BT Song 741
One young man who is in the ashram came to talk with me. He faces so many problems in his life—broken marriage, no proper job, responsibility towards parents etc. etc. But I pointed out his lack of understanding that already almost half of his life is gone and now it is too late for him to sit and regret so many things that went in the past. Lack of vision and goal and trying to play so many roles in a short drama without knowing our character are some of the reasons for this problem. At the end I said to him, that fortunately god set some limitations for our life on this earth. What would be our condition if we were to live more than one hundred years? After he left as I recalled my talk with him, I wrote this song.
Of course, apart from this philosophical lecture, I also gave some practical guidance on how to live the rest of his life—if possible standing on his own leg and taking care of his parents first, which should be his priority now.
BT Song 741 யுகம் போதாது
உன்னருள் நினைக்க
யுகமொன்று போதாது
உன்னன்பை நினைக்க
என் மனம் போதாது
உன் தன்மை எண்ண
என் சிந்தை போதாது
உன் சேவை செய்ய
வாழ்வொன்று போதாது
எமக்கு எல்லையை
அறிந்துதான் தந்தாய்
அதற்குள் வாழ்ந்து
முடித்திட வைத்தாய்
இதற்கு உள்ளாக
உன்னருள் எண்ணி
உய்யும் வழியை
எமக்குமே அளித்தாய்
அதற்குள் எத்தனை
வாழ்க்கை வாழ்கிறோம்
ஆயிரம் ஆயிரம்
வேடங்கள் போடுறோம்
இதற்கே நேரம்
போதலை என்று
இறுதியில் குறைகள்
பலவும் சொல்கிறோம்
இந்த சிறிய
ஓட்டத்தை ஓட
என்னென்ன எத்னம்
நாங்கள் செய்கிறோம்
அதனை ஓடி
முடிக்கும் முன்னே
நோக்கத்தை மறந்து
வாடியே நிற்கிறோம்
இதற்கே இத்தனை
பாடுகள் என்றால்
எம்எல்லை விரிந்தால்
இனி என்ன ஆகும்
அதனால் எம்மேல்
இறங்கி நீயும்
குறுகிய எல்லையை
கருணையும் தந்தாய்
அதன் உள்ளாக
உன்னருள் அடைய
ஐயனே இறங்கி
வழியினை வகுத்தாய்
அதை அறிந்தோர்கள்
உய்ந்து மீள்வார்
அறியாத பேர்கள்
புலம்பியே மாள்வார்
அதனை அறிந்து
அடிக்கடி வந்து
உன்னருள் நினைத்து
உன்னடி பணிந்து
தந்த வாழ்வை
உன்னுள் வாழ்ந்து
தமியனும் உய்ய
பேரருள் புரிவாய்
திருப்பூந்துருத்தி, 14-9-2017, மாலை, 6.50
BT Song 741 One Yuga is not enough
To think about your grace
One Yuga is not enough
To think about your love
My heart is not enough
To think about your nature
My mind is not enough
To do your seva
One life is not enough
You gave some limitation to us
Knowing us well
And made us to
Complete our life within it
You gave
Your grace
To be redeemed
Within this limitation
But how many
Lives we are living in it
We try to play
Many roles in it
Time is
Not enough even for this
We complain
About it
Even to run
This short race
How many preparations
We make
Even before
Completing it
Forgetting the goal
We become tired
Even in this short span
If we have so much trouble
What will be our condition?
If you extend it?
Therefore having
Compassion on us
You gave
This limitation to us
Oh my Lord
Only through it
To receive your grace
You showed the way
Those who
Understood that
Will be redeemed
Rest will lament
Remembering that
Coming often
Thinking your grace
Bowing at your feet
To live this life
In you
Give more of your grace
For me to be saved
Thirupoonthuruthi. 14-9-2017, 6.50 pm
BT Song 742
For the last three days I was on my bed with severe loose motion which I got on my journey on 16th night and with much fever and stomach problems. Slowly I was recovering. As I cannot do anything, the only thing that I can do is to fight with God on so many issues and also worship and praise. But when I reflected on the way I pestered God, I understood that it is much more difficult to be a God than a human being. After writing this poem at the end I added that stanza to empathize with God.
