BT Songs 536 to 540

BT Song 536

The importance of human touch, which Dr. Brand explained beautifully using his medical knowledge and experience, impressed me.  He writes:

I have sometimes wondered why Jesus so frequently touched the people he healed, many of whom must have been unattractive, obviously diseased, unsanitary, smelly. With his power, he easily could have waved a magic wand. In fact, a wand would have reached more people than a touch. He could have divided the crowd into affinity groups and organized his miracles – paralyzed people over there, feverish people here, people with leprosy there – raising his hands to heal each group efficiently, en masse.  But he chose not to. Jesus’ mission was not chiefly a crusade against disease (if so, why did he leave so many unhealed in the world and tell followers to hush up details of healings?), but rather a ministry to individual people, some of whom happened to have a disease.  He wanted those people, one by one, to feel his love and warmth and his full identification with them.  Jesus knew he could not readily demonstrate love to a crowd, for love usually involves touching.— Dr. Paul Brand and Philip Yancey, In the Likeness of God, The Dr. Paul Brand Tribute Edition of Fearfully and Wonderfully Made and In His Image, Zondervan, 2004 p. 158

BT Song 536 அன்பாலே மட்டும்

அறிவாலே உலகையும் ஆள முடியாது

அதிகாரம் காட்டியே வெல்ல இயலாது

பிடிவாதம் செய்வதால் பயனேதும் கிடையாது

அன்பின்றி இவற்றுக்கு மாற்றமும் கிடையாது

உள்ளான அன்பிற்கு உருவம் கிடையாது

ஆயினும் உடலின்றி அது கூட புரியாது

உலகுக்கும் அதையும் உணர்த்தவே எண்ணி

உன் மேனி மூலம் காட்டினாய் அன்று

குருடனை தொட்டு குணமுமே ஆக்கினாய்

குட்ட ரோகிக்கு இரக்கமும் காட்டினாய்

உன்னாடை தன்னைத் தீண்டவும் செய்து

உதிரப்போக்கை நிறுத்தி காட்டினாய்

உன் ஒரு வார்த்தையால் உலகை படைத்தாலும்

ஒவ்வொரு பாவியை தேடி மீட்டாய்

காணாமல் போன ஒரு ஆட்டை மீட்டு

கவனமாய் மீட்டுத் தோள்மீது வைத்தாய்

உன்னைப் போலவே நாங்கள் வாழ

ஒவ்வொரு மனிதனைத் தேடி மீட்கணும்

அதிகம் சாதிக்க ஆத்திரம் கொள்ளாமல்

அன்பற்ற அறிவுக்கு முடிவு கட்டணும்

தன்னிலும் பிறரை உயர்வாக எண்ணி

தனிப்பட்ட மனிதர்க்கு அன்பையும் காட்டணும்

தன்னைப் போல பிறரையும் எண்ணும்

உள்ளம் ஒன்றை உன்னிடம் வேண்டணும்

மத்திகிரி,28-9-16, மதியம் 2.10

BT Song 536 Possible only through love

We cannot rule others through our intellect

We cannot win only through authority

If we remain adamant there is no use

And there is no substitute for love

Inner love has no actual form

Yet it cannot be understood without a body (form)

In order to show that to the world

You demonstrated that love through your body

You touched the blind and gave vision

You showed mercy to the lepers

Allowing touching your cloth

You stopped the bleeding

Though you created the universe in one word

You sought after each sinner to save

Seeking the one lost sheep

You brought it back putting on your shoulder

In order to live like you

We should save seeking each one individually

Not to achieve too much with some agenda

We should put an end to the barren intellect

Considering others greater than us

We should show love to every individual

And we should request only to have

A heart to treat others as we are

Mathigiri, 28-9-16, 2.10

BT Song 537

The lack of proper sleep made me feel very tired.  I couldn’t concentrate on any work properly. So this afternoon when I cannot concentrate much on my reading, I wrote this song expressing my thoughts as prayer.

BT Song 537 குறையென்ன உண்டு

உன்னோடு நான் கொண்ட

உறவொன்று போதும்

உன்னோடு வாழ்கின்ற

உரிமையும் போதும்

எண்ணற்ற துன்பங்கள்

எத்தனை வந்தாலும்

என்னை மீட்க நீ காட்டும்

கிருபையும் போதும்

மேனியில் பலவித

வாதைகள் உண்டு

மேலும் அதனால்

சோர்வு உண்டு

ஆயினும் மனத்துளே

நீதரும் தெம்பு

அதனால் அடைகிறேன்

நீ காட்டும் அன்பு

மனதிலே ஆயிரம்

கேள்விகள் உண்டு

மனது புரியாத

கலக்கங்கள் உண்டு

அத்துடன் அறிவுடன்

போராட்டம் உண்டு

அவற்றுக்கு உன்னிடம்

விடை கூட உண்டு

இத்தனை மட்டும்

போதாது என்று

என்னிலே வீணான

குணங்களும் உண்டு

அவை போடும்

ஆட்டத்தை வெல்ல

ஐயனே உன்னிடம்

அருளுமே உண்டு

இவைகள் எல்லாம்

உலகோடு முடியும்

நித்திய வாழ்வு

உன்னோடு உண்டு

அதுவும் இப்போது

தொடங்கிய பின்னரே

அடிமைக்கு இனியென்ன

குறைகளும் உண்டு

மத்திகிரி, 28-9-16, மதியம் 2.50

BT Song 537 What else I lack

The relationship that I have with you

Is enough for me?

The right that I have to live with you

Is enough for me?

How many troubles

Might come

The grace that you show to redeem me

Is enough for me?

Many are the suffering

In this body

Therefore I become

More tired of them

Yet through the strength

That you give

I receive the love

That you show to me

Many are the question

That I have in my mind

Therefore I get

Many disturbances which I don’t understand

Along with it

I have many struggles with my intellect

And I have answer for them

From you

Not enough to have

All these

I have many

Unwanted nature within me

But to overcome

Them all

O Lord

You have grace also for me

All these struggles

Will end with this world

But eternal life is

Always with you

Once that too

Already began here and now

What else this slave

Lack any more?

Mathigiri, 28-9-16, 2.50 pm

BT Song 538

For comments see the article ‘His Body’ in the blog.

BT Song 538 அவன் மேனி

காலும் கையுமாய் மாறாச் சொன்னான்

கடவுளை உலகுக்குக் காட்டச் சொன்னான்

உன்னையும் என்னையும் சேர சொன்னான்

ஒருமித்து அதனையும் செய்யச் சொன்னான்

நல்ல வேளை அவன் இங்கே இல்லை

நம்மிடை உருவமாய் வாழ வில்லை

அவன் உருவாய் நம்மை மாற்றி வைத்தான்

அதன் மூலம் உலகுக்கு காட்சி தந்தான்

இந்தப் பேறு நாமும் பெற்றிடவே

எந்த தவம் செய்ய வேண்டாம்

அவனது மேனியில் ஒரு அங்கமாக

அனுதினம் வாழ்வது ஒன்று போதும்

நம் குறைகளை நாம் எண்ண வேண்டாம்

நம்மால் ஆகாது எனச் சொல்ல வேண்டாம்

நம் பங்கை நாம் நாளும் செய்ய

அவன் பங்காய் அதனையும் மாற்றிடுவான்

எவரெல்லாம் இந்த பேறு பெற்றார்

என்பதை நாம் எண்ணிப் பார்த்தால்

“நானல்ல  அவன் என்னில் வாழ்கிறான்”

என்று சொல்கின்ற தொண்டர்களே

மத்திகிரி, 30-9-16, மதியம் 2.10

BT Song 538 His Body

He asks to be His hands and legs

And asked us to show God to this world

He asked us to get united (in Him)

And He expected us to do it with a spirit of unity

Fortunately He is not here (on this earth)

And He is not living amidst as an Icon

He changed us as His icon

And He showed His darshan (vision) to this world

We need not perform any tapasya (austerity)

In order to get this blessed status

It is enough for us to live

Each day as a member of His body

We need not count our shortcomings

And we need not say that it is not possible for us

Once we do our part (as the member of His body)

Rest He will do as his share

And if we think that

Who are those who got this privilege?

Only those true bhaktas who can tell that

“It is no more I but He lives in me”

Mathirigi, 30-9-16, 2.10 pm.

BT Song 539

The beauty of bhakti is that it helps a bhakta to feel at home with the Lord. We need not absorb any formality.  As we have our inherited freedom in our home, we can have access with the Lord that too in our own terms.  I celebrate that kind of bhakti in the Lord each day of my life. 

