BT Song 531
As I got up very early in the morning, after having my tea, I sat for some quiet time with the Lord in worshiping Him. That time I wrote this song.
# They vary, but in general are: ego, karma and maya
BT Song 531 பக்தியால் பணிவேன்
அருளே அமுதே ஆனந்தமே
அன்பின் வடிவாக வந்தவனே
தருணம் ஈதே என்றேனே
தந்தருள் கிருபை என்பேனே
முதல், முடிவே மூத்தவனே
முக்திக்கு வழியாகி வந்தவனே
மும்மலம் தன்னை அறுப்போனே
முழுமுதற் பொருளாய் இருப்போனே
எண்ணம் எல்லாம் நிறைந்தோனே
என்னை உனக்காய் வென்றோனே
எளிமை வடிவாய் வந்தவனே
எமக்காய் தன்னையே தந்தோனே
உளமே கோயில் கொண்டோனே
உள்ளொளி பெருக்கி ஆள்பவனே
உண்மை நானே என்றோனே
உலகை அதன்வழி புரப்போனே
பக்திக்கு வித்தாய் இருப்போனே
பக்தருக் கென்றே வாழ்பவனே
பக்தியை வரமாய் தருவோனே
பக்தியால் உன்னை பணிவேனே
மத்திகிரி, 24-9-16, காலை, 6.00
BT Song 531 Simple bhakti
O my grace, nectar and bliss
The very embodiment of love
This is the time
For you to bestow grace
The first, the final and the primordial
The one who came as the path to mukti
One who severe the three fetters#
Who remains the eternal being?
The one who filled my thought
The one who received me as your own
One who came in simple form?
And the one who gave you for us
The one who dwells in the heart of the temple
The one who overlords me by remaining as the inner light
The one who said that I am the truth
And the one who takes care of the world accordingly
The one who remains the seed for bhakti
The one who lives only for the bhaktas
The one who gives bhakti as the boon
And I will worship you through my bhakti
Mathigiri, 24-9-16, 6.00 am.
BT Song 532
Simplicity is a blessing in life. But simplicity in spirit more than in outward life is essential for our bhakti. But I often feel that I unnecessarily complicate the simplicity in my spirit by contemplating on so many issues in life. As I was thinking about it, I wrote this song.
BT Song 532 எளிமை வேண்டும்
எளிமை என்பது எவருக்கும் தேவை
எனக்கு அதுவும் அதிகம் தேவை
எளிதாகப் புரியும் ஒன்றை ஏனோ
குழப்பிக் கொண்டு வாழும் பேதை
எளிய பற்று எளிய பக்தி
எளிய எண்ணம் என்று இல்லாமல்
எல்லாம் அறியும் எண்ணம் கொண்டு
ஏதும் புரியாது தவிக்கும் போது–எளிமை….
எல்லாம் புரிந்தால் என்ன ஆகும்
என்பதை எண்ணிப் பார்த்திடாமல்
என்னால் முடியும் என்று எண்ணி
உள்ளதும் இழந்து தவித்திடாமல்–எளிமை…
எத்தனை எளிதாய் எனக்கும் சொன்னாய்
“என்னைப் பின்பற்று” என்று அழைத்தாய்
அதை மட்டும் செய்ய மறுத்து
மற்ற அனைத்தும் தேடும் எனக்கு–எளிமை…
எதை எதையோ படித்துப் பார்த்து
ஏதும் புரியாது எழுதிப் பார்த்து
அதற்கு மேலும் கேட்டுப் பார்த்து
அதையும் ஏற்க மறுக்கும் எனக்கும்–எளிமை…
இந்த எளிமை என்ன வென்று
எங்கும் தேடிப் பார்த்த போது
எளிய வடிவில் தேடி வந்து
எளிதாக்கித் தந்த அந்த–எளிமை…
மத்திகிரி, 25-9-16, மதியம் 2.100
BT Song 532 Need simplicity
simplicity is required for everyone
and I need more than others
I am the fool who confuses more
The one which remains ignorant–simplicity is….
Not remaining with
simple trust and simple bhakti
eager to know everything
when I get troubled–simplicity is….
not realizing that
What will become of me?
if I understood everything
and not get frustrated–simplicity is….
how simply you uttered
“come and follow me”
not doing that alone
but seeking every other thing to do–simplicity is….
reading so many things
then writing so many things which are not clear
and listening more than that
and finally refuse to accept even that–simplicity is….
when I searched everywhere
to know what is that simplicity
the one who came seeking after me
and made it very simple one–simplicity is….
Mathigiri, 25-9-16, 2.10 pm
BT Song 533
Some kind of emotional feeling or ecstatic experience filled my spirit and mind from the afternoon. Sometimes I was overwhelmed by it. When I tried to analyse it, I failed. Then I took refuge at the feet of the Lord, pouring out my heart through this poem.
BT Song 533 அடைக்கலம் வேண்டும்
அடைக்கலம் தேடி உன்னடி வரவேண்டும்
அங்குதான் நானொரு ஆறுதல் பெற வேண்டும்
கணக்கற்ற கலக்கங்கள் மனத்திடை எழும்போது
காப்பாய் என்றுதான் உன்னடி வரவேண்டும்–அடைக்கலம்…
புரியாத குழப்பங்கள் புவிமீது பல உண்டு
புரிந்தாலும் விடையில்லா கேள்விகள் சிலவுண்டு
இவற்றால் ஏமாந்த நேரங்கள் பல உண்டு
இவையெல்லாம் ஏனென்ற கேள்வியும் எழும் போது–அடைக்கலம்…
நாளும் பொழுதும் நன்றாகக் கழிந்தாலும்
நான் எதிர்பார்ப்பது அதனிடை வேறொன்று
ஆயினும் அதை கூடச் சொல்லவும் தெரியாது
அலைபாயும் மனதுடன் புலம்பியே வரும்போது–அடைக்கலம்…
குறையொன்றும் எனக்கில்லை கூடவே தந்தாய்
கேட்கவே மறந்தாலும் கூப்பிட்டு அளித்தாய்
நினைக்கும் போதெல்லாம் நீ வந்து நின்றாய்
நான் சொல்ல வரும்போது நீயும் கேட்டாய்–அடைக்கலம்…
இத்தனை நன்மைகள் வேறெவர் பெற்றார்
உன்னைப் போல் றெவர் அதனையும் தந்தார்
இதை உணர்ந்த பின் வேறென்ன வேண்டும்
என்றும் உன்னடி நாடியே வந்து–அடைக்கலம்…
மத்திகிரி, 26-9-16, இரவு, 10.45
BT Song 533 Need your protection
I need to come unto your feet seeking protection
and there I should found some comfort
when so many troubles are arising in my heart
I should come to your feet crying ‘save me’–I need…
Many confusions are there in this world
even if understand them, there are many un-answerable questions
many times I was disappointed by them
when the question arises ‘why all these’?–I need…
Though day and time is going fairly well
what I expect in it is completely different
yet unable to utter what it is
when I come unto you lamenting with a disturbed heart–I need…
I lack nothing as you gave more than what I required
even if I didn’t ask you, you called me and gave them
whenever I thought about you, you come near to me
when I was about to share, you are ready to listen–I need…
Who else received so many blessings?
Who else gave them other than you?
once I realized this what else I require
always seeking only your feet–I need…
Mathigiri 26-9-16, 10.45 pm
BT Song 534
Actually after I wrote this poem I thought of not including this in my collection of poems. Because my own rationality refuses the experience which I underwent this day from the afternoon. Some kind of joy and some kind of the presence of God I felt constantly. This feeling or experience continued till I retired to bed. Though I was doing my regular work, I always felt someone was very close to me. Sometimes tears also came without any reason. But I cannot accept it or understand it. I often thought that this is nothing but mere emotion. But any emotion won’t continue for such a long period of several hours in a day. Unable to understand, I was very confused. Though I retired to bed by 11.30 I could not sleep and the same kind of experience continued. So I got up from the bed and wrote this song to let out my inner compulsion through some words. Though I managed to sleep after that, I cannot forget this experience easily. At the same time, still my own rationality refuses to accept it. This being the case, how much more others are going to understand or accept?
BT Song 534 ஒருவித பரவசம்
என்னவோ எனக்கொன்று
சொல்லிட வருகிறாய்
என்னவென்று எனக்கும்
புரியவே இல்லை
ஏனிதைச் செய்கிறாய்
என்பதும் கூட
இதுவரை எனக்கும்
விளங்கவே இல்லை
உணர்ச்சியின் விளைவென
ஒதுக்கவும் முடியல
உள்ளத்தின் கிளர்ச்சியென
ஏற்கவும் இல்லை
ஆயினும் உள்ளத்துள்
ஒருவித பரவசம்
அதைக்கூட புரிந்திட
எனக்கும் முடியல
ரோமம் சிலிர்க்கும்
கண்கள் பனித்தது
நாவுமே குழையுது
நாடியும் ஒடுங்குது
ஆடவும் தோணுது
அனைத்திலும் மேலாக
அமைதி ஆளுது
அதனைச் சொல்ல
நாவும் தயங்குது
ஆயினும் உள்ளமோ
உந்தி தள்ளுது
எனக்கு நடந்ததை
எப்படிச் சொல்ல
என்பது தெரியாமல்
வார்த்தையும் தயங்குது
ஆயினும் அதனையும்
சொல்லத்தான் வேண்டும்
அந்தப் பரவசம்
பிறர் கொள்ள வேண்டும்
நான் கண்ட ஆனந்தம்
பிறர் கொள்ள வேண்டும்
பேரின்ப வெள்ளத்தில்
அவர் மூழ்க வேண்டும்
மத்திகிரி, 26-9-16 (27-9-16) இரவு 12.30
BT Song 534 A kind of bliss
You come
to tell something to me
but I don’t know
what it is
till this day
I cannot understand
why you
do this
I cannot reject it
as mere emotion
I didn’t accept it
as feeling of my heart
yet there is
some kind of bliss
and I am
unable to understand it
hair stand still
and tears are coming
tongue gets twisted
and my pulse is going down
and I want to dance
more than that
I experience some kind of peace
but my tongue
hesitates to share
yet my heart is
forcing me to do it
but words are
hesitating
unable to utter
What actually happened to me?
yet I need to
share all this
and others should
get the same bliss
they should see
this joy in them
and they should drown
in that divine bliss
Mathigiri, 26-9-16, (27-9-16), 12.30 am.
BT Song 535
The one weakness with which I constantly fight is too many ‘negative’ thoughts. By my negative thoughts I often keep myself away from others. But I forgot that if God keeps me away from Him with such negative thoughts what would be my condition. As I thought about it, I wrote this poem.
BT Song 535 எதிர்மறை எண்ணம்
எதிர்மறை எண்ணங்கள்
என்னுள்ளே ஏராளம்
இதனையும் வெல்லத்தான்
நீயுமே உதவணும்
குறைகளைத் தொகுத்து
குணம் காண மறுத்து
அதன்படி தீர்மானம்
செய்வதை மாற்றணும்
எண்ணினால் எத்தனை
என்னுள்ளே இருக்கு
அதை ஏற்கயென்
மனமும் மறுக்குது
இந்தக் குணம் மாற
எனக்கு நீ உதவணும்
நல்லதைக் காண்கிற
மனதையும் தரணும்
குறைகளை காண்பதால்
குறுகியே போகிறேன்
குணம் காண மறுத்தால்
வீணாக ஒடுங்குறேன்
என்னைப் போலவே
நீ காண முனைந்தால்
என்னாகும் என் நிலை
என்பதை மறந்தேன்
நல்லது ஒன்றும்
காணாத போதும்
எத்தனை இரக்கம்
காட்டினாய் எனக்கும்
அதுபோல நானும்
இரங்காத போதும்
எதிர்மறை எண்ணத்தை
நீக்கினால் போதும்
மத்திகிரி, 27-9-16, காலை 5.15
BT Song 535 Negative thoughts
Negative thoughts
Are there plenty in my heart?
and you should help
to overcome them
you should change my nature of
complaining about the shortcomings (in others)
and refuse to see good things in the
and coming to some conclusion after that
how many shortcomings
I have within me
and my heart
refuses to accept them
and you should
help me to change this attitude
and help me to see
some good in others
I become small
only seeing shortcomings
and if I refuse to see good
I limit myself
and I forgot
that if you too
began to see like me
what would become my condition?
though you didn’t see
anything good in me
how much mercy
you showed to me
though I cannot
show mercy like you
at least if I remove negative thoughts
that is more than enough
Mathigiri, 27-9-16, 5.15 am.
Leave a Reply