BT Song 742 உனக்கென்ன தெரியும்
உன்னோட போராட
எனக்குமே முடியாது
இதற்கினி என்னிடம்
தெம்புமே கிடையாது
புரிந்தாலும் புரியாது
போலவே நடித்தால்
புரியவைக்க இனி
எனக்கிங்கு ஆகாது
உனக்கு விளையாட
நான்தான் கிடைத்தேனா
உனக்கெது விருப்பமோ
அதுதான் நியாயமா
இந்தக் கேள்வியை
கேட்கவும் கூடாதா
எனக்குள்ள உரிமையை
மறுக்க நீ முடியுமா
ஏதோ வந்தாச்சு
இதுவரை இருந்தாச்சு
இன்னும் இருப்பதால்
உனக்கென்ன பயனாச்சு
போதும் வேண்டாம்
சீக்கிரம் எடுத்திடு
என்று வேண்டினால்
மறுக்கக் கூடாது
கேட்காமல் உலகுக்கு
நீயே அனுப்பினாய்
கேட்டாலும் எடுக்க
ஏன் நீ மறுக்கிறாய்
இது என்ன ஒரு பக்க
உரிமையும் ஆனது
இதற்கு நீயென்ன
இறைவனாய் இருப்பது
இத்தனை எரிச்சல்
எனக்கும் ஆகாது
என நீ சொல்வது
தெளிவாக கேட்குது
வேடிக்கை பார்ப்பதே
வாடிக்கை ஆனபின்
வேறென்ன செய்ய
நீ வழி சொல்லு
எரிச்சல் படத்தான்
எனக்கு தெரியும்
என்பக்க நியாயம்
உனக்கென்ன புரியும்
என்னவோ நீ செய்
என்னையேன் கேட்கணும்
இறைவனாய் இருப்பதும்
ஒரு விதம் கடினம்.
மத்திகிரி, 18.9.2017, மதியம் 3.00
BT Song 742 What do you know?
I cannot struggle
Anymore with you
I don’t have
Strength for that.
If you pretend, after understanding
As if you didn’t understand
It is impossible for me
To make you understand.
Am I the one available?
For you to play
Whatever you like
Is this correct one?
Should I not
Question you about this
Can you deny my
Right with you?
Somehow I came
And lived so far
What is the use for you anymore?
To remain here further?
If I pray,
‘It is enough
Please call me back soon’
You should not deny it
You sent me to this world
Without being asked
When I request to take back
You refuse to listen?
What is this?
One-sided right
Why should you be?
A God for this?
I can hear clearly
What you say that,
‘You should not
Have this much irritation’.
Just watching this thamasha
Becomes your habit
What else can I do?
You tell it to me
I know only
To get irritated
How do you know?
About my side right
Do whatever you want
Why should you even ask me anymore?
Really it is very difficult
To be a God (to me).
Mathigiri, 18.9.2017, 3.00 pm.
BT Song 743
After a few days’ gap I went for my evening walk for a short time, as I didn’t recover completely. Then some kind of tiredness came both in my body and mind and I began to fight with the Lord. I said to him, ‘enough is enough. Leave me alone. Go away from me. I cannot follow you any more’. After saying this, I continue walking. Then I began to cry and with much sob I said, ‘Ok, my Guruji, I know only to follow as you are there to lead me’. Then I began to meditate the way God leads me in spite of my shortcomings and the way He called not counting my mistakes or considering lack of any talents. As I began to reflect one by one, I began to record them as a poem.
