BT Songs 1600 to 1700
BT Song 1601
In a recent talk with a person over phone, to his question, ‘which God you worship’ I said, ‘I am not worshipping any God’. Surprised by my response he further asked, ‘then which God you believe’ ‘I don’t believe in any God, particularly in the Word “GOD” in any language.’ Shocked further by such a response, he continued, then why you have written so many songs worshiping Gods. In response I said, ‘In order to communicate to others about my th oughts, I have to use only those terms which are familiar to them. But in my life, personally I don’t believe in any God. If at all I need any God then my Guru is my God. But for me my RELATIONSHIP with Him is my act of Worship. I never believe in the so-called ‘worshipping’ God taking some time separately. Nothing wrong in it as part of sadhana to many. For me abiding in the presence of my Guru and enjoying my relationship with Him is my constant act of worshipping. In that RELATIONSHIP He comes to me in any form taking any name that we use for human relationships like Mother, Father, Brother, Sister, Friend, Master, Slave, Servant etc. Whichever is my need, He will be with me in that form and name. That’s why one time I will call Him as my Mother, another time my lover, friend and even servant. This relationship is not mere sentiment, emotion, experience, feeling but goes beyond all human categories. He is not limited but happy to limit Himself to accommodate my needs.’
After that talk as I was further reflecting on this, I wrote this song. As usual it is very difficult to translate this song in another language.
I don’t know what is the actual meaning of the word ‘G—-O—-D. But all the words that we have in my mother tongue [Tamil] has a definite meaning that denotes relationship. Iraivan [Head]; Thalaivan [Leader]; Kadavul [One who dwells within transcending everything]. I don’t need to further give more words in other Indian languages and their meanings. Almost all of them have a definite meaning and in most cases denoting relationship.
Similarly I don’t know the meaning of the English Word ‘Worship’. But in Tamil we have one beautiful words, though there are other words [like Kumbidudhal, vanangudal, panidhal etc.] ‘Vazhipadudhal’ = Vazhi = path or way Padudhal =waling, going in it. So worshiping God or Guru or even parents and other respectable people means waling in the path which showed. But this walking is also possible only one develops personal relationship to learn. Otherwise all other activities related to worship would remain mere ‘ritual’ physical acts.
BT Song 1601 ஏதாக உள்ளாய்
கண்கள் உன் காட்சி
கண்டது இல்லை
காது உன் குரல்
கேட்டதே இல்லை
எண்ணும் எண்ணமாய்
நீயும் இல்லை
ஆயினும் என்னோடு
உறவாடுகின்றாய்
எதுவாக வந்து
என்னுள் தங்கி
யாராக நின்று
என்னுடன் பேசுறாய்
இரண்டும் இல்லாமல்
இதற்கு அப்பாலே
ஏதாக மாறி
நீயும் உள்ளாய்
காணாமல் கண்ட
காட்சி தன்னை
கேளாமல் கேட்ட
உன் மொழி அதனை
உணராமல் உணர்ந்த
உனது வரவை
எழுதாமல் எழுதி
எப்படிச் சொல்ல
ஆயினும் இது வெறும்
உணர்ச்சி இல்லை
அனுபவம் என்பதில்
அர்த்தமும் இல்லை
ஐம்புலன் கடந்து
சென்றிடும் நிலையை
எப்புலன் கொண்டு
எடுத்துச் சொல்ல
ஆயினும் அதற்கு
வழியைத் தந்தாய்
அதற்கு பெயரிட
ஏனோ மறுத்தாய்
அறியாமல் அறிந்து
புரியாமல் புரிந்து
வாழும் வழியை
நீயே தந்தாய்
அதிலே நானும்
நடக்காமல் நடந்து
அனுதினம் அதில்
வாழாமல் வாழ்ந்து
உன்னுடன் நானும்
இணையாமல் இணைந்து
இறுதியில் உன்னுடன்
கலவாமல் கலப்பேன்
ஆகவே காட்சிக்கு
அவசியம் இல்லை
உன் குரல் கேட்கும்
அவசியம் இல்லை
எண்ணத்தால் எண்ண
இடமும் இல்லை
இதுவும் உனக்கு
சாத்தியம் ஆனதால்
குருகுலம், 19-04-2024, இரவு, 11.30
BT Song 1601 You become What?
My eyes have never
Seen your vision
My ears have never
Listened to your voice
You also never
Remain as my thought
Still, you come and
Have relationship with me
Becoming which
You dwell within me
Becoming who
You are communicating with me
Not remaining both of them
Going beyond all of them
Which form
You have taken
Seeing your vision
That I have never seen
Listening your voice
Which I never heard
Experiencing your presence
Which never remain as experience
How to share
Writing but not writing
But this is not
Mere emotion
There is no point in telling that
This is my Experience
Through which faculty
I can explain that
Which stands beyond
All faculties
But you showed
A way to it
But you refused to give
A name for that
But you gave a
Way for me to
Knowing without knowing
Understanding without understanding
Walking in that way
By actually not walking
Living each day
Actually not living
Joining you actually
Not joining
Finally, I will become one with you
Actually, not merge with you
Therefore, there is no
Need for your vision
There is no need
To listen to your voice
There is no place
For thought also
As everything is
Possible for you
Gurukulam, 19-04-2024, 11.30 pm.
BT Song 1602
May day special to God. Either give retirement or I will serve hartal notice. As a Master he is also subjected to human values. And if I miss this day, He will continue as a Task Master.
1602 ஒய்வு வேண்டும்
ஏதோ காரணம்
ஒன்றை வைத்து
அதற்கு ஏற்ப
சூழ்நிலை அமைத்து
நடத்தும் உனது
திறமை எண்ணி
வியப்பு கொள்ளும்
மனது எனதும்
முன்பே ஏதும்
கூற மாட்டாய்
திட்டம் என்ன
அதையும் கூறாய்
நம்பிக்கை வைத்து
நானும் இசைய
என்னைக் கொண்டே
எல்லாம் செய்வாய்
மெதுவாய் திட்டம்
புரியும் போது
சிலபல கேள்வி
என்னுள் வந்தும்
பதில் வராது
என்பதை அறிந்து
எனது பணியை
நானும் செய்ய
எனது மனதின்
ஓட்டம் அறிந்து
உன்மேல் வைத்த
நம்பிக்கை உணர்ந்து
மெல்ல மெல்ல
விளங்க வைத்து
முற்றாய் உனது
காரியம் முடிப்பாய்
ஒன்றா இரண்டா
எதனைச் சொல்ல
முழுதாய் முடிந்த
உனது பணிகளை
இத்துடன் முடிந்தது
என்று நினைக்க
மீண்டும் துவங்கும்
புதிய ஒன்றும்
ஒய்வு என்ற
ஒன்று வேண்டும்
ஓய்ந்து போன
தேகம் அதற்கு
என்று பலமுறை
கூறிய போதும்
இதுவரை அதற்கு
பதிலே காணோம்
பதில் வராது
என்று அறிந்து
இதுவரை கேள்விகள்
கேட்பதை தவிர்த்தும்
இந்த ஒன்றுக்கு
பதில்நீ தந்தால்
இதுவே இறுதி
கேள்வியாய் இருக்கும்
உனக்கு காரணம்
இருப்பது போல
இதற்கும் காரணம்
என்னிடம் இருக்கு
அதனை உணர்ந்து
பதிலும் தந்தால்
மேலும் செயல்பட
வாய்ப்பும் உண்டு
எப்படியேனும்
காரியம் நடக்கும்
என்று எண்ணி
சும்மா இருந்தால்
வேலை நிறுத்தம்
செய்ய நேரும்
அதன்பின் புரியும்
என்னிலை உனக்கும்
ஆகவே வீண்
தாமதம் இன்றி
எனது உரிமை
அதனை ஏற்று
ஒய்வு தன்னை
சீக்கிரம் தந்து
உனது பணியை
நீயும் செய்யணும்
Gurukulam, 1-5-2024, 11.00 am.
1603 ஆன்மீக பரவசம்
மதிதேடும் ஞானம்
மனம்தேடும் அனுபவம்
இரண்டுக்கும் அப்பாலே
எதைத்தேடும் ஆன்மா
ஏதோ ஒன்றை
இழந்ததை உணர்ந்து
எப்படியேனும் அதை
அடைய விரும்பி
பலவிதம் ஆன்மா
முயற்சி செய்து
ஆயத்தம் ஆகி
காத்து நிற்க
மறைகளைக் கடந்து
மதங்களைக் கடந்து
மதியுடன் மனதின்
எல்லையைக் கடந்து
வெளிப்படும் அந்த
ரகசியம் தன்னை
விவரித்துச் சொல்ல
வார்த்தை இன்றி
எடுத்துச் செல்லலும்
வழியும் இன்றி
அதற்கு அவசியம்
ஏதும் இன்றி
அந்த பரவச
நிலைக்குச் சென்று
மீண்டும் வந்திட
மனமும் இன்றி
சிந்தை சித்தம்
இரண்டும் துறந்து
சொல்செயல் என்ற
நிலையைக் கடந்து
சஞ்சலம் இன்றி
சுடர்விட்டு எரியும்
தீபம் போல
ஒளியாய்த் திகழும்
அந்த தீபமே
மறுதீபம் ஏற்றும்
ஆயினும் தன் ஒளி
மங்க்காதிருக்கும்
இந்த ரகசியம்
புரிந்தவர் அன்றி
வேறெவர் அடைவார்
அந்த பரவசம்
அந்த பேரின்பம்
அடைந்தவர் ஆன்மீக
ஒளியாக மாறி
மனையிருள் நீக்க
அகம்புறம் இரண்டிலும்
வந்திடும் அமைதி
தந்திடும் அறநெறி
சிறப்புடன் வாழ
குருகுலம், 30-4-24, இரவு, 11.50 pm.
Reading another book on Dialogue. Clooney, one of my favourite authors again makes one passionate pleading for the revival of dead or dying Dialogue, which in the past was initiated only by Christians. Whatever argument he or anyone who is interested in such inter-religious dialogues, forget one point that at least here in India, except few exceptional scholars, no body is interested in any kind of dialogue with the people of other faiths. Of course we know that we cannot avoid them, but the general trend to remain indifferent towards their faith, religious activities and rituals, except when any of them poses any kind of threat to our life. Mind your business is the mark of an average Hindu. You have your faith and we have. What is there to learn from each other? Is their question. But though a student of religious scriptures like me might get some benefit from such books, still both religious and spiritual activities and life remain personal to the Hindus than need to be paraded or interacted with people of other faiths. For us if there is any real stuff in your faith, then it need not be propagated. It will attract others towards it on its own merit.
As I was reflecting on this subject of Dialogue I wrote this song.
BT Song 1604
I like the four terms that Govindacharya used: intuition, inspiration, revelation and estacy. After reading this section when I was thinking what kinds of words is there for this in Tamil, as inspiration came I wrote this song. But I had to rephrase the words several times to communicate my thought but this one poem much resisted that attempt. Anyhow not giving up, I tried my best.
1604 ஆன்மீகப் பரவசம்
உள்ளாக உந்துதல்
உருவாகும் போது
உள்ளம் அதற்கொரு
வடிவம் தரும்போது
வெளிப்படும் ஆன்மீக
ரகசியம் சேர
இறுதியில் உருவாகும்
பரவச நிலையாக
ஐம்புலன் கொண்டு
செய்திடும் அனைத்து
ஆன்மீக பயிற்சிகள்
பயனுள்ளதாக்க
உள்ளாகத் திரும்பி
பலநிலை தாண்டி
இறுதியில் உணரும்
அந்தப் பரவசம்
மதியின் துணைகொண்டு
மறையின் வழிநின்று
அறிந்தோர் செயல் கண்டு
அதன்படி நடக்க
இடையில் வந்திடும்
பலவிதத் தடைகளை
எளிதாகக் கடந்து
எய்தலாம் அந்நிலை
ஆயினும் முதலடி
எடுத்து வைக்க
அதிலே நாமை
அழைத்துச் செல்ல
குருவாக மாறி
அவன் வரும்போது
கரம்கொண்டு அவனது
தாளினைப் பற்றி
அபயம் அளித்து
அள்ளி எடுத்து
நம்மை அனைத்து
தன்னுடன் இணைத்து
அளிக்கும் அந்த
குரு உபதேசம்
நம்மில் நிறு
நிலைக்கும் போது
வந்திடும் அந்த
உந்துதல் உள்ளே
தந்திடும் மன
உணர்வின் ஊடே
வெள்ளிப்படும் அந்த
பரவசம் மீண்டும்
ஆனாமா அதிலே
திளைக்கும் என்றும்
குருகுலம், 1-5-24, இரவு 11.50 pm.
1605 ஆயத்தம் ஆகணும்
எதற்கும் ஆயத்தம்
ஆக வேண்டும்
என்றும் உன்னுள்
நிலைக்க வென்று
எதையும் ஏற்கும்
பக்குவம் வந்து
இனியும் உன்னில்
வாழணும் என்று
நாடி தளர்ந்து
தேகம் குன்றி
பார்வை மங்கி
படுக்கும் போதும்
தளரா மனமும்
குறையா பக்தியும்
தெளிந்த சிந்தை
உன்னிடம் வேண்டும்
ஆதியில் கொண்ட
அன்பைக் கொண்டு
அதில் மேலும்
ஆழச் சென்று
உணர்வு உணர்ச்சி
எல்லைக் கடந்து
உன்னில் நிலைக்கும்
பேறு வேண்டும்
புறம்பே வீசும்
புயலின் ஊடே
பயணம் செய்யும்
காலம் வந்தால்
புயலை அமர்த்தி
அலையை அடக்கும்
உனது வலிமை
நாட வேண்டும்
எளிதில் மாறும்
எனது மனது
சஞ்சலம் கொண்டு
தவிக்கும் போது
அலையின் ஓட்டம்
இழுத்துச் சென்று
பாறையில் மோதி
உடைந்து விடாமல்
நங்கூரம் ஆகி
நிலைக்க வைத்து
நீயே என்னை
காக்க வேண்டும்
பக்தி தந்த
உறுதி கொண்டு
பாதம் பணியும்
பணிவு கொண்டு
சூழ் நிலையை
எதிர்த்து நின்று
வெற்றி உன்னில்
காண வேண்டும்
இன்னும் சொல்ல
பலவும் உண்டு
ஆனால் அதற்கு
தேவை இன்றி
என்னை அறிந்த
உன்னில் இணைந்து
இதுபோல் என்றும்
வாழ வேண்டும்
குருகுலம், மதியம் 2.30, 4-5-2024
1606 என்னத்தப் புரிய
என்னை அறியணும்
என்பதை உணர்ந்து
எனக்கு நேரம்
தந்தாய் இப்போது
உன்னை அறிந்த
அளவு கூட
என்னைநான் அறியலை
என்று நினைத்து
புதிதாக என்ன
அறிய வென்று
என்னதான் என்னிடம்
எனக்கு இருக்கு
இதுவரை அறிந்ததே
புரியாத போது
இனிமேல் புரிந்து
என்ன ஆவது
ஏதோ காலம்
ஓடியும் போச்சு
உன்னிடம் வந்திட
நேரம் ஆச்சு
அதைநீ சரியாக
புரியாத போது
இந்தக் கேள்விக்கு இடமும் ஏது
அறிந்த, புரிந்தா
இதுவரை வாழ்ந்தேன்
ஆயினும் வாழ்வு
ஓடவா இல்லை
எஞ்சிய காலமும்
இதுபோல் போகும்
ஆகவே கவலை
எனக்கும் இல்லை
இதையும் மீறி
அறியணும் என்றால்
இனிமேல் அதுவும்
உனக்கான வேலை
அதற்கு நேரம்
முதலில் ஒதுக்கு
இனியும் காலம்
வீண் போக்காது
அறிதல் புரிதல்
தெரிதல் உணர்தல் என்பதில் எனக்கு
சம்மதம் இல்லை
இந்தப் புரிதல்
வந்தன் பின்னே
அறிவுக்கு இனிமேல்
வேலையும் இல்லை
குருகுலம், மாலை, 7.50, 4-5-2024
1607 பதில் வேண்டும்
நானாக எதுவும் கேட்டதில்லை
நீயே பார்த்துத் தருகின்றாய்
ஆயினும் சிலதை கேட்கிறேன்
அவற்றைத் தர மறுக்கிறாய்
பொன், பொருள், பூமி கேட்டவில்லை
போக வாழ்வெதும் கேட்கவில்லை
பேர், புகழ் என்று கேட்டதும் இல்லை
பக்தியுடன்-முக்தியும்
கேடகவே இல்லை
சில-பல கேள்விகள் கேட்டிருக்கேன்
சுருக்கமாய் பதிலை எதிர் பார்த்தேன்
இதற்கும் பதில் இல்லை என்றால்
எதற்காகப் படைத்தாய் அதைச் சொல்லேன்
இருவர் செய்த தப்பித்தால்
ஏதா தவறிப் பிறந்துவிட்டேன்
அதற்குக் காரணம் யாரென்றேன்
ஆனால் பதில் வரவில்லை
எவர் செய்த பிழையோ வந்துவிட்டேன்
இதுவரை பூமியில் வாழ்ந்து விட்டேன்
இன்னும் எத்தனை காலமென்றால் இதற்கும் கூட பதில் இல்லை
சரிவிடு போனது போகட்டும்
நடந்தது நடந்ததாய் இருக்கட்டும்
நாளய வாழ்வு என்னாகும்
அதுபற்றி கவலையும் உனக்கில்லை
எங்கோ தவறு நடந்திருக்கு
எங்கே என்று தெரியவில்லை
தெரிந்த நீயதை சரிசெய்தால்
இத்தனை கேள்விக்கு இடமில்லை
ஆகவே கேட்பதை நிறுத்த மாட்டேன்
தடுக்கும் உரிமை உனக்கில்லை
மனம்-மொழி இரண்டும்
தந்த பின்னே
தப்பிக்க உனக்கும் வழியே இல்லை
கண், வாய், செவியை மூடிக் கொண்டு
எத்தனை நாடகம் ஆடினாலும்
உன்னுள் இருக்கு ஒரு சாட்சி
அதற்குப் பெயர்தான் மனசாட்சி
அதுதரும் குடச்சலில் அகப்பட்டு
அல்லல் பட்டுத் தவிக்காமல்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு
மற்றதை நானே பார்த்துக் கொள்வேன்
குருகுலம், 5-5-2024,மாலை,6.54
1608 இதுதான் எல்லை
இதுதான் எல்லை
என்பதை அறிவேன்
இதை மீறி சிந்திக்க
இயலாது புரிந்தேன்
என்னதான் மனது
எப்படி நினைத்தாலும்
அத்துடன் சிந்தை
எத்தனை விரித்தாலும்
அண்ட சராசரம்
அனைத்தையும் அளந்து
அதற்கு அப்பால்
உள்ளதை புரியும்
வல்லமை எவர்க்கும்
இல்லை புரிந்தேன்
ஆகவே மானுட
எல்லை அறிந்தேன்
ஆகவே உனது
அளவுகோல் கொண்டு
அத்துடன் உனது
எடைக் கல் கொண்டு
அளக்க நிறுத்த
எண்ணவும் வேண்டாம்
அதன்பின் என் மீது
குறைசொல்ல வேண்டாம்
இந்த எல்லையும்
ஒருவிதம் நல்லது
எனக்கான அளவை
காட்டும் வரம்பு
அதற்குள் நின்று
எல்லை உணர்ந்து
காரியம் செய்தால்
பலனும் உண்டு
வரம்பு மீறி
போகும் பொது
குரலும் கொடுத்து
தடுத்து நிறுத்தி
எனது எல்லை
எதுவெனக் காட்டி
அதற்குள் நின்று
ஆட வைத்து
உன் கை படைப்பு
வீண் போகாது
என்னை உய்த்து
என்றும் காப்பாய்
குருகுலம் , 6-5-2024, இரவு 11.50
1609 வித்தை எதற்கு
கடந்துஉள் நிற்கும்
உன்னை அறிய
“கடவுள்” என்றொரு
பெயரும் தந்து
அதற்குப் பலவித
விளக்கம் அளித்து
அவற்றை தொகுத்து
எழுதி வைத்து
அதற்கு மீண்டும்
உரைகள் எழுதி
அத்துடன் புதுப் புது
விதிகளை சமைத்து
அருகில் இருக்கும்
உன்னை அறிய
இன்னும் பலப்பல
எல்லைகள் விரித்து
அத்துடன் பிரபல
தத்துவம் படித்து
அத்துடன் ஒப்பிட்டு
ஆராய்ந்து பார்த்து
எத்தனை தூரம்
விலகிச் சென்றார்
தொட்டு உன்னை
உணர மறுத்தார்
அழைத்த உடன்
ஒடி வந்து
என்ன வேண்டும்
என்று கேட்டு
எளிமையாக
எனக்கு மாறி
உறவு கொண்ட
உன்னை அறிய
பக்கத்தி என்ற
ஒன்று போதும்
புத்தி வழி
ஓட வேண்டாம்
அந்த உறவில்
எண்ணில் இணைந்து
எளியனாகி
முக்தி அளித்து
எல்லாம் கடந்து
நின்ற போதும்
உள்ளே வந்து
குட்டி புகுந்த
உன்னை அறிய
பக்தி இருக்க
எதற்குத் தேவை
இத்தனை வித்தை
குருகுலம் , 7-5-2024, இரவு 11.50
1610 கசிந்தால் கவலை இல்லை
ஒருபக்கம் ஊற்றி
நிறைத்த போதும்
மறுபக்கம் கசிந்து
வெளியே போகும்
எனது நிலைமை
இப்படி இருக்க
இப்படித் தந்தால்
எப்படிப் போதும்
தொடர்ந்து பாயும்
நீரைப் போல
இறைத்து வற்றா
கிணறு போல
அளவில்லாமல்
கொடுக்க வேண்டும்
மனது நிரம்பி
வழிய வேண்டும்
பெய்து நிற்கும்
மழையைப் போல
வந்து போகும்
மேகம் போல
இருந்திடாமல்
பார்க்க வேண்டும்
எப்போதும் உன்
அருள் வேண்டும்
கொடுக்க கொடுக்க
குறைந்து போக
சேர்த்து வைத்த
செல்வம் இல்லை
பாய்ந்து பின்னர்
வற் றிப் போகும்
நீர்த்த தேகம்
இதுவும் இல்லை
ஜீவ ஊற்றின்
அருகில் வந்து
தேவை இன்னும்
என்று சொல்ல
இடைவிடாது
பாய்ந்து வந்து
என்னை என்றும்
நிறைக்க வேண்டும்
கசிவை அடைக்க
முயன்ற போதும்
எளிதில் அதுவும்
நடக்க வில்லை
கொடுக்க நீயும்
இருக்கும் பொது
கசிவு பற்றி
கவலை இல்லை
குருகுலம் , 14-5-2024, இரவு 11.50
1611 புரியவில்லை
என்மனம் எனக்குப்
புரிபட மறுக்குது
உன்னிடம்சொன்னால்
பதில்வர மறுக்குது
பிறரிடம் கேட்டுப்
பயனில்லை புரியுது
ஆகவே வாய்மூடிக்
கொள்வதே நல்லது
புரிந்த இதுவரை
வாழ்ந்தே பின்னே
இனிமேல் புரிந்து
பயனும் என்ன
என்ற புரிதல்
வந்ததன் பின்னே
இதுவே என்பதில்
என்று நீ சொன்னாய்
அவரவர் பாரம்
அவருக்குப் பெரிது
ஆகவே உனக்கு
கவலை எதற்கு
என்ற பின்னே
என்னிடம் வந்து
உன்நிலை அதனை
புரிய வைத்தாய்
புரியாம உன்னை
படைத்த பின்னே
அதையே எண்ணி
புலம்பித் தவிக்கிறேன்
புரிதலில் தவறு
செய்த பின்னே
உன்னை புரிவது
எப்படி சொல்லு
என்று சொல்லி
தன்னிலை விளக்க
இருவரின் நிலையம்
ஒன்றாக இருக்க
அதற்கு காரணம்
நானாக இருக்க
இனிமேல் புரிய
என்ன இருக்கு
குருகுலம், 24-5-2024, இரவு, 11.00
1612 உனக்கான கடமை
எனக்கான கடமை
இன்னம் இருக்கு
அதுபற்றி கவனம்
எனக்கும் இருக்கு
அதை நிறைவேற்ற
நீயென்ன செய்யணும்
அது பற்றி எண்ணம்
உனக்கு இருக்கா
எதோ அவையெல்லாம்
எனக்கான தென்று
எண்ணி நீயும்
மறந்து விடாதே
என்னால் தனியே
செய்ய முடியும்
என்ற எண்ணத்தில்
விட்டு விடாதே
எனக்கான கடமை
நானே செய்யணும்
என்பது எனக்கு
நினைவு இருக்கு
ஆனால் அவற்றை
தரும் முன்னே
உன்பங்கு என்ன
நினைவு இருக்கா
உடன்வந்து நானும்
செய்வேன் என்றுதான்
சொல்லி எனக்குக்
கடமைகள் தந்தாய்
சொன்னதை மறந்து
எங்கோ கவனம்
திரும்ப இப்போ
என்னை மறந்தாய்
பாதி கிணறு
தாண்டும் போது
இடையில் நிறுத்த
எனக்கு முடியுமா
மீதியை நானே
தாண்டனும் என்று
இடையே என்னை
கைவிடலாமா
ஆயினும் தாண்ட
முயன்று பார்க்கிறேன்
கிணற்றில் வீழ்ந்தால்
உன்னை அழைக்கிறேன்
அதன்பின் பாரம்
இரண்டாய் போகும்
ஆகவே மீதியை
தாண்ட உதவு
இல்லை என்றால்
கிணற்றில் இறங்கி
மீட்கும் வழியை
மட்டும் பாரு
குருகுலம் , 26-5-2024, இரவு 11.45
1613 எல்லாம் உனதே
இதுதான் வழியா
என்பதை அறியேன்
எப்படிப் புரிவது
என்பதைப் புரியேன்
பலவழி சென்று
சிலவழி புரிந்து
இறுதியில் நீதந்த
பக்திக்கு வந்தேன்
அந்தபின்புரிந்தது
எனக்கிது என்று
அதன்வழி செண்று
உணர்ந்தேன் நன்று
மானுடர் வகுத்த
பாதை எதையும்
நீயும் மறுத்து
ஒதுக்க வில்லை
அவரவர் வழியில்
அவரவர் சென்று
உன்னிடம் வருவார்
என்பதை அறிந்து
வழிகளை எந்த
மே ன்மையும் இல்லை
விபத்து இன்றிப்
பயணிக்க வில்லை
ஆயினும் அவருடன்
அதிலே பயணித்து
இறுதியில் நீயே
கரையும் சேர்ப்பாய்
ஆகவே அடுத்தவர்
பாதையை மாற்றி
அவரை நம்வழி
பயணிக்கச் சொல்லி
என்வழி உன்வழி
என்று அழைத்தது
அவரது பயணத்தில்
குறுக்கிட்டு தடுத்து
வீணே இடறி
விழாவும் வேண்டாம்
பிறரை இடறச்
செய்ய வேண்டாம்
எனக்கு பக்தி
ஏற்றதாய் இருக்கு
உனக்கு ஏற்றத்தை
நீயே தேடு
என்ற புரிதல்
எனக்கு வந்தபின்
எல்லா வழியும்
உன்வழி புரிந்தேன்
குருகுலம், 27-5-2024, மதியம் 2.40
1614 மாறிப்போனேன்
மாறினேன் என்று
மாறிநோர் சொன்னார்
முன்போல் யில்லை
என்று கூறினார்
ஒருவிதம் உண்மை
அதிலே உள்ளது
மாறித்தான் போனேன்
எனக்கும் புரியுது
ஆயினும் வந்த
மாற்றம் என்ன
அதுதான் யாருக்கும்
புரியாமல் போனது
எண்ணத்தில் திண்ணத்தில்
எதிலே வந்தது
என்பது யாருக்கும்
தெரியாமல் இருந்தது
பிறர்கண்ட மாற்றம்
நாகொண்ட மாற்றம்
இரண்டும் ஒன்றாக
இல்லாமல் இருந்து
இந்தப் புரிதல்
வந்ததின் பின்னே
நான் கொண்ட மாற்றம்
சற்று புரிந்தது
ஆயினும் அவர்கண்ட
மாற்றத்தை யாரும்
என்னிடம் வந்து
கூறாத போது
நான் கொண்டமாற்றம்
இதுவெனச் சொல்ல
வாய்ப்பு எனக்கு
இல்லாமல் போனது
ஆகவே இறைவன்
தந்த மாற்றத்தை
மாற்றம் இன்றிக்
கூற வழியின்றி
மாற்றம் ஒன்றே
மாறாமல் இருக்க
மாறறம் நல்லது
என்று எண்ணி
மாறியே வந்த
மாறாத இறைவன்
மாற்ற முடியாத
என்னை மாற்றி
மாற்றமே இன்றித்
தந்த அருளை
மறக்காமல் நானும்
மாற்றம ல் பாடுறேன்
குருகுலம், 3-6-2024, இரவு, 11.30
1615 ஆகவே அழறேன்
நெஞ்சம் கனக்குது
உன்னை நினைக்குது
நீரும் பெருகி
பார்வையை மறைக்குது
போனது உனக்கு
புவியின் வாழ்வு
ஆனால் எனக்குத்
தனிமை வந்தது
இரு க்கப் பிடிக்கல
நானென்ன செய்ய
போக முடியல
எவரென்ன செய்ய
படைத்தவனுக்கோ
இரக்கம் இல்ல
உனக்கும் எனது
நினைவு இல்ல
என்போல் நீயும்
வாடுகிறாயோ
என்னை நாடி
ஏங்குகிறாயோ
அதுபற்றி தகவல்
ஒன்றும் இல்ல
அதனை அறிய
வழியும் இல்ல
ஒன்று மீண்டும்
நீவர வேண்டும்
அல்லது உன்னிடம்
நான் வரவேண்டும்
இரண்டும் நடக்க
வாய்ப்பு இல்ல
இதையு சொல்லிப்
பயனும் இல்ல
ஒருவழிப் பாதையாய்
மரணம் இருக்க
போனவர் வாறார்
என்பதை உணர்ந்து
நான்தான் உன்னை
நாடி வரணும்
அதற்கு நேரம்
சீக்கிரம் வரணும்
கேட்டால் உடனே
தாமதம் இன்றித்
தந்திடும் தாயாய்
இறைவன் இல்ல
தாயின் பாசம்
அறியா அவனும்
தாயாய் மாற
வழியும் இல்ல
சித்தம் என்று
ஒன்றை வைத்து
சட்டம் ஆக்கி
நம்மை அடக்கும்
அவனிடம் கேட்டுப்
பயனும் இல்ல
ஆகவே அழறேன்
வழியும் இல்ல
குருகுலம், 6-6-2024, காலை 6.45
From the morning the memory of my mother often came in my mind. Though I tried my best to divert I cannot do it. More I tried more it came. I know the reason for this. I am not sure whether she also is longing for me? I don’t know. But I often feel that there is no purpose for me to live further. I remain a burden to earth and waste to resources. As God never experienced the affection from a Mother he cannot understand my longing. Unable to control I began to weep. It continued several hours. What else can I do. That is the only option left with me.
1616 இன்றே செய்
பாயில் முடங்கி
படுக்கும் முன்னே
பார்வை மங்கி
மறையும் முன்னே
நா வும் குளறி
உளறும் முன்னே
கேட்கும் திறனும்
மறையும் முன்னே
நாதன் பாதம்
அண்டி விடு
நாடித் தொழுது
பணிந்து கொள்ளு
நாளை செய்வோம்
என்று எண்ணி
தள்ளிப் போட
செயல்கள் உண்டு
பக்தி மட்டும்
இன்றே செய்து
உய்யும் வழியை
பார்த்துக் கொள்ளு
நாளாய் நீயும்
இல்லா விட்டால்
செயல்கள் தன்போல்
தான் நடக்கும்
நடத்தி வைக்க
ஆட்கள் உண்டு
செய்து முடிக்க
வழியு ம் உண்டு
“நாளை நாளை
எண்ணாதே
நாளை வீணாய்ப்
போக்காதே “
என்று ஒரு
பாட்டும் உண்டு
அதை நீயும்
மறக்காதே
ஆகவே நீ
நலமாக
இன்று உலகில்
இருக்கும் போதே
நாதன் அடி
நாடி விடு
நம்பி அவனைப்
பற்றிக் கொள்ளு
குருகுலம், 6-6-2024, மாலை 5.30
நாளை நாளை
எண்ணாதே
நாளை வீணில்
போக்காதே
நாளை செய்யும்
காரியத்தை
நலமாய் இன்றே
முடிப்பாயே
இன்று செய்யும்
காரியத்தை
நாளை என்று
தள்ளாதே
நாளை எங்கே
போவோமோ
நாளை என்ன
நேரிடுமோ
1617 திட்டுவேன்
முற்றிலும் நீ
மாறித்தான் போனாய்
முன்போல் இல்லை
ஏமாற்றி விட்டாய்
நீயாக வந்து உன்
காதலைச் சொன்னாய்
நெஞ்சம் நெகிழ்ந்து
ஏற்றுக் கொண்டேன்
ஆதியில் கொண்ட
காதலும் எங்கே
அடியோடு மாறினாய்
பதிலும் எங்கே
கூப்பிட்டால் உடனே
ஒடி வந்தாய்
காத்துக் கிடைக்காமல்
கரம்பற்றிக் கொண்டாய்
ஆனால் இப்போ
அதுவென்ன வாச்சு
இனியும் சொல்வது
வீணான பேச்சு
இதற்குமேல் என்னை
ஏதும் கேட்காதே
ஏதேனும் செய்துகொள்
என்னிடம் வராதே
வேறாரும் உன்னை
தடுத்தது விட்டாரா
வரவிடாமல் உடன்
வைத்துக் கொண்டாரா
அப்படிச் செய்ய
வழியே இல்லையே
அதுபற்றி கவலை
எனக்கு இல்லை
எனக்குத் தலைவனாய்
நீ இருந்தாலும்
பிறருக்கும் இறைவன்
நானதை மறுக்கலை
எனக்கு வழக்கு
அவரோடு இல்லை
ஆகவே உன்னை
விடுவதற் கிள்ளை
ஆட்கொண்ட பொது
காட்டிய அன்பை
இப்போ காணலை
அதுதான் கவலை
மறந்து ஏனென
முதலில் கூறு
காரணம் சரியானால்
ஏற்பேன் பாரு
அதுவரை சமரசம்
என்ற பேச்சு
என்பதற் கிங்கே
இடம் கிடையாது
தூது அனுப்பிப்
பய னும் இல்லை
திட்டி அனுப்புவேன்
வழியெனக்கில்லை
குருகுலம், 6-6-2024, காலை 7.30
1618 பதில் வேண்டும்
ஒன்று எனக்குன்
பதிலைச் சொல்லு
அல்லது நான்
சொல்வதைக் கேளு
இரண்டும் செய்யேன்
என்று முரண்டால்
யாரிடம் சென்று
நானும் கேட்பது
மூவரும் தனித்தனித்
தெய்வமாய் இருந்தால்
ஒருவரை ஒருவர்
மாற்றி கேட்கலாம்
மூவரில் ஒன்றாய்
ஒன்றில் முன்றாய்
இருக்கும் போது
என்ன செய்யலாம்
இப்படி முவரும்
கூட்டணி அமைத்து
செய்வது சற்றும்
சரியே இல்லை
யாருக்கோ எவருக்கோ
சொல்கிறேன் என்று
இதுவரை நீயும்
எண்ணி இருந்தால்
முதலில் அந்த
எண்ணத்தை மாற்று
உன்னிடமே தான்
சொல்கிறேன் கேளு
யாருக்கோ எவருக்கோ
நடக்கு என்று
நீயும் சற்று
ஒதுங்கி விடாத
நடப்பது நடக்கட்டும்
நமக்கென்ன வந்தது
என்று எண்ணி
சென்று விடாதே
இங்குதான் நடக்குது
உனது படை ப்பில்
முதலில் நீ அதை
மறந்து விடாதே
எமக்காய் பேச
எவரும் இல்லை
எல்லோர் நிலையு ம்
ஒன்றாய் இருக்க
இதுவரை நாங்கள்
கேட்டவை எல்லாம்
செய்ததாய் எவரும்
சொல்லவும் இல்லை
வேறு உலகில்
என்ன நடக்குது
என்கிற தகவல்
எம்மிடம் இல்லை
எமது நிலையே
மோசமாய் இருக்க
அதுபற்றி யோசிக்க
நேரம் இல்லை
பிரபல தெய்வங்கள்
போல உனக்கும்
மனையாள் என்று
ஒருத்தி இருந்தால்
அவளிடம் சென்று
கூறலாம் என்றால்
அதற்கும் கூட
வழியிங்கு இல்லை
அதைவிட்டு போகட்டும்
உன்போல் நானும்
திருமணம் செய்யலை
என்று சொன்னால்
அதற்கும் கூட
உன்மனம் மசியலை
இதுதான் இப்போ
எனக்குக் கவலை
என்னதான் செய்வதாய்
எண்ணி இருக்காய்
அதைமட்டு மாவது
ஒருமுறை கூறு
அல்லது இதுபோல்
அடிக்கடி வந்து
தொல்லை தருவேன்
எண்ணிப் பாரு
குருகுலம், 10-6-2024 இரவு
1619 மன்னிப்பு தண்டனை
எந்தத் தவறு
நான் செய்தாலும்
எதையும் திருத்த
நீயும் உள்ளாய்
என்ற எண்ணம்
எண்ணில் இருக்க
தவறுகள் எண்ணி
கவலை எதற்கு
தவறி செய்தால்
தவறு என்றும்
தெரிந்தே செய்தால்
தப்பு என்றும்
பிறகு விளக்கம்
பலர் தந்தாலும்
உனது பார்வையில்
இரண்டும் ஒன்றே
தப்புக்குத் தண்டனை
தவறுக்கு மன்னிப்பு
என்ற பேதம்
உன்னிடம் இல்லை
தண்டித்தது மன்னித்து
மன்னித்து தண்டித்தது
இரண்டும் செய்யாமல்
விடுவதும் இல்லை
எதனை எப்படி
முதலில் செய்வாய்
என்பது நிச்சயம்
எமக்குத் தெரியாது
ஆகவே இரண்டுக்கும்
ஆயதம் ஆகி
வந்தபின் தந்திடும்
கிருபையை எண்ணி
அதிகம் மன்னித்து
குறைவாய் தண்டித்து
வழக்கம் போல்
இருந்தால் போதும்
என்று உன்னிடம்
அனுதினம் வேண்டி
எனக்காய் தண்டனை
ஏற்றுக் கொண்ட
உனது அருளை
மட்டும் எண்ணி
நானும் வந்தேன்
திருவடி தேடி
குருகுலம், 7-6-2024, இரவு
7-6-2024 11.50
BT Song 1620 பேசாமல் பேசி
சொல்ல ஏதும்
இல்லாத போது
சொல்லத் தேவை
எனக்கு ஏது
சொல்லாமல் புரிய
நீ உள்ள போது
புரிய வைக்க
அவசியம் ஏது
சொல்லாமல் உனக்கு
சொன்ன பின்னே, நீ
புரிந்ததை புரிந்து
அமைதி கொண்டேன்
பெற்றவள் அரிவாள்
பிள்ளை குணத்தை
படைத்த நீ அறிவாய்
என் மனதை
ஆகவே நானும்
சொல்ல ஏதும்
இல்லாது போக
மவுனமாய் இருக்கேன்
இதுவரை நானும்
சொன்னதை எண்ணி
நாணம் கொண்டு
பேச்சின்றி நிற்க
நீத்தேடி வந்த
மவுனமாய் அமர்ந்து
பேசாமல் பேசி
உறவாடு கின்றாய்
அதிலுள்ள நெருக்கம்
உணர்ந்த பின்னர்
வேறு வழியில்
அதை நாடாமல்
முன்போல் பலவும்
வீணாய்ப் பேசாமல்
இதுபோல் இருக்கா
எண்ணி நானும்
எதுவும் சொல்லாது
ஏதும் கேட்காது
இதுபோல் வாழும்
வரம் மட்டும் கேட்டேன்
குருகுலம், 8-6-2025, காலை 6.00
1621 தாக்கம் தீரல
வாசித்து யோசித்து
அதன்பின் எழுதி
இதுவரை கண்டது
ஒன்றும் இல்லை
எதையோ படித்து
பலத்தை யோசித்து
சிலதை எழுதி
பயனென்ன கண்டேன்
கானல் நீராய்
அனைத்தும் தோன்ற
தாக்கம் தீர்க்க
தேடி நான் ஓட
இறுதி வரையில்
நீரும் கிடைக்கல
ஆயினும் ஓட்டமோ
இன்னும் நீர்கல
கானல் நீர் தேடி
ஓடும் மானும்
இதில் சுருண்டு
மடிந்து வீழும்
ஆனால் அந்த
முடிவும் வராது
தொடர்ந்து ஓடும்
என்கதி என்னவாகும்
கானல் நீரென
நிறுத்த முடியல
தொடர்ந்து ஒட்டத்
தெம்பும் இல்ல
ஆயினும் இதையும்
வேடிக்கைப் பார்க்கும்
உன்செயல் மட்டும்
சரியே இல்ல
இந்த ஓட்டம்
எதற்கு ஓடணும்
எதனை அடைய
இன்னும் தொடரணும்
ஜீவ ஊற்று
உன்னிடம் வந்தும்
கானல் தேடி
ஏன் நான் ஓடணும்
ஜீவ நீரைப்
பருகிய பின்னும்
இந்த தாக்கம்
இன்னும் போகலை
அதனை நீக்கும்
வழிவகை மட்டும்
இன்னும் எனக்கும்
புலப்பட வில்லை
அறிவுப் பசிக்குது
தீனி போட்டு
மனதின் வேட்கைக்கு
நீரும் கொடுத்தும்
ஆன்ம தாக்கம்
உன்னில் நிறைய
மற்றதன் தாக்கம்
எப்போ போகும்
சித்தத்தை அடக்கி
சும்மா இருக்கும்
தத்துவம் தன்னை
நீயும் தராமல்
இதற்கு வழியோ
இல்லை வேறு
குருவே தந்தால்
உய்வேன் நன்று
குருகுலம் 8-6-2024, 11.00 pm.
1622 எனக்குள்ள கடமை
என்னதான் செய்யச்
சொல்கிறாய் என்னை
எதையும் தெளிவாக
சொல்லித் தராமல்
அதற்கு வழியில்லை
என்று ஆனால்
செயலில் செய்து
காட்ட வேண்டும்
செய்வதா விடுவதா
என்ற குழப்பம்
சிந்தையில் அடிக்கடி
வந்திடும் போது
எதைதான் செய்யணும்
எதைஎதை விடணும்
என்கிற தெளிவைத்த
தந்திட வேண்டும்
எனக்காய் முடிவு
எடுக்கத் தெரியல
இதிலே உதவ
யாரும் இல்லா
பிறருக்கு நிலையை
எடுத்துச் சொல்லணும்
அதையும் அவரும்
புரிந்து கொள்ளணும்
அதற்கு எவருக்கும்
நேரம் இல்ல
அதுபற்றி எவருக்கும்
அக்கறை இல்ல
அவரைச் சொல்லி
குத்தமும் இல்லை
அவருக்கு எந்நிலை
தெரியாத போது
தெரிந்த நீயே
புரியாமல் இருக்க
தெரியாதபிறரை
கேட்டு என்செய்ய
ஆகவே ஒருமுடிவுக்கு
நானும் வந்தேன்
ஏதும் செய்யாமல்
சும்மா இருப்பேன்
நடந்தால் காரியம்
தன்போல் நடக்கட்டும்
அல்லது அதிலும்
உன்சித்த ஆகட்டும்
எனவே இதுபற்றி
நான்னொன்று ம் பேசேன்
அதுபற்றி இனிமேல்
உன்னையும் கேட்கேன்
இதுவன்றி நான்செய்ய
ஏதும் இல்லை
இதுதான் இப்போ
எனது நிலைமை
மற்ற அனைத்தையும்
உன்கையில் விட்டு
பொறுமை காப்பதே
எனக்குள்ள கடமை
12-6-2024, இரவு 11.45
BT Song 1623
என் பள்ளி நண்பர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் அவர்களின் சொந்த ஊர் விருதாச்சலம். அவர் சமீபத்தில் இந்த ஊரைப்பற்றி ஒரு புதிய புத்தகம் வெளியிட்டார், இதற்கான பழைய தகவல்களுக்கு புதிய பகுதிகளைச் சேர்த்தார். இந்த ஊர் கண்டராதித்ய சோழனால் கட்டப்பட்ட ‘விருதாகிரீஸ்வரர்’ கோவிலுக்குப் பிரசித்தம். விருதாச்சலம் ‘விருதா-காசி’ என்றும், அதாவது காசியைவிடப் பழமையானது என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் காசியிலும் வீசம் அதிகம் அழைக்கப்படுகிறது. யாரேனும் இறந்து, அவர்களின் எலும்புகளை இந்த நதியில் மூழ்கினால், அவை கல்லாக மாறும் என்பது இங்கு உள்ள ஒரு மரபு.
பழைய மலை நாதார் (பழ + மலை + நாதர்) என்பது சிவன் பெயர். . ஆனால், அவரது பிரதான துணையின் பெயர் ‘விருதாம்பா,’ அதாவது ‘மூதாட்டி’ என்பதாகும். பிரபல சைவ அடியார் சுந்தரர் இந்தக் கோவிலுக்கு வந்த போது , தெய்வத்தின் மனைவி மூதாட்டி என்பதால் பாட மாட்டேன் என்றார். அதனால் சுந்தரரின் பாடல்களை இந்தக் கோவிலுக்கு பெற வேண்டும் என்பதால், உள்ளூர் மக்கள் உடனே மற்றொரு துணையை உருவாக்கி, ‘பாலம்பிகை’ என அழைத்தனர், அதாவது ‘இளமையான பெண்’. அதன் பிறகு தான் சுந்தரர் பல பாடல்களைப் பாடினார்.
எங்கள் பெற்றோர் திருச்சியிலிருந்து திரும்பிய பிறகு, நாங்கள் விருதாச்சலத்தில் நீண்ட காலம் வசித்தோம். நான் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை இங்கேதான் படித்தேன். எங்கள் வீடு நதியின் அருகில் இருந்தது, எனவே கடும் வெள்ளத்தைத் தவிர, நாங்கள் பள்ளிக்கு நதியை கடந்தே செல்வோம். எங்கள் காலத்தில், கடுமையான கோடை தவிர, பெரும்பாலும் நீர் ஓடியது. ஆனால் இப்போது, ஒரு உள்ளூர் சாக்கடை மட்டுமே ஓடுகிறது, யாரும் இப்போது நதியில் காலைக் கால் வைக்க முடியாது.
இந்த ஊரின் வரலாற்றை எப்படிப் பதிவு செய்வேன் என யோசிக்கும்போது, அதை கவிதை வடிவில் எழுத முடிவு செய்தேன், சில வரலாற்று மற்றும் புராணக் கூறுகளைச் சேர்த்து, சுற்றுச்சூழல் கவலைகளை கலந்து. வழக்கம்போல, சில நகைச்சுவையை சேர்க்க விரும்பினேன், அதன் விளைவு இந்தப் பாடல்.
BT Song 1623 ஒரு தள வரலாறு
பழமலை நாதன் முதுமலை நாதன்
பனிமலை விட்டு இதை நாடி வந்தான்
காரணம் எதுவென அடியவர் கேட்க
“காசியில் வீசம் அதிகம் என்பதால் 1
‘விருத -காசியை ‘ நாடி வந்தேன் என்றான்
தன்னுடல் பாதியாய் இருக்கும் அன்னையை
அழைத்தது வந்து இங்கே உறைந்தான்
நம்ப மறுப்போர் வந்து பாரீர் 2
கரைத்த எலும்பும் கல்லாய் மாறும்
அதிசயம் காண நேரிலே வாரீர்
அய்யோட்ன்னையை அனுதினம் வணங்கி
அளவிலா அருளைப் பெற்றிட வாரீர் 3
இளமை முருக்கு கொண்ட சுந்தரர்
ஒருமுறை இத்தளம் வந்தபோது
முதுமை அடைந்த அன்னையைக் கண்டு
திகைத்து நின்று சிவனிடம் சென்று 4
“என்றும் நீர் இளமையாய் இருக்க
அன்னை எப்படி முதுமை அடைந்தாள்
என்றதும் சிவனும் அவனுக்கு பதிலாய்
‘தாய் வீடு விட்டு இங்கு வந்ததால் 5
அவளது மனதும் வாட்டிதான் போச்சு
அதனால் முதுமை தன்போல் வந்தாச்சு”
இதைக் கேட்டதும் மனம்வாடி சுந்தரர்
“மனைவியின் சாபத்தால் முதுமை அடைந்து 7
மீண்டும் இளமை அடைந்த உன்தொண்டர்
திருநீல கண்டர் தளம் தில்லையில் இருக்கு
அதைச் செய்ததும் நீர் தான் என்றான்
அதுபோல் அன்னையை ஆக்கு என்றான் 8
இல்லாது போனால் உன்னைப் போற்றி
ஒருபாடல் கூட நான்பாட மாட்டேன்
என்று வெகுண்டு சொன்னதும் சிவனும்
அடியவர் பாடலை இழக்க விரும்பாது 9
ஐயனும் அணையின் அனுமதி கேட்டு
அவளுக்கு இளையாள் ஒருத்தி தன்னை
அழைத்து வந்து வைத்துக் கொண்டான்
அதன்பின் அடியவர் கூட்டமாய் வந்து 10
அன்னை இருவரோ டயைனைக் கண்டு
புண்ணிய மடுவில் மூழ்கிக் குளிக்க
மணிமுத்தாறும் வறண்டு போனது
அதன்பின் ஊர் மக்கள் அனைவரும் 11
தம் வீட்டு சாக்கடை அதில் அனுப்ப
புண்ணிய மடுவும் போய்விட்டது
பாவ மடுவாய் மாறி விட்டது
இப்போது தன் தளநிலைக் கண்டு 12
சிவனும் கூட மனமும் நொந்து
மீண்டும் பனிமலை சென்றிட எண்ணி
மனைவியர் தம்மிடம் அனுமதி கேட்க
“அடிக்கடி குடித்தனம் மாறுவதென்பது 13
முதுமையில் முடியாது என்றாள் மூத்தவள்
அதைக்கேட்டு இளையவள் அவளுடன் சேர்ந்து
எனக்குத் தாய் வீடு அருகில் இருக்கு
ஆகவே வர இயலாது என்றாள் 14
இறைவனே ஆனாலும் மனைவியின் பேச்சை
மீற முடியாது என்பதால் சிவனும்
ஆவது ஆகட்டும் நாமென்ன செய்ய
என்று நொந்து வாடியே நின்றான் 15
அவனது தற்போதைய நிலையைக் கண்டு
அவன் மீது சற்று பரிவு கொண்டு
“இதற்கொரு மாற்று உன்னிடம் உண்டு
அதுவும் உனக்கு எளிதான ஒன்று 16
கங்கை காவிரி தம்மையும் இணைத்து
அத்துடன் பல நதிகளை சேர்த்தால்
மீண்டும் ஆற்றில் நீரும் பெருகும்
கழிவு நீர் நீங்கி புண்ணியம் திரும்பும் “17
என்ற யோசனை நான் சொன்னதும்
சிரித்த சிவனும் என்னை நோக்கி
கங்கையும் அங்கே கதறி அழுகிறாள்
இதற்காகவா நான் வந்தேன் என்றாள் 18
அவளை மீட்க வழியும் இல்லை
தலையில் வைக்க இடமும் இல்லை
இரண்டுடன் இங்கே திண்டாடும் போது
மூன்று என்றால் என்நிலை என்னாவது 19
வேதகாலம் மீண்டும் வந்தால்
இந்திரன் மீண்டும் அவளை மீட்கலாம்
இதிகாச காலம் ஒருவேளை வந்தால்
பகீரதன் மீண்டும் தவமும் செய்யலாம் 20
அதுகூட வேண்டாம் அரசர்கள் ஆண்டால்
ஒருவேளை நதிகளை நாமும் இணைக்கலாம்
காலம் கலிகாலம் ஆகியே போச்சு
அதற்கு வாய்ப்பு இல்லாமல் ஆச்சு 21
அகத்தியன் மீண்டும் வடக்கே சென்றால்
கங்கையை மீண்டும் கொண்டு வந்து
அதனுடன் இணைக்கலாம் காவிரி தன்னை
அதற்கும் இப்போ வழியும் இல்லை 22
முடியாட்சி நீங்கி குட்டியாச்சி வந்ததும்
அரசியல் வாதிகள் ஆதிக்கம் செய்ய
நதிகள் இணைய வாய்ப்பு இல்லை
நானும் செய்வதற்க்கு கொன்றும் இல்லை 23
காட்டை அழித்து கரிமில வாயுவைப் பெருக்க
பனிமலை கூட உருக்கலாச்சு
ஆகவே ஜீவ நதி என்கிற வார்த்தைக்கு
இடம் இனிமேல் இல்லாமல் போச்சு 24
அடையாறு ஆற்றின் கதிவென்ன ஆச்சு
கூவமாய் இப்போ மாறியும் போச்சு
காவேரி கதி கூட இப்பொது இதுதான்
அழிக்கும் காலம் மீண்டும் வந்தாச்சு 25
என்றதும் நானும் மவுனம் கொண்டு
எவ்வித பதிலும் சொல்ல இயலாது
அதையேனும் சீக்கிரம் செய்தால் நல்லது
என்று கூறி தள வரலாறு முடிக்கிறேன் 26
குருகுலம், 14-6-2024, மாலை 6.00
My school friend Sri Meenakshi Sundaram’s hometown is Vrudhachalam. He recently published a new book about this town, including updated material to give a fresh perspective on the previously available information. Vrudhachalam is famous for the temple called ‘Virudhagreeswarar,’ constructed by Kandaraditya Sozhan. Vrudhachalam is also known as ‘Vrudha-Kasi,’ meaning older than Kasi, and is considered ‘more meritorious than Kasi’ [காசியிலும் வீசம் அதிகம்]. It is believed that if anyone dies and their bones are immersed in this river, the bones will turn to stone.
Interestingly, the name of the deity in Tamil is ‘One who is the Lord of the ancient hill’ (pazha + malai + Nadhar). However, the name of his main consort is ‘Vrudhamba,’ which means ‘old lady.’ When the famous Saiva saint Sundarar came to visit this temple, he refused to sing about the Lord because his wife was an old lady. To ensure that Sundarar’s songs would bless their temple, the local people quickly created another consort named ‘Balambihai,’ meaning ‘Young Lady.’ Only then did Sundarar sing several songs.
We lived in Vrudhachalam for a long period after my parents moved back from Trichy. I studied from elementary school to high school there. Our house was situated next to the river, so we used to go to school by crossing the river, except during extreme floods. In our time, except during severe summers, the water flowed most of the time. But now, only a local ditch is flowing, and no one can step into the river anymore.
As I was thinking about how I would write the history of this place, I decided to write it in poetic form, mixing some historical and mythological elements with ecological concerns. As usual, I wanted to add some humor to it, and the result is this song.
The Story of a Place – BT Song 1621
Pazhamalai Nathar (Lord of the Ancient Hill), Mudhumalai Nathar (Lord of the Old Hill),
Came seeking this place from the snow mountain.
When devotees asked for the reason,
He said, “Because it is more meritorious than Kasi.” 1
“I came seeking Virudha-Kasi,” he said,
And called his consort, who resides in his body,
She came and settled here with him.
Those who doubt this, come and see. 2
Bones immersed here will turn to stone,
Come see this miracle in person.
Revere the Lord and his consort daily,
And receive limitless grace. 3
The young Sundarar once came to this place,
When he saw the aged consort,
He was shocked and went to Lord Shiva,
Saying, “How can she be old if you remain youthful?” 4
To this, Shiva replied,
“Since she left her natal home and came here,
Her mind has been troubled,
Thus she too aged like me.” 5
Hearing this, Sundarar’s heart sank,
“The Lord who became old due to his wife’s curse,
The Thiruneelakandar temple is in Thillai,
You know this well, 6
Your devotees who regained their youth,
Thiru Neelakandar’s place is in Thillai.
He said, “It was you who made that,
Similarly, create the mother,” he said 7.
Not wanting to lose the devotee’s songs,
The Lord sought the consort’s permission,
And brought in a young consort,
Then the devotees came in groups. 8
Seeing the two consorts and the Lord,
They bathed in the sacred tank.
But the river has dried up now,
And the townspeople send their sewage there, 9
Turning the sacred tank into a cesspool.
Seeing the current state of his place,
Even Shiva was disheartened,
Thinking of returning to the snow mountain, 10
When he asked his consorts for permission,
The elder one said, “Moving frequently is not possible in old age.”
The younger one joined her, saying,
“My parental home is nearby, so I can’t come.” 11
Even as a Lord, he couldn’t defy his wives,
So Shiva thought, “Whatever happens, what can we do?”
He stood there disheartened.
Seeing his state, I felt some pity for him, 12
And suggested an alternative,
That would be easy for him:
“If Ganga and Kaveri are joined,
Along with other rivers, 13
Water will flow in the river again,
Purging the sewage and bringing back sanctity.”
When I said this, Shiva smiled at me,
“Ganga is already crying in agony over there, 14
How can I bring her for this?
There’s no place to keep her on my head,
With two consorts already struggling here,
What will happen if there are three?” 15
“When the Vedic era returns,
Indra might rescue her again,
If the epic era returns,
Bhagiratha might perform penance again.” 16
“If not, if kings rule again,
Perhaps they might connect the rivers,
But now it’s the Kali Yuga,
With no chance for that to happen.” 17
If Agastya goes north again,
He can bring the Ganges back
And join it with the Kaveri.
But now, there is no way for that. 18
“When monarchy ended and democracy came,
Politicians took control,
With no chance of connecting rivers,
Even I can’t do anything.” 19
“Destroying forests to increase carbon dioxide,
Even the snow mountain has melted,
Thus, there’s no place
For a life-giving river anymore.” 20
“Adyar river’s fate has become like a sewer,
Kaveri’s fate is now the same,
The time of destruction has returned.”
When he said this, I remained silent, 21
Unable to respond,
“If this is done quickly, it’s good,”
With that, I conclude this story of the place. 22
KURUGULAM, 14-6-2024, Evening 6.00
मेरे स्कूल के दोस्त श्री मीनाक्षी सुंदरम का गृह नगर वृधाचलम है। उन्होंने हाल ही में इस शहर के बारे में एक नई किताब प्रकाशित की है, जिसमें पहले से उपलब्ध जानकारी को एक नया दृष्टिकोण देने के लिए अद्यतन सामग्री शामिल है। वृधाचलम ‘विरुधाग्रीश्वरर’ नामक मंदिर के लिए प्रसिद्ध है, जिसका निर्माण कंदरादित्य चोल ने किया था। वृधाचलम को ‘वृद्ध-कासी’ के रूप में भी जाना जाता है, जिसका अर्थ है काशी से पुराना, और इसे ‘काशी से अधिक पुण्यदायी’ माना जाता है [காசியிலும் வீசம் அதிகம்]. यह माना जाता है कि यदि कोई यहाँ मर जाता है और उसकी हड्डियाँ इस नदी में डुबोई जाती हैं, तो हड्डियाँ पत्थर में बदल जाती हैं।
दिलचस्प बात यह है कि तमिल में देवता का नाम ‘प्राचीन पहाड़ी का स्वामी’ (पझा + मलाई + नाधर) है। हालांकि, उनकी मुख्य पत्नी का नाम ‘वृद्धाम्बा’ है, जिसका अर्थ ‘वृद्ध महिला’ है। जब प्रसिद्ध सैव संत सुन्दरर इस मंदिर में आए, तो उन्होंने भगवान के बारे में गाने से मना कर दिया क्योंकि उनकी पत्नी वृद्ध महिला थी। सुनिश्चित करने के लिए कि सुन्दरर के गीत उनके मंदिर को आशीर्वाद दें, स्थानीय लोगों ने तुरंत एक और पत्नी बनाई और उसका नाम ‘बालम्बिकाई’ रखा, जिसका अर्थ ‘युवा महिला’ है। तब ही सुन्दरर ने कई गीत गाए।
हम वृधाचलम में लंबे समय तक रहे, जब मेरे माता-पिता त्रिची से वापस आए। मैंने वहां प्राथमिक स्कूल से लेकर उच्च विद्यालय तक पढ़ाई की। हमारा घर नदी के पास स्थित था, इसलिए हम स्कूल जाने के लिए नदी को पार करते थे, सिवाय अत्यधिक बाढ़ के समय। हमारे समय में, कठोर गर्मी को छोड़कर, अधिकांश समय पानी बहता था। लेकिन अब, केवल एक स्थानीय नाला बह रहा है, और अब कोई भी नदी में कदम नहीं रख सकता।
जब मैं सोच रहा था कि इस स्थान का इतिहास कैसे लिखूंगा, तो मैंने इसे काव्यात्मक रूप में लिखने का फैसला किया, जिसमें कुछ ऐतिहासिक और पौराणिक तत्वों को पर्यावरणीय चिंताओं के साथ मिलाया। हमेशा की तरह, मैंने इसमें कुछ हास्य जोड़ना चाहा, और परिणामस्वरूप यह गीत बना।
एक जगह की कहानी – बीटी गीत 1621
पलामलाई नाथर (प्राचीन पर्वत के भगवान), मुदुमलाई नाथर (पुराने पर्वत के भगवान),
बर्फीले पर्वत से इस स्थान की खोज में आए।
जब भक्तों ने कारण पूछा,
उन्होंने कहा, “क्योंकि यह काशी से अधिक पुण्य है।” 1
“मैं विरुधा-काशी की खोज में आया,” उन्होंने कहा,
और अपनी पत्नी को बुलाया, जो उनके शरीर में निवास करती है,
वह आई और उनके साथ यहां बस गई।
जो लोग इस पर संदेह करते हैं, वे आकर देखें। 2
यहां डूबे हुए हड्डियां पत्थर में बदल जाएंगी,
इस चमत्कार को देखने के लिए व्यक्ति में आएं।
भगवान और उनकी पत्नी की दैनिक पूजा करें,
और असीम कृपा प्राप्त करें। 3
एक बार युवा सुन्दरर इस स्थान पर आए,
जब उन्होंने वृद्ध पत्नी को देखा,
वह हैरान हो गए और भगवान शिव के पास गए,
कहते हुए, “आप हमेशा युवा रहते हैं, तो आपकी पत्नी कैसे वृद्ध हो गई?” 4
इस पर शिव ने जवाब दिया,
“क्योंकि वह अपना घर छोड़कर यहां आई,
उसका मन दुखी हो गया,
इसलिए वह भी मेरी तरह वृद्ध हो गई।” 5
यह सुनकर सुन्दरर का दिल टूट गया,
“जो भगवान अपनी पत्नी के शाप के कारण वृद्ध हो गए,
तिरुनीलकंदर मंदिर थिल्लई में है,
आप इसे अच्छी तरह जानते हैं, 6
आपके भक्त जिन्होंने अपनी जवानी फिर से पाई,
तिरु नीलकंदर का स्थान थिल्लई में है।
उन्होंने कहा, “यह आप ही थे जिन्होंने वह बनाया,
उसी तरह, माँ को भी बनाइए,” उन्होंने कहा। 7
आपने खुद ऐसा किया,
उसे भी वैसे ही युवा बनाएं,” उन्होंने कहा।
“अगर नहीं, तो मैं एक भी गाना नहीं गाऊंगा,”
सुन्दरर ने क्रोधित होकर कहा। 8
भक्तों के गाने न खोने के लिए,
भगवान ने पत्नी की अनुमति मांगी,
और एक युवा पत्नी लाई,
फिर भक्त समूह में आए। 9
दो पत्नियों और भगवान को देखकर,
उन्होंने पवित्र तालाब में स्नान किया।
लेकिन अब नदी सूख गई है,
और नगरवासी अपना गंदा पानी उसमें भेजते हैं, 10
पवित्र तालाब को एक गंदे नाले में बदल देते हैं।
अपने स्थान की वर्तमान स्थिति को देखकर,
यहां तक कि शिव भी दुखी हो गए,
वापस बर्फीले पर्वत पर लौटने का सोचने लगे, 11
जब उन्होंने अपनी पत्नियों से अनुमति मांगी,
बड़ी पत्नी ने कहा, “बुढ़ापे में बार-बार स्थान बदलना संभव नहीं है।”
छोटी पत्नी ने उनके साथ मिलकर कहा,
“मेरा मायका पास ही है, इसलिए मैं नहीं आ सकती।” 12
यहां तक कि भगवान होकर भी, वह अपनी पत्नियों की बात नहीं टाल सकते थे,
तो शिव ने सोचा, “जो भी हो, हम क्या कर सकते हैं?”
वह दुखी होकर खड़े रहे।
उनकी स्थिति देखकर, मुझे उन पर थोड़ी दया आई, 13
और एक वैकल्पिक उपाय सुझाया,
जो उनके लिए आसान होगा:
“अगर गंगा और कावेरी को जोड़ा जाए,
और अन्य नदियों के साथ, 14
नदी में फिर से पानी बहेगा,
गंदगी साफ हो जाएगी और पुण्य वापस आ जाएगा।”
जब मैंने यह कहा, शिव हंस पड़े,
“गंगा वहां पहले से ही दुखी होकर रो रही है, 15
इसे लाने का कोई उपाय नहीं है,
सर पर रखने की जगह भी नहीं है,
दो पत्नियों के साथ पहले ही संघर्ष कर रहा हूं,
तीसरी होने पर क्या होगा?” 16
“जब वैदिक युग वापस आएगा,
इंद्र फिर से उसे बचा सकते हैं,
अगर महाकाव्य युग वापस आएगा,
भागीरथ फिर से तपस्या कर सकते हैं।” 17
“अगर नहीं, अगर राजा फिर से शासन करेंगे,
शायद वे नदियों को जोड़ सकते हैं,
लेकिन अब यह कलियुग है,
जिसमें ऐसा होने का कोई मौका नहीं है।” 18
अगर अगस्त्य फिर से उत्तर की ओर जाए,
वह गंगा को वापस ला सकता है
और उसे कावेरी से जोड़ सकता है।
लेकिन अब, इसके लिए कोई रास्ता नहीं है। 19
“जब राजशाही समाप्त हो गई और लोकतंत्र आया,
राजनेताओं ने सत्ता संभाली,
नदियों को जोड़ने का कोई मौका नहीं है,
यहां तक कि मैं भी कुछ नहीं कर सकता।” 20
“वनों को नष्ट कर कार्बन डाइऑक्साइड बढ़ाने के लिए,
बर्फीले पर्वत भी पिघल गए हैं,
इसलिए जीवनदायिनी नदी के लिए
अब कोई जगह नहीं बची है।” 21
“अड्यार नदी का हाल क्या हुआ,
अब यह एक गंदे नाले में बदल गई है,
कावेरी का हाल भी अब यही है,
विनाश का समय फिर से आ गया है।” 22
यह कहते हुए, मैं भी चुप हो गया,
कोई जवाब नहीं दे सका,
“अगर यह जल्दी किया जाए, तो अच्छा होगा,”
कहते हुए मैं इस स्थान की कहानी समाप्त करता हूं। 23
कुरुगुलम, 14-6-2024, शाम 6.00
BT Song 1624
கவனம் எங்கே
ஏனோதானோ என
நீ இருக்காதே
எனக்கென்ன வந்தது
என ஒதுங்காதே
அடிக்கடி வாதைகள்
உடலில் வந்தால்
தாங்க பெலனில்லை
புரிந்திடு முன்னே
எதோ ஒருமுறை
படு த்து எழும்பலாம்
எப்போதும் நோயென்றால்
என்ன செய்யலாம்
கவனமாய் இருக்கத்தான்
பார்க்கிறேன் நானும்
கஷ்டம் பிறருக்குத்
தரக்கூடா தென்று
ஆகவே அதையும் நீ
கவனித்தில் கொள்ளணும்
ஆன்மா மனதுடன்
உடல்தே வை எண்ணனும்
அதையும் செய்வதாய்
பலமுறை சொன்னாலும்
செயலில் அதையும்
காட்ட வேண்டும்
கவனம் எங்கோ
திரும்பிப் போச்சு
அதுஎன் கவனத்துக்கு
வந்தும் ஆச்சு
ஆயிரமா பொறுப்பு
உனக்கும் இருக்கு
அதுவும் எனக்குத்
தெரிந்தே இருக்கு
ஆனால் தனித்து
இருப்பவர் மீது
தனித்த கவனம்
எங்கே இருக்கு
‘எத்தனைத் தூதரை
உனக்கென வைத்தேன்’
என்று மட்டும்
என்னிடம் சொல்லாதே
அடிக்கடி அவரும்
விடுப்பு எடுக்கிறார்
அதையே நீயும்
மறந்து விடாதே
நீதான் என்னுடன்
எப்போதும் இருக்கணும்
குழந்தைக்குத் தாய்போல்
கூடவே இருக்கணும்
தூதரை மற்றவர்
வேலைக்கு அனுப்பி
எங்கும் போகாமல்
என்னுடன் தங்கு
கண்ணின் மணிபோல்
கவனம் வைத்தது
நோய்நொடிநீக்கி
அனுதினம் காக்கணும்
ஏனோ தானோ
என இராமல்
கவனமாய் இருந்து
என்னைப் பார்க்கணும்
குருகுலம் , 18-6-2024, இரவு 11.05
BT Song 1624
நழுவல் மழுப்பல்
என்னென்ன சொல்லி
என்னிடம் மழுப்புறாய்
ஏதேதோ புதிய
கதைகள் சொல்கிறாய்
உனது மழுப்பல்
அனைத்தும் அறிவேன்
நீசொன்ன கதைகளை
தொகுத்து வை த்தேன்
உன்போல் கதைசொல்ல
ஒருவரும் இல்லை
உன்போல் மழுப்ப
யாரும் இல்லை
எல்லாம் எனக்கும்
புரிந்து இருக்கு
என்பதும் உனக்குத்
தெரிந்தும் இருக்கு
ஆயினும் இந்த
துணிவு உனக்கு
எப்படி மீண்டும்
மீண்டும் வருது
அபலை ஆகவே
கேட்டுக் கொள்வாள்
எ தைச் சொன்னாலும்
ஏற்றுக் கொள்வாள்
என்ற எண்ணம்
இருப்பதினாலா
ஏமாளி இவளென்ற
எண்ணத்தினாலா
அதற்கு என்னிடம்
வாய்ப்பே இல்லை
அதுவு ம் உனக்குத்
தெரியாமல் இல்லை
ஏதோ பிழைத்துப்
போகட்டும் என்று
எண்ணி விடுகிறேன்
என்ற எண்ணமா
உன்னிந்த நழுவல்
மழுப்பல் கண்டு
என்னுள்ளே நானும்
சிரித்து மகிழ
அதிலே ஒருவித
பரவசம் இருக்க
அதுவும் தொடர்ந்து
எனக்கு கிடைக்க
நானும் நழுவல்
மழுப்பல் செய்தேன்
நீயும் அதிலே
மகிழ்ந்தாய் அறிவேன்
இந்த ஊடல்
கஊ லின் ஊடே
உனக்கும் எனக்கும்
உள்ள உறவின்
நெருக்கம் இன்னும்
அதிகம் ஆக
இருவரும் தொடர்வோம்
இதையே இன்னும்
குருகுலம், 19-6-2024
BT Song 1625 உன்குரல்
வாயால் எதையும்
பேசும் முன்னே
வாயில் வார்த்தை
வந்திடும் முன்னே
உள்ளே ஒருகுரல்
தெளிவாக்க கேட்குது
அதுவும் உன்குரல்
என்பது புரியுது
உன்குரல் கேட்பது
அத்தனை எளிதல்ல
என்மனம் ஆயத்தம்
இல்லாத போது
அதுவும் மாபெரும்
தொல்லையாய் இருக்கு
அதுவும் உனக்குத்
தெரிந்தே இருக்கு
ஆயினும் ஒன்றும்
செய்யாமல் நீயும்
வேடிக்கை பார்ப்பது
வியப்பாக இருக்கு
படைத்த பின்னே
பொறுப்பு என்பது
இருவர்க்கும் பொதுவாய்
இருக்கும் போது
பொறுப்பு முழுதும்
என்னிடம் விட்டு
நீகாட்டும் வேடிக்கை
நன்றாக இருக்குது
சரிவிடு போகட்டும்
உனக்னது மகிழ்ச்சியென்று
எனக்கு நன்றாக
புரியும் போது
ஆகவே நானும்
வந்து சேர்ந்து
வேடிக்கை பார்க்க
வந்தேன் இப்போது
என்னை வைத்தே
வேடிக்கை காட்டுவாய்
எனக்கே கூட
வேடிக்கை காட்டுவாய்
ஆகவே இருவரும்
ஒன்றாக சேர்ந்து
வேடிக்கை காட்டி
வேடிக்கை பார்த்தால்
இறுதியில் இருவரும்
வேடிக்கை ஆவோம்
அதைமட்டும் நீ
தெளிவாக அறிவாய்
ஆகவே நாமிருவரும்
இறுதியில் பிறருக்கு
வேடிக்கை ஆகாமல்
இருக்கனும் என்றால்
உள்ளே ஒலிக்கும்
உன்குரல் உணர்ந்து
அதன்படி வாழ
எனக்கு அருளிடு
குருகுலம், 23-6-2024, மாலை 4.50
BT Song 1626 முறைக்காதே
என்னதான் காரணம்
எனக்குத் தெரியல
எ வரை குறைசொல்ல
எனக்கும் புரியல
உன்னை குறைசொல்ல
எனக்கு வழியில்ல
என்னையும் குறைசொல்லி
எவ்விதப் பயனில்ல
குறைசொல்லும் படியாக
நீயும் படைக்கல
குறைகாணும் படியாக
நீயும் நடத்தல
[நானும் வாழல]
ஆயினும் குறையொன்று
ஏ தோ இருக்கு
அதுயென்ன வென்று
புரிபட மறுக்குது
ஆனாலும் தாமதம்
செய்வதும் சரியில்ல
நானென்ன செய்வது
அதுமட்டும் புரியல
எனக்குத் தெரிந்தது
ஒன்றே ஒன்றுதான்
அதுவும் உன்னிடம்
சொல்வது மட்டும்தான்
இப்படி உன்னிடம்
நான்வந்து சொன்னதும்
என்னையேன் முறைக்கணும்
அதற்கு என்னிடம்
“முதலில் தொல்லைகள்
எதுவெனச்ச்சொல்லு
அதன்பின் காரணம்
அதற்கும் தேடலாம்”
என்று சொல்வது
சற்றும் சரியில்லை
காரணம் அதற்கும்
இல்லாமல் இல்லை
அதுதான் இப்போ
எனக்குள்ள தொல்லை
அதுதெரிந்தால் உன்னை
ஏன்குழப்பணும் உன்னை
நோயிது என்று
அறியாத நோயாளி
சிகிச்சை நாடி
வந்து நின்றால்
நோயாளிப் படும்
வேதனைக் கண்டு
அதற்கு காரணம்
இதுவென அறிந்து
அதன்பின் தகுந்த
சிகிச்சை அளி ப்பது
எப்போதும் யாருக்கு
உண்டான வேலை
முதலிலே இதற்கு
பதில் சொல்லு
அதன்பின் சொல்வேன்
தொல்லை எதுவென்று
வேதனைத் தாங்காது
வந்திடும் பொது
ஆறுதல் தருவது
முதலில் உன்வேலை
அதைவிட்டு இப்படி
என்னையே முறைத்தால்
அதுவே இப்போ
தொல்லையாய் போயிடும்
இதற்கான தீர்வை
முதலில் தந்திடு
பிறகு பார்க்கலாம்
எனக்கான தீர்ர்வு
குருகுலம், 24-6-2024, மாலை 4.30
ஒரே ஓட்டம்
என்னைக் கேட்டா
என்னிடம் வந்தாய்
சம்மதம் கேட்டா
என்னை மீட்டாய்
வந்ததும் தெரியாது
மீட்டதும் புரியாது
குருநீ என்பதை
மட்டும் உணர்ந்து
மவுனமாய் நானும்
உ ன்பின் வந்தேன்
மற்றதை எல்லாம்
பார்த்துக் கொண்டாய்
எத்தனை இனிய
சீ டன் கிடைத்தான்
என்றே பாவம்
எண்ணினாய் நீயும்
அதன்பின் நடந்தது
ஒவ்வொன்றாய் எண்ண
ஏன் மீட்டோமென்று
புலம்பினாய் நீயும்
என்னிடம் மிருந்து
மீட்புகிடைக்காமல்
இப்போ புலம்புறாய்
நாளும் நீயும்
உன் நலைக்கு கண்டு
பரிதாபம் கொண்டு
உன்னப்பன் கூட
என்னிடம் வந்து
என்னதான் என்மகன்
இறைவன் ஆயினும்
மனிதனாய் உன்னிடம்
வந்ததின் பின்னே
இப்படி வதைத்தால்
அவனென்ன செய்வான்
தப்பினால் போதும்
என்றுதான் நினைப்பான்
என்று அவனும்
என்னிடம் சொல்ல
அதற்கு பதிலாக
நானும் அவனிடம்
நானென்ன செய்யட்டும்
எந்நிலை அப்படி
வேறென்ன செய்யட்டும்
அதையே னும் சொல்லு
என்று சொன்னதும்
இருவரும் திகைத்து
அதற்கு வழிகாண
ஆவியை அழைக்க
விட்டால் போதும்
என்றவர் ஓட
அவரை இருவரும்
துரத்திச் சொல்ல
எவரும் தப்பிக்க
வழியேதும் கிடையாது
என்பதை நானும்
நன்றாகப் புரிந்து
எங்கே போனாலும்
வந்ததுதான் ஆகணும்
அதன்பின் மற்றதை
பார்த்துக் கொள்வோம்
என்று சிரித்து
என்வேலை பார்த்தேன்
அவர்வந்த பின்னே
நடந்ததை சொல்வேன்
குருகுலம், 24-6-2024, மாலை 5.00
BT Song 1627
முக்திக்கு வித்தான
முதுகுன்ற நாதா
எத்திக்கும் உன்னருள்
இன்னும் பரவிட
இத்தலம் பிறந்த
உன்னிய தொண்டர்
உன்தல வரலாறை
சிறப்பாகத் தொகுத்து
உன்னருள் கொண்டு
உலகிற்கு அளிக்க
எத்திக்கும் வாழும்
உன்மெய் அடியார்கள்
இத்தலம் வர
இயலாது போனாலும்
இந்நூல் படித்து
உன்னடி பணிந்து
மாறாத நின்னருளை
நாள்தோறும் பெற்று
பேரானந்த சிவகதியை
தவறாது எய்வரே
தயானந்த பாரதி,
குருகுலம்
24-06-2024, 11.50 pm.
BT Song 1628 இறைவனும் ஓடினான்
போராட்டம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
போராட்டம் மட்டுமே
வாழ்க்கையும் இல்லை
ஆயினும் இதனை
முதலில் புரிந்து
அதன்படி வாழ்வது
போராட்டம் ஆனது
எப்படிப் போராட்ட
எதற்காகப் போராட
எதுவரை போராட
யாரோடு போராட
இதையும் புரிவது
இப்போ அத்துடன்
தனியொரு போராட்டம்
ஆகியே போனது
இறுதியில் போராட்டம்
இதுவென றறிந்து
எதிராளி துணையாளி
யாரென் றறிந்து
அதற்கும் கூட
ஆயத்தம் ஆவது
என்பது மற்றோரு
போராட்டம் ஆனது
ஒருவாறு நம்பெலம்
துணை பெலம் கண்டு
அத்துடன் எதிராளி
பலவீனம் அறிந்து
எங்கே எப்போது
எப்படித் தாக்கணும்
என்பதும் கூட
போராட்டம் ஆகுது
அத்தோடு வெளியான
மறைவான மற்றும்
நம்முடன் உள்ள
எதிராளி கண்டால்
இறுதியில் சமரசம்
செய்வதே நல்லது
என்று எல்லோரும்
சொல்கின்ற போது
அதையும் எப்படிச்
செய்வது என்பதும்
பொதுவான போராட்டம்
ஆகியே போனது
இதற்கெல்லாம் கரணம்
இறைவனா மனிதனா
என்கிற கேள்வி
முன்னிற்கும் போது
விட்டால் போதும்
என்றிறைவன் ஓட
அத்தோடு போராட்டம்
தன்போல் நின்றது
குருகுலம், 25-6-2024, மலை 5.00
BT Song 1629 தவறு
போராட்டம் ஆயிரம்
வாழ்வில் இருக்கையில்
அத்ததுடன் உனதும்
வந்துமா சேரும்
வாழ்வில் போராடக்
காரணம் இருக்கு
உன்னோடு போராட
என்னதான் இருக்கு
பலவகை போராட்டம்
வாழ்வில் உண்டு
பலருடன் அதிலே
போராட்டம் உண்டு
வெற்றி தோல்வி
இரண்டும் வரலாம்
வெற்றி தோல்வியாய்
மாறியும் போகலாம்
உன்னுடன் போராட்டம்
இதுபோல் இருக்கா
வெற்றி தோல்விக்கு
இடமும் இருக்கா
தோற்றால் இருவரும்
ஒன்றாகத் தோற்கணும்
அல்லது ஒன்றாய்
வெற்றி அடையணும்
அப்புறம் பேச
என்ன இருக்கு
அதைத்தான் சொல்லணும்
முதலில் எனக்கு
இந்த போராட்டம்
முதலி முடியட்டும்
அதன்பின் இருந்தால்
பார்க்கலாம் மற்றதை
தோற்க வென்றே
வந்தாய் நீயும்
தோற்று வென்றாய்
என்னை நீயும்
அந்த வெற்றியே
உனதான பின்னே
போராட இனியும்
தேவை என்ன
ஆண்டான் அடிமை
பேதம் போனது
அதன்பின் நேசம்
பாசம் வளர்ந்தது
இருவர் என்ற
எண்ணம் மறைய
ஒருவரில் ஒருவர்
ஒன்றாய் கலக்க
போராட்ட த்திற்கிதிலே
இடமே இல்லை
அதைப்பற்றி எண்ண
வழியும் இல்லை
ஆகவே வேறு
வேலையைப் பாரு
போராட வேறு
ஆளைத் தேடு
அதற்கு யாரும்
கிடைக்கலை என்றால்
வழக்கம்போல் என்னுடன்
வந்து போராடு
அதற்கு நிறையவே
ஆட்கள் உண்டு
அதற்கானது தேவை
எனக்கு உண்டு
அதனை விடுத்து
என்னுடன் போராட
வந்து நின்றால்
அதுதான் தவறு
குருகுலம் 25-6-2024, 11.00 pm.
BT Song 1630 தூக்கி விடு
பலமுறை தடுமாறி
சிலமுறை விழுந்து
ஒருவாறு எழுந்து
வருகின்ற போது
கரம்நீட்டி என்னை
தூக்கி விடாமல்
கைகட்டி நின்று
வேடிக்கை பார்க்காதே
எத்தனை கவனமாய்
இருக்கின்ற போதும்
இடறாமல் வாழ்க்கை
போவத இல்லை
தடுமாறி வீழாமல்
தப்பித்துக் கொண்டாலும்
மீண்டும் தப்பிக்க
வாய்ப்பும் இல்லை
மேடு பள்ளமாய்
பாதையும் இருக்கு
பயணமும் அதிலே
கடினமாய் இருக்கு
சீரான பாதைக்குப்
போகலாம் என்றால்
அதை அடைவதே
கடினமாய் இருக்கு
கண்ணுக்கு எட்டும்
தூரத்தில் இருக்கு
கரம்நீட்டி நீ
காட்டுவது தெரியுது
எத்தனை பாட்டுகள்
பட்ட பின்னாலே
உனது இலக்கை
நீயும் அடைந்தாய்
இறைவன் உனக்கே
இக்கதி என்றால்
எம்போன்ற மனிதரின்
நிலையென்ன சொல்ல
ஆயினும் அதை
செய்கின்ற போது
இளமைத் தெம்பும்
உனக்கும் இருந்தது
ஆகவே என்நிலை
உனக்குப் புரியாது
எடுத்துச் சொன்னாலும்
ஒன்றும் விளங்காது
ஆகவே ஒருமுறை
மீண்டும் வந்து
முதியவனாக
வாழ்ந்து காட்டி
அதன்பின் தடுமாறி
கீழே வீழாமல்
எப்படி வாழ்வது
என்று காட்டு
அல்லது இப்போது
தடுமாறும் போது
தூக்கி மட்டும்
விட்டு விடாமல்
சீக்கிரம் இதற்கொரு
முடிவு கட்டு
அதன்பின்தடுமாற
வழியே இருக்காது
குருகுலம், 25-6-2024, மாலை 5.40
1631 வீண் கோபம்
ஏனிந்த கோபம்
அதையேனும் சொல்லு
என்னதான் சொன்னேன்
அதைநீ சொல்லு
வந்திடத் தாமதம்
ஏனென்று கேட்டேன்
அதிலென்ன தவறு
புரியாமல் கேட்கிறேன்
காத்து ஒருத்தி
கிடப்பாள் என்ற
எண்ணம் உனக்குத்
துளியும் இல்லாயா
ஊருக்கும் உலகுக்கே
நேரம் போத்தலை
என்று சொல்வது
மட்டும் சரியா
பிறருக்குத் தந்திட
நேரம் போத்தலை
என்றால் என்மேல்
காதலே ன் கொண்டாய்
அதன்பின் எனக்குள்ள
தனித்த உரிமையை
எப்படி நீயும்
இப்படி மறுப்பாய்
நல்ல நாடக்கம்
நீயும் நடிக்கிறாய்
நானதை புரியேன்
என்று நினைக்கிறாய்
உன்னையும் காக்க
வைத்தால் புரியும்
அதுதான் நான்செய்த
தவறெனத் தெரியும்
உனக்கு ஆயிரம்
வேலைகள் உண்டு
ஆனால் எனக்கு
இருப்பதே ஒன்று
எப்பபோதும் உன்னையே
எண்ணி வாழுறேன்
எப்போ வருவாய்
என்று ஏங்குறேன்
தாமதம் செய்தால்
வாடியும் போகிறேன்
ஆகவே கோபம்
உன்னிடம் கொள்கிறேன்
அதனை தெரிந்தும்
இப்படி முனிந்தால்
அதுதான் பொருக்களை
ஆகவே கேட்டேன்
கோபம் போக்கி
தாபம் தீர்க்காமல்
எதிர்வாதம் செய்தால்
நானென்ன செய்வேன்
போனது போகட்டும்
இனிநடக்கா திருக்கட்டும்
நேரத்தை வீணே
விரயம் செயாது
இனிதாகப் பேசி
இப்போ மகிழ்வோம்
இன்னொரு நாளில்
சண்டை தொடர்வோம்
குருகுலம் 26-6-2024, காலை 11.05
1632 முடிவு கேட்டேன்
முடியாதென்று
சொல்லவே இல்லை
முடியாமல் போனது
என்பதே உண்மை
முதுகு வலியுடன்
முதுமை சேர
அனுதின வாழ்வே
ஆனது கடினம்
மாந்தர்க்கு இதுவும்
நன்கு புரிந்தும்
மனிதனாய் வந்த
உனக்குமா புரியாது
முதுமை பற்றி
உனக்குத் தெரியாது
முதுகு வலியுமா
உனக்குப் புரியாது
மூன்று மணிநேரம்
தொங்கிய போது
வந்த அனுபவம்
என்னா ஆனது
ஒருவேளை எனது
பாவம் அழுத்த
அதன்வலி இதனினும்
அதிகம் ஆனதா
அதனால் அதையே
நீயம் மறந்து
இப்பபோ என்நிலை
புரிய மறந்தாயா
சிறிதோ பெரிதோ
பாரம் ஒன்றுதான்
அவரவர் நிலைமைக்கு
அதும் தகும்தான்
இந்நிலை மாந்தர்க்கு
புரியாமல் இல்லை
ஆனால் உதவ
அவருக்கு முடியல
முடிந்த உனக்கே
அக்கறை இல்லை
ஆகவே புலம்புறேன்
வழிவே றில்லை
இளமை என்றால்
நானும் தங்கலாம்
முதுமை வந்தது
என்ன செய்யலாம்
மு டிவை உன்னிடம்
விட்டு விட்டு
முதுகு வல்லிக்கே
முடிவு கேட்டேன்
குருகுலம், 26-6-2024, காலை 7.00
1633 ரெண்டுங் கெட்டான்
முடியா தென்றால்
முடிவாய்ச் சொல்லு
முடியும் என்றால்
முடிந்ததைச் செய்யு
இரண்டும் இல்லாமல்
இப்படி இருந்தால்
ரெண்டுங்க் கெட்டான்
என்று சொல்வார்
தேவையா உனக்கு
இந்த வசவும்
தெரிந்தே செய்கிறாய்
அதுவும் தெரியும்
நானென்ன செய்வேன்
என்பதை அறிய
இப்படிச் செய்கிறாய்
அதுவும் புரியும்
முதலில் எதனை
நானும் செய்வேன்
என்று உனக்கு
நிச்சயம் தெறியும்
அதையே இப்போ
நானும் செய்தென்
பதில்லை என்பதால்
என்வழி போனேன்
உன்பதில் என்றும்
ஒன்றே ஒன்றுதான்
பொறுமை காப்பாய்
என்பாய் அதுதான்
எதுவரை பொறுக்க
என்பதைச் சொல்வாய்
ரெண்டுங்க் கெட்டானாக்கி
என்னை விடுவாய்
எனக்கு அதுபற்றி
கவலை இல்லை
அதுவே எப்போதும்
எனது நிலைமை
ஆனால் உனதும்
அதுதான் என்றால்
அதைத்தான் பொறுக்க
முடியலை எனக்கு
நடுநிலை வக்கிறேன்
என்று சொல்லாதே
மதிமேற் பூனையாய்
நீயும் மாறாதே
மனித தெய்வமாய்
ஆனா பின்னாலே
ரெண்டுங்க் கெட்டானாய்
இனியும் இருகாதே
குருகுலம், 26-6-20204, காலை 7.30
1634 உனக்கு நல்லது
அழவிட்டு வேடிக்கை
ஏன்தான் பார்க்கிறாய்
அதனால் உனக்கென்ன
நன்மை கூறுவாய்
மகிழ்ஊட்டி என்னை
வைத்துக் கொண்டால்
மனதார துதிபாடல்
பாடவும் செய்யலாம்
அழுவதும் ஒருவிதம்
மனதுக்கு நல்லது
அதன்பின்னும் துக்கம்
அப்படியே இருக்குது
ஆகவே அழுவதால்
பயனென்ன கூறு
அதுதான் எனக்கு
புரியலை இப்போது
நோய்க்கு சிகிச்சை
அளிக்காமல் நீயும்
அறிகுறிக் களித்து
பயனென்ன சொல்லு
நிரந்தரத் தீர்வு
வாராமல் மீண்டும்
தற்காலத்து தீர்வு
வந்தென்ன சொல்லு
நோய்பல தீர்த்து
சுகம்தரும் போது
மனநோய்க்கு மருந்து
இல்லையா சொல்லு
உடல்நோய்க்கு காரணம்
நீயில்லா போதும்
மனநோய்க்கு காரணம்
யாரென்று சொல்லு
பிறக்கும் போதே
மனதும் இருந்ததா
வளர வளர
வந்து சேர்ந்ததா
அதற்கு விடை
எதுவான போதும்
சிகிச்சை இப்போ
யார்தர வேண்டும்
இதற்கான விடையை
மட்டும் தந்தால்
நோயும் தன்போல்
மறைந்தே போயிடும்
அதைவிட்டு உடல்நோய்க்கு
தீர்த்தென்ன செய்ய
மனநோய்க்கு மருந்து
தாராத போது
நீங்கா இந்நோயுடன்
வாழத்தான் வேண்டுமா
நீபார்த்து சிகிச்சை
அளிக்க வேண்டுமா
இறந்தாலும் இந்நோய்
போகாது என்று
மறந்தும் கூட
சொல்லி விடாதே
அதன்பின் அந்நோய்
தொற்று நோயாகும்
உன்னையும் அதுவும்
பற்றிக் கொள்ளும்
ஆகவே சிகிச்சை
இங்கேயே தொடங்கு
அதிலே உனக்கும்
நன்மை உண்டு
குருகுலம், 27-6-2024, மாலை 5.00
1635 என்னைத் தந்தேன்
என்னிடம் வந்தாய்
என்மேனி நடுங்க
ஏனிதைச் செய்தாய்
என்மனம் கலங்க
அறியாத சிறுமியாய்
பேதையாய் வாழ்ந்தேன்
அப்போதே என்னுள்ளம்
கவர்ந்தது கொண்டாய்
ஆனால் பருவம்
எய்திய பின்னரும்
உன்னை மறந்து
நானும் வாழ்ந்தேன்
ஆதியில் நீகொண்ட
அன்பை மறக்காமல்
காலம் கனிந்திடக்
காத்து இருந்தாய்
அறிவோடு மனதும்
உள்ளமும் சேர
அறியாது உன்னை
வாழ்ந்தும் இருந்தேன்
அதன்பின் இயற்கையின்
உந்துதல் தூண்ட
எனக்கான காதலை
தேடி அலைந்தேன்
பலரும் என்னிடம்
காதல் கொண்டு
என்மனம் புரியாது
ஏதேதோ சொன்னார்
அவர்சொன்ன மொழி
புரியவே இல்லை
அவரின் காதலும்
உண்மையாய் இல்லை
அதன்பின் அவர்கள்
அனைவரைம் மறுத்து
எனக்கான காதலை
தேடியே அலைந்தேன்
மேனியும் வாட
மனதும் சோர
ஆன்மாவும் துடிக்க
தவித்து நின்றேன்
அப்போது உன்கரம்
என்மீது பட்டது
அன்பான உன்பேச்சு
என்னைத் தொட்டது
ஆயினும் நீ
அந்நியன் என்பதால்
புரியாது நான்
தயங்கி நிற்க
ஆதியில் நீகொண்ட
காதலைச் சொன்னாய்
அதற்காகவே என்னை
படைத்தேன் என்றாய்
அதன்பின் என்காரம்
நீயும் பற்ற
அந்த உணர்வில்
நானும் மயங்க
அள்ளி எடுத்து
மார்பில் அணைக்க
அதன்பின் உணர்ந்தேன்
என்தேவை தன்னை
அதன்பின் ஆனந்த
எல்லைக் காண
அச்சமும் நாணமும்
ஒன்றாக சேர
மேனி விதிர்க்க
உள்ளம் நடுங்க
முறையாக என்ன
உன்னிடம் தந்தேன்
குருகுலம், 28-6-2024, மாலை 3.40
1636 புரிந்து கொள்
நானொன்று கேட்டால்
நீயொன்று செய்வாய்
ஏனென்று கேட்டால்
என்சித்தம் என்பாய்
இல்லை என்று
நான் சொன்னேனா
உன்சித்தம் அறியாமல்
இதுவரை இருந்தேனா
கூறுவதுன் சொல்லாய்
இருக்கும் போது
கேட்பது மட்டும்
வேறாக இருக்குமா
இதைநீ புரிவது
இருவர்க்கும் நல்லது
உன்சித்தம் என்சித்தம்
இதிலெங்கு வந்தது
உன்சித்தம் என்சித்தம்
என்சித்தம் உன்சித்தம்
என்பதே உண்மை
என்றாகும் போது
உன்சித்தம் இல்லாமல்
நானும் கேட்பேனா
இதுகூட புரியாமல்
கேள்வியும் கேட்பாயா
உன்சித்தம் புரிய
என்னைத் தந்தேன்
முற்றும் தந்தபின்
அதையும் உணர்ந்தேன்
அதன்பின் என்சித்தம்
முற்றும் மறந்தேன்
எல்லாம் உன்சித்தம்
என்றுதான் ஏற்றேன்
ஆகவே இப்போது
கேட்டது கூட
உன்சித்தம் இன்றி
என்சித்தம் இல்லை
அதுகூட உணராமல்
மறுக்கிறாய் பாரு
அது தான் இப்போது
மாபெரும் தொல்லை
குருகுலம், 28-6-2024, காலை 11.15
வலி
நம்பி வந்தேன்
நாதனே உன்னை
என்றும் மாறாத
உனது அன்பினை
தூரம் நின்று
வேடிக்கை பார்க்காதே
தொட்டு சுகமாக்கு
சொல்ல வந்தேனே
மேனியின் வாதை
உண்மை ஒருபுறம்
மாயை என்று
தள்ள வழியில்லை
உன்மேனி கண்ட
அனுபவம் அதனை
மறுப்பதற்கு உனக்கு
இங்கு வழியில்லை
பலவித முயற்சி
பலவும் செய்கிறோம்
அதற்கேற்ப சிகிச்சை
பலவும் அளிக்கிறோம்
அவைமட்டும் போதாது
என்பதை உணர்ந்து
உடலுக்கு பலவித
பயிற்சி அளிக்கினறோம்
ஆயினும் கருணை
கரம்நீட்டி தொட
அதிலுள்ள ஆறுதல்
அதைநாடி வருகிறோம்
புவியில் நாங்கள்
வாழும் வரையில்
பூரண குணம்காண
வழியில்லை அறிகிறோம்
ஆகவே உன்கரம்
தந்திடும் சுகமதை
ஐயனே நாடுறோம்
வேறு வழியில்லை
அறிந்த உனக்கு
இன்னும் சொல்ல
அடிமைக்கு மேலும்
மொழி கிடைக்கலை
ஆகவே நாடுறேன்
அருளும் உன்னன்பினை
தாளாமல் மீண்டும்
தரவேண்டும் ஒருமுறை
29-6-2024, காலை 6.50
சரியாய் அளக்கிறான்
அவனை ஏதும் சொல்லாதே
அனுதினம் அளக்குறான் மறவாதே
அதுக்கு மேலே கேட்டாலும்
அதையும் தருவான் மறக்காதே
கூடக் குறைய இல்லாமல்
கொடுப்பதை அளந்தே கொடுக்கின்றான்
அளந்தது சரியில்லை என்றாலே
கொசுறு தந்திட மருக்கானே
தந்ததை மீண்டும் கொடுத்டுப் பார்
சரியாய் அளந்ததை காட்டுகிறேன்
என்று வம்புக்கு நிற்கானே
எதிர்வாதம் ஏதும் செய்யானே
அளக்கிற அளவில் மாற்றம் இல்லை
அதிலே எந்த குற்றம் இல்லை
பெறுகிற நாம்தான் சரியில்லை
எத்தனை கொடுத்ததும் போதவில்லை
இதற்கும் மேலே என்ன செய்வான்
எதுவரை பொறுமை காத்திருப்பான்
அடியா மாட்டு படியாதென
அதன்பின் கோலை எடுத்திடுவான்
கோலுக்கு பயந்து அடக்கினாலும்
மனதுக்குள் மறுவி நிற்போமே
அதையும் அவனே அறிவானே
அதற்கும் மருந்து தருவானே
கோலும் மருந்தும் வேண்டாமென்றால்
நாம்தான் அதற்கு மாறிடணும்
அருளை சார்ந்து வாழ்வதென்று
அனுதினம் முடிவு எடுத்திடணும்
குருகுலம், 1-7-2024, இரவு 8.30
Getting to the Treasure Beneath the Foundation
ON THE PICKAXE
…Don’t listen too often, Rumi advises, to the comforting part of the self that gives you what you want. Pray instead for a tough instructor. Nothing less than the radical disassembling of what we’ve wanted and gotten, and what we still wish for, allows us to discover the value of true being that lies underneath….— The pickaxe, for Rumi, represents whatever does this fierce attention-work: clear discernment, a teacher’s presence, simple strength, and honesty with oneself. The pickaxe dismantles the illusory personality and finds two glints in the dirt. Like eyes they are, but these jewel lights are not personal. Rumi points to a treasure within our lives unconnected to experience. It is intrinsic, beyond calculation, a given, reached after the ego is cleared away and a one-pointedness digs under the premises. the self
WHO MAKES THESE CHANGES?
Who makes these changes?
I shoot an arrow right.
It lands left.
I ride after a deer and find myself
chased by a hog.
I plot to get what I want
and end up in prison. (p.110)
I dig pits to trap others
And fall in.
I should be suspicious
Of what I want.—pp. 110-111
ஏட்டிக்குப் போட்டி
கடமை ஆயிரம்
தந்த போதும்
அவற்றைச் செய்ய
பெலன்தரும் நீயும்
அதற்கு ஏற்ற
உதவி அனுப்பி
அவற்றை சரியாய்
செய்வாய் நீயும்
அதன்பின் கணக்கு
நீயும் கேட்க
சாக்கு போக்குக்கு
வழியில்லை எனக்கு
வேண்டாம் என்றால்
கேட்பது இல்லை
தப்பிக்க வழியோ
எனக்கும் இல்லை
ஆர்வம் இருக்கா
என்னால் முடியுமா
என்று எதையும்
கேட்பதும் இல்லை
குருடன் கையில்
தூரிகை தந்து
ஓவியம் தீட்ட
சொல்கிறாய் நீயும்
எதை வரைந்தாலும்
அற்புதம் என்பாய்
உனது இலக்கு
ஓவியம் இல்லை
குருடனும் மிளிரனும்
என்பதுன் கவலை
தீட்டிய பின்னரே
அதையும் சொல்வாய்
அதற்குமுன் ஒன்றும்
நீயும் பேசாய்
இதுதான் இப்போ
எனது நிலைமை
எப்படியேனும் உன்
காரியம் நடக்கணும்
அதற்கு உனக்கு
ஆளொன்று வேண்டும்
அழுவதா சிரிப்பதா
என்பது தெரியலை
அதுபற்றி உனக்கு
கவலை இல்லை
சொன்னால் உனக்கு
கோபம் வருது
மேற்கொண்டு நான்
சொல்வது எதற்கு
சாட்டை எடுக்க
உனக்குத் தெரிந்தால்
பாட்டு எடுக்க
தெரியும் எனக்கு
சாட்டையா பாட்டா
எதுதான் வெல்லும்
என்பது கூட
இறுதியில் தெரியும்
இந்த போட்டி
என்றும் நடக்கும்
என்னை நீயும்
அழைக்கா வரைக்கும்
2-7-2024, குருகுலம், மதியம் 3.30
தெளிவு வேண்டும்
தெளிவாகச் சொன்னாலே
புரியாத போது
இப்படிச் சொன்னால்
நானென்ன செய்ய
ஏ டகம் பூடகம்
என்னிடம் வேண்டாம்
தெளிவாக எதையும்
சொல்லதான் வேண்டும்
தெளிவில்லை என்பது
தெளிவாகப் புரியுது
ஆகவேத் தெளிவை
தருவது யாரு
இத்தனைத் தெளிவாக
சொன்ன பிறகும்
எப்படித் தெளிவிக்க
தெரிந்த உனக்கு
இதற்கே இப்படி
குழப்பம் என்றால்
குழம்பி வந்தால்
என்னாகும் சொல்லு
அதையே நீயும்
தெளிவாக உணரு
அதன்பின் எனக்குத்
தெளிவாகச் சொல்லு
தெளிவில்லாமல் நான்
வாழ்ந்த போது
தெளிவாகத் தெளிவித்து
தெளிவைத் தந்தாய்
அந்தத் தெளிவு
வந்த போதும்
மேலும் அதிலும்
தெளிவு வேண்டும்
குழப்பம் சற்றும்
இல்லாது இருந்தால்
தெளிவு மேலும்
தெளிவாகத் தெரியும்
ஆகவே எனது
தேவை எதுவென
தெளிவாய் உனக்குத்
தெளியாகிச் சொன்னேன்
சொன்னது தெளிவாய்
புரிந்தது என்றால்
மேலும் நாடும்
தெளிவைத்த தந்திடு
இதுவே உனக்கு
குழப்பமாய் இருந்தால்
தெளிவாய்ப் புரியும்
தெளிவைத்த தேடு
அதுவரை நானும்
இதனினும் தெளிவாய்
சொல்லும் தெளிவை
தெளிவாகத் தேடுறேன்
குருகுலம் , 2-7-2024, இரவு 11.45
Leave a Reply