Secular Song 476
The way we can learn good lessons about life is only through troubles and trials in life. They are the best teachers and no one can teach about it to us or others cannot learn it for us. What we learn through them in life we can help others also to learn its value in their life too.
Secular Song 476 வாழ்க்கைப் பாடம்
தொல்லைகள் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை
துன்பங்கள் வராமல்
வாழ்வும் இல்லை
ஆயினும் இவற்றால்
சோர்ந்து போனால்
அதன்பின் முன்னேற
வழியேதும் இல்லை
தன்போல் தொல்லைகள்
தேடி வந்தாலும்
நாம் போய் அவற்றை
வாங்கிக் கொண்டாலும்
இறுதியில் அவற்றை
எதிர்கொள்ள வேண்டும்
எவ்வித மேனும்
மேற்கொள்ள வேண்டும்
துன்பங்கள் கண்டு
துவண்டு போகாது
துன்பம் தருகின்ற
பாடத்தைப் பயின்று
அதில் வருகின்ற
அனுபவம் கொண்டு
அவற்றை வென்று
வாழ்ந்திட வேண்டும்
அவை தரும் கல்விக்கு
ஈடிணை இல்லை
ஏட்டினில் அவற்றை
கற்பதும் இல்லை
சொல்லித் தந்திட
யாருமே இல்லை
நமக்காக மற்றவர்
கற்பதும் இல்லை
அதனாலே அவற்றின்
அருமையை அறிந்து
அவை தரும் பாடத்தை
வாழ்க்கையில் பயின்று
அதன்மூலம் நாமும்
வாழ்வை வென்று
பிறரும் பயின்றிட
உதவணும் நன்று
மத்திகிரி, 29-09-2018, காலை 9.00
Secular Song 476 The lesson in life
There is no life
Without troubles
We cannot live
Without facing any trials
But if we are
Defeated by them
There is no hope
To press forward in life
Whether the troubles
Come on their own
Or we go and voluntarily
Get them
At the end we need
To face them
Somehow, we need
To overcome them
Not get depressed
By seeing the troubles
But learning the lesson
Which they give
Gaining the
Experience which comes out of it
By overcoming the troubles
We need to live
There is no comparison for them
as we learn through them
We cannot even learn
Them through texts
There is no one
To teach it to us
Others are not
Going to learn it for us
Therefore knowing
The importance of them
Learning the lesson
Through them in life
Through them
Overcoming the life
We should also help
Others to learn it properly
Mathigiri, 29-09-2018, 9.00 a.m.
Secular Song 477
As social animals we human beings can never say that ‘my way is the only high way’. Of course, when time comes, we need to make some decisions on our own. But as we live with others, we need to consider their needs and life also while we take any decision on our own. Collective decision is good even for an individual about deciding her life.
Secular Song 477அனைவரும் வாழ
எதற்குமே கிடைக்காது
எளிதான விடையும்
எவரும் அறியார்
முழுதான பதிலும்
அவரவர் தருவார்
அனுபவம் மூலம்
அனைவரும் அதையே
ஏற்றிட வேண்டும்
ஆயினும் அனைவரும்
தன் பதில் ஒன்றே
சரியென எண்ணி
வாதிக்கும் போது
இறுதியில் ஒன்றாய்
வாழ்வது என்பதும்
இயலாது போகும்
மனிதனாய் பிறந்து
கேள்விகள் கேட்டு
பதில்களைத் தந்து
இறுதியில் பொதுவான
நியதிகள் வகுத்து
முரண்கள் வந்தால்
சமயத்தில் களைந்து
வாழ்வது ஒன்றே
மனிதர்க்கு உகந்தது
இயற்கையாய் வாழும்
விலங்கினம் கூட
இதுபோல் நியதிக்குள்
இசைபட வாழ்ந்து
இதுவரை தம்தம்
இனத்தைக் காத்து
இதையே நமக்கும்
சொல்லி தந்தது
ஆயினும் நாம் மட்டும்
அகந்தையினாலே
என்வழி தனிவழி
என்று கூறி
தனக்கெனத் தனித்தனி
பதில் தரும் போது
ஒன்றாய் வாழ்ந்திட
வழிபிறக்காது
எளிதில் கிடைக்கா
எவ்வித விடையும்
குழுவாய் தேட
ஒருவிதம் கிடைக்கும்
அதையே பொதுவான
நியதியாய் ஏற்றால்
அனைவரும் வாழ
வழிவகை பிறக்கும்
மத்திரி, 29-09-2018, மதியம்2.45
Secular Song 477 For all to live
No easy answer
For everything in life
No one knows
The complete
Answer for all
Each one will give
Based on her own experience
Why should all
Accept it for everyone?
But when each one
Began to argue
That her own answer
Is best one
Finally to live
All collectively
Becomes an
Impossible task for us
It is better for us
As human beings
By asking questions
And giving answer
Finally arriving
To a common answer
By removing contradiction
By reaching concession
Even the animals
Which lives based on the law of nature?
Living based
On that nature law
So far managed
To live properly
And managed
To preserve their own group
But we alone
Because of
Our arrogant nature
By saying that
‘My way is high way’
And each began to
Live separately
A collective life
Becomes impossible for us
The answer
Which is not easy to get?
Will be arrived
When we search for it as a group
And if we all
Accept it for all
Then there will come
Opportunity to live collectively
Mathigiri, 29-09-2018, 2.45 p.m.
Secular Song 478
Today I realized that too much reading really took a toll on me. If I merely read that won’t affect me. But while reading, I will begin to reflect on certain points with which I agree or disagree. Sometimes immediately I will record them in the margin of the book or in a separate paper. That day, I will continue to reflect on that point and will sometimes end up with some kind of brainstorm. Apart from reading, I will take notes from the book and will arrange the points topic wise. All these activities consume not only much time, but also both my physical and mental energy. Several times I feel exhausted. Apart from this as I read most of the books in English, the language also became a big impediment—not only to understand the book but also record my response. So, this night I thought that I should take a break from my reading to relax both in body and mind to recover from over-exhaustion
Secular Song 478 அதிகப் படிப்பு
வாசிப்பை யோசிப்பை நிறுத்திவிட்டு
வாழாதான் மீண்டும் பழகிக்கொள்
வாசித்து வாசித்து வாழ்வினை இழந்தாய்
யோசித்து யோசித்து மனதைத் துறந்தாய்
இதுவரை படித்தவை நினைவில் இருக்கா
எடுத்த குறிப்பால் பயனேதும் இருக்கா
படித்ததின் படியே உன் வாழ்வு இருக்கா
அதனால் புதிய ஞானம் பிறந்திருக்கா
சிலநாள் படிப்பதை நிறுத்தியே பாரு
அதன்பின் வந்திடும் தெளிவினை உணரு
படிக்காத மேதைகள் வாழ்ந்ததைப் பாரு
படித்த மூடரின் நிலையையும் உணரு
கிடைத்தவை எல்லாம் படிப்பதினால்
குழப்பமே மிஞ்சும் அதை நீ உணரு
பொழுது போக படிப்பது வேறு
பொழுதெல்லாம் படித்தால் வந்திடும் கேடு
பாசமும் நேசமும் படிப்பதன் மூலம்
வராது என்பதை உணர்ந்திட வேண்டும்
மனிதனாய் வாழும் தகுதியை அறிய
மூளையைக் கசக்கிப் புரியவா வேண்டும்
வாசித்து வாசித்து இழந்தது போதும்
யோசி அதன்பின் உண்மை புரிந்திடும்
எஞ்சிய வாழ்வை இழந்துவிடாமல்
மிஞ்சிய படிப்பை நிறுத்த வேண்டும்
மத்திகிரி, 2-10-2018, இரவு, 11.35
Secular Song 478 Too much reading
Better try to live the life properly
By stopping reading and thinking
By reading too much you lost your life
By thinking too much you renounced your mind
Do you remember all that you have read so far?
Is there any use in all the points that you took?
Is your life go as you have read
Did you gain new wisdom by such activities?
Better stop reading for few days
Then realize the clarity that will come because of it
See the way the wise people lived without education
And understand the condition of the educated fools
If you began to read all that you get on your hand
Only confusion will be remaining at the end
Reading for time pass is one thing
But if you read all the time only trouble will come
You should understand that
Affection and love won’t come through reading
Do you need to quash your brain?
To know the qualification to live
Enough by losing too much by reading
Think then you will understand your situation
Not losing the remaining life
You should stop too much reading
Mathigiri, 2-10-2018, 11.35 p.m.
Secular Song 479
See the article ‘All Rounder’ for comments.
Secular Song 479 ஏதுமே பாரமில்லை
தேவை இல்லா பாரமுடன்
தெளிவு இல்லா வாழ்க்கையில்
திசையும் தெரியாது போகையிலே
தொலைந்து போவது சகஜம்தான்
ஏதோ பிறந்தோம் என்றெண்ணி
என்னடா வாழ்வு என புலம்பி
நாளையும் பொழுதையும் நகர்த்துவதால்
நல்லது எதையும் பார்ப்பதில்லை
விட்டால் போதும் என்றெண்ணி
பட்டது போதும் என புலம்பி
விட்டு விட்டு ஓடுவதால்
விரும்பியே வாழ்வும் கிடைப்பதில்லை
ஏதோ வந்து மாட்டிக்கொண்டேன்
என்னவோ கிடந்து உழலுகின்றேன்
என்று அனுதினம் புலம்புவதால்
எவ்விதப் பயனும் கிடைப்பதில்லை
இதுதான் வாழ்வின் உண்மை நிலை
அதை மீற வழியில்லை
என்பதை நன்கு உணர்ந்து கொண்டால்
எதிர்கொள்ளத் தயக்கம் வருவதில்லை
இவருக்கு ஏதுமே பாரமில்லை
எவ்வித குழப்பமும் வருவதில்லை
திசையை அறிந்து போவதாலே
தொலைந்திட அவருக்கு வாய்ப்பில்லை
மத்திகிரி, 3-10-2018, இரவு, 11.10
Secular Song 479 No more a burden
With unnecessary burden
In a life without clarity
When one walks without knowing the direction
It is quite common to get lost
If one thinks that somehow, she is born
And lamenting: what kind of life is this
If one spends days and time like this
She cannot see anything good in life
Thinking that escape is the only means
Thinking that: Enough I have suffered
If she tries to run away from life
She will never get what she desires
Somehow, I get trapped
I am going round and round in it
And if one laments like this each day
There is no use in it
But if she realizes that
This is the reality in life
And there is no means to escape from it
She won’t hesitate to face the challenge
Nothing is a burden for such people
They never face any confusion
As they go knowing their direction
There is no chance for them to get lost
Mathigiri, 3-10-2018, 11.10 p.m.
Secular Song 480
My mother often rebukes me as I start my cooking at 6.00 am. She always says ‘we are only two and the same food we are eating each day. But the way you began the cooking early in the morning might make others think that you are cooking varieties of food for us.’ There is some truth in it. Of course I start my cooking early in the morning, as I plan my days according to my schedule. It is true that we eat the same food almost everyday without any change the whole month and even in the year. But when I go to the kitchen I will give only 30 to 45 minutes for cooking. Even if it goes beyond a few minutes after that then I will become upset as I cannot catch my other work. The way I run and keep busy in everyday life really became a burden to me and I find it difficult to escape from it. I plan each hour of a day and it should go accordingly and no one should trouble that routine and discipline. It is interesting, that while my mother rebukes me, I also noticed that she too has the same planning for her daily life and she never likes to get disturbed. So in order to rebuke me for going a bit slow I wrote this song—of course very QUICKLY.
Secular Song 480 பறக்காதே
பொறுமை சற்று அதிகம் தேவை
இதைப் புரிந்ததால் உனக்கு நன்மை
பறக்கப் பறக்க ஓடி ஆடி
பதட்டம் அடைந்தால் லாபம் இல்லை
உனக்கு வயசும் அதிகம் ஆச்சு, அதை
உணர்ந்தால் உனக்கு நன்மையாச்சு
உன் தேகம் தளர்ந்தும் போச்சு
அதை உணரும் நேரம் வந்தும் ஆச்சு
குழந்தை குட்டி குடும்பம் இல்லை
கூட்டம் இரைச்சல் வீட்டில் இல்லை
ஏதோ இரண்டு வயத்துக்குப் பொங்க
இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையும் இல்லை
தொட்டதெற்கெல்லாம் அவசரம் எதற்கு
தேவை இல்லாத வேலைகள் எதற்கு
அரக்கப் பறக்க செய்த பின்னாலே
அலுத்து சலித்து கொள்வது எதற்கு
வகை வகையான சமையல் இல்லை
வாயும் ருசியாய் கேட்டவும் இல்லை
வெந்ததைத் தின்று வாயைக் கழுவ
போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை
அமைதியாய் இருந்து பொறுமையாய் செய்து
ஆட்டம் ஓட்டம் சற்றே குறைத்து
பிறருக்கு வீணாய் பாரம் இல்லாமல்
போகிறவரைக்கும் பொறுமையைக் காறு
மத்திகிரி, 15-10-2018, இரவு, 11.30
Secular Song 480 Don’t be hasty
You need much patience
If you understand this, it is good for you
There is no gain in
Doing things in a hurry
You become old
If you realize this that is good for you
Your body became week
The time has come to realize this
You don’t have your own family and children
There is no noise in the house
There is no need for this much hast
To cook food for two stomachs
What is the need for this much hurry in everything
Why you do unnecessary works
Once you have done things in haste
Then why you get frustrated?
There is no variety of cooking
The mouth is also not demanding tasty food
But there is no limit for this much activity
For to fill two stomachs
Remaining calm, do things peacefully
Reducing excess of works
Not becoming unnecessary burden to others
Till you depart, better keep some patience
Mathigiri, 15-10-2018, 11.30 p.m.
Leave a Reply