BT Song 596
This is completely a contradiction considering my nature of analysing everything and asking so many questions. But once after analysing and asking, finally I have to live as usual. So there is no point in asking too many questions about life. And this is the idealistic answer for me about life.
BT Song 596 பயனில்லை
புரியாத புதிராக புவி வாழ்வு தொடர
புரியாமல் பலபேர்கள் என்னைப் போல நடிக்க
இதற்கொரு விடை காணச் சிலபேர்கள் துடிக்க
அனைவரும் வழக்கம் போல் வாழ்ந்து முடிக்க
இதைப் பற்றி எண்ணாமல் இருப்பதே நல்லது
என்ற முடிவுக்கு நானுமே வந்தபின்
வீணாக நேரத்தை விரயம் செய்யாது
விருப்பம்போல் என் வாழ்வில் வாழ்ந்து இருக்கேன்
அலசி ஆராய்ந்து அவதியும் படமாட்டேன்
ஆழ்ந்து யோசித்து விடை தேட மாட்டேன்
அன்றாட வாழ்வும் அவன் தரும் வண்ணமே
அமைதியாய் வாழ்ந்து என்னோட்டம் முடிப்பேன்
இது ஒரு புதிராக எனக்கு இல்லை
வீணான கேள்விகள் நான் கேட்பதில்லை
அவனே விடையாக எனக்கும் ஆனபின்
அதிகமாய் யோசித்துப் பயனேதும் இல்லை
குருகுலம், 26-12-1916 மதியம் 3.10
BT Song 596 No use
The life continue on this earth as a riddle
Like me, several people just pretend as if they don’t understand it
Some try to find answer for this
But all live and finish their life as usual
Once I came to this conclusion that
It is good not to think too much about it
Not wasting my time unnecessarily (analysing it)
I am living as I like as ever before
I Won’t analyses and do research about it
I won’t try to find an answer by thinking deeply
I will run and finish my race by living each day
As He has arranged according to his plan
It never remains a riddle for me
I never ask unnecessarily questions
Once He becomes the answer for me
There is no point in thinking about it too much
Gurukulam, 26-12-16, 3.10 pm.
BT Song 597
I always enjoy my recluse life and prefer to remain alone, isolated from people and activities. And God has arranged everything for such a life here in the ashram and I like it. I know this life is very difficult for many to even imagine, forget about actually living. But I like this kind of life and actually enjoy each second of it. At the same time there are so many people who want to meet and talk with me. Due to so many commitments (for example towards my mother etc.) I cannot go out and meet them often. As I receive several calls from North India, complaining that I almost forgot them, my heart goes after them. And certain recent developments also forced me to question what actually God’s will for me. As I was deeply thinking and praying about it, I wrote this song.
BT Song 597 எது உன்சித்தம்
சித்தம் எது சொல்வாய் நீ சாமி
அது தெரியாது திகைக்கிறேன் பாவி
தேவை உள்ளோரை தேடியே செல்லவோ
தனித்தே இருந்து உன்னிலே மகிழவோ–சித்தம்…
மானிட வாழ்வினை தந்தாய், அதன்
மாண்பினை புரிந்திட செய்தாய், ஆனால்
தான் என்னும் எண்ணம் தலைக்கு ஏறிடத்
தடுமாறித் தவித்திடும் பாவிக்கு நீயுமே–சித்தம்…
தேவைக்கு எல்லாம் தந்தாய், அதைத்
திறம்பட வகுத்து வைத்தாய், ஆனால்
அகந்தையால் பாரம் வருந்தி சுமந்திடும்
அடிமைக்கு மீண்டும் ஒருமுறை நீயும்–சித்தம்…
இடம் பொருள் ஏவல் அறியேன்
என் எண்ணத்தை நானுமே உணரேன்
சத்தம் இட்டு வாதம் செய்வதினாலே
உன் சித்தத்தை அறியா மூடனுக்கு மீண்டும்–சித்தம்…
உன்னிடம் வருவதே அல்லால், மறு
வழியினை நானும் அறியேன், அதை
உணர்ந்த நீயும் அருள்வாய், என்
பிழைகளைப் பொறுத்து மீண்டும் ஒருமுறை–சித்தம்…
குருகுலம், 29-12-16, காலை, 5.30
597 What is your will?
Tell me what your will is
I am confused not knowing it properly
Do I need to go after those who are in need?
Or to live as a recluse and rejoice in you–tell me…
To this sinner who is confused and get stumbled
As the ego comes and make me very proud, but
You gave this human life
And helped me to understand its greatness–tell me…
You provided all my requirements
You arranged everything neatly
But due to my own pride
Carrying unnecessary burden–tell me…
I don’t know the time and proper place
Even I don’t understand my own thought
But as I argue too loudly with you
As this fool cannot understand your will–tell me….
There is no other means for me
Other than to come unto you
Kindly forgive all my mistakes
And realizing my plight, give me your grace one more time–tell me…
Gurukulam, 29-12-16, 5.30 am.
BT Song 598
My constant struggle with my old nature, particularly the nature of argument on every point makes me tired several times. I want to keep quiet and do not want to react or respond. But when I think about the issues and all that related to it, I cannot avoid arguing the point and reasoning it out to bring to some logical conclusion. But after doing it, I feel very sad that I have wasted my time unnecessarily. This became a constant phenomenon in my life and there is no other alternative but to seek the mercy of God to overcome this.
BT Song 598 மாற்றொன்று இல்லை
குறையோ நிறையோ
சரணம் வந்தேன்
குருவே உன்னிடம்
தஞ்சம் அடைந்தேன்
ஏனிதைச் செய்தாய்
என்பதை அறியேன்
எனக்குன் காவல்
இருப்பதை உணர்ந்தேன்
பிறவிக் குணமோ
போவதாய் இல்லை
போக்கிடம் எனக்கும்
வேறேதும் இல்லை
பலமுறை முயன்றேன்
போகவே இல்லை
பழைய குணமோ
மாறவே இல்லை
இதற்குக் காரணம்
எதுவென அறிவேன்
இதுவென் இயல்பாய்
ஆனதை உணர்ந்தேன்
முயன்றுதான் பார்க்கிறேன்
முடியவே இல்லை
முறையிடுவ தன்றி
மாற்றமும் இல்லை
அது ஒன்று மட்டும்
அடிக்கடி செய்கிறேன்
ஆகவே மீண்டும்
உன்னிடம் வருகிறேன்
இரங்கிடு மீண்டும்
என்றுதான் கேட்கிறேன்
இதுவன்றி மாற்றொன்று
இலை நான் அறிவேன்
குருகுலம், 29-12-16, மதியம் 2.10
BT Song 598 No other alternative
Proper or improper
I come unto your feet
O my guru
I took refuge in you
I don’t know
Why you have done this
But I know that
You protect me
My inborn nature
Never will go
I tried many times
But it never went away
And my old nature
Never get changed
But I don’t have
Any other refuge (other than you)
I know
What is the reason for this?
It became my habit
I understood it
I try my best
But it is not possible for me
There is no other means
Other than to complaining about it to you
That one thing alone
I often do
Therefore I
Come again to you
Have mercy upon me
This one I ask
There is no other alternative
Other than this
Gurukulam, 29-12-16, 2.10
BT Song 599
All the duality in life (dvand) disappears once I become one with God and living with Him every day.
BT Song 599 இனியேது
துன்பங்கள் துயரங்கள்
இனியென கேது
துணையாக நீயும்
உடன் வரும்போது
தனிமையும் வெறுமையும்
தமியனுக் கேது
தயவுடன் நீயென்னைத்
தாங்கிடும் போது
போனதின் வருவதன்
பாரமும் ஏது
நிகழ்காலம் என்னுடன்
நீ வாழும் போது
நண்பர்கள் பகைவர்கள்
என்பவர் ஏது
நல்லவர் அனைவரும்
என்றிடும் போது
நாட்டமும் வெறுப்பென்று
பேதம் ஏது
நன்மையை மட்டும்தான்
சொல்லிடும் போது
நான்-நீ என்று
பிரிவினை ஏது
நானும் நீயுமொன்றாய்
வாழ்ந்திடும் போது
இதையும் சொல்லிட
வார்த்தைகள் ஏது
எனக்கு நீயே
எல்லாமான போது
2-1-2017, இரவு 11.10 மத்திகிரி
BT Song 599 No more
There is no more
suffering and pains for me
when you come
with me every day
where is the place for
emptiness and loneliness
when you uphold me
with kindness
where is the burden
of the past or future
as you live with me
in the present
where is any
friend or enemy
when all are
remain only good (to me)
Where is the difference between
longing or indifference
when you tell only
good things alone
where is the separation between
you and me
when we two live
together as one
Where are the words
Even to share this
When you become
All to me
Mathigiri, 2-1-2017, 11.10 pm.
BT Song 600
Another song expressing the reality of life. Separation is inevitable though many may join with us initially in any kind of journey based on any ideology. Still they might agree with us, but due to various factors, we will get separated, each one walking in our own path. But God laughs if we strongly believe that till the end all will be with us agreeing on every point. This is my constant experience in my walk not only as a bhakta of Muktinath, but even as a human being. And instead of sitting and regretting about those who went away from me, I press forward in the call which God has given me specifically–as He will be there with me till the end to reach my goal.
BT Song 600 இறைவன் சிரிக்க
எனக்கென கடமைகள் இறைவனும் வைக்க
நானதை ஏற்று அவனுடன் நடக்க
துணைக்கு என்னுடன் வருபவர் எவரென
பின்னிட்டு நானும் திரும்பி பார்க்க
“தாமதம் செய்வது ஏனின்னும்” என்று
தட்டியே என்னை அவனும் கேட்க
“நம்முடன் கூட பிறரும் இணைய
எத்தனை தெம்பும் நமக்கும் கிடைக்கும்”
என்று நானும் பதிலும் கூற
இனிய முறுவல் செய்து அவனும்
“சரி” என எனக்குச் சம்மதம் சொல்லி
துணைக்கு வருவோரை எதிர்கொள்ள நின்றான்
பலரும் வந்தார் என்னுடன் இணைய
பரவசம் கொண்டேன் துணையாய் அவர் வர
பயணம் தொடங்கிய பாதி வழியில்
பலரும் சென்றார் அவரவர் வழியில்
எஞ்சிய சில பேர் இறுதி வரையில்
என்னுடன் வருவார் என்ற நிலையில்
இலக்கை அடையும் நேரம் பார்த்து
அவரும் சென்றார் தம்தம் வழியில்
இறுதியில் இறைவன் என்னையும் பார்க்க
நானும் அவனுடன் சேர்ந்து நகைக்க
உண்மை நிலையை நானும் உணர
இலக்கை அடைந்தேன் கடமை முடிக்க
மத்திகிரி, 3-1-2017, இரவு 11.30
BT Song 600 As God laughs
As he gave some responsibilities to me
Accepting them as I walk with him
When I turned back to see
Who will come along with me as a companion?
“What is the reason for delaying”,
When God asked me rebuking
“If some others join us
How much more strength we will receive”
When said this,
With a smile He too agreeing with me
Giving His consent for that
Waited to receive those who will come with us
Many came to join me
And I was excited as they give company
But after our journey started
Many went away on their own way
When few alone remind
When we are almost reached the goal
That times all of them
Also went in their own ways
Finally, when God turned back to look to me
I too joined with him and laughed
Realizing the reality of life
I proceed further to reach the goal
Mathigiri, 3-1-2017, 11.30 pm.
Leave a Reply