Posted up to this @@@
BT Song 681
Sometimes I can easily handle when my mother questions about so many things that I do to take care of her. But when it comes to God, it is difficult to argue with Him or answer His questions. So I would prefer Him to listen to what I say and never argue further with me as that will increase my confusion as His questions are more logical and rational than what I do with Him. [Actually BT Song 681 is missing from my document. As I cannot change all the numbers to 1600 songs that I have written so far, I brought one song that I later wrote and put here to keep the continuity of number–28-4-2024]
BT Song 681 வார்த்தை ஏது
உன்னோடு நான் பேசும்
காலமோ கொஞ்சம்
என்னோடு நீ செய்யும்
வாதம் அதிகம்
இயல்பாக நீயும்
வாதிக்கும் போது
பேசிட என்னிடம்
வார்த்தை ஏது
எதிர் வாதம் செய்யாமல்
இருப்பதன் காரணம்
உனக்கும் நன்றாக
நிச்சயம் தெரியும்
வாதிக்கத் தெரியாமல்
வாய் மூடவில்லை
வார்த்தைக்கு என்னிடம்
பஞ்சமும் இல்லை
தெரியாமல் இருந்தால்
தெளிவாக இருக்கு
தெரிந்தால் வாழ்வு
குழப்பமாய் இருக்கு
இரண்டில் எதுதான்
சரியாக இருக்கும்
என்பது இன்னும்
குழப்பமாய் இருக்கு
புரிந்தபின் வாழ்வது
இயலாத ஒன்று
வாழ்ந்தபின் புரிவதில்
பயனேது உண்டு
இதனிடை வாழ்வை
வாழ்ந்து கொண்டு
செல்வது அன்றி
வழியேது உண்டு
என்னவோ வாழ்வு
ஓடியே போக
இனிமேல் புரிந்து
நானென்ன செய்ய
இதில் நீயும்
கேள்விகள் கேட்டு
இப்படி குழப்பினால்
நான் என்ன செய்ய
ஆகவே உன்னிடம்
பேசும் போது
வீணாக குழப்பாது
வாதங்கள் செய்யாது
சொல்வதைக் கேட்டு
அதை மட்டும் செய்து
எனக்கேற்ற தெய்வமாய்
என்றும் போல் இரு
மத்திகிரி, 7-7-2017, 2.30 pm.
BT Song 681 Where are words?
The time I spent with you
Is very little
But you take too much time
To argue with me
When you can argue
Very naturally
How I am going
To respond back
You know
The reason
For me not to
Counter argue with you
I keep quiet
Not knowing how to argue
There is no shortage
For words with me
If I don’t know about life
Then it remains clear
But if it becomes clear
Then I more confused
But which one among
Is really correct
This question is
More confusing me
After understanding clearly
It is difficult to live
But what is the use of understanding
After I live this life [without understanding]
Where is the option
Other than living
Amidst all
These confusions
Somehow as the life
Has gone much
What I am going to gain
Now understanding about it
In this if you also
Confuse me more
By asking so many questions
What can I do
Therefore, when I
Come and talk with you
Not arguing unnecessarily
And further confusing me
Only listen to what I say
And do what I ask for
And continue to remain
A compatible God to me
Mathigiri7-7-2017, 2.30 pm.
BT Song 682
For comments see. Viraha Bhakti: Love in separation
BT Song 682 காத்துக் கிடக்கிறேன்
மீட்கும் கிருபையை
போற்றிட வந்தேன்
மாறாக் கருணையை
கேட்டிட வந்தேன்
ஆளான முதல்
நாள்தோறும் நினைந்து
ஐயனே உன்னடி
தேடியே வந்தேன்
கருவினில் உருவாக்கி
எனை வைத்த முதலே
கண்கள் பூத்தன
உன்னையே தேடி
மறைவாக இதுவரை
நீ நின்ற போதும்
மனதார தேடினேன்
தினந்தோறும் நானும்
உனக்காக உருவாக்கி
உலகினில் வாழ்ந்தேன்
உள்ளத்தில் வைத்து
நாள்தோறும் துதித்தேன்
காலம் கனிந்திட
காத்துக் கிடந்தேன்
கண்கள் குளமாக
தவித்து நின்றேன்
வருவேன் எனச் சொல்லி
வாக்கு தந்தாயே
வந்தெனை மீட்பேன்
எனச் சொல்லி சென்றாயே
வழிமேல் விழிவைத்து
காத்துக் கிடக்கிறேன்
வந்தென்னைச் சேர
ஏங்கி நிற்கிறேன்
காலடி ஓசை
மெதுவாக கேட்குது
காதினில் அது வந்து
தேன்போல் பாயுது
திருவடி வரும் தடம்
தெளிவாய்த் தெரியுது
திசைஎல்லாம் மங்கள
இசையும் முழங்குது
ஆயத்தம் ஆகி
நானும் வந்தேன்
ஆரத்தி எடுத்து
அழைத்திட நின்றேன்
ஆயினும் தாமதம்
செய்வதும் ஏனோ
அடிமையை ஏற்றிட
தயக்கமும் தானோ
ஒரு நொடி போவது
யுகமாய் தெரியுது
உடலோடு மனமும்
தணலாய் எரியுது
விரக வேதனை
எனையே எரிக்குது
நீ வேடிக்கை பார்ப்பது
எனக்கும் புரியுது
போதும் போதும்
உன் விளையாட்டு
போக்கிரித் தனத்தை
வேறெங்கும் காட்டு
விரகத்தால் வாடிடும்
என்னையும் மீட்டு
உன்னுடன் சேர்த்து
களிப்பும் ஊட்டு
மத்திகிரி, 7-7-2017, காலை 5.30
BT Song 682 I am waiting for you
I come to glorify
The redeeming grace
And came to seek
Your unchanging compassion
Since I grew up
Thinking each day
O! my Lord
I came seeking your feet
My eyes are getting sore
Seeking you only
Since you formed me
In my mother’s womb
Though you
Remain hiding
Each day I sought you
Whole heartedly
I grew and lived
In this world only for you
I sing your praise
Keeping you in my heart
I waited for
Proper time to come
I become frustrated
Filled with tears
You gave me the promise
That you will come definitely
You said that you will come
To redeem me
I am waiting for you
Looking the way
Longing for you to come
To accept me
I can hear the sound
Of your gentle steps
That sound flows
Like honey in my ears
I can see you’re holy
Foot prints
And auspicious music
Is filled all around
I get ready
To receive you
I prepared the arati
To welcome you
But what is the reason
For this much delay
Are you hesitating?
To accept this slave?
Each second passes then it
Looks likes as if a yuga has gone
Along with my heart
The body also burning
the love in separation
Is burning me down
I can understand
How can you enjoy it
Enough is enough
Of this your divine play
Show your prangs
Somewhere else
Saving me who suffers
Due to love in separation
Give me joy
Joining me with you
Mathigiri, 7-7-2017, 5.30 am.
BT Song 683
I wrote this poem after reading the comments on Mark 2:1-12 by Tom Wright.
BT Song 683 இறைவனுக்கும் இயலாது
மன்னிப்பது என்பது மிக மிக எளிது, ஆனால்
மன்னிப்பு கேட்பது மிகவும் அரிது
தவறை மறப்பது மிகவும் எளிது, ஆனால்
தவறுக்கு வருந்துதல் அதனினும் அரிது
இறைவன் எளிதில் மன்னிக்கக் கூடும்
நம் மேல் இரங்கி ஏற்கவும் கூடும்
மனிதருக் கென்றால் இதுமிகக் கடினம்
மன்னித்தும் மறப்பது அதனினும் கடினம்
தன் சாயல் தந்து நம்மை படைத்தும்
தன்னையே தந்து நம்மை மீட்டும்
பாவம் மன்னித்து நம்மை ஏற்றும்
நாம் மட்டும் மாறாமல் இருப்பது பாவம்
எத்தனை எளிதாய் சொல்கிறோம் நாமும்
அடுத்தவர் பிழைகளை மன்னித்தேன் என்று
ஆயினும் அவற்றை மனதில் கொண்டு
உள்ளே புழுங்குறோம் பாரம் கொண்டு
மன்னிக்க இறைவன் தந்த விலையை
முழுதாய் இன்னும் உணரவே இல்லை
அதன் மேன்மையை அறிந்தும் கூட
ஆழமாய் நம்முள் பதியவும் இல்லை
மன்னித்தும் நாமோ மறக்கவும் இல்லை
மன்னிப்பு கேட்பவர் மாறவும் இல்லை
இந்த நிலையில் இருவரும் இருக்க
இதைப்பற்றி பேசிட தகுதியே இல்லை
இருவர் கிடையே மாட்டிக் கொண்ட
இறைவன் நிலையோ பரிதாபமாச்சு
இருவருக் கிடையே நியாயம் செய்ய
அவனுக்கு அதனால் இயலாமல் போச்சு
மத்திகிரி, 8-7-2017, மதியம், 2.00. Mark. 2.1-12.
BT Song 683 Not possible for God
It is very easy to ask forgiveness, but
It is very difficult to forgive
It is very easy to forget the mistakes
But it is very difficult to regret for the mistakes done
God can easily forgive us
And can accept us again
But it is very difficult for humans.
Even if forgive, forgetting is very difficult
It is indeed really pitiable that we remain unchanged
Though we are created in His image
And redeemed by him
Accepted by forgiving our sin
How easily we say that
We have forgiven others mistakes
But still keeping it within us
We feel suffocated
We didn’t understand the cost
That God paid to forgive us in its totality
Even though we understand it greatness
Still its impact is not yet deep within us
Though we forgive, cannot forget
those who sought forgiveness never get changed
As both of them remain only in this condition
None has the right to talk about it
The condition of God become pitiable
As he is caught between these two
Therefore, he is unable to do
Negotiation between them (about forgiveness)
Mathigiri, 8-7-2017, 2.00. pm. Mark. 2.1-12.
BT Song 684
Like a child who can fall back on the lap of the mother even if she spanks, a bhakta has no other refuge other than the Lord however he tries to discipline him. As I was reflecting about this, compared with my present situation in which I faced physical and mental trials of various kinds which I find difficult to bear any more, I wrote this song. Good health is needed in old age particularly when you have to look after another old person. That itself is a big task without anyone to help in everyday work. Added to that when other kinds of challenges disturb the mind due to various misunderstandings and miscommunications, other than asking ‘why’ questions, there is no other option left to a bhakta.
BT Song 684 வேறெங்கு போக?
மொழியற்று உன்னிடம் வருகிறேன்
மௌனமாய் என் நிலை சொல்கிறேன்
தெளிவற்ற மனதுடன் வாழ்கிறேன்
தெரிந்திட்ட உன்னடி பணிகிறேன்
பதிலொன்று எதிர்பார்த்து நிற்கிறேன்
பலநாளாய் விடையின்றி தவிக்கிறேன்
வீணிலே தாமதம் செய்வது ஏன்
விடை தன்னைத் தந்திடத் தயக்கமும் ஏன்
இயலாமல் தானே புலம்புகின்றேன்
இனி தாங்க முடியாது கதறுகின்றேன்
இன்னமும் கேளாமல் இருப்பதேனோ
இரக்கமும் காட்டிட மறுப்பதேனோ
வலிமை அற்ற எளியவன் நான்
வாழ்வைத் தொலைத்திட்ட மூடனேதான்
சோதனைக் கேற்ற பாத்திரமில்லை
சோதனைத் தாங்கிட பலனுமில்லை
எளியோர் மீது இரக்கம் வேண்டும்
இனி முடியாதென்றால் விடவும் வேண்டும்
தப்பித்துப் போக விருப்பம் இல்லை
தருவதை ஏற்றக இயலவும் இல்லை
இதைவிட எப்படி எந்நிலை சொல்ல
எவரிடம் சென்று முறையீடு செய்ய
தாயடித்தாலும் மடிமீது வீழ்ந்திடும்
சேய் நானும் வேறெங்கு போக
மத்திகிரி, 11-7-2017, இரவு 11.15
BT Song 684 Where else can I go?
Without language I come unto you
silently I share about me
I live not having a clear mind
I bow at your feet who knows this
I stood before you seeking an answer
I struggle for many days not knowing an answer
What is the reason for you further delaying?
why you hesitate to give the answer?
I lament as I cannot bear it anymore
I cry as I find it very difficult
What is the reason for not hearing me?
why you refuse to show your mercy
I am a weak person who is a mean one
I am a fool who lost this life
I am not a vessel for any trials
I don’t have the strength to face trials
You should have mercy upon the weak
You should allow us to go when we say it is not possible
I don’t want to run away from anything
At the same time I am unable to accept what you want to give
How can I share more than this about my situation?
to whom shall I make complaints
Even the mother gives spanks the child will fall on her lap alone
where this child of yours can go?
Mathigiri, 11-7-2017, 11.15 pm.
BT Song 685
Will God too get irritated with us as several times we fails to understand some simple truth which remain an open page before us? Taking God for granted, not valuing the relationship that we have with others etc., are not a great secret and we don’t need anyone to come and teach about this to us. But in normal life simple truths are often ignored and I think, like us (me) who get irritated when small things are forgotten and the same mistake is repeated again and again, God too is get irritated with us as we forget small and basic truths in life. As I was reflecting upon this, thinking upon God’s condition as he has to deal only with such people I wrote this song.
BT Song 685 இறைவனின் பாரம்
எவர்க்கும் புரியாத இரகசியம் ஒன்றை
எனக்கு மட்டுமே இறைவனும் சொன்னான்
எவர்க்கும் சொல்லாதே என்று சொல்லி
என்வாய்க்குப் பூட்டு போட்டு வைத்தான்
ஆனாலும் அவன்படும் அவதியைப் பார்த்து
அவன் நிலைக்கண்டு அன்பு கொண்டு
[ஆனாலும் பிறர்படும் அவலத்தைப் பார்த்து
அவர் நிலைக்கண்டு இரக்கமும் கொண்டு]
இறைவனின் அனுமதி கேட்காமல் நானும்
இரகசியமாக உனக்கு நான் சொல்கிறேன்
எல்லாமே சரியாக நடக்கின்ற போது
இறைவனைத் தேடும் எண்ணம் இருக்காது
ஏதேனும் ஒன்றில் தவறிடும் போது
இறைவனைத் தேடி ஓடும் மனது
அடுத்தவர் நம்முடன் இருக்கின்ற போது
அவரின் அருமை புரியாது அப்போது
அவர் நம்மைவிட்டு அகன்றிடும் போது
அவரை இழந்தது விளங்கும் அப்போது
இதில்என்ன இரகசியம் இருக்கு என்று
என்னையும் கேட்பது புரியுது நன்று
இத்தனை எளிய உண்மையை மறந்து
வாழ்கிறோம் என்பது இரகசியம் இன்று
எத்தனைப் பட்டாலும் உணராத மாந்தர்க்கு
எடுத்துச் சொன்னாலும் புரியாது அவர்க்கு
விழுந்து எழுவதே இயல்பாகிப் போச்சு
ஆயினும் அதுஅவர்க்கு இரகசியம்ஆச்சு
இதைத்தான் இறைவன் என்னிடம் சொன்னான்
நீயும் அவர்களில் ஒருவனே என்றான்
நம்மீது அவன்கொண்ட எரிச்சலைத் தாங்காது
இறக்கி வைக்க என்னிடம் சொன்னான்
நம்பாரம் இறக்க வந்த அவனுக்கு
நாம் பாரம்ஆகிப் போனோமே இங்கு
தனபாரம் இறக்க என்னை அழைத்து
இரகசியமாக் இதைதான் இறைவனும் சொன்னான்
மத்திகிரி, 12-7-2017, இரவு 11.10
BT Song 685 God’s burden
God shared a secret which others do not know
And which no one can clearly understand
he commanded me to keep me quiet
Not sharing with anyone
Yet seeing that he is troubled
having love for him
[Yet seeing the way others are troubled
having pity upon them]
Without seeking the permission of God
I am sharing this secretly with you
When everything goes correctly
We won’t have any desire to seek God
But when get stumbled even in one thing
Then we will run towards God
When others are with us
We won’t understand their value
When they left us
Then we will understand their loss
‘But what kind of secret is in this’
I can understand this question
But forgetting this simple truth
We are living, and that is the secret here
How much they have experience
They won’t understand this
They stumble to fall and then get up
And still it become a secret to them
This is what God has told me
‘you too one among’, he said.
Unable to tolerate the irritation that he has
To unload his burden, he shared this with me
We become a burden to the one
Who came to unload our burden?
And to unload his burden
He called and secretly shared this alone
Mathigiri, 12-7-2017, 11.10
Leave a Reply