BT Song 743 அறிந்து கொண்டேன்
கொண்டு முன் செல்கிறாய்
கும்பிட்டு பின் வருகிறேன்
குருவே இதுவன்றி
செய்திட ஏதுமில்லை
குறைகளை எண்ணவில்லை
குற்றம் நீ காணவில்லை
கூறும்படி ஒன்றுமில்லை
கூப்பிட்டதும் ஓடி வந்தேன்
அதன்பின் நடந்ததெல்லாம்
அத்தனே நீயறிவாய்
எத்தனை செய்துமென்ன
என்னிடத்தில் பதிலுமில்லை
பின்னிட்டுப் பார்த்ததுண்டு
பேதலித்து நின்ற துண்டு
பித்தன் போல் உன்னை ஏசி
நித்தம் நித்தம் வைததுண்டு
அத்தனையும் கேட்டுக்கொணடாய்
அமைதியாய் பொறுத்துக் கொண்டாய்
அமைதல் அடையும் மட்டும்
ஆறுதல் தந்து நின்றாய்
இத்தனை செய்தபின்னும்
எனக்குள்ள தயக்கமதை
எப்படி சொல்லிடுவேன்
என்னிடத்தில் வார்த்தை இல்லை
போதுமினி சென்றுவிடு
பேதை என்னை விட்டுவிட்டு
பேசியே பயனுமில்லை
போதுமினி ஆளை விடு
தனியே விட மறுத்து
தட்டினாலும் கைபிடித்து
உன்னிடத்தில் வந்த பின்னே
ஒருபோதும் விட மறுத்தாய்
உன் சொந்தம் ஆன பின்னே
என்னுரிமை ஏதுமில்லை
என்று எடுத்துச் சொல்லி
தாங்கியே பிடித்துச் சென்றாய்
ஆதலால் பின்தொடர்ந்தேன்
அழைப்பை அறிந்து கொண்டேன்
அடிக்கடி சோர்ந்த போதும்
அழைப்பையும் ஏற்றுக்கொண்டேன்
மத்திகிரி, 19-9-2017, மாலை 5.30
BT Song 743 I understood
You are leading me
I follow you with folded hands
Oh my Guruji
I can do nothing but this
You never counted my shortcomings
You never find any fault with me
I don’t have any talents
But when you called, I came after you
O my Father, you know
What happened after that?
You have done so much
There is no answer from me for that
Of course I turned back
And stood with much confusion
Like a mad person
I often scolded you
But you listened to all of them
And remained very patient
Till I am settle down with some peace
You gave only comfort
Even after you have done
So much to me
What can I say about my hesitation?
As I don’t have words for that
It is enough you go away
Just leave me alone
There is no use of any negotiation
Enough is enough, please leave me alone
But refusing to leave me alone
Even I forsake your hands, holding them again
Once I come to you
You refuse to abandon me.
‘Once you become my property
You don’t have any right of your own’.
Saying this
Again you are upholding and leading me
Therefore I follow you
I understood my call
Though often I become tired
I accepted your call.
Mathigiri, 19-9-2017, 5.30 pm.
BT Song 744
Another song reflecting my true nature and the way God takes pity on me because of his mercy as he redeemed me. This I wrote when I went for my evening walk and meditated upon God’s mercy and my wretched condition.