BT Song 539 அமைதி காண்பேன்

உன்னிடம் வருகின்ற நேரமிது

உன்னுடன் பேசும் காலமிது

என் மன ஓட்டத்தை உன்னிடம் சொல்லி

உன்னுடன் உரையாடும் பேறுமிது

உனக்கென நேரமும் ஒதுக்கணுமா

வர வேண்டி அனுமதி கேட்கணுமா

உரிமையைச் சொல்லியும் காட்டணுமா

எவரேனும் எனக்காய்ப் பேசணுமா

என் வீட்டில் எனக்கென்ன கட்டுப்பாடு

என் மீது உனக்கென்ன மட்டுப்பாடு

நம்மிடை உண்டோ குறுக்கீடு

இல்லையே நம்மிடம் முரண்பாடு

வீணான வார்த்தைகள் கூற மாட்டேன்

வேண்டாத வாதங்கள் செய்ய மாட்டேன்

வாயால் பேசியும் ஒயமாட்டேன்

வீணாக நேரத்தை போக்க மாட்டேன்

என்னோடு நீ வந்து இணைந்துகொள்ள

மெளனமாய் உன்னிடம் சொல்லிடுவேன்

உன்னிடம் வேண்டும் போதினிலே

வேறொன்றில் சிந்தையை வைக்க மாட்டேன்

நேரத்தை கணக்கிட்டு பார்க்கமாட்டேன்

நானாக ஓயும் வரை நிறுத்த மாட்டேன்

எப்போது நினைத்தாலும் வந்திடுவேன்

இதில் மட்டும் அமைதியைக் கண்டிடுவேன்

மத்திகிரி, 2-10-16, இரவு 11.05

BT Song 539 will find peace

This is the time to come unto you

This is the time to talk with you

and sharing all the streams of my thought

this is the time to have fellowship with you

do I need to set aside time for you

Should I seek your permission to come unto you

do I need to remind about my right with you

or do you want someone to go between us

where is the restriction for me in my own home

Where is the limitation for me with you

is there any interference between us

and there is no contradiction between us

I won’t utter unnecessary words

I won’t do unnecessary arguments

I won’t become tired by talking too much

and I won’t waste the time unnecessarily

when you come and join me

I will share with you silently

when I come and pray to you

I won’t have other things in my mind

I won’t even count the time

I won’t stop, till I become tired of myself

whenever I think I will come unto you

and I will find peace only in this

Mathigiri, 2-10-16, 11.05 pm.

BT Song 540

Complete trust in the Lord is the only pre-request for faith.  And I always ask God to give only this kind of heart which will completely resign to His will and dealing.

BT Song 540 எனக்கு உடன்பாடு

இது போதும் எனக்கு

இனி சொல்ல உனக்கு

தேவை ஒன்றும்

இனியில்லை எனக்கு

கண் கொண்டு பார்த்தாயே

காதாரக் கேட்டாயே

மழலையென் குரல் கேட்க

மகிழ்வோடு வந்தாயே

உன்னிடம் சொன்னபின்

என்பாரம் உனதாச்சு

இறக்கி வைத்த பின்

என் மனம் லேசாச்சு

எப்போது தரவேண்டும்

என்பதை அறிவாயே

உன்சித்தம் எதுவென்று

நானும் புரிந்தேனே

இடையில் சில நேரம்

என் மனம் தவித்தாலும்

உன் மீது நான் வைத்த

நம்பிக்கை குறையாது

உண்டென தந்தாலும்

இலையென மறுத்தாலும்

அதுகூட உன்பாடு

எனக்கதில் உடன்பாடு

இந்த மனமொன்று

எப்போதும் அருள்வாயே

இதுவன்றி வேறொன்றை

தேடவும் இல்லை

மத்திகிரி,  இரவு 12-10, 2-10-16 (3-10-16)

BT Song 540 I agree

This is enough

and I don’t have

anything more

to tell you

your eyes have seen me

your ears have listened to me

and to listen the words of this baby

you came unto me

my burden become yours

once I shared with you

once I downloaded it

my heart becomes very light

you know

when should give

and I too understood

what is your will

though I am

troubled sometime

the trust that I have in you

will never diminish

whether you give me

or say no

I have complete

agreement with it

always bestow only

this kind of heart

and I don’t need

anything other than this

Mathigiri,  12-10,  pm. 2-10-16 (3-10-16)

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *