BT Song 796
Again some dry spell within my heart. Though I spent time in prayer and meditation, no inspiration came to write new songs. However I worship, only when I write a song and sing it as my prayer, I feel content and feel that I lived that day. Each day I should read a few pages in different books, do some art work [cross stitch] and write one song. When I miss all these three, I am not happy that day. When I cannot write a song for a long time, subconsciously I miss something. As I prayed to the Lord to give me back what I think he took back, as inspiration came I wrote this song to say this prayer.
BT Song 796 வரம் கொடு
கொடுத்ததை நீயே
எடுத்துக் கொண்டாய்
கொஞ்சம் எனக்கில்லை
வருத்தமும் இதிலே
இது வரைத் தந்ததை
எண்ணி எண்ணியே
என்னுளம் சொல்லுது
நன்றிகள் கோடி
நான் கேட்டு நீயும்
தரவில்லை என்பதால்
மீண்டும் நீ மறுத்திட
நட்டம் எனக்கில்லை
ஒருவிதம் இதுவும்
நல்லதாய்ப் போனது
ஓயாத எண்ணமும்
தன் போல நின்றது
ஆயினும் உள்ளத்தில்
சிறு ஆசை உள்ளது
அதமட்டும் இப்போது
சொல்வதும் நல்லது
என்னதான் உன்னை நான்
வழிபட்ட போதிலும்
இதன் முன் அவை எலாம்
வெறுமையாய் தோணுது
அன்றாடம் ஒரு பாட்டு
எழுதினால் மட்டுமே
அடியவன் மனதில்
நிறைவும் பெருகுது
இதையெண்ணி மீண்டும்
எடுத்ததை தந்திடு
இன்னும் சில பாடல்
எழுதிட வரம் கொடு
மத்திகிரி, 8-1-18, இரவு 11.45
BT Song 796 Give me boon
You took back
What you have given
I don’t have any regret for this
My heart gives you
Millions of thanks
For what you have
Give me so far.
As you never gave
Only after I asking it
There is no loss for me
If you refuse to give again
This is one way good
For me
As the wavering mind
Become stand still.
Yet I have
A small desire within my heart
It is good
Only to share that now
However I worship you
Before this
All of them look
Mere vanity.
My heart
Becomes content
Only if I write
Each day one song
Thinking about it
Give me back what you took back
And give me the boon
To sing a few more songs.
Mathigiri, 8-1-18, 11.45
BT Song 797
Does god involve in everyday life of a bhakta? Yes and no is my response. When I live a normal bhakti life, each day goes as I live. When I complicate it with my own agenda and temperament, then the very same day becomes more complicated. On crucial issues I need to wait and pray for God’s guidance and grace. But I need not bother god for each and every yawning and sneezing in a day. One of my favourite quotes is: God won’t do our part and we cannot do God’s part. And when I live accordingly the peace of God guides and controls even the normal part of my life.
BT Song 797 இதுபோல நடத்திடு
நானென்ன செய்யட்டும் என்று
நாள்தோறும் சொல்லி தருவாய்
நானாக செய்யட்டும் என்று
தள்ளியே ஒருபோதும் நில்லாய்
ஏனென்று உனக்கு தெரியும்
என்எல்லையும் உனக்கு புரியும்
சொன்னதைச் செய்யவே அறிவேன்
சொந்த பலத்தை நம்பேன்
இதுவரை அதைத்தானே செய்தாய்
ஏந்தியே அழைத்து வந்தாய்
எப்போதும் கூடவே நின்றாய்
இணைந்து எல்லாம் செய்தாய்
நானாக செய்திட்ட போது
நட்டங்கள் ஏராளம் வந்தது
நீ சொல்ல நான் செய்த போது
எல்லாம் நன்மையாய் ஆனது
இதையும் கண்கூடாய்க் கண்டேன்
எத்தனை அமைதியும் கொண்டேன்
எனவேதான் வேண்டி வந்தேன்
இது போல நடத்திடு என்றேன்.
மத்திகிரி, 9-1-18, மதியம் 2.20
BT Song 797 Lead me like this
Teach me every day
What I should do
Don’t stand by thinking
That let me do on my own strength
You know the reason for this
You know my limitation
I know only to do what I am instructed
I never trust my own strength
You have only done this so far
You carried me so far in life
You always stood with me
You accomplished everything standing with me
When I have done on my own
I incurred so many losses
When I have done as you instructed
Everything went well
I have seen this with my own eyes
How much peace I received in it
That is why I come again seeking this
I request you to lead like this.
Mathigiri, 9-1-18, 2.20 pm.
BT Song 798
Though I know that killing time is one of the challenges in old age, for me that is not the case. In fact I don’t even have much time to waste as I was always busy with some work. So after reading my books, when I got to prepare tiffin for my mother, I said as a prayer to the Lord that I never do anything in life just for the sake of killing the time, as I value each second as a gift from God. As I never divide my life between secular and sacred, anything and everything that I do keeps God within me, each second becomes valuable for me. As the inspiration came I wrote this song immediately.
798 உன் கிருபையே ஆகும்
என்னவோ நேரம்
போகட்டும் என்று
ஏதுமே நானும்
செய்யவே மாட்டேன்
ஒவ்வொரு நொடியும்
நீ தந்த தென்று
உணர்ந்த நானும்
உனக்கென வாழ்வேன்
எதைச் செய்தாலும்
உனக்கென செய்ய
ஏதுமே எனக்கு
பாரம் ஆகாது
உன்னை என்னுள்
வைத்து செய்வதால்
எல்லாம் எனக்கு
உன் பணி ஆனது
விரும்பி செய்வேன்
சிலமுறை நானும்
வெறுப்புடன் செய்தேன்
பலமுறை தானும்
ஆயினும் இறுதியில்
அவர்கள் நானும்
ஐயனே செய்தேன்
உனக்கென நாளும்
உணர்வுடன் உன்னுடன்
வாழ்கின்ற போது
ஒவ்வொரு நொடியும்
பயனுள்ள தானது
உன்னுடன் உனக்கென
வாழ்கின்ற போது
வீணிலே நேரம்
போவது ஏது
ஒரு சில நேரம்
உணர்ச்சியும் மோதும்
பலமுறை மனதோ
அமைதியாய் வாழும்
எனவே அனுபவம்
ஏதான போதும்
எல்லாம் நீ தரும்
கிருபை ஆகும்
மத்திகிரி, 9-1-18, மதியம் 2.55
BT Song 798 Nothing but your grace
Ever in my life
I won’t do
Just to
Kill the time
I will live
Only for you
Recognizing that
Each second is given by you
Once I do
Everything only for you
Nothing will become
A burden for me
As I do everything
Only keeping you within me
Each work becomes
Only a seva for you
Several times
I have done wholeheartedly
Other times
I have done them with some murmur
Anyhow at the end
Oh my Lord
I have done all of them
Only for you
As I live each second
With your conscious
Each second becomes
Very fruitful to me
As I live with you
And only for you
How is it possible
Does the time even go to waste?
Some times
Emotion will hit
Several times
Heart will remain in peace
So whatever might be?
My experience
Everything is
Only because of your grace
Mathigiri, 9-1-18, 2.55 p.m.
BT Song 799
Recently in a meeting held near Tanjore I met some Hindu ‘converts’. While sharing their journey in the Lord, few shared about their experience of seeing the vision of the Lord and hearing his voice with their physical eyes and ear. Though I never give much importance to such kind of experience, today as I was recalling it, with a teasing spirit I also asked the Lord to give me that kind of his darshan which I too can see with my eyes. Though I wrote this poem with a teasing spirit, I never undermine other’s experience; however it is not acceptable to me. So at the end I closed as per my view on this subject.
BT Song 799 வருந்தக் கூடாது
ஒருமுறை எனக்குன்
தரிசனம் தாராயோ
உன்னை காண்கிற
வாய்ப்பை அருளாயோ
ஊனக் கண்களால்
உன்னையும் காண்பேனோ
ஒருமுறை உன்னையும்
தொட்டு பார்ப்பேனோ
உன் காட்சி கண்டதாய்
பல பக்தர் சொன்னார்
நீ பேசி அவர் கேட்ட
அனுபவம் சொன்னார்
இதுவரை இவை எலாம்
நான் கண்டதில்லை
என்னவோ எனக்கு
அதில் நாட்டம் இல்லை
சிந்தையில் உன் காட்சி
பலமுறை கண்டேன்
உன் வேதம் பேச
அனுதினம் கேட்டேன்
அறிவாலே தேடி
உன்னை அடைந்தேன்
அதன்மூலம் பக்தியில்
அனுதினம் வளர்ந்தேன்
ஆயினும் எனக்குள்ளே
ஒரு கேள்வி உண்டு
அதற்கான பதிலும்
உன்னிடம் உண்டு
பிறர் பெற்ற அனுபவம்
எனக்கேன் மறுத்தாய்
பேசாமல் மௌனம்
நீயேன் காத்தாய்
பக்குவம் எனக்கில்லை
என எண்ணினாயா
பாவத்தின் கறைகளை
போக்கலை என்றாயோ
பக்தியின் பணிவு
எனக்கில்லை என்றாயோ
பாவிதான் என்று
புறக்கணித் தாயோ
இவற்றுக்கு பதிலை
நான்கேட்கும் போது
வீணாக சிரித்து
மழுப்ப கூடாது
அதனால் எனக்கு
கோபம் வரும்போது
அதற்கு நீயும்
வருந்தக் கூடாது
இதைக் கேட்டும் இன்னும்
ஏன் சிரிக்கின்றாய்
ஏன் இந்த நாடகம்
வீணே நடிக்கின்றாய்
இவற்றின் தேவை
எனக்கில்லை என்றோ
எனக்குள்ளே நீ வாழ்ந்து
அருள் காட்சி தருகின்றாய்
மத்திகிரி, 9-1-18, இரவு 11.10
BT Song 800
As I got up around 3.00 am in the morning, as I couldn’t sleep further, I made a cup of tea and sat silently for some time thinking various things. Then as my thought centred on the Lord, I began to worship him. As the inspiration came I wrote this song and sang it as my worship.
BT Song 800 தினம் வாழ வேண்டும்
இதுபோன்ற ஒரு வாழ்வு
தினம் வாழ வேண்டும்
எப்போதும் உன்னோடு
உறவாட வேண்டும்
இரவென்றும் பகலென்றும்
பேதம் இல்லாமல்
இதுபோன்று உன்னடி
நான் தேட வேண்டும்
இதற்கென இவ்வாழ்வை
நீயிங்கு தந்தாய்
எப்போதும் உறவாடும்
வாய்ப்பொன்று தந்தாய்
இசையோடு தமிழ் பாட
வரமொன்று தந்தாய்
இதையெண்ணி அனுதினம்
கொண்டாட வேண்டும்
எந்நேரம் உன்னையே
நான்எண்ண வேண்டும்
இதயத்தில் நீ வந்து
குடிகொள்ள வேண்டும்
எனக்காக நீ தந்த
புது வாழ்வை எண்ணி
என்னுளம் உனைப்போற்றிப்
பண்பாட வேண்டும்
துதிக்கும் துதியில்
தெய்வீகம் கமழும்
திருவடி நாடத்
தூய்மை பெருகும்
தெவிட்டாத இன்பம்
தேனாகப் பாயும்
சிந்தையில் அமைதி
தன்போல் நிறையும்
எஞ்சிய நாட்கள்
இது போல் வாழ்ந்து
இதயத்தில் உனைப் போற்றி
மன மாறப் பணிந்து
இசையோடு பண்பாடி
உன்னையே பணிந்து
என்னை உனதாக்கி
நான் வாழ வேண்டும்
மத்திகிரி, 10-1-18, காலை, 3.50
800 I should live each day (like this)
Each day I should live
A life like this
Always I should have
Relationship with you
Not having difference between
Day and night
Like this I should
Seek your feet
You gave this life
Only for this
You gave the opportunity
To have this fellowship (with you)
You gave the boon
To sing you in Tamil along with music
I should celebrate it
Every day in my life
I should always
Think about you
You should come and
Dwell in my heart
Thinking about the new life
Which you gave me
My heart should sing
Glorifying you
There will be divine presence
In such praising
Once I seek your holy feet
Holiness will also increase
A wonderful bliss
Which never get diminished will flow
Divine peace will
Prevail in the mind
Living the rest of life
Like this
Praising you in my heart
Bowing before you with whole heart
Singing songs with music
Always worshipping you
Making me as your own
I should live (like this)
Mathigiri, 10-1-18, 3.50 am.
Leave a Reply