BT Song 744 இதுஎன் குணம்
இரக்கத்தை அறியேன்
இங்கிதம் அறியேன்
இன்சொல் ஒன்று
பேசிட அறியேன்
எதற் கெடுத்தாலும்
வாதம் செய்வேன்
எடுத்துச் சொன்னாலும்
கேட்க மறுப்பேன்
பணிவு அறியேன்
பண்பும் அறியேன்
பாசம் நேசம்
கொண்டிட அறியேன்
தானென்னும் எண்ணம்
தலைக்கு ஏற
தர்க்கங்கள் செய்து
வெல்ல முயல்வேன்
இதுபோல் எனது
குணத்தைச் சொல்ல
எண்களும் போதாது
எண்ணியே காட்ட
ஆனாலும் என் மீது
நீ கொண்ட பரிவால்
அனைத்தும் அறிந்தும்
ஆட்கொண்டு உய்த்தாய்
அதை மட்டும் நாள்தோறும்
அடிமை எண்ணி
உளமாற உனைப்போற்றி
உன்னடிப் பணிகிறேன்
மத்திகிரி, 20-9-2017, மாலை, 5.30
BT Song 744 This is my nature
I don’t have compassion
Or I know modesty
I don’t know
To say few sweet words
I will argue
For everything
And won’t listen
To others
I don’t know humility
I don’t have character
I don’t know how to love
And show affection
Having much
Pride within me
I will try to win
Through arguments
Like this
To share all about my nature
Even numbers
Are not enough
Because of your mercy
Taking pity on me
Knowing all these
You redeemed me
Only thinking that
This your slave
Worships your feet
By praising wholeheartedly
Mathigiri, 20-9-2017, 5.30
BT Song 745
Though I am slowly recovering, yet as usual I am very busy with so much work. So I don’t find enough time to sit and talk with the Lord. As I have planned to go to the ashram, I was thinking and planning about it, arranging things I need to take there etc. etc. So after a long day when I sat for my quiet time, I directly told the Lord that he alone should understand my condition properly and come to interact with me rather than waiting for me to come to him.
BT Song 745 உனக்குள்ள கடமை
கூப்பிட்டா போதும் வந்திட வேண்டும்
கூப்பிட்டு என்னைக் கேட்டிட வேண்டும்
எப்படி இருக்கிறாய் என்று கேட்டு
என்னை அழைத்து நீ பேசிட வேண்டும்
இதைவிட உனக்கு வேறென்ன வேலை
என்போல் உனக்கு ஏதுண்டு கவலை
படைத்து உலகில் வைத்த பின்னர்
பக்தனைப் புரப்பது தலையாய வேலை
நெருக்கடி ஆயிரம் கொண்டு வாழ்வதால்
நினைத்திட எனக்கு நேரமே இல்லை
நேரம் ஒதுக்கி உன்னிடம் வந்தும்
நின்று பேசும் நிலையில் இல்லை
உடலோடு போராடி ஒரு பக்கம் சோர
உலகோடு போராடி மறுப்பக்கம் சாய
இடையில் மனதோடு போராடி வீழ
எங்கிருந்து உன்னை நினைந்து கூப்பிட?
ஒரு பக்கம் எனக்குள் ஆயிரம் ஓலம்
மறுபக்கம் பலவித வெளியான தாக்கம்
இவற்றிடை போராடி எத்தனை முயன்றும்
உன்னைக் கூப்பிட நேரமே காணோம்
இதையெல்லாம் நீ அறிந்த பின்னே
நீதானே எனைத்தேடி வரவேண்டும்
இருக்கும் நிலையை சரியாக அறிந்து
என்னோடு அமர்ந்து நீ பேச வேண்டும்
மத்திகிரி, 20-9-2017, இரவு, 11.10
BT Song 745 Your duty
Even if I didn’t call you,
You should come and ask about me
You should inquire about my health
And talk about it with me
Other than this, what works do you have?
What kind of worries you have like me
Once you created and sent to this world
Taking care of your bhakta is your prime duty
As I am living with so many pressures
I don’t have time to think about you
Even if I come by sparing some time
I am not in a position to sit and talk to you
As I become tired by struggling with the body on one side
As I have to struggle with the world on the other side
In between as I depressed by struggling with my mind
How can I call you by remembering you often?
On the one side there are a lot of cries within me
On the other side there are so many attacks from the outside
As I have to struggle with all of them
I don’t find time to call upon you
After knowing all these
You alone should come seeking me
Understanding my present condition properly
You should sit and talk with me
Mathigiri, 20-9-2017, 11.10 pm.
Leave a Reply