BT Song 2

[See below for comments in Tamil]

Though I respect all forms of music, I like Carnatic and Hindustani music the most. My mother and I like when the singer uses a lot of ‘swaras’ in the song. In the early days, even though I heard a few lyrics in the evangelical circle, I never heard a single song with ‘swaras’.

Since I am not trained in a traditional way, I cannot use ‘kalpana swaras’ for my songs. But I finally fulfilled that desire by using the ‘sitta swara’ composed by Mysore Vasudevacharya to one of his famous songs ‘Broche va revarura’ in Telugu. I don’t know Telugu, but this song became very famous after it appeared in the Telugu film Sankarabharanam. 

Since I saw the film several times and listened to the songs often, I quickly memorized that ‘sitta swara’. I then used it to write a song when I was travelling from Dharmapuri to Marandahalli in 1981 in my heart, and when I reached Marandahalli, immediately I completed that song with swaras.

‘Sitta swaras’ is composed originally by the author [known as ‘Vagyakara’ viz., one who write and composes music] of the lyrics along with the song and in principle the singer has to use the same swaras when they sing that song. Whereas in other songs, they have the freedom to use their ‘kalpana swaras’ that suit that particular raga.

 
2.      இறங்கி வாரும்

நீயே வேகம் இறங்கி வாரும், முக்தேசனே ராஜனே
நின் சரணம் புகலடைந்தேன்–என் பாவம் நீக்கிக் காக்கவே– இங்கு நீயே…
வல்லமையான ஆவி ஊற்றி வாழ்வில் வளம் பொங்கச் செய்ய
நின் கருணையாம் ஊற்று, பெருகிவந்து என்னையும் ஆட்கொள்ள- இங்கு

ஸ-ஸநிதபத நிசநிநி ததபத பாதமா, க-ம-ப-த-நி-ஸநீதபம, நிதாபம, கமபதமகரிஸ;
ஸமாகமபதமா, பதநி-ஸஸரிநி-நிநிஸதா-ததநிபாத, மபதநி, ஸநிதப-மகம
நிதநிபதமா-பதநி, ஸமாகரிஸ; ரி-ஸ-நி-த-ப–ஸ–நி–த–ப–ம–கமபதநி–நீயே…

கல்வாரி நாதா நின்கருணையே அண்டி ஓடிவந்தேன்
பாவிதான் நானையா, உன் உதிரத்தால் இங்கு மீட்புத் தாரும்
பார்த்திபனே நின் பாதம் பணிந்திடும் பாவியேன் என்னை நோக்கிப் பாரும்
தஞ்சம் என்று எங்கும் செல்ல வழி அன்றி நின்ற என்னை மீட்க இங்கு

ஸ-ஸநிதபத நிசநிநி ததபத பாதமா, க -ம-ப-த-நி-ஸநீதபம, 

நிதாபம, கமபதமகரிஸ;
ஸமாகமபதமா, பதநி-ஸஸரிநி-நிநிஸதா-ததநிபாத, மபதநி, ஸநிதப-மகம
நிதநிபதமா-பதநி, ஸமாகரிஸ; ரி-ஸ-நி-த-ப–ஸ–நி–த–ப–ம–கமபதநி–நீரே…

English Translation:

2.  COME DOWN

You quickly come down O Muktesa the King
I took refuge at your feet and to remove my sin and redeem me you come
down quickly
To pour your mighty Spirit to make my life very useful and
To overcome me by the flow of your fountain of grace, you come down quickly

Sa-sanidapa nisanini dadapada paadamaa, ga-ma-pa-da-ni-saneedapama,
nidaapama, gamapadamagarisa; samaagamapadama,
padani-sasarini-ninisadaa-dadanipaada,
Mapadani, sanidapa-magama nidanipadamaa-padani, samaagarisa;
ri-sa-ni-da-pa-sa-ni-da-pa-ma-gamapadani…..

O the Lord of the Cross, I came to you seeking your grace
I am a sinner, give me redemption through your blood
O the Lord of the World, look unto me, the sinner who bows at your feet
Knowing no other refuge, I stand at your feet; come quickly to redeem

Comments

I wrote this song based on the famous song written and composed by Mysore Vasudevacharya my song completely differs in meaning but I only kept the original Raga. To my surprise later I found a few Tamil lyrics written using several Hindu song forms. Dr. Savarirayan Yesudasan of Christukula Ashram, Tirupathur in North Arcot District, Tamilnadu wrote several songs verbatim taking from Ramalinga Swami’s Arutpa and Tayumanavar. In the introduction he wrote:

The way Western Hymns are rudely translated ignoring the Indian ragas and grammar procedures as ‘Pamalai Songs’ and ‘Gospel Songs’ might become pleasing to the Christians who are familiar with them from their childhood, yet they will look mere ‘Loud noise’ to the people of our land. To witness that the True Bhagavan [his own term] Christ is not alien but our own is the desire of the Christians, then is it good to do like this?  However it sounds like revival for us, if it becomes a stumbling block for others, won’t it then become selfishness?  Doesn’t our worship become an ‘alien language’ for our country men? Regarding this I want to quote what my father Y.T. Savarirayap Pillai wrote sixty one years before (1860):

I don’t know if there is anyone who is fond of music like Hindus in other countries….This being the truth, how sad it is to use the kind music which drives them away from us rather than attracting? In one book published by Hindus to oppose us, describing the mark of Christians they mock us by saying,  ‘once in a week they gather and shout as if the roof will collapse!— Ashramap Pamalai (Ashram song book), 8th impression, July, 1961, Christukula Ashram Press, Tirupathur. pp. i-ii

Dr. Savarirayan also mentions how the word OM is used by Vedanayagam Sastriyar1 and Rev. Samuel in their poems (pp. 3-4). He also mentions that Pandit Narayan Vaman Tilak danced while singing by tying anklets on his leg in Maharashtra (p.4). He mentions that he took two songs from Arutpa by Ramaliga Pillai and changed a few words for Christians to sing (pp.58-59).

In this collection songs [by Dr. Savarirayan] 107 and 108 are by Thayumanavar (who lived at Trichy and worshiped Siva). Song 300 follows the ‘Nindastuti’ form of Tamil poems in which the poet will praise the deity by criticising and condemning him.

The reason for me to share this is that even a hundred years before, efforts were made to use Indian music and lyrics to worship the Lord. Strangely for me, several Hindu ‘converts’ also oppose our/my efforts to write and compose songs using our own musical form.

I still remember the way one Hindu bhakta in our group, when he came to see us for the first time, was shocked by the way I composed the music for Brahmabandhap Upadhyaya’s Sanskrit song ‘Upachita’. He said that it sounds like he is again listening to ‘Mahishashura Mardani sloka’ which was sung in the same tune. It took a long time for him to understand our approach. I will later share other Tamil songs which I wrote and composed resembling some famous songs. [I am posting this Sanskrit song by Upadhyaya with my own music in the blog to help others to understand my point]

When I met late Sri Gopal at Salem in Prasad’s house, he enthusiastically shared several of his songs which he wrote and composed imitating even famous film songs. Since he received opposition, he never used them in his house church. He asked me “Is there any music called ‘Film music’ exclusively?” In response I said, “No. Music is music and it is common for all. In several films they used pure Carnatic music. So you have every right to use their music for your songs. Just ignore who opposes you.” Then on my request he wrote and composed ‘Sandam’ which we often sing. Sandam is a kind of generic music form in which several poems are composed. One such famous song is ‘Kanda Sashti Kavasam’ sung by the Suramangalam Sisters. Gopal’s Yesu Sandam almost sounds like that. I feel that we have every right to use which belongs to our common heritage.  In order to honour his memory and thank him for writing this Sandam for our needs, I am posting it in my blog.

Another important point to note here is that in most of the Bhakti songs by Hindu saints they will mention their name at the end of the song identifying with the theme of the song.  One time in North Bihar when a Hindu bhakta, who wrote several Bhajans in his mother tongue [Maithili], he told me that when he also mentions his name at the end of his songs, some local Christians objected to it by saying that its self praising and we need only to Praise God and give glory only to Him.  But I insisted that he continue to mention his name in his song as that is part of our Indian tradition.  Though we don’t know the original author for most of our most Literatures, when it comes to Bhakti songs, particularly in North [but not in Tamil] we find the name of the author known as ‘Mudra’. Though this is not a common practice in the South, particularly among Tamil saints, still few writers like Sri Gopala Krishna Bharati mention his name also in his Kirtans.### 

Endnotes

1. The following notes from Pakyamani will give more on Vedanayagam Sastriar:

It looks strange to note that Sastri called the bridge as ‘Indirani’ (Marriage song 1.75) and bride-groom as ‘Indiran’ (Marriage songs 1.142), and ‘Harishchandra’ (Marriage song 1.142) using Hindu religious deities.—Dr. A. Pakiyamani, Vedanayaga Sastriyar Padaippuhal oru Thiranaivu (The Writings of Vedanayagam Sastriyar—a Research) Nagercoil, (1991) second revised edition, 2001, p. 149

[Note that Pakiyamani fails to recognize that Harishchandara is not the name of Hindu deity.  Below he mentions the names that Sastriyar used for God like Allah, Siva, Sadasivam etc.  This being the truth, why it looks strange for using ‘Indira and Indirani’ for human bride and bridegroom in a marriage song written by Vedanayagam Sastriar?—db]

All these names which are found in these songs [(Aaranaadindam, Jnanppadal. Jebamalai)]: Allah, Suda, Kuda, Sivan, Sadasivam, Prabrahman, Yehweh, etc. are accepted by Sastri—p. 193

Song 2

எல்லாவித இசைகளை மதித்தாலும், கர்னாடக இசையில்தான் எனக்கு அதிக விருப்பம். அதிலும் இராக ஆலாபனையுடன், அதிகமான ஸ்வரங்கள் அமைத்துப் பாடுவதைக் கேட்பது எனக்கும், என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். அத்தகைய அதிக ஸ்வரங்கள் அமைத்துப் பாடப்பட்ட பாடல்களை என் ஆரம்பநாட்களில் கிறிஸ்தவர்கள் பாடிக்கேட்டது இல்லை. நான் முறைப்படி கர்னாடக இசை பயிலாததால் என்னால் கற்பனை ஸ்வரங்கள் அமைத்துப் பாட முடியாது. இறுதியில் அந்த விருப்பத்தையும் ’சிட்ட ஸ்வரத்தை’ பயன்படுத்தி இந்த பாட்டில்  அதை நிறைவேற்றிக் கொண்டேன். ’சிட்ட ஸ்வரம்’ என்பது பாடல் ஆசிரியரே அந்த இராகத்திற்கு ஏற்ற ஸ்வரங்களை அமைத்து எழுதுவதாகும். 1975-களில் வெளிவந்த சங்கராபரணம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் மைசூர் வாசுதேவாச்சார்யார் தெலுங்கில் எழுதிய ’ப்ரோசே வா ரெவருரா’ என்ற தெலுங்கு சாகித்யம் மிகவும் ப்ரபல்யம் அடைந்தது. அந்த பாடலை பலமுறை கேட்டதன் காரணமாக அதன் சிட்ட ஸ்வரங்கள் எனக்கு மனப்பாடமாகியதால், அதை இப்பாடலுக்குப் பயன்படுத்தி பாடினேன்

இப்படி பிற இந்து பக்தர்கள் எழுதிய பாடலின் அடிப்படையில் அல்லது பாடலில் சில வார்த்தைகளை மாற்றி என் வழிபாட்டில் பயன்படுத்தியது பல கிறிஸ்தவர்களுக்கு ஆரம்பத்தில் எரிச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஒரு சமயம் நான் வங்கத்தைச் சேர்ந்த ப்ரம்ம பந்தப் உபாத்யாய எழுதிய ’உபசித சிர சின்மய’ என்ற சமஸ்கிருத பாடலுக்கு நான் எனக்கு பழகிய இராகத்தை அமைத்து பாடியபோது அதைக்கேட்ட ஒரு மதம் மாறிய ஒரு கிறிஸ்தவர் மிகவும் எரிச்சலுற்றார். அப்பாடலுக்கு நான் ‘மஹிஷாஷுண மர்தினி’ என்ற பாடலுக்கு பயன்படுத்திய இராகத்தையே அமைத்ததுதான் காரணம். இதை புரிந்துகொள்வதற்காக நான் உபாத்யாவின் பாடலையும், மஹிஷாஷுண மர்தினி பாடலின் சிலவரிகளையும் இத்துடன் பதிவு செய்துள்ளேன்.  @@@ஏனென்றால் பல பழைய கிறிஸ்தவர்களுக்கும், புதிய கிறிஸ்தவர்களுக்கும் நம் இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடைய எதுவும் ஏற்புடையதாக இருப்பதில்லை.

ஆனால் வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூரில் உள்ள ’கிறிஸ்து குல ஆஸ்ரமதை அமைத்து வசித்த மருத்துவர் சவரிராயன் ஏசுதாசன் பல பாடல்களை இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பாவிலிருந்தும், தாயுமானவரின் (திருச்சி மலைக்கோட்டையில் வசித்த துறவி) பாடல்களிலிருந்தும்  பயன் படுத்தி பாடல்கலை எழுதியுள்ளார். இதைக்குறித்து அவர் தனது ’ஆசிரமப் பாமாலை’ என்ற புத்தகத்தின் முகவுரையில் இவ்வாறு கூறுகின்றார்.

கிறிஸ்தவக் கோவில்களில், மேல்நாட்டுப் பாடல்களை, இந்திய ராகங்கள் யாப்பிலக்கிய போக்குகள் முதலியவற்றை அறவே அசட்டை செய்து, விகார முறைமையாய் மொழிபெயர்த்துப்பாடும் ’பாமாலை பாட்டுகள்’ ’சுவிசேஷ கீதங்கள்’ என்னும் பலவகைப் பாட்டுக்கள், பால்யப் பிராய முதல் அவைகளில் பழகிவிட்ட (ப.i) கிறிஸ்தவர்களுக்கு இன்பமாய்ப் போய்விட்டாலும் நமது தேசத்தினருக்கு கோர சப்தமாகவே தொனிக்கும், நமது தேசத்தில், மெய்யாக கிறிஸ்து பகவான் அந்நியரல்லர் சொந்தமானவரேயென்று சாக்ஷி பகர்வது கிறிஸ்தவர்களின் பிரதான வாஞ்சையென்றால் இப்படிச் செய்வது தகுதியோ? நமக்கு எழுப்புதலாயிருந்துவிட்டாலும்கூட, மற்றவர்களுக்கு இறையூராயிருக்கும் முறைப்படி செய்வது ஆன்மீக தன்னயமாகிவிடுமல்லவோ? நமது ஆராதனைப் போக்குகள் நமது தேசத்தினருக்கு ’அந்நிய பாஷை’ போலாகிவிட்டதல்லவோ? இதைக் குறித்து என் தகப்பனார் யோ. தே. சவரிராயப் பிள்ளை அவர்கள் அறுபத்தொரு(1860ல்) வருஷங்களுக்கு முன்னமே எழுதிஇருப்பதை இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.

’இந்துக்களைப்பார்க்கிலும் சங்கீதத்தில் பிரேமைகொண்டவர்கள் வேறுதேசத்திலுண்டோ, நமக்குத்தெரியாது….அப்படி இருக்க இந்துக்களை வசியப்படுத்தக்கூடிய கீதங்களைத் தள்ளிவிட்டு அவர்கள் விலகிப்போகும்படியான இராகங்களைக் கொண்டாடுவது எத்தனை துக்கமான காரியம்! இந்துக்கள் நமக்கு விரோதமாய் அச்சடித்த ஒரு புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் லட்சணங்களைச் சொல்லும்போதும், கிழமைகொரு நாள் மண்டபமொன்றில் கூடி முகடியும்படி முழங்கிக் கதறுவது ஒன்று, என்று பரிகாசம் பண்ணுகிறார்கள்!’

எவ்வளவு பணம் செலவழித்துத் தங்கள் தேசத்து வாத்தியப் பெட்டிகளைக் கொண்டுவந்து வைத்து, எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்குத் தங்கள் தேசத்துப்  பாடல்களைச் சொல்லி வைத்தாலும், அந்த ராகங்கள் நமது ஜனங்களுக்கு உருக்கங் கொள்ளமாட்டாது; படிக்கிறவர்களுக்குப் பழக்கத்தின்பேரில் சந்தோஷம் உண்டாக்கலாம்; அவ்வளவுதான்….(ப. Iii)

      மருத்துவர் சவரிராயன் மேலும் திரு. வேதநாயகம் சாத்திரியாரும், சாமுவேல் போதகரும் தங்கள் பாடல்களில் ’ஓம்’ என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார் (ப. 3-4) அதுபோல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நாராயண்வாமன் திலக், தன் காலில் சலங்கைக் கட்டிக்கொண்டு, தானெழுதிய பாடல்களை ஆடியபடியே பாடியுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றார். (ப.4) மேலும், இராமலிங்க அடிகளாரின் அருட்பாவிலிருந்து இரண்டு பாடல்களில் சில சொற்களை கிறிஸ்தவர்கள் பாடும்படி மாற்றி அமைத்துள்ளதையும் குறிப்பிடுகின்றார் (ப. 58-59). இதேபோல் நானும் சில பாடல்களை இதே அடிப்படையில் எழுதியுள்ளதை பிறகு காணலாம்.  இவரின் ஆசிரமப்பாமாலையில் உள்ள 107 மற்றும் 108 தாயுமானவரின் பாடல்கள் என்று கூறுகின்றார். பாடல் 300 ‘நிந்தாஸ்துதி’ என இறைவனைப் பழிப்பதுபோல் புகழ்ந்துபாடும் அமைப்பைச்சேர்ந்தது என குறிப்பிடுகின்றார்.

      நூறாண்டுகளுக்கு முன்பு கூட தமிழக திருச்சபைகளில் இந்திய இராகங்களில் அமைந்த பாடல்களை எப்படி பயன்படுத்துயுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இதை நான் கூறுகின்றேன். இதில் வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் பல மதம் மாறிய புதிய கிறிஸ்தவர்கள் கூட இத்தகைய என் முயற்சிக்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவிப்பதுதான்.

      ஒரு சமயம் சேலத்தில் திரு. கோபால் என்பவரை நான் சந்தித்தபோது, அவர் ஆர்வமுடன் தான் எழுதி இசையமைத்த பாடல்களை எனக்குப் பாடிக்காண்பித்தார். அவர் தன் சிலபாடல்களுக்கு பழைய சினிமாபாடல்களின் இராகத்தையே பயன்படுத்தி உள்ளார். ஆனால் இத்தகைய பாடல்களுக்கு கிறிஸ்தவர்களிடையே காணப்பட்ட எதிர்ப்பின் காரணமாக தன் இல்லத்தில் கூடிவந்த சபையில் கூட அவற்றை பயன்படுத்த வில்லை. இதுகுறித்து என்னிடம் பேசியபோது, ’சினிமா இசை என்று ஒன்று தனியாக இருக்கின்றதா’ என வினவினார். ’இல்லை’ என பதிலலிளித்த நான், ’பல திரைப்பட பாடல்கள் கர்னாடக இசையில் அமைந்துள்ளன. இசை அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே உங்களை எதிர்ப்பவர்களை பொருட்படுத்தவேண்டாம்’ என கூறினேன். பிறகு என் வேண்டுகோளை ஏற்று கந்த சஷ்டி கவசம் அமைந்துள்ள ’சந்த வகை’ இராகத்தில் எனக்காக ஒரு பெரிய பாடலை எழுதித்தந்தார். அதை இன்றளவும் நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம்.

      இங்கு இன்னும் ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான பக்திப் பாடல்களில் அதை எழுதிய ஆசிரியரின் பெயர் ’முத்திரையாக’ ஒரு இடத்தில் இருக்கும். இதை வட இந்தியப்பாடல்களிலில் பெரும்பான்மையாக காணலாம். தமிழில் இது அவ்வள்வு பரவலாக வழக்கத்தில் இல்லாவிட்டாலும், கோபால் கிருஷ்ண பாரதி போன்றோர் பாடல்களில் காணலாம். அது போல் பீஹாரைச் சேர்ந்த ஒரு முக்தேசன் பக்தர் தான் எழுதிய (ஹிந்தி) பாடல்களில் தன் பெயரை அமைத்து எழுதியிருந்தார். அதை பார்த்த பல கிறிஸ்தவர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் இது அவர் தன் சுய பெருமைக்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதியுள்ளதாகக் கூறினர். அதற்கு முக்கிய காரணம் அவர்களில் பெரும்பான்மையோருக்கு, கபீர்தாஸ், சூர்தாஸ், மீரா, துக்காராம், போன்றோரின் பாடல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்த சிலரும் அவை ’இந்துக்களின்’ பழக்கம் எனக்கூறி அதை எதிர்த்து வந்தனர். ஆனால் நான் அவரை அதேபாணியில் பாடல்களை அமைத்து பாடும்படி கூறினேன். அப்பாடலின் அர்த்தம் புரிந்தவர் அதில் எத்தகைய சுய விளம்பரமோ, பெருமையோ இருப்பதாக கூறமாட்டார்கள். அதற்கு மாறாக, அவர் தன் பெயரைக்கூறி ’அடியேன் நவல்கிஷோர் இவ்வாறு புலம்புகிறேன், கதறுகிறேன், அழைக்கிறேன்’ என்று எழுதி இருப்பதைக்காணலாம்.

      இவ்வாறு நம் நாடின் கலாச்சார அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு வேண்டுமானால் தேவையற்ற, இறைவனுக்கு ஏற்காத, இன்னும் சொல்லப்போனால் அவை பிசாசின் செயலாக காணப்படலாம். ஆனால் என் நாட்டு கலாச்சார-பண்பாட்டின் படிவங்கள் இறைவன் எனக்கு அளித்த வெகுமதிகள். அதன் பல வடிவங்களைப் பயன்படுத்துவது எனக்குள்ள பிறப்புரிமை.

28-10-14

குறிப்பு. 1.   சாத்திரியார் மணமகளை ’இந்திராணி’ [கலியாண வாழ்த்துதல். 1.75],, எனவும், மணமகனை ’இந்திரன்’ [கலியாண வாழ்த்துதல். 1.142] எனவும் ’அரிச்சந்திரன்’[கலியாண வாழ்த்துதல். 1.142] எனவும் இந்து சமயத் தெய்வங்களின் பெயரிட்டு வாழ்த்துவது புதுமையாக உள்ளாது.–வேதநாய சாத்திரியார் படைப்புகள் ஒரு திறனாய்வு, முனைவர் ஏ. பாக்கியமணி. நாகர்கோயில், சுதன் பதிப்பகம்.(1991), இரண்டாம் திருத்திய பதிப்பு, 2001. ப.149 [பாகியமணி அரிச்சந்திரனை இந்து தெய்வம் எனக்குறிப்பிடுவது தவறு. மேலும், மேலே ப. 193-ல் பல பாடல்களில்

(ஆரணாதிந்தம்,செபமாலை,ஞானப் பாடல்)சாத்திரிராயார் பயன்படுத்தியுள்ள இந்து தெய்வங்களின் பெயர்களை ஏற்கும்போது, இப்பாடலில் மணமகணையும், மணமகளையும் ’இந்திரன்’ ’இந்திராணி’ என அழைப்பது ஏன் வியப்பாக இருக்க வேண்டும்?)

இப்பாடல் அடிகளில் அமைந்துள்ள அல்லா, சுதா, குதா, சிவன், சதாசிவம், பரப்பிரம்மம், யேயோவா, திரித்துவம் ஆகிய யாவும் சாத்திரியார் ஏற்கின்றார்.–ப.193

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *