BT Songs 511 to 515

BT Song 511

As I was recalling both the songs 508 and 509, again reflecting the unique relationship between a mother and baby, I wrote this song.

BT Song 511 அவன் அறிவான்

அழும் குரல் கேட்டால்

அன்னையும் பொறுப்பாளோ

அள்ளி எடுத்து 

தன்மீது வைக்காளோ

பசியென மதலையும்

சொல்லிட வேண்டுமோ

பதறியே பால் தந்து

பசிப்பிணி போக்காளோ

அறிவானே அவனும்

அதைவிட அதிகம்

அவசியம் வருவானே

ஏன் வீண் தயக்கம்

குரல் கூட உயர்த்திக்

கூப்பிட வேண்டாம்

குறைகளைச் சொல்லி

கதறிட வேண்டாம்

உன் நிலை அறிந்து

அவன@ @ல்லு

ஒன்றும் பேசாது

மெளனமாய் நில்லு

உனக்கு உதவிட

வழியைத் திறப்பானே

உணர்ந்து கொள்ள உன்

அகக் கண் திறப்பானே

மத்திகிரி, 9-9-16, மதியம் 2.55

BT Song 511 He knows

Will a mother tolerate it?

When she listens to the cry of her baby

Won’t she took it immediately

And keep in on her bosom

Does the baby needs

To inform about its hunger

Won’t the mother feed it immediately?

To quench its hunger

He knows

Better than that

Definitely He will come

And why this much hesitation

We need not even raise our voice

To call Him

And we need not cry

Sharing our problems

Knowing your condition

Go to His feet

And stand still there

Without uttering a word

He will open the doors

To help you

And He will open your inner eyes

To see that

Mathirigi, 9-9-16, 2.55 pm. 

BT Song 512

 As I got up very early, I lay down on the bed just worshipping the Lord.  That time I thought that though I cannot avoid recalling yesterday and worry about tomorrow, what I need for today is His peace to spend this day with Him.  As I reflected this thought, I wrote this song.

BT Song 512 அமைதி வேண்டுவோம்

கதிரவன் தோன்றும் முன்

கருக்கலில் எழுந்து

கடவுளின் கருணையை

மனதில் நினைந்து

துதிகளின் மத்தியில்

வாழ்வோனைப் பணிந்து

தொடங்குவோம் இந்நாளை

திருவடி வந்து

சென்ற நாட்களில்

நம்முடன் இருந்தான்

சோர்வுற்ற போது

நம்மையும் சுமந்தான்

நம் கடன் செய்ய

ஊக்கமும் அளித்தான்

நன்மைகள் பலசெய்து

நம் வாழ்வை நிறைத்தான்

எத்தனை கேள்விகள்

எதிர்காலம் எண்ணி

ஏக்கம் பல உண்டு

தேவைகள் எண்ணி

அவைகளை நிறைவேற்ற

தீர்மானம் பண்ணி

அவனிடம் செல்வோம்

அருளையே நன்னி

ஆயினும் இந்நாளும்

நலமாய் நகர

அவசியம் தேவை

மனதில் அமைதி

அதை அருளும்

அவனடி அண்டி

இறைஞ்சுவோம் அவனை

மீண்டும் வேண்டி

மத்திகிரி, 12-9-16, காலை, 5.15

BT Song 512 Let us seek calmness

Getting up

Before the sun rise

Thinking about

God’s grace in us

And bowing the one

Who dwells amidst praises?

Let us start this day

Coming unto His feet

He was with us

In the previous days

And carried us

When we become tired

He encouraged us

To do our duties

And He filled our lives

With so many blessings

How many questions

Thinking about the future

Many longings are there

Thinking about our needs

And taking decision

To accomplish them

Let us go to Him

Seeking only His grace

Yet to pass this day

Properly

Definitely we need

Peace within us

and going to His feet

as He is the one who bestows it

Let us beg Him one more time

Seeking it again

Mathigiri, 12-9-16, 5.15 am.

BT Song 513

Some bitter experiences in life often discourage us from attempting to regain what we lost.  Of course learning through that bitterness, instead of accepting defeat, with the grace of God and help of others, we should again take bold steps to launch for the unknown areas of life.  Otherwise neither God nor others can help us to regain our lost life.  Taking courage, risk and counting the cost we need to proceed is discouraged by the past bitter experience of life.  Then alone God can give a double fold blessing.

BT Song 513 இரட்டிப்பாய் தருவான்

இழந்ததை மீண்டும்

பெறவே விரும்பினால்

இறைவன் துணையும்

அவசியம் வேண்டும்

இழந்ததை எண்ணி

கலங்கித் தவிக்காமல்

புதுவாழ்வு காணப்

புறப்பட வேண்டும்

இழப்பிற்குப் பிறரைக்

காரணம் ஆக்காமல்

இறைவன் சித்தமாய்

அதை கொள்ள வேண்டும்

இழப்பின் வலியை

எண்ணிடும் போது

மீண்டும் முயன்றிட

மனது தயங்கும்

எதிர்மறை எண்ணங்கள்

ஏராளம் தோன்றி

முயற்சியைக் கூட

முடக்கிப் போடும்

அப்போது பிறரின்

உதவியை ஏற்று

இறைவன் அருளை

அதனுடன் சேர்த்து

துணிவின் துணையுடன்

அச்சத்தைப் போக்கி

முயன்றிடவேண்டும்

முனைப்புக் கொண்டு

துணிந்தவர் அன்றி

வென்றவர் இல்லை

துவண்டவர் மீண்டும்

பெற்றதும் இல்லை

சந்தேகம் என்னும்

சஞ்சலம் போக்கி

இருமனம் தன்னை

அறவே நீக்கி

மீண்டும் ஒருமுறை

முயலும் போது

இரட்டிப்பாய் தருவான்

இறைவன் அப்போது

மத்திகிரி, 12-9-16, மதியம் 2.20

BT Song 513 He will give back in double

If we want to get back

What we have lost

We need God’s help

Definitely

Not lamenting

About which we have lost

We need to press forward

To see a new life

Not blaming others

As the cause of our loss

We should take it

As God’s will

When we think about

The pain of loss

We will hesitate

 To attempt again

Several negative

Thoughts will come

And cripple

Our further efforts

That time

Taking others help

Adding God’s grace

Along with it

Removing the fear

With the help of courage

We should strive again

With new enthusiasm

Only those who are

Courageous alone won

And those who are discouraged

Never received it back

Removing the

Spirit of doubt

And removing

Double mind

When we strive

One more time

God will give

Doubly again

Mathirigi, 12-9-16, 2.20 pm.

BT Song 514

One eternal need of human beings is to listen to some comfortable words in distress and encouragement in defeat.  For me one important thing in our bhakti is that God expects us to be that comforter and encouragement for those discouraged and get defeated in life.  In our bhakti we neither blame any fat or karma or Time or even God for all misfortune in life rather seek comfort and encouragement from others. And we do the same to others in their need, rather than blaming their fate/karma or Time.  Of course every religion teaches the same thing to its followers, but in our bhakti it becomes fundamental.

BT Song 514 ஆறுதல் வேண்டும்

ஆறுதல் தேடி மனதும் அலையும்

அதைத் தருபவரிடம் தன்னையே திறக்கும்

தேறுதல் வேண்டி இதயமும் ஏங்கும்

அதைத் தருவோரை தெய்வமாய் வணங்கும்

ஏதோ ஒன்றை இழந்ததினாலே

எல்லோர் மனதும் ஆறுதல் தேடிடும்

தேவைகள் பலவும் கொண்டு வாழ்வதால்

தேறுதல் தேடி ஏங்கியே இருக்கும்

இந்த உணர்வு இல்லா உயிரினம்

இருப்பதாக எனக்குத் தெரியலை

ஏதோ ஒரு விதம் இவற்றையும் நாடி

வாழாத மனிதரை நானும் பார்க்கலை

துறந்து சென்ற துறவியும் கூட

துறவிலே அந்தத் தேறுதல் கண்டான்

துறவிக்கே இந்நிலை என்ற பின்

துறவை மறுத்தவர் நிலையென்ன சொல்ல

ஆறுதல் தேறுதல் வேண்டா மனதை

இதுவரை எவரும் பார்த்ததும் இல்லை

அவற்றையும் கூட ஏற்காத மனிதரை

இறைவனும் இதுவரை படைக்கவில்லை

சொல், செயல், சிந்தை மூலம்

ஆறுதல் அளித்து அவனியில் வாழ்வோம்

தேவைப்படுவோர்க்கு தேறுதல் தந்து

தெய்வத்தின் குணத்தைப் பிறர்க்குக் காட்டுவோம்

மத்திகிரி, 12-9-16, மாலை, 6.30

BT Song 514 Needs comfort

The heart will seek comfort and will log for it

And will open it to those who will give it

The heart will long for consolation

And will consider those as god who gives it

As we have lost something

All that the heart seeks is consolation

As we live with so many needs

It will seek consolation with much longing

I don’t know

That any create can live without this sense

And I have never seen any human beings

Who never sought after it?

Even a sannyasi who has renounced everything

Found that consolation in his renunciation

If this being the truth for a sannyasi

What can we say about others?

None has seen a heart

Which never sought consolation and comfort?

And God has never created any human being

Who never accepted it?

Let us live on this earth

By giving comfort through words, deeds and thought

And let us show the nature of God

By providing comfort those who seek it

Mathigiri, 12-9-16, 6.30

BT Song 515

See: Who is not a Hindu [in the blog] for the background of this song

BT Song 515 கேட்பதை விட்டேன்

அடுத்தவர் அனுபவம் நமக்கு ஏற்காது

அவர் கொண்ட ஆனந்தம் நமக்கு புரியாது

அவரவர் தமக்கு உகந்ததைத் தேடணும்

அதன்வழி ஓடி இறைவனை அடையணும்

பிறர் புசிக்க என்பசி போகாது

பிறர் சொல்ல என் மனம் அடைந்து விடாது

குதிரைக்குத் தாகம் இல்லா வரையில்

குளத்தில் முக்கினும் நீர் குடிக்காது

என் மனம் அறிந்தவன் என்வழி வந்தான்

என் தேவை எதுவென அவனும் அறிந்தான்

என்னுளம் அதற்கென ஏங்கிய பின்னே

என்னுளம் இருந்திட என்னிடம் வந்தான்

அதனை அறிவால் ஆராய்ந்து பார்த்தேன்

அதைப் புரிய நூல்பல படித்தேன்

மேற் கொண்டு அறிய பலரிடம் கேட்டேன்

என்னுளே நானும் வாதிட்டுப் பார்த்தேன்

ஆயினும் இவை ஒன்றும் உதவிடவில்லை

அவன் கொண்ட கருணையை விளக்கவும் இல்லை

இது ஏன் என்று அவனையே கேட்டேன்

இதற்கு அவனும் பதில் தரவில்லை

கேள்விகள் கேட்பதை நிறுத்திய பின்னே

கேள்விகள் அற்ற பதிலாய் வந்தான்

அந்தப் பதிலை உணர்ந்த பின்னே

பதிலற்ற கேள்விகள் கேட்பதை விட்டேன்

மத்திகிரி, 12-9-16, இரவு, 8.35

BT Song 515 give up asking

Other’s experience is not acceptable to us

We cannot understand their joy

Each one should seek what is proper for her

And should reach God through that process

My hunger won’t go if others eat for me

My mind won’t receive because others shared

Until the horse feels thirst

It won’t drink even if we push its head in water

The One who knows my heart came on my path

And He understood what my need is

Once my heart too longed for that

He came to dwell within me

I analysed it through my reason

To understand it I read many books

Asked others further to know about it

And even I debated about it within me

Yet none of them were useful to me

I never understood His compassion

Then I asked Him ‘Why” this happened (to me)

But no answer came from Him

Once I stopped asking questions

He came as the answer which does not have any question

Once I understood that answer

I stopped asking questions which do not have answer

Mathigiri, 12-9-16, 8.35 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *