Secular Song 511
For comments see the article ‘Dress Code’.
Secular Song 511 பயனில்லை
என் மீது தவறு
என்றான பின்னே
பிறர் மீது குறை சொல்லிப்
பயனுமே என்ன
நான் தரும் விளக்கம்
ஏற்காத போது
நானிப் பேசி
பயனுமே என்ன
மாறிடும் காலம்
அதனுடன் நாமும்
மாற வேண்டும்
இல்லாது போனால்
அதற்கான விலையை
நாமுமேத் தந்து
அமைதியாய் ஒதுங்கி
போகத்தான் வேண்டும்
ஓடிய காலம்
முடிந்தது என்று
ஒதுங்கிப் பிறருக்கு
வழியைத் தந்து
அவரவர் போக்கில்
அவரவர் ஓட
இடம் தந்து
நாம்தான் ஒதுங்கணும்
அதன் மீது வீணாக
வாதங்கள் தவிர்த்து
அமைதியாய் வாழ
நாமும் பழக்கணும்
இது ஒன்றும் புதிதாக
நடந்திட வில்லை
எனக்கெனத் தனியாக
வந்திட வில்லை
காலத்தின் கோலத்தை
மாற்றிட முயன்று
மூக்கறுப் படுவதில்
பயனேதும் இல்லை
பலருக்கும் நடந்தது
நமக்குமே நடக்குது
இது ஒரு முடியாத
தொடராக இருக்குது
வழிவழியாக
வந்திடும் போது
வீணாகப் புலம்பி
பயனுமே எது
மத்திகிரி, 4-6-2019, இரவு 11.45
Secular Song 511 No use
Once I blamed
As wrong (person)
There is no point
In blaming others
When my explanation
Is not acceptable
What is the use of?
Talking anymore (about it)
We should change
In this
Changing time
Otherwise
Giving a price
For that
We should
Remain silent
Giving way
For others to run
Thinking that
Our time has come to an end
We alone should
Keep away
For others
To run as they like
Avoiding unnecessary
Arguments about it
We alone should learn
To live peacefully
This does not
Happen as something new
Nothing strange thing
Has come exclusively for me
There is no use
Get our nose hurt
Try to
Change the opinion of (modern) time
What happened to many (in the past)
Also happens to us
This always remain
An unending story
When it is coming
Traditionally
What is the use of?
Lamenting about it?
Mathigiri, 4-6-2019, 11.45 p.m.
[The followin
Secular Song 512
Secular Song 512 அனைவருக்கும் நன்மை
சொல்லிட எனக்குத்
தெரியவும் இல்லை
சொன்னாலும் பிறர்க்குப்
புரியவும் இல்லை
ஆயினும் உள் வைக்க
இயலவும் இல்லை
ஆகவே படுகிறேன்
நான் பெரும் தொல்லை
வேண்டாம் என்று
ஒதுங்கவும் முடியாது
வீணாக வம்பில்
மாட்டவும் விரும்பாது
கழுவுற மீனில்
நழுவுற மீனாக
காலம் பார்த்து
ஒதுங்கிட வேணும்
வலிய வந்து
வேண்டுதல் செய்வார்
விரும்பிய காரியம்
சாதிக்க நினைப்பார்
பலவிதம் பேசி
நம்மையும் இணைத்து
இறுதியில் நம்மை
தொங்கலில் விடுவார்
தலையிடும் முன்னே
பலமுறை யோசி
தன்னால் முடியுமா
என்பதை அலசி
முடியும் என்றால்
முழுதாய் இறங்கு
முடியா தென்றால்
முன்னேமே விலகு
எண்ணித் துணிக
கருமம் என்றான்
துணிந்தபின் எண்ணுதல்
இழுக்கெனச் சொன்னான்
வள்ளுவன் வாக்கில்
உள்ளது உண்மை
அதன்படி செய்வது
அனைவருக்கும் நன்மை
மத்திகிரி, 11-06-2019, இரவு, 11.00
Secular Song 512 Good for all
I don’t know
How to tell it
Even if I manage to share
Others cannot understand me
At the same time
I cannot keep it
Within me
Therefore I
Suffer a lot
It is impossible (always)
To keep away
At the same time, it is not appropriate
To get trapped in trouble
One should try
To escape in appropriate time
Like the fish which
Escapes when it gets the opportunity (from the net)
They will come
And compel us to help them
Try to accomplish
Their desired goal
Somehow trapping us
They will manage to make us to join them
Finally, they will
Get us trapped in it
Before you interfere
Think several times
Analysing properly
Whether it is possible for you
If you can do that
They join them
If it is not possible
Better keep away from the beginning
‘Thinking properly
Before you involve
It is a shameful think
Think after the event’
There is some truth
In these words of Valluvar@
It is good for all
To act accordingly
Mathigiri, 11-06-2019, 11.00 p.m.
