BT Song 761
The free will which we have at the same time receiving the grace of God which stands beyond the normal rationality involving the very same reason to understand through my mental faculties is a kind of balance for me to walk in my bhakti in the Lord. God never despises the mental faculties at the same time my own rationalism affirms that everything that I encounter and experience in my bhakti with the lord neither remain a riddle nor remain purely rational. For many this is nothing but a contradiction and my justification to resolve this contradiction. But those who understand the limitation of reason, only through it alone can understand what I try to communicate.
BT Song 761 புதிரல்ல
கிருபை தருகிறாய்
கேட்காத போதும்
கருணை பொழிகிறாய்
புரியாத போதும்
அழைத்து மீட்கிறாய்
அறியாத போதும்
ஆட்கொள்ள வருகிறாய்
உடன்பட்டால் மட்டும்
இறைவன் நீ ஆனாலும்
என் விருப்பம் இல்லாமல்
உன் சித்தம் எனக்கூறி
என் மீது திணிக்காமல்
என்னை நீ கேட்காமல்
என் விருப்பம் அறியாமல்
என்வாழ்வில் ஒன்றையும்
நடப்பிக்க மறுக்கிறாய்
கேட்காமல் நீ தரும்
நன்மைகள் அனைத்தும்
இறைவன் ஆனதால்
அனைவர்க்கும் அளிக்கிறாய்
ஆயினும் அவற்றையும்
நானும் அடைந்திட
என் சித்தம் இல்லாமல்
தந்திட மறுக்கிறாய்
புதிர் இது என்பதா
புரியவே இல்லை
புரியாத புதிராக
இருக்கவும் இல்லை
உன் சாயல் தன்னில்
என்னையும் படைத்தபின்
எனக்கிதைப் புதிராக
நீயும் வைக்கலை
தலைவிதி என்று
தவிக்கவும் வேண்டாம்
செய்த கர்மம் என
சோரவும் வேண்டாம்
இறைவன் விட்ட வழி
எனக் கூற வேண்டாம்
கலியுகம் எனக்கூறிக்
கலங்கவும் வேண்டாம்
அறிவால் அறிந்து
ஆவியில் உணர்ந்து
உன் சித்தம் புரிந்து
உடன்பட்டு வந்து
நீ தரும் போது
தாழ்மையாய் ஏற்று
உன் சித்தம் செய்வேன்
உளமாற பணிந்து
குருகுலம், 2-10-2017, காலை, 10.30
BT Song 761 Not a riddle
You give grace
Even if I don’t ask you.
You shower your compassion
Even if I don’t understand it.
Even when I didn’t know you
You redeemed me by calling me.
But you come to lord over me
Only if I accept it.
Though you are God
Without my desire
In the name of your will
Never impose anything on me.
Without consulting me
And not knowing my desire
You refuse to do
Anything in my life.
As you are God
All the common grace (blessings)
You give to everyone
Even without being asked.
But in order to
Receive them
Without my will
You refuse to give to me.
Can I say that this is a riddle?
I cannot understand it?
At the same time
It never remains a riddle to me.
Once you have
Created me in your image
You never kept this
As a riddle to me
I need not get frustrated
Considering this as my fate
I need not get discouraged
Thinking that this is because of my past karmas
Even I need not say:
Let God do whatever he wants to do
Even I need not be troubled thinking that
This is Kali Yuga
Understanding through my buddhi (intellect)
Realizing it in my spirit
Understanding your will
Accepting it and coming to you
When you give to me
Receiving it with humility
I will do your will
Worshiping you wholeheartedly.
Gurukulam, 2-10-2017, 10.30 am.
BT Song 762
For one difficult thing for me in life is to live with others and adjust with them. In spite of several of my limitations and weaknesses I set a high standard for others and expect them to follow it whereas I fail in most of my own creeds and standards. When others fail my expectation the fury that I get is beyond my control. But when I calm down a bit understanding my own failures, it helps me to regain my common sense. When I become upset several times I won’t react but show it in a different way even with a smile I will condemn them with sweet words pointing out their mistakes. This poem expresses my nature in which I often fail.
BT Song 762 என் குணம்
எரிச்சலும் கோபமும்
என்னிரு கண்கள்
எதிர்வாதம் செய்வது
எனக்குள்ள குணம்
பொறுமையாய் இருப்பதாய்
நடிக்கவும் செய்வேன்
புத்தியை கத்தியாய்க்
கைக்கொள்ள தயங்கேன்
எளிமை வேடம்
பூண்டு வாழ்வேன்
எவ்விதத் தேவையைக்
குறைத்திட மறுப்பேன்
அமைதியாய்ச் சில வார்த்தை
சிலமுறை கூறுவேன்
ஆனால் உள்ளுக்குள்
எரிமலை ஆவேன்
சேவை செய்வதாய்
நானும் கூறுவேன்
தேவை வரும்போது
நானே ஓடுவேன்
தனியாக வாழ்ந்தும்
தனிமையில் வாழேன்
தனிமையைப் போக்க
செயல் பல செய்வேன்
உதவிகள் பலவிதம்
செய்வதாய்க் கூறுவேன்
ஊரறிய நானும்
பறைசாற்றிக் கூறுவேன்
கிள்ளிக் கொடுத்ததை
அள்ளிக் கொடுத்ததாய்க்
கூறி என்னையே
மெச்சியும் கொள்வேன்
இத்தனை அவ குணம்
இருந்தும் இன்னும்
எப்படி மனிதனாய்
வாழ்கிறேன் என்பது
இதுவரை எனக்குப்
புதிராக உள்ளது
இதற்கு விடையும்
எவரிடம் இருக்கு?
என நான் கேட்டு
முடிக்கும் முன்னமே
இறைவன் கூறினான்
“உன்னிடம் என்று.”
இதுதான் என் நிலை
என்று கூறினான்
இதைவெல்ல வழியை
அவனும் காட்டினான்
காட்டிய வழியிலே
ஓடித்தான் பார்க்கிறேன்
கடவுளை அனுதினம்
வேண்டித்தான் பார்க்கிறேன்
ஆயினும் மாற்றமோ
அறியவும் இல்லை
ஆயினும் நானும்
விடுவதாய் இல்லை
குருகுலம், 2-10-2017, காலை 11.30
BT Song 762 My nature
Anger and irritation
Are my two eyes.
Counter arguing is
My character.
I will pretend that
I have much patience,
But I won’t hesitate
To use my brain as a sharp knife.
I wore attire
Of simplicity.
But won’t give up
Any of my needs.
I will say few words
Very softly
But within I will roar
Like a volcano.
I will claim that
I am doing seva.
But when time comes (for seva)
I will run away to escape.
Though I live alone
Yet I am not living lonely.
In order to kill loneliness
I will be busy with so many things.
I will proclaim that
In many ways I am helping others.
And will make it known
To the whole world.
When I actually give very tiny bit
I will appreciate
Myself by claiming that
I have given so much!
When I have
So many vices
Still it remains a
Riddle for me that
How I manage to
Live as a human being?
And who has the
Answer for this?
Before I could
Complete the question,
God said that
‘It is with you
And this is your
Present condition’
He showed the
Way to overcome it.
But I try to run in the path
Which he showed me!
And everyday
I beg to god.
But I didn’t find
Any change so far!
But I am not
Going to let him go easily.
Gurukulam, 2-10-2017, 11.30 am.
BT 763
BT Song 763 Remains a shortage
A day remain
Incomplete to me
When I fail
To sing your glory
It really surprises me
If I didn’t
Come to you
To bow at your feet
I am not
Let a day go
Without fulfilling
All my needs
I never remain
Not running
Seeking after
All my needs!
But it is
Not good
To live
Despising my atman
When the need of the body
Along with that of mind is denied
Then both body and mind
Become tired
When the need of
My heart is denied
Along with heart, my body also
Will stop functioning.
But when the
Need of the atman comes
Then even I
Won’t think about it
But you
Coming silently
Remind me
About its need
Therefore I
Come again
To worship at your feet
Few seconds.
And the blessing
That I received because of it
I try to share
With few words through this poem.
Gurukulam, 3-10-2017, 11.30 pm.
Another day with busy work in reading too much and typing too much and doing other work. I couldn’t even go to dhyana mandapam to spend some time quietly with the Lord. That night when I sat for my meditation and reflection of the day, it really surprised me that when I run pillar to post for my physical and mental needs, how I completely ignore the need of my atman. As I recalled, I wrote this song and sang it as my prayer of the day.
BT Song 763 குறையாக இருக்கு
உன்னைப் போற்றி பாடாது
ஒருநாள் போவது
உண்மையில் எனக்கொரு
குறையாக இருக்குது
உனை நாடி வந்து
பணியாமல் இருப்பது
உண்மையில் எனக்கு
வியப்பாக இருக்குது
ஒரு நேரம் கூட
ஒருவிதத் தேவையை
ஒரு நாளும் நானும்
விடுவதாய் இல்லை
உடலோடு மனதின்
தேவையைத் தேடி
ஓயாமல் நானும்
ஓடாமல் இல்லை
ஆயினும் ஆன்மாவை
அலட்சியம் செய்து
வாழ்வது மட்டும்
சரியாக இல்லை
உடலின் தேவைகள்
மறுக்கப் பட்டாலோ
உடலொடு மனமும்
சோர்ந்து தான் போகும்
உள்ளத்தின் தேவையும்
மறுக்கப் பட்டாலோ
மனதோடு உடலும்
ஓய்ந்து போகும்
ஆன்மாவின் தேவை
எனவரும் போது
அதைப்பற்றி எண்ணம்
வந்திட மறுக்கும்
ஆயினும் நீயோ
அமைதியாய் வந்து
அது பற்றிச் சொல்லி
புரிந்திட வைத்தாய்
அதனால் நானும்
சில நொடி நேரம்
உன்னடி பணிந்து
தொழுதிட வந்தேன்
அதன்மூலம் நானும்
பெறுகின்ற பேற்றை
சில வரி கொண்டு
பாடியும் வைத்தேன்
குருகுலம், 3-10-2017, இரவு 11.30
BT Song 764
Of course God never thinks about our ability, but only availability. At the same time he not only hesitates to use our natural talents in his seva, but many times gives new talents which he thinks that we need to do his seva. In my life as a bhakta, though I had some natural talents, I know for sure God gave some new talents after I began to follow him. For example I don’t know proper cooking, as I had my mother, sisters and father who was a good cook. But once I become a bhakta when I began to experiment with the traditional knowledge of cooking (it is a well known fact that [Tamil] Brahmins are good cooks and there is a Sanskrit saying, ‘brahmana bhojana priyaha’ = Brahmins are fond of food) I not only began to improve but also invented new recipe and methods mingling both North and South Indian style and masalas in my cooking. And I know I will be remembered at least for some time only for my cooking.
But tonight when I thought about some of the talents which God gave, but which I cannot use or develop properly, then I said to the Lord, ‘when you give you should give knowing my limitations. Otherwise there is no point in blaming me. If you give beyond my capacity, then you have to come and work with me to use those talents.’ As I like to tease the Lord, I wrote this poem by doing it again in this song.
BT Song 764 குறையறிந்து கொடு
திறமைகள் தருவது
நீயென அறிந்து
திறம்பட செய்ய
பணிவு வேண்டும்
தந்த திறமைக்கு
கணக்கு நீ கேட்க
உண்மையாய் நானதை
தந்திட வேண்டும்
ஒருவிதத் திறமையும்
நீயும் தராமல்
உலகில் எம்மை
அனுப்ப வில்லை
ஆயினும் அதையும்
புதைத்து வைத்தால்
ஐயனே அதற்கு நீ
பொறுப்பு இல்லை
தந்தற் கேற்ப
திறம்பட செய்ய
அதற்கு ஏற்ப
அதிகம் தருவாய்
ஒன்றுக்கும் உதவாது
புதைத்து வைத்தால்
உள்ளதை நீ
எடுத்துக் கொள்வாய்
இந்த உண்மை
அறிந்த பின்னும்
எனக்குள்ள கவலை
ஒன்றே ஒன்றுதான்
எண்குணம் அறிந்து
தந்திடும் போது
என்குறை அறிந்து
தந்திட வேண்டும்
இல்லை என்றால்
என்னுடன் சேர்ந்து
திறமைக்கு ஏற்ப
நீ செய்ய வேண்டும்
குருகுலம், 4-10-2017, இரவு 11.30
764 Give, knowing my limitation
Knowing that
You are the one who gives talent
I should have
Humility to use it.
When you
Ask account
For that talent
Then I should give it in truth.
You didn’t
Send us to this world
Not giving
Any talent
But of my Lord
You are not responsible
If one keeps it
Remain buried.
Once we use
The talents diligently
You will give
More and more.
But if not using them properly
If one buries without any use
Then you will take away
What is already given?
After knowing
This truth
I have only one
Worry now
When you give me
Any talent
Knowing my shortcomings
You should give
Otherwise
Joining me
You should work along with me
As much you gave.
Gurukulam, 4-10-2017, 11.30 pm.
BT Song 765
Eat, drink and be merry as you are going to die. This Epicurean view is not new to our Indian world view as the Indian materialists promoted this. However, replacing the need of the body, throughout history in the name of ‘enquiry’ so many things were written only to feed the need of the mind or buddhi. However, when I read, reflect, debate and write, thinking that these are part of my sadhana to meet the needs of my atman, at the end, they don’t serve the way I spent time and energy in them. Several times I clearly understood and also experienced, that, like in human relationship where love, affection with emotion come first and not the reason, in my bhakti also in my relationship with the Lord the reason and mind (intellect) takes a back seat and only love, affection and many times with emotional expression alone meet the need of my atman. This song reflects this meditation in the morning.
BT Song 765 உயிரற்ற வாழ்வு
இறைவனும் பாவம் என்ன செய்வான்
எப்படி நமக்கு புரிய வைப்பான்
அவரவர் தேவைக்கு ஏற்ற வண்ணம்
அவனும் தந்தான் குறைவு இன்றி
பெறுபவர் எவரெனக் கேள்வி இல்லை
பெற்றது எதுவெனக் கேட்கவில்லை
பெற்றதை நாமும் பயன்படுத்தி
பெற்றது எத்தனை என்பதே கேள்வி
உடலைக் கொடுத்தான் உலகில் வாழ
உழைக்கச் சொன்னான் பிழைத்துக் கொள்ள
உடலைக் கொண்டு உழைத்த போதும்
உண்மையில் பெற்றது எதுவென அறியோம்
அறிவைக் கொடுத்தான் அறிந்துகொள்ள
அறிந்து வாழ்வைp புரிந்து கொள்ள
அறிவைக் கொண்டு அறிந்த போதும்
புரிந்தது எதுவென புரிய காணோம்
உள்ளம் தந்தான் உணர்ந்து வாழ
உணர்ந்து வாழ்ந்து மகிழ்ந்திருக்க
உணர்ந்து மகிழ்ந்து வாழ்ந்த போதும்
உணர்ந்த மகிழ்வை ஏனோ இழந்தோம்
உடலை, அறிவை மனதைக்கூட
இணைத்துத் தந்தான் உயிரின் மூலம்
இணைத்த உயிரை இவைகள் மூன்றும்
படுத்தும் பாட்டைக் கண்டு வியந்தான்
வியந்த அவனும் வருத்தமுற்று
நாம் உய்ய வழியைத் தந்தான்
ஆனால் அதில் நடக்காமல்
அழித்துக் கொண்டோம் உயிரை மட்டும்
அறிவு மனது உயிரோடு
அழித்துக் கொண்டு வாழ்ந்த பின்னே
உடலில் நாமும் வாழ்ந்த போதும்
வாழும் வாழ்வில் உயிரைக் காணோம்
குருகுலம், 6-10-2017, காலை 11.00
BT Song 765 Life without living
Poor god what else he can do
How he is going to help us to understand
He gave each one without lacking anything
According to the needs of every one.
The question is not: who is the one received it
We need not even ask what he received
But the question is that:
What is gained more by using it?
He gave this body to live on this earth
He asked us to toil in order to live
Though we toil using our body
We don’t know what actually we have gained?
He gave buddhi to understand
So that we can understand about life
Though we understood using our brain
Still we are not sure what we understood?
He gave a heart for us to live with proper sense
So that we can live happily
Though we lived happily
Somehow we lost that happiness which we received
He joined body, mind and heart
Along with atman
But he was surprised to know the way
All the three are pestering the atman
As he was saddened about this
He showed a path for us to be redeemed
But not walking in it
We annihilate only the atman
Along with buddhi, mind and body
Once we annihilate atman
Though we live in this body
Just we are living like a dead man walking
Gurukulam. 6-10-2017, 11.00 am.
Leave a Reply