BT Songs 731 to 735

BT Song 731

During my evening walk I said to the Lord whether you give spanks or hug the same is the hand.  Then I continue to talk with the Lord the way He remains everything for me in my life.  As the inspiration flowed, I wrote this song in my mind and after returning back to the room, I wrote this song worshiping him.

BT Song 731 நீதான் எல்லாம்

அடித்தாலும் அணைத்தாலும் கரம் ஒன்று தான்
அளித்தாலும் மறுத்தாலும் அருள் ஒன்றுதான்
வென்றாலும் தோற்றாலும் கதி ஒன்றுதான்
சேர்த்தாலும் தடுத்தாலும் பதம் ஒன்றுதான்

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நீ மாறாயே
போற்றினும் மறுக்கினும் நீ மறுக்காயே
நினைத்தாலும் மறந்தாலும் நீ மறக்காயே
கேட்டாலும் விட்டாலும் நீ மீறாயே

புரிந்தாலும் குழம்பினும் நீ தெய்வம்தான்
ஏற்றாலும் மறுத்தாலும் நீ மீட்பன் தான்
வந்தாலும் விலகினும் நீ காப்போன் தான்
பணிந்தாலும் முரண்டாலும் நீ ஆள்வோன்தான்

இவற்றை அறிந்தபின் கதி வேறில்லை
இவற்றை மறுத்தாலோ மீட்பு இல்லை
இதைச் சொல்ல எனக்குத் தயக்கம் இல்லை
இதனால் எனக்குத் தாழ்ச்சி இல்லை

உன்னாலே மீட்பை அடைந்த பின்னே
உனைப் போற்றி பாடாத நாவும் வீணே
உன்னோடு அனுதினம் வாழ்ந்த பின்னே
இதனினும் பேறின்பம் நான் தேடேனே

திருப்பூந்துருத்தி, 10-9-2017, மாலை, 7.00

BT Song 731 You are everything

Whether give spanks or hug, it is the same hands

Whether you give or refuse it is the same grace

Whether I win or lose the result is the same

Whether I reach or fail it is the same abode

Whether I praise or blame, you won’t change

Whether I glorify or deny, you won’t refuse

Whether I remember or forgot, you won’t forgot me

Whether I listen or not, you will never fail

Whether I understood or confused, you are my God

Whether I receive or reject, you are my redeemer

Whether I come or go away, you are the one who to protects me

Whether I obey or rebel, you alone will lord over me

Once I understood all these, there is no other refuge for me

If you deny it, there is no means for me to be redeemed

I don’t hesitate to proclaim this

Because of that I will never feel lowered

Once I received redemption because of you

My tongue which won’t sing your praises is a mere waste

Once I live each day with you

I won’t seek any other bliss other than this

Thirupponthuruthi, 10-9-2017, 7.00 pm 

BT Song 732

As I got up very early in the morning I sat for meditation and prayer. Then I thought about the way everyday life goes for me as if programmed to cater to the need of my body and mind (reading etc.).  I give very less time to the Lord to have fellowship with him. But these kinds of opportunities are given by God because of his mercy on me, to have fellowship with him when I get up early and cannot do any reading and writing.  Though often I suffer and struggle due to lack of proper sleep, yet they also provide an opportunity to have fellowship with the Lord.

BT Song 732 கையேந்துங்கள்

தொண்டரே எல்லோரும் வாருங்கள்
துதித்து ஐயனை பாடுங்கள்
நன்று நன்று என்று சொல்லும்படி
நாள்தோறும் அவனைப் போற்றுங்கள்

உண்டு உறங்கி வாழ்ந்து விட்டோம்
உடல் தேவைக்கு தேடி விட்டோம்

மனதின் தேவையை மறந்துவிட்டு 
மண்ணுலகில் வீணாய் வாழ்ந்திருக்கோம்

எத்தனை பெற்றாலும் போதவில்லை
ஏக்கமோ முற்றாகப் போகவில்லை
தேகமே தேய்ந்து ஓய்ந்தாலும்
மனதின் ஆசைகள் மறையவில்லை

தேடித்தேடி தேகமும் ஓய்ந்தது
சேர்த்தவை எல்லாம் ஓடியும் போனது
ஆயினும் நாட்டமோ போகவில்லை
ஆகையால் தேடலும் முடியவில்லை

இறுதி வரையில் இப்படியே
இங்கு வாழ்ந்து முடிந்த பின்னே
மறுமைக்கு வழி என்ன உண்டு
மனதில் இதையும் எண்ணிடுவீர்

உடலில் உயிரும் உள்ளபோதே
உள்ளத்தில் ஆர்வமும் வந்தபோதே
சித்தத்தை அத்தன்பால் வைத்துவிடு
சீக்கிரம் வாழ்வு முடியும் முன்னே

இன்றைக்கு அதற்கு நேரம் தந்தான்
இன்னும் ஒரு வாய்ப்பு தந்தான்
காலமும் கைவிட்டுப் போகும் முன்னே
கையேந்தி அவனை வேண்டிடுவீர்

திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 5.00

BT Song 732 Hold your hands before God

All you bhaktas come

Sing praising the Lord

Praise him each day so that we can say

It is good, good indeed to praise him

We spent our life in eating and sleeping

We have searched a lot for the needs of the body.

