Secular Song 612 இதுதான் உண்மை
எது உண்மை என்பது
எனக்கும் தெரியல
எப்படி அறிவது
என்பதும் புரியல
உடலின் தேவை
மாயை இல்லையே
உள்ளத்தின் தேடலில்
தவறும் இல்லையே
வாழ்கின்ற வாழ்வை
நாடகம் என்பதா
வாழ்வின் தேவைகள்
பொய்யென்று சொல்வதா
ஒருபுறம் உண்மையாய்
மறுபுறம் மாயையாய்
தோன்றிடும் காட்சியும்
கானல்நீர் என்பதா
உலகின் வாழ்வும்
நிலையில்லை என்கிறார்
ஆயினும் அதற்காக
எத்தனை தேடுறார்
இதுவரை பெற்றது
போதலை என்றுமே
எத்தனை எத்தனை
புதிதாக நாடுறார்
பெற்றது எதுவும்
போதலை என்றபின்
புதிதாய் பெறுவதும்
பயனில்லை என்றார்
ஏதோ ஒன்றை
எண்ணி எங்குறார்
எதுவெனத் தெரியாமல்
அதன்பின் ஓடுறார்
அவருடன் ஓடிட
விருப்பம் இல்லை
ஆனாலும் நின்றிட
வழியும் இல்லை
துடுப்பற்ற படகாக
உலக வாழ்க்கை
நீரோட்டம் தன்னிலே
அதன்போக்கில் போக
கரை தெரிந்தாலும்
துறைசேர முடியாமல்
படகு கவிழ்ந்தாலும்
நீந்தவும் முடியாமல்
இப்போ இதுமட்டும்
உண்மையாய் இருக்குது
அதுமட்டும் தெளிவாக
எனக்குப் புரியுது
ஆகவே அதன்படி
அனுதினம் வாழறேன்
காலத்தின் போக்கிலே
நானுமே போகிறேன்
Gurukulam, 17-1-24, 11.55
Secular Song 612 This is the reality
I don’t know
What actually truth is
I don’t know even
How to understand it
The needs of the body
Is not maya
Nothing wrong in
Seeking the needs of the mind
Could we say that this life
That we are living is merely a drama
Or all the needs in life
Are lies or wrong
Could we say that
What looks real on one side
And mere maya on the other
As mere mirage
They say that the life on this earth
Is not permanent
But why they seek
So much for it
Not content with
What already they possessed
How much more they
Seek new things
Once they say that
What they received is not enough
They still say that there is no use in
All that they receive newly
They are longing
For something
But they run after it
Not knowing what actually is it
I don’t want to run
Along with them
But there is no choice
For me to stop [not joining them]
Like a boat without oars
The life on this earth
Is going as per the current in a
Flooded river
Unable to reach the shore
Though they are visible
And unable to swim
If the boat capsized
This now remains
True to me
And I understood it
Very clearly
Therefore I am living
Each day according to it
I am also carried away
Along with the current of Time
Gurukulam, 17-1-24, 11.55
Leave a Reply