind will betray us

As it have thousands of needs of its own

What is the use of hiding physically?

As long as we have a mind

There is no point in hiding physically

Even though the mind would like to hide

There is no place for it to do so

Before others come and find us

Our mind will go ahead of them

By its own activity it will show our hiding place

And will laugh at us joining others

Once we came to this world

There is no place to hide anywhere

As long as we have a mind

There is no chance for that

Mathigiri, 17-1-18, இரவு 11.50

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *