Secular Song 481
Not being one-sided like an even balance
Is an ornament to the wise.—Thirukkural, 118, tr. M. Rajaram, New Delhi, Rupa & Co, 2009, p.25
As the Sabarimala controversy is going on these days, when I listen or read about it, I wonder where lies the truth? Each side argues as if they alone hold the truth to their side. Similarly when I read about Orientalism, I find it difficult to understand who is correct in evolving it. So as I was thinking about it, I wrote this song. See my article ‘Sabarimala in the blog.’
Secular Song 481 நியாயமான பார்வை
எத்தனை எளிதாக
கருத்துச் சொல்லலாம்
இருபுறம் உள்ள
உண்மையைப் பாராமல்
ஒரு முகமாக
பார்த்திடும் போது
முழுவதுமாக
உண்மையும் புரியாது
குறையும் நிறையும்
பார்வையில் உள்ளது
என்று கூறி
தப்பிக்க முடியாது
எதைப் பார்க்க நாமும்
விரும்புறோம் என்பதில்
மட்டுமே உள்ளது
பார்வையின் தீர்ப்பும்
ஆயினும் அதுவே
இறுதியும் ஆகாது
அதற்கும் கூட
காரணம் உள்ளது
குறை நிறை இரண்டையும்
எவ்விதம் பார்க்கிறோம்
என்பதில் உள்ளது
உண்மையின் நிலையும்
இத்தனைக் கோணங்கள்
உள்ள நிலையில்
எவ்விதக் கருத்து
நாமும் சொல்வது?
அதற்கான தீர்வை
வள்ளுவன் தந்துள்ளார்@
அதன்படி சொல்வதே
யாருக்கும் நல்லது
தூக்குக் கோலின்
முள்ளைப் போல
ஒருபுறம் சாயாமல்
இருந்திடும் போது
சொல்லிடும் கருத்தின்
உண்மையும் விளங்கும்
சொல்லிடும் முறையில்
நியாயம் இருந்திடும்
மத்திகிரி, 18-10-2018, இரவு, 11.45
@சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி—குரள் 118
Secular Song 481Proper views
How easily
We can give our view
Not seeing the
Truth on both sides
When we see
From one side
We cannot see
The whole truth
We cannot escape
By saying that
Correct or wrong
Is only in our view
The justice of
Our view is also
Depends upon
Which side we want to see
Even that also
Won’t become final one
There is one
Reason for that
The truth also hangs
How we view
Both the shortcoming
And good side
As so much
Views are there to see the point
How to share
Our view finally
Thiruvalluvar has
Given the final verdict for that
Doing accordingly
Is good for all
When we remain
Neutral not
Taking one side
Like the needle in a balance
The truth in our
Point of view will be clear
And there will be
Justice in the way we share our view also
Mathigiri, 18-10-2018, 11.45
Secular Song 482
When I read about the way some people read books in their life overwhelmed me. For example Gandhiji, amidst his busy life, spent much time reading books. But the beauty in learning is that it needs to be shared and one should try to live up to the level of her learning. As I was thinking about this, I wrote this song.
Secular Song 482 கல்வி
அறிவுக்கு எல்லை
வகுத்தவர் இல்லை
அறிந்திட விழைந்தால்
தடைகளும் இல்லை
கற்றதை எண்ணிட
கை விரல் போதும்
கற்க உள்ளது
கடலள வாகும்
அந்தக் கடலில்
முத்தெடுத்தாலும்
அதுவும் கொஞ்சம்
என்பது புரியும்
அறிவின் எல்லை
விரிந்த போதும்
அடக்கம் ஒன்றே
அதை சிறப்பாக்கும்
கற்றதின் மேன்மை
நிற்பதில் தெரியும்
அதில் தோற்க
வீழ்வது நிச்சயம்
கற்றதின் பயனை
மற்றவர் அடைய
கற்றதின் பயனும்
முழுமை அடையும்
கல்வியின் இந்த
உயர்வும் புரிய
மற்றவர் கற்றிட
ஆர்வம் பிறக்கும்
கற்றதைப் பகிர
கல்வியின் செல்வம்
மேலும் மேலும்
பல்கிப் பெருகும்
கல்வியைப் போல
குறைவற்ற செல்வம்
வேறேதும் இல்லை
என்பதும் விளங்கும்
மத்திகிரி, 21-10-2018, இரவு, 11.45
Secular Song 482 Learning
No one sets limitation
To learning
If one wants to learn
There is no hurdle to it
We can count
What we learn by fingers
What yet to be learned
Is like ocean
Even if we
Took pearl from that ocean
That too is
Very little
Though the boundary
Of learning continue to expand
Only humility
Will make it nobler
The greatness of learning
Will be demonstrated by following it
If those who get defeated in it
Will surely fall
Once others also
Receive its benefit
The learning also
Will become complete
Once the greatness of
Learning become visible
The interest to learn
will come to others
Once we share
The wealth of learning
It will also
Increase more and more
Then it will become clear
That there is no other
Wealth like
Learning
Mathigiri, 21-10-2018, 11.45 p.m.
Secular Song 483
The influence of the written words is deep indeed. Because when we talk, discuss or hear, soon we will forget it. But when we read, the impact is very deep. In discussion we get the opportunity to question the opponent and register our counter view. But when we read anything in writing, the author alone has the opportunity to interact with us. Though we might raise questions and counter argue in our reflection, rarely do we get the opportunity to record them. At least I face this problem whenever I read any book. After reading one such book, unable to reject his thoughts, at the same time unable to accept it as it is, I wrote this song that finally I need to continue to read whatever might be the author’s view on a particular subject. Sometimes I wish I could stop even this reading, as it demands not only my time, but forces me to reflect and record my reflections. Longing for a life of recluse I should soon say good-bye even to this reading much.
Secular Song 483 எது உண்மை எது பொய்
ஏற்கவா மறுக்கவா
தெரியவும் இல்லை
எவர் கூறும் கருத்தும்
இறுதியாய் இல்லை
ஒரு பக்கக் கருத்து
தெளிவாகச் சொல்லுது
மறுபக்கக் கருத்து
மறுத்து காட்டுது
எழுதுவோர் திறமையால்
எழுதியே காட்டுறார்
அதற்கான வாதங்கள்
சரியாக வைக்கிறார்
சான்றுகள் அதற்காக
சரியாக அளிக்கின்றார்
சரிபார்க்க சந்தர்ப்பம்
நமக்கு தருகிறார்
ஆயினும் எழுதும் முன்
தான் கொண்ட கருத்தினால்
அதற்கு மாற்றான
கருத்தை மறுக்கிறார்
தனக்குச் சம்மதம்
இல்லாத சான்றினை
தன் திறமையால் மாற்றி
நம் முன் வைக்கிறார்
அவற்றையும் ஆய்ந்திடும்
வழியும் இல்லாது
அவர் கூறும் கருத்தை
மறுக்கவும் இயலாது
எது உண்மை எது பொய்
என்பதும் புரியாது
என் போன்றோர் இங்கு
தடுமாறும் போது
ஏற்பதா மறுப்பதா
என்பதும் புரியல
எவரிடம் கேட்பது
என்பதும் தெரியாது
ஏதோ சொல்லட்டும்
எனக்கென்ன வந்தது
என்று எண்ணி
மேற்கொண்டு படிக்கணும்
13-11-2018, மத்திகிரி, இரவு, 10.30
Secular Song 483 Which one is true and which one is false?
I don’t know
Whether to accept or not
No one’s view
Remains final one
On the one side
The views are presented clearly
But the other side also
Refute it clearly
The writers present their view
Because of their talent
They put forth proper
Arguments for that
They present proper
Evidences for that
They also give
Time for this to verify them
But before they write
As they have their own view
They refuse to accept
The counter points
They manage to
To present the evidences
By giving their interpretation
Before us
Unable to get the means
To analyze them
At the same time
Unable to refute their views
When people like me
Are get stumbled
Not knowing which one is truth
And which one is false
We don’t know
Whether to accept them or not
We don’t know to whom
We shall go and ask
Ok let them say whatever they want
What we have to anything with it
Thinking only like this
We need to read them further
13-11-2018, Mathigiri, 10.30p.m.
Secular Song 484
After my regular reading, as usual I began to reflect on some points which I read and began to debate with the author. Two days before I even recorded my reflection as an article. But the challenge presented by the scholars is too much for a lay person like me who can only read and learn, but cannot rebuttal. Then as I said previously, I should stop even this reading—at least for some time. At the same time I know I cannot do that immediately, as it will take time for me to give up this habit which I developed since my school days. Then closing the book, as I was reflecting on my plight, I said that my real desire is to get that inner peace and a place to hide—even from me. As I continue to meditate I wrote this song expressing that desire. The riddle is though I found the place to hide and peace which I want; I cannot give the reason for it. Not only is life a riddle but even poems are!
Secular Song 484 காரணம் கூற முடியாது
ஆசையாய் இருக்கு
அமைதியாய் இருக்க
ஆர்வமாய் இருக்கு
மறைந்து கிடக்க
காரணம் இருக்கு
நானிதை நாட
கடினமாய் இருக்கு
அதையும் கூற
உலகத்தின் அவசரம்
ஒருபுறம் நெருக்குது
மனதின் ஏக்கம்
மறுபுறம் கேட்குது
இரண்டுக்கும் இடையில்
என்னதான் செய்வது
எதிர்பார்க்கும் விடுதலை
எப்போ கிடைப்பது
சென்றதை நினைக்கையில்
வேதனை மிஞ்சுது
வருவதை நினைக்கையில்
மனதும் கலங்குது
இரண்டுக்கும் இடையில்
இந்நாள் வாழ்வும்
எதிர்பார்த்த படியா
எனக்கு நடக்குது?
ஒரு வித நெருக்கடி
அடிக்கடி வருது
எதையேனும் செய்து
தப்பிக்க நினைக்குது
விடை தேடி அலைந்து
வழி காணும் போது
புதிய நெருக்கடி
முன்வந்து நிற்குது
ஒருநாளும் கிடைக்காத
விடுதலை எண்ணி
ஒருபோதும் கிடைக்காத
அமைதிக்கு ஏங்கி
இல்லாத வழியில்
தப்பிக்க ஓடி
இறுதியில் உணர்ந்தேன்
வாழ்வினில் ஆடி
அதன்பின் கிடைத்தது
அந்த அமைதி
அதனுள்ளே கிடைத்தது
இடமும் மறைந்திட
அதற்குள்ளே நானும்
சென்றேன் ஒளிந்திட
அதற்கான காரணம்
எப்படிக் கூற
மத்திகிரி, 22-11-2018, இரவு, 11.15
Secular Song 484 Reason cannot be given
Desire is there
To remain calm
The longing is there
To remain hidden
There is a reason
For me to seek them
But I find it difficult
To utter it
The pressure of the world
Is pressing on one side
The longing of the heart
Begs on the other side
What to do
In between them
When I will get
The deliverance which I want
When I think what went in the past
Only pain remains
When I think about the future
There is some trouble in my heart
In between
How today will go
Will it go?
As I expect?
Some kind of pressure
Is coming often
Doing some thing
I try to escape from it
When I manage to find
The means finding some answer
New kinds of
Pressures come before me
Thinking about the deliverance
Which I never going to get
Longing for the peace
Which won’t come any time?
Try to escape
In the way which is not there
Finally I realized
By playing the game in life
Then I received
That peace
I found the place
To hide in it
Then I went in that place
To hide
But how to say
The reason for that
Mathigiri, 22-11-2018, 11.15
Secular Song 485
My mother often laments that she remains a burden to all, particularly to me. She says that if she will be gone, then I will be free to do what I like. This is quite common for every old people, particularly for a mother. But she does not understand that she provides an opportunity for her children to serve her. It is not a duty, not even a responsibility but sheer opportunity one rarely gets. Several want to serve, but unable to do for various reason. But as I enjoy this opportunity, I never consider her a burden but a blessing even at this age and stage of my life.
Secular Song 485 தாய்க்கு சேவை
தாய்க்கு சேவை
செய்திடும் வாய்ப்பை
தந்ததை எண்ணி
நன்றியும் சொல்வோம்
சேயின் நலனை
பேணியே காக்கும்
தாய்போல் ஒருவர்
இல்லையென் றறிவோம்
தன்சுகம் மறந்து
தன்நலன் துறந்து
பிள்ளையை மட்டும்
எண்ணுவாள் அன்னை
அன்பையே அமுதாக்கி
பாலூட்டி வளர்ப்பாள்
மடியிலும் மனத்திலும்
நாள்தோறும் சுமப்பாள்
வளர்ந்திடும் பிள்ளையை
கண்வைத்து காப்பாள்
வளர்ந்த பினாலும்
அதற்கென வாழ்வாள்
தன்கடன் மறக்கும்
பிள்ளையைக் கூட
ஒன்றும் சொல்லாது
அதனையும் பொறுப்பாள்
இயன்ற வரையினில்
பாரம் இல்லாமல்
இறுதி வரையிலும்
பிள்ளைக்காய் உழைப்பாள்
எங்கும் நிறைந்த
இறைவனும் கூட
அனையின் வடிவில்
நம்மிடை வாழ்வான்
அவளுக்கு ஈடிணை
உறவொன்று இல்லை
என்பதை உணர்ந்து
அன்னைபோல் ஆவான்
அவளுக்கு நாம்பட்ட
கடனையும் தீர்க்க
வழியென ஒன்று
உலகினில் இல்லை
அவளுக்கு சேவை
செய்வதினாலும்
அதையும் தீர்க்கும்
வழியும் இல்லை
அதனை அறிந்து
அவளன்பை உணர்ந்து
இறுதி வரையில்
செய்யணும் சேவை
மத்திகிரி, 2-12-2018, இரவு,10.30
Secular Song 485 Seva to Mother
Let us remain thankful for
The opportunity
That a mother
Gave us to serve her
There is none
Like a mother
Who always takes?
Care of the child
Giving up her pleasures
Renouncing her welfare
A mother only thinks
About her child
Making her love as a nectar
She feeds her child with her milk
She carries it each day
Both on her lap and heart
When the child grows
She keeps an eye on it
Even when the child has grown up
She still lives only for it
She will keep patience
Even when a child
Forgets its duty towards its mother
Not talking against it
Till the end
She will toil for the child
Remaining not a burden
As much as possible
Even the omnipresent
God also
Will dwell among us
In the form of a mother
Realizing that
There is none like her
He too will become
Like a mother
There is no
Means on this earth
For us to pay back
Our debt to her
Even by
Serving her
We cannot find a way
To pay back that debt
Understanding this
Realizing her love
Till the end
We should serve her
Mathigiri, 2-12-2018, 10.30 pm.
Leave a Reply