Forgetting the need of the heart

We live vainly on this earth

How much we receive

It is not enough.

Though the body becomes weak

The desire of the heart never goes.

Seeking constantly the body also becomes tired

All that we have accumulated also gone

Yet the longing has never gone

Therefore there never comes an end to the search

If we live like this till the end

Once we have completed our life,

What is the means for the next life?

Think about this also?

When there is life still in this body

When the longing has come in the heart

Keep the mind in the Lord

Before the life come to an end

Today He gave time for that

He gave one more opportunity to me

Before the time will be gone from our hand

Beg him holding your hands before him

Thirupponthuruthi. 11-9-2017, 5.00

BT Song 733

Suddenly I became very lazy and I don’t even want to get up from my bed. I tried to read but as I cannot concentrate I gave up. Then for a change went for a walk, but as I don’t like it, returned back to the room. Then to kill the time I began to do the cross stitch, but soon threw it away and sat silently.  My mind began to run in every direction and I don’t know what to do?  Then as I became very upset I began to fight with the Lord on various issues.  After that fight I calmed down and then I wrote this song.

BT Song 733 பொறுமை இல்லை

ஏனென்று கேளாமல் இருப்பதென் தவறா
எதை நீ செய்தாலும் பொறுப்பதென் தவறா
நானென்ற எண்ணத்தை அழித்தது தவறா
நாதனே நானுனைப் பணிந்தது தவறா

ஏனிதைக் கேட்கிறேன் என்பது தெரியும்
எனக்கு நீ செய்த நன்மைகள் தெரியும்
ஆயினும் என் மன சஞ்சலம் அறிந்தும்
அமைதி நீ கொள்ள என்ன காரணம்

நொடிகள் தோறும் மாறும் மனது
நிலையற்று தன்போல் பலதிசை ஓடுது
ஒருமுகப் படுத்த முயன்று தோற்றேன்
அதனால் இத்தனை கேள்விகள் கேட்டேன்

ஒன்றிலும் மனது உறுதியாய் இல்லை
ஒன்றிலும் பற்று அதற்கும் இல்லை
பொறுப்பென சிலவற்றை தந்த போதும்
அவற்றை செய்ய பொறுமையும் காணோம்

ஒரு வித சோம்பல் வந்தது மனதில்
உடலொடு உயிரும் சோர்ந்தது அதனுள்
உயிர்ப்பிக்க பலமுறை முயன்று பார்த்தேன்
உன் மீதும் கோபம் கொண்டதால் கேட்டேன்

எனக்கினி இயலாது என்பதே உண்மை
இதுதான் இன்றைக்கு எனது நிலைமை
உனக்கிதை சொல்வது எனக்கு நன்மை
இதற்குமேல் சொல்ல எனக்கில்லை பொறுமை

திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 11.30

BT Song 733 I don’t have patience

Is it a mistake on my part not questioning you?

Is it a mistake on my part to accept whatever you might do with me?

Is it a mistake on my part to annihilate my ego?

Oh my Lord, is it a mistake as I obeyed you?

I know why I ask these questions to you.

I know all the blessings that you have given to me.

Still knowing the frustration of my heart

What is the reason for your silence?

Mind is fluctuating in each second

Runs in all directions without remain focused

I failed to keep focused (on you)

That is why I asked all these questions to you

The heart never remains firm even in one thing

It has no commitment even in one thing

Though you gave some responsibilities

I don’t have patience to do them

There came some kind of laziness in my mind

Body along with mind became tired because of it

Many times I tried to revive them (but I failed)

As I become upset with you, now I am asking you

It is not possible for me anymore

This is the reality today

It is good for me to share this with you

I don’t have any more patience.

Thirupponthuruthi, 11-9-2017, 11.30

BT Song 734

Another song about my anxiety based on unnecessary imagination about my future.  When I look back, all that I worried (relatively) never happened. All that I desired also not accomplished.  But the way God took charge of my life is beyond my comprehension.  Others can say that this is what Time does.  But for me this is what God has done and still doing and will do in future.  At the same time my fickle and unstable mind as usual worries too much about so many things.  Well, as before after sitting and worrying for some time I will say to the Lord that all that I worried so far are my prayers.  And I feel comfort in it, even converting my anxieties into a kind of prayer.

BT Song 734 ஒருவித பயம்

வெளியாக எத்தனை
வேடம் போட்டாலும்
உள்ளாக ஒருவித
பயமொன்று இருக்கு

எப்படி அமையும்
எதிர்காலம் என்று
எனக்குள் ஆயிரம்
கேள்விகள் தோன்றுது

எதன் மீதும் பற்று
எனக்கு இல்லை
எவரையும் சார
என்மனம் துணியலை

எந்த இடமும்
நிம்மதி தரவில்லை
என் மீது எனக்கு
நம்பிக்கை வரவில்லை

ஏதோ போகுது
காலம் அது போல
என்னையும் மீறி
ஓடுது தன்போல

இழுத்து நிறுத்த
எனக்கில்லை வலிமை
இழுத்தாலும் நிற்காது
இதுதான் உண்மை

காலத்தின் போக்கில்
போவதைத் தவிர 
மாற்றொன்று எனக்கு
வேறொன்றும் இல்லை

இதையெல்லாம் உனக்கு
சொல்வது எதற்கு
என்பது மட்டும்
புரியுது எனக்கு

உன்னைத் தவிர
புரிந்திட பிறருக்கு
நேரமும் பொறுமையும்
எங்கே இருக்கு

இதைத்தான் உன்னிடம்
சொல்லிட வந்தேன்
இந்த வேண்டுதல்
கேட்டிடு என்றேன்

இதுவும் கூட
நீ தந்த ஒன்று
அதுதான் எனக்கு
மிகவும் நன்று

திருப்பூந்துருத்தி,11-9-2027, காலை, 12.50

BT Song 734 Some kind of fear

However I

Pretend outwardly

There is fear

Within me

What will?

Be the future

About this

I have many questions

I am not

Attached with anything

I don’t have the courage

To depend upon anyone

No place is

Giving me peace

Even I don’t have

Faith in me

Somehow

The time is going on its own

Overcoming me

It runs its own course

I don’t have the

Strength to stop it

Even if try to do that

It won’t stop, this is the truth

There is no option but

To go along with time

There is no

Alternative to this

I know

Very well that

Why I am

Sharing this with you

Where is the

Time and patience

For others to understand this

Other than 8you?

I came unto you

Only to share this

I requested you

To listen to this prayer

This opportunity

Is also given by you

That alone is

Good for me (now)

Thirupponthuruthi, 11-9-2027, 12.50 pm

BT Song 735

Fault finding is my nature, not only in others and in me but also in God.  Though many times I resolved not to do it again, I failed miserably.  As I began to blame god for so many wrongs in my life, stopping it, I wrote this song with a spirit of penitence.

BT Song 735 நீயே சொல்

நன்மைகள் சின்னதாய் செய்து கொண்டு
நாள்தோறும் உன்னையும் பாடிக்கொண்டு
நல்லவிதமாக நாட்களை கழித்து
நாதனே உன்னிடம் வந்து சேரணும்

நீதந்ததிந்த வாழ்க்கையும் தான்
நீயே தந்ததிந்த தேகமும் தான்
அதையும் நன்கு புரிந்து கொண்டு
அதன்படி அனுதினம் வாழ வேண்டும்

எல்லோர் மீதும் குத்தம் சொல்லி
எல்லாவற்றிலும் குற்றம் கண்டு
என் நீதி தன்னையே பறை சாற்றி
இனிமேல் வாழாமல் இருக்க வேண்டும்

நல்லதை சொல்லத்தான் நாவு தந்தாய்
நல்லதை எண்ண சிந்தை தந்தாய்

முடிந்ததை செய்யத்தான் மேனிதந்தாய்
முதலில் இதைத்தான் எண்ண வேண்டும்

இதுவரை செய்த தப்பினையே
இனிமேல் செய்யாமல் இருக்க வேண்டும்
இப்படிச் சொல்லியே தோற்றது பலமுறை
இனிமேல் தோற்காமல் இருக்க வேண்டும்

அதற்கு உன் காவல் தேவை இன்னும்
அடிக்கடி நீயதை நினைக்க வேண்டும்
அதையும் நீ செய்ய மறந்துவிட்டு
அடியேனைக் குறைசொல்லா திருக்க வேண்டும்

இப்போதான் உனக்கு நானும் சொன்னேன்
இனிமேல் குறை சொல்ல மாட்டேன் என்று
ஆயினும் அதையும் மறந்துவிட்டு
ஐயனே உன்மீதே கூறிவிட்டேன்

என்ன நான் செய்வது நீயே சொல்லு
எப்படித் திருந்த, வழியும் சொல்லு
பாட்டு எழுதிக் காட்டிவிட்டால்
போதாது மீதியை நீயே சொல்லு

திருப்பூந்துருத்தி, 12-9-2017, காலை,7.45

BT Song 735 You alone tell

Doing small good things in life

Singing your praise each day

Spending the days in a good manner

Oh my Lord I should reach the Further shore

This life is given by you

This body also given by you

Understanding this clearly

Each day I should live accordingly

I should not live anymore

By blaming everyone

finding fault in everything

Proclaiming my own righteousness

I should only think this alone first that,

You gave the tongue only to tell good things

You gave mind only to think good things

You gave this body only to do some good things.

Again I should not do the mistakes

 which I have done so far.

But I get defeated by saying like this many times,

Therefore again I should not be defeated.

For that I need your protection.

You should often remember this.

But forgetting to do that,

You should not blame this slave.

Just I told you that

I won’t blame others anymore.

But forgetting that Oh my Lord

I blamed you again.

What shall I do please kindly you tell that

How to repent, just show me the way

It is not enough to write such a poem (of penitence)

Therefore you tell the rest.

Thirupponthuruthi, 12-9-2017, 7.45 am.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *