BT Song 686
Another day with full work. No proper rest in the afternoon also due to so much noise. So finally, when I sit as usual for mediation and prayer, I cannot do that. As my body was longing for some rest, I retired to bed. But one problem that I often face is that when I become extremely tired, I cannot catch my sleep immediately. Unable to sleep and unable to meditate, I said to the Lord when you give me so many responsibilities, where is the time for me to sit and talk with you leisurely?” Then laying down I began to think and talk with the lord. Though I never experienced his physical presence, yet some kind of comfort I felt in my spirit and turning my body I felt as if I am keeping my head on his lap and he is sitting next to me to message my body and to listen to all that I want to share. Enjoying that blissful moment for a few seconds, I said to the Lord, ‘once my entire life is given to you and live each day because of your grace, what is the need to give separate time for you.’ As the inspiration came, I got up and wrote this song as my prayer.
BT Song 686 ஏன் வேண்டும்?
இந்த நேரம்தான் நல்ல நேரம்
என்னையே உன்னிடம் தந்திடும் காலம்
எனக்கென நானும் வாழ்ந்த பின்னே
உனக்குத் தந்தேன் சில துளி நேரம்
உயிரோடும் உணர்வோடும் கலந்திடும் போதும்
உன்னோடு உறவாட நேரமே காணும்
ஓய்வாக அமர்ந்து உன்னோடு பேச
ஒருபோதும் அவகாசம் கிடைக்கவே காணும்
உடலோடு மனமும் ஒருசேர சோர
உறக்கத்தை நாடி படுக்கையில் சேர
மெதுவாக என்னிடம் நீ வந்து அமர
உன் மடிமீது தலை வைத்தேன் ஆறுதல் தேட
மெதுவாக என் மேனி நீயும் வருட
இந்நாளின் பணிகளை நானும் சொல்ல
பொறுமையாய் நீயும் அவைகளைக் கேட்க
புளகிதம் அடைந்தேன் ஆறுதல் நீ தர
இதுபோல எப்போதும் இருந்திடக் கூடாதா
உன்னோடு உறவாடி மகிழ்ந்திடக் கூடாதா
என்று என்னுள்ளம் ஏங்கும் போதும்
எனக்கதை மறுப்பதில் இருக்கு காரணம்
எனக்கென கடமைகள் நீதான் தந்தாய்
என் பணி நிறைவேற்ற பெலனும் தந்தாய்
அன்றாடம் வாழ்த்திட அருளையும் தந்தாய்
அதன் மூலம் உன் சித்தம் புரிய வைத்தாய்
அன்றாட வாழ்வு நீ தந்த வரமாகும்
அதைப் போற்றி நானும் கொண்டாட வேண்டும்
நீ தந்த வாழ்வை நான் வாழும் போது
உனக்கெனத் தனி நேரம் ஏன் இனி வேண்டும்
மத்திகிரி, 13-7-2017, இரவு 11.10
BT Song 686 No separate time for you
This is the best time
For me to offer to you completely
Once I lived for my need
I came to give few seconds for you
Though you mingled with my sense and life
There is no time to sit and talk with you
I cannot find time to
Sit and talk with you leisurely
As the body along with the mind became tired
Seeking some rest, I lay down on the bed
Then as you came silently to sit with me
I put my head on your lap to seek some comfort
As you gently massaged my body
I began to share all the work that I have done today
As you listened to them all
Overwhelming with joy I find the comfort
Cannot I remain always like this?
Cannot I rejoice always like this?
Though my heart longs like this
I cannot do that and there is some reason for that
You alone gave some responsibilities for me to do
You alone give strength to accomplish them
You give grace to live each day
Through that you help me to understand your will
Each day is a gift from you
Realizing this I should celebrate it
While I live the life which you gave to me
Why should I set aside separate time for you?
Mathigiri, 13-7-2017, 11.10 pm.
BT Song 687
Though often I murmur thinking about why I should have this kind of responsibility as a sannyasi and begin to lament. Immediately I realize that we are called to serve others and the Lord, in spite of the vocation that we choose. When I began to see every work as a seva for others, then the attitude towards life completely changed. And doing seva is a wonderful blessing and many won’t get that easily. As I realized this in my meditation time I wrote this song as my prayer. Of course, this doesn’t mean that here after I will neither murmur or lament. But this is the mediation for this day and I need not worry about tomorrow’s murmur or lamentation as tomorrow’s GRACE will take care of it.
BT Song 687 பாரமில்லை
அருளுக்குள்ளே வாழ்ந்திருப்பேன்
அன்றாடப் பணிகள் செய்திடுவேன்
அடிக்கடி உன்னிடம் பேசிடுவேன்
அதில் ஆறுதல் பெற்றிடுவேன்
பாரம் என்று நினைத்தால் தான்
பாரம் ஆகும் வாழ்வு கூட
சேவை செய்யும் வாய்பென்றால்
எளிதாய் ஆகும் தன் போல
உன்னை விடவா ஒரு பாரம்
உலகில் நானும் சுமக்கின்றேன்
உன் சுமையப் பார்த்த பின்னும்
வீணாய் ஏனோ புலம்புகிறேன்
உடலைப் பேண செய்வதெல்லாம்
உண்மையில் பாரம் ஆகாது
என் நலம் பேண செய்வதெல்லாம்
என்றும் சேவை ஆகாது
இந்த வரமும் நீ தந்தாய்
இதில் என்னை வாழ் சொன்னாய்
தந்தது நீயே ஆன பின்னே
பாரம் எப்படி ஆகிவிடும்
உன்னை என் முன் நிறுத்திவிட்டால்
உலகில் எதுவும் பாரமில்லை
உன்னுடன் நான் நடக்கையிலே
சுமக்கும் வேலை எனக்கில்லை
இதை நான் உணர்ந்துவிட்டேன்
இன்று புலம்பலை நிறுத்திவிட்டேன்
எஞ்சிய என் வாழ்வினையே
உன் புகழ் பாட தந்துவிட்டேன்
மத்திகிரி, 15-7-2017, இரவு 11.10
BT Song 687 No more a burden
I will live within the grace
I will do everyday work
I will talk with you often
And will seek comfort in it
Only when I think that life is a burden
Then it indeed becomes a burden
But if I take it an opportunity to do seva
Then it becomes very light easily
Am I carrying a burden more than you?
In this earthly life
After knowing your burden
I am murmuring unnecessarily
All that I do to take care of this body
Are not really a burden
What all I do for my own need
Is not service to others at all!
This blessing you alone gave
You called me to live only in it
Once it is given by you
How will it become a burden?
Once I keep you in front of me
Nothing is a burden on this earth
When I walk with you
I need not even carry the burden
I realized this now
I stopped this lamentation
I give rest of my life
To sing only your praise
Mathigiri, 15-7-2017, 11.10 pm.
BT Song 688
As a sanyasi I am supposed to do tapasya (penance) which is understood and expected by the tradition. But as the bhakta of Bhagavan Muktinath my tapasya is to accept His call and carry out the responsibilities which he entrusted to me. As I was thinking about it, I wrote this song.
BT Song 688 எனது தவம்
பாதம் பணிந்து பாடுகிறேன்
பரவசம் உன்னுள் தேடுகிறேன்
படைத்ததின் நோக்கம் புரிந்து கொண்டேன்
பக்தியால் அதனைத் தெரிந்துகொண்டேன்
உயிரொடு உடலையும் உனக்கென்று
உவந்து நானும் அளிக்கின்றேன்
வாழும் ஒவ்வொரு நொடியிலும்
வணங்கி உன்னுள் மகிழ்கின்றேன்
கடமை எது நீ தந்தாலும்
கருத்தாய் அதையும் செய்திடுவேன்
தவமாய் அதையே நான் எண்ணி
சிரமேற் கொண்டு முடித்திடுவேன்
எதற்காக என்னை மீட்டாயோ
உன் பணி செய்ய அழைத்தாயோ
உவப்பாய் அதையும் ஏற்றுக்கொண்டு
உன் பெலன் கொண்டு உழைத்திடுவேன்
உனது வேதம் வழிகாட்டும்
உனது பக்தர்கள் துணைகூட்டும்
உனது ஆவி முன் நடத்தும்
உனது அருளே கரைசேர்க்கும்
ஆகவே நானும் கொண்டாடி
ஆனந்தக் கூத்து ஆடுகிறேன்
ஆனந்தம் மேலிட பண்பாடி
உன்னை துதித்துப் போற்றுகிறேன்
மத்திகிரி, 15-7-2017, இரவு 11.30
BT Song 688 My tapasya
I sing worshiping at your feet
I seek bliss within me
I understood the purpose of my creation
I realized through bhakti
Along with my body
I offer my life to you
In each moment of my life
I rejoice by worshipping you
Whatever responsibilities you will give
I will do it diligently
And treating it as my tapasya (penance)
I will accomplish it sincerely
For what purpose you have redeemed me
What reason you have called me for your seva
Accepting it with joy
I will do my best with my strength
Your Veda will show the path
Your bhaktas will give company
Your Spirit will lead me
Your grace will take me to the destiny
Therefore, rejoicing in it
I dance with much bliss
Overcome by joy
I sing your praises
Mathigiri, 15-7-2017, 11.30 pm.
BT Song 689
I got up very early, after my routine when I sat for my meditation the one thought that occupied my mind was the way the Lord came to serve us voluntarily. One noble teaching of Muktiveda is doing service to others. Even for many common people the main picture that comes in their mind when thinking about Christianity is service (though I am not a Christian). So as the followers of the Lord, we live and move and our being is in Him who epitomized seva through his life and teaching.
BT Song 689 தொண்டின் மேன்மை
தொண்டர்கள் மனதில் குடிகொண்டு வாழ்பவன்
தொண்டர்க்குத் தொண்டு செய்ய வந்தவன்
தொண்டின் மூலம் இறைவன் அன்பை
தொய்வின்றி உலகிற்கு காட்ட சொன்னவன்
தேடி வந்து நமை கேட்கும் போது
செய்வது கடமைதான் தொண்டு இல்லை
தேவை உள்ளோரைத் தேடி சென்று
கேட்குமுன் செய்வதே தொண்டின் மேன்மை
தேடி வந்தான் நாம் தேடாத போதும்
தெரிந்துதான் மீட்டான் நாம் குணமற்ற போதும்
நாடி வருகிறான் நாம் வேண்டாத போதும்
நன்மைகள் செய்கிறான் நாம் கேட்காத போதும்
இதனினும் தொண்டிற்கு இலக்கணம் இல்லை
இதைவிட்டால் நாமுய்ய வழியும் இல்லை
இறைவனே இவ்விதம் இறங்கி வந்தும்
இன்னும் உணராமல் இருப்பதும் கொடுமை
வாருங்கள் நாம் போய் தொண்டுகள் ஆற்றுவோம்
வாழ்கின்ற வாழ்வில் இறைவனைக் காட்டுவோம்
தொண்டின் மூலம் இறைவனைப் போற்றுவோம்
தொண்டாற்றும் பேரினை இறைஞ்சி வேண்டுவோம்
16-7-2017, Mathigiri, 5.30 am.
BT song 689 The greatness of doing seva
He dwells in the heart of his bhaktas
He came to serve even to the bhaktas
Only through his seva
He showed God to the world
When someone come and asks us
If we do some help that is not seva
But seeking after those who are in need
Serving them even without being asked is seva
He came seeking after us though we never sought him
Knowing about us alone he redeemed us
He always comes seeking after us even when we never sought him
He always gives blessings even when we never ask them
There is no greater definition for seva other than this
There is no means for us to be saved
When God himself came down like this
Still if we don’t understand, there is no foolishness greater than this
Come let us go and do some kind of seva for us to be emancipated
Let us show God while we are living
Only through seva let us glorify God
Let us beg to God to give the noble opportunity to serve others
16-7-2017, Mathigiri, 5.30 am.
BT Song 690
When Chakaravarthy commented about my Review on Badrinath {Finding Jesus in Dharma], he said that was an old avatar of me. In response I wrote this song. There is no chance for me to take new avatara again, once Muktinath made me as His bhakta. My understanding has improved and gone deep, but my first love with the Lord remains the same.
BT Song 690 மாற்றம் இல்லை
புதிதாகச் சொல்ல ஏதும் இல்லை
சொன்னாலும் புரிய வாய்ப்பு இல்லை
இதுவரை சொன்னது புரியாத போது
இனிமேல் புரிய வழியும் இல்லை
புதிதாக அவதாரம் எடுத்து வந்தாலும்
புதுமையாய் எதையேனும் சொல்லி வைத்தாலும்
மனம் மட்டும் புதிதாக மாறவே இல்லை
மறுபடி பிறக்க வாய்ப்பு இல்லை
மீட்டபோது மாற்றி விட்டானே
மேலான வாழ்வைத் தந்துவிட்டானே
பக்தனாய் மாறும் பேறு தந்தானே
என்பக்தியில் பரவசம் கண்டு விட்டானே
ஆதி முதலே மாறா இறைவன், நம்
ஆணவ மலத்தை கழுவி நீக்கி
பூரண வாழ்வை தந்திட வந்து, நம்மை
புதிதாய் பிறக்க வைத்தான் தன்னுள்
அவந்தந்த புதிய பிறவி பெற்றவன்
அவனுடன் வாழும் உறவு உற்றவன்
அவன் மேன்மை சொல்லும் வாய்ப்பு பெற்றவன்
அதற்கவன் தந்த உரிமை பெற்றவன்
அதைமட்டும் புதிதாக அடிக்கடி சொல்கிறேன்
அதற்கென பாடல்கள் புதிதாய்ப் புனைகிறேன்
ஆயினும் ஆதியில் கொண்ட அன்பில்
எவ்வித மாற்றமும் இல்லாமல் சொல்கிறேன்
மத்திகிரி, 16-7-17, மதியம் 2.00
BT Song 690 No Change
There is nothing new to tell anymore
Even if I tell, there is no chance to understand it
What I have shared so far is not clear
There is no chance to understand further
Though if I get a new perception
Say something new (about it)
The heart never gets changed
There is no chance to ‘born again’ again
When He redeemed me, He changed it
And bestowed a noble life
He gave me the blessed opportunity to become His bhakta
He delighted in my bhakti
The One who never changes from the beginning
Removing and cleansing our ‘anavam’ (ego, ahankara)
Came to give a complete life
And made us to born again, new in Him
I am the one who received that new birth
I am the one who got the relationship to live with Him
I got the opportunity to proclaim His Greatness
Received that right to do so, which He gave to me
But I tell this alone, often in a new way
And for that I write new songs
Yet I tell this without any change
In the First Love that I had for Him
Mathigiri, 16-7-17, 2.00 pm.
Leave a Reply