In any struggle within us in which every faculty of our body and mind involves, finally no one is going to win as they all will be defeated by each other. And my longing is to get deliverance from this constant battle within me in which every faculty of my personality involves.
83 போர்க்களம்
எனக்கோர் விடுதலை வேண்டும்
அதுவும் என்னிடமிருந்தே வேண்டும்
நிலை தடுமாறும் இவ்வுலக வாழ்வில்
நீந்திக் கரைசேர வேண்டும்
சிந்தையில் சிறைபட்ட ஆன்மா
தன் சுதந்திரம் பெற வேண்டும்
தேகத்தில் சிறைபட்ட சிந்தை
தான் சீர்பெற்று வாழ வேண்டும்
புலன்கள் பொறியிடம் தோற்க
மனதும் புலன்களை ஏய்க்க
சிந்தையும் சிலமுறை தடுமாற
செயலிழந்தே என் ஆன்மா
ஒன்றுடன் ஒன்று மோத
ஓயாத போர்க்கள மானதே
வென்றது யாருமே இல்லை
இங்கு வீழ்ந்ததால் அனைவரும் ஒன்றாய்
பொக்கரா, நேபாள், 9-2-1997, காலை
83 Battle field
I need deliverance
That too from me
I should cross over
This unstable world
The atman should
Get the freedom from the prison of mind
The mind should be reformed
As it trapped within the body
As the senses are defeated by the organs
And the mind also cheating the body
As mind also stumbles often
My atman become stand still
As they all clash with each other
The mind become a battlefield
But none gets the victory
As all have fallen together
Pokhara, Nepal, 9-2-1997, morning
Leave a Reply