BT Song 786
BT Song 786 Worship Him
In this sweet morning
While the nature is also praising him
O my heart you too remember him
And bow to the Lord by singing his glory
In all the past days
He has done so many good things
Just only think all of them
Praise the Lord for them
Remembering both the needs of your body and mind
Accomplishing them all
He kept you with friends and relatives
Think about this
He protected you like the apple of the eyes
Removed all the worries and shortcomings
Not having anxiety about the future
He carried you on his hands
Just praise him
Only thinking all of them
He gave this day also only for this
And rejoice in him thinking about it.
Mathigiri, 24-12-2017, 6.15
I like the calm winter mornings where there are less activities outside and I can have a quiet time to think and worship the Lord. As I got up very early when I sat for worship, I thought about all the blessings that I received in my life. As I began to think one by one, then as inspiration came I wrote this song to praise him for those blessings.
BT Song 786 பணிந்திடுவாய்
இனிய காலைப் போதினிலே
இயற்கையும் துதிக்கும் வேளையிலே
இதயமே நீயும் நினைந்திடுவாய்
இறைவனைப் போற்றிப் பணிந்திடுவாய்
சென்ற நாட்கள் அனைத்திலுமே
செய்தான் பலப்பல நன்மைகளை
அவைகளை நீயும் நினைந்திடுவாய்
ஐயனைப் போற்றித் துதித்திடுவாய்
உடலோடு மனதின் தேவைகளை
உணர்ந்து அவற்றை நிறைவேற்றி
உற்றம் சுற்றம் உறவுடனே
உன்னை வைத்தான் நினைந்திடுவாய்
கண்ணின் மணிபோல் காத்திருந்தான்
கவலைகள் குறைகளை போக்கி வைத்தான்
எதிர்காலம் எண்ணி ஏங்காமல்
ஏந்தியே கரங்களில் தாங்கி வந்தான்
இவைகளை எண்ணி துதிசெய்வாய்
இன்றும் நடத்துவான் பணிந்திடுவாய்
இதற்கென இந்தநாள் தந்தானவன்
இதனை எண்ணி மகிழ்ந்திடுவாய்
மத்திகிரி, 24-12-2017, காலை, 6.15
BT Song 787
I learnt one thing in my bhakti: blaming god for everything, particularly even for my shortcomings. Left alone I would have lived like all other people in the world. As he saved and called me to live as his bhakta, now he should take the responsibility for my shortcomings also, as I am often forced to measure my life according to the standard that he set for me. As I cannot live up to that, then I have no other option but to blame him alone. This is part of bhakti and as he used such complaints he took them also another kind of praising him—known as ‘nindasthuti’ praise in the guise of censure.
As I wrote this song, I remembered one song which I learnt in my childhood from my mother who used to sing this song often:
ஒரு நாளைக் கொருதரம்
ஒரு நொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
எண்ணித் துதித்ததுண்டோ
நாளும் கிழமை என்று
நல்லோர் உரைத்தாலும்
நாளைக்கு ஆகட்டும்
வேலை அதிகம் என்பாய்
பாழும் பணத்தைத் தேடப்
படும்பாடு கணக்கில்லை
பகவானை எண்ணமட்டும்
அவகாசம் உனக்கில்லை
Did you ever thought
Even for a second
About the one
Who created you?
Even elders say
That today we have
Festival and puja
You will say that
You will worship tomorrow
As you have so many works today
There is no end for your
Toil to seek the evil money
But you don’t have time
To think about Bhagavan.
BT Song 787 உனக்குப் புரியும்
நினைக்க எனக்கு நேரமும் இல்லை
நிற்க எனக்கு போதும் இல்லை
தேவைகள் தேடி ஓடும் போது
தெய்வமே உனக்கு நேரமே இல்லை
எழுந்ததும் இன்றைய நாளைய கவலை
அடுத்து வந்திடும் ஆயிரம் வேலை
ஆடி ஓடி முடிக்கும் முன்னே
வந்திடும் தன்போல் தூங்கிடும் வேளை
நேற்றைய தினம் போல் இன்று போச்சு
நாளைய கவலை கூட வந்தாச்சு
அதற்கென ஆயத்தம் செய்திடும் போது
உனக்கென நேரம் எனக்குமே ஏது
இதுவே வாழ்வு என்றான பின்னே
இதைப் பற்றி பேசி பயனுமே என்ன?
ஆயினும் இதற்கு யார் பொறுப்பாவது
அதற்கு மட்டும் பதில் நீ கூறு
சும்மா இருந்த சங்கை எடுத்து
ஊதி கெடுத்தது யாரெனச் சொல்லு
அதற்கு பதிலை நீ தரும் போது
புரியும் என் நிலை உனக்கு அப்போது
மத்திகிரி, 24-12-2017, மதியம் 2.45
787 You can understand
There is no time for me to think about you
I don’t have time even to take rest
When I am running seeking many needs
O my God, there is no time for you.
Once I get up there are worries about today
Then will come many more works
Before I could accomplish them all
Time will come to go to sleep
This day has gone like yesterday
Along with came anxiety about tomorrow
When I was getting ready to face them all
Where is the time for you oh! my God?
If this become my routine life
What is the use of talking about it anymore?
But who will be responsible for this
Just give me only the answer for that
Who created problem by blowing
The conch which remain idle
When you will answer to that
Then you will understand my situation
Mathigiri, 24-12-2017, 2.45 pm.
BT Song 788
Night Basavaraj called me from Bangalore and we talked for a few minutes. After initial enquiries, he said that in the past several months he underwent so many anxieties which even disturbed his communication with so many people. Then I said that that is what anxiety does. It never solves the future problem (which may not even come) but robs the present peace of mind. But the problem is that we know that but still cannot overcome it. This is even true to me. It is very easy for me to advise others and quote some good quotations. But when it comes to my personal life, I still live with so many anxieties. But the only way to overcome this is to learn to live one day at a time, which is very easy to say but difficult to do. Because I don’t have the answers and solutions to so many anxieties. Therefore there is no point in carrying it too much beyond my level. Agreeing with me, Basava said that even several problems are not ours, which we need not carry. For this I said that even those problems which are very real and true in our lives, we don’t have solutions. So after some initial worries and anxieties, the best solution is to surrender them to the Lord and try to live one day at a time.
As I got up in the middle of the night and was unable to sleep further, thanks to so many dogs on the street, I got up at 2.00 and began to work on the computer. That time as I began to reflect on my talk with Basava, as the inspiration came I wrote this song.
BT Song 788 என்பழக்கம்
உன்னிடம் வருவது ஒரு விதம் நல்லது
உன்னிடம் சொல்வது எனக்கு நல்லது
என்னை நானே சுமந்திளைத்தேன்
இது புரியாமல் வீணாகத் தவித்தேன்
எனக்குள்ள கவலைகள் ஏராளம் ஏராளம்
அவற்றை எண்ணி மருகினேன் நாளும்
தேடினேன் விடைகளை எனக்குள் நானே
திகைத்துதான் போனேன் அவை காணாமல்
தீர்வுகள் ஆயிரம் தோன்றிய போதும்
தெளிவற்று இருந்தன விடைகள் தானும்
என்புத்தி சார்ந்தே எண்ணித்தான் பார்த்தேன்
எனக்குள திறனை நம்பினேன் நானும்
துணைவலி தோள்வலி பலவந்த போதும்
தீர்வுதான் வரவில்லை அவைகளினாலும்
இறுதியில் என் மனம் உரைத்ததின் பின்னே
உன்னிடம் வந்தேன் அவைகளைச் சொல்ல
“வாராத கவலைக்கு வருந்தினாய் வீணே
வந்தாலும் தீர்வில்லை உன்னிடம் தானே
பலமுறை இதை நீ அறிந்த பின்னும்
திருந்திடும் மனம் மட்டும் உனக்கில்லை இன்னும்”
இடித்து எடுத்து உரைத்தாய் நீயும்
இதுபோல் கூறினாய் பலமுறை தானும்
நானென்ன செய்ய இது என் பழக்கம்
பொறுமை காப்பது உனக்குள்ள வழக்கம்
மத்திகிரி, 25-12-2017, காலை 2.15
BT Song 788 My habit
One way it is good for me to come unto you
It is good for me to tell only to you
I become tired of carrying me
Not knowing this I get frustrated
The worries that have are many fold
Thinking about them I get depressed
I searched the answer within me
And bewildered as I couldn’t find them (there)
Though many solutions came
But the answers are not very clear in them
Depending upon my own brain I thought about them
And I trusted the talents that I have
Though many supports came along with my own strength
Not solution came through them
Finally as my heart rebuked me
I came unto you to tell about them to you
“You worried about the troubles which might not even come
Even if they come you don’t have solutions for them
Though you knew this many times in the past
You never had a heart of repentance”
By saying this you rebuked me
You warned me many times in the past like this
But what can I do this become my habit
And keeping patience is your nature.
Mathigiri, 25-12-2017, 2.15 am.
BT Song 789
After a few days staying in the ashram, as I was preparing to leave with my mother back to Mathigiri, unable to sleep properly I got up very early in the morning. Already Umapathy and most of his relatives were camping here to celebrate and to welcome the so-called (calendar) new year. Then I began to reflect on my past life and various thoughts came to mind. But one thing became very clear to me, as he saved me I can continue my journey with him in spite of circumstances. This new life I received is not one time past event but an ongoing experience each day in life. As I was ready to leave the ashram and go back to Mathigiri, I thanked God for saving me and bestowing this new life each day in my life. As inspiration came I wrote this song worshiping him with the same thought.
BT Song 789 நிலையாக வாழ்கிறேன்
நீ தந்த வாழ்விது
நித்தமும் வாழ்கிறேன்
நிலையில்லா உலகில்
நிலையாக நிற்கிறேன்
உருண்டோடும் வாழ்வில்
உன்னருள் காண்கிறேன்
உளமாற உன்னடி
தினந்தோறும் பணிகிறேன்
குறைவிலா நிறை ஒன்று
உலகில் எனக்கிலை
குற்றம் குறைவிலா
வாழ்வுமே காணலை
ஆயினும் நீ வந்து
ஆட்கொண்ட பின்னாலே
அடிமைக்கு இவையெல்லாம்
குறைவாக தெரியல
தகுதி நீ கண்டு
என்னையும் மீட்கல
தயவுடன் தாங்கினாய்
என் குற்றம் பார்க்கலை
இவைகளை எண்ணினால்
என் பாரம் தாங்கல
ஏறிட்டுப் பார்க்கவும்
எனக்கு வழியில்லை
பாவி நான் என்றுதான்
நானும் வருகிறேன்
பரிதாபம் கொள்ளெனக்
கெஞ்சி நிற்கிறேன்
இதற்குமேல் சொல்லிட
மொழியின்றி தவிக்கின்றேன்
என்ன நீ செய்யினும்
சம்மதம் என்கிறேன்
உன் நீதி போர்வையால்
என்னையும் மூடினாய்
ஏற்று நீ கொண்டு
என் பாவம் போக்கினாய்
அதனால் மீண்டும்
புதுவாழ்வு காண்கிறேன்
அனுதினம் உன்னுளே
நிலையாக வாழ்கிறேன்
குருகுலம், 1.1.2018, காலை, 3.30
BT Song 789 I live
This life is given by you
therefore I live each day
I live stable life
in this unstable world
I see your grace
in this fleeting world
Therefore I worship you
wholeheartedly
I have never seen
A life without blemishes
I never had a life
without errors and shortcomings
But once you came
and redeemed me
this slave never finds
any shortcomings
You never saved me
seeing my qualifications
you kindly upheld me
but never saw my shortcomings
When I think about them
I am unable to bear it any more
Therefore there is no hope for me
to look into your face
I came knowing that
I am a sinner
I beg you to have
Mercy upon me
I don’t have any more words
to tell about it to you
I gave my consent
whatever you do with me
Then you covered me
with your righteousness
Receiving me as I am
you removed my sins
Therefore I received
A New Life again
and live each day
In you.
Gurukulam, 1.1.2018, 3.30 am
BT Song 790
After returning from Bangalore yesterday, completing all my travel, meetings etc. suddenly I felt some kind of relaxation in my mind. And when I look back on all my travels and various meetings I have nothing but to thank God the way he took me along with him and accomplished what he wanted through me. After reading my regular portion from Muktiveda, when I was reflecting on the past two months of hectic travel and various programs I simply said to the Lord, ‘you have done more than what I expected and what I could accomplish on my own. But the way you went along with me and accomplished more than what I can do, I have nothing but to say thanks to you’. As the inspiration came I wrote this song as my thanksgiving.
BT Song 790 பாடும் பேரின்பம்
அதிகமே செய்தாய்
அதற்காக நன்றி
அனுதினம் நடத்துறாய்
ஐயனே நன்றி
எதிலுமே குறைவில்லை
இதற்காக நன்றி
இன்னமும் அருளுவாய்
உளமாற நன்றி
கடமைகள் செய்திடக்
கரம்பிடித்து சென்றாய்
கலங்கிநான் தவிக்காமல்
அரணாக நின்றாய்
தயங்கி நான் நிற்கையில்
துணையாக வந்தாய்
கரம் குவித்து பணிந்தேன்
ஏற்றுக் கொண்டாய்
உன்னை முன் வைத்து
ஓட்டச் செய்தாய்
உன்னுடன் ஓடியே
வென்றிட செய்தாய்
இனி வாழும் வாழ்வை
உனதாக்கிக் கொண்டாய்
இதையெண்ணித் தொழுதேன்
எனையாண்டு கொண்டாய்
உனக்கென வாழ்வது
ஒருவித இன்பம்
உன்னுடன் வாழ்வது
அதனினும் இன்பம்
என்னுள் நீ வாழ்வது
உண்மையில் இன்பம்
இதை நான் பாடுதல்
என்றும் பேரின்பம்
மத்திகிரி, 4-1-2018, மதியம் 1.50
BT Song 790 The bliss of all
You blessed me abundantly
Oh my God I thanks for that
You lead me every day
Oh my Lord I thanks for that
I lack nothing
Thanks even for this
You will bless me more
Thanks for that whole heartedly
In order to do my duty
You led me holding my hands
You remain as my fort
So that I won’t be troubled
When I stand still with hesitation
You came as my companion
Folding my hands I bowed unto you
You accepted that too
You made me to run
Keeping you in front of me
You made me to win
By running along with you
You took charge rest of my life
As your own
Thinking this I worship you
As you lord over me
It is a joy
To live for you
But it is more a bliss
To live with you
But the real bliss is
When you live within me
And singing about this is
The real bliss of all
Mathigiri, 4-1-2018, 1.50 pm.
Leave a Reply