The same old saying: blessed is the man who knows his limitations and doesn’t bite more than what you can chew. But how to communicate one’s limitations is an art. By committing what one cannot do, she will harm not only the cause but others who are involved in it. So think twice before you commit to anything in life. This is good for all.
@எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு—Kural, 467
Think and then dare the deed! Who cry, ‘deed dared, we’ll think’.
Disgraced shall be
Explanation: Consider, and then undertake a matter, after having undertaken it, to say ‘We will consider,’ is folly.—Kural, 467
Secular Song 513
As the mosquito gave lots of trouble to me, not allowing me to read leisurely, I went inside the mosquito net that I use to sleep. Then I wrote this song. Though I keep mosquito bat and hit them when they come near, as it often distracts my reading, finally giving up I went inside the net to read undisturbed. I never like to use mosquito repellent as it is not good for our health. I use only mosquito net to sleep and not any mosquito repellent. It also causes lots of environmental problems. I heard that in some countries they banned sun- cream while taking bath in the sea as it damages coral reefs. All the artificial comfort which we seek not only gives us trouble later but also creates lots of environmental problems.
Secular Song 513 கொசுத்தொல்லை
இத்தனை சிறித்தாய்
இருக்குற கொசுவும்
எத்தனை தொல்லை
தருது எனக்கும்
ஆர அமர்ந்து
படிக்க விடாமல்
தள்ளுது என்னை
கொசு வலைக்குள்
அதற்கு இரங்கி
உணவு தந்தால்
அதுவே ஆபத்தாய்
மாறிடும் எனக்கும்
அதை அடித்து
நசுக்க முயன்றால்
படிப்பில் எனக்கும்
கவனம் சிதறும்
வலியச் சென்று
அதற்கு எந்தத்
தொல்லை நானும்
தராத போதும்
அதுவாய்த் தேடி
வந்து எனக்கு
தந்திடும் தொல்லை
மிகவும் அதிகம்
கொசுவைப் போல
வாழும் மனிதர்
பலரும் உளார்
நம்மைச் சுற்றி
அவரின் தொல்லை
எண்ணிப் பார்த்தால்
கொசுவின் தொல்லை
மிகமிகக் கம்பி
வலைக்குள் சென்று
பதுங்கிக் கொண்டு
தப்பிக்க முடியும்
கொசுவின் கடியில்
எங்கு சென்று
பதுங்கினாலும்
துரத்திக் கடிப்பார்
மனிதர் நம்மை
ஓடிப் பதுங்கி
ஒளியப் பார்த்தும்
தோண்டி இழுப்பார்
வெளியில் நம்மை
இறுதி வரையில்
உலக வாழ்வில்
இருவரின் தொல்லை
மறைவதே இல்லை
இருவரின் கடியும்
நிச்சயம் நமக்கு
துன்பத்தைத் தரும்
என்பதே உண்மை
மத்திகிரி, 19-6-2019, இரவு 11-10
Secular Song 513 Mosquito problem
This mosquito
Which remains so small?
Gives how much
Trouble to me
Not allowing me
To read leisurely
It pushes me
Inside the mosquito net
Taking pity on it
If I give food to it
Then it will become
Dangerous for me
If I try to
Crush it
It will disturb
My reading
Though I
Never give trouble to it
Seeking it
Voluntarily
It comes seeking me
On its own
And gives
Lots of trouble to me
Like mosquito
There are many
People around us
In this world
When we think
About their trouble
The trouble given by mosquito
Is very very small
We can escape
From mosquito bite
By going
Inside the mosquito net
But wherever we
Try to hide
People will
Bite chasing us
Though we try
To escape from them
They will drag us
Digging out from the hole
Till the end of the life
On this earth
Both their trouble
Will never disappear
The truth is that
Both their bites
Will definitely give trouble to us
And this is the reality
Mathigiri, 19-6-2019, 11-10 p.m.
Secular Song 514
For comments see ‘I am my burden’
Secular Song 514 நானே பாரம்
எனது பெருமை
எனது பாரம்
எப்படி பிறரதை
சுமக்கக் கூடும்
என்பதை உணர்ந்து
சுமக்கிறேன் நாளும்
இறக்கி வைக்க
வழியைக் காணோம்
சேர்த்த போது
தெரிய வில்லை
சுமையாய் அதுவே
மாறும் என்று
சுமக்கும் போது
தெரிந்த போது
இறக்கி வைக்க
ஆட்கள் ஏது
உன்போல் நானும்
இல்லை என்று
உணர்த்திக் காட்ட
செருக்கு கொண்டேன்
உணர்ந்த பின்னும்
ஒதுங்கிக் கொள்ள
தனித்து நின்று
அளந்து பார்த்தேன்
பொருத்திப் பார்க்க
எவரும் இன்றி
எரிச்சல் கொண்டு
என்னைப் பார்த்தேன்
பெருமை யுடனே
எரிச்சல் சேர
மாற்று இன்றி
என்னை சுமந்தேன்
தனித்து சுமக்க
தெம்பும் இன்றி
இறக்கி வைக்க
வழியும் இன்றி
என்னை நானே
நொந்து கொள்ள
இதையும் கேட்க
ஆட்கள் இல்லை
தன்னந் தனியாக
சுமந்து கொண்டு
தனித்து நின்று
அழுது கொண்டு
கண்ணீர் துடைக்கும்
கரங்கள் இன்றி
கதறி அழுதும்
பயனும் இல்லை
‘நான்’ என்னும்
எண்ணம் நீங்க
நீங்கிப் போகும்
சுமையும் கூட
அதன்பின் மனதின்
பாரம் நீங்க
காற்றில் பறந்தேன்
பஞ்சைப் போல
மத்திகிரி, 27-06-2019, 11.15 a.m.
Secular Song 514 I am my burden
My ego
Is my burden
How others can
Carry it
Realizing this
I carry me each day
There is no means
To unload it
When I began
To accumulate it
I never realized that
It will become a burden
When I realized it
While I was carrying
There is none
To unload it from me
In order to show that
‘I am not like you’
Then I become
Very arrogant
Realizing this
When the other person left
Standing alone
I began to compare (me with me)
Without anyone
To compare me
I get irritated
As began to compare me with me
Then along with ego
As the irritation also joined
Without any means
I began to carry me
Not having
Strength to carry (me)
Without any means
To unload it
When I began to
Rebuke me
There is none
Even to listen to it
Carrying me
All alone
Weeping standing
All alone
Without having
Any hands to wipe out the tears
There is no use
In lamenting
Once the ‘ego’
Goes away
The burden also
Will go automatically
As the burden of the
Heart leaves
Then I began to float (in the air)
Like the cotton (becoming light)
Mathigiri, 27-06-2019, 11.15 a.m.
Secular Song 515
Taking time to introspect our actions and talk is essential for us to have a meaningful life. All might not have time for this as they have a busy life with so many responsibilities. But their life will become more meaningful and useful if they manage to take at least a few minutes to evolve their life each day. As I have the opportunity to spend enough (sometimes more) time to introspect I wrote this song understanding the value of it.
Secular Song 515 அவசியமான பயிற்சி
ஆற அமர ஆராய்ந்து பார்க்க
அவசியம் தேவை நமக்கு நேரம்
அவசர கதியில் ஓடிய போதும்
அமைதியாய் இருக்க அவசியம் பழகணும்
எல்லோருக்கும் நேரம் பொதுவாக இருந்தும்
எப்படி அதை கையாள வேண்டும்
என்பதை நாம்தான் யோசிக்க வேண்டும்
அதற்கான முடிவு நமதாக வேண்டும்
ஊரோடு உலகோடு வாழ்கின்ற போது
ஒருவித அழுத்தம் நம்மீதும் இருக்கும்
உறவினைப் பேணி மனிதராய் வாழ
பிறரோடு இணைந்து போகத்தான் வேண்டும்
ஆயினும் தனக்கென நேரமும் ஒதுக்கி
அகத்திலும் புறத்திலும் ஓட்டத்தை நிறுத்தி
சிலநொடி நேரம் அமராது போனால்
சீர்தூக்கிப் பார்க்க இயலாது போகும்
அதனால் வந்திடும் இழப்பினை எண்ணி
அதற்கெனத் தந்திடும் விலையையும் எண்ணி
அமைதியாய் அமர அவசியம் பழகணும்
அதன்மூலம் வந்திடும் பயனையும் எண்ணனும்
சுயநலம் இதிலே ஏதுமே இல்லை
பிறருக்கு எவ்வித நட்டமும் இல்லை
அனைவரும் உலகில் நலமுடன் வாழ
இதனினும் சிறந்த பயிற்சியும் இல்லை
மத்திகிரி, 8-7-2019, இரவு, 11.50
Secular Song 515 Essential training
Definitely we need time
To think and evaluate leisurely
Though we run in a hurry
We should practice to remain calm
Though time remains common for all
We alone should think
How to manage it properly
And the decision should be ours
As we live with others in the world
There will be a (subtle) pressure on us
To maintain our relationship with others
We need to go along with them
Still if we fail by setting aside some time
And stopping the running both in and out
If we fail to stop for few seconds
We might not able to evaluate our life properly
Thinking about the loss that will come because of it
Thinking the cost that we need to pay for that
We should train ourselves to sit leisurely
And should contemplate about the benefit of it
Nothing selfishness in this
There is no loss for others in this
For everyone to live happily on this earth
There is no other exercise other than this
Mathigiri, 8-7-2019, 11.50 p.m.
Leave a Reply