Secular Songs 591 to 595

Secular Song 591

Man is a social animal.  But we live as a group—with our own ‘created’ and ‘given’ identities.  But we can never live like a crowd that gathers for a few minutes or some hours and disperses after that.  So what we are is what society makes us and what society is what we make it.  In this process of making and remaking lies our identity.  In this the golden principle is that we always keep in mind that WE CAN ONLY LIVE WITH OTHERS AND NEVER FOR OTHERS.  And if we follow ‘live and let live’ we can contribute a lot to others and also receive their contribution for us to live.

Secular Song 591 பிறரோடு வாழணும்

எல்லோர்க்கும் ஏற்கும்

வாழ்வொன்று வாழ

எவர்க்கும் இயலாது

என்பதை உணர்ந்து

பிறரோடு வாழ்க்கிறோம்

என்பதை உணர்ந்து

நம்மோடு பிறர் வாழ

உதவணும் நன்று

பிறருக்காக வாழ்கிறேன்

என்பதைத் துறந்து

பிறரோடு வாழ்கிறேன்

என்பதை உணர்ந்தால்

நம்மோடு பிறர் வாழ

அவரோடு நாம் வாழ

முடிவாக நம் வாழ்வும்

பயனுள்ளதாகும்

அதை விடுத்து

என் வாழ்வு இதுவென்று

பிடிவாதம் பிடித்து

வாழ முயன்றால்

பிறரோடு நாம் வாழ

இயலாது போகும்

நம்மோடு பிறர் வாழ

முடியாது என்றும்

குழுவாக வாழும்

மனித வாழ்வை

கூட்டமாய் வாழ

மாற்றிட முயன்றால்

சிதறிப் போகும்

கூட்டத்தைப் போல

மாக்களாய் மாறிடும்

நிலையும் வந்திடும்

எனக்கான அடையாளம்

பிறறுமேத் தந்தது

என்கிற எண்ணத்தை

மனதிலே கொண்டு

அந்த அடையாளம்

தொலைந்து போகாது

தந்த பிறரோடும்

வாழ்வதே நன்று

அதை விடுத்து

ஆணவம் கொண்டு

தனித்து இருந்து

தொலைந்தவர் உண்டு

தனக்கும் புரியாமல்

பிறரும் ஏற்காமல்

வாழ்வது வாழ்வல்ல

என்பதை உணர்ந்து

மானுட வாழ்வின்

தனித்துவம் அறிந்து

பிறரோடு  வாழணும்

மனிதராய் நன்று

குருகுலம்,  9-9-2022, இரவு [காலை] 12.30

Secular Song 591 Should live ‘with’ others

We cannot live a life

That will be

Acceptable to everyone

Realizing this

And understanding that

We are living ‘with’ others

And we should help

Others to live ‘with’ us

Giving up the thought that

I am living ‘for’ others

And if we understand that

I am living ‘with’ others

As others to live ‘with’ us

And we live ‘with’ them

In the end our life

Would become meaningful

Leaving this

with much arrogance

Saying, ‘This is my life’

And try to live accordingly

We cannot live

‘with’ others and

Others cannot

Live ‘with’ us properly

If we try to convert

Our life from as

A Group to

Merely a Crowd

Like a crowd

That get dispersed

We too might end up

Living like ‘non-human’ beings

Keeping this in mind that

My identity is

Given by

Others to me

Never let that

Identity get lost

It is good to live

With them who gave that to us

Leaving this

Living alone with arrogance

Many are indeed

Who lost their life

Living a life

Not remain clear to us and

Not acceptable to others

Is indeed not a life, realising this

Knowing the

Uniqueness of human life

We should live ‘with’ others

As human beings

Gurukulam,  9-9-2022, night 12.30 am.

Secular Song 592

This saying is very true, ‘Great people live with conviction and small people cherish their opinions.  Those who live with conviction would give a cost for their conviction.  But those who merely entertain opinion will suffocate for sometime but soon will escape from it.  But this conviction we should have and the sacrifice that we make should be of our own.  Like doing any charity only from our own hard earned wealth is really a charity.  Rest are nothing but mere business.  The same is with conviction.   

Secular Song 592 மதிப்பிருக்காது

கொண்ட கொள்கையில்

உறுதியும் இன்றி

கூ றிடும் வார்த்தையில்

உண்மையும் இன்றி

எதற்கெடுத்தாலும்

எகத்தாளம் பேசி

வாழ்வோர் மத்தியில்

வாழத்தான் வேண்டும்

ஆயிரம் வாதங்கள்

அடுக்கடுக்காய் அமைத்து

அதற்கான உவமைகள்

அடுத்தடுத்து வைத்து

ஊருக்கும் உலகுக்கும்

உபதேசம் செய்வார்

தன் வரையில் என்றால்

அனைத்தையும் மறப்பார்

ஏட்டிக்குப் போட்டி

இவருடன் பேசாது

அவரை திருத்த

முயற்சியும் செய்யாது

விழலுக்கு இறைத்த

நீராக மாறாது

நமது வாழ்வை

நாம் வாழ வேண்டும்

கொண்ட கொள்கையில்

திண்மை இருந்தால்

கூ றிடும் வார்த்தையில்

உண்மை இருந்தால்

வாழ்ந்திடும் வாழ்வு

தீபமாய் மாறும்

பலரது வாழ்வில்

ஒளியை ஏற்றும்

ஆயினும் இதுவும்

எளிதானதல்ல

அதற்கான விலையும்

இருப்பதினாலே

நாமே அதை

தந்திட வேண்டும்

அதற்கு நாமே

ஈட்ட வேண்டும்

பிறரோ அதை

தர இயலாது

தந்தாலும் அதற்கு

மதிப்பிருக்காது

இலவசமாய்ப் பிறர்

தந்திடும் எதுவும்

நமக்கே மதிப்பாய்

இருந்து விடாது

நாமே ஈட்டி

நாம் தரும் போது

அதன் மதிப்பு

ஏன் புரியாது

குருகுலம் , 26-4-2023, காலை 8.00

Secular Song 592 Holds no value

Not having firm

Conviction in the principle

Not remaining true

In the words spoken

We have to live

Only even among them

Who Always criticise others

For something they do

Giving so many

Arguments one after another

Giving various

Illustrations for that

They will give wonderful

Teaching to others

But when it comes to them

They will forget all of them

Not doing counter

Argument with them

Not try to

Correct them

Not becoming the water

That was irrigated to weeds

We should live

Our life properly

If there is conviction

In personal life

And if there is truth

In all that is talked

The life would

Become a lamp

And will enlighten

So many others life

But this also

Is not that much easy

As there is a

Cost for that also

We alone should

Pay that cost

For that we alone

Should earn it

Others cannot

Give that to us

Even if they give

There won’t be any value to it

Anything that is

Given freely to us

Even won’t remain

Valuable to us

When we give

After properly earned

Why then it won’t

Hold real value in our life

Gurukulam,  26-4-2023, 8.00 am.

Secular Songs 593

One person who is very much interested in writing poems, sent a picture of a flying dove and the poem that he has written.  After reading his poem, as I reflected about the picture, I wrote this and next poem expressing my reflection on such beautiful pictures which we try to put in prison or dividing as various seasons [see next song]

593 முடியுமா சொல்லு

சிறகடித்துப்

பறக்கும் என்னை

சித்திரம் ஆக்கி

சிறை பிடித்தாலும்

பறக்கும் எனது

நிலையை மாற்ற

மனிதா உன்னால்

முடியுமா சொல்லு

சிந்தை சிறையில்

இருந்து கொண்டு

வார்த்தையில் என்ன

வித்தை காட்டினும்

நிரந்தரமாக மனச்

சிறையை உடைத்து

பறக்க உன்னால்

இயலுமா சொல்லு

குருகுலம் , 16-5-2023, மதியம், இரண்டு

Secular Song 593 Can you do this

Though you managed

To catch me

And prisoned me

Inside a frame

O human beings

Is it possible

For you change

My flying nature

Remaining inside

The prison of your mind

How much you try

To write poem about me

Can you fly

Freely like me

Breaking your

Mental prison permanently

16-5-2023, 2.00 p.m. Gurukulam.

Secular Song 594

Another song written by a shared picture.  In it a lonely tree without leaves is standing with the title ‘autumn’.  But when I observed and meditated, I thought about who gave various names to these seasons which remain part of whole Nature.  Nature remains one WHOLE throughout the universe giving expression various ways as rain, summer, winter and autumn.  But we alone try to divide nature by assigning various sections to it by calling this as various seasons.  Then I reflected and wrote this song.

Secular Song 594 பிரிக்காதே

இயற்கையாகவே நான்

என்றும் இருக்க

காலத்தின் பெயரால்

என்னை வகுத்து

கோடை, வசந்தம்

மாரி, மழையென

மாற்றி அழைப்பது

முறையா சொல்லு

எங்கும் இருக்கும்

எனது ஆட்சி

உலகம் முழுதும்

எனது மாட்சி

ஒருபுறம் கோடை

மறுபுறம் வசந்தம்

மாரி ஓரிடம்

மறுபுறம் குளிரென

உலகம் முழுதும்

பிரிவில்லாமல்

ஆட்சி செய்யும்

என்னை நீயும்

மாறா என்னை

மாற்றிட பார்க்கிறாய்

மாறிடும் உன்னை

மாற்றிட மறுக்கிறாய்

மனிதனாய் இருந்தும்

நீயும் கூட

பலவிதம் உன்னை

பிரித்துப் பார்க்கிறாய்

படைத்தவன் பிரிக்கவில்லை

படைப்பும் பிரிக்கவில்லை

பாவம் நீ மட்டும்

பிரிந்தே இருக்கிறாய்

பிரிந்து இருப்பேன்

பிரித்தே வைப்பேன்

என்று இருந்தால்

யாருனை மாற்றுவார்

என்னைப் பார்த்து

கற்காவிட்டால்

இறைவனும் உன்னை

எப்படி காப்பார்

எப்படியோ போ

அதுவுன் பாடு

எதற்கு போடணும்

வீண் கூப்பாடு

ஆனால் என்னை

உன்னைப் போல

பிரித்துப் பார்த்தால்

அது நடக்காது

குருகுலம்,  16-5-2023, மதியம் 2.30

Secular Song 594 Don’t divide

When I remain

Permanently as NATURE

Dividing me

In the name of seasons

Is it correct on your part

To call me as

Summer, Spring

Rainy season and winter

Everywhere is

My own rule

The entire world

Is display of majesty

On one side it is summer

On the other spring

One the other side

Is winter and rain

When I rule

The entire world

Without having

Any division

You try to

Change me, who is unchangeable

But you refuse to change you

Who often changes

Though you remain

As Humanity

Still, you want to

Divide among various groups

Creator didn’t divide you

Creation also didn’t divide you

Poor one indeed you are

As remain divided

 ‘I will divide and

Remain divided’

If you say like this

Who can change you

If you cannot

Change yourself

Even after seeing me

How God even could help you

Let it be as

It is your funeral

And why should

I shout about it

But if you try

To divide me

Like you

That is not possible

Gurukulam, 16-05-23, 2.30 pm.

Secular Song 595 

The same photo of an lonely autumn tree lamenting for its condition.  But as I see some positive message in it I wrote this song that autumn is merely a preparation to welcome spiring.  The same is true in life.  The peace and joy that comes after every toil and trial is worth welcoming and paying a cost for that.

595 காத்துக் கிடந்தேன்

இலைகள் உதிர்ந்து

களையும் இழந்து

வாடி நிற்கிறேன்

வசந்தத்தை எதிர்பார்த்து

பழையன கழிந்து

புதியன புகுந்தால்

வந்திடும் வசந்தம்

மீண்டும் தன்னால்

இந்த எனது

நியதியை அறிந்து

அதை நீயும்

ஏற்றுக் கொண்டால்

இதுபோல் வீணாய்

புலம்ப வேண்டாம்

இந்த நிலைக்கு

வருந்தவும்  வேண்டாம்

இப்படி இயற்கை

சொன்னதன் பின்னே

எஞ்சிய இலைகளை

நானும் உதிர்த்து

சோர்வை நீக்கி

துளிரும் விட்டு

வசந்தத்தை வரவேற்க

காத்துக் கிடந்தேன்

குருகுலம்,  16-5-2023, மதியம் 2.30

595 Waiting eagerly

I am waiting

For the spring to come

By shedding all my leaves

With much loneliness

 ‘If old things are gone

And new one comes

Spring will come

Automatically in life

Knowing this

My Nature

And if you

Have accepted it

You don’t need

To lament like this

And need not regret

For this status [as autumn]”

Once the Nature

Has told like this

Shedding the

rest of the old leaves

Removing tiredness

And bring new tender leaves

I am eagerly

Waiting for the Spring to come

Gurukulam, 18-05-2023, 11.00 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *