Secular Song 536
In one film song (Aayirathil Oruvan) one Tamil song writer (I think it was late Vali) wrote one song: There is no life without asking questions. Though philosophers@ also asked so many questions on various things, yet common people also have so many questions in life. But the reality in life is that however one asks a question and manages to get some answer, most of the time the very same answers become further questions. So, to live a sober life is to accept life as it is rather than asking unnecessary questions in life or about life.
@ Fish gotta swim
Bird gotta fly
Man gotta sit and say
Why why why— Thomas McEvilley, Shape of Ancient Thought: Comparative Studies in Greek and Indian Philosophies, Delhi, Motilal Banarsidass Publishers, (2002), First Indian Edition, 2008. Foreword. Foreword. pp. xxxi-xxxii.
Secular Song 536 கேள்விக்கு இடமில்லை
எப்படிக் கேட்டாலும்
பதிலேதும் கிடைக்காது
எவ்விதக் கேள்விக்கும்
விடையேதும் கிடையாது
கூறிடும் விடையாவும்
கேள்வியாய் மாறிட
கேள்வி–பதிலுக்கு
முடிவேதும் கிடையாது
எதனாலே கேள்வியும்
முதலில் தோன்றுது
என்பதை எண்ணி
பார்த்திடும் போது
எதற்காக கேள்வியும்
கேட்டிட வேண்டும்
என்ற கேள்வியே
விடையாக வந்தது
வாழ்ந்திடும் வாழ்விலே
நிறைவின்றி போனதால்
அதற்கான காரணம்
கேள்வியாய் வந்ததா
நிறைவும் எதுவென
கேள்வியும் தோன்றிட
அதற்கான விடை தேடி
மனமே சென்றதா
எதிலும் நிறைவு
காணாத மனமே
மேலும் தேடிட
கேள்வியும் தொடர்ந்ததா
பலரும் பலவித
பதில் கண்டபோதும்
எவர் தந்த விடையும்
இறுதியாய் இல்லையா
ஆகவே கேள்விக்கு
விடையும் கிடைக்காமல்
கேள்வியும்—பதிலும்
இதுவரை தொடர்ந்ததா
இதற்கான விடையை
தேடாமல் இருப்பதே
அனைவருக்கும் நல்லது
என்பதை உணர்ந்து
கேள்வியே கேட்காமல்
வாழ்கின்ற வரையில்
கேள்வி—பதிலுக்கு
இடமே இருக்காது
மத்திகிரி, 22-1-2020, இரவு, 10.30
Secular Song 536 No place for question
How much one asks
One cannot get the answer
There is no answer for
Any kind of question
Once the answer
Turn as questions
There won’t be an end
To questions and answer
When we
Began to think
That why
Questions came first
Why should even
ask question
Came as
The answer (for that)
As there is no
Satisfaction in the life which one lives
Did the question came
Is this the reason for that
Or when the question came
‘What is satisfaction’?
Did the heart
Began to search answer for that
As the heart
Never finds satisfaction in anything
As it began to seek further
Did the questions began to continue
Or though many
Found many kinds of answers
As no one’s answer
Become final one
Therefore, as the
Question couldn’t get the answer
Did the question and answer
Still continue in the present
Realizing that
Not seeking answer
For questions
Is good for all
If we began to live
Not asking question
There won’t be
Further questions and answers
Mathigiri, 22-1-2020, 10.30, p.m.
Secular Song 537
Any quick response for every argument will end up bringing so many problems in life. This not only will strain the interpersonal relationship but also will make us regret all those quick responses which we gave under pressure. Particularly the way several politicians make all kinds of ‘political statements’ these days and then the way they try to give all kinds of explanations to justify their quick response erode their leadership quality. When the media people ask questions, the politicians should be careful not to give any quick response to get temporary attraction. Specifically when they debate on any issue inside Parliament, if they cross Lakshman reka in communication, then they will face all kinds of humiliation.
Secular Song 537 வரம்பற்ற வார்த்தை
வரம்புக்குள் வார்த்தை
நின்றிடும் போது
வாழ்வினில் எத்தனை
நன்மைகள் வருது
வீணில் வார்த்தை
சிந்திடும் போது
வேதனை ஒன்றே
மனதில் மிஞ்சுது
ஆத்திரம் நமது
அறிவை மறைக்க
ஆபத்து தன்போல்
வார்த்தையில் வருது
அப்புறம் அதை
எண்ணியே பார்க்க
நம் மனதே
நம்மை திட்டுது
வார்த்தைக்கு வார்த்தை
பதிலாய் வந்தால்
சமநிலை அங்கே
அடிபட்டுப் போகுது
அதன்பின் நடக்கும்
நிகழ்வுகள் யாவும்
நம் கையை
மீறியே போகுது
அதன்பின் எத்தனை
விளக்கங்கள் தரிணும்
அவையும் எவ்வித
மதிப்பற்று போகுது
அத்துடன் நாம்
சேர்த்து வைத்து
நற்பெயர் கூட
அடிபட்டுப் போகுது
ஆகவே வரம்புக்குள்
வார்த்தை நிற்கணும்
அதனால் அனைவரும்
நன்மை பெறணும்
மத்திகிரி, 29-1-2020, இரவு, 11.30
Secular song 537 Lakshman reka
How many blessings
That is coming in life
When our words
Stand within their boundary
When we spill
Words unnecessarily
It results
Only in pain
As anger
Blinds our intelligence
Danger comes on its own
In the form of words
When we
Think later about it
Our own heart
Accuses us
If we began to argue
Word for word
Then balance
Get lost there
Then whatever
Might happens
Is beyond
Our control
Whatever kind of explanation
That we might give after that
They all become
Meaningless to anyone
Along with it
All the good names
That we earned, also
Get eroded
Therefore, our words
Should stand with in their boundary
And everyone should
Reap the benefit by that
Mathigiri, 29-1-2020, 11.30 p.m.
Secular Song 538
When some people try to help us to accomplish their work, they will use all kinds of flowery talk to win our favour. They will even talk favourably, accepting our views on several issues. Somehow, they will do everything to get their work done. But this is part of survival in this world and there is no alternative to us. Only we should remain vigilant not get trapped in their net [or networking] to take advantage of us.
Secular Song 538 உலகநீதி
உணர்ந்து கொண்டேன் உலகினையே
விழித்துக் கொண்டேன் மனதினிலே
ஆனால் அதனால் பயன் என்ன
இப்போ விழித்து லாபமென்ன
எண்ணமாய் மயக்கிப் பேசுகிறார்
எப்படி வலையை விரிக்கின்றார்
கொக்கிணும் பொறுமையாய் காத்திருந்து
கொத்திச் செல்ல முயல்கின்றார்
அவரின் கருத்தை ஏற்றுக்கொண்டால்
அடடா என்னமாய் புகழ்கின்றார்
அதை நாமும் விமசரித்தால்
அடுத்த நொடியே மாறுகிறார்
எதிரே உள்ளவன் ஏமாளி
என்றே எண்ணிப் பேசுகிறார்
எதிர்த்து அவனும் கேள்வி கேட்க
என்னமாய் பவ்விப் பணிகின்றார்
ஆனால் அந்த பணிவு கூட
அடங்கிப் பதுங்கிப் பாய்வதற்கே
இரையைக் கவ்வும் புலியைப் போல
இவரின் பணிவும் ஏய்ப்பதற்கே
ஆனால் இதுதான் உலகநீதி
அதை மாற்ற வழியில்லை
இயற்கையை மிஞ்சும் இந்த நீதி
இதற்கு மாற்று உலகில் இல்லை
மத்திகிரி, 30-1-2020, இரவு 11.00
Secular Song 538 The law of the world
I understood the world now
And awakened in my heart
But what is the use now
And what is the profit now
How they manage to entice us
How they spread their net for us
Remaining more patient than a crane
They try to catch us
When we accept their view
How they praise us
When we comment about it
Next minute they deny it
They talk thinking that
Others are mere fools
When we began to question them
How they try to take the step back
But even this taking the step back
Is also only to launch an attack on us
Like the tiger which tries to catch its prey
Their stepping back is only to deceive others
But this is the law of this world
There is no means to change it
This law will even go against the natural law
There is no alternative to this
Mathigiri, 30-1-20202, 11.00
Secular song 539
For comments see: Even Platinum
Secular Song 539 எல்லோருக்கும் நல்லது
வாழ்வின் ஓரம்
வந்தத்தின் பின்னே
வழக்காடி பிறரோடு
பயனும் என்ன
வாதங்கள் செய்து
வழக்கு ஆடினும்
வெற்றி எவருக்கும்
இல்லை நிச்சயம்
வென்றதாய் எண்ணி
மார்தட்டிக் கொள்ளிணும்
கொண்டாட ஆளில்லை
என்பது புரியணும்
ஆகவே வாய்மூடி
இருப்பது என்பதே
உண்மையில் வெற்றி
என்பதை அறியணும்
ஆயினும் அதைக்கூட
வெற்றியாய் எண்ணாமல்
அமைதி காத்து
இருந்திடப் பழக்கணும்
அதன்மூலம் தன்னோடு
எல்லோரும் அடையும்
பயனைக் கூட
எண்ணி பார்க்கணும்
அதுதான் முதுமைக்கு
நல்ல அடையாளம்
என்பதைக் கூட
நாமும் ஏற்கணும்
அதன்பின் வாய்மூடி
வாழ்வது என்பது
தன் போல நமக்கு
இயல்பாய் வந்திடும்
மத்திகிரி, 15-2-2020, இரவு, 10.50
Secular Song 539 Good for all
Once we came
To the end of the life
What is the use of?
Contending with everyone
Though we argue
And contended with others
Victory is not for anyone
This is sure
Though we claim that
We have won
There is none to celebrate
We should understand this
Therefore remaining
Calm alone
Is victory
We should also understand this
But not considering
This as victory
We should learn to
Remain silent
Then we should think
About the benefit
That all will
Receive by it
This alone is
A good sign for old age
This we should also
Accept
Then remaining
Silent will come
Automatically
For us
Mathigiri, 15-2-2020, 10.50 p.m.
Secular Song 540
Anything done or said in haste—physically or mentally, in spite of any urgency or provocation will result in chaos, confusion, tiredness (both in body and mind). The best and only antidote for this is patience—which alone could cultivate all the virtues one needs to have a peaceful life.
Secular Song 540 பொறுமை தேவை
திறமை திண்மை
சேரும் போது
தோல்விக் கிங்கு
இடமும் ஏது
தெளிவும் அறிவும்
இணையும் போது
குழப்பம் தோன்ற
வழியும் ஏது
கலங்கும் மனதில்
கவலை தோன்றும்
கவலை வந்தால்
உடலும் சோரும்
கலங்கும் மனதும்
சோர்ந்த உடலும்
அறிவை மயக்கி
திணற வைக்கும்
இதற்கு மாற்று
தேவை என்றால்
பதட்டம் தன்னை
நீக்க வேண்டும்
பதட்டம் நீங்க
அமைதி வந்து
பொறுமை தன்னை
தோற்று விக்கும்
பொறுமை போன்ற
சிறந்த செல்வம்
பூமிதன்னில்
வேறு இல்லை
அதனை நாமும்
அடைந்து விட்டால்
வறுமை என்றும்
வாழ்வில் இல்லை
அதன்பின் திறமை
திண்மை சேர்ந்து
அறிவு தன்னை
தெளிய வைக்கும்
அங்கு தோன்றும்
ஆன்மா நிறைவு
அமைதியாய் நம்மை
வாழ வைக்கும்
மத்திகிரி, 17-2-2020, இரவு, 10.30
Secular Song 540 Patience is needed
When both talent and strength
Join together
Where is any
Place for defeat
When buddhi and clarity
Join together
Where is the opportunity
For confusion to come
In a trouble mind
Worries will come
When worries come
Body also become tired
The troubled mind
And the tired body
Joining together
Will overcome our intellect
If we need any
Alternative to this
We should remove
Haste in life
Once haste is gone
Peace coming on its own
Will create
Patience in us
There is no other wealth
Greater than
Patience
On this earth
Once we
Attained it
There is no place for
Poverty in life
Then talent
Joining with strength
Will make
The buddhi very clear
The contentment
In our spirit
Will help us
To live peacefully
Mathigiri, 17-2-2020, 10.30 p.m.
Leave a Reply