BT Song 541
Unloading our burden on the Lord is not some ontological concept or a utopian kind of psychological comfort for me. It is more than that. Because in the past I literally experienced how the Lord arranges someone to carry my burden when I trust Him and ready to unload it on Him. As long as I want to carry, He allows it to understand my limitations. But the moment I feel that I cannot bear it anymore and unload it on the Lord, it is no more my burden and becomes His concern. My experience can endorse thousands of times that He sends the right kind of people to carry when I was about to drop it. But he never comes and snatches it violently as sometimes we humans do in the name of helping someone to unload their burden.
BT Song 541 மீண்டும் வருவேன்
என்னவோ உன்னிடம் சொல்லி விட்டேன்
இனி உன்பாடு நானறியேன்
எத்தனை எளிதாக முடித்துக் கொண்டேன்
என் பாரம் உன் மீது வைத்து விட்டேன்
நானே சுமந்து பார்த்தும் விட்டேன்
அதன் பாரம் தாங்காமல் ஓடிவிட்டேன்
அதன்பின் உன் வார்த்தை நினைவில் வர
அடித்துப் பிடித்து ஓடி வந்தேன்
என் நிலை கண்டு இரக்கம் கொண்டு
ஏதுமே பேசாமல் கேட்டுக் கொண்டாய்
இதுயென்ன புதிதா என்று எண்ணி
என்நிலை நீயும் புரிந்து கொண்டாய்
என்நிலை நானே எண்ணி எண்ணி
ஏதுமே பேசாமல் வந்து நின்றேன்
ஏனிதைச்செய்கிறேன் என்று எண்ணி
என்மீது நானுமே கோபம் கொண்டேன்
உன் மீது நம்பிக்கை வைத்த போதும்
ஊருக்கு அதையே சொன்ன போதும்
ஏற்ற நேரம் வந்த போது
என்னவோ அதையும் நான் மறந்தேன்
ஆனால் பொறுமை காத்து நின்றாய்
அத்துடன் இரக்கமும் சேர்த்துக் கொண்டாய்
என் வரவை நீ பார்த்து நின்றாய்
இதற்கென என்னையும் மீட்டுக் கொண்டாய்
இத்தனை எளிய வழி இருக்க
எதற்கு வீணாக சுமந்து நின்றேன்
என்பதும் எனக்கும் புரியவில்லை
இனி செய்வேன் எனச் சொல்ல முடியவில்லை
ஆனால் உன் குணம் நானறிவேன்
அடியார்க்கு இரங்கும் உனையறிவேன்
எங்கெங்கு ஓடியே திரிந்தாலும்
இறுதியில் உன்னிடம் வந்து நிற்பேன்
மத்திகிரி, 3-10-16, காலை 6.00
BT Song 541 Will come again
Somehow I have shared with you
And it is now your problem
How simply I have finished my job
And I loaded my burden on you
I carried me on my own efforts
And run away due to its burden
Then as I remembered your words
And returned back quickly to you
Having pity on my condition
You too listened without arguing
You too understood me
As this is not new for you
Thinking often my own nature
I come back to you silently
I become very upset with me
Why I do this often
Though I have trust in you
And proclaim this alone to all
When the right time has come
Somehow I forgot about it
Yet you kept very patience with me
Added to that you have pity on me
You waited only for my arrival
And only for this you have redeemed me
When there is such a simply means
Why I carried unnecessarily
I don’t understand that
I cannot say that I won’t repeat it again
Yet I know your nature
I know the compassion that you have for us
Wherever I wander away
Finally I will come back only to you
Mathigiri, 3-10-16, 6.00 am
BT Song 542
Another song in worship of the Lord thinking who He is.
# Kalpataru is a mythical tree which fulfils all the wishes of anyone who stands under it and is known as ‘karpaka vruksham’ in Tamil.
BT Song 542 புகழ்ந்திடுவேன்
கருணைக் கடலே கற்பகத் தருவே
கண்ணுக்குத் தெரியாத அற்புத பொருளே
கண் இமை போல எம்மையும் காக்கும்
கருணையின் வடிவே கருணாநிதியே
பொற்பதமே போற்றிப் புகழ்ந்திடுவேன்
பொழுதெல்லாம் உன்னடி பணிந்திடுவேன்
அருளையே நினைத்து உருகிடுவேன்
ஆனந்தம் மேலிட பாடிடுவேன்
அருளைப் பெற்றோர் அறிந்திடுவார்
அவரும் மகிழ்ந்து இணைந்திடுவார்
என்னுடன் சேர்ந்து பாடிடுவார்
என்போல் ஆனந்தம் கண்டிடுவார்
கண்கண்ட தெய்வமாய் நீயிருக்க
உன்காவலும் எம்மேல் நிறைந்திருக்க
விண்ணாண்ட பேர்களும் பணிந்திருக்க
விரைந்து வந்தேன் அன்பில் திளைக்க
உன் புகழ் பேசிடப் பொழுது போதாது
உனதருள் பாடிட வார்த்தையும் கிடையாது
உன் மேன்மை எண்ணிடச் சிந்தையால் முடியாது
ஆயினும் இவையன்றி நான் வாழ இயலாது
மத்திகிரி, 3-10-16, மதியம் 2.20
BT Song 542 I will praise
Oh the ocean of compassion and the Kalpataru#
he wonderful invisible Being
he one who protects us like the apple of your eyes
the very embodiment of compassion and treasure of kindness
I will praise you by hailing your holy feet
I will worship at your feet all the time
I will melt thinking about your grace
I will sing as joy overflows
only those who received grace will understand this
they too will join me happily
sing together with me
and rejoicing like me
As you are there as my visible deity
and your protection is complete over me
even the angels also bow unto you
and I rushed to your presence to enjoy that love
time is not enough to sing your glory
there are not enough words to sing about your grace
I cannot think about your greatness even with my mind
yet I cannot live without doing these
Mathigiri, 3-10-16, 2.20 pm
BT Song 543
As I got up early in the morning, I spent more time in worshiping the Lord by sitting in silence. That time as I got the inspiration to sing about Him, I began to sing this song spontaneously in my mind. Then I wrote it and sang in praise of Him.
BT Song 543 வந்து கொண்டாடு
வாருங்கள் எல்லோரும் பாடிடவே
வள்ளலைப் போற்றிக் கொண்டாடிடவே
சேருங்கள் எல்லோரும் சென்றிடவே
சேவடி தன்னைப் பணிந்திடவே
சொல்லோடு சொல்லினைச் சேர்த்திடுவோம்
சந்தம் அதனோடு கூட்டிடுவோம்
நன்மைகள் செய்ததைப் பாடிடுவோம்
நன்றி அதனுடன் சேர்த்திடுவோம்
கையோடு கைகோர்த்து ஆடிடுவோம்
கைத்தாளம் அதற்கும் போட்டிடுவோம்
இசையுடன் இன்னிசை பாடிடுவோம்
இதயம் நிறைந்துமே வாழ்த்திடுவோம்
துதிகளின் மத்தியில் வாசம் செய்வான்
துதிக்குப் பாத்திரம் ஆகிடுவான்
நாமும் துதித்துப் பாடும்படி
நமக்கு நன்மைகள் செய்திடுவான்
இந்தப் புண்ணியம் செய்ததுயாரு
என்பதை நீயும் எண்ணிபாரு
எல்லாமே அவன் செய்தது என்று
என்னோடு நீயும் வந்து கொண்டாடு
மத்திகிரி, 4-10-16, காலை, 5.00
BT Song 543 Come and celebrate
You all come to sing
to celebrate the charitable one
you all join to celebrate
and to worship the noble feet
let us join words with words
and add beautiful music to it
let us sing about the goodness that he has done
and add thankfulness with it
let us join our hands together and dance
and let us clap accordingly
let us use sweet music to sing
and praise him with full heart
He dwells among praise
He deserves our praise
when we sing and praise him
he will bestow more good things to us
Who is the one who earned such merit?
think about it only
all are His divine act
and you come and celebrate with me
Mathigiri, 4-10-16, 5.00 am.
Peace with God is possible only when I have peace with me, with others and even with nature/creation. As long as I have a strained relationship with anyone of these, then I cannot enjoy the peace of God within me. Reconciliation with myself, with others and nature/creation is a precondition to detain the peace which God promises. I am thankful as He set this as a condition to receive His peace.
BT Song 544 அமைதி
ஒருவித அமைதி உள்ளத்தில் இருக்க
அத்துடன் உனது கிருபையும் அணைக்க
எத்தனை இனிமை ஆனது உறவு
நம்மிருவரின் சந்திப்பு உயர்வே ஆனது
நீதரும் அமைதி நிரந்தரமானது
நினைவொடு இதயத்தை என்றும் ஆளுது
அறிவுக்கும் அப்பால் உணர்வில் கலந்து
அகத்திலும் புறத்திலும் நிம்மதி தருகுது
நானே ஆயிரம் வழிகள் அமைத்து
நாளும் பொழுதும் எங்குமே தேடுறேன்
பெற்றதும் நிரந்தரமானதாய் இல்லை
அதில் முழுமை காணவும் இல்லை
உன்னில் அமைதி நான் பெற வேண்டி
பிறருடன் உறவைச் சீர் செய்யச் சொன்னாய்
உறவினில் ஆயிரம் விரிசலை வைத்து
உன்னிடம் வருவதில் பயனிலை என்றாய்
ஊரார் உலகார் உறவொடு சுற்றார்
இவரொடு உறவைப் பேணிடச் சொன்னாய்
இவரது உறவில் நீதரும் அமைதியை
நிரந்தரமாக பார்த்திடச் சொன்னாய்
பிறரை ஒதுக்கி மனதைச் சுருக்கி
என்னை நானே உயர்வாய் எண்ணி
அறிவின் ஆணவம் தலைக்கு ஏற
அதுவே அமைதி என நான் எண்ண
தோல்வியை ஏற்று உன்னிடம் வந்தேன்
தயவாய் இரங்கு என்று கேட்டேன்
திருந்தும் வழியை மீண்டும் உரைத்துத்
தயவுடன் அளித்தாய் அமைதியை என்னில்
மத்திகிரி, 6-10-16, காலை, 9.45
BT Song 544 Peace
Some kind of peace dwells within me
along with it your grace surrounds me
how sweet become our relationship
and the fellowship that we have indeed is great
the peace that you give is permanent one
it lord overs my thought and heart
it gives peace both in and out
transcending my intellect and mingling with my senses
I seek everywhere all the time
creating my own ways and means
and what I got never remains permanently
and I cannot find complete satisfaction in it
In order to receive your peace
you ask me mend my relationship with others
there is no use to come unto you
keeping so many strains in relationship
You ask me to maintain my relationship
with near and dear ones
and you ask me to see your permanent peace
which you bestow amidst these relationship
when I thought that that is the real peace?
and by rejecting others and shrinking my heart
thinking me as great one
as the pride become too much in me
accepting my defeat I come unto you
I begged you to show mercy on me
and showing the path of repentance
again you restored back your peace within me
Mathigiri, 6-10-16, 9.45 am.
BT Song 545
Rejection is the worst punishment in human life. Not only do we feel rejected, but the way we too reject others is a cruel concept according to my understanding. Of course we cannot agree with everyone. But agree to disagree and continue to accept others as they are part of human nature. For me the very purpose of Incarnation is to demonstrate this and every bhakta is expected to follow it, if she claims to be the follower of the Lord.
BT Song 545 ஏற்றுக் கொள்ளணும்
ஏற்றுக்கொள்ள ஆட்களும் வேண்டும்
ஏனென்று கேட்க மாந்தரும் வேண்டும்
வேண்டாம் என்று ஒதுக்க பட்டு
உலகில் எவரும் வாழாமல் இருக்க–ஏற்றுக்….
ஒதுங்கி வாழவே பிறக்க வில்லை
ஒதுக்கி வாழ்ந்து பயனும் இல்லை
குற்றம் குறைகளை மட்டுமே பார்த்தால்
குணம் கொண்டவர் எவரும் இல்லை–ஏற்றுக்….
நம் குணம் கண்டா ஆட்கொண்டான்
என்னவோ மன்னித்து ஏற்றுக் கொண்டான்
அவன் செய்ததை நாமுமே செய்து
அவனைப் போலவே மன்னித்து ஏற்கணும்–ஏற்றுக்….
யாரும் எனக்கு தேவையும் இல்லை
என்று வாழ்பவர் மாந்தரும் இல்லை
இந்த உண்மை புரிந்துவிட்டால்
எவரையும் ஒதுக்கத் தேவையும் இல்லை–ஏற்றுக்….
கடவுளும் தன்னையே காட்ட வேண்டி
கடைசியில் வந்தான் மனிதனாக
தன்போல் தோன்றிக் காட்சி தராமல்
நம்போல் வாழ்ந்தான் மனிதனாக–ஏற்றுக்….
இறைவனே இதையும் செய்தான் என்றால்
எத்தனை அதிகம் நாமும் செய்யணும்
அவனைத் தொழுதிடும் பக்தராய் இருந்தால்
அதையே நாமும் முதலில் செய்யணும்–ஏற்றுக்….
மத்திகிரி, 7-10-16, மதியம் 2.50
BT Song 545 Should accept
we need others to receive us
we need people to inquire about our welfare
not to live as unwanted one in this world
rejected by everyone–we need….
we never born to keep away from all
there is no use in such life
if we only see the shortcomings alone
there is none with good nature–we need….
Did he ever count only our good nature?
somehow he forgave us and received us
doing exactly the same as he has done
we should accept others by forgiving–we need….
They are not human beings
Who says that they don’t need anyone?
once they understood this truth
there is no need to reject anyone–we need….
God too in order to reveal himself
came finally as a human being
suddenly never appearing as he is
he too lived as a human like us–we need….
even if God too has done like this
how much more we should do
if we are his bhaktas
we too should do that first–we need….
Mathigiri, 7-10-16, 2.50 pm.
Leave a Reply