BT Song 586
After doing my regular reading, I used to spend few minutes in prayer. But as I have to rush to prepare Tiffin for my mother, I said to the Lord in prayer ‘that is all what I can do. All that I do and think are my prayers for you. And when I said this, as inspiration came, within three minutes I wrote this song as my prayer and got up to do my work. But I enjoy immensely that short period than spending long hours in prayer babbling so many words in the name of prayer.
….Augustine assures us it is in the silence of one’s inner thoughts where one prays that one can intimately and profoundly communicate all the words of this psalm {3} in silent prayer to God. — Bruce K. Waltke and James M. Houston, with Erika Moore, The Psalms As Christian Worship: A Historical Commentary, Grand Rapids, Michigan, William B. Eerdmans Publishing Company, 2010 p. 184
BT Song 586 இதுதான் துதி
இதுதான் எனது துதியாகும்
இதுவே எனது ஜெபமாகும்
உன்னை நினைக்கும் சில நொடிகள்
ஒன்றே எனது வழியாகும்
பொல பொலவென பல வார்த்தை
சொல்லித் துதிக்கத் தெரியாது
பொறுமையாக அமர்ந்திருந்து
ஜெபம் செய்ய இயலாது
எனது வேலைகள் செய்து கொண்டு
இடையே உன்னுடன் பேசிக்கொண்டு
நீயும் என்னுடன் சேர்ந்து கொள்ள
நேரம் போவது தெரியாது
உன்னை நினைக்கும் போதினிலே
ஒரு வித உவகை தலைக்கேற
உடனே தோன்றும் எண்ணங்களை
உன்னிடம் சொல்வேன் துதியாக
ஆழ்ந்து சிந்திக்கும் நேரத்திலே
அமைதியாக நீ சொல்லும்
சத்தியமான வார்த்தைகளை
அறிவேன் உனது சித்தமாக
இப்படியாகத் துதிக்கையிலே
எனக்குத் தோன்றும் மகிழ்ச்சியிலே
ஏதும் சொல்லத் தோன்றாமல்
இருப்பேன் உனது அடிகளிலே
மத்திகிரி, 3-12-16, 2.50 pm
BT Song 586 This is my Praise
This is my praise (for you)
This is my prayer
Remembering you even for few seconds
Is my way (of doing sadhana)
I don’t know how to pray
By uttering many words
I cannot sit patiently
And pray
Doing my regular works
Amidst it talking with you
As you too join me
We don’t know how the time goes
When I think about you
As some kind joy overflows
Immediately I will share with you
All the thoughts that come
When I think deeply
All the truthful words
Which you utter
I will take it as your will
When I praise you like this
Due to the immense joy that I found
Unable to say anything further
I will sit at your feet
Mathigiri, 3-12-16, 2.50 pm
BT Song 587
This morning when I was cooking, some of my past life began to appear before my mind. Then I shook my head and said ‘no hope’. I want to forget them. But they often come and trouble me. Though I lament within me standing alone about it, as I pour down my heart to the Lord, I found some kind of peace within me. As I recalled my morning experience this afternoon I wrote this song.
BT Song 587 குறை இல்லை
தனித்து நின்று புலம்பினாலும்
துணைக்கு அவனும் இருக்கும்போது
இனி எனக்குத் தாழ்மையேது
என்னை அறிந்து ஏற்கும்போது
கடந்த கால வாழ்வின் சில
காட்சி கண்முன் தோன்றும் போது
எனக்குள் குறுகி நிற்கும் போது
என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டான்
தைரியம் இழந்து தோல்வியுற்றேன்
தேறுதல் இன்றிச் சோர்வு கண்டேன்
என் மனம் என்னை குற்றம் சொல்ல
எதிர்த்துப் பேச வார்த்தையற்றேன்
அந்த நேரம் என்னிடம் வந்து நின்று
ஆறுதலான வார்த்தை சொல்லி
“உன் குற்றம் நானே போக்கிவிட்டேன்
இனிமேல் ஏதும் இல்லை” என்றான்
உடனே பாரமும் போனதாலே
உள்ளமும் லேசாக ஆனதுவே
அதனைக் கொண்டாட எண்ணும்போது
புதிய பாடல் வந்ததுவே
தனித்து எப்போதும் நானுமில்லை
துணிவும் இன்றி வாழ்வில்லை
இறைவன் துணையாய் ஆனபின்பு
இனிமேல் குறையும் எனக்கு இல்லை
மத்திகிரி, 4-12-16, மதியம் 2.35
BT Song 587 I lack nothing
when I lament all alone
as He is there to encourage
where comes any depression
as He accepted me as I am
when some things
that I have done in the past appear before me
as I shrink within me
forgiving, He received me
I was defeated without encouragement
I was depressed without any comfort
as my own heart began to accuses me
I have nothing to say against it
That time coming near to me
giving comfortable words
“I removed all your sins and
there remain nothing more” He said
As my burden went immediately
my heart become very light
as I began to celebrate it
new song began to come
I never was alone
I never lived without some company
once God become my companion
I don’t lack anything in life
Mathigiri 4-12-16, 2.35 p.m.
BT Song 588
We need mutual fellowship and friendship to share our thoughts, burdens and concerns. But too much busyness in life deprives many people from sharing or listening to each other. Particularly old people rarely get someone to listen to them. Though most of them miss such people, yet those who learnt the art of pouring down their heart to God will find solace in Him. Considering the busyness of many I find a good friend with whom I can share without any reservation and I never miss such an opportunity to go to His presence to do it.
BT Song 588 நல்லது
சன்னிதி வந்தேனே
நிம்மதி பெற வேண்டி
என்நிலை சொன்னேனே
உன்னருள் தினம் வேண்டி
தகுதியை பாராது
தாங்குவாய் தயவுடன்
தமியனுக் கிரங்கியே
அருள்வாய் கனிவுடன்
மௌனம் காப்பது
ஒருவிதம் நல்லது
உன்னிடம் சொல்வது
மட்டுமே சிறந்தது
பிறரும் புரியாமல்
இருப்பது வரமது
புரிந்த உன்னிடம்
வருவது உயர்வது
அவரச உலகிது
என்பது புரியுது
அடுத்தவர் நிலைகூட
நன்கு விளங்குது
அதனிடை வாழ்வது
வேதனை மிகுந்தது
அதையும் புரிந்தபின்
இரக்கமே மிஞ்சுது
அவருடன் போட்டி
போடுவ தென்பது
அடியனுக் கியலாது
என்று ஆனது
அதனால் உன்னிடம்
மட்டும் சொல்லிட
அடிக்கடி வருவேன்
உந்தன் சன்னிதி
மத்திகிரி, மதியம் 2.50, 5-12-16
BT Song 588 One way it is good
I come to your presence
to get peace of mind
I told about my condition
to receive your grace
Uphold me
not thinking about my qualification
have mercy upon this
lonely one with kindness
It is good to
keep silence
and it is better
only to share with you
It is a boon
if others don’t understand about it
it is a great thing
to come unto you who understands
this is a busy world
I understand it
and I can clearly
understand about others’ situation
and to live
amidst it is painful one
when I think about it
I took pity on them
I cannot
compete with them
this become a reality
for me
Therefore, I will come
only to share with you
often to your
holy presence
Mathigiri, 2.50, pm. 5-12-16
BT Song 589
Another song inspired by Surdas:
if only you simply give Hari a try,
if only you refuse to worship anything else,
in mind, deed, and word letting truth fill your heart,
if only you sound his name and praise him night and day,
drowning your doubts in the liquid of his love—
if you resolve to live in the world this way,
who can turn your gold to glass? (p.741)
You won’t be touched by hot or cold, by joy or pain;
you won’t fee grief at whatever comes or goes.
Sur says, enter his treasury—go
and you’ll never have to return
and dance to this world’s tune.—Sur’s Ocean, song 424, pp. 741 & 743
जौ कबहू मन हरि कौ जाचै
आन प्रसंग उपासन छांडै
मन क्रम बचन आनि उर साचै
निसि दिन नांव लेइ जसु बोलै
कलपन रहित परम सुष माचै
यह ब्रत धरै लोक महि बिहरै
कुण करि सकै कंचन तै काचै (p.740)
सीत उस्र दुष सुष नहि व्यापै
आयै गयै सोक दुष बाचै
जाइ समाइ सूर ट निधि मैं
बहुरि न आइ जगत मै नाचै—Sur’s Ocean, song 425, pp. 740 & 43
BT Song 589 ஆடவேண்டும்
இறைவனை அன்றி வேறெதும்
ஏறிட்டுப் பார்க்க மாட்டேனென்றால்
எதை எண்ணி நீ அஞ்ச வேண்டும்
என் மனமே நீயும் சொல்லிடுவாய்
சொல், சிந்தை, மொழியாலே
சிந்தித்து அவனைப் போற்றிடவே
உலகில் வாழும் போது கூட
உன்னை மாற்றுவார் எவர் சொல்லு
இரவும் பகலும் அவனையெண்ணி
உன்னத அன்பிலே மூழ்கினால்
ஏதுமே உன்னையும் வஞ்சிக்காது
உள்ளமும் வீணிலே கலங்கிடாது
அவனுள் நீயும் வாழும் போது
ஆனந்தம் மேலிட ஆடும்போது
உலகம் போடும் தாளத்திற்கு
உடலும் மனமும் ஆடாது
உணர்ந்து இதனை நானும் சொன்னேன்
உன்னையும் என்னுடன் சேர சொன்னேன்
உவந்து என்னுடன் பாடச் சொன்னேன்
உன்னத அன்பினில் வாழச் சொன்னேன்
மத்திகிரி, 7-12-16, மதியம் 2.20 Sur 425, pa. 743
BT Song 589 I should dance
If you won’t look
any other thing other than god
What is there for you to fear?
tell you oh my heart
through words, thought and language
when you praise Him
even if you live in this world
Who can say anything about you?
when you drown day and night
thinking in his noble love
nothing will cheat you
and you won’t be troubled
When you love him
and dance with joy overflowing
you won’t dance
according to the tunes of this world
I tell this with personal experience
and I ask you to join me
I ask you to sing with me joyfully
I ask you to live with me in that noble love.
Mathigiri, 7-12-16, 2.20 p.
BT Song 590
I often found the presence of the Lord as my best abode for all struggles that I encounter in my mind and life. As I was reflecting about it, I wrote this song.
BT Song 590 வருவேன் உன்சன்னதி
சன்னிதி ஒன்றே
என்றும் நிரந்தரம்
சஞ்சலம் கொண்ட
வாழ்விலே என்றும்
உன்னிடம் வரவில்லை
உன்னருள் பெறவில்லை
உலகின் செயல்களில்
என்னையே இழக்கையில்
ஆயினும் இதற்குமோ
மாற்றமே எனக்கில்லை
அவற்றை மேற்கொள்ள
வழியும் இங்கில்லை
ஆயினும் அவற்றாலே
நிம்மதி பெறவில்லை
அவற்றோடு போராட
எனக்கும் தெம்பில்லை
இவற்றை விலக்கிட
வழியும் தெரியலை
எப்போது முடிவுறும்
என்பதும் புரியலை
வேடிக்கை ஏனோ
நீயும் பார்க்கிறாய்
வழியைக் கேட்டாலும்
சொல்ல மறுக்கிறாய்
ஆனாலும் வருவேன்
உந்தன் சன்னதி
அங்கே பெறுவேன்
நானுமே நிம்மதி
மத்திகிரி, 7-12-16, இரவு 11.10
BT Song 590 I will come to your presence
Your presence
is the permanent one
in this world
full of frustrations
when I get lost in the world
I cannot come unto you
cannot receive your grace
as I lost myself
but there is no
alternative for this to me
I don’t find any means
to overcome it
yet I didn’t receive
peace from it
I don’t have strength
to struggle with it
I don’t find ways
to get rid of it
I don’t know
when it will come to an end
you too watch
this tamasha
when ask the way to escape
you refuse to tell
yet I will come
to your presence
and will receive
the peace from there
Mathigiri, 7-12-16, 11.10 pm
Leave a Reply