Secular Songs 556 to 560

Secular Song 556

Several times I feel that I am living my life by the compulsions and force of others who push me from behind and drag me in the front.  One way this kind of life is also good for a person like me as they have to pay the cost for doing it.  And this kind of life is a rare one for anyone to get.  There is no point in disclosing the secret in it.  Even as I cannot understand the life which I live, others cannot understand the secret either.

Secular Song 556 புரியாத ரகசியம்

பிறருக்கும் புரியாது

எனக்கும் விளங்காது

இதுவரை என்னவோ

நான் வாழ்ந்து விட்டேன்

இனிமேல் விளங்கி

என்னாவ தென்று

அதுபற்றி எண்ணத்தை

நான் கை விட்டேன்

ஆகவே அனுதினம்

வாழ்ந்திடும் வாழ்வை

ஆராய்ந்து பார்ப்பதை

நான் கைவிட்டேன்

பின்நின்று தள்ள

முன்வந்து இழுக்க

போகுது வாழ்க்கை

அனுதினம் மெள்ள

இதுவும் ஒரு விதம்

நல்லது என்று

ஒன்றும் செய்யாமல்

நானும் நிற்கிறேன்

தள்ளுவார் இழுப்போர்

யாராக இருந்தாலும்

ஒன்றுமே கூறாமல்

அவர் வழி போகிறேன்

இதுகூட ஒரு விதம்

நல்லதே ஆனது

இலாபமோ நஷ்டமோ

அவரோடு போனது

இதுபோன்ற வாழ்வு

எல்லோர்க்கும் அமையாது

இதிலுள்ள ரகசியம்

சொன்னாலும் புரியாது


வாழ்ந்திடும் வாழ்வு

விளங்காத போது

ரகசியம் மட்டும்

புரிந்திடப் போகுது

மத்திகிரி, 21-10-2020, இரவு, 11.00

Secular Song 556 A secret

So far I have

Somehow lived

Neither understood

Nor clear to others

What is the

Use understanding further

Thinking that

I give up try to understand

Therefore I

Forsake analyzing

Everyday life

That I am living.

Pushed in the behind

Dragged from the front

Somehow the life

Goes slowly each day

Thinking that

This is one way good

That I stand still

Not doing anything

Whoever might it might?

Those push or drag

Not asking about it

I go along their way

This is good

In one way

Because whether loss or profit

That belongs to them

This kind of life

Won’t be available for everyone

Others cannot understand

The secret in such life

When I cannot understand

The very life which I live

If I disclose that secret

Can others understand that?

Mathigiri, 21-10-2020,11.00 p.m.

Secular Song 557

The reason why children have relatively a peaceful, joyful and content life is that they cannot understand the life which they live.  Once we begin to understand and try to understand about life all the complications come making our life more a burden.  There is no point in saying to ‘become like a child’ again. That is impossible. But when we get an opportunity to live without having proper understanding about that particular situation, instead of analyzing it to understand if we manage to live it without having any understanding, then we can again have a glimpse of that content like a child. So never try to understand certain things or incidents in life.  Just try to live as it comes to enjoy life.

Note: If you cannot understand this song or this comment or the translation, then you are living a content life.  So don’t try to understand this, if you cannot understand it (like other poems and narratives).

Secular Song 557 புரியாத வாழ்க்கை

புரியாத ஒன்றை

புரிந்திட முயன்றால்

புரிந்தவை எல்லாம்

புரியாமல் போகும்

இதை முதலில்

புரிந்திடும் போது

புரியாமல் இருப்பது

நலமெனப் புரியும்

புரிந்ததாய் எண்ணி

இதுவரை வாழ்ந்த

நமது வாழ்வை

திரும்பியே பார்த்தால்

புரியாமல் வாழ்ந்ததில்

உள்ள நிறைவு

புரிந்தபின் இல்லை

என்பதும் புரியும்

புரிந்ததால் வந்த

விளைவுகள் அனைத்தும்

எண்ணிட இப்போதும்

மனதுமே நடுங்கும்

தொடர்ந்து அவை

இப்போதும் துரத்த

தப்பிக்க வழியில்லை

என்பதும் தெரியும்

புரியாமல் வாழும்

குழந்தையைப் போல

மீண்டும் ஒருமுறை

வாழணும் என்று

ஏங்கிடும் மனதுக்கு

எப்போது கிடைக்கும்

அதுபோல ஒரு

நிறைவான வாழ்வு

குழந்தையைப் போல

மனதையும் மாற்று

என்று சொல்லிப்

பயனும் இல்லை

மாற்றிட முடியாது

என்பது புரிந்தபின்

குழந்தையாய் மாற

வாய்ப்பு இல்லை

ஆகவே மீண்டும்

புரியாமல் வாழும்

சந்தர்ப்பம் ஒன்று

கிடைத்தது என்றால்

அதனைப் புரிந்திட

முயற்சி செய்யாது

குழந்தைபோல் வாழ்ந்தால்

நிறைவினை எய்தலாம்

மத்திகிரி, 18-11-2020, 11.45 p.m.

Secular Song 557 Life that we cannot understand

If we try to understand

That cannot be understood

All that we understood

Will become not clear

When we

Understand this

We will realize that

It is good for us

When we turn back

And see our life

Thinking that

We have understood it

The satisfaction

That we received

In the life that lived without understanding

Is not after we understood it

When we think the results

After we understood the life

Our heart will

Tremble even now

As they continue

To chase us now

There is no means

For us to escape

Like the child

That lives the life

Without any

understanding

Our heart also longs

To have similar life

When it will

Receive such a life again

There is no use

In telling that

Like a child

You also have to change your heart

Once we know that

We cannot change the heart

There is no possibility

To become like a child

Therefore if we

Get another chance

To live the life

Without any understanding

If we try not

To understand it

We too can live like a child

And attain fullness in life

Mathigiri, 18-11-2020, 11.45 p.m.

Secular Song 558

It is a famous saying that history is always the story told by those who got victory at the cost of those who paid the cost for that.  But as no victory remains permanent a time will come also for those defeated to tell their stories also.  So not discouraged by defeat and not bragging about victory we need to live a balanced life.

Secular Song 558 வெற்றி தோல்வி

தோற்றவர் நாமே ஆகட்டும்

தோல்வி நமதாய் இருக்கட்டும்

வென்றவர் எல்லாம் ஒன்றாய்க்கூடி

விருந்து உண்டு மகிழட்டும்

வென்றவர் கூறும் கதையாக

சரித்திரம் என்றும் இருக்கட்டும்

தோல்வி அடைந்தோர் தந்த விலை

அதற்குள் என்றும் மறையட்டும்

வெற்றி முழக்கம் இடுகிறார்

வென்ற வகையை உரைக்கின்றார்

ஆனால் அதற்காக அவர் செய்த

செயல்கள் தன்னை மறைக்கிறார்

எந்த முறையில் வென்றாலும்

வெற்றி என்றும் நிலையில்லை

எத்தனை முறைகள் தோற்றாலும்

தோற்றவர் முற்றாய் அழிவதில்லை

ஓடமும் வண்டியும் மாறி மாறி

ஒன்றில் ஒன்று போனது போல்

வெற்றியும் தோல்வியும் இடம் மாற

உண்மை தன்னை உணரவைக்கும்

தோல்வி அடைந்தால் துவளாமல்

வெற்றியில் அகந்தை கொள்ளாமல்

இரண்டையும் சாமாய்  கையாண்டு

வாழ்ந்தால் வாழ்வு வளமாகும்

மத்திகிரி, 24-1-2020, இரவு 10.30

Secular Song 558 Success and Defeat

Let us remain defeated one

Let defeat belongs to us

And those get victory

Join together to have feast

Let the history be

The story told by those who got victory

Let the price paid by those defeated

Remain buried in it

They blow the trumpet to proclaim their victory

And tell how they got the victory

But they hide all those things

To get that victory

Whichever way one might wins

Victory never remains forever

How many times others are defeated

They never completed perished

As both the cart and boat

Travel each on the other

When both victory and defeat replaced

It will help us to remained about the truth

Not discouraged when defeated

Not bragging when we get victory

When we learn to balance both in life

Then life will become meaningful

Mathigiri, 24-1-2020, 10.30 p.m.

Secular song 559

For Comments see: ‘Who is a Scholar’.

Secular Song 559 கற்றது கைமண் அளவு

முழுதாய் அறிந்தவர் எவருமில்லை

முற்றும் அறிய முடிவதில்லை

இதனிடையே நாம் அறிந்த எதுவும்

முழுதாய் நமதாய் இருப்பதில்லை

எங்கோ எவரோ தொடங்கி வைத்தார்

பலரும் அவரைத் தொடர்ந்து வந்தார்

கற்ற தனது வித்தைகளை

நம்மிடம் கொடுத்து கடந்து சென்றார்

அதை நாமும் ஆராய்ந்து

அதற்கு சற்று மெருகேற்றி

அடுத்தவர் கையில் கொடுத்துவிட்டு

அடிச் சுவடின்றி மறைந் திடுவோம்

இந்த உண்மை புரிந்து கொண்டால்

எவ்வித மேன்மைக்கும் இடமில்லை

எனது என்று சொல்லிக் கொள்ள

எவ்வித உரிமையும் நமக்கில்லை

கற்றது என்னவோ கையளவே

கலாத துள்ளது உலகளவு

என்ற முதுமொழி சொன்னபடி

வாழ்வது ஒன்றே நல்ல நெறி

மத்தகிரி, 18-3-2021, இரவு, 11.00

Secular Song 559 Limitation of our  knowledge

There is none who knows everything completely

It is impossible for us to know everything

In this, whatever we knew or learnt

Never remain completely our own

Somewhere someone has started it

Many followed them

They handover all that they learned to us

And passed away

Doing some research on them

Adding some more polish to them

Handover them in others hand

We too will disappear without any trace

If we understood this truth

There is no place for any thing to brag

We don’t have any right to claim

Anything (knowledge) as our own

‘What we have learnt so far is only a handful

What we yet to learn remains as large as this world’

It is better for us to live

As this proverb says (about learning or knowledge)

Mathigiri, 18-3-2021, 11.00 p.m.

Secular Song 560

Negotiating relationships is an art in itself.  Adjustment is the only eternal solution for this.  When we adjust with others we also should help others to do their part.  How to do that is the real test for all of us.

Secular 560 நெளிவு சுளிவு உறவு

தூர நின்று பார்த்திடும் போது, தேவ

தூதர்கள்தான் நாம் அனைவரும்

கிட்ட நெருங்கிப் பார்க்கையிலே

தெரிந்திடும் நம் உண்மை முகம்

எட்டி நின்று பேசுகையில்

என்னமாய் சிரித்துப் பேசுகிறோம்

கொஞ்சிக் குலாவி அன்புடன் மனதில்

கூடி ஒன்றாய் வாழ்கின்றோம்

கிட்டே நெருங்கி உரசும்போது

கொஞ்சம் கொஞ்சமாய் சூடேற

புகையும் தோன்றி நம்மை மூட

மூச்சுத் திணறி ஓடுகிறோம்

கிட்ட நெருங்கினால் நெருப்பு சுடும்

தூர விலகினால் குளிர் வாட்டும்

இரண்டுக்கும் இடையே இடம் பார்த்து

நின்று நாமும் குளிர் காயணும்

அணையும் முன் சுள்ளியும் போட்டு

அணைந்து விடாமல் நெருப்பைக் காக்கணும்

அணைந்த பின் எப்படி ஊதிணும்

சாம்பல்தான் பறக்கும் அதையும் உணரணும்

நெளிவு சுளிவு உள்ள உறவை

நேர்த்தியாக கொண்டு போகணும்

வளைந்து கொடுத்து நிமிர்ந்து எதிர்த்து

புரிய வைத்து புரிந்து வாழணும்

மத்திகிரி, 8-4-2021, இரவு, 11.00

Secular Song 560 Complicated relationships

When we stand in distance

We all are angles indeed

When we come close to each other

Then our true face will be revealed

When we talk with each other from a distance

How we laugh with each other

We live together

Loving each other in our hearts

When we began to have close fellowship

As the warmth slowly increases

As smoke raises and suffocate

We run away from each other

When we go close to fire it burns us

If we keep long distance then we will shiver with cold

Seeking a safe place between them

We should try to remain warm

Before the fire dies down

We should put more wood to keep alive the fire

However we blow after the fire dies down

Only the ash alone will fly around us

We should try to negotiate

The complicated relationship

Bending down and standing up

We should live understanding and helping others to understand

Mathigiri, 8-4-2021, 11.00 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *