BT Songs 766 to 770

BT Song 766

Sometimes instead of enjoying the present, I waste my time thinking about the future.  As I began to enjoy my life here, this morning I began to pray to God, if possible, to give many more opportunities in future too.  What one time remained a normal part of my life, now becomes a longing and dream of the future.  I know that one way this is selfishness as my life here is going to meet only my need alone and not going to serve anyone.  And I can justify that by saying that as a sannyasi this is my call to live alone in a remote place.  But the vocation that I chose for my life and the call which God has given to serve others, several times do not match together.  Anyhow when I sat for my meditation instead of enjoying the present time I began to imagine about my future with so many ‘what ifs’. After wasting a few minutes in that dream about which I don’t know anything, returning back to the reality of the present I prayed to the Lord that if he gives this kind of life in future that is good. Otherwise I am willing to go as per his desire.  Then I wrote this song as that prayer for the day. [Finally God granted that wish also by forcing me to move back to the ashram on September 5th 2021 and my mother passed away on December 26, 2022.  I am happy that my mother stayed till the end of her life and I also managed to take care of her in the final few crucial months in her life.  Then the opportunity to continue to live came, but still I am not sure what God holds for my future.  Anyhow I learnt to enjoy my Present each day than worrying or thinking about the Future, as He knows better than me.—13-5-2024]

BT Song 766 ஒரு விருப்பம்

இப்படி வாழ்வது ஒரு விதம் நல்லது

எப்படி நானதை உனக்கு சொல்வது

இது போல வாழ இதயம் ஏங்குது

ஆனால் உன் சித்தம் எதுவாக உள்ளது

சுயநலம் இதுவென நானும் நினைப்பதா

எனக்கிது தேவை என்று சொல்வதா

இதற்கென அழைத்தாய் என நான் எண்ணவா

ஏது நீ செய்தாலும் பணிந்து ஏற்பதா

விருப்பம் மட்டும் இருந்தால் போதுமா

வேண்டுவதெல்லாம் கிடைக்கக் கூடுமா

சரி-தவறென்று யார் சொல்லக் கூடும்

சிந்தையும் பலமுறை ஏமாற்றக் கூடும்

நடப்பது நடக்கட்டும் என எண்ண வில்லை

நடத்துறாய் அதில்  ஐயமும் இல்லை

ஆயினும் என் மன ஏக்கத்தைச் சொன்னேன்

அது நிறைவேற வரமும் கேட்டேன்

கொடுத்தால் நானும் மகிழ்வுடன் ஏற்பேன்

மறுத்தால் அமைதியாய்ப் பொறுமையும் காப்பேன்

காலம் நேரம் கனியட்டும் என்று

கலக்கமின்றி உன் சித்தம் அதுவென ஏற்பேன்

குருகுலம், 8-10-2017, காலை 11.30

BT Song 766 A wish

It is good if I could live like this

But how can I talk about it with you?

My heart is longing to live like this

But what is your will in it?

Should I say that this is mere selfishness?

Or should I say that this is my present need?

Could I think that you have called me only for this kind of life?

Or should I accept whichever might be your seva?

Is mere desire is enough

Can I get all that I wish?

Who can say which one is correct or not?

Even my mind could also cheat me!

I never think that let it happen whatever might happen

You alone are leading me; I have no doubt about it.

But I am only sharing the longing of my heart

And ask you to grant that wish.

If you grant it I will accept happily

If you deny it, still I will accept it more joyfully.

I will wait for your time to come.

And I will accept it as your will without any trouble.

Gurukulam, 8-10-2017, 11.30 am.

BT Song 767

After writing the previous poem (766) and prayer time, I began to rejoice living in the present and also in the presence of the Lord.  As I began to live in the present enjoying the presence of the Lord, I found some kind of bliss within me and to express it, I wrote this song immediately to thank God for such wonderful times to be with him in the present rather than wasting time about things that went in past or dreaming about the future.

BT Song 767 ஏன் பாடாது

நேரம் தோறும் தாங்குகிறாய்

நிமிடம் தோறும் நடத்துகிறாய்

எண்ணி எண்ணி மகிழ்கிறேன்

என்றும் உன்னைப் பணிகிறேன்

ஓடும் நாட்கள் ஓடட்டும்

உருண்டோடும் வாழ்வும் நகரட்டும்

அனுதினம் உன்னைப் பணிகிற

அருள் எனக்குக் கிடைக்கட்டும்

வெறுமையாய்  வந்தாலும்

நிறைந்து பணிந்தாலும்

அறிந்து அருள்கிறாய்

ஏற்றுக் கொள்கின்றாய்

திருவடி தரிசனம் கண்டுவிட்டேன்

தேடிய பேறும் பெற்று விட்டேன்

அருளுக்குப் பாத்திரம் ஆகிவிட்டேன்

அதிகம் அதையும் அடைந்துவிட்டேன்

இத்தனை பெற்ற பின்னாலே

ஏன் என் மனம் துள்ளாது

எண்ணி எண்ணி உருகி மனம்

எனுனை நாளும் பாடாது

குருகுலம், 8-10-2017, காலை 11.50

BT Song 767 Why won’t  I sing?

You are upholding me each moment in life

You are leading me minute by minute.

Thinking constantly about it I am rejoicing

I worship you all the time.

Let the days go as it goes

Let the life roll as it rolls

But let me receive this grace alone

To worship you every day!

Though I come with empty hands

Though I worship with fullness of my heart

Knowing that alone, you give me your grace

And you receive me with much love.

I received the vision of your Holy feet

I received that blessed status which I searched

I become the vessel to receive your grace

I have received it more and more.

Once I received this much

Why not my heart rejoice

Why won’t it sing thinking more and more?

About that grace that I received!

Gurukulam, 8-10-2017, 11.50 am.

BT Song 768

Many things which I desired I never got in life.  Similarly God several times forced me to accept certain directions which I never liked. Though I became upset with him and even found fault with him, after the passing of time, when I look back, I see that God has done only good things in my life.  Similarly now I wish that the present life should continue forever here in the ashram. But learning from my past experience, I know that whatever He will do, will do only for my good.  After reflecting about it I wrote this song.

BT Song 768 எனக்கெது நன்மை

தருவதற்கென்றே நீ இருந்திடும் போது

பெறுவதற்கிங்கே தடைகளும் ஏது

தருவதை ஏற்க வந்திடும் போது

எனக்குள்ளே வீண் தயக்கமும் ஏது

தேவை எதுவெனத் தெரியாத போதும்

தேவையற்றவை கேட்கும்போதும்

தேவை எதுவெனத் தெரிந்த நீயும்

தேவைக்கு ஏற்ப அளிக்கின்றாய் நாளும்

பெறும்வரை ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன்

பெற்றதில் பலவிதக் குறைகளும் காண்கிறேன்

நான் எதிர்பார்த்தது நடக்காத போது

அதுபற்றி முறையீடு பலவும் செய்கிறேன்

ஆயினும் நாட்களும் ஓடிய பின்னே

அதன்பின் உள்ள ரகசியம் புரிகிறேன்

அதையெண்ணி மனதில் நாணம் கொண்டு

அறியாது சொன்ன குறைக்காக வருந்துறேன்

எதிர்கால நிகழ்வை அறியாத நானே

எண்ணிலாக் கற்பனை செய்கிறேன் வீணே

அதன்படி நான் வாழ விரும்புவதாலே

அதை நிறைவேற்ற வேண்டுகிறேனே

எனக்கெது நன்மை என நீ தெரிந்து

அதை மட்டும் தருகிறாய்  கருணையில் நிறைந்து

அனுபவம் மூலம் நானதை அறிந்து

அதையும் ஏற்பேன் திருவடி பணிந்து

குருகுலம், 8-10-2017, இரவு 11.50

BT Song 768 What is good for me?

As you are there to give to me

Where are any hurdles to receive?

Once I come to receive it

Where is any hesitation within me?

Though I don’t know what is my need?

Even if I ask many things which are not required

As you know, which is my (present) need?

You provide accordingly everyday!

I ask so many questions till I receive

I find many faults in those which I already received

When things are not going as per my expectations

I make so many complaints about it.

But once the days are gone

Then I realize the secret behind it.

Then feeling shy about it,

I feel sorry for the complaints which I made

As I don’t know all about my future

I imagine so many unnecessary things about it

As I wish to live according to those dreams

I ask you to accomplish them.

But knowing which is good for me

You give only that because of your compassion

Once I realized it through my experience

I accept it bowing at your feet.

Gurukulam, 8-10-2017, 11.50 am.

BT Song 769

BT Song 769 Even if I live just for a day!

Even if I live only for a day

I should live only with you.

Even if I worship you only one time

I should worship your feet

I should always

Think about your grace

I should only

Glorify your name.

Each day I come

Seeking your holy feet

I sing your praise

With sweet Tamil

Both with sense and mind

I only glorify you

I rejoice

As I live for you.

I should sit

Calmly at your feet.

Oh my Lord

I should listen to you.

I should strive

To live accordingly.

For that I need

More of your grace!

Sometimes I will

Praise you using many words

Other times

I will do seva for you

Not doing both

I might even take rest

And I will see

That your grace is even in it.

Not comparing

My life with others

Not living a life

For others to see

I will do your will

Knowing it clearly

As you gave this day

Only for that.

I should

Live like this

Celebrating you

With thanksgiving

Singing songs

Like this every day

Not troubled

Thinking about my future.

Gurukulam, 9-10-2017, 11.10 a.m.

Many times I heard several people saying that even if I live for one day I should live like this or live with him or her etc.  As a bhakta for me, to live with the lord worshiping him and writing songs to praise him is my desire to live even for one day.  Though I never set aside separate time to worship Him, the constant communication in the spirit, I  always feel his presence in whatever I do.  This is the longing for me to live even one day with him.  As I meditated about it and requested the same in my prayer, as the inspiration came I wrote this song expressing that longing.

BT Song 769 ஒரு நாள் வாழிணும்

ஒரு நாள் வாழ்ந்தாலும்

உன்னோடு வாழணும்

ஒரு நேரம் தொழுதாலும்

உன்னடிப் பணியணும்

உன்னருள் தன்னை

எண்ணி பார்க்கணும்

உன் புகழ் தன்னை

நானும் உயர்த்தணும்

தினந்தோறும் திருவடி

தேடி வருகிறேன்

தீந்தமிழ்ப் பண் கொண்டு

உன் புகழ் பாடுறேன்

உணர்வாலும் மனதாலும்

உன்னையே வாழ்த்துறேன்

உனக்காக வாழ்வதில்

மகிழ்ச்சி கொள்கிறேன்

அமைதியாய் உன்னடி

அமர்ந்திட வேண்டும்

ஐயன் நீ சொல்லக்

கேட்டிட வேண்டும்

அதன்படி வாழ

முயன்றிட வேண்டும்

அதற்கும் உன்னருள்

அதிகமாய் வேண்டும்

சொல் கொண்டு உன்னை

சில நேரம் துதிப்பேன்

செயல் மூலம் உனக்காக

பணிசெய்து கிடப்பேன்

இரண்டுமே இல்லாமல்

ஒய்வும் எடுப்பேன்

அதிலும் உன்னருள்

இருப்பதைக் காண்பேன்

பிறரோடு என்னையும்

ஒப்பிட்டுப் பாராமல்

பிறர் காண வேண்டி

ஒரு வாழ்வு வாழாமல்

எனக்கென நீ தந்த

இன்றைய நாளையும்

உனக்கென நான் வாழ்ந்து

உன் சித்தம் செய்வேன்

நன்றியால் நானுனை

கொண்டாடி வாழ்ந்து

நாள்தோறும் இது போல

பண்பாடி மகிழ்ந்து

எதிர்காலம் எண்ணிக்

கலங்காமல் இருந்து

இதுபோல் வாழணும்

இசை பாடி மகிழ்ந்து

குருகுலம், 9-10-2017, காலை 11.10

BT Sonng 770

All my requirements are met in the Lord. But living with him and in his presence is the one requirement which I cannot give up for any other thing.  Though other work and pressures in life might deprive that kind of life, knowing that need, I often fight with God knowing my limitations. He should remember that requirement and give it to me each day.

770 பல தேவைகள்

எனக்கொரு தேவை

உள்ளத்தில் இருக்கு

உனக்கதைச் சொல்லத்

தேவையும் எதற்கு

தேவை எதுவெனத்

தெரிகின்ற போதும்

தேவையான வார்த்தை

சொல்லிடக் காணோம்

அடிக்கடி உன்னிடம்

வந்திட வேண்டும்

அளவளாவி மகிழ்ந்து

பேசிட வேண்டும்

அன்றாட வாழ்வு

வழக்கம் போல் இருந்தும்

உன்னோடு உறவு

புதிதாக வேண்டும்

நேற்று போல் இன்றைய

நாளும் போனது

நாளைய தினம் பற்றி

நிச்சயம் தெரியாது

ஆகவே அனுதினம்

வாழ்ந்திடும் வாழ்வு

அது மட்டும் உனக்குள்ளே

நிறைவாக வேண்டும்

சிந்திக்கப் பலவித

எண்ணங்கள் உண்டு

செய்திட ப்பலவிதச்

செயல்களும் உண்டு

எத்தனை நேரம்

இவற்றிலே போயினும்

உனக்கென எனக்குமே

நேரமும் வேண்டும்

வந்தபின் உலகில்

வாழ்ந்துதான் ஆகணும்

வாழ்ந்தபின் ஒருநாள்

போகத்தான் வேண்டும்

ஆயினும் இடையில்

வாழ்வது எதற்கு

அர்த்தம் அதற்கும்

தெரிந்திட வேண்டும்

இது போல் தேவை

இன்னமும் உண்டு

எண்ணிட எண்களும்

போதாது இங்கு

தெரிந்த உனக்கு

ஏன் சொல்ல வேண்டும்

புரிந்து நீயே

தந்திட வேண்டும்

குருகுலம், 10-10-2017, இரவு 11.10

BT Song 770 Many needs

I have a need

Within my heart.

Why should

I share it with you?

Though I know

What is that need

I don’t find

Enough words to talk about it.

I should often

Come to you (like this)

I should rejoice

In talking with you like this

Though everyday life goes

As per the routine

I should have fellowship with you

Freshly each day.

This day went

Like the one before

I don’t know for sure

About tomorrow

Therefore even this

Day which I live

Should be complete

Living in you.

There are many thoughts

To contemplate.

There are many works

For me to accomplish.

However much time goes

In all these activities,

I should set apart

Separate time for you.

Once I came to this world

Somehow I need to live.

Similarly one day

I need to go away.

But what is the

Purpose of living in between them?

I should know

The meaning for that.

Like this

I have so many other needs.

I don’t have even

Numbers to count them all.

But why should I share with you

As you know about them all?

Knowing that

You should give accordingly!

Gurukulam, 10-10-2017, 11.10 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *