Another beautiful evening on the river side in Mahari. As I merged with nature, along with the mood to write a poem, I also feel elated in my spirit.
66. இதய வீணை மீட்டி விட்டாள்
தனிமையாக ஒரு மாலையிலே
நான் தனித்திருந்த அந்த வேளையிலே
இனிமையான ஒரு உணர்வைத் தூண்டியே
இயற்கை அணங்குமே மெள்ள வந்தள்
என்னுள் நான் அமிழ்ந்த வேளையில்
இதய வீணையை மெல்ல மீட்டியே
தூங்கிக் கிடந்த என் கவிதை உணர்வை
தொட்டே மெல்ல அவளும் சீண்டிவிட்டாள்
அவள் விரல் பட்ட அந்த நேரமே
ஆர்ப்பரித்த என் இதய உணர்வுமே
பொங்கிப் பாய்ந்ததே கவிதையாக
புகலடைந்தேன் அவளிடத்தில்
மெல்ல அவளும் தன் மடியில் ஏந்தி
தஞ்சமடைந்த என் தலையை வருடி
அமைதியான ஒரு ஆன்ம உணர்வில்
அழைத்துச் சென்றால் மீண்டும் என்னை
Mahari, Rewa, M. P. 17-2-1996, 6.30 p.m.
66. She stirred the harp of my heart
In a calm evening
When I was alone
Nature came to me
Arousing a sweet sensation
When I was drowned within me
Stirring the heart as a gentle harp
She aroused the poetic mode within me
Which was in hibernation for sometime
When her fingers touched the harp
It arose my poetic mood
As I took refuge in her
Taking me gently on her lap
As she began to rub my head
She took me further
Deep in a spiritual world
Mahari, Rewa, M. P. 17-2-1996, 6.30 p.m.
Leave a Reply