Secular Songs 1 to 50

Comments are edited by ChatGPT and English translation by ChatGPT. Also posted in Paamaalai Face Book

Scroll down for translation in Hindi, Sanskrit and English

மனதின் குரல் 1  ஊடலும் கூடலும்

தோன்றும் போது வெண்மதியும்

தோகையன்ன கதிர் பரப்பி

தோழியராம் தாரகையென்னும்

துணை படைசூழ புறப்பட்டாள்

முதல் நாள் இரவு ஊடலினால்

முகம் சிவக்க கோபத்தால்

சென்றுவிட்ட தன்மன்னவனை

தேடுனள் போல புறப்பட்டாள்

பகலவனோ தன் கோபத்தை

இப்பார்முழுதும் காட்டிவிட்டு

வீடு செல்ல எண்ணம் கொண்டு

விரைந்து செல்ல புறப்பட்டான்

ஆனால் அந்தோ மலையரக்கி

அவளது தவிப்பை புரியாமல்

வீடு செல்லும் பகலவனை

விரைந்து செல்ல வாய் பிளந்தாள்

இரவு முழுவதும் கதிரவனை

எப்படித்தேடியும் காணாமல்

தேகம் தன்னில் களையிழந்து

தேய்ந்து போனாள் வெண்மதியும்

பானுவும் மதியும் பலமுறையே

ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு

ஊடலை எண்ணி மனமிரங்கி

உலகை பலமுறை சுற்றிவந்தார்

இயற்கை அன்னையும் மனமிரங்கி

இருவர் ஊடலைத் தீர்க்க எண்ணி

பானுவும் மதியும் ஒருசேர

பக்குவமாக வழியமைத்தாள்

மோகம் கொண்ட கதிரவனும்

மேனி முழுதும் தகித்திருக்க

ஆர்வமுடன் வெண்மதியை

அள்ளி அணைத்தான் தன்னுடனே

நாணம் கொண்ட பெண்ணவளும்

நாணி வெட்கித் தலைகுனிந்து

ஆதவனோடு தான் இணைய

ஆயிற்று அந்நாள் அமாவாசையாக

ஊடல் தீர்ந்த காரணத்தால்

உடலில் நாளும் மெருகேற

மீண்டும் வளர்ந்தாள் முழுமதியாய்

மோகம் வளர்த்தாள் மேதினியில்

திருச்சி 1972

திருச்சியில் மலைக்கோட்டை வீதியில் வசித்தபோது ஒரு மாலை நேரம் மேல் மாடிக்குச் சென்றபோது கிழக்கே சந்திரன் தோன்றும் போது, மேற்கே சிவப்பாக சூரியன் மறையும் காட்சியை பார்த்தபோது எழுதிய பாடல்

Voice of the mind Song 1 Love and Separation

When the Moon appeared

Spreading her beautiful rays

She along with her

Companion of stars began her journey

She went out

Searching her husband

Who left with anger because?

Of her sulking indignation in the previous night

The Sun on his part

Showing his anger on this earth

Hurried back to

Reach his home

But the hills like a demon

Not understanding his longing

Swallowed him

When he was rushing back to his home

However, as she searched whole night

Unable to find the Sun

The Moon also lost

Its glowing radiance

Like this both Moon and Sun

Searching for each other

Went around the world

So many times, regretting for their anger

Taking pity on their condition

The Mother Nature took the decision

To help them to

Meet each other again

The Sun who was

Burning within with longing

Immediately hugged

The Moon with him

The Moon on her part

Like a shying woman

As mingled with him

That day become New moon day

As her sulking indignation has gone

Regaining her beauty again

She began to grow day by day

In order to entice the world

Trichy, 1972

I still remember that day in Trichy where we lived. As I got up and went to the back side of our house to brush my teeth, I saw both the full moon in the western sky and the rising son in the east. As we lived on Rock fort which is above from the other streets below, we can also see the river Cauvery from the backside of our house.  Then as the inspiration came, I wrote this song imagining that both the Moon and Sun are going round and round the earth searching for each other. 

In this poem I imagined that due to their regular fight the previous night, the sun left the next morning with much anger and showed it to the people of the earth. Moon on her part, with the company of her friends (stars) went out searching for her husband.  But not knowing their condition as the hill swallowed the home going sun in the evening, they couldn’t meet again that night.  But taking pity on the waning moon, Mother Nature arranged them to meet again. As both the Sun and Moon mingled with each other, the Moon completely disappeared in the Sun on New Moon day.  As her sulking indignation had gone, she regained her glow from the next day and each day gaining more beauty began to entice the whole world through her beautiful rays and light.  As I remembered the whole song, I recorded it again from my memory.

मन की आवाज़ 1 — मिलन और जुदाई (अवधी–काव्य शैली)

1.
चमक उठी जब रात की रानी,
धवल किरणन के पर डारि,
तारा-टोली साथ लगाय,
निकरी पथ पर चाल सँवारि।

2.
पहिल रात जो रूठन भइ,
सूरज रिसके छोड़ि गवा,
पिया खोजे मन मारे,
चाँदनी अकेली टोरि चला।

3.
सूरज भी आपन रीस लेके,
धरती भर में आग लगाय,
घर लौटै की सोचि करै,
तुरत-तुरत घर के ओर धाय।

4.
परबत की छाया दैत्य सम,
उसके मन के बात न जानी,
रस्ता रोकि निगलि गवा,
लौटत सूरज के चिर जानी।

5.
रैन भर ताकत रही अंबर,
साथी के खोजे चाँद सुहानी,
जोत गँवा बैठी ठक हारि,
शेष बची बस छाया पानी।

6.
कई जनमन जस खोजा फिरैं,
एक दूजे के बिन अधूरे,
घूमें धरती कई दफा,
मन मा भरिन पीर अधूरे।

7.
माई धरती देखत-बूझत,
फेर मिलावै सोच बनाय,
दूनों के मन मा पिघल गवा,
मेल मिलन के राह सुझाय।

8.
लालसा भरे उषा-पति ने,
चाँदनी के हिया समेट,
बाहें पसारि लगा लिया,
ज्योति-प्रीति में चाँद समेट।

9.
लाज में डूबी रजनी रानी,
नयन झुकाय, चुप्पे भई,
संग हुई अपने पिय संग,
अमावस रात वही बन गई।

10.
रूठन-बिछोह सब दूर भय,
फिर से चाँदनी खिलत चली,
दिन-दिन बढ़े चमक उसकी,
दुनिया महके जोतन भली।

ट्रिची, 1972

मुझे अभी भी वह दिन याद है जब हम ट्रिची में रहते थे। जब मैं उठा और अपने घर के पीछे दाँत साफ़ करने गया, तो मैंने देखा कि पश्चिमी आकाश में पूरा चाँद है और पूर्व में सूरज उग रहा है। क्योंकि हम रॉक फोर्ट पर रहते थे जो नीचे की सड़कों से ऊँचा था, हम अपने घर के पीछे से कावेरी नदी को भी देख सकते थे। तब मुझे यह प्रेरणा मिली और मैंने यह गीत लिखा, यह कल्पना करते हुए कि चाँद और सूरज दोनों पृथ्वी के चारों ओर घूम रहे हैं और एक-दूसरे को खोज रहे हैं।

इस कविता में मैंने कल्पना की कि उनकी पिछली रात की लड़ाई के कारण, सूरज अगले दिन सुबह बहुत क्रोध के साथ चला गया और धरती के लोगों को अपना गुस्सा दिखाया। चाँद, अपने दोस्तों (तारों) के साथ, अपने पति को खोजने निकला। लेकिन उनकी स्थिति को न समझते हुए, जैसे ही पहाड़ ने शाम को घर लौटते सूरज को निगल लिया, वे उस रात फिर नहीं मिल पाए। लेकिन फीके पड़ते चाँद को देखकर माँ प्रकृति ने उनका मिलन सुनिश्चित किया। जब सूरज और चाँद मिले, तो अमावस्या के दिन चाँद पूरी तरह सूरज में विलीन हो गया। जैसे ही उसका रूठना खत्म हुआ, उसने अपनी चमक वापस पाई और हर दिन अधिक सुंदर होती गई, अपनी किरणों और रोशनी से पूरी दुनिया को लुभाने लगी। जब मैंने पूरा गीत याद किया, तो मैंने इसे अपनी स्मृति से फिर से रिकॉर्ड किया।

Trichy 1972

मनसः स्वरः १ — मिलनं च विग्रहश्च (संस्कृतकाव्य–रूपेण)

1.
प्रकटे चन्द्रो द्यौराजि,
रश्मीन् शशिधवलान् वितन्।
तारकासख्यया युक्तः,
यात्राम् आरब्धवान् तदा॥

2.
पूर्वरात्रे विवादेन,
क्रुद्धः पतिः गतो यतः।
तं पतिं खिन्नचित्ता सा,
अन्विष्य निर्गता शनैः॥

3.
भानुश्च स्वं कोपज्वालम्,
प्रदर्श्य सकलं भुवि।
स्वगृहं प्रत्यगच्छत्तु,
द्रुतं दीनमनाः स्वयम्॥

4.
पर्वतच्छायया तीव्र्या,
तं न वेत्ति कृशानुनम्।
पथि गत्वा तदा भानुम्,
ग्रसत् सा राक्षसी यथा॥

5.
रात्रौ चिरं यावत् सा,
सवितारम् अन्वियात्।
नापश्यत् तम् कथञ्चन,
शोभा ह्रिया शशी कषः॥

6.
भानुश्च शशिनं प्रति,
शशीनि च सवितरम्।
अन्विष्य जगतः मध्ये,
विचिन्वन्तौ पुनः पुनः॥

7.
दृष्ट्वा तयोः विषण्णत्वं,
प्रकृतिः मातरं स्मृता।
सङ्गमं पुनरर्थाय,
मार्गं सुसज्जयत् ततः॥

8.
कामातुरः सविता तु,
विलीनज्वलितवपुः।
शशिनं सस्नेहम् आलिङ्ग्य,
संगतः तद्वचः पुनः॥

9.
सावित्र्या लज्जया युक्ता,
नीचीकृतवदना तदा।
संयुक्ता पतिना सा च,
रात्रिः सा अभवत् अमी॥

10.
विग्रहः समाप्तो जाता,
प्रेम्णा हर्षो व्यजायत।
दिवसैः दिवसैः वर्धते,
रुचिरा सा पुनः शशी॥

Trichy

Song 2

மனதின் குரல்: 2  குழந்தையாக வேண்டும்

குழந்தையாக வேண்டும் 

மீண்டும் குழந்தையாக வேண்டும் 

இக்கு வலயத்தின் கவலை மறக்க 

குழந்தையாக வேண்டும் 

குஞ்சு காலும் பிஞ்சு கையும் 

கொள்ளை அழகுதான் 

குறுகுறுக்கும் விழியிரண்டும் 

பறக்கும் வண்டுதான் 

பொக்கை வாய் பல் இரண்டு 

மட்டும் தெரிந்திடும் 

உன் புன்னகையின் அழகு கண்டு 

உலகம் சொக்கிடும் 

படைத்தவனே, உன்னை ஒன்று 

நானும் வேண்டுவேன் 

இப்பாரினிலே எதுவரை 

நான் வாழ்ந்திருந்தாலும் 

கள்ள மனம் அறிந்திடாத 

பிள்ளை மனம் போல் 

காலமெல்லாம் வாழ்ந்திட 

அருள் புரிவாயே 

திருச்சி, 1974

இப்பாடல் 1974 அல்லது 1975-ல் எழுதியது.  

சின்னக் குழந்தைகள் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு, பொக்கை வாய் தெரிய சிரிப்பதைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும்.  ’இதுபோல் கள்ளம் கபடம் அறியாத குழந்தையாக காலமெல்லாம் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று எண்ணிய போது எழுதிய பாடல். ஆனால் இப் பாடலுக்கு காரணம் குழந்தை சாந்தி தான். என் மூத்த அண்ணன், அவன் மனைவி (என் அண்ணி), அவர்கள் குழந்தை சந்தியை எடுத்துக்கொண்டு, பேருந்தில் திருச்சியில் இருந்து கரூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தோம். அவர்கள் குழந்தையை வைத்துக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்திருக்க, நான் பின்னிருக்கையில் இருந்தேன். என் அண்ணன் தோளில் சாய்ந்து கொண்டிருந்த குழந்தையுடன் நான் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தேன்.  அப்போது, அவள் தன் பொக்கை வாய் திறந்து சிறிய இரண்டு பல் தெரிய என்னுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் (என் அண்ணன் குழந்தையை நாங்கள்தான் மூன்று வயது வரை வளர்த்து வந்தோம். சாந்தி எப்போதும் என் மார்பில் தான் படுத்து தூங்குவாள்). அவளின் அழகிய சிரிப்பு என் நினைவை விட்டு வெகுகாலம் மறையவே இல்லை.  அதை எண்ணி நான் எழுதிய பாடல்.  இப்பாடலை பிறருக்கு பாடிக் காட்டும் போதெல்லாம் சாந்தியின் நினைவு தான் எனக்கு அதிகம் வரும். கடந்த ஆண்டு (2017) சாந்தி மீண்டும் எங்களை பார்க்க அவளுடைய இரண்டு மகன்களுடன் வந்த போது என் இரண்டு பேரன்களுக்கும் இந்த பாடலை பாடிக் காண்பித்தேன். திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் என் மூத்த அண்ணன் மறைந்து விட்டான்.

2.  I should become a baby again

I should become a baby again

And again I should become a baby

In order to forget the

Worries of this world

I should become a baby again

The tender legs and hands

Are so beautiful

The two active eyes

Are nothing but two bees

The two small teeth

Which alone are visible

When you laugh

The world will be mesmerized by that simile!

O God I will ask only one thing from you:

As long as I live on this earth

I too should become like a baby

Which does not have deceitful heart

Help me also to live like that

By giving your grace.

Trichy 1974 or 1975

This song was written back in 1975, I think.  When I watch any baby which plays with their tender hands and legs with two beautiful eyes wandering like bees, I always thought how nice it would be if I too became like it again.

The background of this song is my own niece.  When I was travelling with my eldest brother and his wife with their baby Shanti in the bus, I was sitting in the back seat. They were sitting in the front seat keeping the Shanti on the shoulder.  As I was sitting just behind Shanti, I started to play with her and she too began to laugh.  And we enjoyed the time together. Until when she was three, she always used to sleep on my chest when I came back from my work as she grew with us.  So, whenever I think about this song, I only remember my niece Shanti, who is now around 43 years old with two sons.  When she came to meet us again with her sons, I shared this song with them.

(My eldest brother passed away within three years of his marriage).

2 मन की पुकार: फिर बच्चा बन जाऊँ

फिर से बच्चा बन जाऊँ मैं,
नवजीवन का गीत गाऊँ मैं।
दुनिया की चिंता छोड़कर,
मुक्त गगन में उड़ जाऊँ मैं।

नन्हें पाँव, कोमल हथेली,
सजीव नयन जैसे मधुमक्खी।
मुस्कान में दिखते दो दाँत,
उसमें बसी है जग की खुशी।

हे प्रभु, माँग एक यही मेरी,
तू कर दे कृपा गहरी।
जितना भी जीवन में जीऊँ,
बाल-हृदय बन रहूँ सदा ही।

ना हो कपट, ना हो छल,
सत्य और प्रेम हो केवल।
तेरी करुणा का यह वरदान,
बना दे जीवन को निर्मल।

त्रिची, 1974 या 1975

यह गीत बच्चों की मासूमियत, सरलता और निर्मल हृदय की प्रशंसा करता है। कवि जब किसी छोटे बच्चे को देखता है—जो अपने हाथ-पाँव हिलाकर हँसता है और जिसकी आँखें जीवन से भरी हुई हैं—तो उसे ऐसा लगता है कि काश वह भी ऐसा ही बन पाता। वह ईश्वर से प्रार्थना करता है कि जीवन भर वह छल-कपट रहित, निष्कलंक हृदय वाला एक बालक बना रह सके। यह गीत हमें हमारी खोई हुई सरलता की याद दिलाता है—एक ऐसा हृदय जिसमें कोई स्वार्थ या छल नहीं। यही बाल-स्वरूप अध्यात्मिक दृष्टि से भी आदर्श माना गया है। यह गीत ईश्वर से एक सरल किन्तु गहन प्रार्थना है।

मम प्रार्थना: बालोऽहम् भूयासम्

पुनः बालो भवाम्यहम्,
चिन्ताशून्यं जीवनम्।
नवस्नेहेन हसितेन,
हृदि स्फुरति आनन्दम्।

लघुचरणं सुकुमारं,
हस्तयोः लावण्यकम्।
नेत्रद्वयं भ्रमरवत्,
मोदकं वदनं च तत्।

दन्तद्वयं केवलं दृश्यते,
हासे यस्मिन् जगत् मोहितम्।
हे भगवन्, एकं वाञ्छामि,
दत्तं मे शुद्धहृदयम्।

यावज्जीवं मम पथि,
सत्यं प्रेम च सन्निधि।
बालचित्तं निरहंकारम्,
भवतु तव अनुग्रहात् सदा।

त्रिची, १९७४

Song 3

மனதின் குரல்: 3

மனதின் குரல் 3. சீக்கிரமா போ

கட்டபொம்மா, கட்டபொம்மா,
உன் கட்டவண்டிய கட்டபொம்மா,
கடிதுடனே விரட்டிடுவாய்,
காற்றில்லாமல் கதறுகிறோம்!

கட்டபொம்மன் பெயரும் கொண்டாய்,
கட்டவண்டிபோல் ஓட்டுகிறாய்,
கட்டவண்டிபோல் ஓட்டிச் சென்றால்,
காலமும் நேரமும் வீணாயிடும்.

காதம் பல கடந்து செல்ல வேண்டும்,
காலத்தில் வீடு போய்ச் சேர வேண்டும்,
காலத்தில் வீடு போய்ச் சேராவிட்டால்,
காதல் மனையாளும் கோபிப்பாளே!

காதல் மனையாளும் கோபித்தாலோ,
காசுக்கு செலவும் வந்துவிடும்,
காசுக்கு செலவும் வந்துவிட்டால்,
இந்த மாசக் கடைசியில் என்ன செய்வேன்?

1976 அல்லது 1977 — ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் மதுரை வரையிலான பயணத்தில் எழுதியது

விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய போது, திருவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கட்டபொம்மன் போக்குவரத்து பேருந்தில் கடும் வெயிலில் பயணம் செய்தேன். ஓட்டுநர் மெதுவாக ஓட்ட, பயணிகள் அனைவரும் காற்றில்லாமல் முணுமுணுத்தார்கள். அந்த சூழ்நிலையில் இந்தக் கவிதை பிறந்தது.

Voice of the Mind 3. Drive Fast

Kattabomma, Kattabomma,
Drive your bullock cart
A bit faster, oh Kattabomma,
We’re suffering without air in the bus!

You bear the name of Kattabomman,
But you’re driving it like a bullock cart!
If you continue at this bullock cart pace,
We’ll be even more delayed reaching our destination.

We have a long way to go,
And must reach home on time—
Otherwise, my beloved wife
Will surely become upset.

If she gets upset,
Then I’ll have to spend more to cheer her.
And if I end up spending extra,
Where will I find money at month’s end?

Written in 1976 or 1977, on a bus between Srivilliputhur and Madurai

I still vividly remember that day when I was travelling by bus from Srivilliputhur to Madurai. As a salesman in the medical field, I had taken orders from shops in Srivilliputhur and was heading to Madurai in a Tamil Nadu government bus operated by the Kattabomman Corporation. It was summer, and the bus was already full. When I boarded, the only seat available was the one behind the driver, next to the engine.

It was already a hot day, and to make matters worse, the driver was going unusually slowly, and there wasn’t enough ventilation in the bus. Several passengers murmured and complained to the conductor, but nothing changed. The driver kept driving slowly.

Suffering from the heat wave coming from the engine side, I ended up writing a song on the blank front page of my order book. When I got down at Madurai, I tore out the page, folded it small, and walked up to the driver after he got off the bus. I handed him the paper and said, “Thanks for bringing us safely to Madurai. I wrote this poem to appreciate your driving.” Then, without waiting for a reaction, I quickly walked away and boarded another bus that was about to leave for Trichy—I didn’t want to face his possible anger! The sense of humour in that poem helped me endure the heat and discomfort of that ride on a scorching summer day.

Kattabomman was a minor king from Tirunelveli who fought bravely against the British. According to legend, he was known for his courage and swift actions in battle. Ironically, the bus that bears his name moves very slowly—and that contrast is what inspired me to write the poem teasing the driver.

मन की पुकार ३: ज़रा तेज़ चलऽ!

कट्टाबोम्मा, ओ कट्टाबोम्मा,
ई बस हऽ कि बैलगाड़ी?
खट–खट कइसे रेंग रहल बा,
ना हवा, ना बा ताज़गी सारी!

कहेलें तोहरे नाउँ वीर बा,
पर चाल देख, बिलकुल ढीला बा!
ऐसे चलबऽ, तो रस्ता कटे के बदले,
समय रेत जइसन हाथ से फिसल जाई बा!

कोस कई बाकी बा अबहीं,
घर पहुँचे के बा जल्दी–जल्दी।
अगर देरी भइल तऽ समझऽ,
प्रिया के ग़ुस्सा गारंटी में मिलऽ।

प्रिया अगर मूँह फुलइली,
त मने–मनोव्वल में खच पड़ जाई।
ए महिना के आखिरी में,
पइसा कहां से आइबऽ भाई?

(Srivilliputhru से मदुरै तक की यात्रा में लिखा गया, 1976 या 1977)

मन की पुकार: 3

जब मैं एक विक्रय प्रतिनिधि (सेल्स रिप्रेज़ेंटेटिव) के रूप में कार्य कर रहा था, तब एक बार मैंने तीव्र गर्मी के मौसम में श्रीविल्लिपुथुर से मदुरै तक कट्टाबोम्मन ट्रांसपोर्ट की बस में यात्रा की। बस चालक बहुत धीमी गति से वाहन चला रहा था, और सभी यात्री गर्मी व हवा के अभाव में परेशान होकर बड़बड़ा रहे थे। उसी परिस्थिति में इस कविता ने जन्म लिया।

2. सरल संस्कृत संस्करण (Simple Sanskrit Version)

मम मनसः स्वरः ३ — शीघ्रं याहि

कट्टबोम्म, हे कट्टबोम्म,
यन्त्रं तव गाम्यते मन्दम्।
वायोः विना वयं क्लिश्यामः,
कृपया शीघ्रं नय वाहनम्।

नाम तव वीरकट्टबोम्मनः,
गच्छसि तु यथा वृषयानम्।
एवं यदि यास्यसि सर्वदा,
कालः नष्टः भविष्यति।

दूरं मार्गं गन्तव्यमस्ति,
समये गृहे आगन्तव्यम्।
यदि न आगच्छेयं समये,
प्रियया क्रोधः भविष्यति।

यदि सा क्रुद्धा भवति,
तर्हि व्ययं करणीयं स्यात्।
वयसि मासस्य अन्ते चेद्,
धनं नास्ति, किं करिष्यामि?

(श्रीविल्लिपुथुर्–मधुरायाः यात्रायां रचितम्, १९७६–७७)

Song 4

மனதின் குரல் 4: இன்னும் உறங்காதீர்

செவ்வொளி கதிர் பரப்பி செங்கதிரோன் வந்தான்
நல்லொலி புவிக்குரைத்தே புள்ளினம் விழித்தன

ஒளி-ஒலி உணர்வில்லாமல் உறங்குகின்ற உலகுலோரே
இவ்விதம் வாழ்வு சென்றால் எவ்விதம் உய்வீர் சொல்?

இயற்கையின் ஆட்சியிலே எங்குறக்கம் இல்லை காண்
பூக்கின்ற மலர்களிலும், பாய்கின்ற நதியினிலும்,

வீசிடும் தென்றலிலும், வெவ்வேறு காட்சியிலும்,
இளமைத் துடிப்புடனே இயற்கை அன்னை நகைக்கிறாள்

ஆறறிவு பெற்றேமென்று அறற்றுகிறீர் பெருமையுடன்
ஓரறிவு புல்லுக்குள்ள உணர்வுதான் உமக்கும் உண்டோ?

காலைப் பொழுதினிலே பனிநீரால் தனைக்கழுவி,
காத்திருக்கும் ஆவினிற்கே மனமகிழ் உணவாக

சோர்ந்து சோர்ந்து படுத்து உறங்கி யாது சுகம் கண்டீர்?
சொல்லும் ஒரு பயனுண்டோ உம்மால் இவ்வுலகினிற்கே?

படைத்தோனும் உயிரையெல்லாம் பயனின்றிப் படைப்பதில்லை
பகர்கின்றீர் பல பொய்கள் பாழுமிச் சோம்பலுக்கே

இன்னும் உறங்காதீர்! எழுவீர் துடிப்புடனே
செய்வீர் உன் தொழிலை, செய்யும் முறையுடனே

எழுதிய ஆண்டு: 1974 அல்லது 1975
இடம்: திருச்சி

பொதுவாக இந்தியாவில் வீடுகளில் காலையில் அதிக நேரம் தூங்க அனுமதிக்க மாட்டார்கள். இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் — சூரியன் உதிப்பதற்கு முன் — எழுந்திருப்பது நல்லது என்பது பலருடைய நம்பிக்கை. இது ஒரு அளவு உண்மையும் கூட. ஆனால் இன்றைய காலத்தில் இதை பலர் கடைபிடிக்கவில்லை. அதே சமயம், இன்னும் பலர் இந்தியாவில் இதைப் முழுமையாக கடைபிடித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.  நாங்கள் பள்ளியில் படித்த காலங்களில், ஒரு நாளும் காலையில் நீண்ட நேரம் தூங்க என் பெற்றோர் அனுமதித்ததே இல்லை. விடுமுறை நாட்களிலும், சூரியன் உதித்த பிறகு தூங்க அனுமதிக்க மாட்டார்கள். “ஒரு நாளும் விட்டுவிட்டால், அது வழக்கமாகிவிடும்” எனக் கூறி எழுப்பிவிடுவார்கள். உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மட்டுமே, அதிக நேரம் தூங்குவதற்கு அனுமதி இருந்தது. இது பற்றிய ஒரு பாடல்.

4 Don’t sleep further

The Sun has come spreading his red rays

The birds also woke up giving good news to the world

But Oh! the people of the world, you are still sleeping unaware of both light and sound.

How will you make progress if you continue to live like this?

There is no laziness in nature, you see it yourself

Mother Nature laughs with youthful spirit

In the blossoming flowers and flowing rivers

And in the gentle breeze and other beautiful sceneries

You brag much by saying that you have six senses

But do you have the intellect even that of the grass which has only one sense?

It will be ready by washing in the early morning due

And will wait joyfully as the fodder for the cattle

What benefit have you found by sleeping like this?

Tell me even the one thing that you contributed to this world

Creator never created anything without any purpose

But you give so many lame excuses for your laziness

Don’t sleep further but get up with much enthusiasm

And do your work in a proper manner.

1974 or 1975-at Trichy

In general, in India, elders don’t allow children to sleep late in the morning. We were expected to wake up before sunrise. When we were in school, we were never allowed to sleep in, not even on holidays. Only when we were unwell were we permitted to get some extra rest.

मन की पुकार ४: अब तो उठ जाओ!

(अवधी-बोजपुरी लोक लहज़ा में)

लाली ले के पूरब से, सुरजवा अब चमक गइल,
कूजन करत पंछियन संग, धरती पर संदेश गइले।

अबहियों काहे सोवत बाड़ऽ, अन्हरिया में, बिन ध्वनि-बाती?
एसे जइबऽ जिनगी भर, बतावऽ, उन्नति कइसे होई साथी?

नेकर देखऽ, नेचर कइसे, हरदम जागल रहेला,
फुलवा मुस्काइ के फूटेला, नदिया गावत बहेला।

थरथर बयारवा नाचत बा, नज़ारा बदलत रहेला,
माई-प्रकृति जवानी में, सगरी धरती संवारत रहेला।

तू कहेलऽ, हमार बुद्धि छै, छै इन्द्रियन के अभिमान,
घास के इक बूटा के, सेंस बा, उ तजुर्बा बा तोहार कहाँ?

भोर भिनसहरे ओसवा से, आपन तनवा नहइले,
खुश हो के मवेसियन खातिर, खुद के भोजन बनइले।

कबले यूँहीं लोटब-पोटब, सुस्ती में मजा कहां बा?
ए दुनिया के तू का दीहलऽ, ईहें पूछे के सवाल बा।

रचइया व्यर्थ ना बनावेला, कवनो प्राणी या जीवन,
फिर काहे झूठ तानऽ बारंबार, ढील-पील के बहाना बनऽ?

अब त छोड़ सुस्ताई के, जोश में भर उठऽ, जागऽ!
अपना काम के सम्हारऽ, जिम्मेदारी से भागऽ!

Written in 1974 or 1975 — at Trichy

भारत में प्रातः देर तक सोने की अनुमति आमतौर पर नहीं दी जाती।
अधिकांश लोग मानते हैं कि रात को जल्दी सोकर, सुबह — सूर्योदय से पहले — उठ जाना अच्छा होता है। यह मान्यता कुछ हद तक सच भी है।

हालाँकि, आज के समय में बहुत से लोग इसका पालन नहीं करते। फिर भी, अब भी बहुत से लोग भारत में इस नियम का पूरी तरह पालन करते हैं।

जब हम स्कूल में पढ़ते थे, तब मेरे माता-पिता ने मुझे कभी भी सुबह देर तक सोने की अनुमति नहीं दी। छुट्टियों के दिनों में भी, सूरज निकलने के बाद सोने की इजाज़त नहीं थी।

वे कहते थे, “अगर एक दिन भी छोड़ दोगे, तो वह आदत बन जाएगी,” और इस तरह जगा देते थे।

सिर्फ तब ही देर तक सोने की अनुमति मिलती थी जब स्वास्थ्य ठीक न हो।

यह गीत उसी अनुभव से जुड़ा हुआ है।

मनसः स्वरः ४ — न निद्र्यध्वं भूयः!

उदितः सविता रक्तांशुः, दीप्तिं विकीर्णवān पुनः।
प्रकृतिं प्रतिगायन्ति पक्षिणः, शुभवार्ता जगत्तले॥१॥

शब्दरहितं, तेजरहितं, निद्रां युष्माकं कः बोधयेत्?
एवं चेत् जीवितं याति, कथं मोक्षः, कथं गतिः?॥२॥

नास्त्यलंघनं प्रकृतेः कर्मणि, पश्य साक्षिणं जगत्—
स्मेरं वदनं प्रकृतेर्मातुः, यौवनशक्त्या संपृक्तम्॥३॥

कुसुमेषु विकसत्सु, सलिलेषु प्रवहद्भिषु,
सुगन्धिपवनेषु, विविधदृश्यमण्डलेषु च॥४॥

षडिन्द्रियैर्भवद्भिः गर्वः — अहो!
एकेन्द्रियघटेऽपि चेतना किं युष्मासु वर्तते?॥५॥

प्रभाते हिमकणैः आत्मानं शुद्धीकुरुते तृणम्,
हर्षेण प्रतीक्षते, गवां भोज्यं भविष्यति॥६॥

शयने शयने चालस्येन, कः सुखलाभः लभ्यते?
कीदृशं हि प्रयोजनं, जगत् वः किं प्रयच्छति?॥७॥

निरर्थकं न किञ्चन स्रष्टा सृजति,
तथापि मिथ्यावादः वः, आलस्यकारणेन॥८॥

न निद्र्यध्वं भूयः! उत्तिष्ठत जाग्रत!
कर्तव्यं कुरुत संग्रहेण, सम्यग्‌मार्गेण सततम्॥९॥

Written in 1974 or 1975 — at Trichy

Song 5

மனதின் குரல் 5

மனதின் குரல் – 5. கேள்வி–பதில்

விடையே இல்லாத
கேள்விதான் வாழ்க்கை
வேடிக்கை இதிலே
என்னவென்றால்
கேள்வியே விடையாகக்
கொண்டதே வாழ்வானால்
விடை என்ற ஒன்றும்
வேண்டாத ஒன்றே

29-12-1992, கேகரஹா, ரீவா (ம.பி.)

வாழ்க்கையில் பலமுறை பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதில் பெரும்பாலானவைக்கு நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது. அதே சமயம், நம் கேள்விகளே நமக்கே விடையாக மீண்டும் மீண்டும் வரும். அந்த சூழ்நிலையில், கேள்வியே பதிலாக இருப்பின் தனிப்பட்ட விடைக்கு அவசியம் என்ன?

ரீவா பகுதியில் (மத்திய பிரதேசம்), கேசவ் கிராமத்தில் (கேகரஹா) தங்கியிருந்த போது, சில சமயங்களில் மனம் மிகவும் சலித்தது. சிந்தனையில் பலவித தாக்குதல்கள் ஏற்பட்டன; பல கேள்விகள் அலைமோதின. அப்போது, ஏன் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்ற எண்ணம் மேலோங்கியது. அதே சமயம், சில கேள்விகள் கேள்விகளாகவே தொடரும் என்பதை உணர்ந்தேன். அந்த நாளின் (29-12-1992) நாட்குறிப்பில் இதைப் பதிவுசெய்தேன்:

Voice of the Mind 5

5. Question and Answer

Life is a question
Without an answer.
The wonder in it is—
When the question itself
Becomes the answer,
Then the answer
Becomes unnecessary!

29-12-1992

In life, many questions arise again and again. Yet, for most of them, the answers we expect often elude us. Interestingly, those very questions tend to return to us as the answers themselves. In such moments, when the question becomes the answer, what need is there for a separate one?

 Posted up to this in Paamalai

When I was staying with Keshav in his village (Kekaraha, Rewa, Madhya Pradesh), I found myself wrestling with many questions about life. I often wondered why we don’t receive the answers we expect—why so many questions remain unresolved. At times, I realized that the very questions we ask return to us as their own answers. That led me to reflect: when the question itself becomes the answer, what need is there for a separate one?

With this thought, I wrote the above lines in my diary on 29-12-1992.

५. प्रश्न और उत्तर

जीवन एक प्रश्न है,
बिना किसी उत्तर के।
आश्चर्य इसमें यह है—
जब प्रश्न ही
उत्तर बन जाए,
तब उत्तर
अनावश्यक हो जाता है!

२९-१२-१९९२

मन की पुकार ५ — टिप्पणी (हिंदी में)

जीवन में कई प्रश्न बार-बार हमारे सामने आते हैं। लेकिन अक्सर ऐसा होता है कि जिन उत्तरों की हम उम्मीद करते हैं, वे हमें नहीं मिलते। यह दिलचस्प है कि वही प्रश्न कुछ समय बाद हमें उत्तर के रूप में लौटते हैं। ऐसे क्षणों में, जब प्रश्न ही उत्तर बन जाए, तब किसी अलग उत्तर की आवश्यकता ही नहीं रह जाती।

५. प्रश्नः च उत्तरम्

जीवनं प्रश्नः एव,
अनुत्तरितः।
आश्चर्यं तु एषः यत्—
यदा सः प्रश्नः एव
उत्तरं भवति,
तदा उत्तरस्य
न आवश्यकता अस्ति।

२९-१२-१९९२

மனதின் குரல் 6: அமைதியும் திட்டமும்

உள்ளான அமைதியோடு
உறவாடும் போது
தெளிவான எண்ணம்
சிந்தையை ஆளும்

தடுமாறும் வாழ்க்கையில்
திகையாது முன்னேறும்
தெளிவான திட்டங்கள்
தோன்றி வழிகாட்டும்

29-12-192, Kekaraha, Rewa (M. P.)

பிரச்சனைகள் ஒருவனை ஒன்று தத்துவ ஞானியாக்கும் அல்லது வெளியிலே அனுசரித்துப் போய், உள்ளாக எந்த மாற்றமும் இலாத ஒரு சந்தர்ப்பவாதியாக்கும். ஆனால் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக பிரச்சனையை அணுகும்போது, சரியான திட்டமிடலும் வழியும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

Voice of the Mind 6: Peace and Planning

When we relate
With inner peace,
Clear thoughts
Will rule the mind.

In a life that staggers,
We move forward

without confusion.
Clear plans
Will arise and

guide the way.

29-12-192, Kekaraha, Rewa (M. P.)

Crises always turn a person into either a philosopher or a situationist—someone who merely adjusts outwardly to the demands of the crisis without undergoing any real inward change. For the past three years, at the end of each year, I’ve faced the same kind of mental struggle. And in each of those times, I ended up being more of a situationist than someone who makes strong, decisive steps to overcome the crisis. The result has always been a few days of remorse—not true penitence or repentance.

Today, I faced a similar crisis again. Though I tried to focus on my reading, I couldn’t get far—my mind was too disturbed. But in the midst of that, I wrote this poems.

मन की वाणी ६: शांति और योजना

(Voice of the Mind 6: Peace and Planning)

जब अंतर्मन में हो शांति की बात,
तो संबंधों में भी हो सरलता साथ।
साफ़ विचार करें मन पर राज,
दें जीवन को नई परिभाषा आज।

जब डगमगाए जीवन की राह,
ना हो घबराहट, ना कोई आह।
स्पष्ट योजनाएँ करें मार्गदर्शन,
बनें पथप्रदर्शक हर उलझन में मन।

गीत 6

संकट किसी भी व्यक्ति को या तो एक दार्शनिक बना देता है, या फिर एक ऐसा व्यक्ति जो केवल बाहरी रूप से परिस्थितियों के अनुसार खुद को ढाल लेता है, बिना भीतर कोई वास्तविक बदलाव लाए। पिछले तीन वर्षों से, हर वर्ष के अंत में मुझे इसी तरह का मानसिक संघर्ष झेलना पड़ा। और हर बार, मैं एक परिस्थिति के अनुसार ढलनेवाला व्यक्ति ही बन गया, न कि ऐसा जो साहसी और निर्णायक कदम उठाकर उस संकट से उबरने की कोशिश करे। नतीजा हमेशा यही रहा—कुछ दिनों का पछतावा। यह सच्चा पश्चाताप या प्रायश्चित नहीं था।
आज फिर वैसा ही एक संकट सामने आया। मैंने पढ़ाई पर ध्यान देने की कोशिश की, लेकिन मन बहुत व्याकुल था, इसलिए अधिक आगे नहीं बढ़ पाया। उसी अवस्था में मैंने यह गीत लिखा।

मनसो वाणी ६: शान्तिः योजनाच च
(Voice of the Mind 6: Peace and Planning)

यदा शान्तिः अन्तरात्मनि वसति,
तदा सम्बन्धाः अपि निर्मलाः स्युः।
स्पष्टविचाराः मनसि प्रभवन्ति,
मार्गदर्शकाः जीवनं नेतुम्।

चञ्चलजीवने यदि कम्पनं स्यात्,
न सन्तप्यते, न मुह्यति जनः।
योजनाः स्पष्टाः समुत्थाय तदा,
सङ्कटेष्वपि शोभनं पथं दर्शयन्ति।

Song 7

மனதின் குரல் 7 – இவ்வளவே நீ

போதும் போதும் இந்தப் போராட்டம்
பொழுதெல்லாம் மனதினிலே பேயாட்டம்
எதை நீ காரணம் காட்டினாலும்
இவ்வளவே நீயென்பது அப்பட்டம்

பிறர் மீது பழி போட எத்தனை முயன்றாலும்
நம் மனம் நமக்கு எதிராக நின்றிடும்
சூழ்நிலை எனக் கூறி தப்பிக்க முயன்றாலும்
அதற்குக் காரணம் நாம் எனப் புரிந்திடும்

நம்மில் தொடங்கிய போராட்டம் அனைத்தும்
நம்மோடு தான் இறுதியில் முடிந்திடும்
இதனை ஏற்று செயல்படா வரையில்
நாமின்றி முடிவு வேறில்லை அறியணும்

29-12-1992, Kekaraha, Rewa (M. P.)

நமது பிரச்சனைகளுக்கு பிறரையோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையையோ குற்றம் சாட்டி எந்த பயனும் இல்லை. எத்தகைய பிரச்சனைக்கும் சூழ்நிலையும் பிறரும் ஒருவேளை பொறுப்பாக இருந்தாலும், அதற்கு முதலில் நாம் தான் காரணம் என்பதை புரிந்து ஏற்கும் வரை நமது போராட்டத்திற்கு ஒரு முடிவோ, விடிவோ கிடைக்காது.

Voice of the Mind – 7: It’s All You

Enough, enough of this inner struggle,
My heart is always haunted and in trouble.
Whatever reason you may give or defend,
It’s clear — you are the cause in the end.

Even if you try to blame others all the time,
Your own heart will point to you for the crime.
Even if you blame the situation and walk away,
You’ll realize it’s you who led it that way.

All the fights that begin inside us
Eventually end with us — not others.
Until we accept and act on this truth,
There is no real solution — that’s the proof.

29-12-1992, Kekaraha, Rewa (M.P.)

There’s no use in blaming others or the situation for our problems. Even if the people or circumstances really did play a part, we must first realize and accept that we ourselves are also responsible. Until we understand and accept our own part in the problem, we won’t find any real solution or peace.

मन की वाणी – ७ : सब कुछ तू ही

बस बहुत हुआ ये अंतर्द्वंद्व,
हर पल मन में उथल-पुथल का गंध।
जो भी कारण दे तू बहाने बना,
अंततः दोषी तू ही निकला।

औरों पर दोष मढ़ना चाहे जितना,
तेरा ही मन करेगा तुझसे सामना।
परिस्थितियाँ कहकर भागना चाहे,
आख़िर तू ही कारण पाए।

मन में जो संघर्ष शुरू हुआ,
अंत में भी वहीं समाप्त हुआ।
जब तक इस सत्य को न माने,
समाधान कोई न ठिकाने।

29-12-1992, Kekaraha, Rewa (M.P.)

गीत 7

दूसरों या परिस्थिति को दोष देना हमारे समस्याओं का समाधान नहीं है। भले ही लोग या परिस्थिति सचमुच किसी हद तक जिम्मेदार हों, हमें सबसे पहले यह समझना और स्वीकार करना चाहिए कि हम स्वयं भी इसके लिए ज़िम्मेदार हैं। जब तक हम अपनी भूमिका को नहीं पहचानते और स्वीकार नहीं करते, तब तक किसी भी समस्या का वास्तविक समाधान या शांति नहीं मिलेगी।

Sanskrit Poetic Translation

मनसो वाणी ७ – त्वमेव एषः

अलम्, अलम् अयं अन्तर्युद्धः,
क्षणे क्षणे मनसि भीषणो मुद्धः।
यद्वदसि कारणं, यद्वदसि हेतुम्,
निःसन्देहं त्वमेव नयकृत् एषः।

अन्येषां दोषं यदि आरोपयसि,
स्वयं मनः त्वां प्रति साक्षि भवति।
परिस्थितिं प्रति यद्यपि पलायसे,
स्वयं कर्ता त्वमेव इति जानीयसे।

यं यः सङ्घर्षः अन्तर् आरभ्यते,
स एव अन्ते त्वया संत्यज्यते।
यावत् न त्वं सत्यमिदं गृह्णासि,
तावत् न अस्ति समाधानसि।

29-12-1992, Kekaraha, Rewa (M.P.)

Posted up to this @@@$$$$

Song 8

 Scroll down for English and Hindi translations

 மனதின் குரல் 8. ஐந்தொகை

ஏன்தான் விடிகிறதோ

என்பதே வாழ்வானால்

என்னையும் ஒரு மனிதனாக

ஏன் அவன் படைத்திட்டான்

பகுத்தறிவு பெற்றதினால்

பயனேது நான் கண்டேன்?

படும்பாடு அனைத்தையுமே

பதிவேட்டில் குறித்து வைத்து

ஐந்தொகை பார்க்கத்தான்

அளித்தானோ இவ்வறிவை

29-12-1992. Kekaraha, Rewa, (M.P.)

நம் மனதோடு நமக்கு உள்ள போராட்டத்தபோல வேறு போராட்டம் உலகில் இல்லை. ஆனால் அதில என்ன கொடுமைனா அதற்கான வரவு செலவ நம் மூளையே தணிக்கை செயறதுதான்.

29-12-1992

8. Balance sheet

If we get up from the bed with the thought that

‘Why this day has dawned’

Then why did He even create me as a human being?

What is the use of having a reasoning mind?

Did he give this mind (buddhi)

Only to keep the records of all

The struggles in life

To create a balance sheet for it at the end?

29-12-1992. Kekaraha, Rewa, (M.P.)

The struggle that began in the morning in my mind continued the whole day.  As I tried to reason with those struggles and find solutions to them, I became frustrated. At the end of the evening, I wrote this song.  Did God give the buddhi (mind) to keep the records of all struggles in life and create a balance sheet for it at the end?

मन की वाणी ८ – हिसाब–किताब

जब सुबह उठते ही मन में आए ये सवाल,
“क्यों आया ये दिन? क्या है इसका हाल?”
फिर क्यों उसने मुझे मानव बनाया?
सोचने का वरदान क्यों मुझको दिलाया?

क्या इस बुद्धि का यही है काम?
केवल गिनती करना दुःख और घाव?
जीवन की पीड़ा, हर एक दुखद प्रसंग,
बस लिखा जाए जैसे कोई लेखा-संग?

क्या इस समझ को उसने बस इसलिए दिया,
कि मैं बनाऊँ एक दिन अन्त में एक पंचतिया?

गीत 8

जो मानसिक संघर्ष सुबह से शुरू हुआ था, वह पूरे दिन जारी रहा। मैंने उन संघर्षों को समझने और समाधान खोजने की कोशिश की, लेकिन अंततः मैं निराश हो गया। शाम के अंत में, मैंने यह गीत लिखा। क्या परमात्मा ने यह बुद्धि इसलिए दी है कि हम जीवन के सारे संघर्षों का हिसाब-किताब रखें और अंत में उसका बैलेंस शीट बनाएं?

मनसो वाणी ८ – पञ्चसङ्ग्रहः

यदि प्रातःकाले जागृतः स्यां
चिन्तयन् — “किं हेतुर्दिनागमः?”
तर्हि किमर्थं मानवत्वं दत्तं?
किमर्थं मे बुद्धिम् अधात् सः स्वयम्?

यदि केवलं बुद्धिरियं स्यात्,
जीवितदुःखानां लेखनाय युक्ता।
सर्वं दुःखं पीडाः च संस्मृत्य,
पञ्चसङ्ग्रहे स्थाप्यते यदा किल।

किं नूनं सः बुद्धिम् अयं तस्मै अदात्,
केवलं लेखसङ्ग्रहे स्थापयितुम् अपि चान्ते?

