Secular Songs 616 to 620

Secular Song 616

Another song about my own nature and writings.  Am I confused because others confused me or am I confusing others because I am a confused person.  No answer but another song only on such confusing thinking.

Secular Song 616 குழப்பம்

குழம்பியதால்

குழப்புறேனா

குழம்பியதால்

குழப்புகிறேனா

இந்தக் குழப்பம்

புதியதும் அல்ல

இது ஒரு குழப்பமாய்

இருந்ததும் இல்லை

தெளிவாக சொல்ல

யாரும் இல்லை

ஆகவே கேட்டது

எதுவும் புரியல

புரிய வேண்டி

அவரிடம் கேட்க

தந்த விளக்கம்

விளங்கவே இல்லை

ஆயினும் அப்போது

தப்பிக்க வேண்டி

புரிந்ததாய் நடித்து

ஒதுங்கிய பின்பு

என்னதான் சொல்ல

வருகிறார் என்று

மீண்டும் சற்று

சிந்தித்த போது

முற்றாக என்னை

குழப்பினார் என்று

தெளிவாக எனக்கு

புரிந்தது பின்பு

அந்தத் தெளிவு

வந்த பின்னே

அதையே பிறருக்கு

சொன்னபோது

எப்படி முற்றாய்

குழம்பிப் போனான்

ஏன் நம்மையும்

இப்படிக் குழப்புறான்

என்று என் மேல்

இரக்கம் கொண்டு

குழப்பம் தெளிவிக்க

சொல்லிய போது

பிறந்த தெளிவும்

போனது அத்தோடு

குழம்பிக் குழப்பி

வாழுறேன் இப்போது

குருகுலம் 31-3-2024, இரவு 9.15

Secular Song 616 Confusion

Am I confusing others

Because I am confused by them

Or am I confusing others

Because I am a confused person

This confusion

Is not at all new

It never it remained  

As a confusion

As there is none

To teach me clearly

I never understood

What I learnt from them

In order to get more clarity

When I requested them to explain further

The clarity that I received from them

Remained unclear to me now

Anyhow to escape

That time from them

I pretended as if I understood

And went away

Then when I began

To think that

At the end

What they explained to me

Then I clearly

Understood that

They completely

Confused me

When I got

That clarity

And try to

Communicate to them

‘How much now

He is confused and

Why he tries

To confuse us more’?

And taking

Pity on me

When they try to

Further clarify

All the clarity that I got

Also gone, now I am living

Totally confused and

Confusing others also

Gurukulam 31-3-2024, 9.15 pm.

Of course we are living in a busy world.  Even a lazy person has no time and remains very active—of course in his laziness.  And this being the reality of life now with social media and Internet invasion in our life, expecting some proper response, not even any quick response to certain issues, particularly to certain causes to which all are equally committed, naturally we old generation become frustrated.  And when one such scenario came in my life, finally sending the last reminder I wrote, ‘this would be the final reminder from my side.  I am also busy like everyone else’.   The worst case is with a person, who alone promised to follow one issue in which he is also involved to take up, never responded even to one of my messages.  In another case, when I tried to contact that person who alone committed to help in one area in which I had one question, I sent messages using all kinds of media like: WhatsApp, email, etc failed.  Finally, I called him several times.  But no response.  Then I have done the same to his wife with a request to contact him.  Again, no response.  Finally, I contacted his father-in-law again with the same result.  Then out of frustration I give up not knowing whether they have decided to ‘boycott’ me or really too busy to give some kind of response.

Secular Song 617 இதை படிக்காதே

செவிடன் காதுக்கு சங்காச்சு

சொல்லி சொல்லி அலுத்தாச்சு

யாருக்கும் எதுக்கும் நேரமில்லை

எனக்கு மட்டும் என்னாச்சு

அவரவர் கவலை அவருக்கு

அடுத்தவர் கவலை நமக்கெதற்கு

என்ற நிலைக்கு வந்தபின்னே

யாரிடம் சொல்லி என்னாச்சு

நாய்க்கு வேற வேலை இல்லை

ஆனால் நிக்க நேரம் இல்லை

ஆகவே அதனிடம் கேட்காதே

அப்புறம் கடியும் வாங்காதே

வெளியில் போகும் ஓணானை

வேட்டிக்குள் கட்டி வைத்த பின்னர்

குத்துது குடையுது என்காதே

தப்பிக்க எண்ணுது மறவாதே

தன் கை தானே தாளம் போட்டு

அதற்கு ஏற்ப நாம் ஆட

அடவு, முத்திரை காட்டிடவும்

அந்தக் கையே வந்திடனும்

யாரும் பார்க்க வரமாட்டார்

ஆட்டம் சரியில்லை என மாட்டார்

நாமே ஆடி நாமே பார்க்கும்

காலம் இப்போ வந்ததென்பார்

இதுவும் கூட உண்மைதான்

ஏனென்றால் எதற்குமே நேரமில்லை

இதற்கும் மேலே எழுதிடவும்

எனக்கும் கூட நேரமில்லை

ஆகவே இதையும் படிக்காதே

அதற்கு உனக்கு நேரமில்லை

ஆயினும் எழுதி அனுப்புகிறேன்

நாய்க்கு வேற வேலை இல்லை

குருகுலம், 5-4-2024, 3.00 pm

Secular Song 617 Don’t read this

It became like blowing a conch

To  a deaf person

Nobody has time for anything

Then what I am going to do about it

Each one has his own worries

Why then they should bother about others

Once we have reached to this condition

What is the use of blaming anyone

Dog does not have any particular work

Still, it does not have time to stay in one place

Therefore, don’t ask it why it is always roaming

And then get attacked back by it

Don’t keep the garden lizard

Inside your dress and then

Complain that

It is giving lots of troubles

As one’s own had alone doing the thala@

And as we began to dance accordingly

The same hand alone has to come

To give various expression in the dance

Nobody will come to your performance

Therefore, they won’t say you are not dancing properly

They will say that time has now come

For us to dance alone and also watch it alone

[by video recording]

One way this also is correct

Because we don’t have time for anything

I also don’t have time

To write more than this

Therefore, don’t read this

As you also don’t have time to read

Still, I write and share with you

Because dog does not have any other work

@ while performing Bharatanatiyam another person has to use his hand to give proper tune or thala and the performer has to use her hands to give various poses. 

Gurukulam, 5-4-2024, 3.00 pm

Secular song 618

Another theme about the need of two opposites in life for us to live properly.

Secular Song 618 எதிர் இரு துருவம்

 தீமையிலும் ஒரு

நன்மை உண்டு

திருந்த வாய்ப்பு

வந்தது என்றால்

வேதனை கூட

பலவிதம் நன்று

புதுப்புது பாடம்

கற்போம் என்றால்

தனிமையிலே ஒரு

இனிமை உண்டு

துணையின் அவசியம்

புரியும் என்றால்

பிரிவிலும் ஒரு

பயனும் உண்டு

மீண்டும் இணைவது

இனிக்கும் என்றால்

நோய் நொடி கூட

நலத்தின் அறிகுறி

நாமதை நீக்க

முயற்சி செய்தால்

தீமையாய் தோன்றும்

அனைத்தும் தேவை

நன்மை எதுவென

நாமும் புரிய

எல்லாம் நல்லதாய்

இருக்கும் என்றால்

அதுவும் தீமை

என்பதை அறிய

எதிர் இரு துருவம்

இணைந்ததே உலகு

இரண்டும் வேண்டும்

அதுவும் சுழல

ஒன்று இயங்க

மற்றது தேவை

ஒன்று மறைந்தால்

முடங்கும் வாழ்க்கை

ஆகவே நன்மை

தீமையை ஏற்று

அவற்றுடன் வாழ

அனுதினம் பழகு

இரண்டும் இணைந்து

வாழ்வை நகர்த்த

வாழ்ந்து முடிப்போம்

அவற்றை ஏற்று

Gurukulam 14-4-2024, 2.50 pm.

Secular Song 618 Opposite polls

There is some good

Even in evil

If that will give an opportunity

For us to mend our ways

Pain is also

Good in one way

As we can learn

New lessons in life

Loneliness also is

Good one

If we can realize the

Need of companion

There is some good

In separation

As unity again will

Become very sweet one

Sickness also

Is the symptom of good health

When we try to

Cure it

All that looks evil

Is necessary in life

For us to understand

What good is

Also to know that

If everything remains

Only Good

That is also dangerous

The earth is the

Combination of two opposite polls

And it needs it for

It to rotate in its orbit

For one to remain active

The other is essential

If one disappears then

Life will stand still

Therefore accepting

Both good and evil

Learn to

Live with them

As both joining together

Pushing life

Let us complete the life

By accepting both of them

Gurukulam 14-4-2024, 2.50 pm.

Secular Song 619

After reading some incidents in the life of a few people’s life who overcame odd situations and tasted success in life, I wrote this song.

Secular Song  619 எதிர் விளைவுகள்

தோல்வியின் பயமும்

தேவை நமக்கு

வெற்றியின் ரகசியம்

புரிய வேண்டின்

தோல்வி இல்லாமல்

வென்றவர் இல்லை

வென்றபின் தோல்வி

வராமல் இல்லை

தோற்றபின் வெல்வது

ஒருவிதம் நல்லது

வெற்றியின் மகிழ்ச்சி

புரியும் அப்போது

போராட்டம் இன்றி

வந்திடும் எதுவும்

போராட்டம் ஆகிப்

போகும் அப்புறம்

இனிப்பின் அவசியம்

அறிய வேண்டின்

எதிரான சுவையை

சுவைக்க வேண்டும்

உழைப்பின்றி ஓய்வுக்கு

வழியும் இல்லை

துயரின்றி அமைதிக்கு

இடமும் இல்லை

இனிப்போடு கசப்பு

கசப்போடு இனிப்பு

என்பது மருத்துவ

கணிப்பின் முடிவு

நலத்தை பேண

இரண்டும் தேவை

ஒன்று இருந்தால்

அது தரும் தொலை

ஆகவே எதிர் எதிர்

விளைவுகள் வந்து

வாழ்வின் அர்த்தம்

புரிய வைக்க

இரண்டையும் ஏற்று

அவை மூலம் கற்று

அனுதின வாழ்வை

ஓட்ட வேண்டும்

குருகுலம், 19-4-2-24, 3.00 pm.

Secular Song  619 Two opposites

In order to understand

The secret of success

We also should have

Fear about defeat

There is none who won

Without some defeats

There is none who after winning

Never faced again defeat

One way it is good to win

After get defeated

Then we can realize the

Joy of victory

Anything that comes

Without some struggle

Might end up

Becoming a struggle of its own

In order to understand

The sweetness of sweet

One should taste some

Other taste against it

There is no way

To gain rest without toil

There is no place for peace

Without some kind of sorrow

Sweet along with bitterness

And bitterness along with sweet

Is the invention of

Herbal medical treatment

To maintain a good health

Both are essential

If one alone remains

That will give lots of troubles

Therefore, two opposites

Are required in life

In order to make us

To understand the meaning of life

Accepting them both

Learning through them

We should try to live

Our everyday life

Gurukulam, 19-4-2-24, 3.00 pm.

Secular Song 620

It is true that there is no point in arguing with a fool.  At the same time it is not good to leave him with the impression that we don’t have answers to his [foolish] questions. So one should have the discerning spirit to know whether a person is worth to receive some advice, when he sought it and ready to listen to it [whether he accepts it or not] without arguing on secondary points.  Then keep away from them is good. 

620 கற்றவர் சபை

கற்றவர் சபையில்

செல்லும் போது

கைகட்டி வாய்பொத்தி

நிற்பதே அன்றி

அறிந்தவர் முன்னே

சென்றிட நடுங்கி

அஞ்சி ஓரமாய்

தூர நின்று

ஒருசொல் காதில்

விழுந்தால் கூட

உய்வோம் என்பதை

நன்கு உணர்ந்து

மழைத் துளிக்காக

நீரில் மிதக்கும்

சிப்பியைப் போல

காதைத் திறந்து

விழுந்த சொல்லை

வாக்கிக் கொண்டு

மனதில் அதனை

நிறுத்திக் கொண்டு

தேவைப் பட்டால்

அவரை நாடி

விளக்கம் சிலதை

பெற்றுக் கொண்டு

வாழ்வை நாமும்

வாழத் தொடங்க

வாழ்வின் அர்த்தம்

புரியக் கூடும்

தனக்குத் தானே

அறிவாளி ஆகி

தானே தனக்கு

புத்தியும் சொல்ல

வாசம் அறியா

கழுதை மேலே

வாசனைப் பொதியை

வைத்தது போல

அவருக்கு உரைத்த

கல்வி எல்லாம்

விழலுக்கு இறைத்த

நீராய் மாறும்

ஆகவே அவருக்கு

கும்பிடு போட்டு

அமைதியாக

ஒதுங்கிக் கொண்டு

கற்றவர் முன்னே

சென்று நின்று

கரம்கட்டி வாய்பொத்தி

அவசியம் கேட்கணும்

குருகுலம், 29-4-2024, காலை 11.00

620 Learned person

Other than

Standing humbly

When one goes

To the assembly of learned people

Afraid to go

In the presence of a learned person

Standing at a distance

With much reverence

Realizing that

Even if one word

Fall in our ears from him

Then we will be emancipated

Like a shall

That floats on water

Longing for a

Drop of rain to fall in it

Receiving that

One advice properly

And thinking it

Often in mind

If needed

Going again to them

Seeking some more

Explanations to understand

If we began

To live our life

We might know

The meaning of this life

Becoming wise

Unto oneself

And giving advice

To oneself

Like loading

A bundle of spices

On the back

Of a donkey

The advice given

To such person

Will end up like the water

Irrigated to weeds

Therefore saying

A big ‘Namaste’ to them

Silently keeping

Away from them

Going in the presence

Of the learned

One should listen

With much humility

Gurukulam, 29-4-2024, 11.00 am.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *