When we sit and talk about spirituality, that too comparing with one faith and another, there is always exaggeration. The entire tall claim by anyone following any particular tradition needs to be taken with a pinch of salt. After one such talk, as I was reflecting back about it, I wrote this song.
82 நீதி
உள்ளத்தில் உண்மை உள்ளவனை
உலகினில் இதுவரை காணவில்லை
போடுவதெல்லாம் வெளிவேஷம்
உள்ளத்தின் நிலையோ பரிதாபம்
‘தன்வரை உண்மை உள்ளவனாய்த்
தரணியில் நீயும் வாழ்ந்துவிடு’
தத்துவம் கூறுவார் தாராளமாய்
ஆனால், தடுமாறுவார் தன்வறையில்
‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி’
கூறினான் கவிஞ்ஞன்@ வார்த்தையிலே
குணமறியாத மனிதருக்கே
‘தன் வரை நீதி’ என்பதெல்லாம்
‘சுய நீதியாய்ப்’ போனதிங்கே
எடுத்துக் கூறியே என்ன பயன்
எல்லாம் பொய்யாய்ப் போனபின்னே
ஆயினும் மனத்துள் புலம்புகிறேன்
அது என் ‘நீதி’ ஆனத்தினால்
பொக்கரா, நேபாள், 7-2-1997
@ Kannadasan.
82 Righteousness
No one has seen
One who remains true to the heart?
All put some mask
But the condition of the heart is pitiable
‘Try to live on this earth
Remaining true to yourself’
They will share such philosophy
But will stumble when it comes to them
‘Let the world talk whatever it wants
You alone the judge for you
Let others talk whatever they want
You just take care of your heart’
The poet (Kannadasan) said this
To the people who do not uphold ethics
‘All that true to one’s heart
Become mere ‘self righteousness’
What is the use of talking about it?
Once all become false
Still I lament within me
As it becomes my ‘righteousness’.
Pokhara, Nepal, 7-2-1997
Leave a Reply