Song 9

22-1-1993 அன்று மாலை மஹரியில் (ரீவா, மத்தியப்பிரதேசம்) தனியே உலாவ போனேன். மீண்டும் ஒரு அழகானமாலைப்பொழுது. அன்று மாலை எழுதிய பாடல்:

மனதின் குரல் 9 இயற்கைப் புகலிடம்

தனித்து நின்றதோர் தாரகை

தழலென சென்றான் கதிரவன்

புகலிடம் தேடிப் புள்ளினம் சென்றிட

புல்லெரித் தெழுந்தது என்மனம் மெள்ள

ஆஹா! இயற்கையின் அற்புதக் காட்சியை

ஆண்டவன் அருளிய அளவிலா மாட்சியை

எழுத்தில் வடித்திட எண்ணவும் முயல்வது

என்மன மூடமதியின் துணிவது

பரபரப்பான வாழ்வே நமது

பற்பல காரணம் இதற்கும் உள்ளது

ஆயினும் சில கணம் அமைதி வேண்டின்

அண்டிடு இயற்கை மடிதனில் புகலிடம்

22-01-1993, Mahari, Rewa, M. P.

 9 Nature as the refuge

A star stood alone in the sky

The Sun went down with red colour

As the birds went back to the nest

My heart began to stir slowly

Oh, the beauty of the nature

The best gift of God!

How foolish it on my part

To write it down in words

We live in hurry

There are many reasons for this

But if you really seek some peace of mind

Take refuge in the lap of Mother Nature

22-01-1993, Mahari, Rewa, M. P.

One of my favourite places, particularly for evening walks, is the river side in Mahari (Shashkant Dube’s village).  Both sides of the river have plenty of trees.  As it is an interior village, there won’t be any outside disturbance.  As village people almost went back to their home, there won’t be any activity also in the fields, next to the river side.  As I always prefer to go for an evening walk alone to enjoy nature, I find that this place is the best not only to enjoy the nature, but also find some inner peace.  Particularly when we see the lonely star in the sky with the Sun set, birds returning back to the nest and also the cool winter evening—what to say.  No need to document further that experience.

गीत 9

मेरी पसंदीदा जगहों में से एक, खासकर शाम की सैर के लिए, महरी (शशिकांत दुबे का गाँव) का नदी किनारा है। नदी के दोनों ओर बहुत सारे पेड़ हैं। चूंकि यह एक आंतरिक गाँव है, वहाँ बाहरी हलचल नहीं होती। जब गाँव के लोग अपने घर लौट जाते हैं, तो नदी के किनारे के खेतों में भी कोई गतिविधि नहीं होती। मैं अक्सर अकेले ही प्रकृति का आनंद लेने के लिए शाम की सैर करना पसंद करता हूँ, और मुझे लगता है कि यह स्थान न केवल प्रकृति का आनंद लेने के लिए बल्कि कुछ आंतरिक शांति पाने के लिए भी सबसे अच्छा है। खासकर जब आकाश में एक अकेला तारा दिखाई देता है, सूर्य अस्त हो चुका होता है, पक्षी अपने घोंसलों की ओर लौटते हैं, और सर्दी की ठंडी शाम होती है—तो उस अनुभव को शब्दों में लिखना वास्तव में अनावश्यक हो जाता है।

Song 10

மாலையில பாத்த இயற்கை காட்சி இரவு வெகுநேரம் வரைக்கும் என் மனச விட்டு போகல. அது மறுபடியும் மனசுல வந்தபோ ராத்திரி படுக்கறத்துக்கு முன்ன அதைப்பற்றி எழுதிய பாடல்

மனதின் குரல் 10 இயற்கை இன்பம்

மெல்ல வீசிடும் தென்றல்

மேனியைத் தீண்டும் போது

சொல்லவொண்ணா இன்பம்

சிந்தை முழுவதும் ஆளும்

கள்ளமற்ற சிரிப்பு அது

காமமற்ற உண்மைக் காதல்

அன்னைதன் மென் அணைப்பு

ஆருயிர் நண்பரின் இணைப்பு

பருகப் பருகவே குறையா

பளிங்கு நீரின் ஊற்று

பார்முழுவதும் நிறைந்த

பரமனின் அருள் ஆட்சி

இயற்கை அளிக்கும் நல்ல

இன்பத்திற்கோ எல்லை இல்லை

இதனை உணரா வாழ்வில்

எஞ்சுவதோ வீண் தொல்லை

Mahari, Rewa, M. P. 22-1-1993, 11.45 pm.

22-1-1993, இரவு 11.45-க்கு எழுதிய பாடல்

Mahari, Rewa, M. P. 22-1-1993, 11.45 pm.

10 The bliss of Nature

When the gentle breeze

Touches the body

The bliss that it creates

Will occupy the entire mind

It is a beautiful laugh without any guile

It is the true love without any lust

It is the gentle hug of a mother

It is the wonderful fellowship of a true friend

It is the pure water fountain

Which will never diminish how much we drink from it

It is the rule of God

Which covers the entire universe?

There is no limitation

To the bliss which Nature Gives?

And those who never realizes

Will have only trouble in life

Mahari, Rewa, M. P. 22-1-1993, 11.45 pm.

The impact of the natural scene which I saw this evening continues to remain within me for a long time.  As I was thinking and enjoying it, I wrote this song after 11.30 pm before retiring to bed. The impact of nature is so strong that even after several years I can recall several such wonderful encounters which I had a few times in my life in various parts of our land. The majestic Himalayas, deep forests, particularly the roar of sea in Little Andaman’s remote corner are few such places which I can never forget in my life.

मन की वाणी १० – प्रकृति का आनंद

धीरे-धीरे बहती बयार,
छूती तन को, देती प्यार।
शब्दों से परे वह सुखद एहसास,
मन में भर दे मधुर प्रकाश।

निष्कलंक मुस्कान की छाया,
कामनाओं से रहित सच्चा माया।
माँ की ममता का कोमल आलिंगन,
सच्चे मित्र का स्नेहपूर्ण संगम।

पारदर्शी जल का झरना बहता,
जितना पीओ, उतना ही कहता।
ईश्वर की कृपा का यह विस्तार,
भर दे जीवन में अपार उपहार।

प्रकृति का यह अनुपम दान,
जिसका नहीं कोई भी मान।
जो न समझे इस सुख की बात,
उसके जीवन में केवल आघात।

गीत 10

आज शाम को मैंने जो प्राकृतिक दृश्य देखा, उसका प्रभाव मेरे भीतर बहुत देर तक बना रहा। उसी को सोचते और उसका आनंद लेते हुए, मैंने रात 11:30 बजे के बाद, सोने से पहले यह गीत लिखा। प्रकृति का प्रभाव इतना गहरा होता है कि कई वर्षों बाद भी मैं कुछ ऐसे अनुभवों को याद कर सकता हूँ जो मैंने अपने जीवन में कुछ खास जगहों पर महसूस किए। जैसे—भव्य हिमालय, गहरे जंगल, और विशेष रूप से लिटिल अंडमान के एकांत कोने में समुद्र की गूंजती हुई गर्जना—ये सब जीवनभर न भूलने वाले अनुभव हैं।

🌿 Sanskrit Poetic Translation

मनसो वाणी १० – प्रकृतेः सुखम्

शान्तया वातया स्पृष्टं तनुं,
सुखं यत् वर्णनातीतं मनः पूर्णम्।
निर्मलस्मितं कामरहितं च,
मातृस्नेहं सख्यं च निर्मलम्।

पारदर्शकं जलधारया,
पानं कृत्वा न क्षयं गच्छति।
ईश्वरस्य कृपायाः प्रसारः,
विश्वं व्याप्य सुखं वितरति।

प्रकृतेः एषः अनुपमः दानम्,
यस्य न अस्ति सीमाः कदाचन।
यः न जानाति एतत् सुखम्,
तस्य जीवनं दुःखमयं भवति।

மனதின் குரல் 11. சாரமற்ற தத்துவம்

சிற்றின்பம் பேரின்பம் என்று
சொலில் வித்தைகள் காட்டி
செய்திடும் செயலெல்லாம்
சாரமற்றுப் போனால்
அள்ளி உதிர்த்த தத்துவம்
அத்தனையும் செத்த வித்தே

24-1-1993, Mahari, Rewa [M.P]

நடமுற வாழ்க்கையைப் பார்க்காம வெறும் வறட்டு தத்துவம் பேசுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. மத்தவங்க வாழ்க்கையை வெறும் தத்துவமா பார்த்து பேச ஆரம்பிச்சா, நான் அதைப் பற்றிப் பேசுவதையே விட்டுடுவேன்.

Voice of the mind 11. Philosophy Without Essence

Calling small joys as great delights,
They play tricks with words so bright.
If all the deeds they do in life
Turn out hollow, lacking worth—
Then all the wisdom they have shared
Is but dead seeds scattered on earth.

24-1-1993, Mahari, Rewa [M.P]

Mere philosophical talk or writing that doesn’t reflect in real life will remain like husk without rice. When people speak philosophically, disconnected from the realities of life, I tend to avoid such conversations. I prefer to stay grounded and focus on the practical needs of life—especially when talking with others.

மனதின் குரல்  12. தனிமை

தனிமை என்ற ஒரு நிலை
தரணியில் அல்லவே புதுமை
தனித்து வந்ததே நம் நிலமை
இது தவிர்க்க முடியாத உண்மை

சுற்றம் சூழல் எனப் பலரும்
சூழ்ந்து நம்மை நின்ற போதும்
தனிமை என்பதே தவிர்க்க முடியாத
தகைசான்ற ஒரு நிலமை

துணிவு கொண்டு அதை ஏற்றால்
தொடர்ந்திடாது உன்னைத் துன்பம்
தயங்கியே பின்னடைந்தால்
தவிர்க்க முடியாது அதை என்றும்

தாய் தந்தை நற்தாரம்
தகைசான்ற நண்பர் அன்பர்
உரிமை கேட்பார் உன் உறவில்
உதவ வாரார் உன் நிலையில்

யாரும் வாரார் உதவ உனக்கு
எதிர்பார்ப்பதும் வீண் கணக்கு
யாருக்கும் உள்ள ஒரு நிலை
ஏற்றுக் கொள் இந்த உண்மை

மிரண்டிடாதே அதைக் கண்டு
மேற்கொள் அதனை இன்று
பயந்தவன் அதற்கு அடிமை
வென்றவன் அடைவான் வலிமை

27-1-1993, Mahari, Rewa, M.P.

‘தனிமை’ என்ற பாடலின் பின்னணியை புரிந்து கொள்ள 24-1-93ல் எழுதப்பட்ட டைரியைப் படிக்க வேண்டும். அன்று மாலை உலாவச் சென்றபோது மிகத் தீவிரமாக தனிமையை உணர்ந்தேன். அனைத்தையும் உதறி எங்காவது போய்விடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. இது புதிதான அனுபவமல்ல. பல முறை வந்துள்ளது. ஆனால் டைரி எழுதுவதால் அந்த எண்ணம் ஓரளவு தணிகிறது. ஆனால் அந்த நாள் மாலை, அந்த உணர்வு ஒரு கவிதையாக மலர்ந்தது. மாலை 6.00 மணி.

மனிதன் ஒரு சமுதாய உயிரினம். ஆகவே சமுதாயமில்லாமல் மனிதன் வாழ முடியாது. முற்றும் துறந்த துறவியும் சமுதாயமில்லாமல் துறக்கவும் முடியாது, வாழவும் முடியாது. ஆனால் சில நேரங்களில் நம் மனம் தனிமையை நாடும். என்னைப்போல தனிமையை நாடும் ஒருவருக்கு, அந்த எண்ணம் அடிக்கடி வருவது இயல்பே. அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான் இந்தப் பாடல் எழுதப்பட்டது. அதேசமயம், பிறப்பிலேயே தொடங்கிய உறவுகள், மரணத்துக்குப் பிறகும் தொடரும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒரு பாடலை வைத்துப் பார்த்து ஒருவரின் கொள்கையைக் கணிக்க முடியாது. ஒவ்வொரு பாடலும் அதற்கான சூழ்நிலையிலிருந்து உருவாகிறது.

27-1-1993, Mahari, Rewa, M.P.

Voice of the mind 12. Loneliness

The state called loneliness
Is not something new on earth.
We came alone into this life—
A truth we cannot escape or dearth.

Even when people surround us
As relatives, friends, or crowd,
Loneliness is still a noble state—
A truth we must accept aloud.

If we accept it with courage,
Sorrow won’t follow you for long.
But if you hesitate and run away,
You’ll be chained to it life-long.

Mother, father, beloved spouse,
Dear friends and those who care—
May demand their rights in your bond,
But not stand by you in your despair.

No one may come to help your need,
Expecting so is just a dream.
It’s a state that all must face—
So accept this truth supreme.

Don’t be shaken when you see it,
Embrace it boldly today.
The one who fears becomes its slave,
But the one who wins walks the brave way.

27-1-1993, Mahari, Rewa, M.P.

Man is a social being, and we cannot survive without society. Even a sannyasi cannot live or practice renunciation without some kind of society. Yet, at times, the heart longs to be alone. As a recluse myself, such thoughts often arise. This song was written in one such moment.

At the same time, I strongly believe that we are born into relationships and that they continue even after death. Therefore, we should not judge a person based on just one poem or piece of writing. Every poem has its own background, and only the situation gives shape to its theme.

மனதின் குரல் 13. தன்னம்பிக்கை

பாதுகாப்பதாக எண்ணியே
பயிரை சற்று வறுத்து

பக்குவமாக நிலத்தை உழுது
பாங்காக விதைத்தாலும்

முளையாங்கே வந்திடாது
மூடனே நீ அறிந்திடுவாய்

கட்டுப்பாடு எனச் சொல்லி
கெடுபிடிகள் பலவும் அமைத்து

பிள்ளையை வளர்த்திட்டாலே
பயன் அதில் கிடைத்திடாது

தன்னம்பிக்கை ஊட்டியே
தகுந்தபடி வளர்த்திட்டாலே

தகைசான்ற குடிமகனாய்
தரணியிலே திகழ்ந்திடுவான்

கண்டிப்பற்ற அன்போ என்றால்
காலமெல்லாம் நிலைத்திடாது

அன்பற்ற கண்டிப்போ என்றும்
அரிதாமே ஜீரணிக்க

அடிக்கின்ற கைதான் அணைக்கும்
அணைக்கின்ற கையே அடிக்கும்

அறிந்து அடவேண்டும் பிள்ளை இதை
அனுதின வாழ்வில் முன்னேற

January 1993, Rewa

குழந்தையை சரியாக வளர்க்கணும்னு பேர்ல, ஒரு தந்தை அதைக் கடுமையான கட்டுப்பாட்டுடன், உருட்டி மிரட்டி வளர்ப்பதைக் கண்டேன். இதைப் பற்றிப் பேசியதுக்குப் பிறகு தான் இந்தப் பாடலை எழுதினேன்.

Voice of the mind 13. Self-Confidence

If you fear and dry the seed
To keep it safe and sound,
Though you till and sow with care,
No sprouts will break the ground.

The foolish will not understand
Why the seed won’t ever grow.
Too many rules and harsh controls—
A child can’t flourish so.

If you raise your child with trust,
Feeding self-belief each day,
He’ll grow to be a noble soul,
And shine in life’s broad way.

Love without firm boundaries
Won’t last through passing time.
Discipline without love at all
Is hard to swallow—almost a crime.

The hand that hits may later hug,
The hand that hugs might strike too.
The child must learn this truth in life,
To grow and wisely move through.

January 1993, Rewa, M. P.

One of my shishyas began raising his children in a highly regimented way, all in the name of discipline. I had observed this for a long time. But since I was single and had no children, I didn’t feel qualified to advise him directly. However, during one of our conversations, I spoke about the difference between discipline without love and love without discipline—and how both should go hand in hand. Love without discipline becomes mere affection. Discipline without love turns into regimentation. After sharing this with him, I continued reflecting on it, and this song emerged. Just like we cannot fry a seed in the name of preservation, we cannot raise children through fear and control.

மனதின் குரல்  14. விதைப்பும் அறுப்பும்

விதை ஒன்று போட
செடி வேறு வாராது
வேடிக்கை அல்ல இதுவே
வீணான எண்ணங்கள்
சிந்தையில் நிறைந்தாலோ
விளைவது நாசமதுவே
சொல் ஒன்று செயல் ஒன்று
கொண்டதே வாழ்வானால்
கேவலமாகும் அதுவே
திடமான கொள்கையும்
தெளிவான எண்ணமும்
உயர்த்திடும் உன்னையே

January 1993, Rewa, M. P.

நம்மிடம் உள்ள குறைகளை மத்தவங்க எடுத்து காட்டினா, திருத்திக்க முயற்சிக்கணும். ஆனா அதே சமயம், நாம நம்புகிற கொள்கையில உறுதியும் இருக்கணும். இல்லாட்டா எல்லாரும் சொல்வதற்கே உடனே தலைய ஆட்டிகிட்டு வாழ வேண்டியிருக்கும்.

14. Sowing and Reaping

If you plant one kind of seed,
Another plant will not grow.
This is no joke or trick—
It’s the truth you ought to know.

When your mind is full of waste,
Only ruin is what you’ll gain.
If your words and actions differ,
Your life will go in vain.

Strong values and clear thinking
Will lift you high each day.
With honesty and clarity,
You’ll find the wiser way.

January 1993, Rewa, M. P.

While we should be open to correction when someone points out our flaws, we must also hold strong personal convictions—especially when expressing our views. Otherwise, we’ll end up wavering with every opinion around us. Someone once said, “A great person holds conviction, while a small person clings to opinion.” Conviction may even cost us our life, but opinion will only cause some temporary discomfort.

15. இயற்கையின் இந்திர ஜாலம்

இந்திர ஜாலம் புரிகிறாள்
இயற்கை நங்கை அந்தி நேரத்திலே
என்னதான் அவள் கலைவண்ணம்
ஏதுதான் அவள் கைத்திறனோ

எங்கு நோக்கினும் அவள் இளமை
ஏங்க வைக்கும் ஒரு மென்மை
அள்ளித் தழுவிடும் போது
ஆனந்தம் ஒன்றே மேலோங்கிடுது

காமமல்ல இவ்வுணர்வு
மெய்க் காதலாம் அந்நினைவு
காத்து நின்றாள் அவள் பாதம்
கடைக்கண் அருள்வாள் அவளும்

10-03-1993, மஹரி, ரீவா, மத்திய பிரதேசம்

மீண்டும் ஒரு அருமையான மாலைப்பொழுது. வசந்த கால மாலை என்பதால் மிக இனிமையாக இருந்தது. இன்று சாயங்காலம் நதிக்கரைக்கு சென்றபோது, பார்த்த காட்சியின் தாக்கத்தால் இந்தப் பாடல் எழுதப்பட்டது.

15. Nature’s Magic

Nature plays a magic show
At the quiet hour of dusk.
What art she holds in color and light!
What skill in every brush!

Wherever I look, she’s youthful and soft,
A beauty that makes hearts yearn.
When she embraces all around,
Pure joy begins to burn.

This feeling is not desire,
But true love’s gentle flame.
She waits with grace, and in the end,
Even her glance is a gift and name.

Mahari, Rewa [M. P. ] 10-3-1993.

 It was another beautiful evening in Mahari, along the same riverside where I usually go for a walk. It was the Vasant (spring) season in North India. The harsh winter had passed, and a gentle coolness filled the air. Captivated by the beauty of that evening, I wrote this song as an expression of the bliss I experienced.

16. வராத பிரச்சனை

வராத பிரச்சனையை
வீணே கற்பனைத்து,
வருந்தி வருந்தியே
நிகழ்கால நேரத்தை
வீணாகச் செலவழிக்கும்
பேதையான மந்தரே,
வரும்போது பார்க்கலாம்.

நிகழ்கால நேரத்தில்
பொன்னான நேரத்தை
புத்தியாய் செலவழித்து,
பெறுவீர் ஞானமதை —
பயனுண்டு அதனாலே.

என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நேரத்தையும் மையமாக வைத்து வாழ்ந்தால்தான் நம்மால் வாழ்க்கையைச் சரியாக வாழ முடியும்.
பலர்போல் நானும் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படுகிறேன்; எதிர்காலத்தை நினைத்து பல சந்தேகங்களோடு வாழ்கிறேன்.
அப்படியிருந்தாலும், அன்றாட வாழ்க்கையை மையமாக வைத்து வாழ்வதே சிறந்தது என்ற கொள்கையைப் பின்பற்றி வாழ முயற்சிக்கிறேன்.

1992

16. The Trouble That Never Came

Why fret for troubles
That never arrive?
Why weave vain fancies
And waste the golden hours
Of the living present?

O foolish hearts,
Let tomorrow’s load
Wait for tomorrow’s strength.

In the hour that is yours,
Spend wisely its precious gold,
And win the jewel of wisdom—
Its fruits shall never fail.

1992

This is one of my favourite principles: try to live in the present.
Although I cannot follow it perfectly—since I too experience anxiety about the future and regrets about the past—I still make a conscious effort to overcome them by focusing on living in the present moment.

१६. जो संकट आया ही नहीं

जो संकट आया ही नहीं,
उस पर क्यों मन भरमाओ?
झूठी कल्पना में डूब,
स्वर्ण समय क्यों गँवाओ?

हे मूढ़ मन!
जो कल है, कल ही सँभालो।

जो पल है तेरे पास,
उसको बुद्धि से साधो।
ज्ञान–रत्न पा जाओगे,
फल उसका अमिट पाओगे।

1992

मेरे लिए यह जीवन का एक प्रिय सिद्धांत है—वर्तमान में जीने की कोशिश करना।
हालाँकि मैं इसे पूरी तरह से नहीं निभा पाता, क्योंकि मुझे भी भविष्य की चिंता और अतीत का पछतावा रहता है, फिर भी मैं इनसे उबरने का प्रयास करता हूँ, वर्तमान क्षण को केंद्र में रखकर जीवन जीने की कोशिश करता हूँ।

பசியும் காமமும் இறைவன் நமக்கு கொடுத்த அழகான ரெண்டு வரம். மத்த உயிரினம் இந்த இயற்க நியதி கட பிடிச்சு சிறப்பா வாழுறப்போ மனிதன் மட்டுமே அவற்ற தவறா கையாண்டு இந்த அழகிய வரங்கல சாபமா மாத்தறோம். ஆனால் மனித வாழ்விலே மட்டுமே இந்த ரெண்டும் நெருப்பா அவன எரிக்கிது. சிலர்வாழ்வில புலனடக்கத்தால அந்த நெருப்பு தீபமாக சுடர்விடுது. பலர்வாழ்வில அவை காட்டுத்தீயா மாறி அனைத்தையும் அழிக்கிது. 

மனதின் குரல் 17 நெருப்பிரண்டு

வைத்தானே நெருப்பிரண்டை

வாழ்வென்னும் வண்டியிலே

அடிவயிற்றிலே ஒன்று

அதன் கீழே மற்றொன்று

ஏன்தான் இதை வைத்தான்

என்ன அவன் எதிர்பார்ப்போ

பிள்ளைத் தலை மீது

பெரும்பாரம் சுமந்தார்ப்போல்

தவிக்கின்றார் மாந்தருமே

பாரமவைத் தாங்காமல்

நெருப்பை அணைக்க எண்ணி

நெய்வார்க்கும் மூடன்போல்

முயல்கின்றார் மாந்தரும்

முழுமூச்சாய் தீயணைக்க

உண்மைநிலை உணராமல்

ஊமை கண்ட கனவு போல

உள்வைத்தே வாடுகிறார்

உய்யும் வழி அறியாமல்

பசியும் பாலுணர்வும்

பரனளித்த உணர்வுகளே

பக்குவமாய் கையாண்டால்

பலனுண்டு அவையாலே

இயற்கையின் விதிக்கிசைந்து

இவ்விரு உணர்வுகளை

மிருகங்கள் கூட தம்மில்

முறைமை அனுசரிக்கும்

மிஞ்சிய மோகத்தால்

காமம் எனும் தீயினிலே

கருக்கினால் உடல்தனை

நட்டம் நமதேயாகும்

இல்லற வழிதனிலே

இணைந்தே வழி நடந்தால்

எரிகின்ற தீபமாய்

என்றுமது விளங்கும்

உயிர் வாழ வேண்டியே

உடலின் நலம் பேண

அளவாய் உண்டாலே

ஆயுளும் நீடிக்கும்

ஒருவேளை உண்டால் யோகி

இருவேளை உண்டால் போகி

மூவேளை உண்டால் துரோகி

அதற்குமேல் உண்டால் மனிதனல்ல

வாழ்வதற்கே உணவு வேண்டும்

உண்பதற்கு வாழ்வு அல்ல

பெரும்தீனிக் காரன்

பாரமே உலகினிற்கு

வாழ்வென்னும் வண்டியது

வளமுடன் சென்றிடவே

புலனடக்கம் என்ற அச்சில்

பொருத்திய சக்கரமாய்

இவ்விரு உணர்வுகளும்

இசைவாக உருண்டிட்டால்

உன் வாழ்வு வளமாகும்

உலகிற்கு நீ சுடராவாய்

May, 22 & 24, 1993.

Voice of the Mind 17 – The Two Fires

Hunger and desire—
Two fairest gifts from God.
The beasts obey their law of nature,
And live in peace;
But man alone misuses them,
Turning blessing into curse.

In human life these twin flames
Can blaze into ruin—
Yet in the wise,
Self-control turns fire into a steady lamp;
In the unwise,
It grows into a wildfire,
Consuming all.

Why did He place
These two fires
In the chariot of life—
One in the belly,
One below?
What hope did He hold for us?

Like a child bent low
By a crushing load,
Men stagger,
Unable to bear their burden,
Trying to quench the flame with oil,
Like a fool.

Breathless they strive,
Unknowing the truth,
Wasting away
Like a mute who dreams
Yet cannot speak.

Hunger and passion—
God-given senses;
Used with wisdom,
They bear good fruit.

Nature’s law the beasts respect,
But man, driven by excess,
Burns in lust’s fire
Till the body withers—
Loss is his own.

Walk in the household path with measure,
And the fire will shine
As an eternal lamp.

Food is for living,
Not life for eating.
One meal makes a yogi,
Two a bhogi,
Three a drohi,
More—no man at all.

Gluttons weigh heavy on the world.

Let the chariot of life
Roll on wheels set on the axle of restraint,
And these two forces, moving in harmony,
Will make your life abundant—
And you, a light to the world.

May, 22 & 24, 1993.

मन की वाणी 17 – दो अग्नियाँ

भूख और कामना—
ईश्वर के दो सुंदर वरदान।
जन्तु भी प्रकृति की मर्यादा में,
जीवन को सहज चलाते;
पर मनुष्य ही इनको बिगाड़
वरदान को अभिशाप बनाते।

मानव जीवन में ये दो अग्नियाँ
कभी दीप बनकर जगमगातीं,
तो कभी वनाग्नि बनकर
सब कुछ भस्म कर जातीं।

क्यों रखा उसने
जीवन–रथ में दो अग्नि?
एक उदर में,
एक उसके नीचे।
क्या आशा थी उसकी?

बालक के सिर पर
भारी बोझ जैसा,
मनुष्य डगमगाता है,
बोझ सँभाल न पाता है;
घी डालकर
आग बुझाने को जाता है—
मूर्खवत्।

साँस–साँस लड़ता है,
सत्य से अनजान,
मूक–स्वप्न सा
मन ही मन तड़पता है,
मुक्ति का मार्ग न जानता।

भूख और प्रेम–वासना—
ईश्वर की दी संवेदनाएँ;
संयम से प्रयोग करो,
तो देतीं शुभ फलाएँ।

प्रकृति की मर्यादा पशु भी मानें,
पर मोह में डूबा मनुष्य
वासना की ज्वाला में जलकर
तन नष्ट करता—
हानि अपनी करता।

गृह–मार्ग में संयम से चलो,
तो ये अग्नि दीपक बने
सदा प्रकाश दे।

जीने को अन्न चाहिए,
अन्न के लिए जीवन नहीं।
एक बार खाए—योगी,
दो बार—भोगी,
तीन बार—द्रोही,
उससे अधिक—मानव नहीं।

भोजन–लोभी जगत पर बोझ।

यदि जीवन–रथ संयम के अक्ष पर
इन दोनों चक्रों को समान घुमाए,
तो जीवन समृद्ध होगा,
और तुम जग के दीप बनोगे।

May, 22 & 24, 1993.

Voice of the mind 18: Change of Principle

So many vows I once declared,
Countless choices my heart had dared,
Yet none could reach their destined shore,
A truth I could not hide anymore.

Why this faltering in my way?
So many questions fill my day.
If life drifts on in such a stream,
What will remain of my dream?

Within my heart, a daily war,
Like restless waves upon the shore.
Begging when full, grasping when bare,
This is my mind’s unending snare.

Stand firm upon a chosen creed,
I preach to all — this is our need.
Yet how swiftly in my own life’s span,
I’ve changed my stance to suit my plan.

Like a chameleon shifts its shade,
Seeking safety, my choices swayed.
So many times, I’ve changed my ground,
While others’ blame came all around.

But in self-righteous pride I thought,
That justice dwelt in what I sought.
Yet such a state is what I’ve earned,
By living thus, where lessons burned.

For those who boast of their just mind,
Their “principles” are a gambler’s kind.
To meet their will, they never fear,
To play with schemes both far and near.

They speak of morals openly,
Yet drink from self-righteous vanity.

15-6-1993, Gonda Morning, 5:30, Uttar Pradesh

Changing one’s principle often will bring instability both in life and mind.  Those who try to justify it will become self-righteous. They will even try to convince others by their skillful talk. As I was reflecting on this nature, I wrote this song.

மனதின் குரல் 18 கொள்கை மாற்றம்

எடுத்தத் தீர்மானங்கள் எத்தனையோ

எண்ணினால் கணக்கில் அடங்காது

எதையும் நிறைவேற்ற என்னாலே

இயலாது என்பது முடிவானது

ஏன் இந்த தடுமாற்றம் என்னிலே

எத்தனை கேள்விகள் என் வாழ்விலே

இப்படியே வாழ்க்கையும் கழிந்துபோனால்

எஞ்சுவதும் ஏதுதான் என் வாழ்விலே

உள்ளான மனதின் தினப் போராட்டம்

ஓயாத கடலலை பேயாட்டம்

கெஞ்சினால் மிஞ்சும் மிஞ்சினால் கெஞ்சும்

இதுவே என்மனத் தடுமாற்றம்

உறுதி வேண்டும் ஒரு கொள்கையிலே

உரைக்கின்றேன் உபதேசம் ஊருக்குமே

எத்தனை விரைவாக என் வாழ்விலே

மாற்றினேன் கொள்கையை மனம்போலே

பச்சோந்தி கூட நிறம் மாறும் பல முறை

பாதுகாப்பை மட்டும் என்றும் நாடி

பலமுறை மாற்றினேன் என்ற கொள்கையைப்

பிறர் குறை கூறவே உண்மையில்

என்னை நீதிமானாய் நானெண்ணியே

இதுவரை வாழ்ந்ததால் இந்நிலையே

சுயநீதி உடையோர்க்கு தன் கொள்கையும்

சூதாட்டம் ஆகுமே தினம் தோறும்

தன்சித்தம் ஒன்றையே நிறைவேற்ற

தயங்கிடார் தந்திரம் பல கையாள

தத்துவம் பேசுவார் தாராளமாய்

குடிகாரன் போலவே சுய நீதியில்

15-6-1993, கோண்டா காலை, 5.30,உத்திர பிரதேசம்

கொண்ட கொள்கையில் நாம உறுதியாய் இருக்கணும். அதேசமயம் தேவைப்படும்போது விட்டுக் கொடுக்கவும் தயங்க கூடாது. இதைப்பற்றி மற்றவர்களுடன் சேர்ந்து நமது மனமே நம்மை குறை கூறலாம். அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் வளைந்து கொடுக்காமல் வாழ்க்கை இல்லை;

18  मन की वाणी  सिद्धांत परिवर्तन

कितने वचन मैंने अपनाए,
गिनती में भी न समाए,
पर कोई भी पूरा न हो पाया,
यह सच मैंने मन में पाया।

क्यों ये डगमग राह मेरी?
कितने सवाल हैं जीवन में गहरी।
यदि यूँ ही बह गई ये धारा,
तो क्या बचेगा जीवन हमारा?

मन में रोज़ का संग्राम,
जैसे लहरों का अविराम।
भरकर भी माँगे, खाली भी माँगे,
यही मन के उलझे फाँसें।

एक नीति पर अडिग रहो,
मैं जग को उपदेश कहो।
पर अपनी जीवन यात्रा में,
बदला मैंने नीति क्षण भर में।

गिरगिट जैसे रंग बदलूँ,
सुरक्षा हेतु राह बदलूँ।
कई बार बदल डाली सोच,
दूसरों ने दी तानों की रोश।

पर स्वयं को मैंने धर्मी माना,
यही जीवन का हाल पाया।
जो स्वयं को न्यायप्रिय बतलाएँ,
उनकी नीतियाँ जुए सी जाएँ।

अपनी इच्छा पूरी करने,
नीतियाँ रोज़ बदलने।
धर्म की बातें करते जाएँ,
पर अहंकार में डूबते जाएँ।

15-6-1993, गोंडा सुबह, 5:30, उत्तर प्रदेश

अपनी अपनाई हुई नीति पर हमें दृढ़ रहना चाहिए। साथ ही, आवश्यकता पड़ने पर त्याग करने में भी हिचकिचाना नहीं चाहिए। इस विषय पर, दूसरों के साथ मिलकर हमारा अपना मन भी हमें दोष दे सकता है।
वह सही भी हो सकता है। लेकिन बिना झुके और बिना समझौता किए जीवन नहीं चलता।“

19 Voice of the mind, The Struggle

What are these endless thoughts of the mind,
That wake with man at morning’s first light?
“How will this day pass?”—the same old quest,
Thus begins the heart’s daily fight.

He runs, he sweats, he toils all day,
Yet never finds a moment’s bliss.
He eats, he clothes, he seeks body’s ease,
Yet peace remains what he will miss.

One thing achieved—another desired,
No rest in sight, no mind inspired.
Like a thirsty deer chasing mirage afar,
He wanders the world in illusion’s snare.

No counsel calms his restless heart,
“There is something more”—its secret part.
The golden cure called “Enough” he’s denied,
For his sickness finds no remedy tried.

20-4-1993, Sunowli, [Chakghat] Rewa, M. P.

As I was travelling in a bus from Sunowli after my visit to Keshave’s village (kekaraha) as I was observing the life of people who are busy with so many works to meet the needs of life, I thought that seeking so many needs and pleasure people become worn out by toiling much. But once they understand the secret of content in life, then they too know how to relax. Of course, it was easy to view life as a sannyasi and single person like this. But poems reflect the mood of that time and not giving final thought about life.

19.  மனதின் குரல் போராட்டம்

என்னதான் மனதின் நினைவுகளோ

எழுந்ததும் காலையில் மனிதனுக்கு

எப்படித்தான் செல்லும் இந்த நாளுமே

என்பதே மனதின் தினப் போராட்டம்!

ஓடாய்த் தேய்கிறான் உழைத்துழைத்தே

ஒரு சுகம் இதில் அவன் காணாமலே

உண்ண உடுக்க உடல்சுகம்தேட

ஓடித் திரிகிறான் ஓய்வேதும் இல்லாமல்

ஒன்றினைப் பெற்றபின் மற்றதின் சிந்தனை

ஒன்றிலும் காணாமல் மனதில் நிறைவினை

கானல்நீர் தேடிய மான் போல் வாழ்வெலாம்

கதறியே தொடர்கிறான் உலகினில் மாயையை

எவ்வளவு உரைத்தாலும் ஏற்காது அவன் மனம்

ஏதோ ஒன்று உள்ளது அதன் பின் ரகசியம்

’போதும்’ என்ற பொன்செயும் மருந்து

பெறவில்லை அவன் நோய்க்கு இவ்வரும் மருந்து

20-4-1993, Sunowli, [Chakghat] Rewa] M. P.

ஒரு சமயம் காலையில பேருந்தில போறப்போ காலையிலேயே பலரும் பரபரப்பா பல வேலைகல செய்யறத கவனிச்சப்போ எழுதிய பாடல். [இப்பாடலின் முதல் நான்கு வரிகள் 20-4-1993 அன்று நானும் கேஷவும் சுனொளலியிலிருந்து சாக்காட்டுக்கு (மத்தியப் பிரதேசம்) வரும்போது பஸ்ஸில் எழுதியது. மீதமுள்ளவை 23-6-1993 கோண்டாவில் (உத்திரப் பிரதேசம்)எழுதியது]

19  मन की वाणी:  संघर्ष

क्या हैं ये मन के अनगिन विचार,
जो भोर में जगते इंसान के साथ?
“कैसे कटेगा ये दिन मेरा?”
यही है मन की रोज़ की बात।

दौड़ता, पसीना बहाता दिनभर,
फिर भी न पाए सुख का असर।
खाता, पहनता, तन को सँवारता,
फिर भी न चैन कहीं पर पाता।

एक मिला, तो दूसरा चाहा,
मन को कहीं संतोष न पाया।
मानो मृग मरीचिका के पीछे हिरण,
भटके जग में मोह के चरण।

कितना भी समझाओ—न माने मन,
“कुछ और है”—उसका है गुप्त धन।
“बस” का अमृत न उसको मिला,
उसके रोग का न अब तक सिला।

20-4-1993, सुनोवली, [चकघाट] रीवा, म. प्र.

जब मैं सुनेवली से बस में यात्रा कर रहा था, केशवे के गाँव (केकराहा) की यात्रा के बाद, मैं देख रहा था कि लोग जीवन की ज़रूरतों को पूरा करने के लिए कितने कामों में व्यस्त हैं। इतने सारे सुख-सुविधाओं और आवश्यकताओं की तलाश में लोग अत्यधिक मेहनत करके थक जाते हैं। लेकिन जैसे ही वे जीवन में संतोष का रहस्य समझ लेते हैं, वे भी आराम करना जान जाते हैं।
बेशक, एक संन्यासी और अविवाहित व्यक्ति के रूप में इस तरह जीवन को देखना आसान था। लेकिन कविताएँ उस समय के मनोभाव को दर्शाती हैं, न कि जीवन के बारे में कोई अंतिम विचार देती हैं।

20 Voice of the Mind – Life

What truly is this thing called life?
No matter the path, no matter the strife,
What always remains, without disguise,
Is but a single cheat in life’s guise.

Man lives for self, from birth till end,
Yet finds no joy that can truly mend.
Always in search of something new,
Though all he holds slips from view.

What’s gained is never what he sought,
What’s sought is never what he caught.
Yet still, the struggle will not rest,
Ever chasing the elusive “best.”

Even with a plate of rice in hand,
Brought right before his lips to stand,
One tooth’s slip, one careless bite—
And all is scattered out of sight.

But defeat, he will never own,
He picks the grains, with dust unknown.
Till breath remains, on earth’s broad floor,
This struggle stays—what else is life for?

Gonda, August 9, 1993, 7:00 a.m.

Song 20

As I was reflecting on the struggles in life and the way we continue to face it, not accepting the defeat I wrote this song.

மனதின் குரல்  20 வாழ்க்கை

என்னதான் வாழ்விதுவோ

எப்படித்தான் வாழ்ந்தாலும்

எஞ்சுவதோ என்றுமிதில்

ஏமாற்றம் ஒன்று மட்டும்

தனக்கெனவே வாழ்ந்திட

தலைப்படும் மனிதனுமே

நிறைவேதும் காணாமல்

தேடுகிறான் ஏதோ ஒன்றை

கிட்டியது எட்டவில்லை

எட்டியது கிட்டவில்லை

என்றாலும் போராட்டம்

எப்போதும் ஓய்வதில்லை

கைநிறைய சோறள்ளி

வாயருகில் சென்றாலும்

பல் தட்டிய காரணத்தால்

சிதறியது அத்தனையும்

ஆனாலும் தோல்விதனை

அப்படியே ஏற்காமல்

பொறுக்கி எடுக்கின்றான்

புழுதியது ஒட்டாமல்

நாளும் தொடரும்

நானிலத்தில் உள்ளமட்டும்

வேண்டா இப்போராட்டம்

வேறென்ன செய்திடுவான்

Gonda, August 9, 1993, 7.00

எத்தன போராட்டம் வாழ்க்கையில இருந்தாலும் தோல்வியை அப்படியே ஏற்காம மீண்டும் மீண்டும் போராடுற நம் மோட இயல்பு பத்தி எண்ணறப்ப எழுதிய பாடல். [இப்பாடலின் முதல் எட்டு வரிகள் 9-8-1993மாலை 7.00-மணிக்கு எழுதியவை. மத்தத 16-8-1993 காலையில எழுதி முடிச்சேன்.]

मन की वाणी  २० – ज़िंदगी

क्या है ये जीवन, क्या इसका रंग,
कैसे भी जियो, रहे छल का ढंग।
हर मोड़ पे बस मिलता धोखा,
यही है इसका असली मुखौटा।

अपने लिए ही जीता इंसान,
फिर भी न पाता कोई अरमान।
कुछ और की खोज में रहता हरदम,
हाथ में हो तो भी दूर सा भ्रम।

जो मिला, वो चाहा नहीं,
जो चाहा, पाया कभी नहीं।
फिर भी संघर्ष थमता नहीं,
सपनों का पीछा रुकता नहीं।

हथेली में भरा हुआ चावल,
मुख के पास, बस एक पल,
दाँत फिसला, पल में बिखरा,
सब मिट्टी में जा के मिला।

पर हार को मान न पाता,
धूल झटक, दाना उठाता।
जब तक है साँस, धरती पर,
संघर्ष ही है जीवन का स्वर।

गोंडा, 9 अगस्त 1993, सुबह 7:00 बजे

गीत 20
चाहे जीवन में कितने भी संघर्ष क्यों न हों, असफलता को उसी रूप में स्वीकार न करके बार-बार संघर्ष करने की हमारी मूर्खतापूर्ण प्रवृत्ति के बारे में सोचे बिना लिखा गया यह गीत।
[इस गीत की पहली आठ पंक्तियाँ 9-8-1993 की शाम 7:00 बजे लिखी गईं। शेष पंक्तियाँ 16-8-1993 की सुबह पूरी की गईं।]

Song 21

Another song born from my struggle with my own mind. I can neither live peacefully with it nor simply ignore it. Therefore, I seek a solution to this inner conflict—one that, in the end, comes down to two choices: either to overcome it or to surrender.

21 – Voice of the Mind: Oh My Mind

O Mind, what is thy dwelling state?
Like a cat on the wall thou dost hesitate—
Though well thou knowest the good and the ill,
Yet wanderest thou in thine own will.

Long have I fought thy restless sway,
Till wearied, I let thee go thy way.
Though oft I wash my hands of thee,
Thou return’st to chide and trouble me.

Strange is thy part—unbidden guest,
Yet still I serve thee my very best.
A banquet rich I spread for thee,
And reap but sorrow’s memory.

Without thee I can scarce draw breath,
Without me thou art but lone in death.
Let, then, a solemn pact be made,
Ere ruin on our heads be laid.

No more for rank shall we contend,
For thou and I in one do blend.
Yet when thy will would rule the day,
Think thou upon my plight, I pray.

If thou shouldst spurn with “I refuse,”
Know well, I hold another ruse:
To curb thy pride with all my might,
And, failing—serve thee day and night.

Gonda, Uttar Pradesh – 16-8-1993

Song 21

என் மனதோடு போராடி பலமுறை தோற்கரப்ப எழுதிய பாடல்.

மனதின் குரல் 21 மனமே

மனமே உந்தன் நிலைதான் என்ன?

மதில் மேல் பூனை போல வாழ்கிறாய் நாளும்

நன்றும் தீதும் நன்கறிந்த போதும்

நாடுவது நீயேதோ? புரியவில்லை நாளும்

உன்னுடன் போராடி ஓய்ந்து விட்டேன் நானும்

உன்விருப்பம் போல்செய் உன்பாடு எனக்கென்ன

என்றெண்ணிக் கைக்கழுவ எவ்வளவு முயன்றாலும்

என்னிடமே முறைக்கிறாய். ஏற்றிடவே மறுக்கின்றாய்

வேடிக்கை என்னவென்றால் என் வாழ்வில் நீயும்

வேண்டாத விருந்தினனாக ஆகிவிட்ட போதும்

அழைத்துன்னைப் படைக்கின்றேன் அறுசுவை உணவு

அதன்பின் தவிக்கின்றேன் என்செயல் நினைந்தும்

உன்னையன்றி என்னாலே வாழ்ந்திடவே முடியாது

என்னையன்றி புகலிடம் உனக்குலகில் கிடையாது

எனவே நம்மிடை வேண்டும் ஒரு உடன்பாடு

இல்லையெனில் நம் நிலைமை ஆகிவிடும் பெரும்பாடு

பதவிப் போராட்டம் நம்மிடை இனி வேண்டாம்

நானின்றி நீயில்லை நீயின்றி நானில்லை

உன்னிச்சை போல செயல்படும் போதினிலே

என்நிலை தன்னை நீ சற்று எண்ணி விடு

‘மாட்டேன்’ என்று மறுத்து நீ நடந்தாலோ

மாற்று உண்டொன்று மருந்தாக என்னிடத்தில்

அடக்கி ஒடுக்க உன்னை ஆனமட்டும் முயன்றிடுவேன்

அதில் தோற்றால் உந்தனுக்கு அடிமை ஆகிடுவேன்

கோண்டா, உத்திரப் பிரதேசம்16-8-1993

गीत 21

यह गीत मेरे अपने मन के साथ संघर्ष से जन्मा। न मैं इसके साथ शांति से रह सकता हूँ, न ही इसे अनदेखा कर सकता हूँ। इसलिए मैं इस आंतरिक संघर्ष का हल खोजता हूँ—जो अंत में दो ही विकल्पों में सिमट जाता है: या तो इसे जीतना, या इसके आगे समर्पण करना।

21 – मन की वाणी: हे मन

हे मन! तेरा स्थिर ठिकाना क्या?
दीवार पर बिल्ली-सा डगमगाता सदा।
सद्गुण-दुर्गुण भलीभाँति जानता,
फिर भी अपनी राह ही मानता।

तेरी चंचलता से लड़ा मैं वर्षों,
थक कर छोड़ा तेरे हर हर्षों।
हाथ धोने को कितनी बार बढ़ा,
तू लौट के फिर उलाहना कढ़ा।

अद्भुत है, अवांछित अतिथि बना,
फिर भी भोज तुझे बार-बार दिया।
छः रस परोस के भी मन मेरा,
पीड़ा का ही स्वाद चखा सदा।

तेरे बिना मैं जीवन न जीऊँ,
मेरे बिना तू ठौर न पाऊँ।
आओ, अब एक व्रत हम लें,
वरना विपत्ति में दोनों जलेँ।

न हो अब पद की कोई होड़,
तू मुझ बिन शून्य, मैं तेरे बिन मोड़।
पर जब अपनी इच्छा करे प्रवाह,
सोच ले मेरा भी कुछ चाह।

यदि तू कह दे, “न मानूँगा मैं,”
तो उपाय है मेरे भी हृदय में:
तुझे वश करने को पूर्ण प्रयास,
असफल हो, तो तेरा दास।

गोंडा, उत्तर प्रदेश – 16-8-1993

Song 22

This poem was written in response to an article in India Today (June 15, 1994, pp. 146–152) titled Playing Mixed Doubles, which discussed ‘wife swapping’ in cities. I am against moral policing and respect individual freedom. However, as social beings, we must not tolerate situations where individuals or groups cross the Lakshman Rekha in ways that threaten the very foundations of society.

Voice of the Mind 22 – Lust

O heavy is this worldly life we bear,
A path of sin, of toil and snare;
O Lord, how find we haven here,
Ere all our state be lost past repair?

Lust, wrath, greed, and delusion’s flame,
In endless strife their contests claim;
Strive as one may with earnest heart,
Who, alas, can play that part?

For a moment’s pleasure, men forsake the right,
And plunge their minds in passion’s night;
Unbridled, these “Maakkal” lead astray,
What end awaits their reckless play?

Another’s wife they call their own,
Their own they cast aside, alone;
Like beasts they change their very frame,
What shame shall shroud the human name?

This ruined state must be o’erthrown,
Ere greater loss be widely sown;
Ye lovers of truth, arise and stand,
Ere deeds outrun the guiding hand!

Lucknow – June 15, 1994

Song 22

இந்தியா டுடே என்ற ஆங்கில வார இதழில் [India Today, June 15, 1994, pp. 146-152: Playing Mixed Doubles] தன் மனைவிகளை ஒருவருக் கொருவர் மாற்றிக் கொள்வது பற்றி படித்த போது எழுதிய பாடல்.

 மனதின் குரல் 22 மாக்கள்

பாரமே இந்த உலக வாழ்க்கை

பாவம் நிறைந்ததோர் கடின வாழ்க்கை

ஆருளர் ஐயகோ இதில் கடைத்தேற்ற?

அழிந்திடும் எம் நிலை முற்றிலும் ஆக

காமம், குரோதம், லோபம், மோகம்

கட்டறுந்த நிலையிலே போட்டியிடும் ஆட்டம்

எத்தனை முயன்றாலும் இதை மேற்கொள்ள

யாராலும் முடியாது ஐயோ என் சொல்ல?

கணநேர சுகமே பெரிதென எண்ணி

காமத் தீயில் மனதைத் தள்ளி

கட்டுக்கடங்காமல் இம் “மாக்கள்” போடும்

காமக் களியாட்டின் முடிவென்ன ஆகும்

பிறர் மனைவி தன்னையே பெண்டாள எண்ணி

தன் மனைவி தன்னையே தனியாக பண்ணி

தறிகெட்ட மிருகமாய் தம்மையுமே மாற்றி

தடுமாறும் மாந்தரின் நிலைமை என்ன?

சீர்கெட்ட இந்நிலை மாற்றிட வேண்டும்

சேதம் பெருகும் முன் காத்திட வேண்டும்

நேர்மை விரும்பிடும் மாந்தரே வாரும்

காரியம் கைமீறும் முன் போராட இங்கு

Lucknow, June, 15, 1994 

गीत 22


यह कविता मैंने इंडिया टुडे (15 जून 1994, पृ. 146–152) में छपे लेख Playing Mixed Doubles के उत्तर में लिखी, जिसमें शहरों में ‘पत्नी अदला-बदली’ पर चर्चा की गई थी। मैं नैतिक पुलिसिंग के खिलाफ हूँ और व्यक्तिगत स्वतंत्रता का सम्मान करता हूँ। परंतु, सामाजिक प्राणी होने के नाते, हमें यह भी स्वीकार्य नहीं होना चाहिए कि कोई व्यक्ति या समूह लक्ष्मण रेखा लांघकर समाज की बुनियाद को ही खतरे में डाल दे।

मन की वाणी) 22 – कामोत्तर

भारी है यह सांसारिक जीवन,
पाप-भरित, कठिन पथ-गमन;
हे प्रभु! कहाँ मिले यहाँ शरण,
इससे पहले कि मिटे हमारा जीवन।

काम, क्रोध, लोभ, मोह की ज्वाला,
प्रतिस्पर्धा में करती है हाला;
चाहे जितना करे मनुष्य प्रयास,
कौन निभाए यह कठिन निवास?

क्षणिक सुख को मान अमूल्य,
कामाग्नि में मन को दे धूल;
बंधन-रहित “माक्कल” भटकाएँ,
इस क्रीड़ा का अंत क्या लाएँ?

पर-स्त्री को पत्नी कहें,
अपनी को त्याग अकेली रहें;
पशु-सा बन, रूप बदल जाएँ,
मानव का मान कहाँ पाएँ?

इस भ्रष्ट दशा को बदलना होगा,
हानि के पहले संभलना होगा;
सत्य-प्रिय जन! आओ मिलो,
कार्य बेकाबू हो उससे पहले चलो।

लखनऊ – 15 जून, 1994

Song 23

This reflects a constant struggle in my life. I clearly know my own weaknesses, yet I have never had the strength to overcome them.

Voice of the Mind 23 – The Cancer Within

Strange indeed, the jest I play—
What I in others’ lives survey,
Their faults I strike with scornful tongue,
And loud rebuke from me is flung.

Yet all those flaws in me abide,
Though plain to me, I let them bide;
With careless heart I live my days,
While creeping on, in hidden ways,

Like cancer’s root that spreads unseen,
My very soul those faults unclean
Enslave, and hold in iron chain—
Alas! What words can tell my pain?

Lucknow – 20-6-1994

Song 23

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில தவிர்க்க முடியாத சூழ்நிலையில மத்தவங்க குறைய சுட்டிக்காட்டற சூழ்நில ஏற்படற போதுஅப்புறம் என்கிட்ட உள்ள குறைங்கஎனக்கு பெரிதா தெரியும்.  அப்படி ஒரு சூழ்நிலையில எழுதின பாடல்

மனதின் குரல் 23 பிளவை [Cancer]

இதுதானே வேடிக்கை என்னிலே

எதை நான் பிறர் வாழ்விலே

இருப்பதைக் கண்டு பலமுறை

இடித்துரைத்து அவர் குறையை

வெளிப்படையாகக் கடிந்த போதிலும்

அவை அனைத்தும் என் வாழ்விலே

அப்படியே இருப்பினும் அதுகண்டு

அலட்சியமாக வாழ்ந்திடும் போது

அரிபிளவை போல் படர்ந்து

அக்குறை தானும் அடியேனை

அடிமையாகவே மாற்றிடுதே

அந்தோ என்நிலை என்சொல்வேன்

20-6-1994,  Lucknow

गीत 23

यह मेरी जीवनभर की एक निरंतर लड़ाई है। मैं अपनी कमजोरियों को भलीभाँति जानता हूँ, फिर भी उन्हें जीतने की शक्ति कभी नहीं पा सका।

अंतर का कैंसर

मन की वाणी: 23 – अंतर का कैंसर

अद्भुत है वह खेल निराला,
दूसरों का दोष निकाला;
उनकी कमी पर प्रहार किया,
कटु वचनों से वार किया।

पर वही दोष मुझमें रहे,
देखते हुए भी चुप सहे;
लापरवाही में दिन बिताए,
मन के रोग को न पहचाने।

ज्यों कैंसर की जड़ फैलती गुप्त,
वैसे ही दोषों की शक्ति युक्त,
मुझे बना लें अपना दास—
हाय! कहूँ मैं अपनी त्रास।

लखनऊ – 20-6-1994

Song 24

From morning, my mind was restless with too much inner struggle. As I tried to analyse it, I suddenly began to laugh at myself—and from that moment, this song emerged.

Voice of the Mind 24 – No Time to Strive

Some call life a battle-ground,
Where endless strife and toil abound;
Some call it but a passing show,
A fleeting scene, with naught to know.

Yet time slips by in mere debate,
On what this life might designate;
And in that very strife, we see—
No time is left to strive for me.

Mahari, Rewa, M.P. – 8-11-1994

Song 24

மஹரி மதியம் 12.30.  காலையிலிருந்து ஒரே மனப்போராட்டமாய் இருந்தது. பல முறை குழப்பம்.  சிலமுறை என் நிலையை எண்ணி எனக்குள்ளே சிரித்தேன்.  அப்பொழுது எழுதிய பாடல்;

வாழ்வில ஏற்படற பலவித போராட்டங்கள பத்தி பலரும் பலவிதம் புலம்பினாலும் எது போராட்டம் என்கிறத தீர்மானம் செய்வதே பலருக்குப் போராட்டமா போயிடுது. அத குறிச்சுசிந்திக்கறப்ப எழுதின பாடல்

மனதின் குரல் 24. போராடப் பொழுதில்லை

போராட்டம் என்கிறார்

வாழ்க்கையைப் பலர்

பொழுது போக்கு

என்கிறார் சிலர்

பொழுதும் போனது

இதைத் தீர்மானம் செய்வதில்

(இப்போராட்டம் தன்னிலே)

போராடப் பொழுதில்லை

அதனாலே இனிமேலே

Mahari, Rewa, M.P. 8-11-1994

गीत 24

सुबह से ही मेरे मन में बहुत संघर्ष चल रहा था। जब मैंने इसका विश्लेषण करने की कोशिश की, तो अचानक अपने ही ऊपर हँस पड़ा—और उसी क्षण यह गीत लिखा गया।

मन की वाणी: 24 – संघर्ष को समय नहीं

कोई कहे, जीवन है रण,
जहाँ नित चलें श्रम और घन;
कोई कहे, बस खेल तमाशा,
क्षणभंगुर मेला, सपना भाषा।

पर समय बीत गया यों ही,
निर्णय करते अर्थ सही;
और उसी विवाद में पाया—
संघर्ष को समय न आया।

महारी, रीवा, म.प्र. – 8-11-1994

Song 25

My hope of starting an ashram in Rewa with the help of some disciples turned into disappointment. Then I realised that both expectation and disappointment are essential parts of life—like the two wings of a bird, we too need both to move forward.

Voice of the Mind 25 – What Is Truth

What is the truth in life below—
Is it hope, or is it woe?
If thou dost wait in hope’s fair light,
Deceit shall claim thy blinded sight;

If thou dost fear the snare of lies,
Thou wilt from every trial rise;
Yet hope and fraud alike are bound,
In every life they both are found.

A life from both these free, I say,
Is like a bird whose wings decay.

Mahari, Rewa, M.P. – 8-11-1994

Song 25

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஒரு பறவைக்கு உள்ள இரண்டு சிறகுகள் போல மனித வாழ்விலும் இன்றி அமையாதது. இவை இல்லாம நம்மால் வாழ்வில முன்னேறவே முடியாது.

மனதின் குரல்  25  எது உண்மை

எது உண்மை

இங்கு வாழ்விலே

எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ

எதிர்பார்த்து நின்றால்

ஏமாந்தே போவாய்

ஏமாறுவேன் என்றால்

எதிர்கொள்ள மறுப்பாய்

எதிர்பார்ப்பு ஏமாற்றம்

இவ்விரண்டும் தேவையே

இவையில்லா வாழ்வுமோ

சிறகில்லா பறவையே

Mahari, Rewa, M.P. 8-11-1994

गीत 25

कुछ शिष्यों की सहायता से रीवा में एक आश्रम शुरू करने की मेरी आशा, निराशा में बदल गई। तब मुझे समझ आया कि अपेक्षा और निराशा दोनों जीवन के आवश्यक अंग हैं—जैसे पक्षी के दो पंख, हमें भी आगे बढ़ने के लिए दोनों की आवश्यकता है।

मन की वाणी: 25 – सत्य क्या है

जीवन में सत्य है क्या, बताओ—
आशा है, या धोखा मानो?
यदि आशा के दीप जलाओ,
तो छल के जाल में फँस जाओ;

यदि छल का भय मन में लाओ,
तो हर संघर्ष से कतराओ;
पर आशा और धोखा दोनों,
जीवन के साथी हैं मौन।

इनसे रहित जो जीवन हो,
वह पंख बिना पक्षी-सा हो।

महारी, रीवा, म.प्र. – 8-11-1994

Song 26

I have been reading about Emily Dickinson, the famous American poet, and was struck by the way her reclusive life spoke to me. Today, as I sat alone, gazing out of the window, this poem took shape. For me, sitting quietly in silence is not laziness—it too requires practice. Merely rushing from pillar to post does not make one truly busy. To serve well, one must also cultivate the art of being “still” for a while—something I often try to practice in my own life.

Voice of the Mind 26. Be Still

Through the open window wide,
When I gaze upon the street outside,
It seems to strangers passing near,
That I am chained, imprisoned here.

If they should ask, “Who is confined?”
I’d smile and answer, clear in mind:
“Not I, but the world enslaved,
By chains unseen, yet firmly laid.”

But worldly folk will shake their head,
“Alas, how pitiful,” they said;
Not knowing well their deeper plight,
Blinded by their restless night.

Though walls may lock me in this room,
My thoughts unbound in endless bloom;
On wings they fly where’er they will,
To every land, each silent hill.

The free who wander out of door,
Are burdened still, forever sore;
A weight they carry, day by day,
No words can tell, no tongue can say.

They chase, they run, they laugh, they play,
And waste their fleeting hours away;
Unmindful of their state so grave,
Not knowing yet they live as slave.

To “be still” is not to laze,
Nor sluggish walk in idle ways;
To work with strength, with noble flame,
Be still awhile — and then reclaim.

Mahari, Rewa, 11-11-1994. 11.30 am.

मन्की वाणी  २६. चुप रहो

खुली हुई खिड़की से देखूँ
जब गली के उस पार,
दूसरों को लगता ऐसा,
मानो मैं हूँ जेल के द्वार।

यदि कोई पूछे मुझसे —
“कौन यहाँ है कैद?”
मुस्काकर कह दूँगा मैं —
“दुनिया है बंधन में शेष।”

पर जग के सब लोग कहेंगे —
“हाय! कितना दीन!”
पर उनको क्या है ज्ञात,
उनकी ही है दुःख की बीन।

कोठरी में हूँ भले कैद,
पर मन मेरा उड़ता है;
पंख पसारे स्वच्छंद नभ में,
जहाँ चाहे जाता है।

स्वतंत्र जो बाहर फिरते हैं,
भार सदा ही ढोते हैं;
शब्दों में कह न सकें कभी,
दुख के बंधन रोते हैं।

भाग-दौड़ में दिन बिताते,
खेल-तमाशे करते हैं;
अपने ही बंधन को वे,
कभी न पहचानते हैं।

“चुप रहना” आलस्य नहीं,
न ही काम से पलायन;
बलशाली श्रम करने को भी,
चाहिए यह मौन साधन।

Mahari, Rewa, 11-11-1994. 11.30 am.

मैं हाल ही में अमेरिकी कवयित्री एमिली डिकिन्सन के बारे में पढ़ रहा था। उनकी एकांतप्रिय जीवन-शैली ने मुझे गहराई से आकर्षित किया। आज जब मैं अकेला बैठा खिड़की से बाहर निहार रहा था, तो यह कविता मन में उतर आई। मेरे लिए निस्तब्ध होकर शांत बैठना आलस्य नहीं है—यह भी अभ्यास माँगता है। केवल इधर-उधर दौड़ते रहना ही व्यस्तता नहीं कहलाता। बेहतर सेवा करने के लिए हमें कुछ समय ‘स्थिर’ रहने की कला भी सीखनी चाहिए—और यही कला मैं अपने जीवन में साधने का प्रयास करता हूँ।

26  சும்மா இரு

திறந்த ஜன்னல் வழியாக

தெருவினைப் பார்க்கும் போது

சிறையில் நான் இருப்பதாக

தோன்றும் பிறர்க்கு அப்போது                    1

யாரிருப்பது சிறையில் இங்கு

என்றே என்னை பிறர் கேட்டால்

நானல்ல உலகம் என்றே

நன்கறிந்தே நான் கூறுவேன்              2

ஆனால் உலக மாந்தர்

எந்தன் நிலையை எண்ணி

‘அந்தோ பரிதாபம் எனப்பார்’

அறிந்திடாமல் அவர்தம் நிலையை           3

அறையில் அடைந் திருந்தாலும்

அடைபடாத என் எண்ணம்

சிறகடித்தே பறக்கும் நான்

விரும்பும் திசை எங்கும் செல்லும்            4

சுதந்திரமாக வெளி உலகில்

சுற்றிடும் மனிதர் நிலையும்

சொல்லில் கூறவொண்ணா

சுமையே அவர்க்கு நாளும்                5

சுறு சுறு பென்ற பெயரில்

நாடி ஓடி ஆடி சாடி

நாளையும் வீணில் கழிப்பர்

தம் நிலை உணர்ந்திடாமல்               6

‘சும்மா’ இருப்பது சோம்பலல்ல

சுறுப்பும் வேலை அல்ல

சிறப்பாய் உழைக்க வேண்டுமானால்

‘சும்மாவும்’ இருக்க வேண்டும்                    7

மஹரி, ரீவா, மத்திய பிரதேசம். 11.11-1994, 11.30 am.

 நான் எமிலி டிக்கின்சன் என்கிற அமெரிக்க பெண் பாடகர் பாடல படிச்சிட்டிருந்த போது, அவங்க வாழ்ந்த ‘தனிமை’[recluse] வாழ்க்கை என்ன மிகவும் கவர்ந்தது.  இன்னிக்கு அவங்க வாழ்க்க வரலாற படிச்ச பின்ன, ஜன்னல் ஓரம் அமைதியா உட்கார்ந்த போது எழுதின பாடல்.  என்ன பொறுத்த வரைக்கும் மவுனமா ஒரு வேலையும் செய்யாம அமைதியா [பல மணி நேரம்] உட்கார்ந்து இருக்கறது சோம்பேறித்தனம் இல்ல. அதுவும் கூட ஒருவித வேலைதான். அதற்கு ரொம்ப பயிற்சி தேவ. சும்மா அறக்க பறக்க ஓடறது சுறு சுறுப்பும் இல்ல. அதனாலே நாம மத்தவங்களுக்கு சிறப்ப சேவ செய்யணுமுன்னா இந்த மவுனக் கலைய வளர்த்துக்கணும்.

Song 27

There are so many stories going around about the life of Emily Dickinson (of America) about her life as a recluse. One among the stories is about her ‘love failure’.  But nobody knows the actual reason for her life as a recluse.  So when I was reading about them, I wondered what others would say about my life after I passed away.  Then to tease them I wrote this song about my life as a recluse.

Voice of Mind  27. Self-Story

1
What will they whisper of me,
When my breath has flown away?
Yet while I live, none care to ask
The state of mind I bear today.

2

“They say he wore the saintly robe,
Too weak to prove his daring true;
A costume donned, an empty show,
No change of heart within we knew.”

3

“Perhaps,” they add, “a broken love,
Had driven him from worldly strife;
A tale of loss, of wounded heart,
That made him flee the path of life.”

4

But no—I fled not life itself,
Nor failed in other battles near;
I live each day in richer strength,
Abundant, full, as you do here.

5

Wealth, desire, wife and child,
Are but the world’s deceiving play;
They will not follow when I go,
So why should I need them today?

Mahari, 11-11-1994, Afternoon, 2:50 p.m.

मन्की वाणी  २७. स्वयं कथा

१

क्या-क्या कहेंगे लोग मेरे,
जब यह जीवन छूट जाएगा?
जीते जी न पूछा किसने,
मेरा मन कैसा होगा।

२
“संन्यास ओढ़ लिया इसने,
साहस न पाया जीने में;
केवल एक मुखौटा पहना,
परिवर्तन न था सीने में।”

३
“शायद प्रेम की हार हुई,
तभी तो जीवन छोड़ दिया;
कहानी होगी बिखरे सपनों की,
दर्द भरी जो जोड़ दिया।”

४
पर मैंने जीवन त्यागा नहीं,
न किसी संघर्ष में हारा हूँ;
जीता हूँ भरपूर समृद्धि में,
जैसे तुम सब जीते हो।

५
धन, वासना, पत्नी, संतान,
सब दुनिया के बाहरी खेल;
संग न देंगे जाते समय,
तो क्यों चाहूँ जीते हुए मेल?

महरी, ११–११–१९९४, दोपहर, २:५० बजे

மனதின் குரல்  27. சுய சரிதை

என்னென்ன கூ றுவார்கள்

இறந்தபின் என்னைப் பற்றி

இருக்கும் போது கேட்க மாட்டார்

எந்தன் மன நிலை பற்றி                     1

துறவறம் இவனும் பூண்டான்

துணிவற்றதால் வாழ்ந்து காட்ட

போட்டதெல்லாம் வெறும் வேடம்

காணவில்லை அவனில் பெரும் மாற்றம்          2

காரணம் எதுவாக இருக்கும்

வாழ்வைத் துறந்து இவன் ஓட

காதல் தோல்வியாய் இருக்கும் என

கதையும் கூறுவார் பலவே                 3

துறக்கவில்லை வாழ்வை நானும்

தோற்கவில்லை வேறெதில் தானும்

வாழ்கிறேன் வாழ்வில் நாளும்

வளமுடன் உம்மைப் போல             4

காசு, காதல், பெண்டு, பிள்ளை

எல்லாம் உலகின் வெளி வேஷம்

போகும் போது கூட வாரார், எனவே

இருக்கும் போதும் வேண்டாம் எனக்கு.        5

11-11-1994, மஹரி, மதியம், 2.50 p.m.

அமெரிக்க பெண் கவிஞர் எமிடிக்கன்சன் ‘தனிமை’[recluse] வாழ்க்கை வாழ்ந்ததுக்கு பலவித காரணம் சொல்லப்படுது. அதில ஒண்ணு அவருடைய காதல் தோல்வி. ஆனால் அவர் தனியா வழ்ந்ததுக்கான உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது. அவங்க கவிதைகள படிக்கிறப்போ, நான் போன பின்னாடி அதேபோல என்ன பத்தியும் என்ன என்ன பேசுவாங்கனு நினைச்சபோ, அதே போல பேசுறவங்கள கிண்டல் செய்ய எழுதின பாடல்.

Song 28

 Song 28
This is one of my favorite poems. I still remember the day it was born. I was reflecting on the struggles in people’s lives—how, even though their basic needs are met, they endlessly strive for more. This restless pursuit not only burdens them but also creates tension for others around them. As I went for my walk, these thoughts weighed heavily on me. On my return, while contemplating the meaning of life, this poem flowed out of me.

Voice of the mind: 28. A Babble

1
Can a blind man paint a scene?
Can a child build a home serene?
Can the mute man’s babble be speech?
Can my poor lines be poetry’s reach?

2
Yet, feelings rise, I cannot bind,
Nor cage the stirrings of my mind;
So here I write, to let them stay,
And call these trembling words “a lay.”

3
The mute once dreamed of visions bright,
Yet found no words to give them light;
So too my truest inner state,
Is but the dumb man’s dream of late.

4
“What is the meaning of this life?”
I asked the crowd who walk through strife.
“It’s but illusion, vain and wild—
You too shall know, O foolish child.”

5
“If life is but illusion’s play,
Why then this struggle day by day?”
No answer came, save voices vain:
“This question too is dream’s domain.”

6
Is there one wise who dwells around,
To give this fool a certain sound?
Yet if my question seems insane,
You’ll answer madness with the same.

Mahari, Rewa, M.P. 11-11-1994

मन्की वाणी  २८. एक उगलाहट

१
क्या अंधा चित्र बनाता है?
क्या बच्चा घर सजाता है?
क्या गूंगे की बड़बड़ बोली है?
क्या मेरी लेखनी कविता होगी है?

२
पर मन की गहराई रोकी कहाँ,
भावों की धारा थमी कहाँ?
इसलिए कलम उठाकर आया,
“कविता” नाम इसे भी पाया।

३
गूंगा भी देखे सपनों को,
पर शब्द न पाए अर्थों को;
वैसा ही है यह मन मेरा,
गूंगे के सपनों सा बसेरा।

४
“जीवन का तत्व है क्या भला?”
मैंने जग से प्रश्न किया।
“माया है यह, व्यर्थ माया—
तू भी जान ले, अरे अबोधाया।”

५
“यदि माया ही जीवन सारा,
तो संघर्ष क्यों इतना प्यारा?”
उत्तर कोई न दे सका,
“प्रश्न भी माया है”— यही कहा।

६
क्या कोई ज्ञानी यहाँ मिलेगा,
जो इस मूर्ख को उत्तर देगा?
पर यदि यह प्रश्न है बड़बड़ाहट,
तो उत्तर भी होगा वही उगलाहट।

महरी, रीवा, म. प्र. ११–११–१९९४

மனதின் குரல்  28. ஒரு உளறல்

குருடன் வரைவது ஓவியமோ

குழந்தை கட்டுவதும் வீடாகுமோ

ஊமையின் உளறலும் பேச்சாகுமோ

பேதைஎன் எழுத்துமே கவியாகுமோ                   1

ஆயினும் உள்ளத்து உணர்வுகளை

அடக்க முடியாத காரணத்தால்

எழுத்தில் கூறிட இங்கு வந்தேன்

கவிதை என்ற பெயராலே                  2

ஊமையும் கண்டான் ஒரு கனவு

உணர்த்திட காணான் வார்த்தையினை

உண்மையான என் மன நிலையும்

ஊமை கண்ட கனவதுவே                  3

வாழ்க்கையின் தத்துவம் என்னவென்று

வாழ்ந்திடும் பலரையும் நானும் கேட்டேன்

“மாயையே வீண் மாயையிது

பேதையே நீயும் உணர்வாய்” என்றார்                  4                     

“மாயையே இவ் வாழ்க்கை என்றால்                               

வீணில் இப்போராட்டம் உம்மில் ஏன்?”

கேள்விக்கு பதிலில்லை மாந்தரிடம்

“இக்கேள்வியே வீண் மாயை” என்றார்                5

அறிந்தவர் யாரும் இங்கு உண்டோ

அறியாத இப்பேதைக்கு பதிலளிக்க

ஊமையின் உளறலே இக்கேள்விதானும்

உளறலைப் பொருத்தே பதிலளிப்பீர்                   6

மஹரி, ரீவா, ம. பி. 11-11-1994.

பலருடைய வாழ்க்கையில இருக்கிற பல பிரச்சனைகள பத்தி எண்ணின போ எழுதின பாடல்.  பலருக்கும் அடிப்படை தேவைங்க எப்படியோ நிறவேறிடுது.  ஆனா மேல மேல வேணுமுன்னு நினைக்கறதால மன அழுத்தம் மற்ற பல பிரச்சனைகள அவங்க எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அத குறித்து சிந்திக்கற போ இத எழுதினேன்

Song 29

My shishya, SK Dube, was feeling discouraged. Pressed with the challenge of completing his PhD thesis within the stipulated time, he began to lament over his lack of time and knowledge to accomplish much in life. As he poured out his worries to me, I reminded him never to accept defeat. I told him to treat every challenge as an opportunity for growth. Later, as I reflected again on our conversation, I wrote this song.

Voice of the mind 29. Do Not Lament in Vain

Do not sigh, nor mourn in vain,
Let the past be gone, forgotten as rain.
No man has walked this earthly ground,
Unscarred by failure—such is life’s sound. 1

Despair is but a wasted dream,
It drags you down in many a stream.
Cast it aside with courage today,
Rise with strength—come what may. 2

Let the defeated weep alone,
The daring shall triumph, their valor shown.
Were you born to grieve and sigh?
Or to conquer loud, and touch the sky? 3

Before spilled milk, you sit and cry,
Yet tears won’t make it whole, O why?
Even the broken—turn to bread,
Show the world how life is led. 4

Mahari, Rewa, M. P. November 1994

29. व्यर्थ में मत विलाप करो

व्यर्थ न कर आहें, मत रोओ यहाँ,
जो बीत गया है, उसे जाने दो वहाँ।
अब तक न कोई इस जग में आया,
जिसने न हार का स्वाद भी पाया। 1

विरक्ति केवल व्यर्थ की छाया,
गिरा देती है, मन को भरमाया।
छोड़ो उसे, साहस जगाओ,
जो भी हो, दृढ़ बन जाओ। 2

हारनेवाले हारकर रोएँ,
साहसी रणभूमि में जीते सो खोएँ।
क्या रोने को ही जनम लिया है?
या विजयी बन गगन छुआ है? 3

गिरे हुए दूध पर क्यों रोते?
आँसू से वह लौट न होते।
टूटे को भी आहार बनाओ,
यही जीवन का पथ दिखलाओ। 4

महारी, रीवा, म. प्र. नवम्बर 1994

29. வீணில் புலம்பாதே

பெருமூச்சுவிட்டு புலம்பாதே வீணில்

போனது போகட்டும் புறப்பட்டு இனிமேல்

தோல்வியே காணாத மனிதனும் உலகில்

தோன்றவில்லை இதுவரை தெரிந்துகொள் வாழ்வில்                      1

விரக்தி என்பது வீணான கற்பனை

வீழ்த்திடும் அதுவுமே உன்னையும் பலமுறை

விலக்கிடு அதனையும் வீரமுடன் இன்று

வீறுகொண்டெழு எது வந்தாலும் என்று            2

தோற்பவன் தோற்று தனியே புலம்பட்டும்

துணிந்தவன் போராடி வென்று காட்டட்டும்

புலம்பித் தவிக்கவா புவிக்கு வந்தாய்

வென்று முழங்கிட்டு யாரென்று கட்டுவாய்                  3

முறிந்த பாலின் முன்னே அமர்ந்து

பலமுறை அழுதாலும் பாலாக மாறாது

முறிந்த பாலையும் உணவாக மாற்று

இப்படித்தான் வாழனும் என்பதைக் காட்டு                   4

Mahari, Rewa, M. P. November 1994

Voice of the Mind  30. The Petty One

The petty man knows not his own fault,
Yet casts blame on others to veil his shortfall.
Such is his folly, what more to say?
One word, one deed, yet he lives another way.

The narrow man cannot see his own wrong,
But magnifies others’ faults all lifelong.
Is there one flawless upon this earth?
None at all, from birth to death’s dearth.

If we perceive this truth in heart,
We’ll forgive others, as we do our part.
Their errors, like ours, we’ll learn to bear,
With patient grace, with equal care.

Mahari, 11:00 AM, 13-11-1994

मंकी वाणी  ३०. छोटा मनुष्य

छोटा मनुष्य अपनी भूल न जाने,
दूसरों पर दोष लगाकर छिपाने।
मूर्खता है उसकी यह करनी,
बोल अलग, और जीवन धारणि।

स्वल्पबुद्धि अपनी त्रुटि न पहचाने,
परायी गलती को बड़ा दिखलाने।
निर्दोष कौन है इस धरती पर?
नहीं कोई, जीवन भर।

यदि यह सत्य हम भी समझ पाएं,
दूसरों की भूल को क्षमा कर जाएं।
उनकी त्रुटि को भी सहन करेंगे,
जैसे अपनी भूल हम अपनाएंगे।

महरी, प्रातः ११:०० बजे, १३–११–१९९४

மனதின் குரல் 30 சிறுமையானவர்

தம்குறை தன்னைஉணரா

தரணியின் மாந்தரும்

பிறர்மீது பழி கூறி

தம்குறைமறைப்பார்

பேதைமை அவர் செயல்

வேறென்ன சொல்ல

சொல்லொன்று செயலொன்று

எனக்கொண்டு வாழ்ந்திடும்

சிறுமையான மனிதருக்கே

சுயபிழைதெரியாது

பிறர் பிழை பெரிதாக்கிக்

கூறுவார்பலகுறைநாளுமே

குறையில்லா மனிதரும்

உலகின் கிடையாது

உணர்ந்தால் இதைநாமுமே

தம்மைப்  போலவே

பிறர்பிழைதன்னையும்

பொறுப்போம் நாளுமே

மஹரி, காலை11.00. 13-11-1994

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *