BT Song 676
For comments see: Historical Muktinath
676 ஞானம் விளங்கும்
உள்ளத்தில் வந்து உறவாடும் போது
உன்னைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏது
எண்ணத்தில் நீ வந்து நிறைந்திடும் போது
எடுத்துச் சொல்ல அவசியம் ஏது
சரித்திரச் சான்றுகள் ஏதும் வேண்டாம்
சாத்திரம் சாட்சியும் கூற வேண்டாம்
ஆன்றோர்கள் சான்றோர்கள் ஆராய்ந்து கூறும்
அந்த சாட்சிகள் ஏதும் வேண்டாம்
வேதத்தின் எல்லைக்குள் வந்திடுவாயோ
சித்தாந்தத்தின் எல்லைக்குள் நின்றிடுவாயோ
விளக்கிட எவ்வித வாதங்கள் செய்தாலும்
விளக்கத்தில் எளிதாக அகப்படுவாயோ
கற்பனையாக உன்னை வடித்து, பல
கருத்துக்களை அதற்கெனத் தொகுத்து
புத்தம் புதிய மார்க்கத்தை அமைத்து
பூமியில் திரிந்து ஆட்களைச் சேர்த்தாலும்
நீயாக வந்து மீட்கின்ற வரையில்
எத்தனை எத்தனம் நானும் செய்தாலும்
விழலுக்கு இறைத்த நீரது ஆகும்
வேண்டாத செயலாய் அனைத்தும் முடியும்
குருவாக நீ வந்து அருளைத் தரும் போது
கொஞ்சம் கொஞ்சமாய் உண்மை புரியும்
மருளைப் போக்கி என்னையும் மீட்ட
மறைக்குள் மறைந்த ஞானம் விளங்கும்
மத்திகிரி, 30-6-2017, இரவு 10.35
BT Song 676 Will become clear
When you come to communicate in my heart
Where are the words to share about you?
Once you come and occupy my thought
Where is the need to talk about it?
I don’t need any historical evidences
Even the Veda need not witness that
I don’t need all the evidences which
The noble and learned provide after deep research
Will you come within the limits of the Veda?
Will you remain confined within any theology?
However much we debate to explain you
Will you be easily caught by any of them?
Even if we create you by our imagination/speculation
Compiling so many doctrines for that
Creating a new kind of religion
Converted people to that religion
Unless you come voluntarily to redeem me
How much efforts I might do
All will remain waste like water irrigated to the weeds
And will become mere wasteful endeavors
Once you come as my guru to give your grace
Bit by bit I will understand the truth
Once you saved me by removing the darkness
The wisdom which remains hidden in the Veda will become clear
Mathigiri, 30-6-2017, 10.35
BT Song 677
Today I became extremely tired and unable to do any work. It all started with a severe headache around 3.00 am in the early morning. Then I couldn’t sleep properly. At the same time, unable to get up from the bed, I tried to catch up on my sleep. In the morning I completed my regular work of cooking etc. with much pain and difficulty. Then after the meal I told my mother that I feel very sleepy and went to bed by 10.30 am and slept till 2.00. Realizing that something was wrong with me, my mother silently washed most of the vessels, which I told her not to do. Seeing my condition she said that I can take further rest and I need not prepare any Tiffin for her at 3.00 pm. So when I again lay down, she began to lament that I am not disclosing my actual condition. So not to disturb her further, I got up and continued to finish the rest of the washing and other work. As I don’t want to annoy my mother I did the rest of my evening routines without showing my body pain. So when after all the day’s work, I retired to bed, unable to sleep I sat on the chair and began to complain to the Lord that it is enough and time is right for Him to call me and my mother back. As I continued to pray for the next ten minutes, then I became upset with Him and wrote this song.
BT Song 677 முடியாமல் வருகிறேன்
வேண்டாம் என்றால் விடமாட்டாய்
விரும்பி கேட்டால் தரமாட்டாய்
போராட மட்டும் தினம் வைப்பாய்
போதும் விடு என்றால் மறுத்திடுவாய்
நீ போடும் நாடகம் விளங்காது
நீ வைத்த சித்தம் புரியாது
நான் கேட்கும் விளக்கம் கிடைக்காது
ஆனால் வேதனை தாளாது
பிறவாதிருந்தால் நலமாக இருக்கும்
பிஞ்சிலே உதிர்ந்தால் பாரம் குறையும்
வளரவிட்டு வேடிக்கை பார்த்தால்
வாழ்வில் பலவித வேதனை பெருகும்
இதுவரை வாழ்ந்ததே ஒருவிதப் பாரம்
இன்னும் வைப்பது எவ்விதம் நியாயம்
விரும்பாத வாழ்வும் வாழ்ந்திடும் போது
உன்னிடம் அழைப்பதில் உனக்கென்ன தயக்கம்
முடிவாக என்னதான் சொல்ல வருகிறாய்
முறையீடு செய்தாலும் கேட்க மறுக்கிறாய்
முடியல என்று கதறியும் கூட
மவுனமாய் இருந்து பலனென்னக் கண்டாய்
முடியாமல் தான் உன்னிடம் வருகிறேன்
முடித்து வைக்க மீண்டும் கெஞ்சுறேன்
எனக்கொரு பதிலும் நீ தர வேண்டும்
என்னிலை அறிந்து இறங்கிட வேண்டும்
மத்திகிரி, 3-7-2017, இரவு 10.30
BT Song 677 I come with much pain
You won’t let me go even if I say it is not possible any more
Even I ask voluntarily to give you won’t give
But you will keep me here to struggle everyday
If I plead that ‘this is enough’, you won’t stop it
I cannot understand your drama
I cannot understand your will
I won’t get the explanation that I sought from you
It is too much which I cannot bear any more
It is better if I were never born
If I have gone still as a child one burden would be gone
But you watch the tamasha by allowing me grow
Only many sufferings alone increased in life
The life which I lived so far is already a burden
How far is it right to keep me further?
When I live a life which I don’t like
Why do you hesitate to call me back to you?
Finally, what do you want to say?
Even if I complained you are not ready to listen
What you have gained by remaining silent
When I cry unable to bear it any more
I am coming to you as it is no more possible?
I beg you to bring an end to this
You should give me a response to this
Knowing my situation you should have mercy on me
Mathigiri, 3-7-2017, 10.30 pm.
BT Song 678
After a good night’s rest my body recovered from the pain. Then when I was doing my kitchen work, suddenly I felt very sorry for the Lord as He often has to hear my lamentations. After my kitchen work, when I sat before my computer to type the previous song, then I said to the Lord that neither He asks voluntarily what is going on nor will accept when I tell what my actual requirement is. And when I was typing the previous song, as the inspiration came, stopping typing I wrote this song immediately.
BT Song 678 அலுத்துக்காதே
ஏனென்று நீயாக கேட்கவும் மாட்டாய்
எடுத்து சொன்னாலும் ஏற்கவும் மாட்டாய்
ஒருநாளும் என் நோவு அறியாதவன் போல
வேண்டுமென்றே நீயும் வேடிக்கை பார்க்கிறாய்
அதனால் எனக்கொரு நஷ்டமும் இல்லை
அதற்காக உன் மீது கோபமும் இல்லை
அடியாரைக் காக்க மறந்தானே என்று
அடுத்தவர் சொல்வார் அதற்காகச் சொன்னேன்
உன் மீது குறை சொன்னால் நான் பொறுப்பேனா
உனக்காக வாதாட நான் மறுப்பேனா
நம்மிடை ஆயிரம் இருக்கின்ற போதும்
அடுத்தவர் தலையிட உரிமையும் ஏது
பாவம் இன்னும் நீ என்ன செய்வாய்
நாள்தோறும் புலம்பினால் பதிலென்ன சொல்வாய்
புலம்பிடும் எனக்கே சலிப்பாய் இருந்தால்
கேட்டிடும் உனக்கும் அலுப்பாய் இருக்கும்
ஆயினும் இதற்கொரு மாற்றும் இருக்கு
அதை நீ கேட்க கடமைய இருக்கு
புலம்பாத வாழ்வு ஒன்று உள்ளது
அதைப் புரிந்து தருவது உனக்கு நன்று
நீ தரும் வரை ஓயவே மாட்டேன்
ஐயனே புலம்பலை நிறுத்தவும் மாட்டேன்
அலுத்தாலும், சலித்தாலும் நான் விட மாட்டேன்
அடித்தாலும் உதைத்தாலும் பயப்பட மாட்டேன்
மத்திகிரி, 4-7-2017, காலை 9.30
BT Song 678 Don’t get agitated
You won’t voluntarily enquire about me
Even if I come and share you won’t accept that
You deliberately doing this and watch this tamasha
As if you don’t know my suffering
I am not going to incur any loss by this
I am not upset with you for this
Others will blame you that you forgot to take care of your bhaktas
That is why I remind you this
Can I tolerate if others blaming you for anything
Won’t I argue for you with them?
There might be thousands of issues between us
What right others have to interfere in it
Poor you, what further can you do
If I lament every day what kind of answer you can give
When I myself become tired of my lamentations
How much do you become bored when you listen each day?
But there is an alternative to this
You have the responsibility to listen to it
There is a life where I need not lament further
It is better for you to give it understanding that
Till you give I won’t stop
O my Lord I won’t stop my lamentations
Even if you get agitated and become tired, I won’t let you go
Even if you beat and kick me I won’t afraid of that
Mathigiri, 4-7-2017, 9.30
BT Song 679
After feeding my mother and taking my meal I began to wash the dishes and clean the kitchen. That time I began to recall both the two previous poems (677 &678). Then I said to myself why again and again I am pestering God and why not sing some songs praising and worshiping Him. But automatically I said, ‘so what? Does He deserve only to listen to songs of praise and never to listen to our lamentations? Who is responsible for this? Though we accept our failures, yet God too cannot escape from His responsibility. If He has the right to listen only to songs of praise and worship, we have equal and sometimes more rights to lament about our situation. He has the right to spank, but we have the right to weep’. So with much anger and agitation I washed the vessels (I have done a good job as I showed all my anger to the vessels). Then as I came back to type the previous song on the computer, I said to the Lord ‘if you want to hear only songs of praise and worship, better be ready to listen to our lamentations’. As this line inspired me, I wrote this song.
BT Song 679 துதிப்பாடல் வேண்டுமா?
துதிப்பாடல் மட்டுமே கேட்க விரும்பாதே
தொண்டர்கள் புலம்பினால் காதையும் மூடாதே
உனக்குள்ள உரிமையை நீ விட வேண்டாம்
எமக்குள்ள உரிமையை மறந்திட வேண்டாம்
அதைவிட உனக்கு வேறென்ன வேலை
அன்றாடம் போராடும் நிலை உனக்கில்லை
மீண்டும் ஒருமுறை நீ வந்து பாரு
பிறகு புரியும் எங்கள் பாடு
அடிக்கிற உரிமை உனக்கும் உள்ளது
அழுகின்ற உரிமை எமக்கும் உள்ளது
இதற்காக ஐநாவில் வாதாட முடியுமா
மனித உரிமைக்கு மனு போட முடியுமா
நீ வந்த போது இது போன்று இல்லை
நித்தமும் இதுபோன்ற போராட்டம் இல்லை
வசதிகள் ஆயிரம் வந்தென்ன லாபம்
வாழ்விலே போராட்டம் ஓயவே காணும்
கணினி கைபேசி கணக்கற்ற சாதனம்
கண்டம் விட்டு கண்டம் தாவினோம் நாளும்
இணைய தளத்தால் இணைத்தோம் உலகை
ஆயினும் இவற்றால் வளர்த்தோம் பகையை
உள்ளத்தில், உலகத்தில் போராட்டம் ஓயல
உன் வரவோ இன்னும் கண்ணுக்குத் தெரியல
இதற்கு இடையில் எப்படி துதிபாட
அதை மட்டும் எனக்கு நீயே சொல்லு
புதிய உலகை நீ படைக்கின்ற வரையில்
புலம்பலை நிறுத்த வழி எமக்கில்லை
துதிப்பாடல் தினந்தோறும் கேட்க விரும்பினால்
சீக்கிரம் வந்து மாற்றிடு உலகை
மத்திகிரி, 4-7-2017, காலை 11.00
BT Song 679 Do you want only songs of praises?
Don’t wish to listen only songs of praises
don’t close your ears when the bhaktas lament
you need not give up your right
at the same time don’t deny our right too
Other than this what else work do you have
you need not struggle like us everyday
one more time you come and see
then you will realize our struggles
You have the right to beat us
and we have the right to weep
Can we go and plead our case in the United Nations?
Or can we appeal to the Human Rights Commission?
When you came things were not like this
each day there was not struggles like this
what is the use of getting so many facilities
the struggle in life never seems to end
We have Computer, smartphone and many more gadgets
we can fly from one continent to another easily
we connected the world through Internet
but we also grow enmity because of them
The struggles never come to an end both within and in the world
your Coming is also not visible in near future
How is it possible for us to sing your praise amidst this
Only tell that to me now
Till you create the New Heaven and New Earth
there is no opportunity for us to stop this lamentation
If you wish to listen to only songs of praise everyday
you come quickly and change the world soon
Mathgiri, 4-7-2017, 11.00 am.
BT Song 680
After a gap of nearly three months I resumed my night walk again. This is one of my best times in a day. Before retiring to bed, after completing all the work of the day, I take time to reflect on the day and also spend time in prayer. But sometimes I am unable to do both, just I will walk, allowing my mind to wander on various thoughts. Then one thought that came to me was the line by Thirunavukkarasar in which he says, ‘பாடாத நாள் எல்லாம் பிறவாத நாளே’ Each day in which I don’t sing about you is an unborn day.’ Then I said that each day that I don’t worship you is an unborn day. But within a few seconds my mind deviated from this thought of worship and began to reflect various other things. And as I often notice, while my mind spends very few seconds or minutes to contemplate about the Lord or worship Him, it indulges several minutes even hours on unnecessary thought. However I try to deviate my mind, it again and again went back only to dwell back in those wasteful thoughts. After my walk as I contemplated this, I wrote this song followed by the next one.
BT Song 680 பிறவாத நாள்
பணியாத நாளெல்லாம் பிறவாத நாளே
பாடாத மொழியெல்லாம் பயனற்ற மொழியே
நினைக்காத மனம் கூட பாழாகும் வீணே
நீயன்றி எனக்கிங்கு வாழவில்லை தானே
தொண்டனாய் வாழ்வதே துதிப்பதற்காக
திருவடி பணிவது உன் சித்தம் ஏற்க
பக்தியும் செய்வது பரவசம் காண
பணிவிடை செய்வது உன்புகழ் ஏத்த
துதிப்பாடி வரும்போது சிந்தையில் நிறைவாய்
தொண்டுகள் செய்ய ஊக்கம் அருள்வாய்
என்னை நான் தரும் போது ஏற்றுக் கொள்வாய்
என்னுள்ளே நீ வாழ்ந்து என்னை ஆள்வாய்
இதுபோன்ற தருணம் அரிதாகக் கிடைக்க
இதற்காக நாள்தோறும் தவமும் செய்ய
அடிமையின் நிலையெண்ணி இரக்கம் கொண்டு
ஆட்கொண்டு நடத்துராய் அருளைத் தந்து
அதனாலே வந்தேன் உன்னை துதிக்க
அகத்தாலும் புறத்தாலும் பணிசெய்து கிடக்க
நினைவாலும் மனதாலும் நினைந்துன்னை ஏத்த
“நீடுடி வாழ்க” என உன்னை நான் வாழ்த்த
மத்திகிரி, 6-7-2017, இரவு 11.00
BT Song 680 Unborn days
Those days in which we don’t worship are unborn days
the languages in which we cannot sing your praise are mere waste
the heart which won’t think you often will get spoiled soon
I don’t have a life here without you
Remaining as a bhakta is only to sing your praises
the reason to bow at your feet is to accept your will
the reason to do bhakti is to get the bliss
the reason to serve is to increase your fame
When we worship you will occupy our mind
you will give encouragement to do more seva
when I offer myself you will accept it
living within me you will lord over me
When I get such opportunities rarely
each day as I do tapasya only for this
having mercy upon this slave’s condition
you lead me by giving more of your grace
Therefore I come to sing your praises
to serve you both internally and externally
to sing your glory through my heart and thoughts
to say ‘Let you live long for ever’’.
Mathigiri, 6-7-2017, 11.00
Leave a Reply