Secular Songs 546 to 550

Secular Song 546

For comments see: Corona and Individualism and politics

546 கொரோனா அரசியல்

கொரோனா  இங்கு

வந்தாலும் வந்தது

கொஞ்சமா நஞ்சமா

நன்மைகள் தந்தது

காற்றின் மாசு

காணாமல் போனது

காடும் கூட

உயிர் மூச்சு விட்டது

உறவின் பெருமை

உலகம் அறிந்தது

உறவோடு வாழும்

இனிமையை உணர்ந்தது

லஞ்சம் வாங்கிய

அரசாங்க அதிகாரி

கொஞ்ச நாள் அதை

மறந்திட வைத்தது

மிரட்டிப் பழகிய

காவலர் கூட

கும்பிடு போட்டு

கெஞ்ச வைத்தது

குடிக்காமல் இருந்தால்

குடி ஒன்றும் மூழ்காது

என்பதைக் குடிகாரன்

புரிந்திட வைத்தது

இதுபோல் பலவித

புதிதாக மாற்றங்கள்

எல்லோரும் காண

கொரோனா செய்தாலும்

மாற்றவே முடியாத

அரசியல் வாதியை

மாற்றிட இயலாமல்

கொரோனாவும் தவிக்குது

அரசியல் செய்தே

பழகிய அவர்களை

இன்னுமேன் கொரோனா

விட்டு வைக்குது

அவர்களைத் தொட்டால்

தானும் கெடுவேன்

என்று அஞ்சி

தூரமே நிற்குது

மத்திகிரி, 20-4-2020, இரவு, 11.100

Secular Song 546 Corona politics

As Corona came

It also

Brought few

Blessings in disguise

Air pollution has

Disappeared considerable level

And even the forest

Begin to breathe freely

The world came to know

The importance of relationship

It realized the sweetness of

Living with relatives

Even the officials

Who used to demand bribe

Made them to

Forgot it for few days

The police who

Always used force

Also made them to

Request the people with folded hands

It helped the drunkard to realize that

The world won’t

Came to an end

If they stop drinking

Though Corona has

Brought these

Kinds of new changes

For everyone to see

It also get frustrated

As it failed to change

The politicians

Who won’t change ever?

Somehow it keeps them away

In a distance

As they used to do

Politicize everything

Fearing that

It also will be polluted

If it touches them

It stands away from them.

Mathigiri, 20-4-2020, 11.100 p.m.

Secular Song 547

The lockdown gave the rest that we need both in body and mind. Some use it but many get frustrated as they are not used to it.  Unable to adjust to such unexpected demand they were longing to have the same old life of busyness.  When the lockdown was relaxed many people rushed to have entertainment and socializing.  Of course men as a social animal need fellowship with others, but not minding about the risk the way they rushed to have entertainment is too much considering the present scenario.  When a calamity suddenly attacks, when we are not prepared, recovery and restoration will take time which needs to be done in a slow phase to have a long time effect on us.  Any rushing and pushing will only complicate the situation further. But what to say about when several people behave this way?

Secular Song 547 என்ன சொல்ல

மனதையும் உடலையும்

மீறிய ஓய்வு

மனிதர்க்குத் தேவை

என்பதை உணர்ந்து

இயற்கையும் அதையே

தந்தது இன்று

இதை நாம் புரிவது

மிகமிக நன்று

இயற்கையில் உள்ள

அனைத்து உயிரும்

ஏற்ற விதத்தில்

ஓய்வு எடுக்கும்

எவ்வித சலனமும்

மனதிலே இன்றி

இயற்கையில் ஒன்றி

வாழ்ந்து முடிக்கும்

மனிதன் மட்டும்

இதற்கு விலக்காய்

மனதையும் உடலையும்

மிகமிக வருத்தி

இயற்கையை மீறிய

வாழ்வினை அமைத்து

வாழ்ந்து முடிப்பான்

சஞ்சலம் கொண்டு

அவனுக்கு இரங்கி

இயற்கையும் இங்கு

ஓய்வு அளிக்க

எண்ணம் கொண்டு

அவனையும் மீட்க

தன்னையும் காக்க

தந்தது இந்த

ஓய்வை இன்று

ஆயினும் அதற்கொரு

விலையை வைத்து

அதை அவனே

கொடுக்கவும் வைத்து

தனக்குச் செய்த

தீமைக்காக

செய்ய வைத்தது

பரிகாரம் இன்று

ஆனால் அதை

ஏற்க மறுத்து

தன் சுயத்தை

மட்டுமே நினைத்து

மீண்டும் ஓடி

வாழ்ந்து முடிக்க

நினைக்கும் அவனை

என்ன சொல்ல

மத்திகிரி, 7-5-2020, காலை 7.00

Secular Song 547 What to say?

Knowing that

Human beings need

Some rest which goes beyond

Both body and mind

Nature has provided

That alone now

It is important

For us to understand it

Every living creature

In natural world (except human)

Will take rest

According to the need

Without frustration

In their mind

They will spend the life

Mingling with nature

Human alone

Remaining as an

Exception to this

Straining both body and mind

Arranging it accordingly

Against to the law of nature

Will spend his life

With much frustration

Taking pity on him

Thinking to give

Some rest to him

In order to redeem him

And also to protect itself

Gave this

Good rest

But keeping

A price for it

And made him

To pay that

In order to

Avenge all the evils

Done against it

It made him to do

This propitiation also

But what to say

About him

As he is not

Ready to accept it

And the way

He runs

Keeping only

His interest like this

Mathigiri, 7-5-2020, 7.00. a.m.

Secular Song 548

Though we cannot live without others, until we learn to live our life for us, there is no use trying to learn from others to imitate them.

Secular Song 548 சரியாக நடக்கும்

தேடித்தான் அலைந்தேன்

கிடைக்கவே இல்லை

கிடைத்தவர் எனக்கத்தை

சொல்லவும் இல்லை

நாடித்தான் ஓடினேன்

பெற்றிட வில்லை

பெற்றவர் பெற்றத்தை

காட்டவும் இல்லை

எட்டி நான் பார்த்தேன்

அவரது வாழ்வை

எப்படியேனும் அதை

அறிந்து கொள்ள

என்னிலைக் கிறங்கி

சொல்ல முயன்றார்

ஏற்ற வார்த்தைகள்

தேடி சொன்னார்

அவர் சொன்ன ஏதும்

புரியவே இல்லை

அவர் மீது குற்றம்

ஏதும் இல்லை

தான் பெற்று வாழ்வதை

தன்போக்கில் சொன்னார்

கேட்ட எனக்குத்தான்

விளங்கவில்லை

எத்தனை தத்துவம்

எத்தனை உவமைகள்

அத்துடன் அவரின்

ஆய்வின் முடிவுகள்

தான் பெற்ற அனுபவம்

சரியெனச் சொன்னார்

அதனை மறுப்பவர்

சரியில்லை என்றார்

விட்டால் போதும்

என்று ஓடினேன்

வேண்டாத வேலை

தேடுதல் என்றேன்

இருப்பதை விட்டு

பறப்பதை பிடிக்கும்

ஏமாளி நானானேன்

புரிந்து கொண்டேன்

வாழ்ந்திடும் வாழ்வை

இயல்பாக வாழ

வந்திடும் தன்போல்

தேடிய எதுவும்

பெற்றதை முறையாய்

கையாளும் போது

நாடிய ஒன்றும்

தன்போல் கிடைக்கும்

பிறரிடம் சென்று

கேட்பதை விட்டு

பிறரைப் பார்த்து

வாழ்வதை விட்டு

எனக்கென வாழ்வை

வாழ்ந்திடும் போது

எல்லாம் இங்கே

சரியாக நடக்கும்

மத்திகிரி, 20-5-2020, இரவு 11.45

Secular Song 548 Everything will go well

I wandered searching for it

But I never obtained

Those who got it

Never declared it to me

I went after seeking it

But I never attained it

Those who attained

Never showed it to me

Somehow to

To learn about it

I just looked

Their life

Taking pity on me

They try to share it

They searched

Proper words

But I cannot understand

What they shared

But there is no point

In accusing them

They shared about what they received

In their own way

But I cannot understand

As I listened to them?

How many philosophies (about life)

How many illustrations (to explain it)

Along with added

The result of their research

They insisted that

Their experience is true

Those who refuse to accept

Alone are not correct

I ran away from them

In order to escape (from them)

I realized that

It is unnecessary endeavor to search for it

I realized that
I am the fool

Who tried to catch the flying bird?

Not holding which is on my hand

When I began to live

My normal life

Everything that I searched for

Will come automatically

When I handle

Which I already attained

That which I seek

Will be come on its own

Giving up

Asking others (about it)

Not trying to live

Imitating others

When I began to live

My life for me

Everything will

Go properly

Mathigiri, 20-5-2020, 11.45 p.m.

Secular Song 549

The first week of July 2020 almost went into having a dialogue with a Hindu convert on Hindu Communalism. First I gave a short response to his forward message in which one RSS Leader said that, ‘“Those who worship one God, have one manner of worship, and believe in one book are considered a community. Since Hinduism doesn’t fit into this description, Hindus are not a community. Hindus, therefore, cannot be communal,” he explained.

Agreeing with him I gave my response then this led to further thinking on this subject and I began to write more and more. At the same time, I struggled a lot within myself, unable to communicate my thoughts and point of view clearly.  As I was meditating on this struggle, I came to the conclusion that as I fail to communicate, it is better to keep quiet that alone is good for me.  For some reason I don’t want to get involved in any kind of controversial topic to which no one can give a final answer. Particularly when people from other faiths question Hinduism without proper understanding, I wish to avoid answering their questions, as they already made up their mind about Hinduism.  Any kind of reasoning won’t convince them.  This being the reality, I don’t want to respond. At the same time, as their questions triggered my mind and sometimes even as I am provoked for their misunderstanding, then I want to give my response—not to convince them, but to give answer to my own buddhi which asks so many questions.  But it is even good for both my buddhi and heart if I remain quiet not responding to any controversial topic.  Another one such controversy in which I recently became involved is the way BBC denigrated India and my response to it (See ‘BBC and BJP).  After writing Part one, though I wrote Part Two I stopped not completing it as I don’t want further courting debates.

Secular Song 549 எனக்கு நல்லது

எப்படி முயன்றாலும்

என்னால் ஆகாது

என் மன ஓட்டத்தை

சொல்ல இயலாது

ஆயினும் அதுவும்

ஒருவிதம் நல்லது

அதற்கான காரணம்

என்னிடம் உள்ளது

சொல்கிறேன் என்று

உளறினேன் அதிகம்

சொல்லாமல் இருக்க

குமுறினேன் நாளும்

பிறர் கேட்க நானும்

சொல்லாத போதும்

என் பேச்சை நான் கேட்க

மறுத்தேன் நாளும்

என் புத்தி என்னிடம்

கேள்வியும் கேட்குது

என் மனம் அதற்கு

பதிலும் சொல்லுது

ஏற்பதா மறுப்பதா

என்பது தெரியாது

என் புத்தி மீண்டும்

குழம்பியே போகுது

அதன் தவிப்பை

உணர்ந்த மனது

அறிவிடம் அதற்கான

விளக்கம் தந்தது

புரியாத கேள்வி

நீயும் கேட்க

இல்லாத பதில்

உனக்கு கிடைக்கும்

அதை உணர்வது

உனக்கு நல்லது

ஆகவே சொல்வதை

முதலில் நிறுத்து

என் மன ஓட்டத்தை

நீயேன் அறியணும்

வீணாக அதையேன்

வெளியே சொல்லணும்

பிறர் கேட்க எழுத்தலை

என்றான பின்னே

நீ கேட்க மறுத்தபின்

எதற்கான எழுதணும்

அறிவு இருந்தும்

அறியாத உனக்கு

அறிவென்ற ஒன்று

வீணாக எதற்கு

ஆகவே அதனை

மழுங்க அடித்திடு

அத்தபின் அமைதி

வந்திடும் புரிந்திடு

மனதின் விளக்கம்

புரியாது போக

அறிவு மறுபடி

கேள்வி கேட்க

பதில்தந்து பயனில்லை

என்பதை உணர்ந்து

மனது மீண்டும்

மவுனம் கொண்டது

ஆகவே சொல்ல

இயலாமல் போனது

அதுதான் என்றும்

எனக்கும் நல்லது

2-7-2020, மத்திகிரி, இரவு, 11.00

Secular Song 549 Good for me

How much I try

It is not possible for me

I cannot communicate

My thought process

One way

It is also good for me

I have a

Reason for that

I babbled a lot

In the name of sharing

If I don’t share

I mourned keeping within me

Though I never shared

For others to listen

But I refused to listen

Even my own thoughts

My buddhi asked

Some questions to me

And my mind/heart gives

Some answers to it

Not knowing

Whether to accept or reject

My buddhi again

Get confused

Understanding it struggle

The mind again

Began to give

Some explanation to the buddhi

‘If you ask

Unintelligible questions

You will only receive

A non existing answer

It is better for you

To understand this

Therefore, first stop

Sharing your thoughts

Why should you know?

What I think?

Then why you unnecessarily

Share with others?

As you are not

Writing for others

Once you refuse to listen to you also

Then why should you write

Even having a buddhi

If you remain as a fool

Then why should you have

Even that buddhi (intelligence)

Therefore first

Make it impotent

Then peace will come

Automatically, understand this

As this explanation (given by my mind)

Is not clear

As the buddhi

began to ask questions again

‘There is no use giving further answers’

As the mind/heart realized this

It kept

Quiet again

Therefore, I am

Unable to share

One way

That is good for me

2-7-2020, Mathigiri, 11.00 p.m.

Secular Song 550

There is an old Tamil song which says to the stomach that, ‘If I request you to give up one time food, you won’t do that; if I request you to take two times meal together, you won’t do that also; Oh you the troublesome stomach; it is very difficult to live with you’.

The same is true with mind.  No one has the freedom that it enjoys.  There is no point of taming by any means. But the only way to help it to understand my plight is to remind that whatever it dos finally it has to return back only to me.  If it realizes this that will be good both for us!

But what is the mind to which I am addressing?

Secular Song 550 மனமே நல்லது

நினைந்திட உனக்கென்ன தடைகளும் உண்டு

நெஞ்சே நீயதை எனக்கு சொல்லு

உனக்குள்ள சுதந்திரம் எவருக்கு உண்டு

என்பதை மட்டும் என்னிடம் சொல்லு

எதில் உனக்கு விருப்பம் உள்ளதோ

அதையே நீயும் அடிக்கடி நினைப்பாய்

அதிலொரு சுகம் கண்ட பின்னால்

அதை விட்டு வெளிவர நீயும் மறுப்பாய்

ஒன்றை நீ எண்ணிடும் போது

சட்டென வேறொன்று நினைவுக்கு வர

கழிவிரக்கம் ஏதும் இன்றி நீ

காட்சி தன்னை மாற்றிக் கொள்வாய்

ஒரு முறை உன்னை ஒரு செயல் தன்னில்

நிலைக்க வைத்திட்ட பலவிதம் முயன்றும்

கிளை விட்டு கிளை தாவும் கவி போல்

ஒன்றில் நிலைக்க நீயும் மறுப்பாய்

ஆயினும் இதற்கு மாற்று இல்லை

அதுவே எனக்கு மாறாத் தொல்லை

ஆனால் இதற்கொரு விடையைக் கண்டேன்

அதைத்தான் உன்னிடம் சொல்லிட வந்தேன்

எதை நீ எவ்விதம் எப்படி நினைக்கிணும்

இறுதியில் மீண்டும் என்னிடம் வரணும்

உடலைப் பிரியா நிழலைப் போல

இறுதிவரை நாம் இணைந்தே வாழணும்

அதை நீ நினைப்பது உனக்கு நல்லது

ஆகவே உன்னைத் திருத்திக் கொள்வது

நாம் இருவருக்கும் ஏற்றது என்பதை

உணர்ந்து நீயும் அதன்படி வாழ்ந்திடு

Secular Song 550 It is good for you

What hurdles are there for you to think?

Oh my mind first you tell that to me

Who has the freedom that you have

Better tell that first to me

Whichever is your interest

You will think only that often

Once you found pleasure in it

You refuse to come out

When you are thinking about one thing

Suddenly as you remembered another thing

Without any regret

You will change the scene immediately

Though I tried my best to

Keep you to remain stable in one thing

Like the monkey which often jumps from branch to branch

You will refuse to abide in one thing permanently

But there is no alternative to this

This become my constant trouble

Therefore I found an answer for this

I came only to talk about it to you

However you think, whichever you want

Finally you have to come back only to me

Like the shadow which cannot be separated from the body

Till the end both of us need to live together

It is good for you to remember this

Therefore changing your attitude is

Better for us both, understanding this

You live accordingly (with me)

Mathigiri, 28-7-2020, 10.30 p.m.

மத்திகிரி,  28-7-2020, இரவு, 10.30

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *