BT Song 601 t0 605

BT Song 601

One blessed thing in the Lord is that I need not do any kind of special preparation to go to His presence or wait for the proper time or day.  Nothing wrong in doing all kinds of outward preparation or observing some rituals, but the freedom in the Lord is that we can go at any time to His presence to worship Him. As I got up early in the morning, thinking about it, I wrote this song.

BT Song 601 நீ தந்த வாழ்வு

உன்னால் பெற்ற வாழ்க்கையிது

உன்னைப் போற்றும் நேரமிது

என்னை அறியும் காலமிது

உணர்ந்தே வந்தேன் இப்போது

காலை மாலை என்றில்லை

காத்துக் கிடக்கத் தேவையில்லை

சன்னதி என்றும் திறந்திருக்க

தாமதம் செய்யத் தேவையில்லை

குளித்து முடித்து உடுத்திக்கொண்டு

ஆயத்தம் பலவும் செய்து கொண்டு

படையல் ஏதும் எடுத்துக்கொண்டு

உன்னிடம் வரத் தேவையில்லை

நின்று, நடந்து, கிடந்தாலும்

வேலைகள் பலவும் செய்தாலும்

இடையிடை நான் உன்னை

நினைக்க நொடிகள் சில போதும்

இந்த பேறு நான் பெற்றேன்

இதை எண்ணி வாழ்ந்திடுவேன்

உன்னிடம் பெற்ற அருளையே

உணர்ந்து உன்னைப் பணிந்திடுவேன்

மத்திகிரி, 4-1-2017, காலை 5.30

BT Song 601 The life which you gave

This life is received from you

This is the time to praise you

It is time to know about me also

Realizing this I came now

Either morning or evening

I need not wait for any particular time

As your presence is available all the times

I need not delay to come unto you

After taking bath and properly dressed

Doing all kinds of preparation

Or taking any prasad to offer

I need not come unto you

Sitting or standing

Or doing any kind of work

In between it is enough

To think about you few seconds

I received this blessing

I will live thinking about this

Realizing about the grace which I received from you

I will always bow unto you

Mathigiri, 4-1-17, 5.30 am.

BT Song 602

Thankfully our bhakti is only not for other worlds, despising the reality of this world.  This world is not only God’s creation but also the best gift given to us.  So while we remain focused about our eternal life in the Further Shore, equally we have to remember our responsibility towards our life on this earth. Keeping a balance is not going to be easy.  But with the help of God when we are not going to one extreme, we can strike a balance on both sides.

BT Song 602 சமன் செய்ய வேண்டும்

நான் செய்யும் காரியம்

நன்மையில் முடியட்டும்

நாலு பேருக்கு அதனால்

பயன் கொஞ்சம் கிடைக்கட்டும்

தேவையற்ற விதமாய்க்

காலத்தைப் போக்காது

தெய்வமே நானுந்தன்

சித்தம் மட்டும் செய்யட்டும்

உனக்குள்ளே வாழ்வது

உன்னத ரகசியம்

உனக்கென வாழ்வது

பேரின்பப் பரவசம்

ஆயினும் உலகிடை

நீ வைக்கும் போது

உன்ணெண்ணம் அறிந்து

வாழ்வது அவசியம்

இரண்டு நிலையிலும்

எனை நீயே வைத்தாய்

இவற்றை இரண்டையும்

சமன்செய்ய சொன்னாய்

ஒரு பக்கம் சாயாது

சீர்தூக்க சொன்னாய்

உன்னுடன் இரண்டிலும்

வாழ்ந்திடச் சொன்னாய்

ஆயினும் இது ஒன்றும்

எளிதாக இல்லை

ஒன்றிலும் நிலைக்கின்ற

புத்தியும் இல்லை

எனவே உன் துணை

எனக்கு வேண்டும்

இரண்டையும் சீர்தூக்கி

நீ தர வேண்டும்

மத்திகிரி, 4-1-17, மதியம் 2.05

BT Song 602 Should keep balance

The things that I do

Let it be beneficial

Let it be useful

At least for few people

Not wasting time

In unnecessary works

Oh Lord let me

Accomplish only your will

Living in you

Indeed, is a secret

Living for you

Is a divine bliss

Yet when you keep me

In this world

It is important to

Know and live as per your will

You kept me

On both these worlds

And you asked me

To keep a balance in between them

Not tilting one side

You asked me to keep the balance

You asked me to live with you

In both these worlds

But this is not

That much easy for me

I don’t have a mind

To remain stable even in one properly

Therefore, I need

Your company

You should

Strike a balance for me

Mathigiri, 4-1-17, 2.05 pm.

BT Song 603

This is a regular theme in my songs and one constant experience in my life.  Even though my intellect knows that God is there to carry my burden, but due to the weakness of my mind mainly based on my temperament, I easily get frustrated when things go wrong against my expectation.  But when things settle down, I clearly see the invisible hands of God already carrying the burden through other means.

BT Song 603 இனிச்சுமப்பேனோ

உன்னிடம் வந்து

சொன்ன பின்னாலே

வீணான பாரம்

எனக்கேது மனதாலே

சொல்ல நீயே

சொல்லியே தந்தாய்

“சுமக்க நானும்

ஆயத்தம்” என்றாய்

ஆயினும் சில நேரம்

சஞ்சல மனதோடு

நான் படும் பாடு

பெரிதாகிப் போகுது

வீணாகச் சுமப்பதால்

பயனேதும் கிடையாது

எடுத்துத்தான் சொல்லுறேன்

ஏற்கவும் மறுக்குது

இது ஒன்றும் புதிதான

போராட்டம் கிடையாது

ஒருபோதும் இதன்மீது

வெற்றி கிடையாது

ஆயினும் அறிவேனே

மாற்று அதற்கொன்று

அதையே செய்கிறேன்

வழக்கமாய் நானின்று

மனமென்ன சொன்னாலும்

என்மதி அறியுமே

உன்னிடம் ஆறுதல்

நானும் பெறுவேன்

இன்னும் சுமப்பேனோ

என்பாரம் வீணாலே

எனக்கென நீ வந்து

தோள் தந்த பின்னாலே

மத்திகிரி, 8-1-17, மதியம் 2.20

BT Song 603 Will I carry anymore?

Once I come

And told you

Where is the

Unnecessary burden for me

You alone

Taught me

You alone told

That you are there to carry

Yet due to

This unstable mind

My troubles

Always increase

There is no use in

Carrying them unnecessarily

But my mind refuses to listen

How much I tell

But this is not

A new struggle

And I will never get

Victory over it

Yet I know one

Alternative for that

That alone I do

As I have done before

Whatever my mind says

My buddhi knows that

I will receive

Comfort from you

Will I carry any more?

Unnecessarily

Once you came and

Gave shoulder to me

Mathigiri, 8-1-17, 2.20 p.m.

BT Song 604

Some time I became very calculative about the way I spend my time usefully.  Several times, I will divide an hour into several sections and try to complete that work within that time.  When I waste my time unnecessarily, I become very upset. But later when I reflect, I realize that what I consider as mere waste is not correct.  I cannot live my life as if programmed by some invisible device.  As a human being with all kinds of emotional needs, I too need to pay attention to the needs of my body, mind, and buddhi.  A holistic life is what God expects from me and not some kind of idealistic life because of my life as a sannyasi.  As God has control over everything, the concept of waste looks too artificial to me.

BT Song 604 கவலை இல்லை

வேண்டா நினைப்புக்கு

நேரமே இல்லை

விருப்பு வெறுப்பென்ற

நிலையும் இல்லை

காலத்தை நேரத்தைக்

கணக்கிட்டு வாழ்ந்தேன்

கவலைகள் குழப்பங்கள்

மிகுந்திட கண்டேன்

ஆயினும் அனைத்தயும்

உன்னிடம் சொன்னேன்

அதன்பின் என்னுள்

நிம்மதி கண்டேன்

ஏடுகள் ஆயிரம்

புரட்டி பார்த்தேன்

எண்ணங்கள் பலவற்றை

எழுத்திலே வடித்தேன்

ஆயினும் அவற்றால்

அறிவும் மயங்கிட

அனைத்தும் உனக்கென

சமர்ப்பணம் செய்தேன்

இனி எனக்கென

நினைப்பும் இல்லை

உன்னை அன்றி

எண்ணமும் இல்லை

காலத்தை நேரத்தை நீ

ஆளுகை செய்திட

அதைப்பற்றிக் கவலையும்

எனக்கினி இல்லை

மத்திகிரி, 9-1-2017, மதியம் 2.10

BT Song 604 No more worry

There is no time

For unnecessary thoughts

There is no attitude for

Repulsion and attraction

I lived calculating

Days and time

And I found that

Confusion and worries increased

But I shared all these

To you

After that I got

Peace of mind

I read

So many things

And try to put down my thoughts

In various writings

But as my mind

Get more deluded

I offered all of them

to you finally

Here after

I don’t have my own thought

I don’t have any other thought

Other than you

As you lord over

Days and time

I won’t worry

about them anymore

Mathigiri, 9-1-2017, 2.10 pm

BT Song 605

BT Song 605 God laughs

God laughs thinking again and again

And He mocks at us

What all the things we proclaimed

He asks again about them to us

How many uproars we made

How arrogantly we talked

But we don’t remember them now

And we least bother about it

We often gathered to debated many things

We asked many more questions

In order to parade that we are more learned

We spoke more than what is required

We never stand firm in our conviction

Our principles are not clear

In order to show our oratory

We talked many more things

In order to show that we are unique

We put many arguments

To show that there is none to oppose

We cornered our opponents too

Finally, we are left alone

And God also forsake us

Yet we never gave up our pride

And humility does not come a bit

Rejecting the egoistic

Who always think ‘I am’

He will accept the simple one

And He will laugh at us

Mathigiri, 12-1-2017, (13-1-17) 1.30 am

Sometimes due to our oratory skill and argumentative nature we try to parade that we know better than others.  We have several times cornered our opponents who have different opinions and try to shut them through our skilful argument.  When they see that there is no use in talking with such people and leave, we consider it our victory.  As we begin to reject one by one putting the others in so many categories, finally we are left alone.  As this creates some kind of supersaturation, then the energy which we used to fight with our imagined enemies turn back among ourselves creating more confusion and division. Finally, not even standing in our principle which we proclaimed loudly to the world, we are left alone. But God watching all these will have the final laugh and will reject us and will accept the simple one who demonstrates more humility than parade artificial intellect or oratory skill.

BT Song 605 நகைக்கிறான்

எண்ணி எண்ணி நகைக்கிறான்

ஏளனமாகச் சிரிக்கின்றான்

என்ன வெல்லாம் சொன்னோமென

மீண்டும் நம்மைக் கேட்கின்றான்

எத்தனை போட்டோம் ஆர்ப்பாட்டம்

எடுக்காய் எத்தனை பேசிவிட்டோம்

அவற்றின் நினைவு இன்றில்லை

அக்கறை சற்றும் நமக்கில்லை

கூடிக் கூடி வாதிட்டோம்

கூடவே கேள்விகள் பலகேட்டோம்

மெத்தப் படித்தவர் எனக்காட்ட

மிஞ்சிய சொற்களை உதிர்த்துவிட்டோம்

கொண்ட கொள்கையில் நிலைக்கவில்லை

கூறிய கருத்துக்கள் புரியவில்லை

பேச்சின் திறனைக் காட்டிடவே

பேசிய பேச்சுக்கு குறைவில்லை

தனித்து நிற்பவர் எனக்காட்டத்

தர்க்கங்கள் கூடப் பல செய்தோம்

எதிர்க் கருத்துக்கு இடமில்லை

என்று பலரை முடக்கி விட்டோம்

இறுதியில் தனியே விடப்பட்டோம்

இறைவனும் கூட கைவிட்டான்

ஆயினும் அகந்தைக்கு குறைவில்லை

அடக்கம் சற்றும் வரவில்லை

“நான்” என்ற எண்ணம் கொண்ட

தற்குறி தன்னைத் தள்ளிவிட்டு

எளியோர் தன்னை ஏற்றுக் கொள்வான்

எள்ளி நகைத்து நமை பார்ப்பான்

மத்திகிரி, 12-1-17, இரவு, 1.30

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *